Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by uknews On April 29th, 2011 at 12:46 pm /

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை மறு சீரமைக்காமையை எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை மறு சீரமைக்காமையினை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களால் புதிய மாணவர் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இச்சம்பவத்தினை அறிந்த பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் குறித்த புதிய ஒன்றியத் தலைவரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றியிருக்கின்றார்.

சம்பவத்தினை அடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவ ஆலோசருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்பவத்தினைப் படமெடுக்கச் சென்ற யாழ்ப்பாண ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு பல்கலைக்கழக வளாகத்தில் தடை என்று தெரிவித்தே மாணவர்கள் தாக்கியதாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளரின் புகைப்படக் கருவி அடித்து உடைக்கப்பட்டுள்ளதுடன், புகைப்பட சேமிப்பு உபகரணமும் மாணவர்களால் பறித்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் :

29 ஏப்ரல் 2011

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறுகிறது. நான்காம் வருடத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உட்செல்லும் அனுமதிக்கு தடை விதித்தமையாலேயே இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இந்தப் போராட்டத்தை தாம் புறக்கணிப்பதாக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பல்கலைக்கழக சூழல் பதற்றமான நிலையில் காணப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பெயருக்கு பல்கலைக்கழகத்திற்குள் உட்செல்லும் அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றியமையை எதிர்த்து கலைப்பீடம் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர். முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் மற்றும் விஞ்ஞானபீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கி தங்கள் வகுப்புக்களை புறக்கணித்துள்ளார்கள்.

அதேவேளை மாணவர்களுக்கான உட்செல்லும் அனுமதியை மறுத்து வெயேற்றும் தீரப்ப்பை வழங்கிய நிர்வாகத்தில் உள்ள ஒருவரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் புதிதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தலைவர் ஒருவரை தாம் தெரிவு செய்துள்ளதாகவும் அவரை பதிவு செய்யுமாறும் மேலும் இரண்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகளுக்கு நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புறக்கணிப்பில் ஈடுபடும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த ஒரு மாதத்தின் முன்பாக நடைபெற்ற ஒரு சம்வத்திற்காகவே இந்த உட்செல்லுகை அனுமதி மறுக்கப்பட்டு மாணவர்கள் மூவர் வெளியேற்றியுள்ளனர் என்றும் வெளியேற்றிய மாணவர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு உட்செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று புறக்கணிப்பை நடத்தும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் திட்டமிட்ட நடவடிக்கையாக இதை தாம் பார்ப்பதாக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதேவேளை இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை தாம் நிராகரிப்பதாக கலைப்பீடத்தின் மூன்றாம் வருட கனிஷ்ட மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தவறான சம்பவங்களின் அடிப்படையிலேயே உட்செல்லும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இது பல்கலைகக்ழகக மாணவ பாதுகாப்பு மற்றும் ஒழுக்கச் சட்டங்களுக்கு அமைவான வகையில் பார்க்க வேண்டிய விடயம் என்றும் இவ்வாறான புறக்கணிப்புக்கள் கனிஷ்ட மாணவர்களின் உரிமைகளை மறுக்கின்ற திட்டம் கொண்டவை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

மூன்றாம்வருட மாணவர்களைத் தாக்கிய சம்பவம் ஒன்றின் பொழுது பல்கலைக்கழக சொத்துக்களுக்கும் அவர்கள் சேதம் விளைவித்தமைக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மூன்றாம் வருட மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த விடயத்தில் நான்காம் வருட சிரேஷ்ட மாணவர்கள் தம்முடன் அதிகாரத்தனமாக நடந்து தம்மை தாக்கினார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த விடயத்தில் நிர்வாகத்தினரை உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது வருடத்தில் உள்ள பதவி நிலைகளை புறக்கணித்துக் கோரியிருந்ததாகவும் மூன்றாம் வருட மாணவர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்றுகாலை முதல் இந்த வகுப்புப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் மற்றும் விஞ்ஞானபீடம் முதலியவற்றின் அனைத்துச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விரிவுரைகள் எதுவும் நடைபெறாமல் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். வளாகம் எங்கும் நிர்வாகத்தினரை விமர்சித்து பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளன. மிக நீண்ட நேர தாமத்தின் பின்னர் வருகை தந்த துணைவேந்தர் சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்.

இன்றைய பதற்ற நிலைமைகளை அடுத்து யாழ் பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு சுற்றி வளைத்துள்ளனர். பல்கலைக்கழக வாசலில் பெருமளவு இராணுவத்தினர் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். அதேவேளை இந்த வகுப்புப் புறக்கணிப்பை தூண்டிய மாணவர்கள் பற்றிய விபரங்களையும் மாற்று உடைகளில் வந்த இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர். இந்த விடயத்தில் இராணுவத்தினர் தலையிடக் கூடாது என்று பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை தாம் நிராகரிப்பதாக கலைப்பீடத்தின் மூன்றாம் வருட கனிஷ்ட மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தவறான சம்பவங்களின் அடிப்படையிலேயே உட்செல்லும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இது பல்கலைகக்ழகக மாணவ பாதுகாப்பு மற்றும் ஒழுக்கச் சட்டங்களுக்கு அமைவான வகையில் பார்க்க வேண்டிய விடயம் என்றும் இவ்வாறான சிரேஷ்ட புறக்கணிப்புக்கள் கனிஷ்ட மாணவர்களின் உரிமைகளை மறுக்கின்ற திட்டம் கொண்டவை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இவ்வாறான சிரேஷ்ட புறக்கணிப்புக்கள் கனிஷ்ட மாணவர்களின் உரிமைகளை மறுக்கின்ற திட்டம் கொண்டவை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

gtn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -

01 மே 2011

மாணவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முடிவெடுத்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கடந்த வெள்ளிக் கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் மற்றும் மாணவ ஆலோசகர் முதலியோர் அடங்கிய உயர் குழு ஒன்று மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தப் போராட்டம் தொடர்வதாகவும் நாளை திங்கட் கிழமை முதல் தொடர்ந்தும் நடைபெறும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது என்று குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது மாணவர்கள்மீது கடும் அதிகாரத்தொனியுடன் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முhணவர்கள் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது குற்றம் என்றும் துணைவேந்தர் கடுந் தொனியுடன் தெரிவித்துள்ளார். அன்று மாலை துணைவேந்தர் இந்த விடயங்கள் குறித்து மாணவர்களை எச்சிரிக்கும் தன்மையுடன் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கை மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பில் எந்தச் சாதகமான நிலையையும் வெளிப்படுத்தவில்லை என்று மாணவர் தரப்பால் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பற்றிய விபரங்களை இரவு பகலாக படைத்தரப்பு சேகரித்து வருவது பல்கலைக்கழக சூழலில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இந்த விடயங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சமூகவிரோத சக்திகள் சில மாணவரிடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்தும், மாணவர்களின் போரட்டத்தைச் சீர்குலைத்தும் அதனூடகத் தங்களது சுயஇலாபங்களைத் தேடமுனைகின்றனர். அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தை தமிழ் மக்களின் சமூக நிறுவனம் என்ற அந்தஸ்திலிருந்தும், எமது இனத்தின் மீதுள்ள பொறுப்பிலிருந்தும் இல்லாது ஒழித்து, எமது சமூகத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையிலான தொடர்பினை இல்லாமற் செய்வதற்கும் முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிடும் அந்த குறிக்கையின் முழுமையான வடிவத்தை இங்கு தருகிறோம்.

கடந்த 29-04-2011 (வெள்ளிக்கிழமை) யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களும் ஒன்றிணைந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றோம். அது தொடர்பிலான விரிவான விளக்கத்தையும், எமது பக்க நியாயத்தையும் சமூகத்தின்மீதுள்ள பொறுப்பினிமித்தம் தெரிவிப்பது கடமையென்று உணர்ந்து இச்செய்திக் குறிப்பை வெளியிடுகின்றோம். எமது பல்கலைக்கழகம், மாணவர்களிற்கு மட்டுமன்றித் தமிழ்ச் சமூகத்தையும் வழிநடாத்திச் செல்லும் சமூக அமைப்பு என்பதைத் தாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மாணவர்களது போரட்டமானது மூன்று பிரதான – நியாயமான- கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ந்த வண்ணமுள்ளது. மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

1. மாணவர்களால் தொரிவுசெய்யப்பட்ட மாணவர் ஒன்றியத்தலைவரின் பல்கலைக்கழக உட்;பிரவேசத் தடையை உடன் இரத்துச் செய்யவேண்டும். (இந்தத் தடையானது, நியாயமற்ற முறையில், நீதிக்குப் புறம்பாக, மாணவ ஆலோசகரின் தனிப்பட்ட சுயஇலாபங்களிற்காக மேற்கொள்ளப்பட்டது)

2. மாணவர்களின் நலன்களில் அக்கறையில்லாது, தனது சுயஇலாபங்களிற்களிற்காகச் செயற்படும் மாணவ ஆலோசகரின் பதவியை உடனே நீக்கவேண்டும்.

3. மாணவர் ஒன்றியத்திற்கு, மாணவர்களாகிய எங்களாற் தெரிவுசெய்யப்பட்ட ஒன்றியத்தலைவரை உள்வாங்கி, மாணவர் ஒன்றியம் உடன் மீள ஒருங்கமைக்கப்படுதல் வேண்டும்.

எமது பல்கலைக்கழகமானது எமது மாணவர்களிற்கு மட்டுமன்றி, எமது சமூகத்தையும் வழிநடாத்திச் செல்லும் நிறுவனம் என்பது தாங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். எம் மாணவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகச் சில சமூகவிரோத சக்திகள் கடந்த காலங்களில் பல தடவைகள் முயன்று வருகின்றமையும் தாங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். இன்றும் சமூகவிரோத சக்திகள் சில மாணவரிடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்தும், மாணவர்களின் போரட்டத்தைச் சீர்குலைத்தும் அதனூடகத் தங்களது சுயஇலாபங்களைத் தேடமுனைகின்றனர். அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தை தமிழ் மக்களின் சமூக நிறுவனம் என்ற அந்தஸ்திலிருந்தும், எமது இனத்தின் மீதுள்ள பொறுப்பிலிருந்தும் இல்லாது ஒழித்து, எமது சமூகத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையிலான தொடர்பினை இல்லாமற் செய்வதற்கும் முயற்சிக்கின்றனர். இதற்கு சில மாணவர்கள் அறியாமையினாற் துணைபோவதும் எமக்குப் பெரும் வேதனையளிக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளையும், இதன் பின்னாலுள்ள விடயங்களையும் மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறோம்.

இதனுடன் தொடர்புடையதாகவே, இன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடவடிக்கைகளைக் குழப்பும் விதமாக செயற்படுகின்ற சக்திகளின் ஒர் சதியாகவே, மாணவர்களாகிய எங்களாற் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒன்றியத்தலைவரிற்கு வகுப்புத்தடை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், கடந்த பல மாதங்களாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீள உருவாக்கப்படாமல் இருப்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கே காரணம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்படியான பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கை மாணவர்களாகிய நாம் எவ்வாறு ஏற்பது....?

இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கைக் கருத்திலெடுத்து, காலம் வீணடிக்கப்படக் கூடாது என்ற தீர்மானத்தின் பேரில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளித்திருந்தோம். இந்நேரத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சிறு விடயத்தைச் சர்ந்தப்பவாதத்திற்கேற்ப, நிர்வாகத்தின் அதிகாரத்தை தமக்குச் சாதகமாகப் பாவித்து, நியாயமற்ற முறையில், நீதிக்குப் புறம்பாக, மாணவர் ஒன்றியத்தலைவரிற்கு வழங்கப்பட்ட உட்பிரவேசத்;தடையாகும். இவ்வாறு நியாயமின்றி, நீதிக்குப் புறம்பான முறையில் வழங்கப்பட்ட இந்த வகுப்புத்தடையை நாம் எவ்வாறு ஏற்பது...?.

எமது பல்கலைக்கழக சிரேஷ்டமாணவ ஆலோசகரைப்பற்றி மக்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் முன் உள்ளது. 'பல்கலைக்கழக மாணவ ஆலோசகர்' எனப்படுவது, மாணவர்களின் நலன்களைக் கவனிக்கும் அதேவேளை மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை நடுநிலையாக நின்று, தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பும் அவருக்குரியதே. ஆனால் எமது பல்கலைக்கழக மாணவ ஆலோசகா, மாணவர் நலன்களில் அக்கறையில்லாமல், தனது சர்வதிகாரத்துடன், மாணவர்களின் கருத்துக்களை அறவே செவிசாய்க்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார். மாணவர்களிற்கு வகுப்புதடை விதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளே இவரது செயற்பாடுகளில் முதன்மையானவை. கடந்தகாலங்களில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பல மாணவர்கள் இன்னமும் பட்டதாரிச் சான்றிதழைப் பெறமுடியாமல் உள்ளதற்கும் இவரின் தன்னிச்சையானச் செயற்பாடே காரணமாகும். மேலும், இவரது காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றமையை சுட்டடிக்காட்டுகின்றோம். பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிடுவது போல் இவர் ஒரு சிறந்த மாணவர் நலன்களைக் கவனிக்கும் ஆலோசகரெனின் மாணவர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏன் இடம்பெற வேண்டும்? இவ்வாறான ஒரு மாணவ ஆலோசகர் எமது மாணவர்களுக்குத் தேவையில்லை என்பதனாலேயே மாணவர்களாகிய நாம் இவரை நீக்க வேண்டும் என்ற முடிவுக்கு தவிர்க்க முடியாத சூழலில் வந்திருக்கின்றோம்.

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடந்த காலங்களில, காலம் நமக்குத் தேவைப்படுத்தும் சமூகப்பணிகளையும் செய்து வருகின்றதென்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். குறிப்பாக ¬ கடந்த வருடங்களில் எமது பல்கலைக்கழகத்திற் கற்கும் போரால் பாதிக்கப்பட்ட எமது சக மாணவர்களிற்கும்;, வறிய நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களிற்கும் உதவிகளை வழங்க நாம் பின்நிற்கவில்லை. மேலும், கடந்தவருடம் வன்னிப் பிராந்தியத்தின் 41 பாடசாலைகளில் சாதாரண தர மாணவர்களிற்குக் கருத்தரங்குகளையும் நாடாத்தி அம்மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய பெருமை மாணவர் ஒன்றியத்தையே சாரும். அத்துடன் எமது கிழக்கு மாகான மக்கள் வெள்ளம் காரணமாகத் துன்புற்றவேளை எதிர்கொண்ட வேளை அவர்களின் துயர் துடைக்க, உடனடியாக மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் துன்பங்களில் பங்குகொண்டதையும் தாங்கள் அறீவீர்கள். இப்படியான சமூகப் பொறுப்புக்களை ஆற்றுவதிலிருந்து மாணவர் ஒன்றியத்தை தடுக்கும் நோக்கிலா, ஒன்றியத்தை நிறுவாமல் எமது பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது?

மேலும், மாணவர்களின் போராட்டம் ஆரம்பித்த தினமன்று (29-04-2011, எமது வளாகத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட ஒர் துக்ககரமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஊடகவியலாளர் நிர்வாகத்தின் சார்பிலான ஒருவரே, மாணவர்களைப் படம்பிடிப்பதாக எண்ணியதாலேயே, அந்த ஊடகவியலாளருடன், - அவர் ஊடகப்பிரதிநிதி என்பதை அறியாமல் - சந்தர்ப்ப சூழ்நிலையில் நடைபெற்ற வருத்தமான நிகழ்வு என்பதுடன், இதற்காக மாணவர்களாகிய நாம் குறித்த பத்திரிகையிடமும், ஏனைய ஊடகச் சமூகங்களிடமும் மன்னிப்புக்கோரி நிற்கின்றோம். இதே போன்ற நிகழ்வு எமது பல்கலைக்கழக வாளாகத்தினுள் மீண்டும் இடம் பெறாமலிருப்பதற்கும் உத்தரவாதம் தருகின்றோம்.

இறுதியாக, மாணவர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பொறுப்புடனும், எமது மாணவர்களின் கல்விசார்ந்த நடவடிக்கைகள் பற்றிய அக்கறையுடனுமே சிந்தித்துச் செயற்படுகின்றோம். எவருக்கும் அசௌகரியங்கள் ஏற்படுத்துவதையும் நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், எங்கள் உரிமைகளையும், யாருக்காகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லையென்றும் தெரிவித்துக் கொள்கின்றாம்.

எனவே, இச்சூழ்நிலைகளுக்குள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களாகிய எங்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்து வைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வரவேண்டுமென்றும்;, அதுவரை மாணவர்களாகிய நாம் விரிவுரைகளைப் புறக்கணிப்பதென்றும், மாணவர் ஒன்றியம் ஊடகங்களின் வாயிலாக அறிவிக்கும்வரை இப்போராட்டம் தொடருமென்றும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.