Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள், எதிர்த்தால் சிங்கம்-பா.அரியநேந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள், எதிர்த்தால் சிங்கம்-பா.அரியநேந்திரன்!

Posted by uknews On May 1st, 2011 at 6:17 am

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள் எதிர்த்தால் சிங்கம் என்ற நிலைப்பாட்டில்தான் இன்று இலங்கை அரசு மக்களை பார்க்கின்றது என்கிறார்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன். மட்டக்களப்பு தேத்தாத்தீவு உதயன் விளையாட்டு கழகம் நடத்திய கலாச்சார விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் ஆதரவு சக்தி என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.உண்மையில் இது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதரித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் காரணமாகவே அமைச்சர் கேகலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்பொது ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள் எதிர்த்தால் சிங்கம் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் மக்களை பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தமட்டில் ஒரு கடப்பாடு இருக்கின்றது கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது இரண்டு மாதங்களுக்கு முதல் நடந்த உள்ளுராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி வடகிழக்கு மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பைத்தான் ஆதரித்திருக்கின்றார்கள்.

இவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்திருக்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் நடத்தியுள்ளோம்.ஆனால் இந்த ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிடவில்லை என்கின்ற விமர்சனங்களும் வெளிவரத்தான் செய்கின்றது.

உண்மையில் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றோமே தவிர வெறுமனே தமிழ் மக்களின் உரிமைகளையோ அல்லது தமிழர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கிய ஆதரவினையோ உதாசினம் செய்து செயற்படுவதற்கு நாங்கள் எந்தவகையிலும் தயாராகவில்லை என்பதை கேகலிய ரம்புக்வெல போன்ற அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இவரை தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்கள் இலங்கையில் இருக்கின்ற தமிழ்,சிங்கள அரசியல் கட்சிகளில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ள ஒரேயோரு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டும்தான் இதன் மூலம் நாங்கள் தமிழ் மக்களுக்கான தனித்துவமான கட்சி என்பதை நிறுபித்துள்ளோம் என்றார்.இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும்,தேத்தாதீவு உதயன் விளையாட்டுகழக தலைவரும் உறுப்பினர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள் எதிர்த்தால் சிங்கம் என்ற நிலைப்பாட்டில்தான் இன்று இலங்கை அரசு மக்களை பார்க்கின்றது என்கிறார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மட்டக்களப்பு தேத்தாத்தீவு உதயன் விளையாட்டு கழகம் நடத்திய கலாச்சார விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

அன்மையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் கெகலியரம்புக்வெல அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் ஆதரவு சக்தி என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.உண்மையில் இது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதரித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் காரணமாகவே அமைச்சர் கெகலியரம்புக்வெல மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்பொது ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள் எதிர்த்தால் சிங்கம் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் மக்களை பார்த்துக்கொண்டிருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தமட்டில் ஒரு கடப்பாடு இருக்கின்றது கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது இரண்டு மாதங்களுக்கு முதல் நடந்த உள்ளுராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி வடகிழக்கு மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பைத்தான் ஆதரித்திருக்கின்றார்கள்.இவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தான் வாக்கலித்திருக்கின்றார்கள்.இந்த அடிப்படையில்தான் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் நடத்தியுள்ளோம்.ஆனால் இந்த ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிடவில்லை என்கின்ற விமர்சனங்களும் வெளிவரத்தான் செய்கின்றது.

உண்மையில் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றோமே தவிர வெருமனே தமிழ் மக்களின் உரிமைகளையோ அல்லது தமிழர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கிய ஆதரவினையோ உதாசினம் செய்து செயற்படுவதற்கு நாங்கள் எந்தவகையிலும் தயாராகவில்லை என்பதை கெகலியரம்புக்வெல போன்ற அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.என்றார்

இவரை தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்கள் இலங்கையில் இருக்கின்ற தமிழ்,சிங்கள அரசியல் கட்சிகளில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ள ஒரேயோரு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டும்தான் இதன் மூலம் நாங்கள் தமிழ் மக்களுக்கான தனித்துவமான கட்சி என்பதை நிறுபித்துள்ளோம் என்றார்.இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும்,தேத்தாதீவு உதயன் விளையாட்டு கழக தலைவரும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.