Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேங்ஸ்டர் படங்கள் குறித்த முன்னுரை : புகலிட தமிழ் சினிமா : மூன்று இயக்குனர்கள்

Featured Replies

கேங்ஸ்டர் படங்கள் குறித்த முன்னுரை -

எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் கனடாவில் ஈழத்தமிழர்களினிடையில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் என்பது மிகப் பெரும் பிரச்சினையாக எழுந்து நின்றது. இங்கிலாந்தில் தொண்ணூறுகளில் அதீதமாகத் தோன்றிய கேங்க்ஸ்டர் கலாச்சாரம் கனடாவைப் போலவே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேய்நிலையை அடைந்தது. பிரான்சிலும் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் எனும் அளவில் உச்சத்தில் இருந்த கேங்க்ஸ்டர்களின் நடவடிக்கைகள் கனடா இங்கிலாந்து போலவே தேய்நிலையை அடைந்திருக்கிறது. குழு அளவிலான வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், தனிநபர்களுக்கிடையிலான வன்முறைக் கலாச்சாரம் என்பது இளையதலைமுறையினர் மத்தியில் ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. விளைவாக அப்போதுதான் பதின்மவயதைக் கடந்த இளைஞர்கள் தொடரந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இப்படி மரணமுறுகிறவர்களில் பெரும்பாலுமானவர்கள் 1983 கொழும்பு ஜூலைக் கலவரத்தின் பின் பிறந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு மகத்தான சோகமாக இருக்கிறது.

ஈழத்தமிழர்களிடையில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் தொடர்பான சமூகவியல் ஆய்வுகள் இங்கிலாந்தில் அரசுமட்டத்திலும் மருத்துவத்துறை மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கல்வித்துறை முறையியல் அடிப்படையில் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் ஈஸ்ட்ஹாம், வால்தாம்ஸ்ரோ, வெம்பிளி, மெர்ட்டன், குரோய்டன் போன்ற ஐந்து இடங்களில் ஈழத்தமிழ் கேங்க்ஸ்டர் குழுக்கள் காணப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் இயங்கும் அரசியல் தஞ்ச ஆய்வுநிறுவனத்திற்காக அகிலா பாலசுப்ரமணியம் என்கிற பெண்மணி மருத்துவத்துறை நோக்கில் இந்தப் பிரதேசத்தில் இயங்கும் வன்முறைக் குழக்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

கேங்க்ஸ்டர் கலாச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இரு விதமான ஒதுக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் என இவர் குறிப்பிடுகிறார். இலங்கையில் இன ஒதுக்குதலை எதிர்கொண்ட இவர்கள், புகலிட நாடுகளிலும் இன நிற ஒதுக்குதல்களை எதிர்கொள்கிறார்கள் என்கிறார். பெற்றோர்களையும் உறவுகளையும் இழந்த இவர்களுக்கு கேங்க்ஸ்டர் குழுக்கள் உறவுகொண்டிருத்தலையும் (டிநடழபெiபெ) பாதுகாப்பையும் (ளநஉரசவைல) பிரதிநிதித்;துவத்தையும் (சநிசநளநவெயவழைn) குழுச்சார்பு வழங்குகிறது என்கிறார் அகிலா.

நண்பர்களுக்கு உதவுவது என்பதாகவே இவர்களது வன்முறை சம்பவத் தொடர்புகள் ஆரம்பிக்கிறது. ஓரே பெண்ணின் மீதான இருவரது காதல் என்பது பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. பிறிதொரு பிரதான பிரச்சிiனை போலி கடன் அட்டை தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள். இதுவரையிலும் இங்கிலாந்தில் மட்டும் இந்தத் தகராறுகளில் 25 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களது பெரும்பாலுமான தகராறுகள் திரைப்படக் கொட்டகையில்தான் துவங்குகிறது. தமிழ் கேங்க்ஸ்டர் படங்களில் இடம்பெறும் குரூரமான ஆயுதங்களும் கதாநாயகர்களும் இவர்களது ஆதர்ஷங்கள். இவர்கள் துப்பாக்கிகளை உபயோகிப்பதில்லை. கூர்மையான கத்திகள், நீண்ட வாள்கள், அரிவாள்கள், இரும்புக் கழிகள், உருட்;டுக் கட்டைகள் போன்றனவே இவர்களது கொலை ஆயுதங்கள்.

இங்கிலாந்தில் இலண்டன், கனடாவில் டெரான்டோ, பிரான்சில் பாரிஸ் என்கிற மூன்று நகரத்தினதும் வன்முறைக் குழக்களுக்கு அமைப்புமுறையில் சில பிரதானமான ஒற்றுமைகள் உண்டு. நகரத்தினைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, இவர்கள் எல்லைகளை வகுத்துக் கொள்கிறார்கள். இவர்களது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பிற குழுக்கள் தமது செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது என இவர்கள் விதித்துக் கொள்கிறார்கள். தத்தமது குழுக்களுக்கென பிரதானமாகத் தனித்துவமாகப் பெயர்களும் சூட்டிக் கொள்கிறார்கள். ஓரு குழு என்பது ஐந்து பேரிலிருந்து அதிகபட்சம் 200 பேர்கள் கொண்டது வரையிலும் இருந்திருக்கிறது.

தமிழ் வியாபாரிகளுக்கிடையிலான போட்டிகளில் இத்தகைய குழக்கள் பாவிக்கப்படுகிறது. உலகின் பெரும்பாலுமான புறநகர் வன்முறைக் குழுக்கள் போன்றே இவர்களது சமூக அடிப்படைகளும் இருக்கிறது. வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை, பெற்றோர்கள் இல்லாத அனாதை நிலைமை போன்றன இவர்களுக்குள் நிலவுகிறது. இவர்களில் பெரும்பான்மையினரிடம் வதிவிட அனுமதி என்பது இல்லாமல் இருக்கிறது. நிரந்தரமான வேலை இல்லாமல் இருக்கிறது. குழு மனப்பான்மை தரும் தோழமையும் நட்பும் இவர்களுக்கு உறவாகவும் ஆறதலாகவும் பாதுகாப்பாகவும,; அதுவே அவர்களது இருத்தலுக்கான நியாயத்தை வழங்குவதாகவும் இருக்கிறது. தமது நண்பர்களுக்காக எதையும் செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் ஈழத்தின் முன்னாள் போராளிக் குழக்களில் சொற்பகாலங்கள் இருந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் தத்தமது அரசியல் நோக்குகளின் அடிப்படையில் ஏதேனும் ஒரு போராளிக் குழவினருடன் இவர்களை இணைத்துப் பேசுவதென்பதும் வழமையாக இருக்கிறது. பிரதானமாக இத்தகைய வன்முறைக் குழுக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியானவை எனும் பிரச்சாரத்தை கனடிய மற்றம் பிரெஞ்சு வலதுசாரிப் பத்திரிக்கைகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

இங்கிலாந்தில் இது குறித்து ஆய்வு செய்த அகிலா பாலசுப்ரமணியமும் இத்தகைய தொடர்புகள் இல்லை என்பதனைச் சொல்கிறார். இத்தகைய குழு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு சிலருக்கு முன்னைய அரசியல் தொடர்புகள் இருந்திருக்கலாம் என்பது அல்லாமல் அமைப்புரீPதியில் இவர்கள் அரசியலால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதனையும் இதுவரையிலும் எந்த ஆய்வுகளும் முன்வைத்ததில்லை. எனினும் தாம் எதிர்கொண்ட வன்முறைச் சூழலும், தாம் இலங்கையில் ஈடுபட்ட அரசியல் வன்முறைகளும் உளவியல் அடிப்படையில் புகலிடத்திலும் தொடர்ந்து வேறுவடிவங்கள் எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதனை எவரும் ஒப்பவே வேண்டும். இலங்கையின் அரசியல் வன்முறைக்கும் புகலிடத்தின் கேங்க்ஸ்;ட்டர் வன்முறைக்குமான உளவியல் தொடர்ச்சி என்பதனை எவரும் மறுக்க முடியாது என்பதுவே நிஜம். அரசியல் வன்முறையினால் ஏற்பட்ட மனப்பிறழ்வின் தாக்கமாகக் கூட புகலிட வன்முறை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

ஈழத்தமிழ் இளைஞர்களிடம் புகலிடத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த துயரமான வன்முறை உளவியலை மிகக் கேவலமான முறையில் அரசியல் மயப்படுத்துபவர்களாக கனடாவிலும் ஐரோப்பாவிலும் வாழும் சிங்கள அமைப்புக்களும், சிங்கள தூதரகங்களும், இலங்கையின் சிங்கள தகவல் தொழில்நுட்பத் தொலைக்காட்சிச் சாதனங்களும் சளையாத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களிடம் இல்லாத வன்முறை, ஏன் தமிழர்களிடம் மட்டும் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பும் இவர்கள், இலங்கைத் தமிழர்கள் அடிப்படையிலேயெ வன்முறையாளர்கள் எனும் பிரச்சாரத்தினை மேற்கிலும் கனடாவிலும் மேற்கொள்கிறார்கள்.

அப்பட்டமானதொரு அரசியல் மோசடியாகவே இந்த வாதம் இருக்கும். சிங்களவர்களுக்காக அடக்குமுறையை ஏவ ஒரு அரசும் அவர்களது இரண்டு இலட்சம் ஆயுதப்படைகளும் இருக்கிறது. தமிழ்க்; கிராமங்களையும் வாழிடங்களையும் வழிபாட்டிடங்களையும் குண்டு வீசி அழித்தது சிங்கள ராணுவம். தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது சிங்கள ராணுவம். இவர்களது கொடும் வன்முறைக்கு எதிராகவே தமிழ் இளைஞர்கள் ஆயதமேந்திய வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனாலேயே அவர்கள் தமது கல்வியையும் இழந்தார்கள். உறவுகளை இழந்தார்கள். நிலத்தை இழந்தார்;கள். தமது இயற்கையையும் இழந்தார்கள். அவர்களது அழிவுகளும் பிறழ்வுகளும,; அவர்களது உளவியலும் அதிலிருந்துதான் உருவாகி இருக்கின்றன. அதனோடுதான்; அவர்கள் புகலிடத்திற்கும் வந்தார்கள். அவர்கள் எதிர்கொள்வது ஒரு தார்மிக அரசியல் உளவியல் நெருக்கடி. மருத்துவ அமைப்புகளும் சமூக நிறுவனங்களும், அரசுகளும், சேவை அமைப்புக்களும் அவர்களைச் செம்மைப்படுத்த ஆவண செய்ய வேண்டும். சர்வதேசிய அரசுகள் அவர்களுக்கு அரசியல் தீர்;வொன்றினைத் தரும் நடவடிக்கையின் பகுதியாக இருப்பது அவர்கள் எதிர்கொள்ளும் இந்த அவலம். இந்த மானுட அவலத்தையும் அரசியலாக்கும் குரூர மனம் படைத்தவர்களாகவே கனடிய ஐரோப்பிய சிங்கள சமூகமும், இலங்கை சிங்கள தகவல் தொழில்நுட்ப ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனர்களும் இருக்கிறார்கள்.

sathapranavan.jpg

சதா பிரணவன் இடிமுழக்கம்

சதா பிரணவனின் இடிமுழக்கம் முழுநீளத் திரைப்படத்திற்கான அழுத்தமான புனைவுப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இடிமுழக்கம் எனும் கேங்க்ஸ்டர் குழவின் தலைவனே கதையைச் சொல்லிச் செல்கிறான். நிரந்தரமான வேலை இல்லை. பாதிப்பேருக்கு நிரந்தரமான வதிவிட அனுமதி இல்லை. வாகன உரிமம் இல்லை. தட்டிக் கேட்க, ஆறுதல் சொல்ல, வழிநடத்த பெற்றோர்கள் இல்லை. அவர்கள் தமது வாழ்வின் சந்திப்பில் நிற்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்திருப்பதெல்லாம் சாய்ந்து கொள்ள லாச் சப்பல் வீதியின்; இரு மருங்கிலுமான இரும்குக் கம்பிகள், நண்பர்களின் தோழமை மட்டும்தான். லாச் சப்பல் இவர்களின் சொர்க்கம் என்கிறார் சதா பிரணவன். இவர்களை எவரேனும்; உறுத்துப் பார்த்தாலும் உதை விழும். தெரியாமல் மோதிவிட்டால் இரத்தம் வர இவர்கள் நையப்; புடைப்பார்கள். இவர்களுக்கு நிறைய காதல்கள் உண்டு. காதலுக்காக வீடேறிச் சென்று பெண்ணின் தகப்பனையும் சகோதரனையம் இவர்கள் மிரட்டிவிட்டு வருவார்கள்.

சதா பிரணவனின் குழுவினர் வெகுளித்தனமும் கோமாளித்தனமும் இயல்பில் கொண்ட, பாவனையில் வாழும் வன்முறைக் குழந்தைகளாக இருக்கிறார்கள். இவர்கள் இரும்புக் கம்பியில் சாய்ந்து நிற்பார்கள். போகிற வருகிற பெண்களை சைட் அடிக்கிறார்கள். முடிந்தால் தொடர்பு நெம்பர் கொடுக்கிறார்கள். இதுதான் அவர்களது அடையாளம். ஏதோ ஒன்று குறைவதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமது குழுவுக்கு ஒரு பெயர் வேண்டும். தமிழ் சினிமா பாணியில் ஒரு அதிரடிப் பாடலும் வேண்டும். தோள்களை இரு புறமும் அசைத்தபடி சிகரெட் உதடுகளில் தொங்க பாதையை அடைத்து வீர நடை போட வேண்டும். தமது குழுவுக்கு இடிமுழக்கம் எனப் பெயர் வைக்கிறார்கள். இடிமுழக்கம் குழுவுக்கும் ஒரு உச்சம் வருகிறது. தனது குழவின் உறுப்பினன் ஒருவன் பிறிதொரு குழு சேர்ந்தவனின் தமக்கைக்கு காதல் கடிதம் கொடுத்துவிட அவன் உதைபடுகிறான். அந்தக் குழு பெரிய பலம்வாய்ந்தவர்களின் குழு. இவர்கள் தட்டிக் கேட்கப் போகிறார்கள். பெண்ணின் ஜாக்கெட்டுக்குள் கைநுழைத்து காதல் கடிதம் வைப்பது தவறு என்கிறார் எதிரிக் குழவின் தலைவன். உனது சகோதரியின் ஜாக்கெட்டில் கைவைக்கவில்லை எனத் திருப்திப்படு என்கிறான் இடி முழக்கம் தலைவன். முகத்தில் ஒரே ஒரு குத்துதான் விழுகிறது. இடி முழக்கம் குழு தலைவனைவிட்டுப் பறந்து போகிறது. முகம் கட்டுப்போடப்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறான் இடிமுழக்கம் குழவின் தலைவன்.

மருத்துவ மனையிலிருந்து வெளியில் வருகிறான். மறுபடியும் தன் தோழனுக்கு ஏதோ பிரச்சினை என, இந்த வாழ்க்கை வேண்டாம் என மன்;றாடுகிற தனது காதலியை மிரட்டி விட்டு, நண்பர்களைச் சந்திக்க வரும் வழியில் காரில் வந்த ஒருவனால் நடுத்தெருவில் சுடப்பட்டு வீழ்கிறான். அந்த வழியால் வந்த ஒருவன் இதனைக் கண்ணுற்று காப்பாற்ற விழைகிறான். இவனிடம் முன்பு நடைபாதையில் அடிபட்டவன் அவன். இப்போது இவனைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்கிறான்.

ஆரம்பம் முதலே இடிமுழக்கம் குழவினர் பாவனையில் வாழும் பரிதாபத்துக்குரிய, அடிதடி என்றால் கழன்று கொள்ள நினைக்கிற பயந்தாங்கொள்ளிச் சிறுவர்களாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். இது ஒரு மனம் பேதலித்த நிலை. அடையாளமும் பாதுகாப்பும் தோழமையும் தேடிய நிலை. தம்மைத் தற்காத்துக்கொள்ளும் சிறு குழந்தையின் மனநிலை. இவர்களது நடவடிக்கைள் நகைப்புக்குரியன. இடிமுழக்கம் தலைவனின் மாமா அவனை வைகிறபோது மாமாவின் சின்ன மகன், சிறுவன், இடிமுழக்கம் குழவன் தலைவனை நக்கலாகப் பார்த்துச் சிரிக்கிறான். அவன் பிடறியில் லேசாகத் தாட்டுகிறான் இவன். ஓரே ஒரு குத்தில் மருத்துவமனைக்; கட்டிலில் விழுகிறான். இவர்கள் பாவனையில் வாழ்கிறார்கள். சமூகத்துக்கான எதிர்ப்பாக தமது நடவடிக்கையை இவர்கள் கருதிக் கொள்கிறார்கள்.

சிறுவயது கேங்க்ஸ்டர்களின் அடிப்படையான பல பண்புகள் இப்படத்தில் இருக்கிறது. சிறுபிராயக் காதல் சாகசங்கள் இருக்கிறது. நட்பின் மேன்மை இருக்கிறது. உறவற்ற ஏதிலிகள் இவர்கள் எனும் செய்தி இருக்கிறது. சமூகத்தினால் விலக்கப்பட்டவர்கள் எனும் செய்தி இதில் இருக்கிறது. இவர்களது நடத்தைகள் நகைச்சுவைத் தன்மை கொண்டதென்றாலும், இவர்கள் மரணமுறுகிறபோது பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சதா பிரவணது இடிமுழக்கம் இங்குதான் ஒரு திரைப்படமாக வெற்றி பெருகிறது.

லெனின் சிவத்தின் 1999

lenin.jpg

பிற ஈழ கேங்க்ஸ்டர் படங்களிலிருந்து பல விதங்களில் லெனின் எம். சிவத்தின் 1999; திரைப்படம் வித்தியாசப்படுகிறது. வரலாற்று ரீதியில் கனடாவின் கேங்க்ஸ்டர் குழுக்களுக்கு இடையில் அந்தச் சமூகத்தின் தலைவர்களால் உருவாக்கப்பட்ட 1999 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஒன்று அமலிலிருந்த காலத்தில் நடைபெறுவதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கென குறிப்பிட்ட குழக்களில் செயல்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், மரணமுற்றவர்களது உறவுகள், தமிழ் சமூகத் தலைவர்கள் போன்றவர்களைச் சந்தித்த கள ஆய்வின் பின் அதன் அடிப்படையில் லெனினிது திரைக்கதை உருவாகி இருக்கிறது.

இரண்டு குழுக்களுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. இரு குழுக்களைச் சார்ந்தவர்கள் ஒரு ஆளரவமற்ற தெருவில் சந்திக்கிறார்கள். ஓரு குழவினர் பிறிதொரு குழு ஒறுப்பினன் ஒருவனைத் தமது எல்லைக்குள் அவன் வந்துவிட்டதாகவும், ஒப்பந்தம் இல்லாவிட்டால் அவனைக் கொன்றிருப்போம் எனவும் மிரட்டுகிறார்கள். இதே ஒப்பந்தம் இல்லாவிட்டால் உமது தலைவன் கொல்லப்பட்டிருப்பான் என பிறிதொரு குழவினன் சவால் விடுகிறான். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தலைவனின் சகோதரன் காரிலிருந்து இறங்கி சவால்விட்ட பிற குழவினனை சுட்டுக் கொல்கிறான். 1999 படம் இப்படித்தான் துவங்குகிறது.

திரைப்படத்தில் மூன்று கதா பாத்திரங்கள் பிரதானமாகக் காட்சி அமைப்புக்குள் வருகிறார்கள். இவர்களுக்கிடையிலான ஊடாட்டமாகவே திரைக்கதை நகர்கிறது. இவர்களன்றி காட்சி அமைப்புக்குள் வராத இரு முக்கியமான கதா பாத்திரங்கள் உண்டு. ஒன்று பிரதானமான குழவின் தலைவன். பிறிதொன்று மருத்துவக் கல்லூரி மாணவியான பெண். மூவரில், கொலை செய்தவனின் சகோதரனும் குழத்தலைவனுமான குமார், பிறிதொருவன் அவனது விசுவாசியும் நண்பனுமான அன்பு. பிறதொருவன் அன்புவின் நண்பனும், கல்லாரி மாணவனும், பெற்றோரை இழந்தவனும், கீதாவைக் காதலிப்பவனும் ஆன அகிலன். அன்புவும்; கீதாவைக் காதலிக்கிறான். கீதா யாரைக் காதலிக்கிறாள் என்பது படத்தின் இறுதி வரையிலும் சொல்லப்படுவதில்லை. அவள் காட்சிக்குள் வருவதும் இல்லை.

தான் வன்முறை வாழ்விலிருந்து வெளியேறி, டொரான்டாவிலிருந்து வெளியேறிவிட நினைத்துக் கொண்டிருக்கும் குமார் தனது தம்பியின் நடத்தையால் குழுப்பமடைகிறான். இதிலிருந்து தப்பி வெளியேறுவதற்காக குற்றத்தை அன்புவின் மீது போட்டுவிட்டு, தாங்கள் டொரன்டோவை விட்டுவெளியேறலாம் என்கிறான் குழ நண்பன். தம்பியின் மீது கொண்ட பாசத்தில், குற்றவுணர்வுடன் தனது சகாவான அன்புவை போலீசில் மாட்டிவைத்துவிட்டு வெளியேற முடிவெடுக்கிறான் குமார். இதனை அறிந்து கொள்ளும் அன்பு நடந்தது அனைத்தையும் போலீசுக்கு அறிவித்துவிட்டுத் தான் டொரான்டோவை விட்டு வெளியேற முடிவெடுக்கிறான். எல்லாமும் திட்டமிட்டபடி நடக்கிறது.

அகிலனையும்; அன்புவையும் இணைக்கிற பல விடயங்கள் படத்தில் இருக்கிறது. இருவரும் பாடசாலை நண்பர்கள். அகிலன்; நாட்டிலுள்ள அனாதை மாணவர்களுக்கு நிதி திரட்டுகிற, கல்யாண வாழ்வைத் திட்டமிடுகிற, கல்லூரியில் படிக்கிற, தனது தாத்தாவைப் பராமறிக்கிற, உதாரணமான தமிழ் சமூக உறுப்பினன். இவனை ஒப்பிட்டு, அன்புவுக்கு அவனது தந்தை நிறைய உபதேசங்கள் செய்வதால் அன்புவுக்கு அகிலன் மீது ஒவ்வாமை; உண்டு. கீதாவை அவனும் காதலிப்பதால் ஒவ்வாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அகிலனும்; அன்புவம் சந்தித்துக்; கொள்ளும் தேநீர்;க்கடை ஒன்றும் உண்டு. பெரும்பாலும் அன்புவும்; அவனது பிற இரு நண்பர்களும் அமரும், கடையின் வலது மூலையிலுள்ள மூன்று நாற்காலிகள் கொண்ட மேசையில்தான் அகிலனும் அவனது பிற நண்பர்களும் அமர்வது வழக்கம்.

படம் இவ்வாறாக முடிகிறது. அன்புதான் கொலை செய்தது என குமார் அறிவித்தததால் காவல்துறை அன்புவைத் தேடுகிறது. அன்புதான் கொலை செய்தது எனப் பரவலாக அறியப்பட்டதால் அன்புவைக் கொல்ல பிறிதொரு குழுத் தலைவன் மரனையின் ஆட்களும் அன்புவைத் தேடித்திரிகிறார்கள். அன்பு இருவரிடமிருந்தும் தப்பி குமாரின் சகோதரன்தான் கொலையாளி என்பதை போலீசுக்கு அறிவித்துவிட்டு, வீட்டை நோக்கி வரும்; வழியில், தேநீர் வீடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருப்பதை அறிந்து அங்கு விரைகிறான். அங்கு கொல்லப்பட்;டுக் கிடப்பவர்கள் அகிலனும்; அவனது இரு அப்பாவி நண்பர்களும் என்பதையும், அவர்கள் தாங்கள் வழக்கமாக அமரும் அதே மூன்று நாற்காலி மேசையில் அமர்ந்திருந்ததார்கள் என்பதும், தானெனக் கருதியே அவர்கள் மரனையின்; ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனையும் அறிந்து அழுது வெடிக்கிறான் அன்பு. ஓரு தருணத்தில் அவனது தந்தையைக் காத்த, அவனது நண்பன் அகிலன,; அன்புவின் நடத்தையால்;; தவறாகக் கொல்லப்பட்டதை நினைத்து அதிர்ந்தபடி தனது வீடு நோக்கி ஓடுகிறான். தந்தையிடம் தான் அகிலனைக்; காப்பாற்றி இருக்க முடியும் எனப் புலம்பி அழுகிறான்.

இனியும் டொரன்டோவில் நான் இருக்கவிரும்பவில்லை. நாம் எங்கேயாவது தூரத்திற்குப் போய்விடுவோம் அப்பா என்கிறான் அன்பு. அடுத்த நாள் காலை, தான் காதலி கீதாவைச் சந்திக்க வருகிறேன் என்று சொன்னதையும் நிராகரித்துவிட்டு தந்தையுடன் டொரன்டொவை விட்டு அன்பு வெளியேறுவதுடன் படம் முடிகிறது.

படத்தினை வெகுஜனத் திரைப்படமாக ஆக்கியிருக்கக் கூடிய, முன்பு தான் திட்டமிட்ட அகிலனுக்கும்; கீதாவுக்கும் இடையிலான காதல் பாடலை லெனின் சிவம் அகற்றியதன் மூலம் படம் ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது. கீதா தொடர்பான அந்த நிச்சயமின்மை அன்புவுக்கும் அகிலனுக்கும்; இடையிலான நட்பின் மகத்துவத்தை இன்னும் ஆழப்படுத்துகிறது. காதல் என்பது தமது வாழ்வின் திருப்பத்தில் இருக்கும் இளைஞர்களை ஒருவகையில் திசைமாற்றுகிறது என்பதையும் படம் ஒரு வகையில் கோடிட்டுக் காட்டுகிறது. மரபான தமிழ் சினிமா ஆகிவிடுவதற்கான எத்தனையோ வாய்ப்புக்களை லெனின் கடந்து சென்றிருக்கிறார். அகிலனை காவிய நாயகனாக ஆக்கியிருக்க முடியும். தத்துவங்களை உதிர்த்திருக்க முடியும். சில காட்சிகள் அப்படி இருக்கவே செய்கின்றன. என்றாலும் மூன்று பாத்திரங்களின் சமநிலையை அது குலைத்துவிடவில்லை.

இரத்தத்தையும் வன்முறையையும் கொண்டாடி இருக்க முடியும். லெனின் அதனைச் செய்யவில்லை. கதைக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வலிக்கும் நேர்மையாக இருந்திருக்கிறார் லெனின். சில காட்சி அமைப்புக்களிலும் வசன இடைவெளிகளிலும் பாத்திரங்கள் இன்னும் முதிர்ச்சியைக் காண்பித்திருக்க முடியும். குறிப்பாக குமார் செய்த துரோகம் பற்றி நீ;;ர்க்கரையில் நின்றபடி நண்பர்கள் விவாதிக்கும் இடம் செயற்கைத்தன்மையைத் தொடுகிறது. படத்தின் மிகப் பெரிய பலம் அன்பு குமார் அகிலன் போன்றோரின் பாத்திரப் படைப்பும், அவர்கள் சந்திக்கும் தருணங்களிலான படத் தொகுப்பும். லெனின் மிக நேர்த்தியாக இதனைச் செய்திருக்கிறார். பொதுவாக இம்மாதிரியான ஹாலிவுட் படங்களில் இருக்கும் அறமற்ற வன்முறைக் கொண்டாட்டங்களை நிராகரித்து, தமது சமூகத்தின் நெருக்கடியிலிருந்து இனிவரும் தலைமுறையை மீட்க வேண்டும் எனும் ஆத்மார்த்தமான வேட்கையை லெனின் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுபாஷின் வன்னி எலிகள்

subhas.jpg

ஓரு ஜோடி எலிகள் ஒன்றையொன்று தொடர்ந்தபடி, சில வேளைகளில் தொடரமுடியாது இருளில் தொலைந்தபடி, வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்ம் முகாமின் கூடாரங்களுக்கு வெளியில் அலைந்து திரிகிறது. முள்கம்பி வேலிகளில் பட்டுத்தெறித்து வறண்ட சருகுகளுக்குள் நுழைந்து துளாவி, எலிகள் ஒன்றையொன்று தமது இணையைத் தேடி அலைந்தபடி இருக்கின்றன.

கூடாரங்களை எலிகள் தாண்டிச் செல்லும்போது மானிக்பார்ம் முகாமில் வதியுறும் அகதிமக்களின் வாழ்வு அவர்களது கூக்குரலாக, அழுகுரலாக, வீறிடலாக இருளிலிருந்து சாவின் ஓலமென எம்மை எட்டுகிறது. தனது தாயிடம் தனது பசியை வெளியிடும் சிறுமி, மாதாவிடம் இறைஞ்சும் கடவுள் பக்தி கொண்ட சிறுமி, அடிமைப்பட்ட மனிதரின் மீட்சிக்கென மனுஷகுமாரனிடம் முறையிடும் மனிதன் என அன்றாட வாழ்வின் அழுகுரல்களை எலிகள் கடந்து போகின்றன.

நாய்கள் தூரத்தில் குரைக்கின்றன. முகாமின் மங்கிய வெளிச்சத்தில் மனித உடல்கள் கிடையாகப் படுத்திருப்பது தெரிகிறது. தொடரும் அழுகுரல் இப்போது ஓலமெனக் கேட்கத் துவங்குகிறது. ‘கொட்டியா, கொட்டியா’ எனச் சொன்னபடி இலங்கைப் படையினர் முகாமிலுள்ள இளைஞர்களை சித்திரவதை செய்கிறார்கள். அலையும் சப்பாத்துக் கால்களும் ஆற்றாமையில் துடிக்கும் கைகால்களும் நிழல்களாகி மறைகின்றன. அடுத்த கூடாரத்தில் தன்னை விட்டுவிட மன்றாடும் பெண்ணின் தீனக்கதறல் உரத்து ஒலிக்க ஒலிக்க, படையினரின் உடல்கள் கும்பலாக பெண் உடலின் மீது வெறிகொண்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுகின்றன.

தனது கைத்துப்பாக்கியால் பெண்ணின் குரலை நிரந்தரமாக முடித்துவைக்கிறான் ஒரு படையினன்.

எலிகள் எல்லாவற்றினதும் சாட்சியாக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது. அன்று நாள் 2009 ஆம் ஆண்டு ஜூலை மதம் 03 ஆம் திகதி. நேரம் இரவு 10.29 மணி எனும் செய்தி முகாமின் கூடாரங்களின் மீது விழுகிறது.

முகாமுக்கு மனிதர்கள் பதியப்படும்போது அவர்களின் பெயர்களின் மீதான அரச முத்திரை பதிவது போலவே, வன்னி எலிகள் என திரைத் தலைப்பு போடப்படும்போதும் அரச முத்திரை பதிகிறது. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள். எலிகளுக்கும் மனிதர்களுக்ளும் இடையிலான நிரந்தர யுத்தத்தில் எலிகள் போலவே மனிதர்களும் சில வேளைகளில் வேட்டையாடி அழிக்கப்படலாம். எலிகளை அழிக்க நினைப்போருக்கும் எலிக்குமான பகைமை என்பது அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. எலிகள் ஒழிந்த உலகம் என்பது சத்தியமேயில்லை.

மனிதனும் எலிகளும் எதிர்கொண்டே தீர வேண்டிய ஒரு இருத்தலியல் நெருக்கடி இது. ஹாலிவுட் படமான ‘மௌஸ் ஹன்ட்’ அல்லது எலி வேட்டை இதனால்தான் என்றும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. எலிக்கும் மனிதனுக்குமான சிறைவாழ்வுப் பதட்டம் பற்றிய அடூர் கோபாலகிருஷ்ணனின் சாகாவரம் பெற்ற ‘எலிப்பத்தாயம்’ இதனால்தான் உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. எலிகள் ஒரே சமயத்தில் எம்மிடம் குதூகலத்தையும், அறுவறுப்பையும், கிலியையும் உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் தமது அறைக்குள்ளாவது எலிவேட்டையை நடத்தியிருப்பவர்கள் இந்த மனநிலையைத் உணர முடியும்.

எலிகள் குறித்த இந்தச் சுவாரஷ்யம் சுபாஷிடம் முற்றிலும் வேறுவிதமான அனுபவத்துக்கு மடைமாற்றப் பட்டிருக்கிறது. படம் துவங்கும்போது திரைமுழுக்கவும் தெரியும் இரும்பு முள்வேலியின் பின்புறம் சருகுகளும், பிளாஸ்டிக் பைகளும் மரக்கொப்புகளும் இரைந்துகிடக்கும் அகதிமக்களின் கூடாரங்களுக்கு வெளியில் குறுகுறுவென நம்மை ஈரக்கும் எலிகள், இறுதியில் பயங்கரமான நினைவுகளை, கையறுநிலையிலான மனநிலையை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விடுகிறது…

www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.