Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்புக் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது

Featured Replies

கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்புக் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார்.

174 மீற்றா உயரமான தொலைத்தொடர்பு பரிவாத்தனை கோபுரம், 400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கோபுரத்தின் மூலமாக, வடபகுதி முழுவதற்குமான தொலைக்காட்சி, மற்றும் வானொலி சேவைகளை ஒளி மற்றும் ஒலிபரப்ப முடியுமென்று தெரிவிக்கப்பட்டது. அரச தனியார் துறையினரின் தேவைக்கு ஏற்றவகையில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினரின் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கொக்காவில் பகுதியல் முன்னர் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அதற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை விடுதலைப் புலிகள் 1990 ஆம் ஆண்டு தாக்கிக் கைப்பற்றினார்கள். பின்னர், அங்கு விடுதலைப் புலிகள் அமைத்திருந்த புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரத்தை வன்னிப்போரின்போது இலங்கை வான்படை தாக்கி அழித்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8111

புலிகள் அன்று கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்கின்றனர்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

"வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32068

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு:-

06 ஜூன் 2011

2ஆம் இணைப்பு:- விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை – ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கின் சில அரசியல் சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வடக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு தெற்கு அரசியல் தலைமைத்துவங்களுடன் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வடக்கு மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்காவில் தொலைதொடர்பு கோபுர திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட போது அவா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் ..ஜனாதிபதியால் திறந்து வைப்பு:-

கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கின் சகல மாவட்ட மக்களும் நன்மையடையும் வகையில் 174 மீற்றர் உயரத்தில் பிரமாண்டமான முறையில் இக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளதுடன் 400 மில்லியன் ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளது.

ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக்காட்சி உள்ளிட்ட அரச தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி மற்றும் அரச, தனியார் வானொலிச் சேவைகள் ஆகியவற்றுக்கு தனித்தனிப் பிரிவுகள் இக்கோபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியில் இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் வாழும் சகல மக்களும் தமக்கான தொலைக்காட்சி, வானொலி, தொலைத்தொடர்புச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் 20 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கிய கோபுரம் திறந்து வைப்பு:-

கொக்காவில் ஒலி-ஒளிப்பரப்பு கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தை விடுதலைப்புலிகளின் 20 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கியிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், ஒலி-ஒளிப்பரப்பு கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் கையடக்க தொலைபேசி சேவைகள் வழங்கப்பட உள்ளன.

சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் இந்த ஒலி-ஒளிப்பரப்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதன் உயரம் 174 மீற்றராகும். கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

gtbc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.