Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்த பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டுள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, June 9, 2011, 0:08சிறீலங்கா

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது முதல் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இன்று சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இத்தகவலை தெரிவித்தார்.கடந்த மாதம் மாத்திரம் மட்டக்களப்பில் நான்கு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கமே அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் மாத்திரமே துப்பாக்கிகள் இருக்கின்றபோது எப்படி இந்தச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன? வன்னி துப்புரவு செய்யப்பட்ட பிறகும் சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் இருக்கின்றன.

அவசரகாலச் சட்டம் அவசியம் என்ற போதிலும் அது சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தச் சட்டத்தை ஒவ்வொரு மாதமும் நீடிப்பதன் மூலம் என்ன பிரயோசனம் இருக்கின்றது?

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் அரச காணிகளில் சிலர் அத்துமீறிக் குடியேறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிபரால் மேச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட 3ஆயிரம் ஏக்கர் காணி ஊர்க்காவற்படையினருக்கு பயிர்ச் செய்கைக்காக விற்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை அவர்களுக்கு முள்கம்பிகளையும் முள்கம்பி கட்டைகளையும் வழங்கியுள்ளது. அரச காணியில் அத்துமீறிக் குடியேற சிறிலங்கா அரசும் உதவி செய்கின்றது.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது முதல் இதுவரை மட்டக்களப்பில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைத் திரட்டி, நாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம். இருப்பினும், ஒருவரையாவது, காவல்துறையினரால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவசரகாலச் சட்டத்தை ஒவ்வொரு மாதமும் நீடிப்பதில் எதுவித பிரயோசனமும் இல்லை. அந்தச் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லைஎன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

source:tamilthai.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.