Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! ருத்ரகுமாரன்

Featured Replies

சட்டப் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! ருத்ரகுமாரன்

ராஜபச்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் சிறிலங்கா மீது பொருளாதார தடைவிதிக்கவும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதில் முன்னின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என வேண்டுவதாகவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழ் மக்கள் சமத்துவமான நிலையில் வாழ்வதற்கான தீர்வு எட்டப்படும்வரை சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை கண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

இத் தீர்மானத்தை முன்மொழிந்து, இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய காரணங்களைத் தெளிவாக சட்டப்பேரவையில் வெளிப்படுத்தி பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இத் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைகிறோம்.

இத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கெல்லாம் ஆதாரமாக நிற்கும் தமிழக மக்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தமிழக மக்களின் தொப்புள் கொடியுறவுகள் என்பதனையும் சிங்களம் அவர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி, அடக்கி ஒடுக்கி இரண்டாம்தரக் குடிமக்களாக நடாத்தி வருகிறது என்பதனையும், சிங்களத்தைப் பணிய வைக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதனைத் தவிர வேறுவழியேதும் இல்லை என்பதனையும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் அனைத்துலகத்துக்கும் உணர்த்தி நிற்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

இத் தருணத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்பான நமது வரலாற்றுப் பட்டறிவினையும் பதிவு செய்ய விரும்புகிறோம். சிங்கள ஆட்சியாளர்கள் கொடூரமும் சூழ்ச்சியும் மிக்கவர்கள். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒரு தடவை சொன்னதைப் போல, வயிற்றில் குத்துவதாகப் பாசாங்கு செய்து முகத்தில் குத்தக் கூடியவர்கள். தமக்கு அழுத்தங்கள் வரும்போது பணிவது போல நடிப்பதும் வந்த அழுத்தங்களில் இருந்து விடுபட்டதும் துள்ளியெழுந்து மிதிப்பதும் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.

தம் மீதான அழுத்தத்தை எதிர்கொள்ள தற்போதய சூழலில் சீனாவை வைத்து இந்தியாவினைக் கையாளும் அணுகுமுறையினை சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. இந்திய மத்திய அரசோ சிறிலங்காவை சிறிய அரசாகக் கருதி அதனைத் தாம் இலகுவாகக் கையாளலாம் என்ற பாணியில் செயற்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் சிறிலங்கா அரசை அழுத்தங்கள் இன்றிக் கையாள்வது சாத்தியமானதல்ல. தமிழக முதல்வர் சிறிலங்கா அரசினைப் பேசி வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதனையும், கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதனையும் புரிந்து செயலாற்றியிருப்பது அவரது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது.

தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம். தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புகிறோம்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகளாவியரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தமிழக சட்டப்; பேரவையின் இத் தீர்மானம் நமது முயற்சிகளுக்கு வலுவூட்டும்.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={DEA3E531-5F98-45E9-BE3B-DFB59B6A545A}

  • தொடங்கியவர்

தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஈழத்தமிழ் மக்களின் மீது தமது அன்பையும், கரிசனையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'சிறிலங்கா அரசாங்கத்தை போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், சிறிலங்கா அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி அடிபணிய வைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து, ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்றும் தங்களின் தீர்மானத்தில் கூறியுள்ளதையும் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஆறரைக்கோடி தமிழ்நாட்டு உறவுகளின் தீர்மானமாக நாம் இதனைப் பார்க்கின்றோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் தாங்கள் வெளியிட்ட கருத்துக்கள் எமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாக, கடந்த எமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தோம்.

தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானமானது, அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.</p>

ஈழத்தில் பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது, மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன, ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்களை தங்களின் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.

இவை அனைத்தும் தமிழின அழிப்பின் கட்டங்கள் என்பதால், இன அழிப்பு இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்திய அரசை வலியுறுத்துவேன் எனக் கூறியதுபோன்று, தாங்கள் மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகளுக்கு உலகத் தமிழர்கள் நிச்சயம் துணை நிற்பர் என நம்புகின்றோம்.

அத்துடன், தங்களின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஈழத்தமிழ் மக்களின் மீது தமது அன்பையும், கரிசனையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அகில இந்திய மட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னகர்த்தி அநீதி இழைக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க தாங்கள் துணை நிற்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

பேச்சுடன் நின்று விடாத தங்களின் செயல் வீரத்திற்கு எமது மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்' என இவ்வறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={9BB576FE-7F40-43DC-9BBA-472611EE77DA}

  • தொடங்கியவர்

சிறீலங்காவுக்கு பொருளாதாரத்தடை கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை சட்ட சபையில் நிறைவேற்றியமைக்காக நன்றி தெரிவிப்போம்.

எமக்காக அவர் தொடர்ந்து குரல் முனையக் கூடிய பணிகளில் இறங்குவோம்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் தொலை நகர் எண்(Fax))

அதிமுக பணிமனை தொலை நகல்: 01191 44 28133510

கொடநாடு இளைப்பாறும் வீடு தொலைநகல்: 011 91 42 66270759, 01191 42 6670984

போயசு தோட்டம் இல்லம்:01191 44 24992255 , 01191 44 24991414 , 011 9144 24992121

தமிழக சட்டசபை உறுப்பினர்கள், அவர்களின் தொடர்பு கொள்ளும் வழிவகைகள் : List of Tamil Nadu MLAs

http://www.tamilnadumlas.com/index.asp

http://www.tamilnadu...m/ministers.asp

------------------------------------------------------

to : cmcell@tn.gov.in

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

செல்வி. ஜெயலலிதா ஜெயராம்

தமிழக முதலமைச்சர்.

மாண்புமிகு முதலைமைச்சர் அவர்களுக்கு,

இன்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக சிறிலங்கா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படல் வேண்டும் என தங்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உலக தமிழினம் பாராட்டி நம்பிக்கை கொண்டுள்ளது.

ஒரு பாரிய இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து இரண்டுவருடங்கள் கழிந்தும் உரிமைகள், உறவுகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக தமது சொந்த நிலத்தில் வாழும் ஈழ தமிழர்களின் அவலங்களை துடைத்தெறியும் பலமும், உரிமையும், கடமையும் தங்களுக்கு உண்டு. அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை ஒளி இன்று எட்டு கோடி தமிழின மனங்களிலும் ஏற்றப்பட்டுள்ளது.

அந்த நம்பிக்கையுடன் இன்று விடைபெறுகிறேன்,

அன்புடன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.