Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமக்கிடையே முட்டி மோதிக்கொள்ளும் சிறிலங்கா அரசின் புலனாய்வுச் சேவைகள் - ஆங்கில ஊடகம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 11:08 GMT ] [ கார்வண்ணன் ]

மகிந்த ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளினால், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுகள் ஒன்றையொன்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவுகள் ஒன்றையொன்று கண்காணிப்பதும், சந்தேகத்துடன் பார்ப்பதும் குழப்பமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குழப்பமான நடவடிக்கையின் ஒருகட்டமாக, சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் தலைவரான பிரதி காவல்துறைமா அதிபர் சந்தன விக்கிரமரத்ன புத்தளம் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் பிரதி காவல்துறைமா அதிபர் கீர்த்தி கஜநாயக்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

இவருக்கு காவல்துறைமா அதிபர் பதவி அல்லது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பதவி தருவதாக ராஜபக்ச அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்தது.

ஆனால் அந்தப் பதவிகள் எதுவும் கொடுக்கப்படாமல் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.

அரசின் பொய்யான வாக்குறுதிகளால் மனமுடைந்து போன அவர், பொறுப்புணர்வுடன் புலனாய்வுச் சேவையை முன்னெடுக்கவில்லை.

இவரையடுத்து இந்தப் பதவியைப் பொறுப்பேற்கவிருந்த பிரதி காவல்துறைமா அதிபர் சந்தன விக்கிரமரத்னவே திடீரென சில நாட்களுக்கு முன்னர் புத்தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்துக்கு முக்கியமான காரணம், அரச புலனாய்வுச் சேவைகள் இரண்டு பட்டு நின்று ஒன்றையொன்று உளவு பார்க்கின்ற நிலை தான் என்றும் கூறப்படுகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து அரச புலனாய்வுச் சேவை ஒட்டுக்கேட்டு வந்தது.

அதுபோலவே இராணுவப் புலனாய்வுப் பிரிவும் அரச புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு வந்தது.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இருதரப்புக்கும் பாதுகாப்புச் செயலரே உத்தரவிட்டிருந்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவின் கீழ் உள்ளது.

பிரிகேடியர் அருண வன்னியாராச்சியும் கூட கீர்த்தி கஜநாயக்க, சந்தன விக்கிரமரத்ன ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு வந்தார்.

அதேவேளை கீர்த்தி கஜநாயக்க குழு மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவினது மட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் தொலைபேசியைக் கூட ஒட்டுக்கேட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு இதுவரையில், அரசியல்வாதிகளினதோ அல்லது ஊடகவியலாளர்களினதோ தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கவில்லை.

அவர்களின் நடவடிக்கைகள் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்குடையதாகவே இருந்தது.

ஆனால் இப்போது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கைவிட்டு கீழ்த்தரமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபக்ச அரசின் கேவலமான பணிகளுக்கு தாம் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சந்தன விக்கிரமரத்னவின் இடமாற்றத்துக்கு மற்றொரு காரணம் சுதந்திர வர்த்தக வலயப் பிரச்சினைகள் தொடர்பாக முன்கூட்டியே தகவல் வழங்கத் தவறியதுமாகும்.

அதேவேளை, தீவிரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் பிரதி காவல்துறைமா அதிபர் சந்தன வாகிஸ்ரா அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் விஜயகுமாரணதுங்கவின் கொலை வழக்கில் பிரதான சாட்சியை விளக்கமறியலில் இருந்தபோது தப்பிக்க விட்டதான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றும் அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.