Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் - சிறிலங்கா: அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்கு முகம்கொடுப்பதேன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 11:38 GMT ] [ நித்தியபாரதி ]

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் ஏன் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளன?

இதற்கான பதிலை விபரித்து கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அப்பத்தியின் முழுவிபரமாவது,

சிறிலங்கா மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் அறிக்கையை எதிர்த்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா சார்பாகப் பேசிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதான பங்கு வகிக்கின்றது.

சிறிலங்கா எந்தவொரு பிரச்சினையை முகங்கொடுக்கின்ற வேளையிலும் பாகிஸ்தான் அதற்கு எப்போதும் துணையாயிருப்பது வழமையாகும். பாகிஸ்தான் இதனை அண்மையில் இடம்பெற்ற ஐ.நாவின் மனிதஉரிமைகள் கூட்டத் தொடரின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

"சிறிலங்கா தனது நாட்டின் தேசிய அமைதியைப் பேணுவதற்கு அனைத்துலக சமூகம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என இஸ்லாமிய அமைப்பின் சார்பாகப் பேசிய பாகிஸ்தானின் தூதர் சாமிர் அக்ரம் [Zamir Akram] தெரிவித்திருந்தார்.

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர்களின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையானது இரண்டாந்தரத் தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், இதனை ஒருபோதும் ஆதாரமாக கொள்ள முடியாது எனவும் இவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவை பான் கீ மூன் நியமிப்பதற்கு முன்னர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனசீர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கான குழுவும் சிலவேளைகளில் நியமிக்கப்பட்டிருக்கலாம்.

சிறிலங்காவிற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நாவின் வல்லுனர் குழுவில் அங்கம் வகிக்கும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமாஅதிபர் மர்சுகி தருஸ்மன் [Former Indonesias Attorney General Marzuki Darusman] பாகிஸ்தான் தொடர்பான விசாரணைக்குழுவிலும் அங்கம் வகிக்கின்றார்.

சிறிலங்காவைப் போலல்லாது, பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கம் பான் கீ மூனைக் கோரியிருந்தது.

இதனடிப்படையில், பூட்டோவின் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நாவின் விசாரணைக்கு முகம் கொடுப்பதென பாகிஸ்தான் தீர்மானித்திருந்தது.

ஆனால், குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்த போதிலும், இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னமும் இனங்காணப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நாவின் வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பாதுகாப்பதற்காக, இதுவரையில் பாகிஸ்தானிய அரசாங்கம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.

ஆனால் சிறிலங்கா விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பின் மத்தியில் அதன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பான் கீ மூன் தனது வல்லுனர் குழுவை நியமித்திருந்தார்.

தனது நாட்டில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவிடம் வழங்கியிருந்த பாகிஸ்தான், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐ.நாவின் வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை மறுப்பதில் தீவிரமாகச் செயற்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளுடன் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஐ.நாவின் வல்லுனர் குழுக்கள் ஒவ்வொன்றிலும் மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு குழுவிலும் மர்சுகி தருஸ்மன் [Marzuki Darusman] அங்கம் வகிக்கின்றார். பாகிஸ்தானின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் அதன் இரகசிய புலனாய்வுப் பிரிவு போன்றவை பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துள்ளன என்ற குற்றச்சாட்டு ஏலவே முன்வைக்கப்பட்டுள்ளதால் ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தனது ஆதரவை வழங்குவதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டுகின்றது.

அல்குவைதா தலைவரான பின்லேடனின் நிதியுதவியுடன் ஆட்சியமைத்துக் கொண்ட பாகிஸ்தானிய அரசாங்கத்தின் அதிபராக உள்ள பெனாசீர் பூட்டோவின் கணவரான சர்தாரி, பூட்டோவின் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் அல்குவைதாவின் ஆதரவு இருந்ததாக முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் அதிபராக உள்ள சர்தாரியின் கீழ் உள்ள பாகிஸ்தானிய இரகசியப் பாதுகாப்புப் பிரிவினால் தான், பின்லேடன் அபோதாபாத்தில் [Abbottobad] ஒளித்து வைக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டும் அவர்களது பிழையான நடவடிக்கைகள் காரணமாக தற்போது அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களிற்கு உட்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் பயங்கரவாதத்தை சரியாக கட்டுப்படுத்தியிருந்திருந்தால், பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கா பின்லேடனை வான்தாக்குதல் மூலம் கொல்ல முடியாதிருந்திருக்கும்.

அமெரிக்காவைப் போல இந்தியாவும் தனது வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் மனதளவில் பீதியடைந்துள்ளது.

இந்தியா அபோதாபாத் நடவடிக்கை போன்று ஏதாவது முயற்சியில் ஈடுபடுமாயிருந்தால், பெரியதொரு அழிவை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் சல்மன் பசிர், இந்தியாவை எச்சரித்துள்ளார்.

ஆனால், உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கராச்சியிலுள்ள பாகிஸ்தான் கடற்படையினரின் Meheran விமானத்தளம் மீது தலிபான்கள் மேற்கொண்ட முற்றுகைத் தாக்குதலானது, பாகிஸ்தானின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களிற்கும் பாகிஸ்தானிய பாதுகாப்புப் பிரிவுகளிற்கும் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகளில், பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றம் புலனாய்வுப் பிரிவுகள் தொடர்ச்சியாக தோல்வியுற்று வருகின்றமையானது, தனது அணுவாயுத வலைப்பின்னல் உள்ளடங்கலான அரச மூலோபாய வளங்களை, 2007ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுக்குள் பலம் பெற்று வரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தான் எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் அணு உலை நிலையங்கள் மீதும் அதனுடன் தொடர்புபட்ட வளங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுமாயின் அது பெரும் அழிவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இராணுவ வளங்களையும் அழிக்கும் நோக்கில் பயங்கரவாதிகளால் பாகிஸ்தானிய கடற்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் PC –Orion 3 என்ற கடல்சார் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் இரண்டு வான்கலங்கள் அழிக்கப்பட்டன.

Wah, Sargodha, Kamra போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த குறைந்தது மூன்று அணு ஆயுத நிலைகள் பயங்கரவாதிகளின் அண்மைய தாக்குதல்களுக்கு உள்ளாகின.

பாகிஸ்தானின் அணுசக்திப் பலம் தீவிரவாதக் குழுக்களின் கைகளுக்கு சென்று விட்டால், அது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற பயமும் அச்சுறுத்தலும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் கூட இந்தப் பயம் உள்ளது.

இதனால், பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் பாகிஸ்தானிய அரசாங்கம் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை என அனைத்துலகமும் பழி சுமத்துகிறது.

இதைப் போலவே, போர் முடிவுற்றதன் பின்னர் இணக்கப்பாட்டை உருவாக்கிக் கொள்வதற்கான, எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளிலும் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவில்லை என அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலைப்பாடானது ஆயுத வன்முறையாக வெடிக்கலாம் என இந்தியா கருதும் அதேவேளையில், அமெரிக்காவானது இது இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனக் கருதுகிறது.

இவ்வாறானதொரு சூழலில், பாகிஸ்தான் தனது நாட்டில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முற்றாக அழித்தொழிக்க முயற்சிப்பதுடன், சிறிலங்கா தனது நாட்டில் வாழும் இனக்குழுமங்களுக்கிடையே நல்லதொரு இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

இவ்வாறு இரு நாடுகளும் தமது நாடுகளின் நலன்களில் அதிகம் அக்கறை செலுத்துமிடத்து, அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களிலிருந்து இவை தப்பித்துக் கொள்ளலாம்.

புதினப் பலகை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.