Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா இசை நிகழ்ச்சியில் கல்லெறி! பத்துப்பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இசை நிகழ்ச்சியில் கல்லெறி! பத்துப்பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதி!

Published on June 12, 2011

வவுனியா நகரசபை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் இடம்பெற் கலவரத்தின்போது நடத்தப்பட்ட கல்லெறியில் பத்துப் பேர் வரையில் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த கட்டணம் அறவிடப்பட்ட இசைநிகழ்ச்சியில் வன்னியில் புகழ்பூத்த சாந்தனும் கலந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது மகனாகிய கோகுலனும் வருகை தந்திருந்ததார்.

நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஆரம்பமாகியதாகவும், இதனால் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர்கள் பொறுமை இழந்திருந்ததாகவும், மேடையின் முன்னால் முதலில் ஆரம்பித்த வாய்த்தர்க்கம் பின்னர், இருதரப்பிற்கிடையில் கைகலப்பாக மாறி அது மேடை மீது கல்லெறியும் வரை நீடித்ததாகக் கூறப்படுகின்றது.

கல்லெறியப்பட்டதனால், மேடையில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

பாடகர் சாந்தன் கலந்து கொண்ட ஒரு குழுவும், நாட்டின் தென்பகுதியில் இருந்து அழைக்கப்பட்டிருந்த ஒரு இசைக்குழுவும் தனித்தனியாக மைதானத்தில் மேடைகள் அமைத்து பாடல்கள் பாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடகர் சாந்தனும் அவரது மகனுமாக சுமார் 3 பாடல்கள் பாடியதாகவும், தென்னிலங்கை குழு ஒரு பாடலைப் பாடிய நிலையிலேயே நிகழ்வில் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாகவும், மறுநாளாகிய ஞாயிறன்று நடைபெறும் எனவும் பொலிசார் அறிவித்ததுடன், கூட்டத்தினைரைக் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

இந்த நிகழ்வில் சுமார் 5000 பேர் வரையில் கலந்து கொண்டிருந்ததாகவும், குழப்ப நிலைமையைடயடுத்து முண்டியடித்துக்கொண்டு சென்றதனால் ஏற்பட்ட வாகன விபத்திலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இசை நிகழ்ச்சி குழம்பியதையடுத்து வவுனியா பேரூந்து நிலையப்பகுதியில் குழுமிய ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கலைப்பதற்காக பொலிசார் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்ச்சி குழம்பியதையடுத்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது பண்டாரிகுளம் மற்றுமோரிடத்திலும் இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலில் காயமடைந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.saritham.com/?p=22296

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இசை நிகழ்ச்சியில் கல்லெறி! பத்துப்பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.