Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவீனமாகவிருக்கும் இராஜதந்திரப் பஞ்சம்

Featured Replies

தமிழர்களின் பலவீனமாகவிருக்கும் இராஜதந்திரப் பஞ்சம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-14 15:37:38| யாழ்ப்பாணம்]

ஓர் இனத்தின் எழுச்சிக்கு இராஜதந்திரம் என்பது அவசியமானதாகும். இராஜதந்திர அணுகுமுறைகள் வெற்றி தரும் பட்சத்தில் அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் ஏராளம்.

அதன்காரணமாகவே இராஜதந்திர உறவுகள் என்பது மன்னராட்சிக் காலத்திலும் வலுப்பெற்றிருந்தன.

உலக நாடுகளின் உதவிகளைப் பெறுவது முதல் உலக நாடுகளை நட்பு நாடுகளாக ஆக்கிக்கொள்வது வரை இராஜதந்திரத்தால் மட்டுமே முடியும். எனினும் இராஜதந்திரம் எனும் விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் பஞ்சப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

எங்களிடம் இராஜ தந்திரோபாயங்கள் இருந்திருக்குமாயின் எங்களின் இழப்புகள், தோல்விகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை எளிதில் நிராகரித்து விடமுடியாது.

ஓர் இனத்தின் - நாட்டின் இராஜதந்திரம் சிறப்பாக அமைய வேண்டுமாயின், அதற்கு உலகின் போக்கை நாடி பிடித்துப் பார்க்கும் பக்குவமும் இயைந்து செல்லும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தாக வேண்டும்.

உலகின் நிலைப்பாட்டை அறியாத இராஜதந்திரம் உள்ளதையும் அழித்துவிடும்.

அதுபோன்று இறுக்கமான, காலசூழ்நிலைகளுக்கேற்ப நெகிழ்ந்து செல்லாத கொள்கைகளும் சிறந்த இராஜதந்திரத்திற்குப் பங்கமே. அந்தவகையில் ஈழத்தமிழினம் இராஜதந்திர ரீதியில் கொண்டிருக்கும் பலவீனத்தைச் சீர்மைப்படுத்தி உயர்ந்த வியூகத்தை எமக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கு உரிமை வேண்டும், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும், எங்கள் தாயக பூமியில் நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கோரிக்கைகள் அத்தனைக்கும் முன்பாக பலமான இராஜதந்திரம் இருந்தாக வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இப்போதுகூட ஐ.நாவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் இருக்கவே செய்கின்றன.

அத்தகைய நாடுகள் தங்கள் ஆதரவை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அது கண்டு கவலை கொள்ளாமல் சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து எங்கள் அவலத்தை, துயரத்தை எடுத்துக்கூற வேண்டும்.

திரும்பத் திரும்ப நாங்கள் பட்ட பெருந்துயரை எடுத்துரைத்தால் நிச்சயம் அந்த நாடுகளும் எமக்கு உறுதியான ஆதரவை வழங்கும். ஆனால் நாங்களோ ஆறுதலாக இருக்கிறோம். எங்கள் அலுவலை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்ற கனவில்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20211

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.