Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு மேலும் அவகாசம் வழங்க நிபந்தனையுடன் பான் கீ மூன் இணக்கம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மேலும் அவகாசம் வழங்க நிபந்தனையுடன் பான் கீ மூன் இணக்கம்: 'காலவரையறையற்றதாக இருக்கக்கூடாது'

[Monday, 2011-07-11 09:30:18]

சர்வதேச சமூகத்தின் கவலைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இலங்கைக்கு அதிகளவு கால அவகாசத்தைக் கொடுப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இணக்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் இந்த விடயம் கால வரையறையற்றதாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைக் கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்தை அதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் வழமையாக சந்திப்பதில்லை. ரணிலுடனான சந்திப்பு அபூர்வமான ஒன்றாக உள்ளது. பான் கீ மூனின் பிரதம தலைமை அதிகாரி விஜே நம்பியாரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். ரணில் விக்கிரம சிங்கவுடன் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் டேவிந்த சுபசிங்கவும் சந்திப்பில் பங்கேற்றார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா.வோ அல்லது ஆர்வம் கொண்ட நாடுகளோ இலங்கை அரசாங்கத்துடன், நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லையென்று விக்கிரமசிங்க பான் கீ மூனுக்குக் கூறியுள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிப்பது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன், செயற்படுவதற்கு எதிரணி தயாராக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த பான் கீ மூன் செயற்படுவது போதாது என்றும் இலங்கை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வது தொடர்பாக பார்க்கக்கூடிய செயற்பாடு இருக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார். ஐ.நா.விலோ அல்லது அதற்கு வெளியேயோ இலங்கை விவகாரம் மறைந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னர் எதனை செய்வதாக ஐ.நா. எதிர்பார்த்துள்ளது என்று விக்கிரமசிங்க கேட்டபோது இதுவரை நாங்கள் தீர்மானிக்கவில்லையென்று ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அசோகச் சக்கரவர்த்தியை உதாரணமாக பௌத்தர் என்ற முறையில் பின்பற்றுமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பச்சாதாபத்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் தான் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையானது எதிர்மறையான தாக்கத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளை கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை மட்டுமன்றி முழு நாட்டையும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டிய விடயங்களை இந்த அறிக்கை தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டுசென்றிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தத்தை அகற்றியதன் மூலம் ஜனநாயகத்தின் குறைபாடு மேலெழுந்திருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ரணில் கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பது மட்டும் ஐ.நா.வின் கரிசனையாக இருக்கவில்லையென்றும் மனித உரிமை விவகாரங்கள் ஜனநாயகத்தின் பரந்துபட்ட தன்மைகள் குறித்தும் ஐ.நா. கவலை கொண்டிருந்ததாக பான் கீ மூன் கூறியுள்ளார். அவற்றையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க விரும்புவது தொடர்பாக தனது கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லையென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் தான் கலந்தாலோசிக்க உள்ளதாக ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். வட, கிழக்கிற்கு வெளியே தனது கட்சி சிறுபான்மைத் தமிழ் மக்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் தேசிய பல்லினக் கட்சியான ஐ.தே.க. பொறுப்பான தீர்மானத்தை எடுக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான தனது பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தான் தெரிவிப்பார் எனவும் ஐ.நா.வுடன் மேலும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய தேவை குறித்து தான் வலியுறுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மற்றும் இன விவகாரத்திற்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களில் தேசிய கருத்தொருமைப்பாட்டை எட்டுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவார் எனவும் ரணில் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46283&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.