Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தரத் தீர்வைக் காணும் நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரத் தீர்வைக் காணும் நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை; இந்தியப் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ்ப்பாணத்தில் நேற்றுத் தெரிவிப்பு

news

இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக்காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்கும் என்று அப்போது அவர் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் மிக மூத்த இராஜதந்திரியான பார்த்தசாரதி முதல் இன்றைய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரை பலரும் வந்து போகின்றனர். உடன்படிக்கைகளையும் கூட்டறிக்கைகளையும் வெளியிடுகின்றனர். அவையெல்லாம் எழுத்திலும் ஊடகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. எவையுமே செயல் உருப்பெறவில்லை. இந்த நிலையில் இந்தியா இப்போதாவது தனது உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்கி நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்''

என சமாதானத்துக்கான பிரஜைகள் குழுவினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பிரதித் தூதுவர், "கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். அவற்றை மறப்போம். 1987ஆம்ஆண்டு முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளாலும் ஒரு சாராரது விருப்பம் இன்மையினாலும் அவை வெற்றி பெறவில்லை. இவை நடந்து முடிந்தவை. இன்று நிலை அப்படியல்ல.நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை நடத்துகின்றன. இந்தப் பேச்சுக்கள் நம்பகத் தன்மை உடையதாகக் காணப்படுகின்றன. மனம் விட்டுப் பேசுகின்றனர்'' என்று கூறினார்.

இலங்கை அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ள போதும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கட்டாயம் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு கண்துடைப்பாக அமையாது, இலங்கையில் உள்ள எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணர்வு பூர்வமானதும் நியாயமானதுமான தீர்வாக அமையவேண்டும். இதற்கு இந்தியா முழுப் பங்களிப்பையும் வழங்கும்.'' என்றும் பிரதித் தூதுவர் ஆணித்தரமாகக் கூறினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள திட்டத்துக்கு இலங்கை அரசு இடங்களை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே அந்தத் திட்டம் இன்னும் ஆரம்பமாகவில்லை என்றும் மிஸ்ரா கூறினார்.

"யாழ்ப்பாணத்தில் எல்லாம் சொந்தக்காணிகள். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அரச காணிகளிலே கட்டப்பட வேண்டிய நிலை. இப்பொழுது இந்தப் பிரதேசங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டு வீடமைப்புப் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன'' என்றும் பிரதித் தூதுவர் குறிப்பிட்டார்.

யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழு உறுப்பினர்களான நல்லை ஆதீனக் குரு முதல்வர், ஜெயசேகரம் அடிகளார், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, சு.பரமநாதன், ஆர்.ஜெயசேகரம், எஸ்.ஜெனக்குமார், திருமதி எஸ்.பொன்னம்பலம், எஸ். ராஜாராம், கே.பூரணசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரி வே.மகாலிங்கமும் கலந்துகொண்டனர்.இதேவேளை இந்தியக் குழுவினர் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரையும் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

13 ஜுலை 2011, புதன் 7:25 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=11434421713894416

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.