Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் மகிழ்வுடன் வாழ்ந்தவர் இன்று கால் இழந்து கண்ணீருடன் சிறையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் மகிழ்வுடன் வாழ்ந்தவர் இன்று கால் இழந்து கண்ணீருடன் சிறையில்

news

ஆயுதம் ஏந்தாமல், இயக்கத்தில் இணையாமல் தனது மனைவி, பிள்ளைகளுடன் முள்ளிவாய்க்காலில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த சிவகுமார், குண்டுத் தாக்குதலால் கால் துண்டிக்கப்பட்டு புலிச்சந்தேக நபராக தடுப்புக்காவலில் கண்ணீருடன் காலத்தைக் கழிக்கின்றார். இவரது மனைவி, பிள்ளைகள் வறுமை காரணமாக இவரைப் பார்க்க வராதது இவரது மனதை வாட்டுகின்றது.

நாம் இலங்கையர் அமைப்பு இத்தகையோரின் விவரங்களைத் திரட்டியுள்ளது. மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருந்த காலப்பகுதி அது. இரு தரப்பினரும் உக்கிர சமரில் ஈடுபட்டிருந்தனர். சரமாரியாகக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அந்தக் காலப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் குண்டு மழை பொழிந்தது.

வன்னி மக்களை யுத்தம் ஒரு புறம் ஆட்டிப்படைக்க, மறுபுறம் வறுமை வாட்டி வதைத்தது. சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த அந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லாதிருந்தது. உடைமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு அல்லோலகல் லோலப்பட்டு யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு மக்கள் ஓடி வந்தனர். இறுதி யுத்தத்தின்போது தொண்டு நிறுவனங்களும், தங்களுடைய சேவையை முழுமையாக செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

கூலிவேலை செய்தாலும் கிடைக்கும் ஊதியத்தில் மனைவி, மக்களுடன் சந்தோஷமாக இருந்த சிவகுமாரின் வாழ்க்கை, யுத்தம் ஆரம்பமானதும் சூனியமானது. ஷெல் தாக்குதல், விமானத் தாக்குதல் ஆகியவை காரணமாக மக்கள் திசை தெரியாமல் சிதறி ஓடும் நிலைமை ஏற்பட்டது.

சிவகுமாரும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு தமது குடும்பத் தினருடன் தட்டுத்தடுமாறி வந்து சேர்ந்தார். யுத்த சூனியப் பிர தேசத்துக்குள் சீறிப்பாய்ந்த ஷெல் வெடி ஒன்று அவரது காலை பதம் பார்த்தது. காலை அசைக்க முடியாத நிலையிலும் மரண பயத்துடன் சிவகுமார் அங்கிருந்து முன்னேறிச் சென்றார்.

இவ்வாறு அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் தக்க வைத்துக்கொண்டு வந்த மக்களை இராணுவத்தினர் சோதனையிட்டனர். அவ்வாறு சோதனையிட்டு பலரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

தனது குடும்பத்தினர் சகிதம் வந்த பின்னர் படையினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 35) என்பவரின் சோகம் நிறைந்த கதை இது. இவரின் பிள்ளைகளின் பெயர் விவரம் வருமாறு:புலியரசன் (வயது 9), யாழிசை (வயது 7)(2009.05.10 அன்று சிவகுமார் படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

திருகோணமலையைப் பிறப் பிடமாகக்கொண்ட சிவகுமார், திருமணத்துக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குடியேறினார். நாளாந்தம் கூலி வேலை செய்த அவர், மனைவி சகிதம் வாழ்க்கையைக் கொண்டு நடத்தினார்.

ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யாமல், அமைதியான முறையில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திய இவரை அரசு ஏன் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்தது என நாம் இலங்கையர் அமைப்பு கேட்கின்றது.

யுத்த சூனியப் பிரதேசத்துக்கு வந்தபோது ஷெல் தாக்குதலில் அவரின் ஒரு காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு கூட்டிச் சென்ற பின்னர் வைத்தியர்கள் காலை முழுமையாக அகற்றினர். அவர் இப்பொழுது ஒரு காலுடனேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கவீனர் ஒருவருக்கு முச்சக்கர நாற்காலி ஒன்றையாவது அல்லது ஊன்றுகோலையாவது கொடுப்பதே மனிதாபிமானம். அத்துடன், அது அவர்களின் உரிமையும் ஆகும். ஆனால், சிவகுமார் ஒரு கால் இன்றி அரசால் எந்த வித உதவிகளும் வழங்கப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது அடிப்படை கடமைகளைக்கூட செய்யமுடியாமல் தவிக்கின்றார். இவருக்கு உதவுவதற்கு எவரும் இல்லை. மனைவியும், பிள்ளைகளும் வறுமை காரணமாக இவரை பார்க்க வருவதில்லை.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இவர், இரண்டு வரு டங்களுக்கு மேலாக தடுத்துவைக் கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக அரசு இன்னும் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு தாக்கல் செய்தால் அவர் பிணையிலாவது செல்லலாம். அதுகூட இல்லை.அங்கவீனரை தடுத்துவைத்துள்ள அரசு, அவருக்கு எந்தவித உதவியும் செய்து கொடுக்காமல் மனிதாபிமானத்தைப் பற்றி பேசுகின்றது என நாம் இலங் கையர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ன குற்றம்சாட்டு கின்றார்.

13 ஜுலை 2011, புதன் 8:30 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=64112422513429869

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.