Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களக் குடியேற்றம் – வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு முல்லைத்தீவில் உருவாக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குடியேற்றம் – வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு முல்லைத்தீவில் உருவாக்கம்

  • Saturday, September 17, 2011, 0:19

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருக்கமான இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த மாதத்தில் இருந்து செயற்படும் வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவில் எட்டு கிராம நிர்வாகப் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக 1987ம் ஆண்டில் இந்த நிர்வாகப் பிரிவு அனுராதபுர மாவட்டத்தின் பதவியா பிரதேச செயலர் பிரிவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.

தற்போது பதவியா பிரதேசசெயலர் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்ட 8 கிராம நிர்வாகப் பிரிவுகளையும் கொண்ட வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு ஏப்ரல் 16ம் நாள் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி ‘வெலிஓயா‘ என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதே வர்த்தமானி அறிவித்தலின் மூலம், சிறிலங்காவின் 26வது மாவட்டமாக வெலிஓயா பிரகடனம் செய்யப்பட்டது.

நிர்வாகக் காரணங்களுக்காக வெலிஓயா அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்தல் செயற்பாடுகள் யாவும் வவுனியா மாவட்டத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையிலேயே பதவியா பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வெலிஓயா உதவிப் பிரதேச செயலர் பிரிவை அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளின் படி மீளவும் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பொதுநிர்வாக அமைச்சின் செயலர் பி.பி.அபயகோன் தகவல் வெளியிட்டுள்ளார்.

1987ம் ஆண்டுக்கு முன்னர் வெலிஓயா பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்துடனேயே இணைந்திருந்தது என்றும், போரினாலும் தீவிரவாத செயற்பாடுகளாலுமே அது அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் வெலிஓயாவை மீண்டும் முல்லைத்தீவுடன் இணைக்குமாறு சிறிலங்கா அதிபர் பணித்ததை அடுத்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலர் பிரிவுகளுடன் தற்போது வெலிஓயாவையும் சேர்த்து ஆறு பிரதேச செயலர் பிரிவுகள் இயங்குவதாகவும் சிறிலங்கா அரசாங்கசார்பு இணையத் தளம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=26852

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.