Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தை இழுத்தடிக்க அரசு முனைப்பு!! 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் தீர்வு காண இணக்கமாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை இழுத்தடிக்க அரசு முனைப்பு!! 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் தீர்வு காண இணக்கமாம்! (3ஆம் இணைப்பு)

Published on September 17, 2011-8:01 am

இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்து்ககு அப்பால் சென்று தீர்வு காண அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்திருந்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்துக்கு அப்பாலானவை இருந்த போதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. நேற்றுப் பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது.

தடைப்பட்ட அரசு – கூட்டமைப்புப் பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. கடந்த ஜனவரியில் ஆரம்பமான இந்தப் பேச்சுக்கள் ஓகஸ்ட் மாதம் வரை 10 சுற்றுக்களுக்கு நீண்டன. எனினும் அவற்றில் காணப்பட்ட இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசு தீர்க்கமான பதிலை வழங்காமை போன்ற காரணங்களால் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு கூட்டமைப்பு மறுத்திருந்தது.

அதன் பின்னர், 40 நாள்கள் கடந்த நிலையில் நேற்று பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. “கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் பின்னர் இன்றைய (நேற்று) பேச்சுக்கான திகதி குறிக்கப்பட்டது.” என்று அரசு – கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்றைய பேச்சில் இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்த விடயங்களே முக்கியமாக ஆராயப்பட்டன என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் “கிறீஸ் புத“ விவகாரம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டாலும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது” என்றார் சுரேஷ்.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்த தீர்வு தொடர்பான யோசனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பேசுவதற்கான இணக்கம் நேற்றுக் காணப்பட்டதாக கூட்டறிக்கை கூறுகின்றது.

விரைவில் மேற்கொள்ளப்படும் அரசமைப்பு ஏற்பாடுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

“இதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்வுப் பொதிகள் (சந்திரிகாவின் தீர்வுப் பொதி மற்றும் அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனைகள்) மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அறிக்கைகளை பேச்சுக்கான அடிப்படைகளாகக் கொள்வதற்கு இரு தரப்பும் இணங்கி இருக்கின்றன” என்றும், அமைச்சர் நிமால் சிறீபால டிசில்வா மற்றும் ஆர்.சம்பந்தன் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏற்கனவே 51 விடயங்கள் அடங்கிய யோசனை எம்மால் முன்வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 18 அதிகாரங்கள் மாகாண சபையின் வரையறைகளைத் தாண்டிச் செல்வதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அடுத்துவரும் சந்திப்புக்களில் அவை குறித்துக் கலந்துரையாடி அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்கள்” என்றார் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் மாகாண அலகுக்கு உரியவை என்று தாம் கேட்டிருந்த அதிகாரங்களில் சிலவற்றை மத்திய அரசும் கையாள வேண்டிய தேவை இருப்பதாக அரச தரப்பினர் தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். “எனினும் அவை என்ன விடயங்கள் என்று” அவர்கள் இன்னும் கூறவில்லை” என்றார் அவர்.

இதன் அடிப்படையில் பொலிஸ், காணி அதிகாரங்கள் அற்ற மாகாண சபையினை கூட்டமைப்பின் தலையில் கட்டுவதற்கு அரசு முற்படுகின்றதா? அல்லது வழமைபோல இந்த விடயத்தினைப் பற்றி நீண்டகாலத்திற்கு இழுத்தடிப்பதற்கு முனைகின்றதா? என்ற சந்தேகம் எழுக்கின்றது என்கின்றனர் நோக்கர்கள்.

http://www.saritham.com/?p=34734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.