Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோமாலியா கொடூரம்: 7,50,000 குழந்தைகள் மரணத்தின் பிடியில்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோமாலியா கொடூரம்: 7,50,000 குழந்தைகள் மரணத்தின் பிடியில்...

சோமாலியாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக 750,000 பேர் வரை எதிர்வரும் மாதங்களில் உயிரிழக்க நேரிடலாமென ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.

கிழக்கு ஆபிரிக்காவில் 60 வருடங்களாக ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர்.

அல் ஷபாப் என்னும் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சோமாலியா உட்பட சோமாலியாவில் ஆறு இடங்கள் பஞ்சம் நிலவும் வலயங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் மொத்தமாக 4 மில்லியன் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் 750,000 பேர் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உயிரிழந்தவர்களில் அரைவாசிப் பேர் சிறார்கள் ஆவார். அயல் நாடுகளான டிஜிபௌட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா உகண்டா ஆகியவையும் மழை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (Fஆஈள் ஸ்TஆTஏ) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.

உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..

உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.

29,000 Children Dead Due to East African Famine in Past Three Months (Video)

http://www.treehugger.com/files/2011/08/29000-children-dead-east-african-famine-past-three-months.php

http://somalipeacemaker.blogspot.com/2011/09/new-images-of-famine-stricken-somalia.html

U.N.: 750,000 people in Somalia face 'imminent starvation'

http://edition.cnn.com/2011/WORLD/africa/09/05/somalia.famine.report/index.html

HELP: UN seeks more donor help on Somalia famine

http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/

http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA

http://www.icrc.org/eng/donations/index.jsp

http://www.civicworldwide.org/healing-the-wounds/somalia

United Nation High commission for Refugees (UNHCR)

http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA

Help Save Lives in Drought-Stricken East Africa

https://wfp.org/donate/hornofafrica?gclid=CO7DxLf9sKsCFUF76wodxBOrfQ

International Committee of the Red Cross (ICRC)

http://www.icrc.org/eng/donations/index.jsp

http://www.globalgiving.co.uk/pr/8500/proj8493a.html?rf=ggadgguk_goog_even_somalia_4&gclid=CO3xu8zKr6sCFQUb6wodO2hueQ

Somalia's Children Caught in the Crossfire

https://takeaction.amnestyusa.org/site/c.6oJCLQPAJiJUG/b.6662481/k.2BA2/Donate_Now/apps/ka/sd/donorcustom.asp?msource=W1108EDCRYJ&tr=y&auid=8824967

http://www.unmultimedia.org/photo/gallery.jsp?query=subject:%22Famine+in+Somalia%22

http://www.wfp.org/stories/horn-africa-10-ways-you-can-help

https://www.wfp.org/donate/fillthecup

https://www.secure.careinternational.org.uk/form.asp?id=697&cachefixer=

https://secure.unicefusa.org/site/Donation2?df_id=10380&10380.donation=form1&JServSessionIdr004=rwf5jmp7sc.app227a

http://www.freerice.com/#/english-vocabulary/1411

இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.