Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல் ஒலிக்கட்டும்

Featured Replies

சுவிஸ் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழனின் குரல் ஒலிக்க உங்கள் வாக்குகளை அளித்திடுங்கள்!

lathan%202.jpg

சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு.லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள்.

தவறவேண்டாம், மறக்கவேண்டாம். உங்கள் கைகளில் வாக்கு அட்டை இருக்கிறது. சரியாக வாக்களியுங்கள் கனடாவில் ஒரு ஈழப்பெண்மணி பாராளுமன்றம் சென்றுள்ளார். சுவிசில் ஒரு ஈழத்தமிழ் மகன் பாராளுமன்றம் செல்வார் என்பது உறுதி.

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே!

உங்களால் என்ன செய்யமுடியும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள், உங்களாலும் முடியும் என்பதற்கான ஒரு விடயம் இருக்கிறது. சுவிஸ் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழனின் குரல் ஒலிக்கவேண்டும் என நாம் கனவு கூட கண்டிருக்கவில்லை, இன்று ஒரு இத்தகைய சந்தற்பம் கிடைத்திருக்கிறது. எமது ஈழமக்கள் துயரை எடுத்துரைக்க ஒரு பெரிய வாய்ப்பு இது. லுசேனில் SP கட்சி சார்பில் போட்டியிடும் திரு. லதன் சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழனை வெல்லச் செய்வதில் நாம் பல வெற்றிகளை பெறமுடியும்.

சுவிசில் உள்ள அனைவரும், லுசோன் மாநிலத்திலுள்ள தமிழர்கள் உங்கள் உறவுகளா?, நண்பரா? அல்லது வெளிநாட்டுக்காரரா? அல்லது சுவிஸ் பிரசைகளா? தொடர்பு கொண்டு விடயத்தை கூறுங்கள்! 23ம் திகதி ஜப்பசி திங்கள் ஈழத்தமிழன் வெற்றி என கேட்டு மகிழ, அதனால் எம் இனம் விடுதலைபெற தேவையான அரசியல் வேலைகளை, ஏன் உங்கள் அகதி பிரச்சனை, வேறு பிரச்சனைகளையும் எமது ஈழ மகனிடமே கேட்க கூடிய வாய்ப்பு, சொல்லி அனுப்பக்கூடிய அற்புதமான சந்தற்பம் இருக்கிறது. தவறவிடாதீர்கள்! சிந்தியுங்கள், தவறாது செயல்படுங்கள்! எம் இனத்தைக்காக்க எமது இனம் தான் வேண்டும் என்பதை மறவாது, உங்கள் தொடர்பிலுள்ள லுசோன் வாசிகளுக்கு கூறி, 24ம் திகதி நாம் மகிழ உலகிலுள்ள தமிழர் அனைவரும் மகிழ வழிசெய்யுங்கள்

தமிழ் மக்களே. இது தான் உங்கள் கடமை! ! உங்களால் என்ன செய்யமுடியும் என சொல்வீர்களே!

உங்களால் இது முடியும் செய்யுங்கள்!. செய்வீர்கள் என நம்புகின்றேன்.!

கார்த்திகை 15ம் திகதியின் பின் தமிழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்!

இது சத்தியம்! நிற்சயம்! அதற்காய் உழைப்போம், ஒற்றுமையை காட்டுவோம்!

எமது மக்களுக்கு விடுதலையை பெற இதுவும் ஒரு வழி என்பதை மறவாதீர்கள்!

பேதம் வேண்டாம், வாதம் வேண்டாம், செயல்மட்டுமே வேண்டும்.

lathan.jpg

http://www.eeladhesa...lnews&Itemid=63

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் தமிழர்!

Details Published on Friday, 21 October 2011 07:41

எதிர்வரும் 23 .10 .2011 திகதி, சுவிஸ் தேசிய சபைக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இம் முறை தேர்தலில்,

Lathan%252520hom.jpg

லுர்ட்சேர்ன் மாநிலத்தில் சோசலிசக்கட்சியில் (SP) சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்களும் ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்றார். சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முதல்தடவையாகப் போட்டியிடும் தமிழ் மகனை ஆதரித்து வாக்களியுங்கள் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, சுவிஸ் வாழ் தமிழ்மக்களிடத்தில் ஆதரவு கோரியுள்ளது. இது தொடர்பாக அவ் அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில்;

lathan.jpg

மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழர்களே!

மொழி இன உணர்வுடன் ஒன்றுபட்ட தேசிய இனமாக தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். சொந்த நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக உயிர் அச்சுறுத்தல்களுடன் வாழமுடியாத சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களை ஆதரித்து அரவணைத்து வாழ்வதற்கான வசதிகளையும் வழிமுறைகளையும் புலம்பெயர் நாட்டு அரசாங்கங்கள் தமிழர்களிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

பல்லின மக்கள் வாழும் உலகநாடுகளில் தமிழர்கள் தனித்துவமான இனமாக மதிக்கப்படுகிறார்கள். தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட உரிமைப்போராட்டத்தினை பல நாடுகள் ஆதரித்துள்ளார்கள். தமிழர்கள் சகல உரிமையும் கொண்ட தேசிய இனமாக சொந்த நாட்டில் வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவேன்டுமென உலக நாட்டுத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அண்மைக் காலமாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்களும் மனிதநேய அமைப்புக்களும் தமிழின அழிப்பினையும் தமிழர் துயரங்களினையும் உலக நாட்டுமக்களின் கவனத்திற்கு எடுத்துவந்துள்ளார்கள். பல நாட்டுப்பாராளுமன்றங்களில் தமிழர்களின் அவலங்கள் திரையிட்டுக்காட்டப்பட்டுள்ளன. எந்த ஒரு நாட்டு மக்களும் அனுபவித்திராத துன்பத்தினை தமிழர்கள் அனுபவித்திருப்பதை உலக நாடுகள் உணர்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அண்மைக் காலமாக தமிழர்கள் சார்பாக மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கினை தமிழர்களிற்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவும் தமிழ் இனத்தினை அடையாளப்படுத்தவும் உலக நாட்டுப்பாராளுமன்றங்களில் அதிகாரமளிக்கப்பட்ட எம்மவர்கள் தேவையென்பது அத்தியாவசியமாகின்றது.

அதற்கமைவாக கனடா நாட்டிலே அண்மையில் இடம்பெற்ற தேர்தல் மூலம் செல்வி. ராதிகா சிற்சபேசன் அவர்களை கனடா வாழ் தமிழர்கள் வெற்றி பெறச் செய்து தமிழர் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது சுவிஸ் நாட்டில் இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் லுர்ட்சேர்ன் மாநிலத்தில் சோசலிசக்கட்சியில் (ளுP) தமிழரின் சார்பாக திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். 80 இலட்சம் மக்கள் வாழும் சுவிஸ் நாட்டிலிருந்து 246 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் இத் தேர்தலில்; மொழிப்பற்றும் தேசப்பற்றுமிக்க தனித் தமிழனாக திரு லதன் அவர்கள் போட்டியிடுகின்றார்கள்.

தமிழர்களிற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சந்தர்ப்பமாக இதனைப்பயன்படுத்தி திரு. லதன் அவர்களை வெற்றிபெறச்செய்து தமிழர்சார்பாக பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு தாயகத்தில் வாழும் தமிழர்களிற்காகவும், சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர் சார்ந்த பிரச்சனைகளையும், தாயகத்தில் எமது மக்கள் பட்ட இன்னல்களையும் படும் துன்பங்களையும் தமிழர் சார்பாக அதிகாரமளிக்கப்பட்ட அரசியல் தளத்தில் நின்று சுவிஸ் அரசுக்கும் சர்வதேசத்திற்கும் உரத்துக் கூற இச்சந்தர்ப்பத்தினை நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேன்டும்.

குறிப்பாக லுட்சேர்ன் வாழ் சுவிஸ் குடியுரிமைபெற்ற தமிழர்கள் தமது வாக்குகளை திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு இருதடவை வாக்கு அளிப்பதுடன் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களும் லுட்சேர்ன் மாநிலத்தில் வாழும் தமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் இதனைத் தெரிவித்து அவர்களது ஆதரவினையும் பெற்று எமது தமிழனின் வெற்றியினை உறுதிசெய்யும் இந்த வரலாற்றுக்கடமைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாகக்கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை பாசெல் மாநிலத்திலிருந்து பசுமைக்கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் இடதுசாரிக் கொள்கையுடைய சிபெல் ஆர்ஸ்லான் அவர்களும், இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சனை தொடர்பில் ஆர்வமுள்ளவராக காண்ணபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இவர்,சுவிசில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் என்ற வகையில், வெளிநாட்டவர்களின் குரலும் சுவிஸ் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்ற ரீதியில் மனித உரிமையும் அரசியல் உரிமையும் கலாசார உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ்மக்களுக்கு நிரந்தரமான மனிதநேய இன உரிமை பேணும் ஒரு பெறுமதிமிக்க தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, சர்வதேசத்தின் அரங்கிற்கு நீதிகேட்டுச் செல்லும் தமிழ்மக்களுடன் நானும் இணைந்து குரல் கொடுப்பேன் எனத் தனது பிரச்சாரங்களில் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/world/1536-lathan-swiss-tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.