Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூர் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ள சிறிலங்காவின் ‘போர்ச் சுற்றுலா‘ – பிரித்தானிய நாளேடு

Featured Replies

உள்ளூர் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ள சிறிலங்காவின் ‘போர்ச் சுற்றுலா‘ – பிரித்தானிய நாளேடு [ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 05:09 GMT ] [ நித்தியபாரதி ] puthinappalakai warfront.jpgசிறிலங்காத் தீவில் பார்வையிட முடியாதிருந்த – போர் நடைபெற்ற பெரிய பிரதேசம் ஒன்றை பெருமளவிலான மக்கள் தற்போது பார்வையிடச் செல்வதால் , நாட்டின் வடபகுதியிலுள்ள மக்களின் பொருளாதாரம் வளம்பெற இந்த 'போர் சுற்றுலாத்துறை' உதவுகிறது.

உள்ளுர் மக்கள் பணத்தை வரவேற்கின்ற போதிலும், பாரம்பரியமாக தமிழர் கலாசாரப் பிரதேசங்கள் மீது இந்தச் சுற்றுலாத்துறை பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கவலை கொள்கின்றனர்.

தமது இன மக்களுக்கான தனித் தாய்நாட்டிற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளால் பல பத்தாண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட்ட இடத்தை நோக்கிச் செல்லும் ஏ-09 நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பயணிக்கின்றார்கள்.

shop.jpg

2009 மே மாதம் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர், உள்நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளை யுத்தம் இடம்பெற்ற வடபகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

குறிப்பாக புலிகளின் சிறைச்சாலை, அழிக்கப்பட்ட நீர்த்தாங்கி போன்றன சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற இடங்களாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளாக கப்பல் அல்லது விமானத்தின் மூலம் மட்டுமே செல்லக் கூடியதாக இருந்த யாழ்ப்பாண நகரமும் சுற்றுலாப் பயணிகளின் மையமாக மாறியுள்ளது.

இந்தப் போர் சுற்றுலாத்துறை முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது மகன் நாமல் ராஜபக்சவை நியமித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகக் காணப்பட்ட கிளிநொச்சியில் தற்போது சிறிலங்கா அதிகாரிகள் யுத்த வெற்றிக்கான நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சிக்குச் சென்றபோது, புலிகளால் அழிக்கப்பட்ட நீர்த்தாங்கிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்கள் விற்கப்படும் கடையொன்றில் இளம் கோப்ரல் தர இராணுவ வீரன் ஒருவன் விற்பனையில் ஈடுபட்டிருந்தான்.

அந்தக் கடையில் 'மீளெழுந்து வரும் கிளிநொச்சி' எனப் பொறிக்கப்பட்ட ரீசேட் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் குறிப்புப் புத்தகங்கள் போன்றன விற்கப்படுகின்றன.

'விடுமுறை தினங்களில் நாளொன்றுக்கு 10,000 விருந்தினர்கள் இங்கு வருவார்கள். இன்றைய நாள் இதுவரை ஏழு பேருந்துகள் இங்கு நிறுத்தப்பட்டு விட்டன' என அந்த இராணுவ வீரன் தெரிவித்தார்.

இங்கிருந்து மிக அருகில் உள்ள புலிகளின் சிறைச்சாலையைப் பார்ப்பதற்காகவும் பெருமளவான மக்கள் செல்கின்றனர். இங்கு பார்ப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்தச் சிறைச்சாலையில் பல சிறைக்கூண்டுகள் காணப்படுகின்றன. அத்துடன் சிறிய மலசலகூடங்களும் காணப்படுகின்றன. ஆனால் இதனைப் பார்வையிடுவதில் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர்.

'இது எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்க்கவே நான் விரும்பினேன்' என தெற்கிலிருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர் விளக்கினார்.

யாழ்.குடாநாட்டின் நுழைவாயிலாக அமைந்துள்ள ஆனையிறவைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட நிலம்சமப்படுத்தும் பொறி (bulldozer) ஒன்றுக்கு முன்னால் நின்று ஒளிப்படம் எடுக்கின்றனர்.

1991 இல் புலிகளுக்கும் சிறிலங்காப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் தளத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாகனத்தை நெருங்கி, இரண்டு கையெறி குண்டுகளை அதற்குள் வீசி அதனை அழித்த லான்ஸ் கோப்ரல் காமினி குலரட்ணவின் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தின் முன்னால் நின்றும் இந்தச் சுற்றுலாப் பயணிகள் ஒளிப்படம் எடுக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காமினி குலரட்ண அதே இடத்தில் கொல்லப்படுகின்றார். பின்னர் இராணுவ வீரத்திற்கான தேசத்தின் உயர்ந்த மதிப்பு வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

'இங்கு 35 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சினையாக இருந்துள்ளனர். நான் 12 வயதாக இருந்த போது இங்கு வந்திருக்கிறேன். தற்போது எனக்கு 57 வயது. தற்போது சிறிலங்காவில் ஒரு தேசியக் கொடி மட்டுமே உள்ளது. எல்லோரும் சிறிலங்கர்களே' என கொழும்பிலிருந்து வடக்கைப் பார்வையிடுவதற்காக வந்திருந்த எஸ்.வணிகசேகர என்ற சுற்றுலாப் பயணி தெரிவித்தார்.

2010 இல் சிறிலங்காவின் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிடுவதற்காக 650,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தததாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் உள்நாட்டிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளின் பதிவுகள் துரதிஸ்டவசமாக எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கை நோக்கி பேருந்துகள் நிறைந்த தென்பகுதி மக்கள் வருகை தருகின்றனர். ஆனால் இவர்களின் தொகையைக் கணக்கெடுப்பதற்கான பதிவுகள் எதுவும் இல்லை' என சிறிலங்கா சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உதயகுமார லியனகே தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்ற போதிலும், வேலையில்லாப் பிரச்சினையும், போதிய வாப்புகள் இல்லாமையும் இருப்பதாக அங்குள்ள மக்கள் முறைப்பாடு செய்கின்றனர்.

அதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் கை நிறையப் போதியளவு பணத்துடனேயே வருகின்றனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தற்போது புதிய பல தங்குவிடுதிகள், உணவகங்கள், கடைகள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக தமிழ் அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய கலாசார மையங்கள் தென்பகுதியிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் பாதிப்புக்குள்ளாவதாக தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் அதாவது குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சிறிலங்கா அரசாங்கம் தென்பகுதி சிங்களவர்களைத் திட்டமிட்டுக் குடியேற்றுவதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'வடக்கில் வாழும் மக்களின் தொகையில் துரித மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன' என அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வவுனியா, யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றுக் கொண்ட அரசியற்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், தற்போது வடக்கு நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளால் உள்ளுர் மக்கள் தாம் நன்மையைப் பெறுவதைத் தெரிவிக்கவே விரும்புகின்றனர்.

யாழ்ப்பாண மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள சந்தையில் திராட்சைப்பழம், குளிர்பானம், பழப்பாகு போன்றவற்றை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் 'சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரத்தைக் கூடுதலாக மேற்கொள்ள முடிகின்றது' எனத் தெரிவித்தார்.

வழிமூலம்- www.independent.co.uk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.