Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் சர்வதேசத்திடம் பலியாகப் போகின்றது

Featured Replies

சர்வதேச சட்டங்களை மீறி எந்தவொரு ஆட்சியாளரினாலும் செயற்பட முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டை பலியாக்க

முடியாது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவர அமெரிக்காவின் பின்னணியில் 40 நாடுகள் ஒத்துழைப்புக்கள் வழங்கியிருந்தன. எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைறைப்படுத்தப்படாவிட்டால் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வீட்டோ அதிகாரம் உள்ள சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுகள் செல்லாது.

ஆகவே, நாட்டை பாதுகாக்க தற்போதைய ஆட்சியாளரை மாற்றியமைக்க வேண்டும். இல்லையென்றால், முழு நாடும் ஏகாதிபத்திய வாதியிடம் அடிமைப்பட்டுவிடும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.

கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற் சங்க மத்திய நிலையத்தின் தலைவருமான லால் காந்த கூறுகையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சாதாரணமாகக் கருத முடியாது. அரசாங்கம் ஆபத்துக்களை மூடி மறைத்து போலியான ஏகாதிபத்திய விரோதத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும். ஏனென்றால், அரசாங்கம் இதற்கான உறுதிமொழியை சர்வதேசத்திடம் வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து வாயை திறப்பதே இல்லை.

எவ்வாறாயினும் அமெரிக்கா தனியாக இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன் வைக்கவில்லை. மாறாக அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி போன்ற 40 நாடுகளின் ஒத்துழைப்புடனும் இந்தியா உட்பட 11 நாடுகளின் ஆதரவுடனே ஜெனீவாவிலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பின்னணியிலிருந்த 40 நாடுகளில் வெறும் 13 நாடுகள் மாத்திரமே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பங்குபற்றியது. எனவே, இதனை சாதாரண விடயமாக கருத முடியாது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் அரசாங்கம் அடுத்த ஜெனீவா அமர்வில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளும்.

அரசாங்கத்திற்கு இருப்பது ஒரு வருடகாலம் மாத்திரமே. சீனாவும் ரஷ்யாவும் தன் பக்கம் இருக்கும் என்பதால் பாதுகாப்புச் சபையில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என்று அரசு நினைத்தால் அது அரசாங்கத்தின் முட்டாள் தனமாகும்.

ஏனெனில் ஐ.நா. பொதுச்பை ஊடாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன் வைத்து நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே, அரசாங்கம் சர்வதேசத்திடம் பலியாகப் போகின்றது.

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. க்கு ஏற்பட்ட மனமாற்றம் வரவேற்கக் கூடியது.

விமல் வீரவன்சவும் இதற்கு ஆதரவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.