புதிய பதிவுகள்

Published By: VISHNU20 FEB, 2025 | 07:19 PMimageபொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.MCC_Defence_20250220__17_.jpegபத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில்  பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ரஜீவன் எம்பி!Published By: Digital Desk 720 Feb, 2025 | 11:04 AMimageயாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான நியமனத்தினை ஜனாதிபதியின்  உத்தரவின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாசம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தீவகம் தெற்கு (வேலணை), நல்லூர், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய பிரதேச செயல்களிகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை (18) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ரஜீவன் எம்பி! | Virakesari.lk
Published By: RAJEEBAN19 FEB, 2025 | 03:07 PMimageஅமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.தீவிர வலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து
Published By: VISHNU20 FEB, 2025 | 07:19 PMimageபொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.MCC_Defence_20250220__17_.jpegபத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில்  பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். MCC_Defence_20250220__19_.jpegநீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். MCC_Defence_20250220__16_.jpegஅத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் இங்கு பாராளுமன்ற  உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இங்கு பதிலளித்தார்.MCC_Defence_20250220__13_.jpegஇராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை சுற்றுலாத் துறையில் மேலும் வினைத்திறன் மிக்க முதலீடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வினவினர். இதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.MCC_Defence_20250220__14_.jpegவடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டுஸ்தலங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.MCC_Defence_20250220__11_.jpegஇந்தப் பகுதியில் உள்ள மக்களின் உண்மையான தேவைக்கு அமைய இந்த சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும், குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.MCC_Defence_20250220__6_.jpegஅத்துடன், தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்திசெய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.MCC_Defence_20250220__10_.jpegஇக்கூட்டத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் (மேஜர் ஜெனரல்) அருன ஜயசேகர (ஒய்வுபெற்ற), கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.MCC_Defence_20250220__4_.jpegMCC_Defence_20250220__5_.jpegMCC_Defence_20250220__2_.jpegMCC_Defence_20250220__3_.jpegஎதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
Published By: RAJEEBAN19 FEB, 2025 | 03:07 PMimageஅமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.தீவிர வலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை, அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றது என
500x300_9519033-durgastalin.webp?resize=அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம்.தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.https://athavannews.com/2025/1422200
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்குswiss.jpgசுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மறுபரிசீலனை செய்யவும் சுவிட்சர்லாந்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.“எங்கள் வாடிக்கையாளர் இலங்கைக்குத் திரும்பினால் அவருக்கு ஏற்படும் அபாயங்களை நிரூபிக்கும் பல உறுதியான ஆதாரங்களை சுவிட்சர்லாந்தின் குடியேற்றத்திற்கான மாநில செயலகம் (SEM) வைத்திருந்த நேரத்தில், அவர்கள் துன்புறுத்தலுக்கான ஆபத்தை
Elon_Musk_Royal_Society_crop-e1739916921Columnsசிவதாசன்இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்?சிவதாசன்இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி?இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையாரும் அப்படியான ஒருவரே. தனது நியூ யோர்க் தொடர்மாடிக் குடியிருப்புகளில் கறுப்பர்களுக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவர் மூத்த ட்றம்ப். ஓரளவு மனிதாபிமானம் கொண்ட இரண்டாவது மகனுக்கு சொத்துக்களைக் கொடுக்காமல் டொணால்டை மட்டும் தனது வாரிசாகக் கொண்ட தந்தையின் குணம் தான் மகனின் வியாபார
தண்ணீர், ஆர்.ஓ, ஆரோக்கியம், குடிநீர், உடல்நலன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது 15 பிப்ரவரி 2025, 11:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புனேவில் கியான் பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ
பாம்பு – கீரிபட மூலாதாரம்,GETTY IMAGESகட்டுரை தகவல்எழுதியவர், க.சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது.ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை.பாம்பு - கீரி இரண்டும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? அதில் கீரியே பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்? பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? இவையிரண்டும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்?
காதலர் தினம்: உலகம் முழுக்க காதலிக்க ஆளே இல்லாமல் தவிக்கிறார்களா? ஏன் இந்தச் சிக்கல்? 59 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா? உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடத்தான் வேண்டியுள்ளது. இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின்
 When you win tickets to see your favorite band on the radio... ரேடியோ உலகம் என்பது தனி சுகம்.  அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஒரு காலத்தில் ரேடியோ வைத்திருப்பதே ஒரு பணக்கார வர்க்கத்தின் அடையாளமாக இருந்தது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்த செல்போனை,  அம்பானி நிறுவனம் 501 ரூபாய்க்கு போன் கொடுத்து எல்லோருக்கும் போன் என்று  பரப்பி விட்டதை போல, தமிழ்நாட்டில் சகலருக்கும் தவணை முறை திட்டத்தில்...   ரேடியோ கிடைக்கச் செய்ததில் விஜிபி சகோதரர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ரேடியாவுக்கு  தபால் ஆபிசில் பணம்கட்டி லைசன்ஸ் வைத்திருக்க வேண்டிய காலம் இருந்தது என்று சொன்னால் இந்த காலத் தலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். திடீரென அதிகாரிகள், ரெய்டுக்கு வருவார்கள். லைசன்ஸ் இல்லாதவர்கள், அரிசி பானைகள் போன்றவற்றில் ரேடியோவை தூக்கிபோட்டு ஒளித்துவிடுவார்கள். எங்கள் வீட்டிலும் இது நடந்திருக்கிறது.   எங்கள் குடும்பம் விஜிபியிடம் ஒரு மர்பி ரேடியாவை தவணை முறையில் வாங்குவதற்குள் படாதபாடுபட்டது இன்றைக்கும் நினைவிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை
May be an image of anchovies and text that says 'இடியப்பமும் முரல் மீன் சொதியும்' மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு
பாம்பு தோல் உரிப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு சீனிவாஸ் பதவி, பிபிசி 11 பிப்ரவரி 2025, 05:46 GMT பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை
இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்கட்டுரை தகவல்எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, பிபிசி நியூஸ்19 பிப்ரவரி 202532 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது.ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய திட்டம் போல் தோன்றலாம். ஆனால், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸ் 1993 பிப்ரவரி 4ஆம் தேதி செய்ய முயன்றது இதைத் தான்.ஆனால் ஸ்னாமியா (ரஷ்ய மொழியில் பதாகை எனப் பொருள்) திட்டத்தின் நோக்கம் உலகை மிரட்டி பணம் பறிப்பது போன்ற ஒரு கொடூரமான திட்டம் அல்ல.ஸ்னாமியா
  ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ   ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவிitalo-calvino-bw1-frmல் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக்  கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992). திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை. கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 16   ஒவ்வொரு சமுதாயத்திலும் பேய், கூளி, பிசாசு, ஆவி, முனி என்பன ஒரு பங்கு வகிக்கின்றன. இறந்தவர், சுடலை, இருண்ட இரவு, தெரு நாயின் ஊளை என்பனவற்றின் பயம் நாட்டுப்புறத்தில் எம்மை கட்டுப்படுத்துகிறது.  அங்கு பேயோட்டுதல் இன்னும் ஒரு சாதாரண சங்கதியாக உள்ளது. ஆலயக்குருக்கள், மரபுப் படியான பேய் ஓட்டிகள், ஆன்மீக குருக்கள் [Temple priests, traditional ghost busters, spiritual gurus ] என்பவர்கள் இதில்  வல்லுனராக இருக்கிறார்கள்     இயற்கைக்கு புறம்பாக, தற்கொலை, கொலை, அல்லது விபத்து மூலம் திடிரென மரணிக்கும், முக்கியமாக இளம் வயதினர் ஆவியாக உலாவுவதாக நம்புகின்றனர். அவர்கள் நிறைவேறப்பெறாத அவாக்களை கொண்ட பேயாக உலாவுகின்றன எனவும் நம்புகின்றனர். அது மட்டும் அல்ல, இந்த பேய்களை பேயாட்டிகள் [ghost charmer] கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள் என்றும், தனது எதிரியை தாக்க, இப்படியான பேய்களை இவர்கள் மூலம் பெறலாம் எனவும் நம்புகிறார்கள்.   ஒவ்வொரு தமிழனும் அவன் எங்கு இருந்தாலும் கல்விக்கு [படிப்பிக்கு] முதல் இடம் கொடுக்கிறான். இதனால் தமிழன் பல மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் தனது சமுதாயத்தில் உண்டாக்கிறான். ஆனால்  ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy: division into two mutually exclusive, opposed, or contradictory groups: a dichotomy
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை"  "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு  வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும்  நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும்    மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில்  ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள்   கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள்   தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க  பாடினாள் கவிதை இனிமை கொடுக்க   ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க   மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!"  "வேதம் சொல்லா பாசம் வேண்டி  பாதம் பார்த்து கைகள் கோர்த்து  இதமான வாழ்வில் காமம் சேர்த்து    பதமாய் குழைத்து ஊட்டினாள் உறவை!"  "காதல் மலர கனிவு துளிர    மோதல் அற்ற புரிந்துணர்வு பூக்க இதழ் இரண்டும் தேன் பருக   கூதல் காற்று இரண்டை ஒன்றாக்கியது!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
19 FEB, 2025 | 05:56 PMimage(நெவில் அன்தனி)வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.1_captains_masters.pngஇப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன.இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை
குறளோடு கவிபாடு / "குறள் 613"   "பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில்  உறுதியான அலையாக சக்தி பிறக்குமே!   உலகிற்கு உதவ கொடுக்கும் கையை   உன்னத பெருமையாக உலகம் போற்றுமே  வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!"   "உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே!   அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே  ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும்  உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட‌ முடியாது2007ம் ஆண்டு எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அட‌ந்த‌ 21க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் ப‌ட‌த்தை எடிட் செய்து போட்டேன் , போட்ட‌தும் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பெரியவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் பார்த்து இருக்கின‌ம் அந்த‌ ப‌ட‌த்தை த‌லைவ‌ர் 21க‌ரும்புலிக‌ளுட‌ன் இருந்து எடுத்த‌தை போட்டு இருந்தால் உட‌ன‌ நீக்கி இருப்பின‌ம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த‌ ப‌ட‌த்தையும் தாய‌க‌ பாட்டு வ‌ரியையும் இணைத்து செய்தேன்.............521adec08d47d0eee2ac20f55b92fb01-0.jpgஇப்போது எல்லாரும் பார்க்கும் ப‌டி இருக்கு................கால‌ங்க‌ள் மாறினாலும் எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது..........எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அடைந்த‌ க‌ரும்புலிக‌ளின் நினைவு வ‌ர‌ க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் இதை செய்தேன்....................த‌லைவ‌ரின் நினைவு வ‌ரும் போதெல்லாம் எதையாவ‌து செய்வேன் அதை கொண்டு போய் சோச‌ல் மீடியாக்க‌ளில் போட்டால் உட‌ன‌ நீக்கின‌ம்ப‌ல‌ த‌ட‌வை ம‌ன‌ம் வேத‌னை ப‌ட்ட‌து இவ‌ள‌வு நேர‌ம் ஒதுக்கியும் வீனா போச்சு என்று