24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சென்னை மைதானத்தில் ஜபிஎல் விளையாட்டின் போது ரன்ஸ் அடிப்பது சிரமம் சின்ன அணிகளே 170தாண்டுகினம் என்றால் பிச்சில் மாற்றம் போல் தெரியுது...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் பவர் பிலே ஓவருக்கை நல்ல ரன்ஸ் அடிச்சு விட்டினம் இப்படியே போனால் கூடுதல் ஓவர் இருக்க தக்க விளையாட்டை முடித்து விடுவினம்...............இன்று பெரிய வெற்றி நியுசிலாந் அணிக்கு.............................
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளார். டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம். மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் நாடாளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம். மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர். இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார். இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது SJP அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும். இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார். இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்டு உள்ளதா என கேட்கிறேன். பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை. குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறிதி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும். கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம். நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம். கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம். 60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள் ளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது. மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது. ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும். இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம். மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை. சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள். அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே. குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை. கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள். இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும். தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர். அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது. அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை. அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது. ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள். தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குரைக்கின்றனர் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1464113
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்காவது Finn Allen இன் அடி பார்க்கலாமா?
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
வட்ஸப்பில் இருந்து.. தற்போது மாடு களவில் ஈடுபடும் குழுவினர் சொகுசு கார்கள் மற்றும் வேன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்... நள்ளிரவு 1.18 மணியளவில் வயல் அரிவு வெட்டுக்கு ஆட்களை ஏற்ற சீட்கள் இல்லாத வாகனத்தில் சென்றார்கள் எனும் கதை சிறு பிள்ளையும் ஏற்றுக்கொள்ளாது. வடக்கில் சட்டவிரோத தொழில்கள் இளவயதினர் அதிகம் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர் என்று பார்க்கின்றனரேயொழிய எவ்வகையில் சம்பாதிக்கின்றனர் என்று பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தின் ஜீவனோபாயமாக இருக்கும் ஒரு மாட்டினை களவெடுத்து சென்று இறைச்சிக்காக விற்பவர்கள் அறிவதில்லை அந்த மாட்டை நம்பி இருக்கும் குடும்பத்தின் வலியினை. சாதாரணமாக மாட்டை கடத்தி பிடிபட்டால் நீதிமன்றம் ஊடாக கிடைக்கும் தண்டனை மிகவும் சொற்பமானது. கடத்தலில் ஈடுபட்டவர் அன்றே பிணையில் வெளியே வரலாம் குற்றக்காசும் மிகவும் குறைவே. இவ்வாறான சட்ட நிலைமை இருப்பதால்தான் துணிவாக மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதோ அந்தளவுக்கு இவர்கள் செய்த சட்டவிரோத செயலும் ஏற்றுக்கொள்ள முடியாததே... தகவல் சுப்பிரமணிய பிரபா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
173 நல்ல ஸ்கோர்.............
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ்களத்தில் நடைபெறும் இந்த வாதப் பிரதி வாதங்களால் இலங்கையில் தமிழினம் வாழ நல்வாழ்வு கிடைத்துவிடாது. சிங்களம் தமிழினத்தின் காலைச்சுற்றிய பாம்பு. பாம்புக்கு பால்ஊற்றி வணங்கவும் தமிழினத்திலும் பக்தர்கள் உண்டு. இவர்கள் போன்றோர் மாறும்வரை ஏட்டுச் சுரைக்காயை தொடர்ந்து சுவைக்கலாம் அவ்வளவுதான். இலங்கையில் இன்றைய பல தமிழர்களின் தறிகெட்ட வாழ்க்கை முறையும், அங்கு தலைவர்கள் என விளங்குவோரின் தவறான செயற்பாடுகளும் மேலோங்கி உள்ள நிலையில் தமிழீழம் மலர்ந்தால்…… நந்த வனத்தில் ஓர் ஆண்டிக் கதை மீண்டும் எழுதப்படும்போல் தோன்றுகிறது. புத்த துறவிகள் அரசியலுக்குள் நுழையாது வலுவான அணை ஒன்று கட்டப்படல் வேண்டும். துறவிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் செயல்களில் ஈடுபடும்வரை தமிழினம் மட்டுமல்ல, சிங்கள இனம் உட்பட, வேறு எந்த இனமும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@நிலாமதி இன்று நிலாமதி அக்காவுக்கு அதிஷ்டம் அடிக்க கூடும்...................
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்ட பின்... வாகனத்தின் காணொளி: 👉 https://www.facebook.com/reel/1508123317691140 👈 Reborn Visu Ranjith Guna ஓடும் போது சுட்டிருந்தால் வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும்!!!! ############ Reegan Devadas இந்த வானம் நிறுத்தி வைக்கப்பட்டதை பார்க்கும் போது... தேவையின் அடிப்படையில் செய்யப்பட்ட கொலை ############### Kogi Kogi சிறுவனை சுட்டுக் கொல்லவா போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது 😡😡😡😡
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் சிலது ஆப்பு அடிக்க கூடும்.............. ரன்ஸ் மின்னல் வேகத்தில் கூடுது..................................
-
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்
அவர்களுக்குரிய இடத்தில ஒழுக்கமாக இருந்து தமது பணியை செய்திருந்தால் ஏன் இந்த உபத்திரவம் எல்லாம் வருகுது? தவறு செய்யும்போது தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐக்கிய அமீரகம் அணியும் அடிச்சு ஆடுகினம் 160ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது..........................
-
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
“நானா” வின், காணொளி: 📽️👉 https://www.facebook.com/reel/905203261910665 👈 “Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது…. பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை. இவரது வன்முறை கலந்த அணுகுமுறை மற்றும் இவர் பெண்களிடம் காட்டிய ஆக்ரோஷம் பலரை பொது இடங்களில் அச்சத்துடன் நடமாட வைத்தது. “வீடியோ எடுக்க வேண்டாம்" என்று பெண்கள் மறுத்த பிறகும், ஒரு நிழலைப் போல பின்தொடர்ந்து துன்புறுத்துவதை ஒரு ‘மிகவும் அனுபவித்து’ செய்து வந்துள்ளார். பல நாட்களாக இவரை ஏன் யாரும் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கனடா காவல்துறை இவரை 'Criminal Harassment' (குற்றவியல் துன்புறுத்தல்) பிரிவில் கைது செய்துள்ளது. இனி சட்டத்தின் பிடியில் இருந்து “மைனர் மாப்பிளை” தப்புவது இனி கடினம். "இலங்கையர்" என்ற அடையாளத்தோடு இவர் செய்த இந்த அருவருப்பான காரியங்கள், உலகெங்கிலும் வாழும் கண்ணியமான இலங்கை மக்களுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளது. இவரைப் போன்ற ஒரு தனிநபரின் வக்கிரமான குணத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூற முடியாது. ஆனால், இவரைப் போன்றவர்கள் சமூகத்தின் பெயரால் உலவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இலங்கைச் சகோதரர்கள் உறுதியாக உள்ளோம். காவல்துறை இவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என நம்புவோம். அதே சமயம், சமூக ரீதியாக இவரைப் போன்றவர்களைப் புறக்கணிப்பதன் மூலமே எமது சமூகத்தின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட முடியும். Mukinthan Thurairajasingham
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு! அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர் எனவும் அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464076
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2026/1464095
-
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1464079
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றையான் பரிட்சையும் பிழை விடாம பாஸ் ஆகியாச்சு நாளையான் பரிட்சையை பற்றி நம்ம @வாத்தியார் சொல்லித் தர வில்லை............சரியான நேரம் பார்த்து பார்த்தியார் பாடசாலை வர வில்லை பாடம் எடுக்க நாளைக்கு முட்டை கிடைச்சா அந்த முட்டையால் மாணவர்கள் வாத்தியாருக்கு எறிவதாக கூடி பேசி இருக்கிறோம்😁😃😄.....................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது. பல பொருளாதார வல்லுனர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். ஆனால், வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல, அகில இலங்கை உள்ளூர் உற்பத்தியாளரும் இந்த பொருளாதாரக் கொள்கையால் நன்மையடைந்தனர். மக்கள் அன்றாட பாவனையில் இருந்த வெங்காயம், மிளகாய் ஆகியனவற்றை வட பகுதி விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்ததால் நல்வாய்பாக வட பகுதி விவசாயிகள் உடனடி நன்மையடைந்தனர். மற்றபடி, பாணுக்கு கியூவால் பாதிக்கப்படவர்கள் சிங்கள மக்கள் மட்டுமல்ல, யாழ்பாணம் உட்பட வட கிழக்கிலும் அதே நிலை தான். சடுதியான இறக்குமதி தடையையல் 1973 ன் இறுதியில் இருந்து குறுகிய காலத்திற்கே அது இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் அரச/ தனியார் துறை ஊழியர்கள். சுய தொழில் செய்வோர் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், . 1974 ன் நடுப்பகுதியின் பின் நிலமை சற்று சீராகியது. ஒட்டு மொத்தமாக உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்தன. பல தரவை நிலங்கள் விவசாய நிலங்களாகின. படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டதின் மூலம் மக்களுக்கு வன்னியில் அரசால் காணிகள் வழங்கப்பட்டது அந்த காலத்தில் தான். ஆனால் திட்டத்தின் எதிர்பார்ப்பின் அளவுக்கு யாழ் மக்கள் தமது சோம்பேறித்தனத்தால் அங்கு செல்லவில்லை என்பது வேறு விடயம். எந்த ஒரு பொருளாதார திட்டமும் அதன் பலனை கொடுக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான பொதுத்துறை ஊழல் இந்த பொருளாதார கொள்கை நடைமுறை படுத்தலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியது. அரச துறையில் ஊழல்கள் மலிந்தது இத்திட்டதை பெரிதும் பாதித்தது. ஊழலை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது. ஆளும் கட்சியினரே பல ஊழல்களை செய்தனர். இது பல எதிர்மறையான அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தது. இதன் பலனை ஐக்கிய தேசியக்கட்சி 1977 ல் அறுவடை செய்தது. மற்றப்படி நான் சிறிமா ஆட்சியை அப்படியே முழுமையாக ஆதரித்து எப்போதுமே கருத்திடவில்லை. எந்த ஆட்சி என்றாலும் அவர்களால் தமிழருக்கு நன்மையான திட்டங்கள் வரும் போது தந்திரோபாய ரீதியில் கண்டும் காணாமல் அனுமதிக்க வேண்டிய தமிழரசு எல்லா திட்டதையும் மூர்க்கமாக தனது அரசியல் பிழைப்புக்காக எதித்தது. அதற்கு வழமைபோல் பல சொத்தைக் காரணங்களை தூக்கி பிடித்து உணர்சசி அரசியலை மட்டும் செய்தது. அதைத் தவறு என்று குறிப்பிட்டதை தூக்கிப் பிடித்து நான் சிறிமாவை ஒரேயடியாக புகழ்ந்ததாக மடைமாற்றுவது தமிழ் தேசியவாதிகளின் இயல்பு தான் என்பதால் அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. மக்கள் நன்றியறிதலுக்காக வாக்களித்ததாக கூறியவுடன் நன்றி இலங்கை தமிழரின் இரத்தத்தில் ஊறியது DNA யில் ஊறியது என்று வெற்றுப் பெருமை மார்தட்ட வேண்டாம். இப்படியான வெற்றுப் பெருமை மார்தட்டல்கள் தான் தமிழரை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது. கொப்பேகடுவ்வுக்கு வடபகுதி மக்கள் வாக்களித்தது நன்றியறிதல் மட்டுமல்ல மீண்டும் சு. க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இறக்குமதி தடை வரும் நாம் நன்மையடையலாம் என்ற சுய நல எதிர்பார்ப்பினாலும் தான். அதில் தவறில்லை சாதாரண மக்கள் அரசிடம் தமக்கு நன்மைகளை எதிர்பார்த்து வாக்களிப்பது இயல்பானது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியா கூட ரன்ஸ் அடிப்பினம் என நானும் நினைத்தேன் நெதர்லாந் வீரர்களின் பந்து வீச்சு மிக அருமை நெதர்லாந் வீரர் தனி ஒருவனாய் அடிச்ச அடி வவ்வ்வ்வ்வ்வ்வ்🏏💪..................
-
சிரிக்க மட்டும் வாங்க
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியா அடிக்கத் தொடங்கிற நேரமெல்லாம் விக்கட் விழுந்துது. நெதர்லாந்து அடிக்க அடிக்க ஓட்டம் கூடிச்சு. இலகுவான வெற்றி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்தின் திறமையான பந்து வீச்சு பராட்ட தக்கது...........மட்டையடி வீரர்களும் தங்கட பங்களிப்பை சரியாக செய்த படியால் ஈசியாக வென்று விட்டினம்........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்து டெல்லி வெதரையும் விரட்டி நமீபியாவையும் வென்று விட்டார்கள் ...........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடுத்த மைச் பெரிய ஆர்வம் இருக்காது பார்க்க மேல் ஓட்டமாய் ஸ்கோரை பார்க்க போகிறேன் லொள் ஹா ஹா..........................- 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
அந்த தோட்டத்தொழிலாளர்களின் மகிழ்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு . .......! 😂 - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.