24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தானின் சுழல் பந்து வீச்சு இப்போது நல்ல நிலையில் இருக்கு..............சிறந்த வீரர்களை பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தெரிவு செய்து இருக்கினம்................
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
ஈவிரக்கமற்ற ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வேறெந்தப் போராட்டமும் இன்றைய உலகில் வெற்றி தராது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது என்ன கொடுமை லொள் நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறேன்........... இந்த முறை ஜக்கம்மாவை கைவிட்டு அல்லா அக்பட் சொல்ல வேண்டியது தான் ஹா ஹா😁........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி அணியில் தென் ஆபிரிக்கா வீரர் ஒருவர் விளையாடுகிறார இங்லாந் நாட்டை சேர்ந்த வீரரும் இத்தாலி அணியில் விளையாடுகிறார்................ இத்தாலி இந்த உலக கோப்பையில் சாதிக்கக் கூடும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
- Today
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇 (சு)மந்திரம் இது.. (சு)மந்திரம் தினம் தோறும்.. மனம் மோதும்ம்ம்ம்.. (பா)ஆவி நீ எமில்.. துரோகி நீ இதை... கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்.. (சு)மந்திரம் இது (சு)மந்திரம் தினம் தோறும்... மனம் மோதும்.. மந்திரம் இது.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பிகு எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக் கிண்ணம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் நிலைமைதான் திரிசங்கு நிலை. "புறக்கணிப்பது எங்கள் முடிவு அல்ல. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அணித்தலைவர் சால்மன் ஆக்கா பேட்டியில் சொல்லியுள்ளார். கேட்கும் போது கவலையாக உள்ளது. இன்று முதல் பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.
-
கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம்
கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 02 Feb, 2026 | 07:02 PM கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து நேற்றைய தினம் (01) இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம், மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்கவேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளிப் பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாசார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். Politics மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின்படி, “கிவுல் ஓயா" நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்நீர்த்தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்பூவரசங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. மேலும், 1921ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் "ஒதுக்குக் காடாக" அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரினுள் மூழ்கப்போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலமே தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்புக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் இந்நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதை "தொல்லியல் பாதுகாப்பு" என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்படவேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1.990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது. இப்பிரதேசங்களின் இனப்பரம்பல் அமைப்பையும் சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாகவே பார்க்கப்படுகிறது. எனவே. அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலமே சாத்தியமாகும் என்பதை அரசுக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237645
-
தனிமையும் துணிச்சலும்
தனிமையும் துணிச்சலும் January 31, 2026 துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்." இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள். மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை. ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது. இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை. தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை. அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம். https://www.writerabilash.in/2026/01/blog-post_31.html
-
"மூன்று கவிதைகள் / 22"
"மூன்று கவிதைகள் / 22" மின்னலாய் ஒரு பின்னல் [சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி] சாந்தம் நிறைந்த விழிகள் எனோ கோபம் கொண்டு பார்க்குதே பொறுமை தொலைத்து ஏங்குதே மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................. 'காதல் கோட்டைகள்' காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது காதலன் காதலி சேர்ந்து அமைத்தது காலம் முழுவதும் நினைவில் நிற்குதே! ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை ஆரவாரம் இல்லா உறவின் கனவு ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ புகைப்படக் கவிதை பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட, மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட, அலை அலையாக இன்பம் பொங்க, சோலைவனம் மனதில் துளிர் விட்டது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22" https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடந்தால் மகிழ்ச்சியே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் Enter The Dragon படத்தில புருஸ்லி வந்த மாதிரி வருமாக்கும் என்று நினைத்திருப்பாரோ😁
-
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன? பட மூலாதாரம்,@TVKHQITWingOffl கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா? தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் பேச்சின் துவக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆரை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார். "தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் நீங்கள்தான். 1977 ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆர். வானொலியில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசும்போது 'பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில், இப்படிப் பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டது எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அ.தி.மு.க.' என்று சொன்னார். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்" என்றார். பட மூலாதாரம்,@TVKHQITWingOffl தேர்தல் களம் பற்றி என்ன சொன்னார்? தொடர்ந்து, "எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் வெற்றிபெற்ற பிறகுகூட, சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறது என கேலியும் கிண்டலும் செய்தார்கள். அதைப்போலத்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும், இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு என்ன அனுபவம் இருந்தது தெரியுமா? 1952லிருந்து 72வரை தி.மு.கவில் இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு அதே வாயால், எம்.ஜி.ஆரைப் பார்த்து அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது, கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவருடைய தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கேலி செய்தார்கள். மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்களுக்கு கோட்டை என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. இப்போது அதே பழைய ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்" என்றார் விஜய். மேலும், "மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். நாம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தி.மு.க. கூட்டணி , இன்னொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.கவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஒவ்வொரு வீட்டிலும் டி.வி.கே. இருக்கிறது. தீயசக்தியை வீழ்த்த தூயசக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம் மக்கள் விசிலை ஊதுவதில் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@TVKHQITWingOffl 'தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்' அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சின் சாரமும் "எம்.,ஜி.ஆர் Vs தி.மு.க., எம்.ஜி.ஆரைக் கேள்வி கேட்டதைப் போல தன்னையும் கேள்வி கேட்கிறார்கள், தி.மு.கவால் எம்.ஜி.ஆரைக் கடைசிவரை வெல்ல முடியவில்லை, தி.மு.கவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி த.வெகதான்" என்பதாகவே இருந்தது. எம்.ஜி.ஆரைப் பார்த்து விஜய் காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை. "அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டு அதை எப்படி வழிநடத்துவது, இந்த அரசியல் கட்சியை மக்கள் அங்கீகரிக்கிற வகையில் எப்படிப்பட்ட கொள்கைகளை வகுப்பது என்ற அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரைப் பார்த்து காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.'' ''சினிமாவில் வேண்டுமானால் 'டூப்' போடுவது சரியாக இருக்கும். ஆனால் அரசியலில் 'டூப்' எடுபடாது. ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிற ஓர் அரசியல் தலைவர் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் செம்மலை. மேலும், பா.ஜ.கவை மகிழ்விப்பதற்காகவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் செம்மலை. "பா.ஜ.க. தலைவர்களே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில்தான் எங்கள் கூட்டணி என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருக்கிறபோது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என விஜய் சொல்லத் தயங்குகிறார்? ஒரு மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு கட்சியை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அந்த கட்சியினிடத்தை தான் பிடிக்கலாம் என்று ஒரு தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவின் பெயரை இவர் சொல்லவில்லையென்றாலும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முன்னணியிலே இருக்கிற எங்கள் கட்சியை இவர் சேதப்படுத்த முடியாது. மக்கள் மத்தியிலே எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைக் கூட சோதிக்காத கட்சியாக இருக்கிற த.வெ.க., தான்தான் களத்திலே ஹீரோ என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியதாக இருக்கிறது" என்கிறார் செம்மலை. பட மூலாதாரம்,@EPSTamilNadu முன்பே துவங்கிய விஜய் எம்.ஜி.ஆரை தன் பக்கமும் தி.மு.கவை எதிராகவும் விஜய் நிறுத்துவது இது முதல் முறையல்ல. மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டிலேயே இதைத் துவங்கிவிட்டார் விஜய். அந்த மாநாட்டில் பேசும்போது, "அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியானது" என்றார் விஜய். அதேபோல, ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், ''எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.கவை தீய சக்தி என்றார்கள். அதையே நானும் கூறுகிறேன். தி.மு.க தீய சக்தி, த.வெ.க. தூய சக்தி. தூய சக்தி த.வெ.கவுக்கும், தீய சக்தி தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. மக்கள் சக்தியான த.வெ.கவால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும்" என்றார். கிட்டத்தட்ட அதே தொனியில்தான் திங்கட்கிழமையும் பேசினார் விஜய். வெற்றியாக எதிரொலிக்குமா? திடீரென ஒருவர் தன்னை எம்.ஜி.ஆராக முன்னிறுத்தினால், அது தேர்தல் களத்தில் வெற்றியாக எதிரொலிப்பது சந்தேகம்தான் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை. "இயக்குநர் கே. பாக்யராஜில் துவங்கி விஜயகாந்த்வரை இப்படிச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இருந்த புறச் சூழல் அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவின் உருவகமாக இருந்தார். அவருடைய ரசிகர் மன்றங்கள் கட்சியின் ஒரு பகுதியாகவே இருந்தன. அதனால்தான் அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறியபோது கட்சி செங்குத்தாகப் பிளந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள் புதிய கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக மாறின. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாராலும் அந்த இடத்திற்குப் போக முடியாததற்கு அதுதான் காரணம்" என்கிறார் ராஜன் குறை. பட மூலாதாரம்,@TVKHQITWingOffl திமுக கூறுவது என்ன? தி.மு.க. விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. விஜய்யின் பேச்சு எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக் என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான டி.கே.எஸ். இளங்கோவன். "த.வெ.க. VS தி.மு.க. என முன்னிறுத்துவது எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக். அவர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்கிய பிறகு, அவர் தி.மு.கவை விமர்சித்தார், தி.மு.கவும் பதிலுக்கு அவரை விமர்சித்தது. இதிலென்ன இருக்கிறது? இதையெல்லாம் ஒரு வாதமாக முன்வைக்கிறார் அவர். மக்கள் பிரச்னைகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? எங்கள் கூட்டணிக் கட்சிகள்கூட மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். எதுவும் செய்யாமல் முதலமைச்சராகிவிட வேண்டுமென நினைக்கிறார் விஜய்" என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clymkkmy2pro
-
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
நன்றிகள் , சிறு இடைவெளியின் பின் மீண்டும் இணைக்கிறேன்
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka' நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி 02 Feb, 2026 | 06:20 PM 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த சுவர்ணதிலக, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (2) கையளித்தார். இந்நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) கசுன் ஜயசூரிய மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) சாணக்க தொடங்கொடகே ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237644
-
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு 02 Feb, 2026 | 05:57 PM மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 'மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மாநாட்டில், மலையகத் தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை உப அதிபர் ஜே. சத்குருநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.Politics அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபம் மற்றும் தொழிலாளர் சுரண்டல் குறித்து பேராதனை பல்கலைக்கழக கலாநிதி கஸ்ப ராஜபக்ஷவும், காணி உரிமை சார்ந்த சட்டக் கோணங்கள் குறித்து சட்டத்தரணி விஜயகுமாரும் விசேட கருத்துரைகளை வழங்கவுள்ளனர். இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 'மாநாட்டுப் பிரகடனம்' உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2026ஆம் ஆண்டை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் மாநாட்டிற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பையும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/237641
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎! "சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் “கரிநாள்” போராட்டங்களை நடத்த ஏற்பாடு 02 Feb, 2026 | 05:45 PM எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பு விடுப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கறுப்பு நாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அந்த வகையில் 4ஆம் திகதி வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி கல்வியாகத் தான் காணப்படுகிறது. எங்களது மக்களின் நலனுக்காகவே நாங்கள் பல்கலைக்கழகம் சென்றோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் என்ன காரணத்துக்காக பல்கலைக்கழகம் சென்றோமோ அந்த காரணம் தற்போது பின்னோக்கிச் செல்லப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்துகொண்டே இருக்கின்றனர். உங்களது ஆக்கிரமிப்புகளை எந்த அளவிற்கு விரைவாக நிறுத்துகின்றீர்களோ அந்த அளவிற்கு தான் இந்த நாட்டினை ஒன்றாக மாற்ற முடியும். அரசாங்கம் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலையில் செல்லலாம். எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237642
-
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம் 02 Feb, 2026 | 03:58 PM தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். அவ் எதிர்ப்பினையும் மீறி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியினரின் கருத்தை எதிர்த்தன. இறுதியில் தேசிய மக்கள் சக்தியினர் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலில் இல்லாததை எவ்வாறு தவிசாளர் சபைக்கு ஆற்றுப்படுத்த முடியும் என வாதிட்டனர். நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத ஒன்றை சபையின் அனுமதியுடன் தவிசாளர் அறிவிப்பாக முன்வைப்பதற்கு ஏற்பாடுகளில் இடமுண்டு. எனவே தயவு செய்து இனம் சார்ந்த பிரச்சினையில் உங்கள் கட்சி சார்ந்த நிலைப்பாடுகளுக்காக நீங்கள் தடையினை ஏற்படுத்தாதீர்கள் என பலதடவைகள் தேசிய மக்கள் சக்தியினரின் வினயமாகக் கோரினார், எனினும் கூச்சல் தொடர்ந்தது. தவிசாளர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான காரணங்களுள் ஒன்றாக அரச அனுசரனையுடன் திட்டமிட்ட சிங்கள பேரினவாதக் குடியேற்றங்கள் வரலாற்று ரீதியாக இடம்பெற்றுள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகாரசபைகள் ஊடாக குறிப்பாக மகாவலி அதிகார சபை ஊடாக ஏற்கனவே பல சிங்கள குடியேற்றங்கள் தமிழர் இன விக்தாசாரத்தினையும் அடையாளத்தினையும் இருப்பையும் அழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறாது இனப்பிரச்சினை தீர்வை முன்வைக்காது கடந்த அரசாங்கங்கள் போலவே தொடர்ந்து செயற்படுகின்றது. அதனை ஏற்க முடியாது. ஆரம்பமாக அரசாங்கம் 2500 மில்லியன்களை ஒதுக்கி சூட்சுமமான முறையில் ஆரம்பித்துள்ள இத்திட்டத்தினை எதிர்கின்றோம். மேலும் பல கோடிகள் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றத் தாயக இயல்பு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். தவிசாளரை உரையாற்ற விடாது செயற்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை ஒருமாத காலத்திற்கு சபையில் இருந்து வெளியேற்ற வேண்டிவரும் என தவிசாளர் எச்சரித்த நிலையில் சபையில் சற்ற அமைதி ஏற்பட்டது. இதில் சபை உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டது. விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர பிரசன்னமாகியிருந்த தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர். இந் நிலையில், சபையில் தேசிய மக்கள் சக்தியின் ஒன்பது உறுப்பினர்களில் தலைமை தாங்கும் உறுப்பினர் இத் தீர்மானத்திற்கு எதிராகவும் ஏனைய எட்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். தேசிய மக்கள் சக்தியைத் தவிர தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/237616
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு 02 Feb, 2026 | 02:05 PM தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறீஸ்கந்தரசா, மு.சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரான க.துளசி, சிறீரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டார்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237602
-
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு Feb 2, 2026 - 07:22 PM 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையானது பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம்: 1911 தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537 பெக்ஸ் இலக்கம்: 0112784422 மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com https://adaderanatamil.lk/news/cml58bcw404r7o29n8o6dhwq0
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
'முழு நிதியும் செலவிடப்படாத திட்டங்களுக்கு மீண்டும் அதிக நிதி ஏன்?' - மத்திய பட்ஜெட் பற்றி நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2026, 03:13 GMT 2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது நிதி நிலை அறிக்கை இது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. சுமார் 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், 53,47,315 கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டைவிட அதிகரித்து 5,92,344 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், அதே 1.5 சதவீதமாக நீடிக்கும் என இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, ஜிடிபியில் 56.1 சதவீதத்தில் இருந்து 55.6 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில்தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பதால், கடந்த நிதியாண்டில் இருந்த அளவுக்குத்தான் வரி வருவாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரி வருவாய், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகளைப் பொறுத்தவரை, இந்த நிதி நிலை அறிக்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முதலீட்டுச் செலவுகள்தான். மொத்தச் செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில் 12,21,821 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுச் செலவுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை குறைப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இருந்தபோதும் பங்குச் சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டிருந்தபோதே, பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது. நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த மற்றொரு அம்சம், வீழ்ச்சியை இன்னும் துரிதப்படுத்தியது. அதாவது, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகம் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். சிறு முதலீட்டாளர்கள் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருவதாக 'செபி' சுட்டிக்காட்டிவந்த நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு, அந்தத் திசையில் ஒரு கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. ஆனால், பங்குச் சந்தை இதனை எதிர்மறையாக அணுகியதில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பட மூலாதாரம்,Getty Images மோதி பாராட்டு மத்திய பட்ஜெட்டைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இந்த பட்ஜெட் நிகழ்கால கனவுகளை நனவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த பட்ஜெட் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடங்கள், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க நகராட்சி பத்திரங்களை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்." என்று அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், நிதி நிலை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "வேலை வாய்ப்பின்மை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிஜமான பிரச்னைகளை நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டார் ப. சிதம்பரம். பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை என்றாலும் வேறு சில எதிர்பார்ப்புகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் "2025 - 26ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, வரும் நிதியாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. இது பேரியல் பொருளாதாரத்தில் (Macro Economics) நல்ல குறியீடாகப் பார்க்கப்படும். ஆகவே, அது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன. நேரடி அந்நிய முதலீடும் வருவதில்லை, பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. இந்தியாவில் உள்ள தொழில் முனைவோரும் இங்கு முதலீடு செய்வதில்லை. காரணம், பொருளாதாரம் மீதான நம்பிக்கையின்மைதான். அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் தீர்வில்லை" என்கிறார் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலை அளிக்கக்கூடிய தகவலைச் சொல்கிறது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம். "கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. கடன்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறன. " என்கிறார் அவர். படக்குறிப்பு,ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பால், பொருளாதாரத்திற்குப் பலன்கள் ஏதும் கிட்டவில்லை என்ற நிலையில் அந்தச் சலுகையைத் தொடர்வது ஏன் என்கிறார் கே. பிரபாகர். "இந்த நிதிநிலையை அறிக்கையைப் பார்க்கும்போது வருமான வரியும் ஜிஎஸ்டியும்தான் பெரும் அளவிலான வருவாயைத் தருகின்றன. கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அவர்கள் கூடுதலாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது." "ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடு செய்யவில்லை. காரணம், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே 75 சதவீதம்தான் உற்பத்தி செய்கிறோம் எனும்போது, புதிதாக முதலீடுசெய்து என்ன செய்வது என்கிறார்கள். அதற்குக் காரணம், நுகர்வு குறைந்திருப்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக முதலீடுசெய்வதில்லை என்பதால் அவர்களுடைய லாபம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் இந்தச் சலுகை தொடர்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இந்த இரு பொருளாதார பேராசிரியர்களும் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம், மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது. கே. பிரபாகர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படும் சிறப்பு வரி (cess - செஸ்) அதிகரித்துக்கொண்டே போவதைச் சுட்டிக்காட்டுகிறார். "2014ல் 10 சதவீதமாக இருந்த செஸ் தற்போது 18 சதவீதமாகிவிட்டது. இந்த சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது என்பது தெரியவில்லை" என்கிறார் கே. பிரபாகர். படக்குறிப்பு,சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம் (கோப்புப் படம்) ஜோதி சிவஞானம் இதேபோன்ற மாநிலங்களோடு பகிரப்படாத மற்றொரு வருவாயைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை, ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் டிவிடென்ட் போன்ற வரி அல்லாத வருவாய் இந்த ஆண்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. "இப்படி மாநிலங்களோடு பகிரப்படாத தொகை அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல" என்கிறார் அவர். பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் அந்தப் புள்ளிவிவரங்கள் சரியானவையா என பல பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் கே. பிரபாகர். "சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் சி கிரேடு (C Grade) கொடுத்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதைப் போல வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்துகொண்டே வருகிறது என்பதற்கு விளக்கமில்லை" என்கிறார் கே. பிரபாகர். மத்திய அரசே செயல்படுத்தக் கூடிய வகையில் பல திட்டங்களை அறிவித்தாலும், அவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். அவர் சொல்வதைப் போலவே கடந்த நிதியாண்டில் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில் செலவிடப்பட்டதை இந்த நிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு 1,275 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 781 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 4,500 கோடி ரூபாய் மட்டுமெ செலவிடப்பட்டது. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 திட்டத்திற்கு 3,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. "இப்போது நிறைய நகரங்களை மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கென போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. இப்போது, கிளஸ்டர் மேம்பாடு (Clusters Development) குறித்துச் சொல்கிறார்கள். 200 கிளஸ்டர்கள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே தொழில் சார்ந்து 5,000 கிளஸ்டர்களாவது இருக்கும். உதாரணமாக, கோயம்புத்தூர் கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான ஒரு கிளஸ்டர். இப்போது உள்ள 5,000 கிளஸ்டர்களில் இருந்து 200ஐ எப்படி தேர்வுசெய்வார்கள் என தெரியவில்லை. இறுதியாகப் பார்க்கும்போது நம் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கலாம். ஆனால், நாம் போகும் பாதை சரியா என்ற கேள்வி இருக்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931v04e9elo