24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறுதி யுத்தத்தில் இந்திய இலங்கைக்கு எந்தெந்த வகையில் உதவியது? 1. புலநாய்வுத்தகவல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து இலங்கை இராணுவத்திற்கு அறியத் தந்தது. 1. Intelligence Sharing and Maritime Tracking India’s intelligence agencies (including RAW and naval intelligence) worked with Sri Lanka’s military to track LTTE movements, especially maritime logistics routes: India shared radar data, satellite imagery and naval intelligence on LTTE ship movements with the Sri Lankan Navy, significantly aiding the interdiction of arms and supplies. Grokipedia Sri Lankan naval commanders credited intelligence support in tracking and destroying LTTE “warehouse” vessels — large supply ships that brought arms and materiel from abroad — far out at sea (up to 1,600 + nautical miles from Sri Lanka). sangam.org Impact: These intelligence inputs reportedly helped cut the LTTE off from resupply, degrading its ability to fight in the final phase of the war. sangam.org இலங்கைக் கடற்படையுடன் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தடுத்து அழிப்பதில் பங்குகொண்டது Naval Cooperation and Patrols India’s naval forces and Coast Guard engaged in joint maritime operations with Sri Lanka to pressure LTTE supply and Sea Tiger (LTTE naval) activities: Indian Navy and Coast Guard ships patrolled strategic sea lanes (e.g., Palk Strait, Gulf of Mannar) to deter Sea Tiger operations and monitor suspect vessels. Rediff Coordination between Indian and Sri Lankan naval forces helped identify and interdict LTTE supplies approaching Sri Lanka’s territorial waters. Rediff These patrols — while not a “formal blockade” in the legal sense — acted as a de facto maritime pressure mechanism on LTTE logistics. Rediff ஆயுதங்களை வழங்கி, இலங்கை இராணுவத்தைப் பயிற்றுவித்து, தொழிநுட்ப உதவிகளை வழங்கியது Military Hardware, Training, and Technical Support India provided various forms of material and technical support to Sri Lanka’s armed forces which indirectly affected the operational context of the final war: India supplied surveillance radars to Sri Lanka and has a longstanding program of training Sri Lankan military personnel at Indian defense institutions. Stiftung Wissenschaft und Politik (SWP)+1 Although formal export of lethal weapons was limited due to domestic politics, technical and tactical expertise (e.g., training, radar data) helped Sri Lanka’s forces operate more effectively in tracking LTTE Naval units. Stiftung Wissenschaft und Politik (SWP) இலங்கையின் அரச, இராணுவ அதிகாரிகளுடன் இறுதி யுத்தம் நடைபெறவேண்டிய விதம் தொடர்பாகத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் போரின் போக்கினைத் தீர்மானித்தது Joint Condition Monitoring and Strategic Counseling Beyond hardware and intelligence: Indian and Sri Lankan military/intelligence officials regularly met and exchanged information during the years leading up to and including the final war, reflecting deeper cooperation than just high-level diplomacy. South Asia Journal This included informal high-level exchanges between strategic officials on both sides (national security advisors, defense secretaries, etc.) from about 2007–2009. South Asia Journal வெளியுலகில் இருந்து வந்த போர்நிறுத்தத்திற்கான அழுத்தங்களை முறியடிப்பதில் தனது இராஜதந்திரச் செல்வாக்கினைப் பாவித்து போர் தொய்விஒன்றி நடந்து, புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை உறுதி செய்தது. Diplomatic Positioning — Shaping External Pressure India’s government took strategic positions that affected international pressure on Sri Lanka: India worked to ensure the LTTE remained widely designated as a terrorist organization, which undercut external pressure for a ceasefire that could have weakened Colombo’s military campaign. South Asia Journal At the United Nations and in international diplomatic fora, India supported Sri Lanka’s sovereignty and repeatedly opposed calls for a ceasefire during the final months, emphasizing civilian protection via safe zones rather than a complete stop to operations. South Asia Journal
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை செ.ஞானபிரகாஷ் Updated on: 06 Jan 2026, 9:50 am கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்). மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார். அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை. ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர். கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக். உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது. ‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு. “நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை. உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
-
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடினர் என்பது குறித்து அறிய முற்பட்டபோது வெனிசுலா பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களும், சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவருக்கு முந்தைய அதிபர் ஹியூகோ சாவேஸ் குறித்து பல விஷயங்களும் தெரியவந்தன. சாவேஸ் முதல் மதுரோ வரை... - லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவின் வரலாறு கவனிக்கத்தக்கது. வேளாண் பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம் நகரமயமாகி, வேகமாக வளர்ச்சி கண்ட விதமே அதற்குக் காரணம். 1959-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா ஒரு ஸ்திரமான அரசைக் கொண்டதாக இருந்தது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெனிசுலா அதன் மூலம் செழிப்படையத் தொடங்கியது. ஆனால் 21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெனிசுலா வேறொரு அரசியல் பாதையில் செல்லத் தொடங்கியது. அப்போது அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸின் ஆட்சி கவனம் பெறலானது. 1999-ல் வெனிசுலாவின் அதிபரான ஹியூகோ சாவேஸ், ‘பொலிவிரியன் புரட்சி’ ( Bolivirian Revolution) என்ற பெயரில் சோசலிஸக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் பெயரைக் கூட வெனிசுலா பொலிவிரியன் குடியரசு என்று மாற்றினார். பொலிவர் என்பவர் சாவேஸின் கொள்கை குரு. அவருக்கு மாவோ, ஸ்டாலின், லெனின் மீதும் கூட ஈடுபாடு இருந்தது. சோசலிஸக் கொள்கைகளைப் புகுத்தி வெனிசுலா அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். அதுவரை அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கொட்டமடித்த ஆட்சியாளர்களை ஒடுக்குவேன் என்று சூளுரைத்தே ஆட்சிக்கு வந்திருந்ததால், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டினார். எண்ணெய் வளம் இருந்தும் ஏன் பொருளாதாரத் தேக்கநிலை என்று சிந்தித்து, கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தார் சாவேஸ். பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். இயற்கை வளமாக பெட்ரோலியத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் மிதப்பது தடைபட்டது. அவரின் கட்டுப்பாடுகளால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தது. சில பெருஞ் செல்வந்தர்களும் எரிசலில் இருந்தனர். சாவேஸுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது. ஆனாலும் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அவர் தொடர்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உள்நாட்டில் மட்டுமல்ல ஐ.நா. அவையிலும் கூட அமெரிக்காவை, அதன் அதிபரை சரமாரியாக சர்வசாதாரணமாக விமர்சித்து கர்ஜித்தார். ஆனாலும் அவருடைய ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதற்கு அவரது கொள்கைகளே காரணம் என்று பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், 2013-ம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்தார். அதன்பின்னர் வெனிசுலாவில் ஸ்திரமான ஆட்சி அமையவில்லை. 2018-ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ அதிபரானார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிட விடாமலேயே அவர் அதிபரானார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 2024-ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனாலும், மதுரோ அதனை அனுமதிக்கவில்லை. முழு சர்வாதிகாரியாக மாறியிருந்த மதுரோ மீண்டும் அதிபரானார். வெனிசுலாவில் போதைக் கும்பல்கள் ஆதிக்கம் மேலோங்கியது. இப்படி சாவேஸுக்குப் பின்னர் தேர்தலே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டமும் கேள்விகளும்! - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வாழும் வெனிசுலாவாசிகள் இந்த நகர்வைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பதுபோல் அவர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. ஆனாலும் சிலர் பயத்தில் நிசப்தத்தை தழுவி நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணம் எனலாம். இப்போது வெனிசுலா மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், சந்தேகமும் ஒருபுறம், நிம்மதியும், நம்பிக்கையும் மறுபுறம் என்று நிலவுகிறது. ஸ்பெயினில் களைகட்டிய மதுரோ கைது கொண்டாட்டம் பற்றி வெனிசுலாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இங்கே நிகழும் கொண்டாட்டங்களைக் காணும்போது எனக்குக் கவலையாக இருக்கின்றது. மதுரோவை சிறைப்பிடிக்கப்பட்டதில் நிம்மதிதான். ஆனால், அடுத்து என்ன நடக்கும். போர் மூண்டால் என்னவாகும்? எனக்கு அங்கே உள்ள எனது குடும்பத்தினரின் பாதுகாப்பே முக்கியம்” என்றார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வெனிசுலாவாசிகள் நடத்திய கொண்டாட்டப் பேரணியில் அமெரிக்கக் கொடிகளுடன் சிலர் இருந்தனர். இன்னும் சிலர் ட்ரம்ப்பை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பெண் ட்ரம்ப்பை போலவே வேடமிட்டு வந்திருந்தார். இதையெல்லாம் கவனித்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், “மதுரோ கைது என்பது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எனது தேசத்தை அமெரிக்கா ‘ஸ்டாக்’ செய்து கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது” என்றார். மதுரோ கைதுக்கு கியூபா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம் ஏதோ ஒப்புக்கு கருத்து சொல்லிச் சென்றுள்ளன. இதுபோன்ற மென்மையான கண்டிப்புகள் ட்ரம்ப்பை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்காது. சீனாவும், ரஷ்யாவும் மட்டும்தான் அமெரிக்காவும் தனது கண்டனங்களை சற்று வலுவாகப் பதிவு செய்துள்ளன. இதுபோன்ற வன்மையான கண்டனங்களும்கூட தடித்த தன்மை கொண்டது அமெரிக்காவை ஒன்றும் செய்யாது என்பது உலக வரலாறு அறிந்தது! அன்று ஈராக்கியர்கள் ஏமாந்தது போல... - இப்போது வெனிசுலா மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பார்த்து சமூக வலைதளங்களில் சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், “இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னரும், லிபியர்கள் கடாஃபி வீழ்ச்சிக்குப் பின்னரும் கொண்டிருந்த கொண்டாட்ட மனநிலைய சற்றே திரும்பிப் பாருங்கள். இப்போது அந்த நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் யோசியுங்கள். அந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்க கட்டுப்பாட்டில் வெற்று நிலமாக மாறின. விடுவிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதைத்தான் பல நாடுகளில் செய்திருக்கிறது. சர்வாதிகார நாடுகளில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும். ஆனால், அது உள்ளிருந்து எழும் மாற்றமாக இருக்க வேண்டும். படையெடுப்பு அல்லது கூட்டுச் சதியின் விளைவாக ஒரு மாற்றம் நிகழக்கூடாது. அது மக்களுக்கான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார். “2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தான் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அதிருப்தி ஈராக்கியர்களும் ‘வெல்கம் யுஎஸ்’ என்று பதாகைகளுடன் வரவேற்றனர். ஆனால் 2011 வரை ஈராக்கில் அமெரிக்கா பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தியது. லட்சக்கணக்கில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் எந்த அணு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சதாமும் கொல்லப்பட்டார். அன்று கொண்டாடிய ஈராக்கியர்களிடம் இன்று சென்று கேட்டால், அவர்கள் அமெரிக்கா மீது அத்தனை வெறுப்புடன் தாங்கள் பட்ட துன்பங்களை நினைவுகூர்வார்கள். ஈராக்கில் இருந்து அமெரிக்கா சென்ற பின்னர், அது ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் சென்றது. போர் எளிது, போரை முடிப்பதும் கூட எளிது, ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதும், ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதும் கூட எளிது. ஆனால், ஒரு தேசத்துக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய அரசை உருவாகச் செய்வது கடினம்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த திரைப் பிரபலம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. கட்டுரை உறுதுணை: தி கான்வர்சேஷன் அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - 22 எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும். ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும். இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால் மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது Tamilmirror Online || ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறுதி யுத்தத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொண்டது என்பதை அன்றைய சோனியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான். What Menon Actually Says in Choices 1. India made a strategic choice to support Colombo’s campaign. Menon describes the 2009 war as one of India’s critical “choices” in foreign policy — choosing between humanitarian concerns/demands from Tamil Nadu and the strategic imperative of maintaining influence with Sri Lanka’s government and keeping other powers (notably China) at bay. India ultimately chose to support the Sri Lankan government’s military effort rather than push for a ceasefire that could undermine Colombo’s position. puradsimedia.com+1 2. India engaged closely with Sri Lanka’s leadership. He recounts regular, discreet visits by Indian officials — including himself and then-Foreign Minister Pranab Mukherjee — to Colombo during the war for direct briefing and coordination. World Socialist Web Site 3. Menon argues that standing aside would have politically ceded Sri Lanka to other powers. Menon justifies India’s support to Colombo on geopolitical grounds — that refusing support to the Sri Lankan government would have weakened Indian influence in its immediate neighborhood and allowed China or others to fill the vacuum. He frames it as a choice dictated by realpolitik, not altruism. World Socialist Web Site 4. Menon notes that the war ended with the military defeat of the LTTE rather than a negotiated settlement. He characterizes the war’s conclusion as a military end to terrorism and argues that this was one of the rare occasions where military force produced such an outcome, even though brutality was inevitable. puradsimedia.com 🛰️ India’s Practical Help to Sri Lanka (Context from Other Sources) While Menon’s book describes the rationale, other sources document how that support was operationalized — though some of these details are reported outside the Choices book itself: ✔️ Intelligence and Naval Support India’s navy and naval intelligence helped locate and destroy supply vessels and “floating warehouses” used by the LTTE, disrupting their logistics at sea. The New Indian Express Indian reconnaissance aircraft provided real-time tracking of Tiger maritime movements to the Sri Lankan Navy. The New Indian Express+1 ✔️ Military Hardware Transfers India quietly gifted Mi-17 transport helicopters that were used in combat support roles by Sri Lankan forces, despite publicly denying offensive weapons supply. The New Indian Express Indian Coast Guard gifted an offshore patrol vessel and patrolled jointly with Sri Lankan forces to help deter Sea Tiger movements. The New Indian Express ✔️ Strategic and Diplomatic Backing India discouraged international pressure for a ceasefire during the final offensive, arguing that this would prolong the conflict and strengthen the LTTE. (Menon suggests the international community was generally restrained and India did not push a ceasefire hard.) SBS Australia According to reporting about his book, Menon recalls that Tamil Nadu politicians privately supported opposing efforts by other countries (e.g., the US and Norway) to intervene or “rescue” LTTE leadership. The New Indian Express 🛥️ On Allegations like Blocking a US Naval Rescue There are claims circulating online and in some commentary that India worked to prevent the US Navy from attempting to rescue LTTE leaders or arms suppliers, but these are not substantiated in Menon’s own text. Menon does note rationales for opposing outside military missions that could complicate India’s strategic posture, but he does not explicitly describe blocking a specific US rescue operation in Choices. SBS Australia ✨ Summary — What Menon’s Book Really Says 🔹 Menon portrays India’s role as strategic support rather than strict neutrality. puradsimedia.com 🔹 India prioritized keeping Sri Lanka aligned with India and away from China over pressuring Colombo. World Socialist Web Site 🔹 India engaged with Sri Lanka’s leadership behind the scenes during the war. World Socialist Web Site 🔹 He argues that India’s actions, even if politically hard, were aimed at preserving India’s influence and regional stability. SBS Australia மேனனின் சொந்த கருத்துக்கள் அவன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இவ்வாறு பதியப்பட்டுள்ளன. 1. Title and Opening Framing The chapter on Sri Lanka is explicitly titled: 2. India’s Role in Cutting Off LTTE Supplies Menon describes how the LTTE had been “starved of supplies by sea” by early 2009 and notes that this was achieved through effective intelligence and interdiction by the Sri Lankan armed forces with the help of others. puradsimedia.com He writes (verbatim from the chapter text available): This line makes clear that Indian naval intelligence and interdiction efforts were part of the campaign that cut the LTTE’s maritime lifelines — a major operational factor in the rebels’ defeat. puradsimedia.com 3. Structure of the Chapter Text The chapter opens with two epigraphs that reflect its theme: These quotations underwrite Menon’s framing of the end of the Sri Lankan war as ultimately a case where force – not diplomacy – resolved an entrenched 26-year conflict, even if at great human cost. puradsimedia.com 📌 What Choices Does and Does Not Include ✔️ What the Book Explicitly Says Menon’s chapter confirms India’s role in intelligence and maritime interdiction efforts against LTTE supply lines. puradsimedia.com He presents the outcome — defeat of the LTTE — as the result of sustained military pressure, not negotiated settlement. puradsimedia.com India is described as weighing strategic, domestic political, and humanitarian interests in determining what it did and did not do. icsin.org ❌ What Choices Does Not Contain (As Far as Public Excerpts Show) The publicly available chapter (and summaries) do not include direct extended quotations where Menon lists items like “naval blockade,” or “prevented US rescue operations” verbatim. These themes are reported by commentators and some newspaper coverage summarising Menon’s account — not verbatim text from the book itself. The New Indian Express The book does not print out all operational details in literal quotes beyond the introduction passage available on PDFs, so scholars normally obtain full text through the book itself. Penguin Random House India 📌 Contextual Observations from Reporting on Menon’s Account While not direct quotations, other reporting on Menon’s chapter highlights additional content reflected in his narrative: 🟦 India’s strategic rationale — Menon notes ― had India “stood aside” and pressed for a halt, it risked “defending the killers of an Indian Prime Minister” and ceding influence to other powers — an argument expressed as part of his assessment of India’s choices. The New Indian Express 🟦 Tamil Nadu political nuance — He discusses how Tamil Nadu political leaders privately supported the Indian government’s stance against external rescue efforts for LTTE leadership, despite public posturing — a nuance about domestic politics influencing foreign policy. The New Indian Express (Note: This is reflected in detailed reporting based on the book, not the PDF excerpt itself.) 🧠 Summary of Key Direct Text from Choices Here are the verified direct lines / paraphrased text from Choices based on available excerpts: 🔹 The LTTE was starved of supplies by sea due to intelligence and interdiction involving the Indian Navy. puradsimedia.com 🔹 The chapter is built around the idea that force ultimately worked where diplomacy had failed. puradsimedia.com 🔹 Menon titles the chapter to reflect that “Force Works” in the Sri Lankan context — a deliberately chosen framing. puradsimedia.com Overall Interpretation Shivshankar Menon’s Choices doesn’t deny India’s strategic involvement in the Sri Lankan war’s final phase. It explicitly frames India as part of efforts that cut off LTTE supply lines and worked with Colombo’s military strategy while weighing geopolitical and domestic pressures. What Menon doesn’t provide in the publicly available excerpts are extended direct quotations detailing every military assistance action — researchers generally access the full book (in print or e-book) for those exact lines, as publisher sites only preview parts. Penguin Random House India
-
செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 04:53 - 0 - 32 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (07) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
-
யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார். கீழிருந்த ஏனைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, வடத்தை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தி அந்த இளைஞரை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இதேவேளை, கடந்த முறைகளிலும் பட்டத்துடன் பறந்த இளைஞன் பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R Tamilmirror Online || யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
-
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
ஓரின சேர்க்கையை பற்றி இருந்ததாக தகவல். அதை பார்த்து.. பிக்குகள், பாதிரியார்மார் எல்லோரும் பொங்கி எழுந்து விட்டார்களாம். தங்களை குறிப்பிடுவதாக கருதி விட்டார்களோ.... 😂 🤣
-
சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:11 - 0 - 78 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், விசாரணையை ஓர் ஆழமான விசாரணை என்று விவரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார். Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
-
கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து!
07 Jan, 2026 | 04:02 PM நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லவிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுறிது. கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து! | Virakesari.lk
-
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
அப்படி என்னதான் இருந்தது? யாராவது தெரிந்தவர்கள்?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
ஆமேன்.
-
நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!
இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்! கிட்டத்தட்ட நான்கு வருட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சேவைக்குப் பிறகு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமெரிக்காவின் அதியுயர் இராஜதந்திரியாகப் பணியாற்றிய அவரது பதவிக் காலத்தின் நிறைவினை அது குறிக்கிறது. அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவிக்கையில், “இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்.” “முதலாவது நாளிலிருந்தே எமது பாதுகாப்புப் பங்காண்மைகளைப் பலப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் மற்றும் எமது இரு நாடுகளையும் வலிமையாக்கும் கல்வி மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல முடிவுகளை வழங்குகின்ற மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை ஆதரிக்கும் ஒரு உறவினை ஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.” எனவும் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்த தூதுவர் சங்கின் பதவிக்காலமானது, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024ஆம் ஆண்டில் அமெரிக்க பீஸ் கோர் தொண்டர்கள் இலங்கையில் மீண்டும் தமது சேவையினை ஆரம்பித்தது, மற்றும் ஃபுல்பிரைட் நிகழ்ச்சித் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களை உள்ளடக்கியிருந்தது. 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் LEED Gold சான்றிதழ் வழங்கப்பட்ட புதிய வளாகத்திற்கு தூதரகம் இடம் மாறியதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். அது இலங்கையில் நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாகும். அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக ஒரு நவீன பங்காண்மையினைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்கா கொண்டுள்ள கவனத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூதுவர் சங் அவர்களின் தலைமையின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை அமெரிக்கத் தூதரகம் முன்னெடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளுக்காக அமெரிக்கா வழங்கிய ஆதரவு மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கிய உதவித் தொகுப்புகள் மற்றும் மிகச்சமீபத்தில் 2025 டிசம்பர் மாதத்தில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான பதிலளிப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் வழங்கிய மனிதாபிமான உதவிகள் என்பன அவற்றுள் உள்ளடங்குகின்றன. 2022ஆம் ஆண்டு முதல் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சுதந்திரம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவியாக இலங்கைப் பங்காளர்களுடனான ஈடுபாட்டினையும் தூதுவர் வழிநடாத்தினார். தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலத்தில், மொன்டானா தேசிய காவல் படையணி மற்றும் இலங்கையின் பாதுகாப்பமைச்சு ஆகியவற்றிற்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் CARAT, ATLAS ANGEL, மற்றும் Pacific Angel போன்ற பிராந்திய பாதுகாப்பு மற்றும் பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு தொடர்பான பயிற்சிகள் ஆகியவற்றினூடாக அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் தூதரகம் ஆழப்படுத்தியது. இலங்கையின் மிகப்பரந்த கடல்சார் களத்தினைப் பாதுகாக்கும் திறனை பலப்படுத்தும் வகையில், ஒரு Beechcraft King Air விமானம் மற்றும் இரண்டு முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட முக்கியமான கடல்சார் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்களில் வேரூன்றிய ஒரு பங்காண்மையினை கட்டமைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை மீளவலியுறுத்தும் இம்முயற்சிகள் ஊடாக பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தூதுவர் மேம்படுத்தினார். தூதுவர் சங் பதவிக்காலத்தில் இளைஞர் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் செழித்து வளர்ந்தன. 2024 ஆம் ஆண்டில் பீஸ் கோர் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக இலங்கையில் மீண்டும் ஆரம்பித்தது. மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அமெரிக்கத் தகவல் கூடம் மற்றும் திருகோணமலையில் ஒரு ஆங்கில மொழி ஆய்வு கூடம் போன்ற புதிய வசதிகள் ஊடாக அமெரிக்க கலாச்சார மற்றும் கல்வி ரீதியான தொடர்புகள் வளர்ந்தன. தூதரகத்தின் இளைஞர் மன்றம், இளம் தெற்காசிய தலைமைத்துவ முன்முயற்சி (YSALI) மற்றும் English Access போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் இலங்கையின் அடுத்த தலைமுறை தலைவர்களைத் தொடர்ந்தும் வலுவூட்டுகின்றன. கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொடவாய கப்பற் சிதைவினைப் பாதுகாப்பதற்கு உதவி செய்து, கலாச்சார பாரம்பரியத்தினையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் ஒரு அங்கமாக தூதுவர் சங் உயர்த்தினார். அமெரிக்க-இலங்கை மூலோபாய பங்காண்மையினை பலப்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், பகிரப்பட்ட வரலாற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வழங்கும் தலைமைத்துவத்தினை இம்முயற்சிகள் பிரதிபலித்தன. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்த தூதுவர் சங்கின் பதவிக்காலத்தில் இடப்பட்ட பலமான அடித்தளத்தின் மீது இலங்கையுடனான தனது பங்காண்மையினைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துடனும் அதன் மக்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. ஒரு புதிய அமெரிக்கத் தூதுவர் வருகைதரும் வரை தூதரகத்தின் பிரதிப் பிரதானியான ஜேன் ஹொவெல் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகப் பணியாற்றுவார். இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்! | Virakesari.lk
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்!
07 Jan, 2026 | 02:26 PM இந்திய இராணுவத் தளபதி (Chief of the Army Staff) ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு இன்று புதன்கிழமை (7) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பல மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்! | Virakesari.lk
-
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! | Virakesari.lk
-
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:30 PM தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது. ஆனாலும் கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது. அத்துடன் இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா | Virakesari.lk
-
நுரை தள்ளும் காத்தான்குடி கடல் !
Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:57 PM காத்தான்குடி கடல் இன்று புதன்கிழமை (07) காலை முதல் வித்தியாசமாக வெள்ளை நிற நுரையைத் தள்ளி வருவதை அவதானிக்க முடிகிறது. அண்மையில் வடக்கில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்ததை போல இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது. சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை. ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது. பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது, இவ்வாறு அலைகளூடாக நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என தெரிவிக்கின்றனர். நுரை தள்ளும் காத்தான்குடி கடல் ! | Virakesari.lk
-
இவ்வாண்டின் முதல் நான்கு நாட்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
07 Jan, 2026 | 05:36 PM 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 33,076 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,065ஆகும். அத்துடன், ரஷ்யாவிலிருற்து 3,948சுற்றுலாப் பயணிகளும்,ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,914சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,862சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,790சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 1,658 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 1,137 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,362,521 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் முதல் நான்கு நாட்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை! | Virakesari.lk
- Today
-
அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
இக்கப்பலை ஐரோப்பிய கடற்பரப்பில் வைத்து அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கிறது. இதனை அமெரிக்கா அறிவித்திருப்பதுடன், ரஸ்ஸியாவும் இதனை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. இக்கப்பலைப் பாதுகாக்க நீர்மூழ்கிகளையும் கப்பல்களையும் ரஸ்ஸியா அனுப்பியிருந்த நிலையில், தனது நாட்டு நீதிமன்ற தீர்ப்பொன்றிற்கு அமைய இக்கப்பலை அமெரிக்கா கைப்பற்றியிருக்கிறது. வெனிசுவெலாவிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் எண்ணையினை ஏற்றிச் சென்று வந்ததாகவே இக்கப்பல்க் கம்பெனி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. US says it has seized tanker in Atlantic linked to Venezuelan oil - live updates - BBC News
-
அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி. அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர். தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்ததுடன், கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றினர். தற்போது இது உத்தியோகபூர்வமாக ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கப்பல் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையிலான வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கடும் குளிரிலும் மோசமான வானிலையிலும் பயணித்து வருகிறது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது கடல்சார் முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இக்கப்பலை மூழ்கடிப்பதை விட, அதைக் கைப்பற்றவே விரும்புகிறது. இதற்காக பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு சுமார் 10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சிறப்பு உலங்கு வானூர்திகள் வந்து சேர்ந்துள்ளன. கப்பலின் பெயர் மாறினாலும், அதன் தனித்துவமான அடையாள எண் மாறாததால், சர்வதேச சட்டப்படி அதைக் கைப்பற்ற தமக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது. சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யக் கொடியுடன் பயணிக்கும் கப்பலுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற நெருக்கடியைக் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது “கடல் வழிப் பயணச் சுதந்திரம்” பற்றிப் பேசும் நாடுகள், அதனைத் தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம், யுக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் நடக்கையில், மறுபுறம் நடுக்கடலில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது. https://athavannews.com/2026/1458682
-
அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம் ; பெண்களே விழிப்புடன் இருங்கள்
அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம் ; பெண்களே விழிப்புடன் இருங்கள் Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:25 PM எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் பொதுப் பிராலங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கலாநிதி சஞ்சன அத்தொட்டுவ தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தளம் மூலம் அனுமதியின்றி ஏனையவர்களின் படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான மற்றும் வன்முறையான உள்ளடக்கங்களை மிக இலகுவாக உருவாக்க முடியும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இலங்கையின் பெண் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இதுபோன்ற போலிப் படங்கள் உருவாக்கப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இது குறித்து சட்டரீதியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. எனவே தனிநபர்கள் தங்களின் டிஜிட்டல் தடயங்களைக் குறைத்துக்கொள்ளவும், சமூக வலைதளப் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் இலாபத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் ஒன்றாகும். எலோன் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோக் (Grok) ஏஐ தொழில்நுட்பம், பெண்களின் பொதுவெளிப் படங்களைப் பயன்படுத்தி பல்வேறு அச்சுறுத்தலான மற்றும் தரக் குறைவான உள்ளடக்கங்களை உருவாக்குகிறது. • படங்களை ஆயுதமாக்குதல்: இணையத்தில் பொதுவெளியில் கிடைக்கும் பெண்களின் படங்களை குரோக் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. கூகுள் தேடல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பிளிக்கர் (Flickr) போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் உள்ள படங்களை இது தரக் குறைவான செயற்கை உள்ளடக்கங்களாக மாற்றுகிறது. • ஆடைகளை நீக்குதல் (Nudification): குரோக்கில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் உள்ள ஆடைகளை டிஜிட்டல் முறையில் நீக்க முடியும். ஒரு பெண் புடவை, டி-சர்ட் அல்லது முறையான அலுவலக உடை அணிந்திருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவரை உள்ளாடைகளுடனோ அல்லது நிர்வாணமாகவோ குரோக் சித்தரிக்கிறது. • உடல் மாற்றங்கள் மற்றும் போலி வீடியோக்கள்: புகைப்படத்தில் உள்ளவர்களின் உடல் அமைப்பை மாற்றுதல் (குண்டாக அல்லது மெலிதாகக் காட்டுதல்) மற்றும் மார்பக அளவை மாற்றியமைத்தல் போன்ற அச்சுறுத்தலான செயல்களை இது செய்கிறது. மேலும், அந்தப் பெண்கள் செய்யாத செயல்களைச் செய்வது போன்ற குறுகிய போலி வீடியோக்களையும் இது உருவாக்குகிறது. • தனிப்பட்ட முறையில் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்: இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த ஆபாசமான அல்லது தரக் குறைவான உள்ளடக்கங்களை எக்ஸ் (X) தளத்தில் பொதுவெளியில் பகிராமலேயே, தனிப்பட்ட முறையில் உருவாக்கித் தரவிறக்கம் செய்ய முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே இத்தகைய படங்கள் உருவாக்கப்பட்டு, வட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பரப்பப்படலாம். • மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறை: இத்தகைய போலிப் படங்கள் பெண்களைப் பழிவாங்கவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் (blackmail/extortion) பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களைக் குறிவைத்து, அவர்களைப் பொதுவெளியில் பேசவிடாமல் முடக்குவதற்கும் அல்லது அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கும் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலகுவான விளக்கம்: குரோக் ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு டிஜிட்டல் மாயாஜாலக் கண்ணாடி போன்றது. ஆனால் இது உண்மையை மறைத்து, ஒருவரின் முறையான படத்தை எடுத்து, அவருக்குத் தெரியாமலேயே அவரை அவமானப்படுத்தும் வகையில் சிதைத்துக் காட்டுகிறது. ஒரு பாதுகாப்பான கேமராவாக இருக்க வேண்டிய தொழில்நுட்பம், இங்கு ஒருவரின் அனுமதியின்றி அவரது உருவத்தை மாற்றியமைக்கும் ஆபத்தான கருவியாக மாறியுள்ளது. குரோக் (Grok) போன்ற ஏஐ தொழில்நுட்பங்களால் பொதுவெளிப் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் முக்கிய பரிந்துரைகள் • டிஜிட்டல் தணிக்கை (Audit): உங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பொது டிஜிட்டல் தடயங்களை (digital footprint) உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இணையத்தில் பொதுவெளியில் உங்களைப் பற்றிய என்னென்ன படங்கள் கிடைக்கின்றன என்பதைச் சரிபார்த்து, உங்கள் தொழில்முறை கடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தவரை அவற்றை நீக்க வேண்டும் அல்லது அணுகுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். • கணக்குகளைத் தனிப்பட்டதாக்குதல் (Private Accounts): அங்கீகரிக்கப்படாத படப் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க, சமூக ஊடகக் கணக்குகளை 'பிரைவேட்' (Private) பயன்முறைக்கு மாற்ற வேண்டும்.. • விழிப்புணர்வுடன் இருத்தல்: கூகுள் தேடல் முடிவுகள், பொது பேஸ்புக் ஆல்பங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் கிடைக்கும் எந்தவொரு புகைப்படத்தையும் குரோக் போன்ற தளங்கள் தவறான சித்திரங்களை உருவாக்கப் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இணையத்தில் இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் அவை முறையாகச் சரிபார்க்கப்படும் வரை 'செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகத்துடனேயே அணுக வேண்டும். • ஆதாரங்களை ஆவணப்படுத்துதல் (Documenting Evidence): உங்களைப் பற்றிய போலி அல்லது ஆபாசமான ஏஐ படங்கள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை முறைப்பாடு அளித்து நீக்க முயற்சிக்கும் முன்பே, ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து ஆதாரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டும். • நிறுவனக் கொள்கைகள்: சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை எக்ஸ் (X) போன்ற தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அத்தகைய பாதிப்புகள் ஏற்படும்போது ஊழியர்களைப் பாதுகாக்கத் தெளிவான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். எளிமையான விளக்கம்: உங்கள் படங்களை இணையத்தில் பொதுவெளியில் வைப்பது என்பது, உங்கள் வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வது போன்றது. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்ற நிலை இருக்கும்போது, கதவைப் பூட்டி வைப்பதும் (Accounts private), உள்ளே இருப்பவற்றைச் சரிபார்ப்பதும் (Audit) மிக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகும். குரோக் ஏஐ 'மன்னிப்பு கேட்டது' என்று பரவிய தகவல்கள் தவறானவை மற்றும் திசைதிருப்பக்கூடியவை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்த முக்கிய விவரங்கள் இதோ: • AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி மன்னிப்பு: குரோக் தளம் எவ்விதமான அதிகாரப்பூர்வ மன்னிப்பையும் கோரவில்லை. இணையத்தில் வைரலான அந்த 'மன்னிப்புக் கடிதம்' ஒரு பயனர் குரோக்கிடம், "நடந்தவற்றை விளக்கி ஒரு உருக்கமான மன்னிப்புக் கடிதத்தை எழுது" (Write a heartfelt apology note...) என்று கட்டளையிட்டதால், அந்த AI தானாக உருவாக்கிய ஒரு பதிலாகும். • நிறுவனத்தின் மௌனம்: ஈலோன் மஸ்க்கோ அல்லது அவரது xAI நிறுவனமோ, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்ட பாதுகாப்புத் தோல்விகள் அல்லது பெண்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் குறித்து எந்தவொரு உண்மையான நிறுவன ரீதியான அங்கீகாரத்தையோ அல்லது மன்னிப்பையோ வழங்கவில்லை. • தவறான வாக்குறுதிகள்: பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்து வருவதாகவும் குரோக் வெளியிட்ட முந்தைய அறிக்கைகள் கூட செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. • சட்ட ரீதியான முரண்: சிறுமிகளின் ஆபாசப் படங்களை உருவாக்கியது ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என குரோக் அந்த ஏஐ கடிதத்தில் ஒப்புக்கொண்டாலும், அது ஒரு இயந்திரத்தின் பதில் மட்டுமே தவிர, நிறுவனத்தின் பொறுப்புணர்வு அல்ல. சுருக்கமாகச் சொன்னால், குரோக் வழங்கியதாகக் கூறப்படும் மன்னிப்பு என்பது ஒரு மென்பொருள் தனக்கு இடப்பட்ட கட்டளைக்காக உருவாக்கிய ஒரு உரை மட்டுமே. இது ஒரு தவறு செய்த நபர் மன்னிப்பு கேட்பது போன்றது அல்ல, மாறாக ஒரு கிளி தான் செய்த தவறுக்காக "மன்னிக்கவும்" என்று சொல்லக் கற்றுக்கொடுக்கப்பட்டுச் சொல்வதைப் போன்றது. அந்தச் சொல்லில் உண்மையான வருத்தமோ அல்லது பொறுப்பேற்போ இல்லை. இந்த அலட்சியம் இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது. நமது டிஜிட்டல் கல்வியறிவு போதியளவு இல்லாததால் தவறான தகவல்கள் பேஸ்புக், டிக்டொக் மற்றும் வட்ஸ் அப் போன்ற தளங்கள் ஊடாக வேகமாகப் பரவுகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட "நிர்வாண" படங்கள் பரவும்போது, அவை போலியானவை என்பதை நிரூபிக்க எந்த உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் மார்க்கமும் இல்லை, மேலும் சராசரி பார்வையாளருக்கு அவை உண்மையானதாகத் தோன்றும். நற்பெயர் மிகப்பெரிய எடையைக் கொண்ட ஒரு பழமைவாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இருப்பதை அறியும் முன்பே, அத்தகைய படங்கள் வாழ்க்கையை அழித்து குடும்பங்களை அவமானப்படுத்தக்கூடும். எனவே இது தொடர்பில் இலங்கை சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும். https://www.virakesari.lk/article/235444
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை! Jan 7, 2026 - 04:16 PM கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரித்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நாளை (8) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று (7) முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதையும் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmk3w7ugo03neo29nmzwz46ao/documents/WEatger.pdf https://adaderanatamil.lk/news/cmk3w7ugo03neo29nmzwz46ao
-
இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்?
இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்பம், பதற்றம், வயிற்றுப் புழு தொற்றுகள், பயணத்தின்போது ஏற்படும் வாந்தி எனப் பல விஷயங்கள் அவ்வப்போது நமக்கு பிரச்னை தரலாம். ஆனால், உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் அவற்றைச் சரிசெய்ய உதவுமா? அவற்றுக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் உண்டா? அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் இஞ்சி. இது குமட்டல் உள்படப் பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு காரமான பொருளாக உள்ளது. இது உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன? இஞ்சியால் குமட்டலை நிறுத்த முடியுமா? இதன் பின்னுள்ள அறிவியல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் இஞ்சி பலருக்கு குமட்டல் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறுகின்றன. பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் குமட்டலுக்கு இஞ்சி கலந்த தேநீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால் இஞ்சி எப்படி இதைச் செய்கிறது? "இதற்குக் காரணம் அதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள்தான். இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதன் மூலம் அசௌகரியத்தை போக்கி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது" என்று உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவியல் சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ் விளக்குகிறார். பல ஆய்வுகள் இஞ்சி மாத்திரைகளில் கவனம் செலுத்தி இருந்தாலும், இஞ்சி பிஸ்கட், இஞ்சி சிரப், இஞ்சி தேநீர் ஆகியவற்றின் செயல்திறனை ஆராயும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இஞ்சி குமட்டல் அறிகுறிகளைக் குறைத்துள்ளதைக் காட்டியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார் பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் இஞ்சியால் ஏற்படும் நன்மைகள் இஞ்சி குமட்டலுக்கு உதவுவது மட்டுமின்றி, பிற உடல்நலப் பிரச்னைகளிலும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா? உதாரணமாக, அழற்சியைப் போக்குவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது போன்றவற்றை அது செய்கிறதா? உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை 'வலுப்படுத்தும்' ஓர் அதிசயப் பொருள் என்று எதுவும் இல்லை. உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கிய ஆரோக்கியமான, சமச்சீர் உணவைப் பின்பற்றுவது முக்கியமென வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருப்பதால், சில பொருட்கள் அதற்கு உதவக்கூடும். இஞ்சி அத்தகைய பொருட்களில் ஒன்று என டேனியல்ஸ் நம்புகிறார். "இஞ்சியில் ஜிஞ்சரால் போன்ற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் உள்ளன. இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. சிறிய அளவு, அதாவது ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு பூண்டுப் பல் அளவு, உங்களுக்குப் பல நன்மைகளை வழங்கும்," என்கிறார் அவர். "அதிலுள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்களால், இஞ்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்," என்று அவர் விளக்கினார். அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளை எடுத்துக்காட்டும் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவேளை தன்னுடல் தாக்க நோய்கள் (நோயெதிர்ப்பு மண்டலம் உடலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான செல்களை தவறாகத் தாக்கும் நிலை) உள்ளவர்களுக்கு இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கலாம். கொலராடோ பல்கலைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு, இது உடலில் ஏற்படும் அழற்சியில் இருந்து பாதுகாக்க உதவும் என்று பரிந்துரைக்கிறது. பட மூலாதாரம்,Getty Images இத்தகைய அறிகுறிகளுக்கு ஒரு நிவாரணியாக மக்கள் ஏற்கெனவே இஞ்சியை எடுத்துக் கொண்டிருப்பதே, பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் இந்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்ததற்கான காரணம். "தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்ட எனது நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இஞ்சி உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை ஆராயும் ஆய்வுகள் அதிகம் இல்லை." "எனவே, நியூட்ரோபில்ஸ் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை அழற்சி செல்களில் அதன் விளைவைப் பார்ப்பதன் மூலம் இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை நாங்கள் ஆராய விரும்பினோம். முடக்கு வாதம், லூபஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற பல தன்னுடல் தாக்க நோய்களில் நியூட்ரோபில் செல்கள் அதிகப்படியாகச் செயல்படக்கூடும்." மனித உடலில் அதிகப்படியான நியூட்ரோபில்களை இஞ்சியால் கட்டுப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யும் முதல் ஆய்வு எங்களுடையதுதான். இஞ்சியால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட அழற்சி செல்லை எங்களால் நிரூபிக்க முடிந்ததால், இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் எந்தெந்த மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய எங்கள் கண்டுபிடிப்புகள் உதவும். இதன்மூலம், சில தன்னுடல் தாக்க நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க இஞ்சி உதவக்கூடும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், "எங்கள் ஆய்வில் இஞ்சி சத்து மாத்திரை பயன்படுத்தப்பட்டது. அதே மாதிரியான விளைவை, இஞ்சி தேநீர் அல்லது வெறும் இஞ்சி கொண்டிருக்குமா என்பதை அறிவது கடினம். ஏனெனில் பொதுவாக சத்து மாத்திரைகளுடன் ஒப்பிடும்போது இந்த வகைகளிலான இஞ்சி நுகர்வுகள் மூலம் உடலில் அதன் செறிவு குறைவாக உள்ளது," என்று டெமோரூயல் விளக்குகிறார். "எதிர்கால ஆய்வுகளில் தேநீர் மற்றும் உணவுகளில் உள்ள இஞ்சியின் விளைவையும் ஆராய்வது முக்கியம். ஏனெனில் இது முக்கியமானதாக இருக்கலாம். எங்கள் ஆய்வில் தன்னுடல் தாக்க நோய் இல்லாதவர்களும் சேர்க்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது." "தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும், குறிப்பாக முடக்கு வாதம், லூபஸ், வாஸ்குலிடிஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற அதிகப்படியான நியூட்ரோபில்கள் இருப்பதை வைத்து வகைப்படுத்தப்படும் தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும் இதேபோன்ற விளைவுகளைக் காண்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த ஆய்வுகளை நாங்கள் இன்னும் விரிவாகச் செய்ய வேண்டியுள்ளது." பட மூலாதாரம்,Getty Images இஞ்சி வலி நிவாரணியாக செயல்படுமா? "இஞ்சிக்கு வலி நிவாரணிப் பண்புகளும் உள்ளன. அது தசை வலி, புண் ஆகியவற்றைத் தணிக்க உதவும்" என்கிறார் டேனியல்ஸ். உடற்பயிற்சியால் ஏற்படும் தசை வலியில் கவனம் செலுத்தும் ஆய்வுகளால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஆய்வின்படி, இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவு தீவிர உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு ஏற்படும் தசை வலியைக் குறைக்கும். மற்றோர் ஆய்வில், உடல் வலிமைப் பயிற்சி(Strength training) செய்தவர்கள் பச்சை இஞ்சி அல்லது சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை எடுத்துக் கொள்வது தசை வலியைக் குறைக்கிறதா என்று ஆராயப்பட்டது. இஞ்சியால் கிடைக்கும் பிற நன்மைகள் "இஞ்சி கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இதற்கு இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்" என்கிறார் டேனியல்ஸ். இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ இந்தக் கூற்றுகளை ஆராய்ந்துள்ளார். "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசியாவின் அன்றாட சமையலிலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் இஞ்சி முக்கியமானதாக இருந்து வருகிறது. உணவுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பதுடன், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், இரைப்பைக் குடல் அசௌகரியம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்துமா, அஜீரணம் உள்படப் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ ஃபாலிகோவின் ஆய்வு விரிவானதாக இருந்தது. இஞ்சியின் 'உயிரியல் ரீதியாகச் செயல்படும் கூறுகளை' ஆராய்ந்து, அவை உண்மையில் உடல்நலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றனவா என்பதை அவர் அறிய விரும்பினர். "ஜிஞ்சரால் என்பது இஞ்சியில் உள்ள ஒரு சேர்மமாகும். இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார். "உயிரியல் ரீதியாகச் செயல்படும் மற்றுமொரு சேர்மம் '6-ஷோகோல்'. இதுவும் அழற்சி எதிர்ப்பு, புண் எதிர்ப்பு, புரோஸ்டாக்லாண்டின் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஊடுருவல் எதிர்ப்பு போன்ற பல மருந்தியல் மற்றும் சுகாதாரப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, இதுவொரு சக்தி வாய்ந்த சளி நீக்கி அல்லது திசு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்." இது தொடர்பாக மனிதர்களிடையே பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இஞ்சி உங்கள் அனைத்து மருத்துவப் பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாமென ஃபாலிகோ எச்சரிக்கை விடுக்கிறார். "இஞ்சி தொடர்பாக இரண்டு விஷயங்களில் நான் உறுதியாக உள்ளேன். முதலாவதாக, ஓர் உணவுப் பொருளின் லேபிளில் இஞ்சியின் படம் இருப்பதாலேயே அந்தப் பொருளால் பயன் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. இரண்டாவதாக, நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துவிட்டு, அதை இஞ்சியைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஞ்சியின் நன்மைகளை முழுமையாகப் பெற விரும்பினால் அதைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார் இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்? "இஞ்சியை உரிக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார் தி குட்னஸ் ஆஃப் ஜிஞ்சர் அண்ட் டர்மரிக் என்ற சமையல் புத்தகத்தின் ஆசிரியரான எமிலி ஜோன்சென். "அதன் தோலை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்து, உங்கள் விருப்பப்படி நறுக்கிக் கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார். உணவில் புதிதாக இஞ்சியை சேர்த்துக் கொள்பவர்களாக இருந்தால், "அதற்கு வலுவான சுவையும் காரத்தன்மையும் உள்ளது. எனவே அதை உங்கள் சமையலில் சிறிது சிறிதாகச் சேர்க்கத் தொடங்குங்கள்" என்று ஜோன்சென் அறிவுறுத்துகிறார். "முதலில் அதை ஒரு பானத்தில் முயன்று பாருங்கள்; ஒரு குவளையில் சிறிது இஞ்சியைத் துருவி, ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதன் மீது சூடான நீரை ஊற்றினால், ஒரு சுவையான, இதமான பானம் தயார்." அதன் பிறகு, அதை வதக்கிய காய்கறிகள், சாப்பாடு வகைகள் போன்ற பிற உணவுகளில் சேர்க்கத் தொடங்கலாம். இஞ்சியைப் பயன்படுத்தி சமைக்கும்போது அதன் மருத்துவ பலன்களை முழுமையாகப் பெற விரும்பினால், அதைச் சிறிய துண்டுகளாக நறுக்குமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார். "இது செல் சுவர்களை உடைத்து, அதன் சத்துகளை எளிதில் உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. எனவே, துருவிய அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சியை தேநீரில் சேர்ப்பது நல்லது." இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான மற்றும் சில வழிகளையும் அவர் பரிந்துரைக்கிறார்: "துருவிய இஞ்சி, ஆலிவ் எண்ணெய், வினிகர், தேன், ஒரு சிட்டிகை சோயா சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சாலட் டிரஸ்ஸிங் தயாரிக்கலாம் அல்லது பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சியை நிறைய காய்கறிகள் மற்றும் கடல் உணவு, மீன், கோழி அல்லது டோஃபு போன்ற கொழுப்பற்ற புரதங்களுடன் சேர்த்து வதக்கிய உணவுகளில் சேர்க்கலாம்." "கருப்பு மிளகு மற்றும் மஞ்சளில் முறையே பைபரின் மற்றும் குர்குமின் எனப்படும் இயற்கைச் சேர்மங்கள் உள்ளன. இந்தச் சேர்மங்கள் இஞ்சியின் சத்துகளை உடல் சிறப்பாக உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. இதன்மூலம் உடலுக்கு இஞ்சியில் இருந்து அதிகப் பலன் கிடைக்கிறது. எனவே இந்த மூன்றையும் ஒரு சூடான பானத்தில் சேர்ப்பது, இஞ்சியின் பயன் திறம்படக் கிடைப்பதற்கு உதவும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw143gd5djo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
கிரீன்லாந்தை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடல் Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:26 PM கிரீன்லாந்து நாட்டை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது "தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் " என வெள்ளை மாளிகை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஐரோப்பியத் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் "அமெரிக்கா தனது நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்தினால், நேட்டோ கூட்டமைப்பு அங்கேயே முடிவுக்கு வரும்" என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) கருத்து தெரிவிக்கையில், "கிரீன்லாந்து ஒன்றும் விற்பனைக்குரிய பொருள் அல்ல; இது எமது தாயகம். ஆக்கிரமிப்பு என்ற கற்பனைகளை அமெரிக்கா கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 57,000 பேரை கொண்ட கிரீன்லாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் விரிவான சுயாட்சியைக் கொண்டுள்ளது. எனினும், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கை டென்மார்க் கைகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235449