Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ 11 Jan, 2026 | 12:30 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுவதுடன், 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது இரண்டு நாள் பயணத்தின் போது, வோங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக நீடிக்கிறது. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்கு இந்தக் கப்பல் விவகாரமே பிரதான காரணமாகக் கருதப்படும் நிலையில், வோங் யீயின் வருகையின் போது இவ்விடயம் குறித்து எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/235736
  3. மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு 11 Jan, 2026 | 12:20 PM தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படுவதாக மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சிரேஷ்ட உறுப்பினர் ஜூவரட்ணம் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், இடம் பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானோர் தங்கியுள்ள மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அத்தகைய முன்னேற்றம் காணப்படவில்லை. ஏற்கனவே நிலவும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இம்மக்கள் அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களை அணுகுவதில் போதிய கொள்கைத் தெளிவின்மை, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அனுபவக்குறைவு போன்றவை பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிலத்திற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் மற்றும் வீடமைப்பிற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவியை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உடனடியாகத் தெளிவுபடுத்துவதோடு, நிலங்களை அடையாளம் காண்பதற்கும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் பல்தரப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். மேலும், தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்திய வீடமைப்புத் திட்டத்தைப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அபாயகரமான இடங்களுக்குத் தள்ளாமல் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் பாதுகாப்பான நில உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235734
  4. Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 11 Jan, 2026 | 11:37 AM முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் - படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை (10) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எண்ணக்கருவை நனவாக்கும் வகையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து 900 முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களுக்கு சிறுவர்களின் அடையாளம் காணப்பட்ட பத்து ஆளுமைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் கருவிகள் மற்றும் சிறப்பு வள கருவிகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் மாகாண ஆளுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/235729
  5. 2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல் 11 Jan, 2026 | 04:12 PM (எம்.மனோசித்ரா) யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் சுமார் 2,200 காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 2016ஆம் ஆண்டு மரண சான்றிதழ் வழங்கும் சட்ட திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களே வழங்கப்பட்டதாகவும் பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது : யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010இல் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010ஆம் ஆண்டு 10ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தற்காலிக ஏற்பாடுகள் மரணங்களைப் பதிவு செய்தல் சட்ட திருத்தம் அக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு தற்காலிக சட்ட ஏற்பாடுகளுக்கமைய, யுத்தத்தின் போது மாத்திரமின்றி, இயற்கை மரணம், யுத்த மோதல்கள், சிவில் கலவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதலே வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் சட்ட திருத்தத்தின் ஊடாக காணாமல் போனமைக்கான சான்றிதழ் (Certificate of Absence) வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் 2016இல் நிறுவப்பட்டது. சட்ட திருத்தத்துக்கமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைக்கமைய பதிவாளர் திணைக்களத்தினால் காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்க முடியும். வழமையான மரண சான்று பதிவு சட்டத்தின் கீழ் மரணத்தைப் பதிவு செய்வதற்கு மரணித்த நபர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு, அதனை உறுதிப்படுத்துவதற்கு நபரெர்ருவர் முன்னிலையாக வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து மரண சான்றிதழ் வெளியிடப்படும். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் இதுவரையில் 2,200க்கும் மேற்பட்டோருக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 300ஐ தவிர ஏனைய அனைத்தும் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இராணுவ மரணங்களும் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1951ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் 39 - 4 ஆ உறுப்புரைக்கமைய அவசர கால சட்டத்தின் கீழ் மரண பதிவு தொடர்பில் பதிவாளர் நாயகத்துக்கு விசேட அதிகாரம் உரித்தாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 24,808 இராணுவ மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (1990-12-12 முதல் 2017-05-29 வரை) காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். எனினும் காணாமல் போனோர் அலுவலகம் மக்கள் மத்தியில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் போனோர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளும். அதனை அடிப்படையாகக் கொண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் சான்றிதழ் வழங்கப்படும். இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்கும் போது எமது திணைக்களத்துக்கு நபர்கள் வருவதில் குறைபாடுகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதாவது அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கமைய எம்மால் சான்றிதழ்கள் வழங்கப்படாமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் நடமாடும் சேவையை முன்னெடுக்கும் போது, எமது திணைக்களத்தின் பதிவாளர் அதிகாரியொருவர் அங்கு சேவையில் இணைக்கப்பட்டு பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் காணாமல் போனோர் அலுவலகம் - பதிவாளர் திணைக்களத்துக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களுக்கிடையிலான இடைவெளியை இனங்கண்டு அதனை சமப்படுத்துவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235767
  6. இந்தியாவினை அன்று ஆட்சிசெய்த தலைமையினால் எம்மீது நடத்தப்பட்ட கொடுமைகள் பற்றிப் பேசுவதும், நீதிகேட்பதும் இந்தியாவையே எதிர்ப்பதாக அமைகின்றது என்று எப்படி முடிவுசெய்தீர்கள்? அப்படியானால் நாம் எமக்கு நடந்தவைக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதுதானே உங்கள் முடிவாகிறது? இதையேதான் இலங்கை அரசாங்கத்தின் அன்றைய கால தலைமைப்பீடத்திற்கும் பொருந்தும் என்றும் கூறுவீர்களா?
  7. இதனை ஏன் கூறினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நல்ல மனிதர் என்று எப்படி முடிவுசெய்தீர்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை எம்மை அழித்தவர்கள் நிம்மதியாக வாழவோ அல்லது அமைதியான வழியில் மரணிப்பதையோ நான் விரும்பவில்லை. அவர்களின் குற்றங்களுக்கான தண்டனையினை அவர்கள் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும், ஏதோ ஒரு வகையில். அதிலும் குறிப்பாக ஒரு இனத்தின் இருப்பையே நிர்மூலமாக்கிவீட்டுச் செல்பவர்கள் தமக்கான தண்டனையினை அனுபவிக்கவேண்டும். இதனைக் கூறுவதால் நான் கெட்ட மனிதன் என்று ஆகுமானால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது எப்போது நடந்தது? அமெரிக்கா இதனை யாரிடம் தெரிவித்திருக்கிறது? தமிழர் பற்றி அமெரிக்கா திடீரென்று அக்கறை கொள்வது ஏன்? இதனை எப்படி அறிந்துகொண்டீர்கள்?
  8. அழுந்திச் சாதல் என்பதன் மூலம் நான் சொல்ல வந்தது சாகும் தறுவாயிலாவது தான் ஈழத்தமிழருக்குச் செய்த கொடுமைகளை நினைத்துக் கொண்டு சாகவேண்டும் என்பதுதான். அதைவிடுத்து சாதாரண மரணம் என்பது கூடாது என்பதே எனது எண்ணம். அடுத்தது, தான் செய்த கொடுமைகளுக்கான தண்டனையினை அவர் வாழும் காலத்தில் அனுபவிக்கவேண்டும். அவர் சாகும் முன்னர் இது நடக்கவேண்டும். இவருக்கெதிரான வழக்குகள் பதியப்பட்டு இவரது குற்றங்களுக்கான தண்டனை கிடைக்கவேண்டும். இதுவே நான் விரும்புவது. உதாரணத்திற்கு ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமலும், கைதுசெய்யப்படாமலும் உலகின் ஏதோ ஒரு மூலையில், வயது முதிர்ந்து மரணிக்கும் தறுவாயினை எட்டுகிறான் என்று ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட அவனை, "வயது முதிர்ந்த ஒரு மனிதனை அழுந்திச் சாகு என்று கூறுவது சரியில்லை" என்றுதான் சொல்வீர்களோ? நீங்கள் மிகச் சிறந்த மனிதாபிமானியாக இருக்கலாம், என்னால் அப்படியிருக்க முடியாது. ஒற்றை மனிதனின் மரணத்திற்காக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்றும், அவர்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்தும் பழிவாங்கிய ஒருவரை சாதாரணமாக "வயது முதிர்ந்த மூதாட்டி" என்று கருணை காட்ட என்னால் முடியவில்லை. அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீங்கள் சென்று கூறிப்பார்க்கலாம். ஒருவர் வயது முதிர்ந்துபோவதால் மட்டுமே அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா என்ன?
  9. Today
  10. தனிநாடு என்பது எமது சிந்தனை வட்டத்திற்குள் இருந்து காணாமற்போய் பல வருடங்கள் கடந்துவிட்டது. எம்மில் எவரும் இப்போது தனிநாடு பற்றி யோசிப்பதில்லை. எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்கிற அவலமான நிலையில் நாம் இருப்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அதனை ஏன் செய்யவேண்டும்? புலிகளை முற்றாக அழித்தபின்னர், தமிழருக்குக்கான நியாயமான தீர்வினை நான் வழங்குவேன் என்று மகிந்த எம்மிடம் வாக்குறுதி அளித்தார், நாமும் அதனை நம்பியே போருக்கான உதவிகளைப் புரிந்தோம், ஆனால் போர் முடிந்தபின்னரோ மகிந்த எம்மை ஏமாற்றிவிட்டார் என்று தாமே முன்னின்று நடத்திய இனக்கொலையினை பசப்பு வார்த்தைகளால் அன்று மூடி மறைத்த காங்கிரஸ் கட்சி, தான் பதவியில் இருந்து விரட்டப்படும்வரை குறைந்த பட்சத் தீர்வான 13 ஆம் சட்டத் திருத்தத்தைத்தன்னும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அப்படியிருக்கையில் இனிமேல் அதனைச் செய்யும் என்று எப்படி நம்புகிறீர்கள்? குறிப்பாக ஈழத்தமிழர் மீது இன்றுவரை, அடிமட்டத் தொண்டன் முதல் கட்சியின் தலைமைவரை தனிப்பட்ட ரீதியில் பகையுணர்வு பாராட்டும் காங்கிரஸ் கட்சி எதற்காக எமக்கான தீர்வைத் தர விரும்புகிறது? அதனைச் செய்யவேண்டிய தேவை அதற்கு ஏன் வருகிறது? இல்லை. உண்மையாகவே நீங்கள் ரஸ்ஸிய அபிமானி என்று நாம் நம்புகிறேன். அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி இந்தியா இன்றுவரை ரஸ்ஸியாவின் எண்ணையினையும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. அதாவது ரஸ்ஸியாவுடன் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை இந்தியா கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்தியாவுடன் பகைக்கவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று எழுதினேன். மற்றையவர்களுக்கு எழுதிய கருத்தில் உங்களை மேற்கோள் காட்டியதன் காரணம் உங்களின் சிந்தனையினை மற்றையவர்களுக்கும் அறியத்தரவே. இதில் குழுச்சேர்ப்பு இடம்பெற்றிருப்பின், அதனையும் மறுக்கவில்லை.
  11. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகப்போகும் நட்பு எவ்வாறு ஈழத்தமிழருக்கு உதவியாக அமையும்? அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகப்போகும் நட்பு எமக்கு எந்தவிதத்தில் உதவும் என்று கருதுகிறீர்கள்? 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்கிறது என்பதற்காகவே இந்திரா அம்மையார் ஈழத்தமிழருக்கு உதவ முன்வந்தார், அதுகூட இந்தியாவின் நலன்களுக்காக மட்டும்தான், ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக இல்லை என்பது எமக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் எதிரும் புதிருமாக இருந்த காலத்தில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எமக்கு உதவ வேண்டும் என்கிற அழுத்தம் அன்று இருந்தது. ஆனால் அமெரிக்காவோ இன்று இந்தியாவுடன் நட்புப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறபோது, எமக்கு உதவ வேண்டும் என்கிற தேவையோ அழுத்தமோ காங்கிரஸின் இந்தியாவிற்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சரி, இந்தியா வழங்கப்போவது இல்லை, ஆனால் அமெரிக்காவே தீர்வை வழங்கும் என்று நீங்கள் கருதினால், அது எப்படி நடக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எமக்கான தீர்வை அமெரிக்கா ஏன் வழங்க விரும்புகிறது? அதற்குப் பிரதியுபகாரமாக அமெரிக்கா எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறது?
  12. ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன. ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன. “உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார். ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை. தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள். ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு. அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது? ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார். இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்? ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு. கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது. https://athavannews.com/2026/1459414
  13. ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன. ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன. “உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார். ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை. தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள். ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு. அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது? ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார். இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்? ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு. கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது. https://athavannews.com/2026/1459414
  14. கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன. அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர். இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது. மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின. அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்" பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல் அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love, or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை. கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது. மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது. உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை. ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது. மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக. கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்]. அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம். தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்.. உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும் ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும் உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான் உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது உண்பது நாழி உடுப்பவை இரண்டே உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
  15. முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
  16. பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்றும் விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459396
  17. தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். https://athavannews.com/2026/1459391
  18. ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்! பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1459342
  19. சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா! பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர். இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது. சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது. https://athavannews.com/2026/1459360
  20. ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைரா பகுதியில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459368
  21. ட்ரம்பு தான்.... நோபல் பரிசு தனக்கு வேணும் என்று, அடம் பிடிக்கிறான் சார்.
  22. 2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு! Published By: Digital Desk 1 11 Jan, 2026 | 10:03 AM இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வருடம் ஏழு முக்கிய பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின்படி, இந்த ஆண்டின் முதல் பரீட்சையானது 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும். இது 2026 ஜனவரி 11ஆம் திகதி நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சையின் (General Certificate Of Education Advanced Level)மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும். 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும். 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஒகஸ்ட் 9ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும். 2027ஆம் ஆண்டு, முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை(GIT) 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும். இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235715
  23. நோபல் பரிசை யாருக்கும் மாற்ற முடியாது! ; மச்சாடோ கருத்துக்கு நோபல் நிறுவனம் அதிரடி பதில் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 10:37 AM வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு நேர்காணலில் சூட்சுமமாக தெரிவித்தார். இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே நோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ சட்டப்படி இடமில்லை. நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, விருது குறித்த தீர்மானம் இறுதியானது மற்றும் நிலையானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. விருது பெற்றவர்கள் அதன் பின்னர் செய்யும் செயல்கள் அல்லது அவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து நோபல் குழு எந்தவித விமர்சனமும் செய்யாது. மச்சாடோவிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பரிசைப் பெறுவது தனக்குப் பெருமை அளிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் வொஷிங்டனில் இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், நோபல் நிறுவனத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நோபல் குழுவின் விதிகளின்படி அந்த கௌரவம் அவருக்கு மட்டுமே உரியது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235724

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.