Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எம் ஐ 6….. சி ஐ ஏ… ரோ… மொசாட் எல்லாம் இறங்கி இருக்கான் …. யாழ்பாணத்தில ஒத்தை சீட் எடுத்த கட்சியை உடைக்க 😂
  3. பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர். குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான "கொல்களம்" இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு, அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237366
  4. Today
  5. தாதியர் விடுதி Jan 27, 2026 - 06:13 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன. இதில் தாதியர் விடுதியானது 8 அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் திருத்தப் பணிகள் இடம்பெற்ற இந்த தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை திறப்பு விழாவானது இன்று காலை 7.30 மணிக்கு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர், வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் காயன், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/top-picture/cmkwl84ql04hzo29nc7h66128
  6. சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் Jan 29, 2026 - 08:31 PM சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் மனித வள முகாமைத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmkzl13tk04l2o29nrcvxhnro
  7. US-ஆல் மத்திய கிழக்கில் பதற்றம்; இரானை தாக்கினால் என்ன நடக்கும்? அமெரிக்கா இரானை தாக்க தயாராக இருப்பதுபோலத் தெரிகிறது. எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது கணிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும்? #Iran #America #Trump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  8. IMF குழு மீண்டும் இலங்கைக்கு! Jan 29, 2026 - 01:16 PM இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார். 'டித்வா' புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார். "நிதியியல் துறையின் வருமானத்தை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துதல் என்பன வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும். இரண்டாவது தூண் கடன் நிலைத்தன்மையை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும். நான்காவது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது குறித்துப் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்தபோதிலும், இன்று அது 14.8% வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்ட முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தை அமைக்கிறது. விலைகளைக் கருத்திற்கொள்ளும் போது, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது பணவீக்கம் 70% என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டது. இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியின் இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடையும்." இதேவேளை, 'டித்வா' புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ கூறினார். "இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும்." https://adaderanatamil.lk/news/cmkz5h9am04kmo29nc4h73hj8
  9. மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு 29 Jan, 2026 | 03:40 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும்பணி புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர். அப்பகுதியிலுள்ள சுமார் 150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/237340
  10. 'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன? பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 29 ஜனவரி 2026, 03:21 GMT "கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்." மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை. கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் விவரம் என்ன? பிபிசி தமிழிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன? மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இதே தாலுகாவில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.பி.பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிகக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "மலை சார்ந்து பாரம்பரியமான புனிதத் தலமாக அழகர் கோவில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பெருமாள் போல தென் மாவட்டத்திற்கான ஏழுமலையானாக கள்ளழகரைப் பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார், வழக்கு தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"கடந்த ஆண்டு ஆடித் திருவிழாவின்போது தங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தின்போது மேலூரில் வடக்குத் தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு, பாளையப்பட்டு என நான்கு தெருக்களைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து தேரை இழுக்கின்றனர். இவ்வாறு தேர் வடம்பிடித்து இழுக்கும் உரிமையைப் பெற்றுள்ளவர்களை 'நாட்டார்' என அழைக்கின்றனர். இந்த நாட்டாரில் ஒருவராக வழக்குத் தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு இருக்கிறார். "ஆடித் திருவிழாவின்போது வண்டி, மாடுகளைக் கட்டிக் கொண்டு கள்ளழகரை தரிசிப்பதற்கு மக்கள் வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு எங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் அவர். 'தீர்த்தம் ஆட முடியாத நிலை ஏற்படும்' கட்டுமானப் பணிகள் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் ஏ.வி.பி.பிரபு, "கோவில் அமைந்துள்ள மலையின் பசுமை மாறாமல் இருக்க வேண்டும். ஆனால், அதைக் கெடுக்கும் விதத்தில் கோவில் நிதியைத் தேவையற்ற வழியில் பயன்படுத்துவதை அறிந்தோம்" என்றார். ஆடித் தேரோட்டத்தின்போது 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வரும் மக்கள் அங்குள்ள பரந்த காலியிடத்தில் நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறும் அவர், "அந்த இடத்தில்தான் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்" என்றார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று கள்ளழகர் கோவிலின் துணை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகங்கள், கடைகள், கழிப்பறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உள்ளதாகவும் உத்தரவில் கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஏ.வி.பி.பிரபு, "கோவில் வளாகத்தில் தங்கும் விடுதி என்ற பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தை அறநிலையத் துறை திறந்து வைத்துவிட்டது" என்றார். "பக்தர்கள் தீர்த்தமாடும் நீரை மறுசுழற்சி செய்கின்றனர். அது புனித தீர்த்தமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்வதை ஏற்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். "இதுபோன்று கட்டடங்களைக் கட்டிவிட்டால் தீர்த்தமாடக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும், மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்." இதுதொடர்பாக கள்ளழகர் கோவிலின் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அவர் கொடுத்துள்ளார். "என்னுடைய புகாரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'திசை திருப்பப்பட்ட நிதி' கள்ளழகர் கோவில் தொடர்பான இரண்டு மனுக்களையும் இணைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் வாதத்தில் மனுதாரர் ஏ.வி.பி.பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், கோவில் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 135ஐ சுட்டிக்காட்டி வாதிட்டார். மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முதலில் 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பிறகு 40 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதாக வாதிட்ட எம்.ஆர்.வெங்டேஷ், "மேம்பாடு என்ற பெயரில் கணிசமான அளவு கோவில் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக திசை திருப்பி விடப்பட்டுள்ளது" எனக் கூறினார். "அரசாணையின் அடிப்படை தவறானது" எனக் குற்றம் சாட்டிய அவர், "கோவிலின் பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் நடப்பு வரவுகளில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டுமென அறநிலையத் துறை சட்டம் கூறுகிறது. உபரி நிதியில் இருந்து அல்ல" எனத் தெரிவித்தார். இதற்கு மாறாக, கள்ளழகர் கோவில் நிதியை சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியதால் அவை குறைந்துவிட்டதாக அவர் வாதிட்டார். "நிதிநிலை அறிக்கைகளைக் கவனித்தால் எந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் கோவில் நிதி செலவிடப்படுகின்றன என்பது தெரிகிறது" எனவும் அவர் வாதிட்டார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'இது தெய்வக் குற்றம்' வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. "கள்ளழகர் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாமல் உபரி நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நிதியை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது" எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவில் நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். அதோடு, "2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கள்ளழகர் கோவிலின் உபரி நிதி 96 கோடியே 60 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 107 கோடியே 60 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், 2024 மார்ச் மாதத்தில் இந்தத் தொகை சுமார் 62 கோடியே 37 லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். "இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், "சட்ட அதிகாரமின்றி இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வக் குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்" எனக் கூறியுள்ளனர். அது தவிர, கோவில் நிதி எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "தணிக்கை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இரண்டு வாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அரசே தொகையைக் கொடுக்க வேண்டும்' கோவில் வளாகத்தில் அக்னி புஷ்கரணி பகுதிக்கு அருகில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "இதுபோன்ற கட்டுமானத்தால் அக்னி புஷ்கரணி பாதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்தனர். "அக்னி புஷ்கரணிக்கு அருகில் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைக்கக் கூடாது. இந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காகச் செலவிடப்பட்ட தொகையை கோவிலுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி வழங்க வேண்டும்" என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். "கோவில்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித அனுமதிகளும் பெறவில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "உரிய ஒப்புதல் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம்" என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "கோவிலில் முன்மொழியப்பட்ட சில கட்டடங்கள், இந்திய தொல்லியல் கழகத்தால் பாதுகாக்கப்படும் கட்டடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது" என மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் வாதிட்டார். "கட்டுமானங்களுக்கு இந்திய தொல்லியல் கழகத்தின் அனுமதி பெறப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் நாயக்கர் மஹால் போன்ற தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் கட்டுமானம் நடைபெற்றுள்ளதை தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். "இந்தக் கட்டுமானங்கள் உடனே அகற்றப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தீர்ப்பில் பதிவு செய்துள்ள நீதிபதிகள், "உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அறங்காவலர்களே முடிவு செய்ய வேண்டும்' நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறுகிறார், மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அறங்காவலர்கள் இல்லாமல் செயல் அலுவலர்கள் மூலமாகவே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை" என்றார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், "கோவில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அறங்காவலர்கள் முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு கூறுகிறது" எனக் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, "கோவிலின் ஆண்டு நிதிநிலை விவரம், உபரிநிதியை எவ்வாறு செலவு செய்வது, பக்தர்களின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் செலவு செய்யக்கூடிய பணம் என ஒவ்வொன்றுக்கும் விதிகளின்படி செலவு செய்வது குறித்து அலசி ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது." கள்ளழகர் கோவிலுக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் தனித்தனியாகச் சென்று பார்வையிட்டதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "அங்குள்ள கட்டுமானங்களை அவர்கள் கவனித்துள்ளனர். இவற்றில் பல கட்டுமானங்கள் அவசியமற்றவை எனக் கூறியுள்ளனர்" என்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வணிகக் கட்டடங்களை கட்டுவதற்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட மூலாதாரம்,SekarBabu/FB படக்குறிப்பு,தீர்ப்பு இரண்டு விதமாக வந்துள்ளதாகக் கூறுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு 'மூன்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள்' திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வணிக வளாகம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துகுமாரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. இவற்றில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டது. இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, 'கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டப்பட்டு வருகின்றன' எனக் கூறினர். அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்" என வாதிட்டார். இந்த வழக்கில், "கட்டடங்களை பக்தர்களின் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்ட நீதிபதிகள், "கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக்கூடாது மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர். இதுகுறித்துப் பேசியபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் நிதியில் கட்டடம் கட்டும் பணிகளை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக" கூறுகிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கோவிலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிய டி.ஆர்.ரமேஷ், "செயல் அலுவலர்கள் மூலமாக இதைச் செயல்படுத்துகின்றனர். இனி இதுபோன்று மேற்கொள்ள முடியாது என்பதை கள்ளழகர் வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது" என்றார். 'சட்டரீதியாக விவாதிக்க வேண்டும்' - அமைச்சர் சேகர்பாபு கள்ளழகர் கோவில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "இரண்டு விதமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. சில கட்டுமானங்களை மேற்கொள்ளுமாறு கூறுகின்றனர். அறங்காவலர் குழுவை அழைத்து விவாதிக்காமல் செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். தீர்ப்பில் உள்ள விவரங்களை சட்டரீதியாக விவாதிக்க வேண்டியுள்ளது" எனக் கூறினார். 'நிதியை செலவிட்டது தெய்வ குற்றம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, " தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகே அதுதொடர்பாக பதில் கூற முடியும்" என்று மட்டும் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1p307124o
  11. உழைப்பு இருக்கும் அளவுக்கு நம்மைப் போல வாய் அடக்கமும் இருந்திருந்தால்....???
  12. மீண்டும் ஒரு பனி புயலா? அமெரிக்க மக்களை வாட்டும் கடும் குளிர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் குளிர், கடும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால் இதுவரை குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flight Aware தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிலவரம் எப்படி உள்ளது? #USSnow#America #SnowStorm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  13. சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு! Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 05:00 PM கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்' மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே "ஆரோக்கியமான மற்றும் நிலையான" உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரித்தானியாவின் புகழ்பெற்ற 'விஸ்கி' மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணங்கியுள்ளது. இது பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். பிரித்தானியப் பிரஜைகளுக்கு சீனாவுக்குச் செல்ல 'விசா இல்லா பயணச் சலுகை' வழங்குவது குறித்து சீனா தீவிரமாகப் பரிசீலிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் உறுதியளித்துள்ளார். ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், குறிப்பாக சிறிய படகுகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்பு எஞ்சின்களைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. "சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" எனப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237347
  14. *பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு! --- --- --- *பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்றுசேர முடியுமா? --- --- --- சீனா எந்த வகையில் வளர்ந்தாலும், வளர்ச்சி அநை்தாலும் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், (Xi Jinping) இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) சந்தித்த போது கூறினார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது. டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசச் சட்டங்களை மீறிய நகர்வுகளின் பின்னர், முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. அமைதியான வளர்ச்சிக்கு உரிய உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஜி ஜின்பிங், சீனா ஒருபோதும் போரைத் திணிக்காது என்றும் எடுத்துரைத்தார். வெளிநாட்டுகளில் ஒரு அங்குல நிலத்தை, சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். “ட்ரம்பின் செயற்பாடுகளினால், ஐரோப்பிய நாடுகளை நோக்கி. சீனா நேசக் கரம் நீட்டுகிறது” என்று, நான் சென்ற 18 ஆம் திகதி யாழ் உதயன் சஞ்சீவி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையை இச் சந்திப்பு நியாயப்படுத்துகிறது. ஆனால், பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேர முடியுமா? இருந்தாலும், ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகள், சிலவேளை, பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் விரும்பியோ விரும்பாமலோ குறிபிட்ட சில காலத்துக்கேனும், ஒன்று சேரும் வாய்ப்புகள் இல்லாமில்லை. இப் பின்னணியிலேதான், இந்தியா அவசர அவசரமாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முழு முயற்சி எடுக்கிறது. இது பற்றியும் சென்ற ஞாயிற்றுக்கிழமை எனது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... இது பற்றிய மேலும் விளக்கங்கள், எனது அடுத்த புவிசார் அரசியல் கட்டுரைகளில் வெளிவரும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான மோதல், கட்சியின் உள்ளக மோதல், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ஆரோக்கியமானது அல்ல. சுமந்திரன், சிறீதரன் -- சுமந்திரன், கஜேந்திரகுமார் இது பற்றி உணரத் தலைப்பட வேண்டும்... கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் தீர்வு விடயத்தில், ஈழத்தமிழர்களாக ஒரு புள்ளியில் நிற்க வேண்டிய காலமிது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02PbTsURNBj7iXkcMRzMcuyFbE7Ltn9hFpmJUkefWUiP4KKk4578A1SE3pEMbMVAXXl/?
  15. வேண்டுகோள் வெற்றியடைய வாழ்த்துக்கள். திலீபனின் எண்ணங்களே வந்து போகின்றன.
  16. உளவாளிகள் என்பதைவிட ஆசை வார்த்தை சொல்லி தனது ஆதரவாளர்களை உள்வாங்கியுள்ளார். ஒரு திறமைசாலி ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை? சிறிதரனை தலைவராகவே இருக்க விட்டிருந்தால் இரண்டு வருடபதவி இப்போது முடிந்திருக்கும். தனக்கு வேண்டியவரை ஏகமனதாகவே தலைவராக்கியுள்ளாராம்.
  17. ரம்பின் நகர்வைப் பார்த்தால் வெனிசூலா ஜனாதிபதியை தூக்கிய மாதிரி கொமெனியை தூக்குவதற்கு ஆயத்தம் நடக்குது போல.
  18. சமீபத்தில் கொழும்பின் ஒரு பிரபல பாடசாலையில் இடம்பெற்ற விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், வெறும் ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. ஒரு பாடசாலையின் 'தலைமை மாணவன்' மற்றும் 'ஆசிரியைகள்' சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம், நம் நாட்டு கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாரிய ஒழுக்கச் சீரழிவின் 'Tip of the iceberg’ மட்டுமே. இப்படியான சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. 90-களில் நாம் கல்வி கற்ற காலத்திலும் இவ்வாறான வக்கிரங்கள் அரங்கேறின. ஆனால், அவை பாடசாலை கௌரவம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டன. ஆசிரியை - மாணவன் துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவி துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவன் துஷபிரயோகம். ஆசிரியை - மாணவி துஷபிரயோகம். பாடசாலை பணியாளர்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள். இவை அனைத்தும் இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பிரித்தானியா (UK) போன்ற நாடுகளில், ஒரு ஆசிரியர் மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருப்பது 'Abuse of Position of Trust' (வழங்கப்பட்ட அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்) என்ற சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு 'சம்மதத்தோடுதான் நடந்தது” என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் பதவிக்கான பொறுப்பே முக்கியமானது. ஆனால் இலங்கையில், இவ்வாறான சம்பவங்களின் போது சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது, அவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆசிரியர்களைத் தங்களின் பிள்ளைகளுக்கு அடுத்த பெற்றோராகவே பார்க்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைத்து, பிள்ளைகளைத் தமது காமவலைக்குள் வீழ்த்தும் ஆசிரியர்கள், எதிர்காலச் சந்ததியையே அழிப்பவர்கள் ஆவர். இவர்கள் மீதான தண்டனை வெறுமனே பணியிட மாற்றமாகவோ அல்லது தற்காலிகப் பணிநீக்கமாகவோ இருக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாதபடி கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். மக்களாகிய நாம் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். Position of Trust' என்பதைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக விசேட கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை நிர்வாகத்தின் தலையீடு இல்லாத, மாணவர்களும் பெற்றோரும் அச்சமின்றிப் புகார் அளிக்கக்கூடிய ஒரு மத்திய முறைப்பாட்டுப் பிரிவு (Reporting Unit) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதியைத் தாண்டி, அவர்களின் மனநலம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கற்கை நெறிகள் அவசியமாக அறிமுகப்படுத்த வேண்டும். நாலந்தா கல்லூரிச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. கல்விக்கூடங்கள் காமக் கூடங்களாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, இந்த "நம்பிக்கை துரோகத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலச் சந்ததி எவரையும் நம்பத் துணியாத ஒரு சமூகமாக மாறிவிடும். Mukinthan Thurairajasingham
  19. சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
  20. திட்டமிட்ட இன அழிப்பின் மூலம் நிலையான அபிவிருத்தி சாத்தியமில்லை – தமிழர் மரபுரிமை பேரவை 29 Jan, 2026 | 04:07 PM இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழர் மரபுரிமைத் பேரவையின் இணைத்தலைவர் வண லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்ற திட்ட அறிக்கையின் படி கிவுல் ஓயா நீர்த்தேக்கமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரவில் உள்ள தமிழர்களின் புர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக வட கிழக்கு திசையாக மகாவலி அதிகார சபையினால் அமைக்கப்படவுள்ள மிகப்பாரிய நீர்த்தேக்கமாகும். மகாவலி அதிகாரசபை தனது திட்ட அறிக்கையில் வெளிப்படையாகவே இன் நீர்த்தேக்கத்தின் பயனாளிகள் 3203 சிங்க குடும்பங்கள் என தெரிவித்துள்ளது. 37 மீற்றர்கள் (121.37 அடிகள்) உயரமான அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந் நீரத்தேகத்தின் எல்லைகள் தற்பொழுது மகாவலி அதிகார சபையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்ட்டுள்ளன. இதன்படி பாரம்பரிய தமிழ் கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்புஸ்ரீவரசங்குளம் காஞ்சூரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. மேலும் 1921இல் வர்த்தமான அறிவித்தல் மூலம் ஒதுக்கு காடாக அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காட்டில் 4000 ஏக்கரும் இந் நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்து போவதுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளது என்பதனை மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்னையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந் நீர்த்தேக்கத்திற்கு மிக அண்மையாக உள்ள சைவ வழிபாட்டு இடமான வெடுக்குனாறிமலை பிரதேசத்தினை தொல்லியல் இடமெனக்கூறி தமிழ் மக்களின் வழிபாட்டினை தடைசெய்யும் தொல்லியல் நிணைக்களம் இந்த 47 தொல்லியல் பிரதேசங்களினையும் கிவுல் ஓயாவினுள் நீரினுள் மூழ்கிப்போவதற்கு தனது இசைவினை தெரிவித்துள்ளமை தமிழர் புரீர்வீக நிலங்களில் அமைந்துள்ள இத் தொல்லியல் சின்னங்கள் தமிழர் மரபுரிமை சார்ந்தவையாக அமைந்திருப்பதனாலேயே என சந்தேகிக்க ஏதுவாகின்றது. இத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள 3203 சிங்கள குடும்பங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தமிழர் புர்வீக பகுதிகளில் இராணுவ நடவடிக்கை மூலம் துரத்தியடித்து அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களினை வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவாக அறிவித்து அங்கு குடியேற்றப்பட்ட சிங்களமக்களேயாவர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் இன்றுவரை அவர்களுக்கு மீளவும் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதாரத்திற்காக தமது சொந்த நிலத்தினை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள மக்களிடம் நாட்கூலிகளாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கொக்குத் தொடுவாய் மத்தி, கொக்குதொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு. கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. துற்போது கிவுல் ஓயா திட்டத்தின்கீழ் இது மேலும் விஸ்தீரிக்கப்பட்டு கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப்பகுதியில் தமிழ் மக்களுக்கு மத்தியவகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1990 ஏக்கர் காணிகள் கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நில அபகரிப்பையும் வடபகுதியின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றுவதனை இலக்காக கொண்டு காலத்திற்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசுகள் காய்நகர்த்தி வருவது வெளிப்படையாகவே அவதானிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றினையும் மூடிமறைத்து மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று பொய் என கூறியிருப்பதை தமிழர் மரபுரிமை பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.இவரின் கூற்று அநுர அரசின் இரட்டை வேடத்தினை தோலுரித்துக்காட்டியுள்ளது. இவர்கள் வடக்கில் மக்களை அரவணைப்பது போல நாடகமாடி முதுகில் குத்தும் வேலையினை கச்சிதமாக செய்துவருகின்றார்கள். இன்றுவரை மகாவலி அதிகார சபையினால் எந்தவொரு வடமாகாண தமிழ் பொதுமகனும் பயனடையாதவகையில் இனவாத இயந்திரமாக்கப்பட்டுள்ள மகாவலலி அபிவிருத்தி அதிகார சபை தமிழ் மக்களின்தொடர்ச்சியான எதிர்ப்பினையும் மீறி தமதுதிட்டமிட்ட குடியேற்றத்தினை செய்வதற்காக முனைப்ப்புக்காட்டி கண்டிக்கின்றோம் வருவதனை. வன்மையாக இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/237345
  21. பலன் கொடுக்காத ஷிவம் துபே அதிரடி: இந்தியா மேற்கொண்ட 3 சோதனை முயற்சிகளின் முடிவு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் டிம் செய்ஃபர்ட் (62 ரன்கள்), டெவன் கான்வே (44 ரன்கள்) ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கமும், டேரில் மிம்ட்செலின் அதிரடி ஃபினிஷிங்காலும் (18 பந்துகளில் 39 ரன்கள்) அந்த அணி அந்த ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மட்டுமே ஓரளவு போராடி 65 ரன்கள் எடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம். துபேவுக்கு ரிங்கு சிங் தவிர்த்து யாரும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஏற்கெனவே இந்தத் தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. அவற்றுள் எந்த முடிவுகள் கைகொடுத்தன? எவை கைகொடுக்காமல் போயின? ஒரு பேட்டர் குறைவு டாஸின் போதே இந்திய அணி சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை சொல்லாமல் சொன்னார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இஷான் கிஷன் சிறு காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். ஒரு பேட்டருக்குப் பதிலாக, ஒரு முழுநேர பௌலரைக் களமிறக்கியது இந்திய அணி. டி20 போட்டிகளில், கடினமான சூழ்நிலைகளில் கூட அதிரடி அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது இந்திய அணி. 7 பேட்டர்களுடன், எட்டாவதாக அக்‌ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணா என பேட்டிங் செய்யக்கூடிய வீரர் ஒருவர் என்றுதான் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இப்படி பெரிய பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது, அது அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையை பேட்டர்களுக்குக் கொடுத்தது. சூழ்நிலை பற்றிய குழப்பங்கள் இல்லாமல் அவர்கள் அதைக் கையாண்டார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பேட்டர்களில் ஷிவம் துபே மட்டுமே நெருக்கடியை உணராமல் விளையாடி அரைசதம் அடித்தார் ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதாலும், உலகக் கோப்பைக்கு தயாராகவேண்டும் என்பதாலும், அந்த கூடுதல் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது அணி நிர்வாகம். அதனால், அர்ஷ்தீப்பைக் கொண்டுவந்து ஒரு பேட்டரைக் குறைத்திருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை உறுதி செய்தார். "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பேட்டர் குறைவாக விளையாடினோம். ஐந்து பௌலர்களோடு விளையாடி எங்களுக்கு சவால் ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு 180-200 என்ற இலக்கை எப்படி சேஸ் செய்கிறோம் என்று பார்க்க நினைத்தோம்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தியா ஏற்படுத்திக்கொண்ட சவாலை இந்தப் போட்டியில் அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்த போட்டியில் டாப் ஆர்டர் சீக்கிரமாக அவுட் ஆகிவிட்டபோது, மிடில் ஆர்டர் மீது சற்று கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்றைய சூழ்நிலையில் அது மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும் பாதித்தது. சாம்சன் அவுட் ஆனதற்கும், ரிங்கு சிங் அவுட் ஆனதற்கும் இடைப்பட்ட 3.5 ஓவர்களில் இந்தியா 27 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஏனெனில், ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியில் கவனம் அதிகம் செலுத்தவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய சேஸின்போது ஹர்ஷித் ராணா 11வது ஓவரிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த துபேவும் 15வது ஓவரிலேயே அவுட்டாக, ஒரு 200+ சேஸின் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் யாரும் களத்தில் இருக்கவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்தது 'விக்கெட் வீழ்ச்சி' பற்றி கவலைப்படாமல் ஆடிய இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இந்தப் போட்டி பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "(இந்தத் தொடரின்) முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி சரியான அணி என்று நினைக்கிறேன். பும்ரா, அர்ஷ்தீப், வருண் மற்றும் 8 பேட்டர்கள் ஆடுவது சரியாக இருக்கும்" என்று கூறினார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் இன்னொரு வீரர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரண்டாவது ஓவர் முடிந்ததுமே இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார் ரிங்கு சிங் பொதுவாகவே விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விழும்போது, விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணிக்கு நிலைத்தன்மையை கொடுக்கும் வகையில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த ரோலை குறிப்பிட்ட சில வீரர்கள் சரியாகச் செய்வார்கள். இந்திய அணிக்கு, விராட் கோலி அவர் இருந்த வரை அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார். இந்த அணியில் அக்‌ஷர் பட்டேல் அப்படியான சூழ்நிலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தார். இந்தப் போட்டியில் அவர் இல்லாததால், ரிங்கு சிங் கையில் அந்த வேலை கொடுக்கப்பட்டது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 9/2 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கினார் ரிங்கு சிங். மிகவும் நிதானமாகத் தொடங்கிய அவர், சரியான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களும் அடித்தார். ஆனால், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், அடிக்கக்கூடிய வகையில் வந்த பந்துகளை மட்டுமே டார்கெட் செய்தார். நன்கு அதிரடி காட்டி ஆட்டத்தை முடிக்கக்கூடியவர் என்பதால் ரிங்கு சிங் பெரும்பாலும் ஃபினிஷராகவே கருதப்படுகிறார். பல போட்டிகளில் அவர் தாமதமாகவே களமிறக்கவும் படுவார். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தையும் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒருசில முறை அந்த வேலையை செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல், ஷிவம் துபே இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபோக்ஸ், ஹென்றி போன்றவர்களின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்திருப்பதால், அவரை ஃபினிஷராகப் பயன்படுத்துவதற்கு அது அணியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் ரிங்கு சிங்கின் 'ரோல்' சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல பௌலிங் ஆப்ஷன்கள் இருந்தும், இந்தப் போட்டியில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியது அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்குவதன் மூலம் நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு எப்போதுமே இருந்தது. கேப்டன் சூர்யாவும் அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 5 முழுநேர பௌலர்களைக் களமிறக்கியதால், அவர்களை மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டார். முதல் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து 14 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்கள். அதில் அவர்கள் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களுக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. "உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று போட்டிக்குப் பின் சொல்லியிருந்தார் சூர்யா. ஒருவேளை உலகக் கோப்பைக்குள் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீளாதபட்சத்தில் அவருடைய இடத்தில் ரவி பிஷ்னாயை சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், நியூசிலாந்து பௌலர்கள் பிஷ்னாய் வீசிய 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் மற்றும் துபே ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் தன்மையையும் இந்தியா இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை. குறிப்பாக பவர்பிளேவில் ஹர்திக் நல்ல தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரை அங்கு பயன்படுத்தாமலேயே விட்டார் சூர்யா. நியூசிலாந்தின் முதல் விக்கெட் ஜோடியும் 8.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் எடுத்து இந்தியாவைப் பின்தங்கவைத்துவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4zr97lrro
  22. 'கனவுப் பாடசாலை' நோக்கிய பயணம் ஆரம்பம் Jan 29, 2026 - 11:50 AM இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார். இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkz2f2hn04kgo29ngonu78ld
  23. 19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: அரை இறுதிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா தகுதிபெற்றது Published By: Vishnu 29 Jan, 2026 | 03:51 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதியில் விளையாட முதலாவது மற்றும் தோல்வி அடையாத அணியாக நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா தகுதிபெற்றது. ஏ குழுவில் ஈட்டிய 4 வெற்றிப் புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸஸ் குழு 1இல் தென் ஆபிரிக்காவையும் இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சவாலுக்கு மத்தியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அணித் தலைவர் ஒலிவர் பீக் குவித்த அபார சதம், சார்ள்ஸ் லெச்மண்ட் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஒலிவர் பீக் 109 ஓட்டங்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல் 56 ஓட்டஙகளையும் வில் மலாஜ்சுக் 46 ஓட்டங்களையும் அலெக் லீ யங் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜக்கீம் பொலார்ட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆர்'ஜய் கிட்டன்ஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸக்காரி கார்ட்டர் 64 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஷுவா டோர்ன் 62 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் குணல் திலோகனி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெச்மண்ட் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆரியன் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹேடன் ஷில்லர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஒலிவர் பீக். https://www.virakesari.lk/article/237278
  24. 'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம் பட மூலாதாரம்,Handout via Reuters படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் 29 ஜனவரி 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின. "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது. மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,Vahid Online படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்) இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது. "இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார். "போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார். மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார். டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, "இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார். "எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார். "செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார். பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன. மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன. டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது. "அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார். குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,Maxar Techn படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது. இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின. இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது. அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார். கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o
  25. ஜெர்மனியில் வாழ்க்கையை பரிபூரணமாக கொன்டு செல்வதற்கே வேலை செய்வதாக சொல்வார்கள். uk இல் வேலைசெய்வதற்கே வாழ்கை (எனவே சம்பளம் சராசரியாக குறைவு ) என்று ஜெர்மனியில் UK க்கு ஏளனமாக சொல்லப்படும் உரையாடல் அனல், uk (மற்ற ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து) அமெரிக்கா வேலை கலாசாரத்தை பின்பற்றி இருப்பதால் பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக, வேலை நேரமும் கூட (அமெரிக்கா போல் இல்லைத்தான்), அதனால் ஏற்கனவே குறைவாக இருந்த சம்பளம் மிகவும் இறங்கி விட்டது. அனால், இப்போதைய வறுமை பழமையாத கட்சி கொள்கையால் (அதன் தொடர்ச்சியால்) தூண்டப்பட்ட, உருவாக்கப்பட்ட செயற்கை வறுமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.