24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் கப்டன் பவர் பிலே ஓவருக்கை போட்ட இரண்டு ஓவரும் சூப்பர் அவர் ஒருதர் தான் ரன்ஸ்ச கட்டுப் படுத்தினது மற்றவர்கள் இந்த போடுறேன் அடியுங்கோ என்ர மாதிரி போட்டிச்சினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஈசான் கிசான் பயப்பிடாம துணிந்து மட்டையால் நல்லா அடிக்கிறார் பாக்கிஸ்தானின் தோல்வி உறுதி...............போர போக்கை பார்த்தால் 200ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிவரத்திரி 6 மணி அபிசேகம் முடிந்துவிட்டது
-
தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். -
தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். - “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கின்றன. அதைப்பற்றிக் கவனிக்க உங்களுக்கு நேரமில்லை? உங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் கட்சிக்கெதிரான வழக்கு தக்கல் செய்யப்படவில்லை. நீங்கள் இருவரும் நினைத்தால் அந்த வழக்கை முடிவுறுத்தவும் முடியும். தலைவர் தெரிவு வரும்போது, நான் நீங்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே நினைத்தேன்.கட்சி உறுப்பினர்கள் சிலருடனும் உங்களுக்குச் சார்பாகவே கதைத்தேன். நீங்கள் பொறுமையாக இருந்திருந்தால் இன்று அடுத்த தலைவர் தெரிவு நடந்திருக்கும்.சில வேளை நீங்கள் முன்கதவால் தலைவராக வந்திருக்க கூடும். நாமும் மகிழ்ந்திருப்போம். ஒர் ஆளுமையான தலைவர் என்று. தலைவர் தெரிவிற்குப் பின்னரான உங்களின் செயற்பாடு மிக அற்பத்தனமானது. உங்கள் மீதான அத்தனை கற்பிதங்களையும் போலியாக்கியுள்ளது.யோசித்துப் பாருங்கள் கட்சியின் தொண்டர்களால் தெரிவு செய்யப்படாத தலைவரும் செயலாளரும் தொண்டர்களின் மன எண்ணத்தை எவ்வாறு பிரதிபலிப்பீர்கள் ? நீங்கள் இருவரும் மக்களைப் பற்றி இன்று நினைக்கவில்லை.உங்கள் தலைமைப் பதவியையும் அதிகாரத்தைப் பற்றியுமே கனவு கான்கின்றீர்கள். சிறீதரன் அவர்களை நீங்கள் எப்படியாவது நீக்குவீர்கள். அவ்வாறு நடந்ததால் அது கட்சிக்குப் பாதிப்பு. ஆனால் அது உங்ளுக்கு இரட்டிப்பு சந்தர்ப்பத்தை தரும். இலகுவாக அடுத்த தடவையாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படலாம் என்ற கணக்கு சரியாக அமையும். இறுதியாகக் கூறுகின்றேன்,தொண்டர்களுக்குத் தலைவரா? தலைவர்களுக்குத் தொண்டரா? என்றால் அதற்கான விடையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” இது முகநூலில் காணப்படும் ஒரு பதிவு.இதை எழுதியவர் வன்னிப் பெருநிலத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் ஆசிரியராக இருப்பவர். தமிழரசுக் கட்சியை எங்கேயும் விட்டுக் கொடாதவர். எனது கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தால் அதுதொடர்பாக முகநூலில் பதில் வினையாற்றுவார். ஆனால் அவர்தான் சில நாட்களுக்கு முன் மேற்கண்டவாறு முகநூலில் எழுதியுள்ளார்.அவர் ஏன் அப்படி எழுத வேண்டி வந்தது? கட்சியின் பதில் செயலாளராக உள்ள சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒரு அறிவிப்புத்தான் காரணம்.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக கதைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். இதை அவர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கின்றாரா? ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவுகள் எங்கே கொண்டு போய்விடும்? இக்கட்டுரையில் கூறப்பட்ட அந்த ஆசிரியர் மிகத் துடிப்பான ஓர் அரசியல் செயற்பாட்டாளர். அவரே மனம் வெறுத்து அவ்வாறு முகநூலில் எழுதும் ஒரு நிலைமை வந்திருப்பது என்பது அவரைப் போன்ற பலர் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.அதாவது கட்சி மேலும் சிதையும் நிலைமைதான் தெரிகிறது. நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டமும் அதைத்தான் காட்டுகிறது. தங்களுக்குள் தாங்களே மோதி கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உணர முடியாத தலைவர்களா இவர்கள்? தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு பற்றி திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பூட்டுவது. ஆனால் அப்படி எழுதுவது தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி. அந்தக் கட்சியும் சிதைந்தால் அதற்கு மாற்றாக மேல் எழுவதற்கு முன்னணியால் முடியுமா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெரு வெற்றி பெற முடியவில்லை.அவர்கள்தான் ஒப்பீட்டளவில் தெளிவாக கொள்கைகளை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்களால் கடந்த 16 ஆண்டுகளாக தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில் கிடைத்த தோல்வியும் கட்சியின் தலைவர் கஜேந்திரக்குமாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் அவர்களை புதிய பாதையில் சிந்திக்க வைத்திருக்கிறது என்று தெரிகிறது. அவர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. ஆனால் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பது என்பது என்ன? நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவது மட்டுமல்ல,அதைவிட ஆழமான பொருளில் கட்சியை கட்டமைப்புரீதியாக மீளக் கட்டியெழுப்புவது. அண்மையில் ஒரு கிறிஸ்தவ மதகுரு இந்தியாவில் இருந்து வந்திருந்தார். இந்தியாவில் மேற்படிப்புக்காகச் சென்றவர்.அவர் அங்கே தமிழகக் கிராமங்களில் கட்சிகளுக்கு உள்ள வட்டச் செயலர் என்ற பதவி நிலையைக் குறித்து உரையாடினார். வட்டச் செயலர் என்ற பதவி தமிழக மக்களைப் பொருத்தவரை தமிழ்ச் சினிமாவில் வடிவேலுவின் நகைச்சுவையோடு சேர்ந்து பிரபல்யமான ஒரு பதவி நிலை. ஆனால் அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. கிராம மட்டத்தில்,அடிமட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு பதவி நிலை. அது ஒரு பொறுப்பு. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு அவ்வாறு ஆழமான அடிபட்டக் கட்டமைப்புகள் உண்டு.வட்டச் செயலர்கள் கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புகிறார்கள். கீழ் மட்டத்தில் மக்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுகிறார்கள்,வளர்க்கிறார்கள்.தமது நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் அடிமட்ட மக்களை அரசியல்மயப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களை கட்சி மயப்படுத்துகிறார்கள். நமது தமிழ்த் தேசியக் கட்சிகளில் எத்தனை அப்படிப்பட்ட கிராம மட்டக் கட்டமைப்புகளை, பதவி நிலைகளைக் கொண்டிருக்கின்றன? இதற்கு தமிழ்நாட்டு உதாரணம் கூடத் தேவையில்லை. 83 ஜூலைக்கு பின் தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தன? எப்படிப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டன? என்பவற்றில் இருந்தாவது குறைந்தபட்சம் கற்றுக் கொண்டிருக்கலாம். தமிழ் இயக்கங்களுக்கு கிராம மட்டத்தில் கிராமப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குப் பொறுப்பாக ஏரியாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் இருந்தார். அரசியல் துறைக்கு மட்டுமல்ல படைத்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை முதலான எல்லாக் கட்டமைப்புகளுக்கும் அவ்வாறு கீழே இருந்து மேல் நோக்கிய சீரான கட்டமைப்புகள் இருந்தன.இந்தக் கட்டமைப்புகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும்.மேலிருந்து கீழ் நோக்கி வழிநடத்தப்படும்.இயக்கங்களின் கட்டமைப்புகள் பெருமளவுக்குப் படைப் பரிமாணத்தை கொண்டுவை என்பதனால் அங்கே உத்தரவுக்குக் கீழ்ப்படியும் ஒரம்சம் இருக்கும்.அதை முழுமையாக ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு பொருத்தமான நடைமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் கிராம மட்டக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியாது மட்டுமல்ல தேர்தல் அரங்குகளில் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் முடியாது. ஜனநாயக அரசியலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் எது பெரும்பான்மை என்பதைத் தீர்மானிக்கும். பெரும்பான்மையின் கருத்துத்தான் அந்த மக்கள் கூட்டத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே கட்சி மைய அரசியலுக்கூடாகச் சிந்திக்கும் பொழுது தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்.அதேசமயம் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியேயும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. https://athavannews.com/2026/1464919
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பை சர்மாவுக்கு நல்ல படியா அமைய வில்லை......................
-
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 12:05 PM பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர். உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238696
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா ஒரு விக்கட் போட்டுது.
-
பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை
பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை 15 Feb, 2026 | 10:46 AM மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. மலையகத்தில் உள்ள மாணவர்களை கல்வித்துறையில் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகிறது தோட்டப் புறங்களில் எமது செயற்பாட்டை முன்னெடுக்க பாரிய சவாலாக இருக்கிறது.அதில் ஒன்றுதான் தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருந்து வருகிறது. எமது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதன் போது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்பள்ளி ஒன்றியத்தின் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கியம் தெரிவிக்கையில், மலையக மக்களுக்கு அங்கிகாரத்தை வழங்கிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் இன்று எல்லோரும் காணி சம்பந்தமாக பேசுகிறார்கள். ஆனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நூற்றுக்கு எழுபது வீதமானோருக்கு முன்பள்ளியில் கற்றல் செயற்பாடுகள் கிடைப்பதில்லை. 30 வீதமானோருக்கு மாத்திரம் முன்பள்ளி கல்வி கிடைக்கிறது. இந்த நாட்டில் முன்பள்ளி கல்வி என்பது மாகாண சபையின் கீழ் காணப்படுகிறது. முன்பள்ளி எந்த பகுதியில் இடம் பெற்றாலும் அது மாகாணசபை அதிகாரத்திற்கு கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.தோட்ட பகுதிகளில் இயங்குகின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. ரதெல்ல மற்றும் பல பகுதிகளில் முன் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. முன்பள்ளி கல்வி அரசாங்கத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி கல்வியும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். முன்பள்ளி கல்விக்கு தடையாக இருக்கின்ற தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன தடையாக இருப்பதை இடைநிறுத்த வேண்டும். எனவே இது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் 22ம் திகதி அட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/238678
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவுக்கு எதிராக விளையாடினார். ஆனால் இதுதான் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறார். இவரை பற்றி ஊடகங்களில் அடிக்கடி செய்தி வருகிறது. அபிஷேக் ஷர்மா மறுபடியும் முட்டை வாங்கிவிட்டார்
-
மகா சிவராத்திரி விரதம் இன்று
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் Feb 15, 2026 - 06:10 PM மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பிரதமர், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlnqg2mb0008356n143dpd71
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் இந்த உலக கோப்பையில் ஏற்க்கனவே விளையாடி விட்டார்................
-
வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் Feb 15, 2026 - 06:02 PM வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிள்ளைகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நன்னடத்தைப் பாதுகாப்பிலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlnq5m9y0007356ncnyl88xs
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தானின் உஸ்மான் ராரிக்கும் விளையாடுகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியாவும் நொந்து போச்சா ........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குல்டிப் இந்த உலக கோப்பையில் முதல் முறை விளையாடுகிறார் இந்தியா மூன்று திறமையான சுழல் பந்து வீச்சாளர்களுடன் விளையாட போகினம்...............................
-
சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை
இலங்கை மக்களின் பரிதாப நிலை இலங்கை சுகாதார அதிகாரிகள் நாடுமுழுவதும் சுமார் 10% சிறுநீரக நோயாளிகள் தாங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாக நிர்வகிக்காத நபர்கள் சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக எதிர்கொள்கின்றனர் என்று தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் நிபுணர் மருத்துவர் அர்ஜுன மாரசிங்க எச்சரித்தார். சிகிச்சை மிகவும் சிக்கலானதாகிறது நோய் மேம்பட்ட நிலைக்கு முன்னேறும் வரை பல நோயாளிகள் கண்டறியப்படாமல் இருப்பார்கள், இதனால் சிகிச்சை மிகவும் சிக்கலானதாகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதிக கொழுப்பு அல்லது உயர்ந்த இரத்த அழுத்தம், உயர்ந்த நீரிழிவு அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர் மாரசிங்க அறிவுறுத்தினார், கடுமையான சிக்கல்களைத் தடுக்க ஆரம்பகால கண்டறிதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார். https://ibctamil.com/article/10-of-kidney-patients-unaware-of-condition-1771082578
-
மகா சிவராத்திரி விரதம் இன்று
அறியாமையைத் தோற்கடிக்க அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் Feb 15, 2026 - 04:15 PM இனம், மதம், குல வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அறியாமையைத் தோற்கடிப்பதற்காகப் போராட வேண்டிய தருணம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இன்றைய (15) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானுக்காக பூஜை வழிபாடுகள் நடத்தும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தனது தேவி பார்வதியுடன் இணைவதையும், அவரது தெய்வீக நடனமான 'தாண்டவ நடனத்தை' ஆடுவதையும் மகா சிவராத்திரி குறிக்கின்றது. அறியாமை எனும் இருளை அகற்றி, வாழ்க்கையை வெற்றிக்கொள்வதைக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் நோக்கமாகும். அந்த உன்னத நோக்கத்தை மனதில் கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து, விரதம் அனுஷ்டித்து சிவபெருமானுக்கு பூஜை வழிபாடுகளை இந்து பக்தர்கள் இன்று மேற்கொள்கின்றனர். வரலாற்றில் முன்னெப்பொழுதையும் விட, ஒரு நாடாக நமது கண்களை மூடியுள்ள அறியாமை எனும் இருண்ட திரையை கிழித்தெறிய ஒரு தேசத்திற்கு ஞானம் தேவைப்படும் தருணம் இது. பொய், புரட்டு மற்றும் ஏமாற்று வேலைகள் ஆட்சி செய்யும் தருணம் இது. இந்த மண்ணில் வாழும் மக்களிடையேயும், கலாச்சாரங்களுக்கு இடையேயும் மிக சூட்சுமமாக பிளவுகள் விதைக்கப்பட்டுள்ள தருணம் இது. இனம், மதம், சாதி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அந்த அறியாமையைத் தோற்கடிக்கப் போராட வேண்டிய நேரம் இது. அந்த வகையில், மகா சிவராத்திரி வழங்கும் செய்தி நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இன்று ஏற்றப்படும் தீபத்தின் ஒளியைப் போலவே, நம் இதயங்களிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் பிரகாசிக்கட்டும் என்றும், அறியாமை, பிளவுகள் மற்றும் வறுமை அகலட்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இந்து சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி, மகிழ்ச்சியும் அமைதியும் மலரும் இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlnmawji0002356nobgnjlbl
-
திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு!
திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். பணமோசடி "நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா பெறுமதியான 'ஸ்டார் பொயின்ஸ்' (Star Points) சேர்ந்துள்ளது. அதனைப் பணமாக மாற்றி உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட வங்கி விபரங்களைத் தாருங்கள்" என நயமாகப் பேசியுள்ளனர். குறித்த தொகையை இரண்டு கணக்குகளில் பிரித்து வைப்பிலிடுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரின் வங்கி விபரங்களையும் அவரது மனைவியின் வங்கி விபரங்களையும் பெற்றுள்ளனர். அத்துடன், கணக்கின் பாதுகாப்பு இலக்கங்கள் மற்றும் ‘பின்’ (PIN) இலக்கங்களையும் நைச்சியமாகப் பேசிப் பெற்றுக்கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில், இருவருடைய வங்கிக் கணக்குகளிலும் இருந்த பணத்தில், எடுக்க முடியாத மீதித் தொகையான 2,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணமும் திருடப்பட்டுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இது குறித்து திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதே, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். அறிவுறுத்தல் "விடயம் தெரிந்த நானே அவர்களின் பேச்சில் மயங்கி அனைத்து விபரங்களையும் வழங்கிவிட்டேன்" என பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார். இதேபோன்ற மோசடி அழைப்புகள் மற்றும் பண இழப்புகள் தொடர்பாக திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குப் பல முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாகத் தெரியவருகிறது. முகம்தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான அழைப்புகளை நம்பி, உங்களது வங்கி கணக்கு இலக்கம், இரகசிய குறியீட்டு இலக்கம் (PIN), கடவுச்சொல் (Password) அல்லது OTP இலக்கங்களை எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் எனத் நிறுவனங்களும் பாதுகாப்புத் தரப்பினரும் எச்சரிக்கின்றனர். இது போன்ற மோசடிகளுக்கு யாராவது உள்ளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://tamilwin.com/article/money-laundering-many-affected-in-trinco-1771071728?itm_source=article
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நேபாளத்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 05:14 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நேபளாத்துக்கு எதிரான சி குழு போட்டியில் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள், ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. அதேவேளை, 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவிய நேபாளம் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. இன்றைய போட்டியல் சிரேஷ்ட வீரர் ஜேசன் ஹோல்டர் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. 15 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 6 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் சிரேஷ்ட வீரரும் அனுபவசாலியுமான திப்பேந்த்ர சிங் அய்ரீ, 8ஆம் இலக்க வீரர் சோம்ப்கால் காமி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். அய்ரீ பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். சோம்ப்பால் காமி 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்களைவிட லோக்கேஷ் பாம் (13), ஆசிப் ஷெய்க் (11), குல்சான் ஜா (11) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. அணித் தலைவர் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடனும் ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 22 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர். https://www.virakesari.lk/article/238735
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
10ஓவருக்கு பிறக்கு அமெரிக்கான்ட பந்து வீச்சு மிகவும் அருமை ஓவருக்கு குறைந்த ரன்ஸ்ச விட்டு கொடுத்து விக்கேட் வேட்டையும் நடத்த நம்பீயா அணி இறுதியில் 31ரன்ஸ்சால் தோல்வி..............................
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 03:42 PM ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர், நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நச்சு தென்னமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுபவை. இது மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மிக விரைவாக மரணம் நிகழும். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த அரிதான நச்சுத்தன்மை கொண்ட விஷம் ரஷ்யாவின் இயற்கையில் எங்கும் காணப்படுவதில்லை. நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு இந்த விஷத்தைச் செலுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு கிரெம்ளின் மாளிகையே முழுப் பொறுப்பு." தமது கணவர் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளமை தொடர்பில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா, "முதல் நாளிலிருந்தே என் கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புட்டின் ஒரு கொலைகாரர், அவர் இதற்காகப் பதில் சொல்லியே ஆகவேண்டும்," எனத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா வழக்கம் போல மறுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமிடப்பட்ட "தகவல் யுத்தம்" எனவும், தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/238718
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர்களல் முடியாது .இறுதி ஓவர் 168/6 தோல்வி
-
மகா சிவராத்திரி விரதம் இன்று
மகா சிவராத்திரி விரதம் இன்று Feb 15, 2026 - 06:15 AM இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் "யார் பெரியவர்?" என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார். அதன் அடி மற்றும் முடியைக் காண முடியாதபடி நின்ற அந்த நாளை 'சிவராத்திரி' என்கிறோம். அதேநேரம் சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணந்து கொண்ட புனிதமான இரவாகவும் இது கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 'ஆலகால' விஷத்தை, உலகைக் காக்க சிவன் உண்டார். அந்த விஷம் அவர் தொண்டையிலேயே தங்கிவிட, அவர் மயக்கமடையாமல் இருக்க தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபட்ட இரவே சிவராத்திரி என்றும் பல்வேறு புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது. "சிவராத்திரி" என்றால் "சிவனின் இரவு" என்று பொருள். இந்த நாளில் அடியவர்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைச் சிந்தனையோடு விழித்திருப்பது ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும். "ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் இந்த ஒரு நாள் விரதத்தினால் நீங்கும்" என்பது ஐதீகம். உடல் தூய்மைக்காகவும் மன ஒருமைப்பாட்டிற்காகவும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது. இது அறியாமை எனும் உறக்கத்திலிருந்து விடுபட்டு ஞானம் பெறுவதைக் குறிக்கும். சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது. இரவு முழுவதும் 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரிப்பது. மகா சிவராத்திரி என்பது நம்முள்ளே இருக்கும் ஆன்மாவைத் தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு. சிவமே அன்பு, அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து இறைவனிடம் சரணடைவதே இந்த நன்னாளின் உண்மையான நோக்கமாகும். இன்றைய தினம் இலங்கையில் உள்ள பல சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmln0wmgf0001356ndg6bsfps
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்! யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மருத்துவ பீடம், போதனா வைத்தியசாலை, உயர்கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிறிய வகை சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்கள் நீண்டகாலம் காத்திருப்பதைக் குறைப்பதும், அதீத மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதுமே இந்த நிலையத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய கலாநிதி காருண்யனும் கலந்துகொண்டிருந்தார். இந்தத் திட்டம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி... https://ibctamil.com/article/jaffna-medical-faculty-ctrb-new-surgery-center-1771115955
-
போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தனமல்விலவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாகத் பொதுமக்கள் எனக்கு தெரிவிக்க முடியும். 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது "இந்த போதைப்பொருள் வியாபாரம் ஒவ்வொரு மூலையிலும் இந்தக் கடத்தல்காரர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் மற்ற அரசு நிறுவனங்களிலும் இருந்தனர். அவர்கள் காவல்துறையிலும் இருந்தனர். நேற்று முன்தினம், ஒரு காவல்துறை அதிகாரி 700 கிராம் எடையுடன் பிடிபட்டார். அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதால் மட்டும் சட்டம் இலகுவாக அமல்படுத்தப்படுவதில்லை. சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில் மேலும், பொது சேவையில் உள்ள வேறு சில அதிகாரிகளும், முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில் உள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர். காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருந்தது. போதைப்பொருள் சோதனை நடத்திய பிறகு அந்தப் பிரிவை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது காவல்துறையில் எவ்வளவு குறைவானவர்கள் இருந்தாலும், நாங்கள் அந்த வேலையைச் செய்கிறோம். ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் காவல்துறையில் இருக்க முடியாது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இருக்கும் அதிகாரிகள் இருந்தால், தயவுசெய்து அந்தத் தகவலை எனக்கு வழங்கவும். போதைப்பொருள் "சமூகத்தில் எவ்வளவு கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய கைபேசி 24 மணி நேரமும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்."என்றார். https://ibctamil.com/article/100-police-officers-arrested-for-drug-offences-1771091254