24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.
தையிட்டி: காணிப் பிரச்சினையா? - நிலாந்தன் வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி வவுனியாவில் கூடி உட்கட்சி முரண்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. வருஷம் பிறந்த மூன்றாம் நாளில் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இது. இத்தனைக்கும் தையிட்டியில் தமிழரசுக் கட்சிக்காரர்களும் காணப்பட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி அது. அதிகளவு நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பது. தானே தலைமைக் கட்சி என்றும்,தானே தமிழ் அரசியலை வழி நடத்துவதாகவும் கூறிக்கொள்கிறது;கருதிக் கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உட்பகையைத் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி. தொடர்ந்தும் பதில் தலைவரின் கீழும் பதில் செயலாளரின் கீழும் இயங்குவதை ஒரு தோல்வியாகச் சுட்டிக்காட்டக்கூடிய மூத்த கட்சி உறுப்பினர்களும் இல்லை. மூத்த ஆதரவாளர்களும் இல்லை. மதத்தலைவர்களாலோ அல்லது சிவில் சமூகத் தலைவர்களாலோ யாராலுமே தீர்க்கமுடியாத ஒரு முரண்பாடாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தானே தனக்குள் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. ஏதாவது ஓர் அணி பலமடைந்து கட்சித் தலைமையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தவிர கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போகும் நிலைமைகள்தான் அதிகரிக்கின்றன. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் சமூக வலைத்தளங்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்குகிறார்கள். ஒருவர் மற்றவரை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவரை சுற்றி வளைக்கும் முற்படுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அது அதிகம் சீரழிந்த ஒரு காலகட்டமாக இதைக் கூறலாமா? இதை அறிவுப்பூர்வமாக அணுகத்தக்க ஒருவருமே கட்சிக்குள் இல்லையா? இந்த முரண்பாட்டை அறிவுபூர்வமாக அணுகினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.கட்சி தனக்குள் இரண்டுபட்டிருக்கும் வரை கட்சியாகவும் உருப்பட முடியாது;தமிழ்த் தேசிய அரசியலையும் முன்னோக்கி நகர்த்த முடியாது. இந்த முரண்பாட்டைத் தீர்க்க கட்சிக்குள்ளும் ஆளில்லை கட்சிக்கு வெளியேயும் ஆள் இல்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பாரதூரமான சீரழிவின் பின்னணியில் தையிட்டி போன்ற போராட்டக் களங்களில் உறுதியாக முன்னோக்கிச் செல்ல முடியுமா? ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடி காணிகளை மீட்க முடியுமா? இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொண்டுவிடும். அரசாங்கம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தை நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தை ஒரு காணிப்பிரச்சனையாக அது குறுக்கப் பார்க்கிறது. கடந்த பௌர்ணமி நாள் போராட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார,”இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை.இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டின் முடிவில் யாழ் அரச அதிபருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பும் அந்த அடிப்படையிலானது தான். தமிழ்ப் பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் மிக்க,நயினா தீவு விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் பக்கம் நின்று கதைத்தாலும், அவரும்கூட இந்த விடயத்தை காணிப் பிரச்சனையாகத்தான் சுருக்குகிறார். திஸ்ஸ விகாரையின் அதிபதி அதனை முழுக்க முழுக்க காணிப் பிரச்சினையாகவே குறுக்குகிறார். ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம். ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா. அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும். அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கம் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது. எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திக்கூடாகச் சித்தரித்தால் அது மிகத்தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009க்குப் பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய உதாரணம். அதிலிருக்கும் அரசியலை நீக்கி அதைக் காணிப் பிரச்சினையாகக் காட்டுவதே ஓர் அரசியல்தான். எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது. அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான். தையிட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொதி நிலையில் வைத்திருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அந்தக் கட்சி தையிட்டியில் போராடும். ஆனால் அந்தப் போராட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும்தான் பங்குபற்றுவதுண்டு. அவை மக்கள் மயப்பட்ட போராட்டங்களாக அநேகமாக இருப்பதில்லை. எனினும் சில விசேஷ தினங்களில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளும்,சிவில் சமூகங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணையும்போது அந்தப் போராட்டத்தில் பெருமளவு சனத் தொகையைக் காணலாம். திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. இப்போராட்டங்களில் சில நாட்களில் அதிக தொகை மக்கள் வருவார்கள். அதற்குக் காரணம் அங்கே எல்லா கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மதகுருக்களும் கூடுவதுதான். கடந்த பௌர்ணமி நாளன்றும் அதுவே நடந்தது. அதற்கு முதலில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திலும் அவ்வாறு அதிகளவு ஜனத்தொகையை காண முடிந்தது. அந்தப் போராட்டத்திற்கு அதாவது ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச சபை. இப்பொழுது நீதி அமைச்சர் கூறுகிறார் அது திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு காணிப் பிரச்சினை என்று. இல்லை.அது காணிப் பிரச்சினையல்ல.அது அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு. காணி உரிமையாளர்கள் மட்டும் அரசாங்கத்தோடு பேச முடியாது.அந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மதகுருக்களும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும். 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாற்றத்தைக் காட்டவேண்டிய ஒரு களம் அது. ஆனால் அனுர அரசாங்கம் திஸ்ஸ விகாரை விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதற்குள்ள இன முரண்பாட்டுப் பரிமாணத்தை இல்லாமல் செய்து விட்டு அதை வெறும் காணிப் பிரச்சினையாகக் காட்டப் பார்க்கின்றது. புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார். ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை விடயத்தில் மாற்றம் இன்மைதான் மாறிலியா? https://www.nillanthan.com/8048/
-
சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில்
சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில் 11 Jan, 2026 | 01:51 PM (நா.தனுஜா) இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று எனப் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் கூறியிருப்பதாவது, சட்டத்தரணியும், பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கின்றேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார். இருப்பினும் அவரது சிங்களத் தேசியவாதமும் எமது தமிழ்த்தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ்மொழியையே பேசினர். இந்நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. உண்மையில் மாகாணசபைகள் ஒட்டுமொத்த இலங்கைக்குமான கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமை அல்ல. மாறாக வட, கிழக்கு மாகாணங்களுக்கான சுயாட்சியை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் ஊடாக வடிவமைக்கப்பட்ட முறைமையே அதுவாகும். எனவே வெறுமனே மாகாணசபைகள் முறைமை இலங்கைக்குக் பொருத்தமானதல்ல எனக் கூறுவதற்கு முன்னர், நாட்டின் கடந்தகால மற்றும் அண்மைய வரலாற்றை திலித் ஜயவீர நன்கு அறிந்துகொள்ளவேண்டும். தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235743
-
இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர்
இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர் 11 Jan, 2026 | 12:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங், எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திரி எரிக் மேயர் புதிய தூதுவராகக் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார். இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெறுவற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுச் சேவையின் சிரேஷ்ட உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், பங்காளதேசம், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இப்பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும் அவர் பொறுப்பு வகித்தார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் ஆழமான அனுபவம் கொண்ட எரிக் மேயர், வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இலங்கையை ஒரு முக்கியமான மையப்புள்ளியாகக் கருதுகிறார். சமீபத்தில் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு உறவுகள் குழுவின் முன்னிலையில் தெளிப்படுத்திய அவர், தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா முன்னுரிமை அளிக்கவுள்ள முக்கிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். எரிக் மேயரின் வருகையானது, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் 'தித்வா' சூறாவளி பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஒரு முக்கியமான காலப்பகுதியில் அமைகிறது. குறிப்பாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இலங்கையின் கடல்வழியாகவே செல்கிறது. எனவே, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பேணுவதற்கு இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியமானது என மேயர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதார சுதந்திரம் அதன் தேசிய இறையாண்மையுடன் நேரடித் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுடன் இணைந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை ஊக்குவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் இலங்கையை பிராந்திய பொருளாதாரத்தின் தலைமையாக மாற்றும் வல்லமை கொண்டவை என்றும், இது அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் கடன் பொறி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய செனட் குழுவினருக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது துறைமுகங்கள் மீதான முழுமையான இறையாண்மையைப் பேணுவதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார். ஜூலி சங்கின் பதவிக்காலத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பங்களிப்பு, கல்வி மற்றும் கலாசார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது நோக்கம் என எரிக் மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக 2 மில்லியன் டொலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடல்சார் பாதுகப்பு, சட்ட அமுலாக்கக் கூட்டுறவு மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235739
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
மீண்டும் அதே திசையில்த்தான் சிந்திக்கிறீர்கள். சோனியா எனும் தனி மனிதர் செய்த தவறுகள் குறித்துப் பேசுவதும், நீதிகேட்பதும் எவ்வாறு இந்தியாவைப் பகைப்பது ஆகிவிடுகிறது? பாரதீய ஜனதாக் கட்சி மீது ஈழத்தமிழர்களுக்குப் பகையிருக்கிறதா, என்ன? அல்லது இந்திய மக்கள் மீதுதான் எமக்குப் பகையிருக்கின்றதா? இருப்பதெல்லாம் எம்மீது படுகொலை ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்ட சோனியா எனும் தனிப்பட்ட மனிதருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் தேவைமட்டுமே. ஒரு குற்றவாளி மீது தண்டனையினைக் கோரும்போது அந்த நாட்டினையே பகைப்பது ஆகிவிடுவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் சோனியா என்பது ஒரு நாடல்ல, தனி மனிதர் மட்டுமே. யூகொஸ்லாவியாவின் சேர்பியப் போர்க்குற்றவாளி சுலொபொடான் மிலோசொவிச்சினை கைதுசெய்தபோது அதனை சேர்பியாவுக்கெதிரான பகையுணர்வாக அந்த நாட்டு மக்களே பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நாட்டு மக்களின் உதவியுடனேயே அவன் சர்வதேசப் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டான். அப்படியிருக்க, சோனியா மீதான விமர்சனம் என்பதோ அல்லது தண்டனைக்கான கோரல் என்பதோ எப்படி இந்தியா எனும் மொத்த நாட்டையே பகைப்பதாக ஆகிவிடுகிறது??
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
அரசியலமைப்பு பேரவையிருந்து விலகுவதற்கு சிறிதரன் எம்.பிக்கு ஒருவார கால அவகாசம் - பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் கடிதம் 11 Jan, 2026 | 03:31 PM (நா.தனுஜா) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகத் தொடர்ந்து செயற்படுவது தம்மையும், தமது கட்சியையும் மேலும் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதனால் கட்சியின் அரசியல் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்புப் பேரவையில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.சு.சுமந்திரன் சிறிதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியாவில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில், சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன், பேரவையில் செயற்படும் விதம் குறித்து அண்மையில் சர்ச்சைக்குள்ளான விடயங்கள் பற்றிய ஆராயப்பட்டது. அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம், இழப்பீட்டுக்கான அலுவலக உறுப்பினர் நியமனம், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம், பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் என்பன உள்ளடங்கலாக இதுவரையில் இடம்பெற்ற 8 நியமனங்கள் தொடர்பான வாக்களிப்பின்போது சிறிதரன் அரசாங்கத்தரப்புடன் இணைந்து வாக்களித்திருப்பதாகவும், அவர்களில் சிலர் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி சிறிதரனுக்குக் கடிதம் அனுப்புவதற்கு அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி 07.01.2026 எனும் திகதியிடப்பட்ட கடிதம் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. https://www.virakesari.lk/article/235753 இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கு 2010 ஜனாபதித் தேர்தலில் வாக்குக்கேட்டுவிட்டு இப்ப என்ன கணக்காய்வாளர் நாயகம் என கணக்கு விடுகிறார்கள்!
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
உலக விடயங்களில் நிறைவான அறிவினைக் கொண்டிருக்கும் நீங்கள் இப்படி எழுதுவது வியப்பினை அளிக்கிறது. ஏனென்றால், இலங்கையில் சீனத் தலையீட்டினை அனுமதித்ததே இந்தியாதான் என்பதை எப்படி நீங்கள் உணர மறந்தீர்கள்? இறுதி யுத்தச் காலத்தின் ஆரம்ப நாட்களில் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைத் தருமாறு கோத்தாபய முதலில் கேட்ட நாடு இந்தியாதான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய எதிர்ப்பினால் போரில் நேரடியாகப் பாவிக்கும் ஆயுதங்களை தரமுடியாது என்று மறுத்த இந்தியா, இலங்கை "நீங்கள் தராவிட்டால் நாங்கள் வேறு நாடுகளிடம்தான் செல்லவேண்டும்" என்று கோத்தா கூறியபோது சீனாவிடமும் பாக்கிஸ்த்தானிடமும் இர்நுது ஆயுதங்களை நீங்கள் வாங்கலாம் என்று இந்தியா அனுமதியளித்தது. இதன் மூலம் சீனா இலங்கையில் காலடி எடுத்துவைக்க இந்தியாவே வழிகோலியது. ஆனால், தமிழரைப் பழிவாங்க இந்தியா எந்தப் பேயிடமாவது ஆயுதங்ம் வாங்குங்கள் என்று இலங்கையிடம் தெஹ்ரிவித்துபிட, சீனாவும் பாக்கிஸ்த்தானும் இலங்கைக்குள் குடியேறின. இந்த நிலைமை யுத்தம் முடிந்தபின்னர் இன்னும் மோசமாகியது. மகிந்த இந்தியாவை எட்டி உதைந்துவிட்டு சீனாவிடம் அடைக்கலமானார். இதன்பிறகே அம்பாந்தோட்ட, கொழும்பு துறைமுக நகர் என்று சீன ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
-
புலம் பெயர் தமிழர்களின் காணி தடையின்றி முன்னெடுக்கலாம்; ஏற்பாடுகள் காணப்படுவதாக பதிவாளர் திணைக்களம் அறிவிப்பு
புலம் பெயர் தமிழர்களின் காணி தடையின்றி முன்னெடுக்கலாம்; ஏற்பாடுகள் காணப்படுவதாக பதிவாளர் திணைக்களம் அறிவிப்பு 11 Jan, 2026 | 12:38 PM (எம்.மனோசித்ரா) புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென பதிவாளர் திணைக்களம் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். காணிகளைப் பதிவு செய்வதிலும் எவ்விதத் தடையும் இல்லை. வெளிநாடுகளிலுள்ள அந்த மக்களுக்காக உள்நாட்டிலுள்ளவர்கள் காணியொன்றைக் கொள்வனவு செய்வதாயின் காணிப் பதிவு சட்டத்தின் கீழ் காணி விற்பவர் வாங்குபவர் என இருவரும் கையெழுத்திட வேண்டும். விற்பவர் உள்நாட்டிலும், காணியைக் கொள்வனவு செய்பவர் வெளிநாட்டிலும் இருப்பாராயின் அவர் எழுத்து மூலம் ஒரு கடிதம் வழங்குவாராயின் அதுவே போதுமானது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே காணியைக் கொள்வனவு செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் நபரொருவர் தனது காணி தொடர்பில் பிரிதொருவர் போலியான ஆவணமொன்றை தயாரிப்பதாகக் கருதினால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்ள முடியும். குறித்த காணிக்கு தடையுத்தரவு விண்ணப்பம் போடப்பட்டால் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/235738
-
சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ
சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ 11 Jan, 2026 | 12:30 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுவதுடன், 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது இரண்டு நாள் பயணத்தின் போது, வோங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக நீடிக்கிறது. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்கு இந்தக் கப்பல் விவகாரமே பிரதான காரணமாகக் கருதப்படும் நிலையில், வோங் யீயின் வருகையின் போது இவ்விடயம் குறித்து எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/235736
-
மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு
மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு 11 Jan, 2026 | 12:20 PM தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படுவதாக மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சிரேஷ்ட உறுப்பினர் ஜூவரட்ணம் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், இடம் பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானோர் தங்கியுள்ள மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அத்தகைய முன்னேற்றம் காணப்படவில்லை. ஏற்கனவே நிலவும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இம்மக்கள் அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களை அணுகுவதில் போதிய கொள்கைத் தெளிவின்மை, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அனுபவக்குறைவு போன்றவை பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிலத்திற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் மற்றும் வீடமைப்பிற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவியை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உடனடியாகத் தெளிவுபடுத்துவதோடு, நிலங்களை அடையாளம் காண்பதற்கும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் பல்தரப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். மேலும், தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்திய வீடமைப்புத் திட்டத்தைப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அபாயகரமான இடங்களுக்குத் தள்ளாமல் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் பாதுகாப்பான நில உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235734
-
Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 11 Jan, 2026 | 11:37 AM முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் - படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை (10) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எண்ணக்கருவை நனவாக்கும் வகையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து 900 முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களுக்கு சிறுவர்களின் அடையாளம் காணப்பட்ட பத்து ஆளுமைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் கருவிகள் மற்றும் சிறப்பு வள கருவிகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் மாகாண ஆளுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/235729
- Today
-
2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல்
2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல் 11 Jan, 2026 | 04:12 PM (எம்.மனோசித்ரா) யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் சுமார் 2,200 காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 2016ஆம் ஆண்டு மரண சான்றிதழ் வழங்கும் சட்ட திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களே வழங்கப்பட்டதாகவும் பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது : யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010இல் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010ஆம் ஆண்டு 10ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தற்காலிக ஏற்பாடுகள் மரணங்களைப் பதிவு செய்தல் சட்ட திருத்தம் அக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு தற்காலிக சட்ட ஏற்பாடுகளுக்கமைய, யுத்தத்தின் போது மாத்திரமின்றி, இயற்கை மரணம், யுத்த மோதல்கள், சிவில் கலவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதலே வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் சட்ட திருத்தத்தின் ஊடாக காணாமல் போனமைக்கான சான்றிதழ் (Certificate of Absence) வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் 2016இல் நிறுவப்பட்டது. சட்ட திருத்தத்துக்கமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைக்கமைய பதிவாளர் திணைக்களத்தினால் காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்க முடியும். வழமையான மரண சான்று பதிவு சட்டத்தின் கீழ் மரணத்தைப் பதிவு செய்வதற்கு மரணித்த நபர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு, அதனை உறுதிப்படுத்துவதற்கு நபரெர்ருவர் முன்னிலையாக வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து மரண சான்றிதழ் வெளியிடப்படும். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் இதுவரையில் 2,200க்கும் மேற்பட்டோருக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 300ஐ தவிர ஏனைய அனைத்தும் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இராணுவ மரணங்களும் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1951ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் 39 - 4 ஆ உறுப்புரைக்கமைய அவசர கால சட்டத்தின் கீழ் மரண பதிவு தொடர்பில் பதிவாளர் நாயகத்துக்கு விசேட அதிகாரம் உரித்தாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 24,808 இராணுவ மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (1990-12-12 முதல் 2017-05-29 வரை) காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். எனினும் காணாமல் போனோர் அலுவலகம் மக்கள் மத்தியில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் போனோர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளும். அதனை அடிப்படையாகக் கொண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் சான்றிதழ் வழங்கப்படும். இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்கும் போது எமது திணைக்களத்துக்கு நபர்கள் வருவதில் குறைபாடுகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதாவது அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கமைய எம்மால் சான்றிதழ்கள் வழங்கப்படாமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் நடமாடும் சேவையை முன்னெடுக்கும் போது, எமது திணைக்களத்தின் பதிவாளர் அதிகாரியொருவர் அங்கு சேவையில் இணைக்கப்பட்டு பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் காணாமல் போனோர் அலுவலகம் - பதிவாளர் திணைக்களத்துக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களுக்கிடையிலான இடைவெளியை இனங்கண்டு அதனை சமப்படுத்துவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235767
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இந்தியாவினை அன்று ஆட்சிசெய்த தலைமையினால் எம்மீது நடத்தப்பட்ட கொடுமைகள் பற்றிப் பேசுவதும், நீதிகேட்பதும் இந்தியாவையே எதிர்ப்பதாக அமைகின்றது என்று எப்படி முடிவுசெய்தீர்கள்? அப்படியானால் நாம் எமக்கு நடந்தவைக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதுதானே உங்கள் முடிவாகிறது? இதையேதான் இலங்கை அரசாங்கத்தின் அன்றைய கால தலைமைப்பீடத்திற்கும் பொருந்தும் என்றும் கூறுவீர்களா?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இதனை ஏன் கூறினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நல்ல மனிதர் என்று எப்படி முடிவுசெய்தீர்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை எம்மை அழித்தவர்கள் நிம்மதியாக வாழவோ அல்லது அமைதியான வழியில் மரணிப்பதையோ நான் விரும்பவில்லை. அவர்களின் குற்றங்களுக்கான தண்டனையினை அவர்கள் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும், ஏதோ ஒரு வகையில். அதிலும் குறிப்பாக ஒரு இனத்தின் இருப்பையே நிர்மூலமாக்கிவீட்டுச் செல்பவர்கள் தமக்கான தண்டனையினை அனுபவிக்கவேண்டும். இதனைக் கூறுவதால் நான் கெட்ட மனிதன் என்று ஆகுமானால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது எப்போது நடந்தது? அமெரிக்கா இதனை யாரிடம் தெரிவித்திருக்கிறது? தமிழர் பற்றி அமெரிக்கா திடீரென்று அக்கறை கொள்வது ஏன்? இதனை எப்படி அறிந்துகொண்டீர்கள்?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அழுந்திச் சாதல் என்பதன் மூலம் நான் சொல்ல வந்தது சாகும் தறுவாயிலாவது தான் ஈழத்தமிழருக்குச் செய்த கொடுமைகளை நினைத்துக் கொண்டு சாகவேண்டும் என்பதுதான். அதைவிடுத்து சாதாரண மரணம் என்பது கூடாது என்பதே எனது எண்ணம். அடுத்தது, தான் செய்த கொடுமைகளுக்கான தண்டனையினை அவர் வாழும் காலத்தில் அனுபவிக்கவேண்டும். அவர் சாகும் முன்னர் இது நடக்கவேண்டும். இவருக்கெதிரான வழக்குகள் பதியப்பட்டு இவரது குற்றங்களுக்கான தண்டனை கிடைக்கவேண்டும். இதுவே நான் விரும்புவது. உதாரணத்திற்கு ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமலும், கைதுசெய்யப்படாமலும் உலகின் ஏதோ ஒரு மூலையில், வயது முதிர்ந்து மரணிக்கும் தறுவாயினை எட்டுகிறான் என்று ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட அவனை, "வயது முதிர்ந்த ஒரு மனிதனை அழுந்திச் சாகு என்று கூறுவது சரியில்லை" என்றுதான் சொல்வீர்களோ? நீங்கள் மிகச் சிறந்த மனிதாபிமானியாக இருக்கலாம், என்னால் அப்படியிருக்க முடியாது. ஒற்றை மனிதனின் மரணத்திற்காக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்றும், அவர்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்தும் பழிவாங்கிய ஒருவரை சாதாரணமாக "வயது முதிர்ந்த மூதாட்டி" என்று கருணை காட்ட என்னால் முடியவில்லை. அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீங்கள் சென்று கூறிப்பார்க்கலாம். ஒருவர் வயது முதிர்ந்துபோவதால் மட்டுமே அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா என்ன?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
தனிநாடு என்பது எமது சிந்தனை வட்டத்திற்குள் இருந்து காணாமற்போய் பல வருடங்கள் கடந்துவிட்டது. எம்மில் எவரும் இப்போது தனிநாடு பற்றி யோசிப்பதில்லை. எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்கிற அவலமான நிலையில் நாம் இருப்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அதனை ஏன் செய்யவேண்டும்? புலிகளை முற்றாக அழித்தபின்னர், தமிழருக்குக்கான நியாயமான தீர்வினை நான் வழங்குவேன் என்று மகிந்த எம்மிடம் வாக்குறுதி அளித்தார், நாமும் அதனை நம்பியே போருக்கான உதவிகளைப் புரிந்தோம், ஆனால் போர் முடிந்தபின்னரோ மகிந்த எம்மை ஏமாற்றிவிட்டார் என்று தாமே முன்னின்று நடத்திய இனக்கொலையினை பசப்பு வார்த்தைகளால் அன்று மூடி மறைத்த காங்கிரஸ் கட்சி, தான் பதவியில் இருந்து விரட்டப்படும்வரை குறைந்த பட்சத் தீர்வான 13 ஆம் சட்டத் திருத்தத்தைத்தன்னும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அப்படியிருக்கையில் இனிமேல் அதனைச் செய்யும் என்று எப்படி நம்புகிறீர்கள்? குறிப்பாக ஈழத்தமிழர் மீது இன்றுவரை, அடிமட்டத் தொண்டன் முதல் கட்சியின் தலைமைவரை தனிப்பட்ட ரீதியில் பகையுணர்வு பாராட்டும் காங்கிரஸ் கட்சி எதற்காக எமக்கான தீர்வைத் தர விரும்புகிறது? அதனைச் செய்யவேண்டிய தேவை அதற்கு ஏன் வருகிறது? இல்லை. உண்மையாகவே நீங்கள் ரஸ்ஸிய அபிமானி என்று நாம் நம்புகிறேன். அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி இந்தியா இன்றுவரை ரஸ்ஸியாவின் எண்ணையினையும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. அதாவது ரஸ்ஸியாவுடன் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை இந்தியா கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்தியாவுடன் பகைக்கவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று எழுதினேன். மற்றையவர்களுக்கு எழுதிய கருத்தில் உங்களை மேற்கோள் காட்டியதன் காரணம் உங்களின் சிந்தனையினை மற்றையவர்களுக்கும் அறியத்தரவே. இதில் குழுச்சேர்ப்பு இடம்பெற்றிருப்பின், அதனையும் மறுக்கவில்லை.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகப்போகும் நட்பு எவ்வாறு ஈழத்தமிழருக்கு உதவியாக அமையும்? அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகப்போகும் நட்பு எமக்கு எந்தவிதத்தில் உதவும் என்று கருதுகிறீர்கள்? 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்கிறது என்பதற்காகவே இந்திரா அம்மையார் ஈழத்தமிழருக்கு உதவ முன்வந்தார், அதுகூட இந்தியாவின் நலன்களுக்காக மட்டும்தான், ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக இல்லை என்பது எமக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் எதிரும் புதிருமாக இருந்த காலத்தில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எமக்கு உதவ வேண்டும் என்கிற அழுத்தம் அன்று இருந்தது. ஆனால் அமெரிக்காவோ இன்று இந்தியாவுடன் நட்புப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறபோது, எமக்கு உதவ வேண்டும் என்கிற தேவையோ அழுத்தமோ காங்கிரஸின் இந்தியாவிற்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சரி, இந்தியா வழங்கப்போவது இல்லை, ஆனால் அமெரிக்காவே தீர்வை வழங்கும் என்று நீங்கள் கருதினால், அது எப்படி நடக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எமக்கான தீர்வை அமெரிக்கா ஏன் வழங்க விரும்புகிறது? அதற்குப் பிரதியுபகாரமாக அமெரிக்கா எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறது?
-
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன. ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன. “உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார். ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை. தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள். ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு. அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது? ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார். இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்? ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு. கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது. https://athavannews.com/2026/1459414
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன. ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன. “உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார். ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை. தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள். ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு. அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது? ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார். இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்? ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு. கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது. https://athavannews.com/2026/1459414
-
கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன. அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர். இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது. மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின. அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்" பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல் அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love, or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை. கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது. மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது. உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை. ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது. மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக. கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்]. அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம். தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்.. உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும் ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும் உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான் உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது உண்பது நாழி உடுப்பவை இரண்டே உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
-
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்றும் விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459396
-
சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா!
அடேங்கப்பா… இனி, சீனா பாடு திண்டாட்டம்தான்.
-
மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தேவை. 😂 - விசர் தம்பர். - 🤣
-
தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். https://athavannews.com/2026/1459391
-
மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
பைத்தியம் பிடித்தவனுக்கு... நோபல் பரிசு கொடுக்கக் கூடாது! 😂 🤣