stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 02:05 PM திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் குறிப்புகளும், இந்துஸ்தானி இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்களின் சாரோட் (Sarod) இசையும் இணைந்து ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. கருணை, மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகளாவிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த அல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இந்த அங்கீகாரம் குறித்து தலாய் லாமா, "இந்த விருதை நான் ஒரு தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கவில்லை. மாறாக, மனிதநேயம் மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். அமைதி, கருணை மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் எட்டு பில்லியன் மக்களுக்கும் சென்றடைய இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்." எனக் கருத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237601
-
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி!
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி! 02 Feb, 2026 | 04:55 PM பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237632
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம் Feb 2, 2026 - 07:17 PM பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார். "மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cml584kzb04r6o29nuwy6a6x6
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
உலகளவில் பாதி: இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் பாம்பு கடித்து பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் பாதி. கட்டுரை தகவல் செரிலன் மொல்லன் 2 பிப்ரவரி 2026, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி. மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். "பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது," என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce - GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார். ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும். சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. 2000 முதல் 2019 வரை, இந்தியாவில் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிர் இழந்திருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று 2020 ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது, உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 99% சுகாதாரப் பணியாளர்கள் விஷமுறிவு மருந்தை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விஷத்தின் நச்சுத்தன்மையை நீக்கும் உயிர் காக்கும் ஆன்டிபாடிகள் ஆகும். பாம்புக்கடியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 904 மருத்துவ நிபுணர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மோசமான உள்கட்டமைப்பு, மருந்து கிடைப்பதில் சிக்கல் மற்றும் போதிய பயிற்சி இல்லாமை போன்ற தடைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுதல் , அறுவை சிகிச்சைகள் அல்லது வாழ்நாள் முழுவதுமான உடல்நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதாகப் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புக்கடியால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக, 2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) இதை "மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்" என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது. உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள தகவல்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்; 1,00,000-க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற மக்களே பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,Strike Out Snakebite படக்குறிப்பு,மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் தேவேந்திராவின் காலை துண்டிக்க வேண்டியிருந்தது. மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகப்படியான உயிர் இழப்புகளும் காயங்களும் பதிவாகின்றன என்று மத்திய சத்தீஸ்கர் மாநில ஜிஎஸ்டி உறுப்பினரும் பயிற்சியாளருமான மருத்துவர் யோகேஷ் ஜெயின் கூறுகிறார். குறிப்பாகப் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏழை பழங்குடி மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். 2030-ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடி இறப்புகளைப் பாதியாகக் குறைக்கும் நோக்கத்தில், 2024-ஆம் ஆண்டில் இந்தியா பாம்புக்கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது. இது கண்காணிப்பு, விஷமுறிவு மருந்து கையிருப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட மருத்துவத் திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நிபுணர்கள் இது ஒரு சரியான முயற்சி என்று ஒப்புக்கொண்டாலும், அது சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை. "இந்தியாவில் பாம்புக்கடி என்பது ஏழைகளின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு எதிராகப் போதிய எதிர்ப்போ அல்லது நடவடிக்கையோ இல்லை. பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது"என்கிறார் ஜெயின். பாம்பு விஷம் சில நிமிடங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்து, பாம்பு வகையை பொறுத்து நரம்புகள், செல்கள் அல்லது சுற்றோட்ட மண்டலத்தைத் தாக்குகிறது. மருந்து செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் சுவாசக் கோளாறு, பக்கவாதம், திசு பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார். கிராமப்புற இந்தியாவில் மோசமான சாலைகள், மருத்துவமனைகள் செல்வதற்கான தூரம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில், குஜராத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு கர்ப்பிணி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்துக்குப் போதுமான வாகன வசதி இல்லாததால் குடும்பத்தினர் அவரை 5 கி.மீ (3 மைல்) தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. சில மாநிலங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பு வைத்து நிலைமையை மேம்படுத்த முயற்சிப்பதாக ஜெயின் கூறுகிறார். இருப்பினும், அதை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பல சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை மற்றும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் மருந்து எதிர்வினைகளை உண்டாக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. "விஷமுறிவு மருந்து சலைன் திரவத்துடன் கலந்து ஒரு மணி நேரம் நரம்பு வழியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல மையங்களில் பக்கவிளைவுகளைக் கையாளும் வசதிகள் இல்லை" என்று ஜெயின் கூறுகிறார். மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களில் உள்ள பலர் இன்னும் நாட்டு வைத்தியம் அல்லது உள்ளூர் மருத்துவ முறைகளை நம்பியிருக்கிறார்கள். நிலைமை மோசமான பிறகு மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதால் , அது ஆபத்தில் முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,The Liana Trust படக்குறிப்பு,ஜெர்ரி மார்ட்டினின் தி லியானா டிரஸ்ட், பிராந்திய பாம்பு இனங்களின் கடிக்கு மாற்று மருந்துகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மனித-பாம்பு மோதல்களைக் குறைக்கப் பணியாற்றும் 'தி லியானா டிரஸ்ட்'அமைப்பின் இணை நிறுவனர் ஜெர்ரி மார்ட்டின், உயர்தர விஷமுறிவு மருந்து கிடைப்பதில் உள்ள சிக்கலே மற்றொரு பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகிறார். தற்போது இந்தியாவில் உள்ள விஷமுறிவு மருந்து, இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான "பிக் ஃபோர்" என்று அழைக்கப்படும் நான்கு நச்சுப் பாம்புகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. அவை, நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும். இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு இவை காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பாம்புகளின் விஷத்தை குதிரைகளுக்கு செலுத்தி, அவற்றின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக இந்த விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை பற்றி மார்ட்டின் விளக்குகிறார். "ஆனால், இந்தியாவில் இன்னும் பல்வேறு வகையான விஷப் பாம்புகள் உள்ளன, அவற்றுக்கான பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் நம்மிடம் இல்லை." இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் க்ரீன் பிட் வைப்பர் (Green pit viper), தென்னிந்தியாவில் உள்ள மலபார் பிட் வைப்பர் (Malabar pit viper), ஹம்ப் நோஸ்ட் பிட் வைப்பர் (hump-nosed pit viper) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனங்கள் இதில் அடங்கும். கடந்த ஆண்டு ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS) நடத்திய ஆய்வு இந்த சிக்கலை உறுதிப்படுத்தியது. சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் விஷ முறிவு மருந்து 105 பாம்புக்கடி நோயாளிகளுக்கு (கடித்த பாம்புகளின் இனங்கள் தெரியவில்லை) வழங்கப்பட்ட போது, மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சிகிச்சைக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று கண்டறியப்பட்டது. "மேற்கு இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுவதாக" அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'தி லியானா டிரஸ்ட்' இந்த நான்கு நச்சுப் பாம்புகள் தவிர பிற பாம்புகளின் விஷம் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கான மாற்று மருந்துகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இது அதிக உழைப்பும் காலமும் தேவைப்படும் செயல் என்பதால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என மார்ட்டின் கூறுகிறார். கர்நாடக அரசால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவில் பாம்புக்கடியை "தெரியப்படுத்தப்பட வேண்டிய நோய்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்புக்கடி சம்பவங்களை மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் பாம்புக்கடி சம்பவங்கள் குறைவாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. "அரசியல் விருப்பம் எங்கு முடிகிறதோ, அங்குதான் பாம்புக்கடி மரணங்கள் தொடங்குகின்றன" என்று மருத்துவர் ஜெயின் கூறுகிறார். "ஏழை மக்கள் மோசமான சுகாதார கட்டமைப்பைப் பெறக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் சிறந்ததைப் பெற தகுதியானவர்கள்" என்றும் அவர் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqede7wwxlo
-
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Feb 2, 2026 - 06:50 PM 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cml57706i04r5o29nh8nh67xg
-
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு 02 Feb, 2026 | 04:34 PM மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் செயல் பாகிஸ்தான் கடற்படையின் திறமையை உலகிற்குக் காட்டுவதுடன், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான சகோதரத்துவ உறவையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மீட்புப் பணிக்குப் பிறகு, மீட்கப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று பாகிஸ்தான் அரசுக்கும், கடற்படைக்கும் நேரில் நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் கடற்படையினர் எடுத்த முடிவால்தான் தங்கள் உறவினரின் உயிர் பிழைத்தது என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். அவர்களை வரவேற்ற இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர், "பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான நட்பு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல; இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவானது. கடல் பாதுகாப்பு முதல் மற்ற அனைத்து உதவிகள் வரை, இலங்கை சகோதரர்களுக்குத் தோள் கொடுக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கும்," என்று உறுதியளித்தார். இந்தச் சம்பவம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆபத்து காலங்களில் பாகிஸ்தான் கடற்படை ஒரு நம்பகமான நண்பனாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. https://www.virakesari.lk/article/237620
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுமந்திரனுக்கு.... இப்போ ஒரு பதவியும் இல்லாததால்.... ஏற்பட்ட அவமானத்தை மறைக்க... நானும் "ரவுடி" தான் என்ற நினைப்பில் செய்கின்ற வேலைகளை எல்லாம்... அவருக்கு எதிராகவே திரும்புகின்றது. ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த களமிறங்கிய அரியநேந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது பதவிக்காக சங்கோடு புதிய உறவை ஆரம்பித்திருக்கிறார் சுமந்திரன்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கடந்த வாரம் ஒரே அமைப்பாகவுள்ள கட்சிகள் பிரிந்து நின்று கனடிய புதிய தூதுவரை சந்தித்துள்ளனர். 1)சுமந்திரனும் சிவஞானமும் ஒரு சந்திப்பு 2) அதே கட்சியைச் சேர்ந்த சிறிதரன் ஒரு சந்திப்பு 3)சுரேஸ் பிரேமசந்திரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் தனியாக சந்திப்பு. 4) முன்னணியுடன் சந்திப்பே இல்லை. வெளிநாட்டு தூதுவருடன் குடும்ப பிரச்சனை பற்றியா பேசுகிறார்கள். மக்களுக்காக பேசுவதானால் ஒன்றாக பேசலாமே?
-
தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.
தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. --- --- --- *1970 களில் விடுதலை இயக்கங்களை உருவாக்கிய காரணங்கள், 2009 இற்குப் பின்னர், எவ்வித தடைகளும் இன்றி, அரசாங்கத்தால் தொடரப்படுகிறதே! பண்டாரநாயக்கா, ஜேஆர் - இன்றைய அநுர வரை... *புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தும் இலங்கை.. *இந்திய நிதியுதவி எங்கு பயன்படுத்தப்படும்? --- --- --- இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது. சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் - நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. ஏன், அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைக்குப் பெருமளவு நிதிகளை அள்ளி வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை, சமகால புவிசார் அரசியல் சூழல் உருவாக்கி வருகிறது... 2009 இல் இருந்த புவிசார் அரசியல் சூழலைப் பயன்படுத்தி எவ்வாறு ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதேபோன்ற ஒரு புவிசார் அரசியல் போட்டி 2026 இல் உருவாகியுள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார பலவினங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலை விவகரமும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வைக்குள் மூழ்கும் ஆபத்துகள் நெருங்கியுள்ளன... குறிப்பாக ---- தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் கிவுல் ஓயாத் திட்டம் போன்ற பல திட்டங்களை செயற்படுத்தி, அதற்குரிய நிதிகள். தொழில்நுட்ப உதவிகளைக் கூட பெறுவதற்குரிய ஏற்பாடுகள் உண்டு. பெருமளவு நிதி வழங்குகின்ற இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று மாத்திரமே கேட்கும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துங்கள் எனவும் இந்தியா அழுத்தம் கொடுக்கும்.. அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்னர், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று அநுர அரசாங்கம் வேறு கதைகளைக் கூறிச் சமாளிக்கும். 13 ஆவது திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வு அல்ல என்பது வேறு.. தமிழர்கள் அதிகமானோர், ஏற்கவில்லை என்பதும் வேறு... ஆனால் -- 13 ஐ கூட நடைமுறைப்படுத்த அநுர மாத்திரமல்ல, வேறெந்த ஒரு சிங்களத் தலைவர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை... 2009 இற்குப் பின்னர், 13 கூட தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதே சிங்கள பெளத்த தேசிய நிலைப்பாடு... ஆனால் -- 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோய குடியேற்றத் திட்டச் சிந்தனை, 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கில் நிறைவேற்றப்படுகிறது. அதுவும் வெளிநாடுகளின் நிதியுதவியில்.... குறிப்பாக --- A) நில அபகரிப்புகள் B) வடக்கு கிழக்கு நிலத் தொடர்புகளைத் துண்டிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்.. C) புத்த சிலை வைத்தல் - விகாரை அமைத்தல்.. கிவுல் ஓயா போன்ற நீர்ப்பாசணத் திட்டங்கள்.. இதனை விளக்கமாகச் சொல்வதானால் -- 1970 களில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயககங்கள் உருவாவதற்கான காரண காரியங்கள், 2009 இற்குப் பின்னர் எந்தவிதமான தடகளும் இன்றி தொடருகின்றன என்று கற்பிதம் செய்ய முடியும்... அதற்கு வசதியாக தமிழ்த்தரப்பின் கவனத்தை திசை திருப்ப, 2009 இற்குப் பின்னர் பல சதித் திட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தமிழ்த்தரப்பும் அதற்குப் பலியாகித் தமக்குள்ளேயே அடிப்பட்டுக் குத்துப்பட்டுத் தம்மைத் தாமே தரம் தாழ்த்தி வருகின்றன. குறிப்பாக, அநுரவின் ஆட்சிக் காலத்தில் .... 1) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நாகரிகமற்ற வாக்குவாதங்கள். 2) தமிழர்களிடம் நிர்வாகத் திறன் இல்லை என்று காணிக்கும் நடைமுறைகள். 3) சிங்கள தலைவர்கள் - சிங்கள அரச அதிகாரிகள் நல்லவர்கள் என்று கண்பிக்கும் உத்திகள்... 4) சுமந்திரன் - சிறீதரன் மோதல். தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் கருத்து வெளிப்பாடுகள்... 5) மாவை சேனாதிராஜா மாமனிதர் என்ற விவகாரம்.. 6) சுமந்திரன் - கஜேந்திரகுமார் தரப்பு மாறி மாறி வசைபாடுதல். 7) நல்லூர் ஆலயச் சூழலில் உலகக் கிண்ணக் கோப்பையை கொண்டு வந்த விவகாரம்... போன்றவை பற்றிய வாதங்கள், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை தொடர்பான சிந்தனைகளைத் திட்டமிட்டு திசை திருப்புகின்றன. இச் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சில தமிழ் உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துடையோர் உடந்தையாக உள்ளனர் என்பது பட்டவர்த்தனம். ஆகவே -- 16 வருடங்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் தமக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் சதிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல், தமிழ்ச் சமூகம் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்கிறது? ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து. பொது அமைப்புகள் - சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.... குறிப்பாக--- ஜேஆர் காலத்தில் இருந்து, ஏன் பண்டாரநாய்கா. சேனநாயக்கா காலத்தில் இருந்து இன்றைய அநுர வரையும், தமிழர் விவகாரத்தில் சிங்கள தலைவர்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டோடு தான் செயற்பட்டு வருகின்றனர் என்பதை, வரலாறு காட்டி நிற்கிறது... இது தமிழர்களுக்கான இலகுவான அரசியல் விஞ்ஞான விளக்கம்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032RqM5BgwgzJeZzVRtvoh1HxopvY7K6zX1KVng39WXUqh9kPdEa9vTAqwCyrTFQcfl&id=1457391262
- Today
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அர்ச்சுனாவுக்கும்... முதல் அமைச்சராகும் ஆசை உள்ளது. கடந்த தேர்தலில், அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக வந்ததே... சுமந்திரனின் எதிர்ப்பு வாக்குகள் தானே. கௌசல்யா எடுத்த வாக்குகளை கூட, சுமந்திரனால் எடுக்க முடியாமல் போய் விட்டது. வரும் மாகாணசபைத் தேர்தலில்.... சுமந்திரனும், அர்ச்சுனாவும் வாக்குகளை பிரிக்க... அனுரா கட்சி, வடமாகாண சபையை கைப்பற்றி, முதல்வராக வருவார்கள். தேசியக் கட்சியையும், அர்ச்சுனாவையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தது சுமந்திரனின்... லூசுத்தனமான வேலைகள் மட்டுமே. இப்போ... தனக்கு ஒரு இடமும் இல்லாமல், தனது கட்சிக்குள்ளேயே குழிபறிப்பு செய்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டு இருக்கின்றது, சுமந்திரன் என்ற வெங்காயம்.
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
இந்தப் போராட்டம் என்னாச்சு? பத்திரிகைகள் காணொளிகளில் எதையும் காணவில்லை. நல்ல கூட்டமாக உள்ளது. முதலமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது.
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
அமெரிக்க பொருட்களுக்கு வரி எப்படி? ரம் மோடி மீது ரொம்ப கடுப்பாக உள்ளார் யுவர் ஆனர்.
-
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு
கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம் உள்நுழைகிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மன்னிக்கவேண்டும். வயது போயிட்டுது என்ன கந்தப்பு படத்தைப் போடவா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மன்னிக்கவேண்டும். வயது போயிட்டுது. 😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந்து அணியைப் போடவும் கிருபன் ........! VARRUN......! நன்றி பையா .........! 71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
ராணுவத்திற்கு ரூ.7.8 லட்சம் கோடி ஒதுக்கீடு: சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இது போதுமானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வரும் நிதியாண்டில் பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.84 லட்சம் கோடியாக உள்ளது. கட்டுரை தகவல் முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6,81,210 கோடியாக இருந்தது, அதே சமயம் வரும் பட்ஜெட்டில் இது ரூ.7,84,678 கோடியாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தகவல்படி, வரவிருக்கும் பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த வளப் பயன்பாட்டிற்காக கொள்முதல் முறையை எளிதாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தப் பிரிவில் எவ்வளவு தொகை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூலதனச் செலவினத்திற்கான ஒதுக்கீடு கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டின் கீழ் வரும் 'மூலதனச் செலவினம்' (Capital Outlay) அதிகபட்சமாக 21.84 சதவீத உயர்வு கண்டுள்ளது. முன்னதாக இது ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் கொள்முதல் இந்த மூலதனச் செலவின ஒதுக்கீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. இது தவிர, பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில் 17.24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.3.11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில்தான் அன்றாட செயல்பாட்டுச் செலவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் கீழ் பராமரிப்பு, எரிபொருள், பழுதுபார்ப்பு மற்றும் ஊதியம் போன்ற செலவுகள் அடங்கும். ஓய்வூதியம் 6.53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, இது தற்போது 1.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்த 15 சதவீத உயர்வு, கடந்த ஆண்டு மே மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு ராணுவ மோதல் ஏற்பட்ட ஒரு கால கட்டத்தில் வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக இந்தியா கூறியது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்று பெயரிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்து ராணுவ மோதல்கள் நின்றதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்தக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். "பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும். பாதுகாப்புத் துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வு அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதா? என்கிற கேள்விக்குப் பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி, புதிய பாதுகாப்பு பட்ஜெட்டை 'போதுமானதாக இல்லை' என்று கூறுகிறார். "பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வகையில் பார்த்தால், 15 சதவீத உயர்வு என்பது பூஜ்யமாகிவிடும். இதன் காரணமாக இதை ஒரு 'மாற்றமில்லாத பட்ஜெட்' என்றே அழைக்க வேண்டும்" என்கிறார். ராணுவத்தை நவீனப்படுத்த இது போதுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவத்தின் நவீனமயமாக்கல் குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது, டிரோன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு மாறுபட்ட போர் முறை காணப்பட்டது. சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், இந்திய ஆயுதப் படைகள் 'நெட்-சென்ட்ரிக்' (Net-centric) போரிலிருந்து 'டேட்டா-சென்ட்ரிக்' (Data-centric) போரை நோக்கி நகர்ந்து வருவதாகவும். இதில் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேம்பட்ட சென்சார் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் போர்க்களத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பது கடினமாகி வருவதாகவும், வெற்றிக்குத் தொழில்நுட்ப மேன்மை அவசியம் என்றும் அவர் கூறினார். நவீன தொழில்நுட்பம் இருப்பது மட்டும் போதாது, ராணுவத் தலைமை அறிவுப்பூர்வமாக தயாராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் இதேபோன்ற கருத்தை முன்பும் கூறியிருக்கிறார். இந்த பாதுகாப்பு பட்ஜெட் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? இந்தக் கேள்விக்கு ராகுல் பேடி பதிலளிக்கையில், இந்தியா 114 புதிய போர் விமானங்களையும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது என்றார். "ஜெர்மனியுடன் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உள்ளது. மேலும் 114 புதிய போர் விமானங்கள் வாங்கப்படும், இந்த 30-35 பில்லியன் டாலர் ஒப்பந்தம் யாருடன் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான பணம் ஒரே நேரத்தில் வழங்கப்படாது, ஆனால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பேரங்கள் நடத்தப்பட வேண்டும்." என்கிறார். "ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு, ராணுவத் தளபதி, சிடிஎஸ், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனர். இதற்குப் பணம் தேவைப்படுகிறது, பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வைக் கொண்டு இதைச் சாதிப்பது கடினமாகத் தெரிகிறது." ஆங்கில இதழான 'தி வீக்' இதழின் மூத்த உதவி ஆசிரியர் சஞ்சீவ் குமார் பருவா அந்த இதழின் யூடியூப் சானலில் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகமே மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை பெறும் அமைச்சகமாகும். மொத்த பட்ஜெட்டில் இதன் பங்கு 14.68 சதவீதமாகும், இது கடந்த ஆண்டு 13.45 சதவீதமாக இருந்தது என்று கூறினார். "பாதுகாப்பு பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் ஒருபோதும் எளிதானவை அல்ல. பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியைப் பற்றி விவாதிக்கவும் கணக்கிடவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்தபோது, பல காரணிகள் அவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும். உதாரணமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதற்குப் பிந்தைய நிலைமை, சீனாவின் வேகமான தொழில்நுட்ப மற்றும் ராணுவ முன்னேற்றம், இந்தியாவின் தற்சார்பு முன்னெடுப்புகள் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்களின் உடனடித் தேவை போன்றவை." "2026-27-க்கான இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டின் பாதுகாப்பு பட்ஜெட்டான ரூ. 6.81 லட்சம் கோடியை விட 15.27% அதிகமாகும். பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும், ராணுவ நவீனமயமாக்கலின் வேகம் நீடிப்பது மட்டுமல்லாமல், மேலும் துரிதப்படுத்தப்படும் என்பதையும் இது குறிக்கிறது." நவீனமயமாக்கலுக்குப் போர் விமானங்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் போதுமா? இதற்கு ராகுல் பேடி கூறுகையில், "இன்றைய காலத்தில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் டிரோன்கள் மற்றும் சைபர் போரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது" என்கிறார். "இந்திய விமானப்படையில் 42 படையணிகளுக்கு (Squadron) அனுமதி உள்ளது, ஆனால் இன்று 29-30 படையணிகள் மட்டுமே உள்ளன. ஒரு படையணியில் சுமார் 20 விமானங்கள் இருக்கும், இதன் மூலம் 250-300 விமானங்கள் தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பல்கள் பழையதாகிவிட்டன, அவற்றை மாற்ற வேண்டும். ஹெலிகாப்டர்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் பழையதாகிவிட்டன, அவற்றின் இடத்திற்குப் புதியவை வரவேண்டும்." "நாம் இந்த வழியில் பார்த்தால், பல தேவைகள் உள்ளன மற்றும் இந்த அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, பட்ஜெட்டில் பணம் தேவைப்படுகிறது." சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் எங்கே உள்ளது? பட மூலாதாரம்,AFP கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, ஜூன் மாதம் பாகிஸ்தான் தனது 2025-26 நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை 20.2 சதவீதம் உயர்த்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 2122 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2550 பில்லியனாக உயர்த்தப்பட்டது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.97 சதவீதமாகும். சீனாவைப் பொறுத்தவரை, 2024-இல் பாதுகாப்பு பட்ஜெட் அதன் 18.74 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் 1.7 சதவீதமாக இருந்தது. வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் 2024-ல் அதன் 450 பில்லியன் டாலர் ஜிடிபியில் வெறும் 0.9 சதவீதமாக இருந்தது. மறுபுறம், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட் அதன் மொத்த ஜிடிபியான 4 டிரில்லியன் டாலரில் 1.9 சதவீதமாகும். இந்தத் தரவுகளின்படி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் இந்தியாவை விட மிகச் சிறியது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சீனாவை விட மிகச் சிறியது. மூன்று நாடுகளின் பட்ஜெட் ஒப்பீடு குறித்து ராகுல் பேடி கூறுகையில், "சீனாவின் பட்ஜெட் நம்மை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. பாகிஸ்தானின் பட்ஜெட்டைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, ஏனெனில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல அண்டை நாடுகளுக்கும் சீனா உதவுகிறது. எனவே ஒப்பீடு செய்ய முடியாது" என்கிறார். இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் அதன் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும்? ராகுல் பேடி கூறுகையில், பாதுகாப்பு பட்ஜெட் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக இல்லாதவரை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்கிறார். "1962-இல் சீனாவுடன் போர் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை மொத்த பாதுகாப்பு பட்ஜெட் ஜிடிபியின் இதே புள்ளிவிவரத்தைச் சுற்றியே உள்ளது. நமது நாட்டின் ஜிடிபி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு பட்ஜெட் 2 சதவீதத்தை ஒட்டியே உள்ளது. ராணுவத்தின் தேவை எப்போதும் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாகவே இருந்து வருகிறது." "நாம் ராணுவத்தை விரைவில் நவீனப்படுத்த வேண்டுமானால், பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crml9knp80ro
-
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 08:46 AM வெனிசுவேலாவில் 07 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237593
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தலைவரே நீங்கள் தெரிவு செய்த வீரர் இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை...... அவுஸ்ரேலியா வீரர் மிச்சில் ஸ்ராக் விளையாட வில்லை...............
-
உலக சதுப்பு நில தினம் இன்று!
உலக சதுப்பு நில தினம் இன்று! Feb 2, 2026 - 07:17 AM உலக சதுப்பு நில தினம் இன்று ( 02) இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி 'உலக சதுப்பு நில தினமாக' ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம் அறிவித்தது. பின்னர், இது ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது. அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது. அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது. மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலக சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாக "சதுப்பு நிலங்களுக்காகச் செயற்படுங்கள், இயற்கைச் சூழலுக்காகச் செயற்படுங்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml4ifvgz04puo29ndvszflta
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.virakesari.lk/article/237614
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@suvy ஐயா, பங்களாதேஷ் விளையாடமாட்டேன் என்று விலகியதால் ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பதில்களில் பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைப் போடவா அல்லது கீழே உள்ள புதுப்பித்த கேள்விக்கொத்தைப் பாவித்து பதில்களைத் தரமுடியுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரை இறுதி போட்டிக்கான 71 வது வினாவுக்கு வீரப்பையன் நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளை தெரிவு செய்து இருக்கிறார். சுவி ஒரு நாட்டினையும் தெரிவு செய்யவில்லை ( 72 ம் கேள்விக்கும் விடை எழுதவில்லை).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றி நமதே ........! 🙂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Enter a Team என்றால் நீங்கள்தான் ரைப் பண்ணவேண்டும்😀