Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஐபிஎல்: கொல்கத்தா அணியில் முசரபானி கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட முசரபானி, 2017-ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசரபானி, 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துளளார். முசரபானி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களான சிபிஎல், ஐஎல்டி20, பிஎஸ்எல், இங்கிலாந்தின் விட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றின் மூலம் நிரூபித்துள்ளார். முசரபானி ஐபிஎல் அணியுடன் இணைவது இது 2-வது முறையாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முசரபானி வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியுடன் இணைய உள்ளார். https://www.hindutamil.in/news/sports/musharrafani-in-kolkata-knight-riders
  3. Today
  4. “தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென் ஆப்பிரிக்கா அணிதான் இந்த உலகக்கோப்பையிலேயே முட்டாள் அணி, அவர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் என்று உளறிக்கொட்டியுள்ளார். இந்தியா 3-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச்செல்ல தென் ஆப்பிரிக்கா செய்த மடத்தனமே காரணம் என்று சாடியுள்ளார் மைக்கேல் வான். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மே.இ.தீவுகளை வெல்லச் செய்திருந்தால் இந்திய அணி வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் முட்டாள்தனமாக தென் ஆப்பிரிக்கா அந்தப் போட்டியில் வென்றதால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து இங்கிலாந்தை பந்தாடி பிறகு இறுதியில் நியூசிலாந்தையும் பந்தாடி மகுடம் சூடியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை 76 ரன்களில் அதிர்ச்சிகரமாக மண்ணைக்கவ்வச் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு அரையிறுதியைக் கடினப்படுத்தியது. இதனையடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டி காலிறுதி போல் நாக் அவுட் ஆட்டமாக வாழ்வா சாவா ஆட்டமாக மாறி அதில் சஞ்சு சாம்சனின் அதியற்புத இன்னிங்சினால் வெற்றி கண்டது இந்தியா. இந்நிலையில் மைக்கேல் வான், “இந்த உலகக்கோப்பையில் முட்டாள் அணி எது என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். அது தென் ஆப்பிரிக்காதான். சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவுகளை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற விட்டிருந்தால் இந்திய அணி வெளியே போயிருக்கும். நான் கூறவருவது இதுதான் இந்தியாவை அப்புறப்படுத்தியிருந்தால் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்திருக்கும். மே.இ.தீவுகளை அந்தப் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டனர். இந்தியா அதன் பிறகு ஜிம்பாப்வேயையும் காலிறுதி போன்ற போட்டியில் மே.இ.தீவுகளையும் வீழ்த்தியது. பிறகு இங்கிலாந்தை வீழ்த்தினர். நான் இப்படிச் சொல்வதெல்லாம் போன்று ஒரு போதும் நடக்காது, நடந்ததும் இல்லை, நடக்கப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தொடரின் சிறந்த அணியை முன்னதாகவே வெளியேற்ற வேண்டும் என்பதையே.” என்றார். மைக்கேல் வான் பொதுவாகவே இந்தியா வெல்வதை எதிர்மறையாகவே பார்ப்பார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் கடக்க வேண்டும், சச்சின் டெண்டுல்கரிடம் அந்த சாதனை இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் இவருக்கு சர்வ சாதாரணம். ஆனால் இப்படியெல்லாம் உளறிக்கொட்டி இந்திய நெட்டிசன்களிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் நாக்கை அடக்க மறுக்கிறார் வான். கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரான இத்தகைய கருத்தை, அதாவது வேண்டுமென்றே தோற்க வேண்டும் என்ற கருத்தை ஒரு முன்னாள் வீரர், அதுவும் கிரிக்கெட்டில் பெரிய பிஸ்தா (ஆனால் பொட்டலம்) என்று சொல்லிக் கொள்ளும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இப்படிக் கூறியிருப்பது கிரிக்கெட்டின் ஓர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். “தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான்
  5. 109-வது 'பொன் அணிகளின் போர்': சமநிலையில் நிறைவு! Mar 14, 2026 - 09:19 PM 'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109-வது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இத்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று (14), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் (Draw) முடிவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவரை நடைபெற்ற 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmqhx1ew000p356pyuajctvv
  6. ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை Mar 14, 2026 - 08:46 PM ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பல நாடுகள் தமது வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இராணுவ பலத்தை அமெரிக்கா 100 சதவீதம் அழித்துள்ள போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqgvr2d000o356p67w8zxd2 வல்லரசுக்கு வந்த சோதனை!!
  7. opsdSreton5r3107m1af49à:m117566fa6L3e3 37m29tu5 7 8m07 21i1s · எத்தனை பேருங்க அடிச்சாங்க.... முதல்ல அபிஷேக் சர்மா அடிச்சாம்மா அப்புறம் சஞ்சு சாம்சன் அடிச்சாம்மா அப்புறம் இஷாந்த் கிஷன் அடிச்சாம்மா சரி இவனுங்களை அவுட்டாகிட்டால் போதும்டான்னு பாத்தால் ஷிவம் துபேன்னு ஒருத்தன் வந்தாம்மா அவன் பேட்டுல அடிச்சானா இல்லை ராக்கெட்ல அடிச்சானுன்னு தெரியலை அந்த அடி அடிக்கிறான் சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டு பேட்டிங் செஞ்சால் பும்ரான்னு ஒருத்தன் பந்து போட வந்தாம்மா அவன் பந்து போடுறானா இல்லை அணுகுண்டுகளை போடுறானான்னு தெர்லம்மா யாரையும் விட்டு வைக்கவே இல்லை அவன் பாட்டுக்கு போட்டுட்டே இருக்கான் அவுட்டாக்கிட்டு சாதாரணமா சிரிச்சிட்டு போயிட்டே இருக்கான்மா அப்புறம் அந்த சைலண்ட் வில்லன் அக்‌ஷர் பட்டேல்ன்னு ஒருத்தன் ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்து எங்க சோலிய முடிச்சிட்டான்மா அப்புறம் அந்த பீல்டிங் நின்னானே திலக் வர்மான்னு ஒருத்தன் அவன் க்ரௌண்ட்ல விழுந்து பந்தை புடிக்கிர மாதிரியே புடிக்கலைம்மா எங்க பந்து போனாலும் நீச்சல் குளத்தில் குதிக்கிர மாதிரி நீண்டு நீண்டு உழுந்து உழுந்து பந்தை புடிச்சிட்டே இருக்கான்மா அந்த இஷாந்த் கிஷன் பயபுள்ள அவன் எங்க நின்னாலும் அவன்கிட்டயே பந்து போகுதும்மா கோழிகுஞ்சை கழுகு தூக்குர மாதிரி கேட்ச் புடிச்சிட்டே இருக்கான்மா நாக்அவுட்ல 24 வருசமா அவன்களை தோக்கடிச்சதுக்கு தொடர்ச்சியா இரண்டு உலக கோப்பை பைனல்ல வச்சி செஞ்சு விட்டுட்டானுங்கம்மா.... Share from fb......!
  8. பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா தவெக? - மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி ஆஃபரை வெளியிட்டார் விஜய். இது திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் தங்களை நோக்கி வரும் என விஜய் நம்பினார். ஆனால், யதார்த்தம் வேறாக அமைந்தது. காங்கிரஸ் மீண்டும் திமுக-வுடனேயே பயணிக்க முடிவு செய்தது, விஜய்யின் ஆரம்பகட்ட வியூகத்துக்குப் பின்னடைவாக அமைந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக-வின் வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டால், மற்ற கட்சிகள் தவெக பக்கம் தலைவைக்கத் தயங்கின. இது ஒருபுறமிருக்க, சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க தவெக போட்ட திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இது குறித்து விவாதிக்க, நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒரு வேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (மார்ச் 14) விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று இரவு டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும். https://www.hindutamil.in/news/tamilnadu/is-vijay-joining-nda
  9. இந்தியாவில் இருந்த ஈரானிய கடற்படையினர் நாடு திரும்பினர்! Mar 14, 2026 - 07:59 PM இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் லவான்’ (IRIS Lavan) கப்பலில் இருந்த மாலுமிகளில் ஒரு தொகுதியினர் நேற்று (13) ஈரான் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 183 பணியாளர்களைக் கொண்ட அந்தக் கப்பலில் இருந்த ஒரு தொகுதியினரை விசேட விமானம் மூலம் ஆர்மீனியாவிற்கு அழைத்துச் செல்ல ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலுமிகளும், இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களும் ஆர்மீனியாவிலிருந்து தரைவழியாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள வந்த மற்றொரு ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த 204 மாலுமிகள் தற்போது இலங்கையின் வசம் உள்ளதுடன், அவர்கள் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஈரானிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் ஈரான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல், இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளானது. இதன்போது கப்பலில் இருந்த 32 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அக்கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையின் நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சடலங்கள் நேற்று (13) விசேட விமானம் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 32 மாலுமிகளில், குணமடைந்த 28 பேர் தற்போது கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும் நான்கு ஈரானிய மாலுமிகள் தொடர்ந்தும் அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqe4h5c000m356pocae3hwc
  10. இந்த செயலை யார் செய்தார் என்ற கேள்விக் குறி ஒரு புறமிருக்க..இவர் தீ பற்ற வைக்கும் மட்டும் ஏன் மற்றப் பயணிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஒரு வித கேள்விக் குறியாகவே இருக்கிறது..குறிபிட்ட நபரின் நடவடிக்கை சரியில்லை என்று நடத்துணரிடம் சொல்லி இருக்கலாம்..அப்படி யாராவது செய்திருப்பின் இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டு இருக்காது.
  11. ஜப்பானிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் Mar 14, 2026 - 05:57 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேரடங்கிய ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்தனர். இலங்கையின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் அதன் பரவல், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், பாரம்பரிய சடங்குகள், உணவு முறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிந்துகொள்வதே இந்தத் தூதுக்குழுவின் நோக்கமாகும். இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடிய அவர்கள், தாம் பெற்றுக்கொண்ட அறிவை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். அத்துடன், ஜப்பானில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர். https://adaderanatamil.lk/news/cmmqae4il000j356pkl2g81d0
  12. அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!
  13. ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு Mar 14, 2026 - 04:28 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் தற்போது 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து நிலவும் மோதல் சூழல் காரணமாக, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், மோதல்கள் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஈரானைச் சேர்ந்த 25,000 இற்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmq7p0yc000g356p3k8rhicf
  14. சைமனு… 1988 இல் இருந்து ஜெயலலிதாவோடு ஓருயிர், ஈருடலாய் வாழ்ந்து கொள்ளை மேல், கொள்ளை அடித்த சசி மாற்றம் வரவேண்டும் என கட்சி ஆரம்பிக்கிறார்…அதை நீங்க வரவேற்கிறீங்க😂 இதில 60 வருட மோசமான (அதில் பாதி ஜெ-சசி ஆட்சி) ஆட்சிக்கு மக்களும் பொறுப்பு என மக்கள் மீதே குற்றம் வேற சொல்கிறார். இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மூக்கிலேயே குத்தி டெபாசிட்டை காலி பண்ணுகிறார்கள்😂.
  15. தலைவர் பெயரை சொல்லி இயக்கம் நடத்தி கொண்டு, தலைவரின் ஆளுயர படத்தின் முன் நின்று, புலிகள் அழித்தொழிக்க படவேண்டிய தீய சக்தி என இலங்கை அரசு கூட நிறைவேற்றாத தீர்மானத்தை தமிழக சட்ட சபையில் நிறைவேற்றிய ஜெயை ஈழத்தாய், அவருக்கு வாக்கு போடுங்கள், போட்டால் ஈழம் மலரும் என சொன்னார் சீமான். எடப்பாடியை சந்திக்க தலைவர் படம் போட்ட புத்தகத்தோடு போனார் காளி. முதலாவதை ஊக்குவித்த உங்களுக்கு, இரெண்டாவது உறுத்துவதாக சொல்லுவது வினோதமானது😂. தனக்கு பதவி ஏற்கும் போது தலைவர் பெயரால் என சொல்லி பதவி ஏற்க ஆசை என உருகியவர் காளி. அது மட்டுமா, நீ அதிமுக க்குதான் வாக்கு போடுவேன்னா செத்துரு என்று கூட்டத்தில் பேசியவர் 😂. ஒரு எம் எல் ஏ சீட், துணை கொ ப சே க்கு இன்று எல்லாவற்றையும் கூவி கூவி விற்று விட்டார்😂. சீமான் தன்னை போலவே பச்ச்சோந்திகளையும், முகவர்களையும் உருவாக்கி உள்ளார் என்பதற்கு காளி நல்ல உதாரணம். இப்போதும் தலைவருக்காக கிடைக்கும் கொஞ்ச வாக்கையும் இழக்க விரும்பாத சுயநலமே அவர் புத்தகத்தை தூக்கி போனது:
  16. அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி: வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 01:39 PM அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார். சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், "நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது" என்று எச்சரித்தார். இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது. https://www.virakesari.lk/article/240942
  17. ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா? பட மூலாதாரம்,Victor de Schwanberg/Science Photo Library via Getty Images கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை 48 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எங்காவது ஒரு இணையான பிரபஞ்சத்தில் உங்களை ஒரு ராக்ஸ்டார் அல்லது விண்வெளி வீரராக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஒரு "மல்டிவர்ஸில்" பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற யோசனை பகற்கனவுகளையும் அறிவியல் புனைகதைகளையும் ஒருசேரத் தூண்டியுள்ளது - ஆனால் இது சில விஞ்ஞானிகளால் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலும் ஹாலிவுட்டில் சித்தரிக்கப்படுவதைப் போல் இல்லாமல் இருக்கலாம். அது உண்மையில் என்னவாக இருக்கும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம் நாம் நிச்சயமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் நமக்காக மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. "உதாரணத்திற்கு, ஈர்ப்பு விசை பலவீனமாக இருந்திருந்தால், நமது நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகியிருக்காது," என்று அமெரிக்காவின் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளரும், 'தி அலூர் ஆஃப் தி மல்டிவர்ஸ்' புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் பால் ஹால்பெர்ன் விளக்குகிறார். "மறுபுறம், ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருந்திருந்தால், பிரபஞ்சம் அதன் ஆரம்பத்திலேயே அழிந்திருக்கும்," என்று அவர் கூறுகிறார். உண்மையில், இயற்கையின் 'அடிப்படை மாறிலிகள்' என்று அழைக்கப்படுபவை சுமார் இரண்டு டஜன் உள்ளன - அவற்றின் துல்லியமான மதிப்புகள் நமது இயற்பியல் விதிகளைச் செயல்பட வைக்கின்றன. ஆனால் அவை எங்கிருந்து வந்தன? பட மூலாதாரம்,Roberto Machado Noa/Getty Images படக்குறிப்பு,நமது பிரபஞ்சத்தில் நாம் காணும் ஈர்ப்பு விசையின் குறிப்பிட்ட வலிமை, ஒளியின் வேகம், எலக்ட்ரானின் நிறை மற்றும் பல்வேறு மதிப்புகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் நமக்குத் தெரிந்த உயிர் வாழ்க்கையைச் சாத்தியமாக்குகின்றன. சிலர் இவை ஒரு தெய்வீகப் படைப்பாளரை - நமது பிரபஞ்சத்தைக் கவனமான துல்லியத்துடன் வடிவமைத்த ஒரு கடவுளைச் சுட்டிக்காட்டுவதாக வாதிடுகின்றனர். இருப்பினும் மற்றவர்கள் ஒரு மல்டிவர்ஸ் இருப்பதாகக் கூறி அவற்றை விளக்குகிறார்கள். இந்த மாறிலிகளின் குறிப்பிட்ட கலவையைக் கொண்டிருக்கும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் எப்படியோ இருந்தால், அறிவுள்ள உயிரினங்கள் இருக்கக்கூடிய ஒரு சரியான பிரபஞ்சத்தில் நாம் தற்செயலாக இருக்கிறோம். இவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? உயிரற்ற அந்த பிரபஞ்சங்களில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோம் என்பதால் இந்தக் கேள்வியைப் பற்றி அங்கே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வாய்ப்புகள் மிக அதிகம் என்று சிலர் கூறலாம். இது மானுடவியல் தத்துவம் (Anthropic principle) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான அனைத்து வகையான கற்பனை யோசனைகளையும் இயற்பியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர், இவை பெரும்பாலும் சிக்கலான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வோம். பல உலகங்கள் விளக்கம் முதலாவது எலக்ட்ரான்கள் போன்ற சிறிய துகள்களின் விசித்திரமான உலகமான குவாண்டம் மெக்கானிக்ஸில் இருந்து வருகிறது. இந்த நுண்ணிய உலகத்தை நாம் உற்றுநோக்கும்போது, ஒரு துகளின் பண்புகள் இயல்பாகவே நிலையானவை அல்ல என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு எலக்ட்ரான் இங்கேயோ அல்லது அங்கேயோ இருப்பதில்லை. மாறாக, அது இங்கேயோ, அங்கேயோ அல்லது சாத்தியமான வேறு எந்த இடத்திலோ இருப்பதற்கான சில நிகழ்தகவுகளைக் கொண்டுள்ளது. கிளாசிக்கல் கோட்பாட்டின்படி, யாராவது அந்தத் துகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்தகவுகள் ஓர் ஒற்றை எதார்த்தமாகச் சுருங்குகின்றன - எலக்ட்ரான் ஒரு நிலையான இடத்தைப் பெறுகிறது. அது அனைத்தும் நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கிறது. இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இன்று அறிவியலில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பட மூலாதாரம்,Antonio Masiello/Getty Images படக்குறிப்பு,ஆஸ்கார் விருது வென்ற 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம் மல்டிவர்ஸை மையமாகக் கொண்ட பல அறிவியல் புனைகதை திரைப்படங்களில் ஒன்று, ஆனால் இது விஞ்ஞானிகள் பொதுவாகப் பேசும் வகை அல்ல என்று ஹால்பெர்ன் கூறுகிறார். கடந்த 1957-ஆம் ஆண்டில், ஹக் எவரெட் III என்ற மாணவர் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார், அது பின்னர் 'பல உலகங்கள் விளக்கம்' என்று அழைக்கப்பட்டது: அதாவது ஒரு குவாண்டம் துகள் ஒரே ஒரு நிலையான எதார்த்தத்தை எடுப்பதில்லை. மாறாக, அது ஒரே நேரத்தில் சாத்தியமான அனைத்து எதார்த்தங்களாகவும் கிளைத்துச் செல்கிறது, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன. யாராவது இந்த குவாண்டம் துகளைப் பார்க்கும்போது, அந்த நபரின் உணர்வுள்ள இருப்பு பிரிகிறது என்று ஹால்பெர்ன் விளக்குகிறார்: ஒருவர் ஒரு எதார்த்தத்தைப் பார்க்கிறார், அவரது பிற பதிப்புகள் மற்றவற்றைப் பார்க்கின்றன. ஆனால் அந்த மாற்று வடிவங்கள் திரைப்படங்களில் நாம் காணும் அற்புதமான இணையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். "நீங்கள் ஒரு சினிமாவுக்கு செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படம் ஒருவரைப் பற்றியது, அவர் ஒரு எலக்ட்ரானை பூஜ்ஜிய நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிப்பதற்குப் பதிலாக, ஒரு நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிக்கிறார்," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். இத்தகைய நுட்பமான வேறுபாடுகள் "ஹாலிவுட் பாணியிலான கதையாக இருக்காது". இந்த மல்டிவர்ஸ் யோசனைக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் இது சிலரை அருவருப்படையச் செய்கிறது, அவர்கள் இதைச் சோதிக்க முடியாது என்கிறார்கள்: சரி பார்க்க நாம் நம்மை மற்றொரு பிரபஞ்சத்திற்கு அனுப்ப முடியாது இல்லையா? தத்துவஞானி கார்ல் பாப்பர் கருத்துப்படி, ஒரு கோட்பாடு தவறு என்று நிரூபிக்கப்படாவிட்டால், அது உண்மையான அறிவியல் அல்ல. பட மூலாதாரம்,Universal History Archive/Getty Images படக்குறிப்பு,ஆங்கில இடைக்கால பிரான்சிஸ்கன் துறவி வில்லியம் ஆஃப் ஓக்காம், 'ஓக்காம்ஸ் ரேஸர்' என்ற கொள்கைக்காகப் பாராட்டப்படுகிறார் - சமமான வாய்ப்புள்ள இரண்டு விளக்கங்களில் எளிமையானதைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தேவையற்ற ஊகங்களை நீக்குவது என்பதே அது. அந்த வாதம் சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணரான பேராசிரியர் ஜெரான்ட் லூயிஸை பாதிக்கவில்லை. ஒரு நாள் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்குச் செல்ல முடியலாம் என்று அவர் கூறுகிறார். "எதையாவது சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ளுவது என்றால் உங்களிடம் முழுமையான படம் இருக்க வேண்டும், ஆனால் நம்மிடம் இன்னும் அது இல்லை," என்று லூயிஸ் வாதிடுகிறார். அவர் ஒரு மாறுபட்ட எதிர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறார்: ஓக்காம்ஸ் ரேஸர் என்று அழைக்கப்படும் கொள்கை. "மிக அதிகமானவற்றை விளக்க உங்களுக்கு மிக எளிமையான சமன்பாடுகள் தேவை," என்று அவர் கூறுகிறார். "உங்கள் சிக்கலைத் தீர்க்க எண்ணற்ற பிரபஞ்சங்களை அழைப்பது, உங்கள் சிக்கலை முடிந்தவரை எளிமையாக்குவது போலத் தெரியவில்லை." நிலையான வீக்கம் மற்றொரு மல்டிவர்ஸ் யோசனை நமது அண்டத்தின் ஆரம்ப தருணங்களை மையமாகக் கொண்டுள்ளது. தற்போதைய முன்னணி கோட்பாடுகளின்படி, பிரபஞ்சம் ஒரு விநாடியின் மிகச்சிறிய பகுதியில் மிக வேகமாக விரிவடைந்தது. "அதிவேக விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருந்தது," என்று ஹால்பெர்ன் விளக்குகிறார். அது நின்றதும், அந்த ஆற்றல் பருப்பொருள் மற்றும் ஒளியாக மாறியது, இதைத்தான் நாம் பெரும்பாலும் பெருவெடிப்பு என்று நினைக்கிறோம், இது இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பிரபஞ்சத்திற்கு வழிவகுத்தது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI/Michael Ressler (Nasa-JPL) படக்குறிப்பு,பருப்பொருள் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் ஒரு நுண்ணிய கணம் விரிவடைந்ததாகவும் அதன் மூலம் நமது பால்வீதி போன்ற நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் தற்போதைய கோட்பாடுகள் கூறுகின்றன. இந்த அண்ட வீக்கம் நமது விண்வெளிப் பகுதியில் ஏன் தொடங்கியது அல்லது நின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. 1980-களில், சில இயற்பியலாளர்கள் வீக்கம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் முடிவடையவில்லை என்று பரிந்துரைத்தனர். ஒருவேளை அது நமது பகுதிக்கு அப்பால் தொடர்ந்து கொண்டிருக்கலாம். இந்த "நிலையான வீக்கம்" யோசனையின் ஒரு பதிப்பில், வீக்கம் எங்கு நின்றாலும், விண்வெளியின் அந்தப் பகுதி அதன் சொந்த பிரபஞ்சமாகப் பிரிந்துவிடும். மேலும் ஒவ்வொரு பிரபஞ்சமும் வித்தியாசமாக இருக்கும்: சில மிக வலுவான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கலாம், மற்றவை எதையும் கொண்டிருக்காமல் இருக்கலாம். "அவற்றில் பெரும்பாலானவை உயிரற்றவையாகவும் மலட்டுத்தன்மையுடனும் முடியப் போகின்றன," என்கிறார் லூயிஸ். "அவ்வப்போது நீங்கள் வசிக்கக்கூடிய சிலவற்றைப் பெறுவீர்கள்." ஆனால் ஒரு குவாண்டம் மல்டிவர்ஸை போலவே, நமக்கிடையே எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும் அந்த இடைவெளி இருப்பதால், இந்த மற்ற பிரபஞ்சங்களைத் தொடர்பு கொள்ள முயல்வது சற்றே கடினமான காரியமாகும். தடயங்களைத் தேடுதல் இருப்பினும், இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உருவானால், அவை பிரிக்கப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் மோதியிருக்க வாய்ப்புள்ளதாக மல்டிவர்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர். வானியலாளர்கள் இந்த மோதல்களின் வடுக்களை அண்ட நுண்ணலை பின்னணியில் (CMB) தேடுகிறார்கள் - இது நமது ஆரம்பக்கால பிரபஞ்சத்தின் வழியாகப் பயணிக்கும் முதல் ஒளியின் எச்சங்கள். அது பின்னர் நுண்ணலை கதிர்வீச்சாகக் குளிர்ந்துள்ளது, விண்வெளி முழுவதும் அதைப் பார்க்க நாம் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். ஹால்பெர்ன் கருத்துப்படி, இந்த வடுக்கள் "ஒரு வகை புல்ஸ்-ஐ வடிவம் அல்லது இலக்கு வடிவம் போல் இருக்கும்." பட மூலாதாரம்,Esa/Planck Collaboration படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பிளாங்க் தொலைநோக்கி CMB-ஐ வரைபடமாக்கியுள்ளது, அங்கு சிறிய வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பருப்பொருளின் வெவ்வேறு அடர்த்திகளைப் பிரதிபலிக்கின்றன. சுற்றியுள்ள பகுதிகளைவிட வித்தியாசமாக குளிர்ச்சியாகத் தோன்றும் 'குளிர் புள்ளி' (Cold spot) போன்ற CMB-இல் உள்ள விசித்திரமான அம்சங்களையும் சில வானியலாளர்கள் உற்றுநோக்கியுள்ளனர். மற்றொரு பிரபஞ்சம் நம்மைக் கவர்ந்ததால் இது ஏற்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். "எனக்குத் தெரிந்தவரை, ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு கருத்தை முன்வைக்கும்போது, மற்ற குழுக்கள் புள்ளிவிவர பகுப்பாய்வுகளைச் செய்து: 'இல்லை, அந்த கருத்து தவறு' என்று கூறியுள்ளன". 'வெறும் சில கருத்துகளின் தொகுப்பு' CMB-இல் திட்டவட்டமான வடுக்களை நாம் கண்டறிந்தாலும், மற்ற பிரபஞ்சங்களை நாம் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் அவை இருப்பதாக நம்புவதற்கு அது போதுமானதாக இருக்குமா? "அறிவியலில் நாம் மறைமுக ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். உதாரணமாக, பூமியின் மையப்பகுதிக்கு நாம் ஒருபோதும் சென்றதில்லை என்றாலும், அது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது என்று நாம் நம்புகிறோம். உண்மையில், பிற பிரபஞ்சங்கள் என்ற யோசனையை அவர் விரும்புகிறார். "அதைவிடச் சிறந்த மாதிரியை நாம் கண்டுபிடிக்கும் வரை, இப்போதைக்கு நிலையான வீக்கத்தை நம்புபவராக என்னை நான் நிறுத்திக் கொள்வேன்," என்று அவர் வெளிப்படுத்துகிறார். லூயிஸ் ஏதோ ஒரு வடிவிலான மல்டிவர்ஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் பல போட்டியிடும் யோசனைகள் முன்வைக்கப்படுவதால் அதை உண்மையில் வரையறுப்பதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், மல்டிவர்ஸ் தற்போது "வெறும் ஒரு கருதுகோள்கூட அல்ல, வெறும் சில கருத்துகள் மற்றும் யூகங்களின் தொகுப்பு மட்டுமே" என்று அவர் எழுதுகிறார். "நாம் மல்டிவர்ஸை பற்றி ஒரு பொது இடத்தில் விவாதிக்கப் போகிறோம் என்றால், அதற்கு முதல் படி நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம் என்பதை வரையறுப்போம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4z7w78d4o
  18. “சூரியக் கட்சியில், முக்கியமான ஒரு அணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட அந்த நிர்வாகி. கொங்கு மண்டலத்தில் சீட் எதிர்பார்த்து, வீட்டையெல்லாம் மாற்றிக்கொண்டு சென்றவருக்கு, ‘ஜெயில் மாஜி’யின் தலையீட்டால் சீட்டே கிடைக்காத சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் அவரது கட்சிப் பொறுப்புக்கும் பங்கம் வந்துவிட்டதாம். ‘கடந்த ஐந்து வருடங்களில், அன்பான மாண்புமிகுவின் தயவால் ஏகப்பட்ட டெண்டர்களை வாரிக் குவித்துவிட்டார்’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டதாம் உளவுத்துறை. சின்னவருக்கும் விஷயம் போகவும், அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்க முடிவாகியிருக்கிறது. டம்மியான ஒரு அணியின் பதவியை அளிக்கவும் ஆலோசனை நடந்தது. தகவல் கேள்விப்பட்டதிலிருந்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அத்தனை கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறாராம் அந்தப் பிரமுகர்” என்றபடி சிறகுகளை விரித்தார். நன்றி-ஜூனியர் விகடன்
  19. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு இலங்கைக்கு 14 Mar, 2026 | 05:26 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது. இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக் கூடிய தலையீடுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், அவர்கள் பெற்ற அறிவை ஜப்பான் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று, ஜப்பானில் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கையை பிரபல்யப்படுத்தல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை, துறைமுக நகர் உட்பட பல்வேறு சிறப்புமிக்க இடங்களுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர். https://www.virakesari.lk/article/240970
  20. சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918 புதிய தாதியர் பயிற்சியாளர்கள் நியமனம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 05:02 PM இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிய தாதியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14) முற்பகல் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இலங்கை செய்திகள் 2025ஆம் ஆண்டிற்குரிய, 2022ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் 3 ஆண்டு காலப் பயிற்சியினைப் பெறவுள்ளனர். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து வெளியிடுகையில், ஆரம்பத்தில் 2,625 பேரை மாத்திரமே இணைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. எனினும், உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்த எண்ணிக்கையை 2,918 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இவர்கள் தாதியர் பாடசாலைகளில் பதிவு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 06ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகும். இவர்கள் 2029 ஏப்ரல் மாதம் இறுதித் தேர்வை எதிர்கொண்டு, அதே ஆண்டு ஜூன் மாதளவில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தற்போது மத்திய அரசின் கீழ் 29,749 பேரும், மாகாண சபைகளின் கீழ் 13,804 பேரும் என மொத்தம் 43,553 தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது சுகாதார சேவையின் மொத்த ஆளணியில் 30 சதவீதமாகும். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சுகாதார சேவை என்பது எப்போதும் ஒரு அத்தியாவசிய சேவையாகும். இது வெறும் வேலைவாய்ப்பு அல்ல, ஒரு புனிதமான சேவை" என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தச் சேவையில் ஏற்படும் ஏதேனும் தடங்கல் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தாதியர் பாடசாலை அதிபர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/240961
  21. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது: வெடிப்புகள், கரும்புகை பரவல் 14 Mar, 2026 | 01:22 PM ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை விழுந்து வெடித்து, கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்து பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. சில பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தாக்குதலை ட்ரோன் மூலமாக நடத்தப்பட்டதாகவும் சிலர் ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுவரை அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. இதற்கும் முன்னர், சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத்தளத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அங்கு இருந்த 5 அமெரிக்க இராணுவ விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் காரணமாக பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரக வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஈரான் இடையேயான நிலைமைகள், நடுநிலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியவையாக உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளன. https://www.virakesari.lk/article/240940
  22. இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ரஷித் ஷகூர் மூத்த விளையாட்டு செய்தியாளர், கராச்சி 14 மார்ச் 2026, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் 1992 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியின் கேப்டனுமான இம்ரான் கான் தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி கிரிக்கெட் உலகிலும் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்களில் இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட14 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானவர்கள் இம்ரான் கானுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள். கவாஸ்கரும், கபில் தேவும் இம்ரான் கானுடன் விளையாடியவர்கள் இருவருக்கும் இம்ரான் கானிடம் ஆழமான பிணைப்பு இருக்கிறது. இந்தியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் இம்ரான் கானிடம் தனி பிணைப்பு இருக்கிறது. கங்குலி கிரிக்கெட் மைதானத்தில் ஒருபோதும் இம்ரான் கானை எதிர்கொண்டதில்லை என்றாலும், அவர் மீது மனதில் எப்போதும் மரியாதை வைத்திருக்கிறார். அதனால்தான் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரும் கவலை வெளிப்படுத்தினார். சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. "அவர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர்; கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தில் நிறுத்தியவர்" என்று கங்குலி குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கங்குலியின் கருத்துப்படி, இம்ரான் கானின் ஒரு சாதாரண ஆலோசனை அவரது சிந்தனையையே மாற்றிவிட்டது (கோப்புப் படம்) வாழ்க்கையையே மாற்றிய ஒரு சந்திப்பு கங்குலி தனது "ஒரு சதம் போதாது (A Century Is Not Enough)" என்ற நூலில் இம்ரான் கானுடனான தனது சந்திப்பையும், அவர் சொன்ன அந்த விலைமதிப்பற்ற வார்த்தைகளையும் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் அவர், "ஈடன் கார்டன் மைதானத்தில் இம்ரான் கான் பந்து வீசியதை பார்த்திருக்கிறேன். அவரது போட்டிகளை தொலைக்காட்சியில் மிகவும் கவனமாகப் பார்ப்பேன்; அவரைப் பற்றி எது கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். 1997-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய விருந்தில்தான் இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரம் கங்குலியின் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலகட்டம். டொரான்டோ தொடரில் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோகத்தில் இருந்தார். பின்னர் கயானா டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்படாதது அவரது காயத்தில் உப்பைத் தடவியது போல்தான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸில் பார்படோஸை தவிர மற்ற போட்டிகளில் நன்றாக விளையாடியிருந்தும், கடைசி டெஸ்டில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளருக்காக அவரை அணியிலிருந்து நீக்கினார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தான் பயனுள்ளதாக இருப்பதாக கங்குலி நம்பியிருந்தார். அணியிலிருந்து தான் நீக்கப்பட்ட முடிவை ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது என்கிறார் கங்குலி. அவர் அப்போது ஒரு புதிய மற்றும் அனுபவமற்ற கிரிக்கெட் வீரராக இருந்தததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இம்ரான் கானுடனான சந்திப்பும் உரையாடலும் அவரது மனதை மாற்றியது. இதுகுறித்து கங்குலி ,"இம்ரான் கானின் பேச்சு மிகவும் நேர்மையாகவும் நட்புடனும் இருந்தது. அவர் என்னிடம், 'உன் பேட்டிங்கை பார்த்தேன், நன்றாக விளையாடுகிறாய்' என்று சொன்னார். அந்த அன்பான வார்த்தைகள் என்னுள் இருந்த தயக்கத்தை போக்கின. அவர் சொன்னதை கவனமாகக் கேட்டேன். அவர் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது", என்று எழுதியுள்ளார் . கங்குலியின் கூற்றுப்படி, இம்ரான் கான் அவரிடம் சொன்ன வார்த்தைகள்; "நீ உயரப் பறக்க வேண்டும். வானில் உயரப் பறக்கும்போது இருண்ட மேகங்களை பார்க்கிறாய் என்றால், அதை சமாளிக்க ஒரே வழி இன்னும் உயரப் பறப்பதுதான். நானும் அணியிலிருந்து வெளியே இருந்திருக்கிறேன். அதனால் அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். உன் எதிராளி பின்தங்கி விடும் அளவுக்கு உயரப் பறக்க வேண்டும். அதுவே உன் பிரச்னைக்கு தீர்வு." இம்ரான் கானின் வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் மிகவும் எளிமையானவை எனக் கூறும் கங்குலி, ஆனால் அவர் அந்த கருத்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார். இந்த வார்த்தைகளால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் அவை தனக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் கூறுகிறார் கங்குலி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தனது வாழ்க்கைப் பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகச் சவுரவ் கங்குலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் (கோப்புப் படம்). அதற்கு சில மாதங்கள் கழித்து நடந்த தொடரில் கங்குலி நாட்டின் ஹீரோவாக மாறினார். அந்த தொடரில் 222 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்தார். அந்தத் தொடரை 4-1 என்கிற வென்றது மட்டுமல்ல, அது இம்ரான் கானின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிடுவதும் இங்கே முக்கியமாகிறது. அந்த தொடரில் கங்குலி தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் "ஆட்ட நாயகன் (Player of the Match)" விருது வென்றார். கங்குலியைத் தவிர வேறு எந்த வீரரும் தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் இந்த விருதை வென்றதில்லை. அதே தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 16 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தார் கங்குலி. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது உள்ளது. இம்ரான் கானின் வார்த்தைகள் உண்மையிலேயே ஒரு மாயாஜாலம் என்றும் அதற்காக அவருக்கு அமைதியாக நன்றி சொன்னதாகவும் தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார் கங்குலி. நிச்சயமற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு இளம் கிரிக்கெட்டருக்கு, கிரிக்கெட்டை மட்டுமல்ல வாழ்க்கையையே பார்க்கும் புதிய கண்ணோட்டம் கிட்டியது. சவுரவ் கங்குலி உடனான இரண்டாவது சந்திப்பு 2004-ஆம் இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது நடந்தது. தனது வீட்டுக்கு உணவருந்த வருமாறு இம்ரான் கான் அவரை அழைத்திருந்தார், அவரின் விருந்தோம்பலால் மிகவும் ஈர்க்கப்பட்டார் கங்குலி. 2005-ஆம் ஆண்டு கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான காலகட்டமாக அமைந்தது. மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அணியிலும் தன்னுடைய இடத்தை இழந்தார். அவர் இந்திய அணிக்கு திரும்பியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் முக்கியப் பங்கு வகித்தார். ஜாகீர் அப்பாஸின் உதவி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சவுரவ் கங்குலியின் கருத்துப்படி, ஜாகீர் அப்பாஸின் ஆலோசனை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதற்குப் பெரிதும் உதவியது (ஜாகீர் அப்பாஸ்- கோப்புப் படம்) 2006-இல் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக கவுன்டி கிரிக்கெட் விளையாடினார் கங்குலி. அப்போது அவர் தனது பேட்டிங் நுட்பத்தில் சில சிக்கல்களைச் சந்தித்து வந்தார். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கஷ்டப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவர் ஜாகீர் அப்பாஸை சந்திக்கிறார். அவரை மரியாதையாக 'ஸி பாய்' என அழைக்கிறார். "ஸி பாய் தனது விரிவான அனுபவத்தால் என் பிரச்னையை தீர்த்தார். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது நேராக நிற்க சொன்னார். பக்கவாட்டில் திரும்பாமல் மார்போடு நேரே நின்று விளையாட சொன்னார். என் கிரிப்பும் (grip) தானாக மாறியது." "பேட்டிங் நிலை மாறியதை தகவமைத்துக் கொள்ள சிரமமாக இருந்தாலும் போகப்போக நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைத்தது, அதனைத் தொடர்ந்தவை எனது வாழ்நாளின் சிறந்த நாட்கள், அதற்கு ஸி பாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என கங்குலி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சலீம் மாலிக்கின் அச்சுறுத்தல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சவுரவ் கங்குலி தனது பந்துவீச்சால் சலீம் மாலிக்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கினார் (கோப்புப் படம்). இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கும். களத்துக்கு வெளியே நட்பும் மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தாலும் களத்தில் எதிரணி ஆதிக்கம் செலுத்த யாரும் விரும்புவதில்லை. ஸ்லெட்ஜிங் கடுமையாகவே இருக்கும். டொரான்டோ ஒருநாள் தொடரில் மொயின் கான் விக்கெட் கீப்பர் பொசிஷனில் நின்று கொண்டே தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்தார்; சலீம் மாலிக் இன்னும் ஒரு படி மேலே போனார். இரண்டாவது போட்டியில் சலீம் மாலிக்கை கங்குலி அவுட் செய்திருந்தார். மூன்றாவது போட்டியில் கங்குலி பேட்டிங்கிற்கு வரும்போது சலீம் மாலிக் அவரிடம் வந்து மிரட்டல் தொனியில், "இன்று உன் பந்துவீச்சை அடித்தாடுவேன். நீ ஆச்சரியப்பட்டு போவாய்." என்று கூறினார். அந்தப் போட்டியில் கங்குலி சலீம் மாலிக்கை மீண்டும் அவுட் செய்தார். "அப்போது நான் இளம் வீரன், சலீம் மாலிக் பாகிஸ்தானின் ஸ்டார் பேட்ஸ்மேன் — அவருக்கு பதில் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை" என்றார் கங்குலி. அதே தொடரில் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜாவையும் கங்குலி ஆட்டமிழக்கச் செய்திருந்தார். "பாகிஸ்தான் அணியிலிருந்து நான் வெளியேற்றப்பட்டதற்கு நீ தான் காரணம்," என ரமிஸ் ராஜா நகைப்புடன் கங்குலியிடம் தெரிவித்துள்ளார். முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருமுறை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த சவுரவ் கங்குலிக்கு, அன்றைய அதிபர் பர்வேஸ் முஷாரப் தொலைபேசியில் அழைத்து அறிவுரை வழங்கினார். (கோப்புப் படம்) 2004-இல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அணிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. லாகூர் ஹோட்டல் ஒரு கோட்டை போலவே இருந்தது என கங்குலி குறிப்பிடுகிறார். ஆனால் இந்திய அணி கேப்டன் நள்ளிரவில் அந்த கோட்டையை தாண்டி நண்பர்களுடன் சாகசம் செய்ய சென்றார் என்று யாரேனும் நினைத்துப் பார்க்க முடியுமா? சவுரவ் கங்குலி அதைத்தான் செய்தார். பாதுகாப்பு விதிகளை மீறுகிறோம் எனத் தெரிந்தும் அதைச் செய்தார். அந்த சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். "ஒருநாள் தொடரில் வரலாற்றுக்குரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். கேட்ச் பிடிக்க முயன்றபோது எனக்கு காயமும் ஏற்பட்டது., மூன்று வாரம் ஓய்வெடுக்க மருத்துவர் சொன்னார். ஆனால் எனது மனநிலை நன்றாக இருந்தது. கொல்கத்தாவிலிருந்து வந்த நண்பர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று எழுதியிருக்கிறார் கங்குலி. "ஒரு இரவு நண்பர்களுடன் வெளியே போக முடிவு செய்தேன். நாங்கள் வெளியே செல்வதை பாதுகாப்பு அதிகாரியிடம் சொல்லவில்லை, சொன்னால் போகவே விட மாட்டார்கள். அணி மேலாளர் ரத்னாகர் ஷெட்டியிடம் மட்டும் கூறிவிட்டு வெளியே சென்றேன். அமைதியாக பின் வாசல் வழியாகச் சென்றேன். என்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக நழுவி, தொப்பி போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு கிளம்பினேன்." என்று கூறுகிறார். "குவாலியர்மண்டியின் பிரபலமான ஃபுட் ஸ்ட்ரீட் தான் எங்களின் இலக்காக இருந்தது. கபாப், தந்தூரி உணவு எங்களுக்காக காத்திருந்தது. ஆனால் திறந்த வெளியில் யாராவது அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. ஒருவர் என்னிடம் வந்து, "நீங்கள் சவுரவ் கங்குலியா?" என்று கேட்டார். ஆனால் நான் மறுத்தேன். அந்த நபர் ஏமாற்றத்துடன் சொன்னார், "ஆனால் நீங்கள் சவுரவ் கங்குலி மாதிரியே இருக்கிறீர்கள்!" எனக் கூறினார் என்று கங்குலி தெரிவிக்கிறார். இதைப் பற்றி மேலும் குறிப்பிட்ட அவர், "நாங்கள் எல்லோரும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டோம். இதற்கிடையே இன்னொருவர் வந்து 'சார், நீங்கள் இங்கு வந்துள்ளீர்களா? உங்கள் அணி என்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது' என்று கூறினார். நான் அவரைத் தவிர்க்க முயற்சித்தேன். ஆனால் அவர் தலையை அசைத்துவிட்டு நடந்து சென்றார்." "நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்னை அடையாளம் கண்டார். அவர் அப்போதைய இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அங்கே வந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும், "சவுரவ்! சவுரவ்!" என்று கூவ ஆரம்பித்தார். நான் சிக்கலில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்திய அணி கேப்டன் 'ஃபுட் ஸ்ட்ரீட்டில்' இருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்துபோனது." "அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். கடைசி கபாப் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், நிலைமை இவ்வளவு வேகமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. பணம் கொடுத்துவிட்டு செல்ல முயன்றேன். ஆனால் கடைக்காரர் வாங்கவே மறுத்தார்." "ஒரு போலீஸ்காரர் எங்களை காருக்கு அழைத்துச் சென்றார். ஹோட்டலுக்கு திரும்பும்போது ஒரு பைக் வேகமாக பின்தொடர்ந்தது. கண்ணாடியை கீழே இறக்க சொன்னார். என் உடன் வந்தவர்கள் மறுத்தனர். ஆனால் நான் கண்ணாடியை இறக்கினேன். அந்த நபர் கை நீட்டி சொன்னார்: "நான் ஃபுட் ஸ்ட்ரீட்டில் கடை வைத்திருக்கிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்!' எனக் கூறினார்" மறுநாள் காலை, அணி மேலாளரிடம் நடந்தவற்றை கங்குலி ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அவரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "அறைக்கு திரும்பியதும் போன் அடித்தது. போன் எடுத்தேன் — அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு! அதிபர் என்னுடன் பேச இருப்பதாக சொன்னார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் பாகிஸ்தான் அதிபர் இந்திய கேப்டனிடம் பேசவேண்டும் என்று தெரியவில்லை." "முஷாரஃப் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னார்: 'அடுத்த முறை வெளியே போக வேண்டும் என்றால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உரிய ஏற்பாட்டை நாங்கள் செய்கிறோம். ஆனால் தயவுசெய்து இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாதீர்கள்.' என்றார். எனக்கு அசௌகரியமாக இருந்தது. வாசிம் அக்ரமின் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டதை விட, முஷாரஃப்பின் அந்த அழைப்பு என்னை அதிகமாக பயமுறுத்தியது!" பதினைந்து ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த சவுரவ் கங்குலியின் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தது. ஒருநாள் தொடரை 3-2 என்கிற கணக்கிலும் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கிலும் இந்திய அணி வென்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு 2004 தொடர் பற்றிய தனது சிறந்த நினைவுகளையும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் உடனான தனது நட்பைப் பற்றியும் ஆஜ் தக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். "நான் ஒரு கிரிக்கெட்டராக இன்சமாம் உல்-ஹக்கின் ரசிகர் என்றாலும் அதை விடவும் அவருடைய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்." என அதில் குறிப்பிட்டிருந்தார். இன்சமாம் உல்-ஹக்கும் கங்குலியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "2005 தொடருக்கு முன்பாக ஒரு விளம்பரத்துக்காக கொல்கத்தா சென்றிருந்தேன். நான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஒட்டுமொத்த நேரமும் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஆனால் எனக்கு உணவு கங்குலியின் வீட்டிலிருந்து வந்தது. கங்குலியின் விருந்தோம்பலை என்னால் எப்போதும் மறக்க முடியாது." என்றார். 2007இல் கங்குலி தனது கரியரின் இறுதிக் கட்டத்தில் இருந்த போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் 89 சராசரியில் 534 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர் கங்குலி தான். 239 ரன்கள் என்ற அவரது ஒரே இரட்டை சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே தனது சிறந்த ஸ்கோரை அந்தத் தொடரில் எடுத்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c4g78e7vz1yo
  23. இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 03:43 PM இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், நேற்று 13ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர். இதன்போது, 108 புத்தர் சிலைகளை இலங்கைக்கு வழங்கும் புண்ணியக் கருத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் அடையாளமாக அமைச்சரிடம் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றும் கையளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால மத மற்றும் இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வலுப்படுத்துவது இதன் முதன்மை இலக்காகும். இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள வசதிகள் குறைந்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை வழங்கும் பணிகள் அடையாள ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/240950
  24. ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு Mar 14, 2026 - 05:34 PM ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வொஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி வான்வழி நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் டொலர்களும், கடற்படை நடவடிக்கைகளுக்காக 15 மில்லியன் டொலர்களும், தரைவழி நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களும் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் ஆரம்பமான முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், "ஆபரேஷன் எபிக் பியூரி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலேயே அதிக செலவுமிக்க ஒன்றாக மாறியிருப்பது சிறப்பம்சமாகும். குறித்த அறிக்கையின்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல்களின் முதல் 100 மணிநேரத்திற்கு மட்டும் 3.7 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் இருந்து 11 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பென்டகன் காங்கிரஸிற்கு அறிவித்துள்ளது. முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" நடவடிக்கைக்கு 2.26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. அந்த நடவடிக்கை இரண்டரை மணிநேரம் மட்டுமே நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmq9z7dd000h356pgd9rfuts
  25. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்த ஈரானுக்கு ஹமாஸ் வலியுறுத்தல் காசா: ‘அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதை ஈரான் நிறுத்த வேண்டும். அதேவேளையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது’ என பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க, சாத்தியமான அனைத்து வழிகள் மூலமும் பதிலடி கொடுக்கும் உரிமையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானில் உள்ள சகோதரர்களை எங்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலுடன் இரண்டு ஆண்டுகள் நீடித்த, மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய போரை நடத்திய ஹமாஸ் இயக்கம், தற்போது நடைபெற்று வரும் இந்தப் போரை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தியது. முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி போரில் கொல்லப்பட்டதை, ஹமாஸ் இயக்கம் ‘ஒரு கொடுமையான குற்றம்’ என்று கண்டித்தது. அந்த கண்டனத்தில், ‘எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தேவையான அனைத்து வகையான அரசியல், ராஜதந்திர மற்றும் ராணுவ ஆதரவையும் அவர் வழங்கினார்’ என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே இன்று 14-வது நாளாக போர் நீடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/world/iran-must-stop-attacking-neighboring-countries-hamas-urges
  26. ‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை வாஷிங்டன் டி.சி. : ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், அங்கு எஞ்சி இருப்பது மிகக் குறைவே’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பது குறித்த செய்திகளை வெளியிடுவதை போலிச் செய்தி ஊடகங்கள் வெறுக்கின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அது ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒப்பந்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியையும்” அவர் வெளிப்படுத்தி உள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றவும் இஸ்ரேலை முழுமையாக அழித்தொழிக்கவும் ஈரான் திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் ஈரானைப் போலவே இப்போது அழிந்துவிட்டன” என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (அமெரிக்க ராணுவம்), மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஒன்றை செயல்படுத்தியது. ஈரானின் கிரீடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அது முற்றிலுமாக அழித்துவிட்டது. எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை. எனினும், கண்ணியம் கருதி, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை. எனினும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஏதாவது செய்தால், இந்த முடிவை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன். எனது முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்க ராணுவத்தை மிகவும் ஆபத்தான, சக்திவாய்ந்த, பயனுள்ள படையாக மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் தாக்க நினைக்கும் எதையும் பாதுகாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. எங்கள் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்காவையோ, மத்திய கிழக்கையோ அல்லது உலகையோ அச்சுறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அங்கு எஞ்சி இருப்பது அதிகம் இல்லை’’ என தெரிவித்துள்ளார். ‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.