stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்களும் நானும் ஒரே அணிகளை இறுதிப் போட்டிக்கு அனுப்பி, எதிர் எதிர் அணிகள் வெல்லும் என்று கணித்திருக்கிறம்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! 27 Dec, 2025 | 10:49 AM குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகன்கப்படுகிறது. தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (26) கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. https://www.virakesari.lk/article/234520
-
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள்
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 'திட்வா' புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இது ஒருபுறம் மனித துயரத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளையில் மறுபுறம் தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகளைத் தாங்கும் அளவுக்கு இலங்கையிடம் போதிய நிதி வசதி இல்லை எனவும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்கள் 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் உலக நாடுகளைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடாக இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உலக வங்கி மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அம்மதிப்பீட்டின் ஊடாகக் கண்டறியப்பட்ட ஆரம்பகட்டத் தகவல்களை உள்ளடக்கிய பூர்வாங்க அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டது. பேரனர்த்தத்தினால் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு 'திட்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 சதவீதம் எனவும் கணிக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட மறைமுகப் பாதிப்புகளின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்தப் பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த 4.1 பில்லியன் அமெரிக்க டாலராகக் கணிப்பிடப்பட்டிருக்கும் பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளில் வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள், மின்விநியோகக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கள், நீர் விநியோகக் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 1.735 பில்லியன் அமெரிக்க டாலராகும். பொதுமக்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 985 மில்லியன் அமெரிக்க டாலராகும். நெற்பயிர்ச்செய்கை நிலங்கள், ஏனைய விவசாய நிலங்கள், விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், உள்ளூர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் என்பன உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெறுமதி 814 மில்லியன் அமெரிக்க டாலராகும். பாடசாலைகள், சுகாதார வசதிகள், வணிகங்கள், கைத்தொழில் என்பன உள்ளிட்ட வீடுகள் அல்லாத கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 562 மில்லியன் அமெரிக்க டாலராகும். "வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது இந்த நேரடித் தாக்கமானது இலங்கையின் பொருளாதார மீட்சிப்பாதையை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன், அடுத்த கட்ட நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக இலங்கையின் முன்னணி பொருளாதார ஆய்வு அமைப்பான "அட்வகாட்டா" சுட்டிக்காட்டுகின்றது. இது குறித்து அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த அனர்த்தம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய மலைநாட்டின் பிரதேசங்களில் மிகவும் கடினமாக உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நாசமாக்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது." எனத் தெரிவித்தார். மறைமுக தாக்கங்கள் குறித்து ஆராய்ந்தால் இந்த இழப்பானது மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறும் தனநாத், இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் மீண்டெழும் கால எல்லை, இதனால் அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் தாக்கங்களை கணக்கிட்டால் இந்த சேதங்கள் மற்றும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் மிக மோசமானதாக அமையப் போகின்றது." என்றார். அதுமட்டுமல்லாது இந்த பேரனர்த்தத்தில் அதிகளவில் பொது சொத்துகளே அழிந்துள்ளன என்றும் தனநாத் தெரிவித்தார். "இவற்றை மீள் கட்டமைக்க அரச நிதியே முழுமையாக செலவாகும். ஆகவே அரசாங்கத்தின் ஏனைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவற்றை முதலில் கையாள வேண்டியுள்ளமையானது மிகப்பெரிய கடினத்தன்மையை உருவாக்கப் போகின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம்,Dhananath Fernando படக்குறிப்பு,அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ 'வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கக் கூடும்' இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக வங்கியின் பூர்வாங்க அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 'திட்வா' சூறாவளியினால் சுமார் 277,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மீன்பிடித்துறையில் 20.5 முதல் 21.5 மில்லியன் இலங்கை ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மேலும் 2026-ஆம் ஆண்டின் பெரும்போகத்தை எதிர்பார்த்து பயிர்ச்செய்கையை மேற்கொண்ட மற்றும் பயிரிடுவதற்கு உத்தேசித்திருந்த விவசாயிகள் இப்பேரனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பேரனர்த்தத்தினால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு அதேபோன்று, இப்பேரனர்த்தத்தினால் தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சந்தையிலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அதனூடாகக் கண்டறியப்பட்ட அடிப்படைத் தகவல்கள் அடங்கிய பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'அந்த அறிக்கையில் 'திட்வா' புயலை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தமானது 16 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கிறது. இதன் பெறுமதி சுமார் 16 பில்லியன் டாலராகும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 374,000 தொழிலாளர்கள் வசிப்பதாகவும், இதன் விளைவாக அவர்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானத்தை இழந்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 244,000 ஆண்களையும், 130,000 பெண்களையும் உள்ளடக்கிய இத்தொழிலாளர்களின் மாதாந்த வருமான இழப்பு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டாலராகும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கையில் அனர்த்தத்தினால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துறை ரீதியாக நோக்குமிடத்து இவர்களில் 85,000 பேர் விவசாயத்துறை சார்ந்தும், 125,000 பேர் கைத்தொழில்துறை சார்ந்தும், 164,000 பேர் சேவைத்துறை சார்ந்தும் தொழில்களில் ஈடுபட்டவர்களாவர் என்ற தரவுகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இந்நாட்டுப் பொருளாதாரத்தின் இரு பிரதான துறைகளாகும். மொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பங்கானவை இவ்விரு துறைகளையும் சார்ந்தவையாகும். குறிப்பாக மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்படும் தேயிலைப் பயிர்ச்செய்கை மூலம் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், அத்துறையானது வருடாந்திதிர ஏற்றுமதிகளில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றது. தற்போதைய பேரனர்த்தத்தினால் இத்துறை பரந்துபட்டளவில் பாதிப்படைந்திருக்கின்றது. அதேவேளை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 23 சதவீதமானவை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன என்ற காரணிகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளிப்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருள் விலையேற்றம் மக்களுக்கு நெருக்கடி தருமா? இந்த அனர்த்தத்தின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரி உயர்வுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். "பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதேநேரத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் பொருளாதாரத்தையும் கையாள வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்கள் அதிக பணம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது. எனினும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகின்றதா என்ற சந்தேகம் எழுதுள்ளது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அனர்த்தத்தின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரி உயர்வுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். (கோப்புப்படம்) இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? இந்நிலையில், பேரனர்த்தத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளிட்ட 121 சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் இலங்கையின் நிலைமையை தெளிவுபடுத்திய கூட்டறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளனர். இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் நாட்டின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வைத் தரவில்லை. 'திட்வா' சூறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க வருமானத்தில் 25 சதவீதத்தை வெளியகக் கடன் செலுத்தலுக்குப் பயன்படுத்துவது உலகிலேயே மிக உயர்ந்த அளவாகும் என அந்த அறிக்கையின் ஊடாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். மேலும், "இது நாட்டின் மீள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மீண்டும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமே எச்சரித்துள்ள சூழலில், தற்போதைய கடன் செலுத்தலை உடனடியாக இடைநிறுத்திவிட்டு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்ல வேண்டும்." என அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். "நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் நிதி உள்ளது" பட மூலாதாரம்,Anil Jayantha படக்குறிப்பு,நிதி அமைச்சர் அனில் ஜயந்த இவ்வாறான சவால்கள் குறித்து சர்வதேச மற்றும் தேசிய அளவில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிதி அமைச்சர் அனில் ஜயந்த பிபிசி தமிழிடம் விவரித்தார். "தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது பொருளாதார ரீதியாக முழுமையாக வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். ஆகவே நெருக்கடியில் இருந்த நாட்டை முதலில் மீட்டெடுக்கும் சவாலுக்கே முகங்கொடுக்க நேர்ந்தது. இம்முறை அரசாங்கம் முன்வைத்த வரவு செலவு திட்டமானது நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தும் வகையிலான வரவு செலவு திட்டமாகவே அமைந்தது." என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் "அதில் படிப்படியாக வெற்றிகண்டு வந்திருந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆனால் இந்த அனர்த்தம் அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணத்தை தடுத்துள்ளது என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டு அரசாங்கம் கையாண்ட அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அனாவசிய செலவுகளைக் குறைத்து சேமித்த பணத்தில் ஒரு பங்கினை மக்களுக்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது," என்றார். சர்வதேச நாடுகளின், அமைப்புகளின் நிதி உதவிகள் மற்றும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிதி உதவிகள் கிடைத்து வருகின்ற நிலையில் இந்த மோசமான நிலைமைகளை கையாள இலகுவாக உள்ளது என்று அனில் ஜயந்த தெரிவித்தார். முதலில் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை சீர்செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுதுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை முன்னுள்ள 3 வழிகள் தற்போது செலவு செய்வதற்கான நிதி தம்மிடம் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த நிதி தற்போதைய பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு போதுமானதாக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இருக்காது என்பதை பொருளாதார ஆய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் பிரதான பொருளாதார ஆய்வு அமைப்புகளான 'அட்வகாட்டா' மற்றும் 'வெரிடே', பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர மேலும் சில ஆண்டுகள் கட்டாயமாக தேவைப்படும், அதுவரையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகும் தாக்கங்களை சமாளிக்க மிகக் கடினமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ள நிலையில் உணவு தட்டுப்பாடு மற்றும் உற்பத்தியில் பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வெரிடே ஆய்வு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் டி மெல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "இந்த காலகட்டத்தில் சகல பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை கொடுக்கும் நிலைமை ஏற்படும்., இந்த நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம் புதிதாக பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது கடன் பெற வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது மூன்றும் இல்லாத மாற்றுவழி அரசாங்கத்திடம் இல்லை," என்கிறார் தனநாத் பெர்னாண்டோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9kgjep5xno
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group B - First AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group B - Second SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI Select BAN Select BAN BAN NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group C - First ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second BAN 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group D - First NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group D - Second SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 Y2 Y3 Y2 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 Y1 Y4 Y1 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 X1 X4 X1 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 X2 X3 X2 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 Y1 Y3 Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 Y2 Y4 Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 X3 X4 X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 X1 X2 X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 Y1 Y2 Y1 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 Y3 Y4 Y3 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 X2 X4 X2 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 X1 X3 X1 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 Select X1 X1 X2 Select X2 X2 X3 Select X3 Select X4 Select X4 Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First X2 சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 1 - Second X1 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! X3 சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 Select Y1 Y1 Y2 Select Y2 Select Y3 Select Y3 Y3 Y4 Select Y4 Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First Y3 சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 2 - Second Y1 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Y4 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), Super 8: Group 1 - First X2 Super 8: Group 2 - Second Y1 AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, Super 8: Group 2 - First Y3 Super 8: Group 1 - Second X1 IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) அர்ஷ்தீப் சிங் 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) அபிஷேக் சர்மா 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ஜஸ்பிரித் பும்ரா 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) IND 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.
இலகுவான பிரச்சினைகளை இலகுவாக தீர்க்காமல் அதனை தீவிரமாக்குவதனால் எந்த பிரயோசனமும் இருக்காது, அரசியல்வாதிகள் எங்கும் ஒரே பிரச்சினைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள். அவுச்றேலியாவில் மொரிசன் என ஒரு பிரதமர் தற்போதய பிரதமருக்கு முன்னர் இருந்தார் (அவரது முழுப்பெயர் நினைவில்லை), நாடு பற்றியெரிந்த போது உலகசுற்றுலா போனார், வர்த்தக பங்காளி நாடான சீனாவுடன் சர்ச்சையினை உருவாக்கினார, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முறுகல் நிலையினை தோற்றுவித்தார். செய்திகளில் இந்த போர் அந்தா போர் என அவர்கள் பங்கிற்கு கதையளந்தார்கள், பின்னர் அவர் தேர்தலில் தோற்று எங்கோ காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் ஏற்படுத்திய சமூக பொருளாதார பிரச்சினைகள் இன்னும் தொடர்கிறது. சொந்த நாட்டின் நலனை கவனியாது; நாட்டினை சிக்கலில் மாட்டி விட்டு பின்னர் எதாவது ஒன்றியங்களில் ஏதாவது மதிப்புமிக்க வேலைகளை தேடுவதற்காக சுயநலமாக செயல்படும் தலைவர்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
"சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
லெப். கேணல் சேரமான் (பரமநாதன் சரவணபவா) - ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்தார். 04/04/2009
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் பணியாற்றிய நினைவுகளோடு
அழியாத நினைவுகள் புகைப்படத்தை பார்த்ததும் கடந்த கால பயணத்தை பதிவு செய்கிறேன்… கோகுலன் அண்ணாவின் கீழ் பயணிக்கும் பொழுது சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக அனுப்பப்படுகிறோம் நானும் செந்தாழனும்... எங்களுக்கு அருகில் தான் சாள்ஸ் அன்ரனி கோபித் அண்ணாவின் முகாம் இருந்தது வட போர் முனை கிலாலி பகுதியில்...அவரோடு அன்று 5 போராளிகள் இருந்தார்கள் பாவலன்,மதுரன்,வளநெஞ்சன்,அறிவுச்சுடர்... இந்த புகைப்படத்தில் கோபித் அண்ணாவும் பாவலனும் இருக்கிறார்கள்… நான் ஒரு ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை அப்பொழுது நிறைவு செய்தபடியால் இவர்களோடு இணைந்து கொண்டோம் வட போர்முனை போராளிகள் சார்ந்து…ஐந்து மாதங்கள் ஒன்றாக பயணித்தோம் காலை நாலு முப்பது தொடக்கம் நள்ளிரவு 11 மணி வரை மிகக் கடுமையான பயிற்சிகள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடி துடுப்பாடிய நினைவுகள் அதிகம்… இதில் மேலும் ஒரு சகோதரர் இருக்கிறார் காண்டீபன் தூயவன் அரச அறிவியல் கல்லூரியில் ஒன்றாக கல்வி கற்றோம் மிகச் சிறந்த கல்வியாளர்…நான் புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னர் இரண்டு முறை கோபித் அண்ணாவோட உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று எங்களுக்கு சிறப்பாக சமைத்து தரும் மதுரன் அண்ணாவை விசாரித்தேன்…மேஜர் மதுரன் கேப்டன் அறிவிச்சுடர் இருவரும் வீரச் சாவடைந்துவிட்டார்கள் அவர்களைப் பற்றி இறுதியாக உரையாடினேன் கோபித் அண்ணாவோடு நோர்வே நாட்டிலிருந்து… அன்று நகுலன் அண்ணா துணை தளபதியாக இருந்தார் சாள்ஸ் அன்ரனி படையணியில் வீரமணி அண்ணா தளபதியாக இருக்கும் பொழுது நான் (லீமா சேரா)லாரன்ஸ் அண்ணாவோடு நகுலன் அண்ணாவை பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன் சந்திப்போம் சிறப்பாக வரவேற்பார் அன்புடன் நினைவுகள் இப்பொழுதும்…. லீமா சேரா மற்றும் நகுலன் அண்ணா இக்கச்சி பிரதேசத்தில் இருந்த போர் பயிற்சி கல்லூரியில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன் நினைவுகள் இன்றும்…ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிந்தேன்…லோரன்ஸ் அண்ணா ஆனந்தபுரம் முற்றுகையிலிருந்து காயப்பட்ட தகவலை மட்டும் அறிந்தேன் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து… எங்களைப் போன்றவர்கள் மரணிக்கும் வரை எங்கள் இனத்திற்காக நாங்கள் பயணித்த பாதைகள் பயணங்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடந்து செல்ல முடியாமல் எங்களை காயப்படுத்துகிறது வலிகள் நிறைந்திருந்தாலும் தமிழ் இனத்திற்காக வாழ்ந்த மறவர்கள் நாங்கள்… தரன் ஸ்ரீ💐
-
முள்ளிவாய்க்காலில் மருத்துவர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்ட போது
நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால் முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள். நேரம் கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது. ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு நான் இருப்பதற்கு ஒரு மெல்லிய வாங்கு மட்டுமே போடப்பட்டிருந்தது. அதுவும் வாகனம் ஓடும்போதும் பள்ளத்தில் விழும் போதும் ஆடிக்கொண்டும் சரிந்து விழுந்து விடும் போலும் இருந்தது. வாகனத்தில் ஏறிய உடனே மெல்லிய இருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரத்தின் பின்பு எனக்கு எதிரே இருந்த வாங்கில் மூன்று பேர் இருப்பது தெரிந்தது. நன்கு கவனித்து பார்த்தேன். மூன்று பெண் போராளிகள்- கிட்டத்தட்ட 18-20 வயது இருக்கும். மூவருமே விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். அச்சம் கலந்த முகத்துடன் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத தவிப்போடு இருந்தார்கள்.என்னை யார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்னக்கு தெரியவில்லை. நாங்கள் சென்ற வாகனம் நீண்ட நேர பிரயாணத்திற்கு பின் ஒரு இடத்தில் ( ஒரு வீட்டின் முன் ) நின்றது. என்னை இறக்குவதற்கு முன் பெண் போராளிகள் மூவரையும் இறக்கி எடுத்தார்கள். அவர்கள் மூவரையும் இறக்கிய சிறிது நேரத்தின் பின் என்னையும் இறக்கினார்கள். அந்த இடத்தில் ஒரே இருள் மயம். தானாகவே பயம் வந்துவிடும் அளவிற்கு மயான அமைதியாக இருந்தது . என்னை அந்த வீட்டின் முன் பகுதியில் இருக்கச்சொன்னர்கள். ஒரு இராணுவ அதிகாரி வந்து என்னைப் பற்றி விசாரித்தார். பின்பு எனக்கு இரவு உணவு கொடுக்க சொல்லிவிட்டு காலையில் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு நான் அவரை ஒரு நாளும் காணவில்லை. என்னை வைத்திருந்தது கிளிநொச்சி என்றும் அந்த வீடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் (TRO) அலுவலகம் என்பதும் அந்த சுவரில் ஒட்டி இருந்த அறிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என்னை சிறை வைத்திருந்த அதே வீட்டில் தான் அந்த பெண் போராளிகளையும் வைத்திருந்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் என்னை முகம் கழுவ வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கிருந்த ஒரு மாமரத்தில் புலிகளுடைய சில சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. அது பெரும்பாலும் அந்த பெண் போரளிகளுடையதாக இருக்க வேண்டும். அதன் பின்பு .................................................... thurairaajaa varatharaaja
-
2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள்
2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள் அப்போது அப்பா வீரச்சாவு அடைந்து சில காலங்களே தாண்டி இருந்தது என் தங்கைக்கு 6 வயது நானும் அக்காவும் பாடசாலை படித்துக்கொண்டு இருந்தோம். அன்று அம்மாவிற்கு அழைப்பு வந்தது. அக்கா நாங்கள் தொலைதூரம் நடந்து வந்ததால் பசியும் தாகமாகவும் இருக்கிறது எங்களுக்கு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டு மேல் வீதிக்கு வர முடியுமா என்று கேட்டார்கள், உடனே அம்மா குடிப்பதற்கு குளிர்பாணமும் உணவும் எடுத்துக்கொண்டு சென்றார் இது அம்மா அடிக்கடி இயக்கம் ஊருக்குள் வந்தால் செய்யும் விடையம்தான், ஆனால் மதியம் சென்ற அம்மா மாலை நேரமாகியம் வீடு வரவில்லை, நாங்கள் மாறி மாறி அழைப்பு எடுத்தோம் ஆனால் போன் நிறுத்தப்பட்டு இருந்தது, இரவு 9 மணிக்கு அழைப்பு வந்தது தம்பி உங்கள் அம்மாவை கடத்தி விட்டார்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று இயக்கம் அறிவித்தது, உண்மையை சொல்லப்போனால் அந்த காலப்பகுதியில் அயலவர் கூட எங்கள் வீடுகளுக்கு வர மாட்டார்கள் அடிக்கடி இராணுவம் கருணா குழு என்று எங்கள் வீட்டை அவதானித்துக்கொண்டே இருப்பார்கள், வீட்டில் நானும் என் மூன்று சகோதரிகளும்தான் அப்போது இரவு இரவாக அழுது விட்டு அப்படியே நித்திரை கொள்வோம், அடுத்து இரண்டு நாட்கள் பின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது... நாங்கள் ஒப்பாரி வைத்து அழுதோம் எங்க அம்மா இருக்கிறீங்க எப்போ வருவீங்க என்று, நான் வயல் வேலையா வந்தனான் வயல்ல வேலை முடிஞ்ச உடனே வாறன் என்று அழுது அழுது சொல்லுவா பிறகு எனக்கு வேலை கிடக்குது பிறகு கோல் பன்றன் என்று சொல்லிட்டு கோல் கட் பன்னிடுவா இப்படி தொடர்ந்து ஒரு கிழமை தாண்டியது, வீட்டில் சரியான உணவும் இல்லை தூக்கமும் இல்லை ஒரே ஒப்பாரியாக இருக்கும் வீடு. எட்டு நாட்கள் கழிந்து அழைப்பு வந்தது அம்மா இப்போ எங்கட வீட்டில் நிக்கிறா நாளைக்கு விடிய வீட்ட வருவா என ஒரு அக்கா அழைப்பு எடுத்து கூறினார், அடுத்த நாள் காலையில் அம்மா வீட்டிற்கு வந்தா நாங்கள் கட்டி அணைத்து அழுதோம் அம்மாவின் உடல் முழுவதும் இரத்தமும் தழும்புகளும் பதிந்து கிடந்தது, முதுகில் அணைத்து இடங்களும் வெடிப்பு காயம், எங்கே அழைத்து சென்றார்கள் என்று கேட்டோம், வீதியில் வைத்து வாகனத்தில் இழுத்து ஏற்றியவுடன் கண்களை கட்டினார்கள் சிறிது நேரத்தில் புகையிரத சத்தம் கேட்டது, பின் இறக்கி என்னை இழுத்து சென்று இரு கைகளையும் சங்கிலியால் கட்டினார்கள், அங்கே அடிக்கடி அழு குரல்கள் கேட்கும் கதறி அழும் சத்தம் கேட்கும் எப்போதும் இரத்த வாடையாக இருக்கும் அடிக்கடி துப்பாக்கி சூடு சத்தம் கேட்கும் என்றார், போன் எடுக்கும்போது கண்களில் கட்டியுள்ள துணியை அவிழ்ப்பார்கள் அப்போது அந்த இடம் முழுவதும் இரத்தமாக இருக்கும், நான் பேசுவதை சுற்றி நின்று கேட்பார்கள், அதன் பின் கேள்விகள் கேட்டு கேட்டு அடிப்பார்கள் நான் என்ட பிள்ளைகளுக்கு யாரும் இல்லை என்று சொல்லி அழுவேன் அப்போது அடிப்பார்கள் என்னால் வேதனை தாங்க முடியாமல் கத்துவேன் பின் சிறிது நேரம் களித்து வந்து அடிப்பார்கள் என்று கூறி அழுதா, இறுதியாக ஓர்சில் சந்தியில் கொண்டு சென்று சுடுவதற்கு தீர்மானித்தார்கள், பின் வாகனத்தில் ஏற்றினார்கள் வாகனத்தில் இருந்த ஒருவன் இந்த அம்மா பாவம் விட்டு விடுவோம் என்று கூற ஓர்சில் சந்தியின் பக்கம் ஒரு வீதியில் இரண்டு கைகளையும் கண்கள் வாயை கட்டியபடி வாகனத்தில் இருந்து தள்ளி விட்டார்களாம், அதன் பின் அங்கு தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு சென்று பின் வீடு வந்து சேர்ந்தார் அம்மா. இந்த வதை முகாம் பற்றி நேற்று படித்தேன் அம்மா கூறிய விடையங்கள் ஒத்து போவதால் எழுதுகிறேன். எழுதும்போது அம்மா பட்ட வேதனைகளை நினைக்கும்போது கண்கள் அழுகின்றது நான் அணைத்தையும் மறந்து வாழ போவது இல்லை என்றோ ஓர்நாள் அணைத்திற்கும் இவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். வரலாற்றை படியுங்கள், வரலாற்றை படையுங்கள், வரலாற்றை மறந்த இனம் வாழாது, வரலாறே எங்கள் வழிகாட்டி. செந்தமிழன்
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.
ஆனந்தபுரத்தின் கோர தாண்டவத்திற்குள் வெளிவர முடியாமல் சிக்குண்டு கிடக்கிறோம் இன்று ஒரு உடைந்த வீட்டின் மூலையில் இருந்து நாங்கள் 5 பேர் அழுகிறோம், அவரை பாதுகாக்க பயிற்சி பெற்றவர்கள் இறுதியில் எங்களை காப்பாற்ற வீரகாவியம் ஆகிப்போனார். கோபித் அண்ணா விடுதலையாளர்களில் ஓர் வீர சரித்திர நாயகன். வீரவணக்கம் தோழர் செந்தமிழன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
# Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA AFG 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA WI 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), AUS NZ AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISHEK SHARMA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMRAH 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) MITCH MARSH 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) SANTNER 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISHEK SHARMA 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
-
ரத்வத்தை மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான மறைமுக கரும்புலிகள் நினைவாக
இவர்களின் முழு வரலாறு எனக்குத் தெரியாது. தெரிந்ததையெல்லாம் எழுதிவைத்துச் செல்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தெரியுமென்றால் வரலாற்றை பதியுங்கள் உறவுகளே. இது நடந்தது 1997/1998 காலம் என்று நினைவு. ரத்வத்தை மீது கரும்புலித் தாக்குதல் நடத்தவெனு ஒரு மறைமுக கரும்புலிகள் அணியொன்று சென்றது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ரத்வத்தை வரும் போது அவன் மேல் தாக்குதல் நடத்த வேண்டும். ரத்வத்தையின் பாதுகாப்பு வீரர்கள் போன்று உடையணிந்து அவர்களைப் போன்றே ஒரு ஊர்தியில் ஏறி உட்புகுந்தனர் கரும்புலிகள். ஆனால் ரத்வத்தை வருவதற்கு பல நிமிடங்கள் தாமதமானதால் உள்ளே வந்தவர்கள் யார் என்ற ஐயம் எழ எல்லாம் குழம்பிப் போனது. சிங்களம் மோசமான விடயமொன்று நடைபெறயிருப்பதை எண்ணி விழித்தது. கரும்புலிகள் அங்ருந்த மண்டபத்திற்குள் நுழைந்து நிலையெடுத்துகொள்கின்றனர். சண்டை வெடிக்கிறது. வேட்டுகளுக்கு நடுவணில் தண்ணீர் தாகம் எடுக்க அங்கிருந்த சிங்களப் பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார் ஓர் கரும்புலி வீரன். அவரும் தண்ணீர் கொடுத்தார். தாகம் தீர குடித்த வீரன் அப்பெண்மணியின் குழந்தையை வாஞ்சையோடு அரவணைத்து நாங்கள் உங்களைக் காயப்படுத்த மாட்டோம், கவலை வேண்டாம் என்று கூறியதாக பின்னாளில் அப்பெண்மணி கூறினாராம். இது நடந்துகொண்டிருந்த சமநேரத்தில் வாயிற் கதவிற்குள்ளால் உடைத்து பாய்ந்து உள்நுழைந்த சில சிங்கள வீரர்கள் மீது கரும்புலி மறவனொருவன் பாய்ந்து தனது சாஜரை இயக்கி வெடித்திச் சிதறினான். தொடர்ந்த சமரில் எமது தேசத்தின் நெருப்புகுழந்தைகள் யாவரும் தணலாகி விழிமூடிப் போயினராம். இது நான் கேள்விப்பட்ட தகவலே. நானொன்றும் முன்னாள் புலிவீரனன்று. ஆகவே முழு வரலாறு தெரிஞ்சாக்கள் வரலாற்றை எழுதிவையுங்கோ. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடங்கினால் இப்பிடித் தொடங்க வேணும். கிருபன் என்றால் சும்மாவா. உங்கள் நேரத்தை ஒதுக்கிப் போட்டியைத் தொடங்குவதற்கு நன்றி கிருபன். Spartacus பாணியில் சொல்வதென்றால் இது House of Kiruban😁
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
.
-
சிறைக்குள் சிங்களப் படைவீரர்களைக் கொன்ற வேடர் இனப் புலிவீரன்
தமிழர் விதை பிடுங்கப்பட்ட சூடைக்குடா வதைமுகாம்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
.
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
இதில் சில பாகங்கள் விடுபட்டுள்ளன. அவை அனைத்தையும் சேகரித்து முழுமையான நூலாக்கி இதை வெளியிட்டு வைக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது எமது தேசத்தின் இன்றியமையாத நூலாகும். இதை ஈழத்தமிழர்கள் தான் வெளியிடவேண்டும் என்றில்லை. தமிழகத் தமிழர்களும் வெளியிடலாம். யார் குற்றினாலும் அரிசியானால் சரி.
-
சிறைக்குள் சிங்களப் படைவீரர்களைக் கொன்ற வேடர் இனப் புலிவீரன்
இத்தகவலானது வன்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பிய தமிழீழப் புலனாய்வுத்துறையின் வெளியகப் பிரிவில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றிய போராளியின் வாக்குமூலம் ஆகும். இப்போராளி 2009 சனவரி மாதம் குடும்பச் சிக்கல் காரணமாக உறவினர்களாலையே காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார். பின்னர் சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பியோடினார். இவர் 2022ம் ஆண்டு வழங்கிய ஓர் வாக்குமூலத்தின் ஒரு பகுதியிலிருந்த தகவலே இங்கு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேடர் இனப் போராளியும் தமிழீழ புலனாய்வுத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவரும் சூடைக்குடாவிலிருந்து தப்பிய போராளியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவர். அவ் வேடர் இனப் போராளியை இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் தான் சூடைக்குடா வதைமுகாமிற்கு சிங்களவர் சிறைப்படுத்தி கொண்டுவந்தார்கள். அவ்வேடர் இனப் போராளி உயர்ந்த நெடுவலானவர். அவரை கொண்டு வந்த உடனேயே தான் விடுதலைப்புலி என்பதை ஒத்துகொண்டதோடு தன்னிடம் கைச்சுடுகலனொன்று உள்ளதென்றும் அதைத் தருவதாகவும் தெரிவித்தார். எனவே அவருக்கு உடனே சித்திரவதை நடக்கவில்லை. அவ்வேடர் இனப் போராளியை இந்தத் தமிழ்ப் போராளி அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு அருகிலிருந்த ஆழிப்பேரலை வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டிலுக்குள் அடைத்திருந்தார்கள். கொண்டுவந்த அடுத்தநாள் வேடர் இனப் போராளிக்கு பின்னால் போடப்பட்டிருந்த மாஞ்சை (கைவிலங்கு) கழட்டி முன்னுக்கு மாற்றும் போது உதறிக்கொண்டு சிங்களப் படையினன் ஒருவருக்கு இடித்தார். இடித்த இடியில் மூக்கு உடைந்தது. உடனே திமிறி எழுந்து அருகிலிருந்த கம்பியை எடுத்து அடித்தார். அடித்த அடியில் இரு கடற்படையினரின் தலையுடைந்து செத்து மடிந்தனர். மற்றொருவருக்கு கை தூளாய்ப் போனது. இந்தக் களேபரம் நடந்துகொண்டிருக்கையில் வாசலில் காவலாளியாக நின்ற மற்றொரு கடற்படையினன் ஓடிவந்து வெடிவைத்தான், அவ்வேடர் இனப் புலிவீரனை நோக்கி. படபடவென்று வெடிபட்டது. அந்த இடத்திலேயே தலை சிதறியது போல வீழ்ந்து வீரச்சாவடைந்தான், அவ்வேடர் இனப் புலிவீரன். இவை அனைத்தையும் மற்ற புலனாய்வுத்துறைப் போராளி தனது கண்களால் கண்டதாக சோகத்துடன் வாக்குமூலத்தில் பதிவுசெய்தார். ஊர் பெயர் எதுவும் எம்மால் அறிந்திரமுடியா அவ் வேடர் இனப்புலிவீரனுக்கு எம் தலை சாய்த்து வீரவணக்கத்தை தெரிவித்துகொள்வோம். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.
ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்.... தினசரி வேலை இழப்புகள்.... மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்.... அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்.... ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...? பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர். மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 28 11.12.1990 அன்பான வாசகர்களே! 36 நாட்களாக வெளிவந்த “உதிக்கும் திசைநோக்கி உன்னத பயணம்" கட்டுரை தொடரைப் படித்திருப்பீர்கள். கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையை நேரில் தெரிந்துகொள்ள திரு. மாத்தயா அங்கு சென்றபோது அவருடன் கூடச்சென்ற நான் என்னால் முடித்தவரை அந்த மக்களின் அவல நிலைகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரின் மூலம் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது பத்துவீதமே என நான் கருதுகிறேன். அந்த அவலங்களின் உண்மை வடிவத்தை முழுமையாக எழுத்தில் வடிக்க என்னால் முடியவில்லை. அந்தளவுக்கு எழுத்துத் துறையில் எனக்கு அனுபவமில்லை. இத்துறையைப் பொறுத்தவரை நான் கற்றுக்குட்டிதான். உச்சக்கட்ட இன அழிப்பு, அவலங்கள் நிறைந்துள்ள அம்பாறை மாவட்டத்திற்கு எம்மால் போக முடியாததால் இக்கட்டுரை எந்த விதத்திலும் முழுமையானதல்ல. அத்துடன் தொடராக இத்தனைநாள் வாசகர்களை ஒரே நிலையில் வைத்திருப்பதில் எந்தளவுக்கு வெற்றிகண்டுள்ளேன் என்பதும் தெரியவில்லை. என்னோடு கூடவந்த நிதர்சனம் படப்பிடிப்பாளர்கள் இவற்றை வீடியோ மூலம் பட மாக்கியுள்ளார்கள். எனவே இவற்றை நேரில் காணும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்போது அங்குள்ள நிலைமையின் கோரத்தை, அவலத்தை இதைவிடக் கூடுதலாக உங்களால் தெரிந்து கொள்ளமுடியும் எனக் கருதுகிறேன். இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கையில் அங்குள்ள கலாசாரங்கள், இயற்கை அமைப்பு, குடியேற்றங்கள் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் அவலங்களையே முழுமையாக என்னால் கொண்டுவர முடியவில்லை. அதைவிட கட்டைபறிச்சானில் ஒரு தாக்குதலில் 60 இராணுவக் கொமாண்டோக்கள் பலியான சம்பவம் போன்ற விடயங்களை எழுத முடியவில்லை. முடிந்தால் அவற்றையும் புத்தகவடிவில் தர முயற்சிக்கிறேன். நாங்கள் அங்கு சென்றபோது இருந்த நிலைமைகளை விட இப்போதைய நிலைமை இன்னும் மோசம் திருமலையிலிருந்து மட்டக் களப்பு சென்று திரும்ப முன்னர் நான்கு இராணுவ முகாம்' கள் அங்கே கூடிவிட்டன. இப்போது மேலும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன . 1010 சதுரமைல் உள்ள திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போது 108 சிறிலங்காப் படை முகாம்கள் உள்ளன. அந்தளவுக்கு ஆக்கிரமிப்பின் வேசம் உச்சநிலையிலுள்ளது. இதைவிட சிங்கள, முஸ்லிம் ஊர்காவல் படைகளின் காவல் நிலைகள் வேறு. இத்தனைக்கும் மத்தியில் தான் அங்கு போராளிகள் போராடுகின்றார்கள். எஞ்சி இருக்கும் மக்கள் இவர்களுக்குக் கைகொடுக்கிறார்கள். குடியிருப்புக்களில் மக்கள் இல் லாத இடங்களில் போராளிகள் எதிர் நோக்கும் சிரமங்கள் எடுத்துரைக்க முடியாதவை. எந்தத் தகவல்களுமோ போராளிகளுக்குக் கிடைக்கமாட்டா. சகலத்தையும் போராளிகளே செய்ய வேண்டும். ஆனாலும் தங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அவலங்கள்தான் மிக அதிகம். இன அழிவைக் கூடுதலாகச் சந்தித்த மாவட்டம் இதுவேதான். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை இந்த மூன்று மாவட்டங்களிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட இந்தப் படுகொலைகள் எவ்வளவு காலத்துக்குள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதை அவதானித்தால் தான் இன அழிப்பின் வேகம் புரியும்; கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டோர் கழுத்தை நெரிக் கையில்... வருத்தத்துடன், அதேவேளை தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகளுக்கு காரணங்கள் புரிந்திருக்குமென நினைக்கிறேன். அகதி முகாம் படுகொலைகள், சுற்றி வளைப்புக்கள், பயணங்களின் போது கடத்தப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில் இவை மேற் கொள்ளப்படுகின்றன. வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த அவலங்களை மூடிமறைக்க, அவற்றை நியாயப்படுத்த சிறிலங்காவின் தேசியப் பத்திரிகைகள், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் எடுத்துவரும் பகீரதப் பிரயத்தனங்கள் தான் - வந்தாறு மூலை அகதிகள் முகாமிலிருந்து அகதிகள் வெளியேற்றம் இதற்கு சிறு உதாரணம். தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய தகவலைப் பெறுதல், நோயாளிகளை பராமரித்தல் காயமடைந்தோருக்கு வைத்திய வசதி, அகதிமுகாம் மக்களுக்கு உணவு, அவர்களுக்கான வைத்திய வசதி போன்றனவெல்லாம் தங்களுடைய கடமைகள். இவற்றில் எவரும் தலையிடாதீர்கள். தலையிட முடியாது என்றெல்லாம் இராணுவம் இல்லாத பகுதிகளில் முழக்கமிடும், (ஏன் சண்டித்தனம் என்று கூடச் சொல்லலாம்) செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கிழக்கு மாகாணத்தில் எந்தளவு “பொறுப்புடன்” கடமை புரிந்துள்ளனர் என்பதும் கேள்விக் குறியே; முடிந்தால் எனது அன்புக்குரிய வாசகர்கள் இந்த அமைப்புகள் தங்கள் பணி குறித்து அச்சிட்டு வைத்திருக்கும் பிரசுரங்களை வாங்கி கிழக்கின் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐயாயிரம் பேர் டிசம்பர்-10 (தற்போதைய நிலவரப்படி) வரையில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக் கணக்காணோர் கைதாகியுள்ளனர். தடுப்புக்காவலில் இருப்போர் பற்றி அறிகிறார்களோ இல்லையோ, இவர்கள் கண்ணெதிரே கைது செய் யப்படுவதே அலட்சியமாகிறது இவர்களுக்கு. அடுத்து “கோட்டையைக் கைப்பற்றுவதில் மட்டக்களப்பு ஆயுதங்களின் பங்களிப்பு கணிசமானது. அதைவிட மட்டக்களப்பு போராளிகளும் அங்கு போராடியிருக்கிறார்கள். வீரமரணமடைத்திருக் கின்றார்கள்” என்று திரு. நியூட்டன் கூறிய வார்த்தை அவதானிக்கப்படவேண்டியவை, இன்று வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களைப் பாதுகாப்பதில் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை இந்த வார்த்தைகள் உணர வைக்கும், பதிலுக்கு நாம் அவர் களுக்காக என்ன செய்துள்ளோம். வெட்கப்பட வேண்டிய விடயம். இந்தப் போரினால் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்தான். பாலுக்குச் சீனி இல்லையென்ற பிள்ளைக்கும் கூழுக்கு உப்பு இல்லையென்ற பிள்ளைக்கும் ஒரேயளவு கவலைதான் என்பார்கள், கூழே இல்லாத பிள்ளைகளுக்கு...? இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்த எவருக்காவது கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ வேண்டும். அந்த அவலங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று சிந்தனை பிறந்திருக்குமாயின் இத்தொடரை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றதென்றே கருத வேண்டும். அன்பான வாசகர்களே! எங்கள் பார்வைகளை அகலமாக்கிக் கொள்வோம். அவர்களை நோக்கி எங்கள் கரங்கள் நீளட்டும். உதிக்கும் திசையிலுள்ளோர் உயிர் பெறட்டும். நீங்கள் சம்மதம் தானே? நன்றி. கரும்பறவை (முற்றும்)
- Yesterday
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
டக்ளச சும்மா பகிடிக்குத்தான் கைது பண்ணினவை. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதேங்கோ மகிந்தரே....😎
-
பற்சமயத்தவருக்கு நடந்த வித்துடல் விதைப்புகள்
2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள் Video: 2009 இறுதிப்போரில் மாவீரர் துயிலுமில்லங்கள் நகர்த்தப்பட்ட...2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள்
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
இளமை என்பதை விட சாகும் வரைக்கும் தேகாரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணித்தியாலமாவது உடம்பு அசையும் படி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். நவீன காலத்து எண்ணைகளும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். இது எனது சொந்த அனுபவம்.👆 அதை விட ஜேர்மனியில் இன்றும் முக்கியமாக வயதானவர்களும் ஏனையவர்களும் பன்றி கொழுப்பை பாணில் பூசி சாப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பன்றி கொழுப்பை உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிக்கலுமில்லை.ஒரு சிதம்பர ரகசியமும் இல்லை.😎