Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. Reserve Bank of AustraliaDrivers of the Australian Dollar Exchange Rate | Explaine...This series provides short, concise explanations for various economics topics.மேலே குறிப்பிட்ட தரப்புக்கள் அனைத்தும் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன அவை எவ்வாறான கால அளவை கொண்டன என்பதற்கான அவுஸ்ரேலிய மத்திய வங்கி கட்டுரை.
  3. அரச பாதீட்டு பற்றாக்குறை ஏற்படும் போது அரசின் கடனை மத்திய வங்கி வாங்குகின்றன, அவை நேரடியாக மத்திய வங்கி அரசின் கடனை வாங்குவதில்லை, அரச பணமுறிகளை Secondary market மூலமாக வணிக வங்கிகளிடமிருந்து வாங்குகின்றன, அதற்கு தேவையான காசிற்கு பதிலாக வணிக வங்கிகளின் இருப்பில் (வங்கிக்கணக்கு என எடுத்துக்கொண்டால்) ஒரு பதிவினை இடுவார்கள் (Digital), நான் உனக்கு இவ்வளவு கடன் பட்டுள்ளேன் என்பது போல, பின்னர் அரசு கடனினை செலுத்திய பின்னர் அதனை நீக்கி விடுவார்கள், குறித்த காலகட்டத்திற்கான வட்டியினை (கற்பனை கடன்) மத்திய வங்கி வணிக வங்கிக்கு செலுத்தும். Quantitative Easing போது மத்திய வங்கி மேற்குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதுடன் வட்டி விகிதத்தினை குறைப்பதன் மூலம் மக்களை செலவு செய்ய தூண்டுவது, வணிக வங்கிகளிடமுள்ள பணமுறிகளை வாங்குவதன் மூலம் வங்கிகளின் திரவ சொத்தினை அதிகரித்து மேலதிக கடனை ஊக்குவித்து பணவழங்கலை அதிகரிக்கும். இந்த செயற்பாடு உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியினை வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இழக்க செய்கிறது. மத்திய வங்கி எவ்வாறு தனது அன்னிய செலாவணியில் தாக்கம் ஏற்படுத்துகிறதோ அதனை போல அரசுகளின் வரிக்கொள்கையும் அன்னிய செலாவணியின் பெறுமதியில் தாக்கம் செலுத்துகிறது. இறக்குமதி தீர்வை அதிகமாக இருந்தால் நாட்டிற்கு வர்த்தக நிரம்பலை உருவாக்கும்.
  4. மத்திய வங்கியின் செயற்பாட்டினை புரிந்து கொள்ள வணிக வங்கிகளின் செயற்பாடுகளின் தொழில்பாடு முக்கியமாகிறது. மத்திய வங்கியின் பணத்தினை MB என கூறுகிறார்கள், சில நாடுகளில் M0 கூறப்படுகிறது, இது அச்சிடப்பட்ட திடமான காகித மற்றும் உலோக நாணயங்களாகும். வணிக வங்கிகளின் நாணயமாக M0 - M3 இனை கூறுகிறார்கள். பொதுவாக M2 money supply (கருவூலத்தினால் அச்சிடப்பட்ட நாணயங்களும் வணிக வங்கிகள் உருவாக்கிய நாணயங்களு அடங்கலாக) பணவீக்க பண சுருக்க காரணியாகிறது. நாணயங்கள் அச்சிடப்படுவது ஏற்கனவே உள்ள நாணயத்தினை மாற்றீடு செய்வதற்கு பயன்படுத்தப்படுவது ஆனால் அரசுகள் கூறும் புதிய நாணயம் அச்சிடப்பட்டது எனும் போது அவை புதிதாக நாணயத்தினை அச்சிடுவதில்லை.
  5. Today
  6. வணிக நிறுவனங்களின் ஏற்றுஅம்தி இறக்குமதி (அணிக செயற்பாடு), பெரு முதலீட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டு நடவடிக்கைகள்(Risk on, Risk off), வணிக வங்கிகளின் செயற்பாடு (currency exchange - tourism), சிறிய அன்னிய செலாவணி தரகு மற்றும் வர்த்தகர்கள் (Retail brokerage and retail traders) இவை தவிர மத்திய வங்கி மற்றூம் அரசுகள் அன்னிய செலாவணியில் தாக்கம் செலுத்துகிறார்கள். மத்திய வங்கிகள் என்னதான் நாணயம் மிதக்கவிடப்பட்டதாக கூறினாலும் முழுமையாக மிதக்கவிடப்பட்ட நிலை எங்கும் காணப்படுவதில்லை. மத்திய வங்கியின் செயற்பாடுகள் எவ்வாறு அன்னிய செலாவணியினை பாதிக்கின்றது? நேரடியாக நாணய பெறுமதியின் தளம்பலை குறைக்க வெளிநாட்டு இருப்பினை கட்டுப்படுத்துவது (விற்றல் வாங்கல்). Monetary policy, உள்நாட்டு பொருளாதாரத்திற்கேற்ப எடுக்கும் முடிவுகள் மூலம்.
  7. நன்றி.அந்த பேருந்து நிச்சயம் இல்லாமல் அதை நம்பி புகையிரதம் பதிவு செய்வது கூடாது.7 மணி நேரம் காத்திருந்து யாழ்ப்பாண எ சி பஸ் எடுப்பம்.
  8. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்; நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் Published By: Vishnu 25 Dec, 2025 | 07:48 PM மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுடனர். https://www.virakesari.lk/article/234418
  9. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்! 25 Dec, 2025 | 04:43 PM இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார். 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார். https://www.virakesari.lk/article/234405
  10. மிக்க நன்றி பிரியன் அண்ணை. மிக்க நன்றி புங்கை அண்ணை. மிக்க நன்றி சிறி அண்ணை. மிக்க நன்றி கிருபன் அண்ணை. மிக்க நன்றி உடையார் அண்ணை. மிக்க நன்றி யாயினி அக்கா. மிக்க நன்றி நந்தன் அண்ணை. மிக்க நன்றி ரசோ அண்ணை. நேற்று 24/12 எனது பிறந்தநாள், எதிர்பாரத விதமாக உறவுகள் நண்பர்கள் சிலர் வீடு வந்து வாழ்த்தினார்கள்.
  11. பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணிக்கை - வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், புதிய நட்சத்திரங்களின் உற்பத்தி வேகம் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நட்சத்திரங்களின் பிறப்பும் இறப்பும் தற்போதைய ஒருமித்த அறிவியல் கருத்தியலின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சிறிது காலத்திலேயே முதல் நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கின. உண்மையில், கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நமது பால்வெளி அண்டத்திலேயே 13 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று நட்சத்திரங்களைக் கண்டறிந்தது. நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப் பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. விண்வெளித் தூசு மற்றும் வாயுக்கள் நிறைந்த நெபுலா எனப்படும் பிரமாண்ட மேகக்கூட்டங்களில் இவை உருவாகின்றன. ஈர்ப்பு விசை வாயுத் திரட்சிகளை ஒன்றாக இழுக்கிறது; இது இறுதியில் வெப்பமடைந்து ஒரு 'குழந்தை நட்சத்திரமாக' அல்லது புரோட்டோஸ்டாராக மாறுகிறது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI; Processing: J DePasquale/A Pagan/A Koekemoer (STScI) படக்குறிப்பு,குழந்தை நட்சத்திரங்கள் (புரோட்டோஸ்டார்கள்) அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தரும் மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன நட்சத்திரத்தின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவுக்கு வெப்பமடையும்போது, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற, 'அணுக்கரு இணைவு' என்ற செயல்முறை நடைபெறுகிறது. இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. இப்போது நட்சத்திரம் ஒரு நிலையான 'முதன்மை வரிசை' கட்டத்தில் இருக்கும். நமது சூரியன் உள்பட முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களே பிரபஞ்சத்தின் மொத்த நட்சத்திரங்களில் 90% உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவை சூரியனின் நிறையைப் போல பத்தில் ஒரு பங்கு முதல் 200 மடங்கு வரை இருக்கின்றன. இறுதியில் இந்த நட்சத்திரங்கள் எரியூட்டும் எரிபொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும். நமது சூரியனை போன்ற குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மங்கி மறையும் செயல்முறைக்கு உள்ளாகின்றன. சூரியனைவிட குறைந்தது எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்ட நட்சத்திரங்களின் முடிவு மிகவும் வியத்தகு முறையில் இருக்கும்: அவை சூப்பர்நோவா எனப்படும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறுகின்றன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images பழைய நட்சத்திரங்களின் ஆதிக்கம் கடந்த 2013ஆம் ஆண்டு, நட்சத்திர உருவாக்கப் போக்குகளை ஆய்வு செய்த சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் குழு ஒன்று, இனி உருவாகப் போகும் மொத்த நட்சத்திரங்களில் 95% ஏற்கெனவே பிறந்துவிட்டன என்று கூறியது. "தெளிவாகப் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் அந்தக் காலகட்டத்தில் சுபாரு தொலைநோக்கி இணையதளக் கட்டுரையில் கூறியிருந்தார். பிரபஞ்சத்தின் காலவரிசையில், 'காஸ்மிக் நூன்' என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில்தான் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. "அண்டங்கள் வாயுவை நட்சத்திரங்களாக மாற்றுகின்றன, ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே அதைச் செய்கின்றன," என்கிறார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் பேராசிரியரான டக்ளஸ் ஸ்காட். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யூக்ளிட் மற்றும் ஹெர்ஷல் தொலைநோக்கிகளின் தரவுகளை ஆய்வு செய்த ஒரு புதிய ஆய்வின் இணை ஆசிரியராக பேராசிரியர் ஸ்காட் உள்ளார். பிரபஞ்சத்தின் பிரமாண்டமான 3D வரைபடத்தை உருவாக்கும் யூக்ளிட் திட்டத்தின் மூலம், அவரும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவும் ஒரே நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான அண்டங்களை ஆய்வு செய்ய முடிந்தது. பட மூலாதாரம்,Esa/Euclid/Euclid Consortium/Nasa; Processing: JC Cuillandre (CEA Paris-Saclay)/G Anselmi படக்குறிப்பு,யூக்ளிட் விண்வெளித் திட்டம், விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் பகுதியின் விவரங்களைப் படம் பிடித்துள்ளது குறிப்பாக விண்வெளித் தூசுகள் வெளியிடும் வெப்பத்தின் மீது ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். அதிக நட்சத்திர உருவாக்க விகிதத்தைக் கொண்ட அண்டங்கள், பெரிய மற்றும் வெப்பமான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதால் அதிக வெப்பமான தூசுகளைக் கொண்டிருக்கும். பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக அண்டங்களின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருவதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்காட் கூறுகிறார். "நாம் ஏற்கெனவே நட்சத்திர உருவாக்கத்தின் உச்சகட்டத்தைத் தாண்டிவிட்டோம், ஒவ்வொரு தலைமுறை நட்சத்திர உருவாக்கத்திலும் புதிய நட்சத்திரங்கள் குறைவாகவே பிறக்கும்," என்று அவர் கூறுகிறார். பிரபஞ்சம் எப்போது முடிவுக்கு வரும்? பழைய நட்சத்திரங்களின் மரணம் அதே பொருட்களைப் பயன்படுத்திப் புதிய நட்சத்திரங்கள் உருவாக வழிவகுக்கும் என்பது உண்மைதான், ஆனால் இது அவ்வளவு எளிமையானதல்ல. நமக்கு ஒரு குவியல் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். நாம் புதிய வீடு ஒன்றைக் கட்ட விரும்பினால், பழைய கட்டடத்தை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் அதிலுள்ள அனைத்துமே பயனுள்ளதாக இருக்காது. "அதாவது நாம் ஒரு சிறிய வீட்டையே கட்ட முடியும். ஒவ்வொரு முறை அதை இடிக்கும்போதும் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள் என்னால் ஒரு வீட்டைக்கூட கட்ட முடியாத நிலை வரும் அளவுக்குக் குறைந்து கொண்டே இருக்கும்," என்று பேராசிரியர் ஸ்காட் விளக்குகிறார். நட்சத்திரங்களுக்கும் இதுதான் நடக்கிறது. "ஒவ்வொரு தலைமுறை நட்சத்திரங்களுக்கும் எரியூட்டக் குறைந்த எரிபொருளே இருக்கும். இறுதியில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கக்கூடப் போதுமான எரிபொருள் இருக்காது" என்று அந்த அண்டவியலாளர் கூறுகிறார். பட மூலாதாரம்,Nasa/SDO படக்குறிப்பு,நமது சூரியன் இறுதியாக மங்கி மறைவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர் "பிரபஞ்சத்தில் பெரிய நிறை கொண்ட நட்சத்திரங்களைவிடக் குறைவான நிறை கொண்ட நட்சத்திரங்களே மிகவும் அதிகம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்." பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தத்துவங்களை முன்வைத்து வருகின்றனர். அது எப்படி, எப்போது என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று 'வெப்ப மரணம்' (heat death). 'பிக் ஃப்ரீஸ்' (Big Freeze - மகா உறைநிலை) என்றும் அழைக்கப்படும் இது, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும்போது, ஆற்றல் பரவி, இறுதியில் உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியடையும் என்று கணிக்கிறது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று விட்டு விலகி தூரமாகச் செல்லும், அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடும் மற்றும் புதிய நட்சத்திரங்கள் உருவாகாது. பேராசிரியர் ஸ்காட் அளிக்கும் விளக்கத்தின்படி, "பிரபஞ்சத்தில் கிடைக்கும் ஆற்றலின் அளவு வரையறுக்கப்பட்டது." பட மூலாதாரம்,Esa/Webb/Nasa/CSA/J Lee/PHANGS-JWST Team படக்குறிப்பு,பல அண்டங்களில் நட்சத்திர உருவாக்கம் இன்னும் மிக நீண்ட காலத்திற்குத் தொடரும் நிறைய பூஜ்ஜியங்கள் ஆனால் நீங்கள் வானத்தை ஏக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக, நட்சத்திரங்களின் அழிவு நிகழ மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிய வேண்டும். நமது சூரியன் மறைந்த பிறகும், அடுத்த 10 முதல் 100 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் என்று பேராசிரியர் ஸ்காட் மதிப்பிடுகிறார். 'பிக் ஃப்ரீஸ்' நிலையைப் பொறுத்தவரை, அது இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு சுமார் ஒரு 'குவின்விஜிண்டில்லியன்' ஆண்டுகளில் வரும் என்று மதிப்பிட்டனர். அதாவது, ஒன்றுக்குப் பின்னால் 78 பூஜ்ஜியங்களை கொண்ட ஆண்டு எண்ணிக்கை அது. எனவே, நீங்கள் தெளிவான இரவு வானத்தைப் பார்த்து, நட்சத்திரங்களை ரசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lvqjd9lxno
  12. சுனாமி, டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் ; நாளை 2 நிமிட மௌன அஞ்சலி ; பொதுமக்களிடம் வேண்டுகோள்! Published By: Digital Desk 1 25 Dec, 2025 | 02:04 PM சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரழிவிலும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற டித்வா புயல் தாக்கத்தின் பேரனர்த்தங்களிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வானது காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக நாளை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இரு நிமிட நிசப்தத்தை கடைபிடித்து, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருமாறும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/234391
  13. வாசித்தேன், ரசித்தேன். தவிர்த்தலும் நிம்மதிக்கு ஒரு வழி!
  14. 2025 ஆம் ஆண்டில் யானைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 11:33 AM கடந்த ஆண்டை (2024) விட இந்த ஆண்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 வரை 409 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌஃபிக் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு (2024) பதிவான யானைகளின் இறப்பு எண்ணிக்கை 388 என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 71 யானைகள் இறந்துள்ளதாகவும், மின்சாரம் தாக்கி 56 யானைகள் இறந்துள்ளதாகவும், ரயில் மோதி 20 யானைகள் இறந்துள்ளதாகவும், வேட்டையாடியதால் 48 யானைகள் இறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234378
  15. பேரழிவுக்கு உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது - புபுது ஜயகொட Published By: Vishnu 25 Dec, 2025 | 05:16 AM தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனமும் முதலாளித்துவ வர்க்கமுமே இந்த அழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டு மென முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் 'தித்வா சூறாவளியின் துயரத்துடன் முன்னோக்கி' எனும் தொனிப்பொருளில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 37 சதவீதத்திற்கு பெரும் சொத்துடையவர்களே பொறுப்பு கூற வேண்டும். இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நாடுகளின் செயற்பாட்டால் ஏற்பட்ட 7 பில்லியன் டொலர் அனர்த்த சேதத்திற்கு வளர்ந்த நாடுகளிடம் இழப்பீடு கோர வேண்டும். இலங்கையில் 1996 ஆம் ஆண்டு மண் பாதுகாப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததும் முறையற்ற மணல் அகழ்வு மற்றும் காடழிப்புமே பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கக் காரணம். அனர்த்தத்தின் பெயரால் நவதாராளவாத அடக்குமுறைகளை அரசு திணிக்கக் கூடாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டின் மீதான வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அரசு அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் மீதான வெட் வரியை நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி மற்றும் நுண்கடன் ஆகியவற்றை மீள் செலுத்தும் தவணை காலத்தை ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/234362
  16. இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ் ஆர்.முத்துக்குமார் ஆஷஸ் தொடரை இழந்தது, வீரர்களின் மோசமான ஆட்டம் அதற்கும் மேலாக குடிபோதை பிரச்சினை என்று பென் ஸ்டோக்ஸிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்நிலையில் நாளை மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது. அணி வீரர்களைப் பாதுகாப்பதா, அல்லது இங்கிலாந்து அணியின் மானத்தை மீட்டெடுப்பதா என்கிற குழப்பத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். களத்தில் இங்கிலாந்து அணியின் ஆட்டம் ஒரு பெருங்கவலை என்றால் களத்திற்கு வெளியே நடத்தை ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வீரர்களின் நூசா கடற்கரை குடிவெறியாட்டமும் இப்போது மக்கள் மத்தியில் இங்கிலாந்து அணியின் மரியாதையை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. மெல்போர்னின் ஒரு லட்சம் ரசிகர்களும் நூஸா குடிபோதை குறித்து இங்கிலாந்து வீரர்களை நிச்சயம் வறுத்தெடுக்கப் போகிறார்கள். இந்தக் கவலைகளிடையே 5-0 ஒயிட்வாஷ் வாங்காமல் குறைந்தது 4-1 என்றாவது தொடரை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் இவையெல்லாம் பற்றி என்ன கூறுகிறார் என்று கேட்போம்: “இப்போது இந்தச் சூழ்நிலையை நான் எப்படிக் கையாளப்போகிறேன் என்பதுதான் என் வாழ்க்கையில் முக்கியமானது. அனைவரது நலமும் முக்கியம் குறிப்பாக கெட்ட பெயர் எடுத்த சில தனிநபர்களையும் காக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து கேப்டனாக எனக்கு இப்போது பெரிய கடமை காத்திருக்கிறது. இப்போதுதான் முதல் முறையாக இவ்வாறான பிரச்சனைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை உணர்கிறேன். இங்கிலாந்து கேப்டனாக என் வீரர்களைக் காக்க வேண்டும் என்பது முதற்கடமையாக உள்ளது. இந்த பயணத்தில் இன்னும் சாதிக்க வேண்டிய இலக்கு உள்ளது. திட்டமிட்டபடி எதுவும் செல்லவில்லை. இன்னும் 2 போட்டிகள் உள்ளன, எங்களிடம் இன்னும் நிறைய முயற்சிகள் ஆற்றல்கள் உள்ளன. என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் மீதமுள்ள இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது செய்ய முடியும். இந்த 2 போட்டிகளை வென்றாக வேண்டும். என் வீரர்களை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்னால் இயன்ற வரையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இப்போது என்னவெனில் வீரர்கள் நான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணரவைத்தால்தான் இந்த நாட்டுக்காக இந்த 2 போட்டிகளில் செயல்திறனைக் காட்ட முடியும்.” என்றார். நிருபர்கள் ஸ்டோக்சிடம் திரும்பத் திரும்ப நூஸா குடிபோதை விவகாரத்தைக் கிளற, ஸ்டோக்ஸ் ஒரே பதிலைத் திரும்பத் திரும்ப அளித்தார், ‘நான் தான் ஏற்கெனவே சொன்னேனே, என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும்’ என்றார். “களத்தில் அணியை ஒன்று திரட்டி போட்டியை வெற்றி பெறும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதே வேளையில் இது போன்ற தருணங்களில் வீரர்களைக் காப்பதும் என் பொறுப்புதான். அவர்களை இதிலிருந்து விடுவித்து நல்ல மனவெளியை உருவாக்கினால்தான் களத்தில் அவர்களைச் செயல்பட வைக்க முடியும். இப்போதைக்கு 3-0 என்று பின் தங்கிய பிறகே நாம் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அது துருவி ஆராயப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பும்போது திரும்பிப் பார்க்கையில் பாசிட்டிவ் ஆக நினைத்துப் பார்க்க ஏதாவது செய்ய வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். https://www.hindutamil.in/news/sports/restoring-the-respect-of-the-england-team-ben-stokes-in-confusion
  17. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு Published By: Vishnu 25 Dec, 2025 | 05:14 AM (நா.தனுஜா) பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை' என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். அதேபோன்று, 'பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?' எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன' என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234361
  18. நத்தார் திருநாள் அன்பு, சமாதானம், தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 25 Dec, 2025 | 12:50 AM கிறிஸ்மஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நத்தார் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமூகத்திற்கு அன்பு, தியாகம், மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்த தெய்வீகப் பிறப்பு, மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழவும், வேறுபாடுகளை மதித்து சமாதானமாக இணைந்து செயல்படவும் வழிகாட்டும் ஒரு நிரந்தர ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மகத்தான திருநாளை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கிறிஸ்மஸ் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை விதைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய சமூக மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், கிறிஸ்மஸ் எடுத்துச் சொல்லும் மனிதநேய மதிப்புகள் மிகவும் அவசியமானவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். பரஸ்பர புரிதல், சகோதரத்துவ உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை வலுப்பெறும்போது மட்டுமே நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இலங்கை மக்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே கிறிஸ்மஸ் திருநாள் வழங்கும் பிரதான செய்தி எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஒற்றுமை உணர்வே நாட்டின் அமைதி, அபிவிருத்தி மற்றும் எதிர்கால வளத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்தார். இந்த கிறிஸ்மஸ் பண்டிகை, புதிய நம்பிக்கையுடனும், புதுப்பித்த உற்சாகத்துடனும் அனைவரையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் மனிதநேயமும் கருணையும் வேரூன்ற உதவ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், ஒற்றுமை, சமாதானம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளுடன் புதிய ஆண்டை எதிர்கொள்ள அனைவரையும் அழைத்துள்ளார். https://www.virakesari.lk/article/234348
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @ஏராளன் !
  20. இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது. 'சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்' என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், சீனா புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுடன் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சேர்த்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சக கண்டனம் தெரிவித்துள்ளது. "அமெரிக்கர்களிடமிருந்து இதே போன்ற கதையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம்," என சீனா தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், தென் சீன கடல் , சென்காகு தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பாக, சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு தொடர்ந்து ஆழமாகி வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விதமான போர் விமானங்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க செனட் அவை தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ராணுவ திறன்கள் மற்றும் உத்தி ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் அதன் அண்டை நாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்த அறிக்கை அலசுகிறது. உதாரணமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக நிலையற்றதாக உள்ளது என்றும் ஆனால் சமீபமாக உறவு மேம்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. அதில், "2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையேயான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன்பாக, இந்திய நிர்வாகம் எல்ஏசி பகுதியில் சீனாவுடனான சிக்கலை தீர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ஷி ஜின்பிங் - மோதி இருவரின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான மாதாந்திர உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பினரும் எல்லை நிர்வாகம் குறித்தும் நேரடி விமானங்கள், விசா வசதிகள், கல்வி மற்றும் பத்திரிகையாளர்கள் ரீதியான பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், "எல்ஏசி பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், அமெரிக்கா - இந்தியா உறவுகள் மேலும் வலுவடைவதை தடுக்கவும் சீனா விரும்புகிறது. எனினும், சீனாவின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு சந்தேகம் நீடிக்கிறது. தொடர்ச்சியான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் மற்ற கவலைக்குரிய பிரச்னைகள் ஆகியவை இருநாட்டு உறவுகளை கட்டுப்படுத்துகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த அறிக்கையின்படி, சீனா 2020 முதல் பாகிஸ்தானுக்கு 36 ஜே-10சி விமானங்களை வழங்கியுள்ளது. எகிப்து, உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா, இரான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விமானங்களின் மீது ஆர்வம் தெரிவித்துள்ளன. (கோப்புப் படம்) அருணாச்சல பிரதேசம் குறித்து குறிப்பிட்டுள்ளது என்ன? சீனா சமரசம் செய்துகொள்ளாத அதன் "முக்கியமான விருப்பங்கள்" என, அந்த அறிக்கை மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறது. முதலாவது, சீன கம்யூனிச கட்சியின் கட்டுப்பாடு, இரண்டாவதாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய பகுதிகளுக்கு உரிமை கோருவதை விரிவாக்கம் செய்தல் ஆகியவை. "சீனாவின் தலைமைத்துவம் 'முக்கிய நலன்கள்' என்ற சொல்லின் வரையறையை தைவான் மீதான சீனாவின் இறையாண்மை உரிமைகோரல்கள் மற்றும் தென் சீனக் கடல், சென்காகு தீவுகள், மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள பிராந்தியப் பிணக்குகளையும் அதில் சேர்த்துள்ளது." என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2049-ஆம் ஆண்டுக்குள் 'சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை' அடைவதே சீனாவின் தேசிய உத்தி என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையின்படி, "ஒரு 'புதிய சீனா' தனது செல்வாக்கு, மற்றும் நிகழ்வுகளை வடிவமைக்கும் திறனை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்", மேலும், 'போரிட்டு வெற்றிபெறக்கூடிய' மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை 'உறுதியுடன் பாதுகாக்கக்கூடிய' ஒரு 'உலகத் தரம் வாய்ந்த' ராணுவத்தை அது உருவாக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. டிரம்பின் தலைமையின் கீழ், அமெரிக்கா-சீனா உறவுகள் "பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளன" என்றும், இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவளிக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது. "மக்கள் விடுதலை ராணுவத்துடன் (PLA) ராணுவ ரீதியான ஒத்துழைப்பின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும், மூலோபாய நிலைத்தன்மை, மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் பதற்றத்தைக் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், நாங்கள் இதைச் செய்வோம். எங்களின் அமைதியான நோக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்கான பிற வழிகளையும் நாங்கள் ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குறித்து கூறப்பட்டுள்ளது என்ன? சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக அறியப்பட்டதே, அதுவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனா எந்தெந்த நாடுகளுக்கு உதவி செய்துவருகிறது, என்ன மாதிரியான ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளன என்பது குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த அறிக்கையில், தன்னுடைய மூன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் சீனாவிடம் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாகவும் இது இது சீனாவின் 'முன்கூட்டியே எச்சரித்து பதிலடி கொடுக்கும்' திறனை மேம்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், "அமெரிக்கர்களிடமிருந்து இதே கதையை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுவருகிறோம். அமெரிக்க அணு சக்தியை வேகமாக மேம்படுத்தி வருவதை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையில் தாக்கத்தை செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சர்வதேச சமூகம் இதுகுறித்து கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் அணுசக்தி வல்லரசாக விளங்குகிறது. அணு ஆயுதங்களை நீக்குவதற்கான தன்னுடைய கடமையை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் நான்கு போர்க்கப்பல்கள் கடந்த தசாப்தத்தில் வழங்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சீனா ஏற்றுமதிக்காக மூன்று முக்கிய போர் விமானங்களை வழங்குகிறது: ஐந்தாம் தலைமுறை FC-31, நான்காம் தலைமுறை J-10C பல்நோக்கு போர் விமானம், மற்றும் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்படும் JF-17 இலகுரக போர் விமானம் ஆகியவை ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு மே மாதத்தின்படி, எந்தவொரு FC-31 விமானமும் எந்தவொரு நாட்டுக்கும் விற்கப்படவில்லை என்றும் ஆனால் எகிப்து, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதனை பெறுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பது குறித்து சீனா அநேகமாக பரிசீலித்துவருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாக்கா நீரிணை, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற கடல் தொடர்பு வழிகளை அணுகுவதற்கும் சீன ராணுவம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2k4we7k8jgo
  21. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! Published By: Digital Desk 3 25 Dec, 2025 | 01:45 PM கடவத்தையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வு (Float Operated Valves) தொகையை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் 15ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 500,000 மதிப்புள்ள வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர், மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) உத்தியோகபூர்வ இலச்சினையை அனுமதியின்றி பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. நிறுவனம் மீதான வழக்கு மீண்டும் 2026 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் விரைவில் பழுதடைவதால் நீர் கசிவு (Water Leaks) ஏற்பட்டு உங்கள் நீர் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே சந்தையில் உரிய லேபிள்கள் அல்லது விபரங்கள் இல்லாத தரம் குறைந்த வால்வுகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிப்போவது முழு நாட்டுக்கும் ஏற்படும் ஒரு தேசிய குற்றமாகும். தரம் குறைந்த பொருட்களுக்கு ஏமாற வேண்டாம், எப்போதும் தரம் குறித்து விழிப்புடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234393
  22. அது நடக்க வாய்ப்பு இல்லை தானே அண்ணை! அப்ப நீங்க கேள்விக் கொத்தை தயாரிக்க தொடங்கலாம்!!
  23. 🍖 “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! 📉🚫 written by admin December 25, 2025 நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி: மாடுகள் மீட்பு: யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான கொல்களத்தில் (Slaughterhouse) அனுமதியற்ற முறையில் இறைச்சியாக்கப்படவிருந்த 2 கன்றுகள் உட்பட 15 மாடுகளை நேற்றிரவு மாநகர சபையினர் மீட்டனர். விற்பனை பாதிப்பு: இதனால் இன்று நத்தார் தினத்தன்று யாழ். நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாமல் போனது. விலை ஏற்றம்: தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டதுடன், பொதுமக்கள் இறைச்சி வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். வியாபாரிகளின் குமுறல்: “பண்டிகை காலத்தில் அதிக வியாபாரம் நடக்கும் என நம்பி அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கினோம். மாநகர சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என வியாபாரிகள் மாநகர சபையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே மாடுகளை விடுவிக்க முடியும் என்பதில் மாநகர சபை அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். https://globaltamilnews.net/2025/224943/
  24. 🛳️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! 🇰🇵☢️ written by admin December 25, 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். 📝 முக்கிய அம்சங்கள்: வரலாற்று சாதனை: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருந்தன. தற்போது வடகொரியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தொழில்நுட்பம்: இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே அணு உலை (Nuclear Reactor) பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது கடலில் இறக்கப்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ பலம்: இது ‘இரண்டாவது தாக்குதல்’ (Second-strike capability) நடத்தும் திறனை வடகொரியாவுக்கு வழங்கும். அதாவது, நிலப்பரப்பில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், கடலுக்கடியில் இருந்து எதிரிகளைத் தாக்க இது உதவும். ரஷ்யாவின் உதவி: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியதற்காக, பதிலாக ரஷ்யா இந்த அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்கியிருக்கலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ⚠️ பாதுகாப்பு எச்சரிக்கை: இதேவேளை, தென்கொரியாவும் அமெரிக்காவின் உதவியுடன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. https://globaltamilnews.net/2025/224952/
  25. 🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰 written by admin December 25, 2025 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (டிசம்பர் 26) நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 🕒 முக்கிய நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்: மௌன அஞ்சலி: நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் நாடு தழுவிய ரீதியில் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய நிகழ்வு: 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு, காலியில் உள்ள பெரலிய (Peraliya) சுனாமி நினைவுச் சின்னத்தில் நாளை காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும். மத வழிபாடுகள்: அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாக சர்வமத பிரார்த்தனைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன. 📜 வரலாற்றுப் பின்னணி: கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே நாளில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் தேசிய பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/224946/
  26. 🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! 🚔 written by admin December 25, 2025 ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் விபரம்: சம்பவம்: குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை நடவடிக்கை: சுமார் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கைது: கைகள் மற்றும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் “துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டத்தை” (Sword and Firearms Control Law) மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஜப்பானிய காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Global Tamil News🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர்...ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால்…
  27. யாவாரிகளுக்கு லாபம் தான் முக்கியம். இதில் நீ என்ன ஞான் என்ன ஞானப் பெண்ணே! அவனும் யாவாரிதான் இவனுகளும் யாவாரிகள்தான்!😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.