stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Today
-
தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து!
தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து! 22 Dec, 2025 | 11:24 AM (இராஜதுரை ஹஷான்) விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும் திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர் குறிப்பிட்டார். யாழ் - தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரருக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச நிகாய உத்தரலங்கா உப பிரதான சங்க நாயக்க பதவி ஞாயிற்றக்கிழமை (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர், திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சினை தோற்றம் பெறாத வகையில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக அமையும். சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இந்த பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும். திஸ்ஸ விகாரையை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான முரண்பாடுகள், பிரச்சினைகள் தோற்றம் பெறுவது முறையற்றது. இதற்கு உரிய தலைமைத்துவத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/234074
-
புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு
புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு 22 December 2025 அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஹங்வெல்ல, பஹத்கம புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கான அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். ஆறு வயது முதலே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டம், சிறுவர் மனதில் தேவையற்ற மற்றும் 'இயல்புக்கு மாறான' விடயங்களைப் புகுத்துவதாக அவர் கவலை தெரிவித்தார். பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையின் கலாசாரக் கட்டமைப்பை இத்தகைய திட்டங்கள் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்காக, நாட்டின் கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது என அவர் எச்சரித்தார். அரசியல் தலைவர்கள் தமக்குரிய எல்லைக்குள் நின்று செயற்பட வேண்டும் என்றும், குடும்பம் மற்றும் மத விழுமியங்களுக்கு முரணான விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிறுவர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அந்த உரிமைகள் அவர்களை பெற்றோருக்கு எதிராகத் திருப்புவதற்கோ அல்லது குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என கர்தினால் வலியுறுத்தினார். https://hirunews.lk/tm/437007/new-education-plan-will-destroy-society-malcolm-ranjith-alleges
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmjguuaos02zvo29nzfr3b689
-
பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து
பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து லக்ஸ்மன் தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமையொன்றாக உள்ளதாதலாலும் என்ற முன்னுரை அடியைக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக எதனை முதலில் செய்யவேண்டும். எது இப்போது தேவையானது என்பதனைப்பற்றிய யோசனைகளின்றி சில விடயங்கள் இந்த ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியேற்பு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகப் பல அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டவைகள் இல்லையானாலும், மக்களது பிரச்சினை என்பது பொதுவானதாக இருந்து விடுகிறது. அனர்த்தத்தினை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. இராணுவத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றமே நோக்கம் என்று கூறிக் கொண்டு அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாது நடைபெற்று வருகின்ற செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில், பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் பார்க்கலாம். இலங்கையை பொறுத்தவரையில், பிரித்தானியரிடமிருந்து கையளிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், 70களில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தது வடக்குக் கிழக்கை தாயகமாக் கொண்ட தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ஆரம்பத்தில் அது அகிம்சை வழியாக இருந்த போதிலும் அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், நெருக்கடிகள் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகின. அந்த ஆயுதப் போராட்டத்தினை அடக்குவதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இதுவரையில் அச்சட்டம் நீக்கப்படவில்லை. கடந்த அரசாங்க காலங்களில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி தமிழ்த் தேசியத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்திருந்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்திருந்தனர். ஆனால் அந்த வேகம் இப்போது இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகத் தமிழ்த் தலைவர்கள் கருத்து வெளியிட்டுமிருந்தனர். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர், நாட்டில் நிகழ்ந்த ஈஸ்ர் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான தேவையைத் தூண்டின. அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியது. அதே நேரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து வேளையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் சிங்களவர்களையும் அச்சட்டம் பதம்பார்க்க வழியைக் கொடுத்தது. அதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய கவலையேயின்றி இருந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்கள் தங்கள் மீது அச்சட்டம் பாய்ந்த வேளையில் விழித்துக் கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படாமைக்கு தென்பகுதியிலிருக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற அச்சம் காரணமாக இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கான காரணிகளை அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களையும் ஏனைய மக்களையும் கிலிகொள்ளச் செய்து மீண்டுமொரு நெருக்கடி, ஆபத்து மிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு நடைபெற்றுவருகின்ற முயற்சி முறியடிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக இருந்தாலும் நடைபெறப் போகும் ஆபத்து தடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகமானது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தமிழ்த் தரப்பு தங்களது பக்க நியாயங்களைச் சொல்கின்றன. அமைப்புகள் ரீதியாவும், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளாகவும் கருத்துகள் வெளிவருகின்றன. அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு மாத காலம் கருத்தறிய வழங்கியிருந்த போதிலும் தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவரைவு குறித்து கடந்த ஒகஸ்ட் மாத்தில் அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இப்போது வரைபு வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒருசிலருடைய கருத்து இது சரியான காலமா என்பதே. தித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இச்சட்டம் கொண்டுவருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது அதன் பொருள். பயங்கரவாதத்தடைச் சட்டத்திற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அனைவராலும் எதிர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அரசைப்பாதுகாக்கும் சட்டமானது அச்சட்டங்களை விடவும் மோசமானதாகவே சொல்லப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த 'தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறி தொரு சட்டத்தின் ஊடாக பதிலீடு செய்ய முனைவது வாக்குறுதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. எந்தவொரு சட்டமும் வெளிப்படையானதும் கலந்துரையாடலுக்குள்ளாக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில விடயங்களை கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சட்டம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதனை சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாகக் கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த இடத்தில் பயங்கரவாத்தத தடைச்சட்டம் போன்றதொரு சட்டம் தேவையில்லை என்ற அழுத்தம் காணப்படுகின்ற வேளையில், இச்சட்டத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதுதான் கேள்வி. இருந்தாலும், வழமைபோலவே முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற வேளைகளில் அது குறித்து பொதுமக்களுடக் கலந்துரையாடல்கள் நடத்தி, விளிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிவில் அமைப்புகளில் பெரும்பான்மையானவைகள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான வேலைகளில் இருக்கின்ற வேளையில் இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் செயற்பாடு சிறப்பாக நடைபெறுமா என்பதும் கலந்துரையாடலுக்கானதே. இந்நிலையில், சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்களின் முக்கியமாக, சட்டமூலத்தை பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டமைக்குப் பாராட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கருத்துக்களை முன்வைப்பதற்கும், கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேலும் கால அவகாசத்தைச் கோரியிருக்கிறது. அத்தோடு, இந்த சட்டமூலமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக இருக்கின்றதா? எனும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மாறாக நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுக்கு அமைவாக அமைந்திருக்கின்றதா என்ற அடிப்படையில் மதிப்பிடவேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டம் அரசியலமைப்பின் பிரகாரம் வரையப்பட்டது அல்ல என்பதையும், அதனை அடிப்படை உரிமைகள் சார் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், அரசாங் கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் பயங்கரவாதம் என்பதனை பயங்கரவாதத்திலிருந்து மாற்றி மேலும் மோசமானதொரு சட்டத்தை ஏற்படுத்த முனையும் அரசின் செயற்பாடு இடதுசாரித்தனம்தானா என்றே கேட்கத் தோன்றுகிறது. எது எவ்வாறானாலும், சர்வதேச தரநெறிகளினதும் நியமங்களினதும், உள்நாட்டுத் தேவைகளினதும் அடிப்படையின்மீது, பயங்கரவாதத்துக்கு எதிராகக் குற்றவியல் நீதியை நிருவகிப்பதற்கான பயனுள்ள முறைமையொன்றை வலுவுறுத்துவதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையில் அடியோடு அழிப்பதற்கும் தடுப்பதற்கும் உறுதி பூண்டு உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்தால் நாடு எப்பாடுபடப்போகிறதோ என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெயரில்-மட்டுமே-மாற்றம்-ஆனால்-ஆபத்து/91-369951
-
“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!
“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! adminDecember 22, 2025 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்: தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் முட்டுக்கட்டை போடுவதாகக் கிராம அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு முரணான செயல்? பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், குறித்த அதிகாரி மக்களை அலட்சியப்படுத்துவதுடன், ஏழை மக்களை இழிவுபடுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடரும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் “பொறுப்பான அரசாங்கம்” முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/224692/
-
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234058
-
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு
இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 09:42 AM இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி மேற்கொள்ளப்படும் பண மோசடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது. இணைய வழியாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து சரியான மற்றும் நம்பகமான தகவல்களை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கூறி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கி கணக்கு விவரங்கள், OTP குறியீடுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/234057
-
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 09:50 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது. அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/234059
-
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்! Dec 22, 2025 - 10:14 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjgo8o0o02zno29n5j348tat
-
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு Dec 22, 2025 - 08:01 AM இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmjgjihvc02zho29nd2entzzf
-
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை Dec 22, 2025 - 12:00 PM நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார். கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித செயற்பாடுகளும் காற்றின் தரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். விசேடமாக தீ வைப்புக்கள், வாகன புகை வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக அமைவதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் வளிமண்டலத் தரச் சுட்டி அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjgs18rk02zqo29n9cxb3trk
-
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்
இது கடைசியாக இந்த வருடத்தில் A/L சிறப்பு சித்தியடைந்தவர்களுக்கு(3A) மட்டும் என்று தான் நினைக்கிறேன் அக்கா.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பிரபாகரன் இங்கு பேசுபொருள் அல்ல. திறமையான ராப் பாடகர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் வட இந்திய சங்கித்தனத்துக்கு அடிமையாகாமல் தனது இலங்கைத் தமிழர் என்ற தனித்துவத்துடன் மிளிரவேண்டும் என்பதையே @goshan_che @நியாயம் ஆகிய உறவுகளும் இங்கு சுட்டிக்காட்டினர். 1970 களின் ஆரம்பத்தில் இவர் போன்ற பல ஈழத்தின் பொப்பிசை கலைஞர்கள் இவ்வாறே தனித்துவத்துடன் செயற்பட்டனர். அவர்களை போல இவரும் மிளிரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி, தற்போதைய நிலையில் பிரபாகரனை போற்றுபவர்களில் பல ரகம் உண்டு. அவர்களின் எவரும் பிரபாகரன் விரும்பியதை போற்றமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அக்கறையும் இல்லை. தமது அரசியல் மதவெறி அஜண்டாவுக்காக தொட்டுக்க ஊறுகாய் போல் பிரபாகரனை போற்றுவோர் சிலர். பிரபாகரனை முன்னுறுத்தி பல கோடிகளை சுருட்டிய (அவர் வந்தால் கணக்கு காட்டுவோம் கோஷ்டி) மோசடிக்கும்பலும் அவர் வரமாட்டார் என்ற துணிவில், பிரபாகரனை போற்றுகிறார்கள். தமது சுய அரசியல் நலத்துக்காக, இலங்கையில் தமிழர் இருப்பை பலவீனப்படுத்தம், அழிவு அரசியலை செய்பவர்களும் அவர்கள் அப்படி செய்தாலும் பரவாயில்லை பிரபாகரனைப் போற்றினால் அது மட்டும் எமக்கு போதும் என்ற மனநிலை உடையவர்களும் பிரபாகரனைப் போற்றுகிறார்கள். அப்படியானவர்களை வைத்து தந்திரமாக பிரபாகரனை ஒரு ட்ரேட் மார்க்காக வியாபாரம் செய்பவர்களும், பணம் பிடுங்குபவர்களும் பிரபாகரனை போற்றுகிறார்கள். இதில் எந்த வகையறா உங்களுக்கு பிடிக்கும் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
-
கருத்து படங்கள்
- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி! தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்நிலையில் , போராட்ட களத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மத தலைவரான வேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ் வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். https://athavannews.com/2025/1456948- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இது ஒரு புத்திசாலித்தனமான ஆக்கிரமிப்பு, கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி ஒரு நாட்டினை இலகுவாக ஆக்கிரமிக்க முடிகிறதல்லவா? இங்கும் நிலமை இதே நிலைதான், இதற்கு பெருமளவிலான காரணம் தவறான அரசியல்வாதிகள் என கருதுகிறேன். நான் இங்கு அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒருவர் கூறினார் இங்கு அவுஸ்ரேலியாவில் மற்ற நாடுகளை போல படிக்காத எம்மவர்கள் இருக்கும் நாடல்ல, இங்கு உள்ளவர்கள் படித்தவர்கள் என கூறினார் (நான் படிக்காத நபர் என தெரிந்தே🤣) இவர்கள் பெரும்பாலும் வலது சாரி லிபரல் கட்சியினை ஆதரிப்பவர்கள், இலங்கையிலிருந்து படகு என அகதிகளுக்கெதிரான கொள்கைகளை உடையவர்களை ஆதரிப்பார்கள் (யாழ்பாண மோட்டுக்குடி மனநிலை). இந்த வலதுசாரி கட்சியின் ஆட்சிக்காலத்தில் பல உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை நிறுவனங்களினை பாதுகாப்பதாக கூறி இல்லாது செய்தார்கள், அதனை உழைக்கும் வர்க்கத்தில் இருந்த இவர்க்ளே ஆதரித்து இதனால்தான் நிறுவனங்கள் மூடப்படுகின்றன என கூறுவார்கள், அத்துடன் அவர்கள் ஆட்சியில் இருந்த 3 தவணைகளில் ஊதிய அதிகரிபில்லாமல் போனது. அது ஒரு பொருளாதார பிரச்சினையாக கண்ணுக்குதெரியாமல் உருவெடுக்கத்தொடங்கியது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி பல மடங்கு மிக குறைவாக வளர்ச்சியேற்பட்டது, அது உற்பத்தி துறையினையும் பொருளாதார தூண்டலையும் சுருங்க வைத்தது, ஆரம்பத்தில் அதிகரித்த இலாபம் பெற்ற நிறுவனங்களின் பொருள்களுக்கான உள்ளூர் சந்தைகளை பெருமளவில் இழந்தது. இது சமூக மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பினை உருவாக்கி விட்டுள்ளது, இங்கு தற்போது உள்ள இளைய தலைமுறையால் வீடுகளை வாங்க முடியாத நிலை போன்ற நீண்ட கால சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. தற்போதும் குடிவரவினை நிறுத்து என கூச்சல் போடுகிறார்கள், ஒரு கதையில் ஒரு கன்றின் தலை பானைக்குள் சிக்கி விடும் கன்றிடமிருந்து பானையினை எடுப்பதற்கு கன்றின் தலையினை வெட்ட கூறுவார், பின்னர் கன்றின் தலையினை பானையிலிருந்து எடுப்பதற்கு பானையினை உடைக்க சொல்வார்; அவ்வாறான வலது சாரி அரசியல்வாதிகளை ஆதரிக்கும் எம்மவர்கள்😁.- இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார். விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர். மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர். சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார். https://athavannews.com/2025/1456963- நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு! நாட்டின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 130 மாணவர்களை நைஜீரிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவின் மிக மோசமான கூட்டுக் கடத்தல்களில் ஒன்றிற்குப் பின்னர், அண்மைய மீட்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று நாட்டின் கூட்டாட்சி அரசாங்கம் விவரித்துள்ளது. நவம்பர் 21 அன்று பெப்ரவரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஊழியர்களும் கடத்தப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் சுமார் 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மைய விடுவிப்புடன், ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 230 ஆக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் பயோ ஒனனுகா ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தினார். எனினும், கடத்தப்பட்டதிலிருந்து, எத்தனை பேர் அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அரசாங்கம் அண்மைய மீட்பினை எவ்வாறு மேற்கொண்டது- அல்லது ஏதேனும் மீட்புக்கு ஏதெனும் பணம் கொடுக்கப்பட்டதா என்பது முறையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. https://athavannews.com/2025/1456945- கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!
வழிபாட்டின் காரணம் ,எங்கே புத்த சிலை வைக்க முடியும் என ஆராச்சி செய்யத்தான்....பிற்கு தொல்லியல் தினைக்களத்திற்கு கடித்ம் எழுதுவினம் அது பெளத்த விகாரை இருந்த இடம் ஆராச்சி செய்ய சொல்லி..- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல் 1900கள்- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இல்லை! நான் நினைக்கிறேன், இலங்கை அரசு செய்த சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகள், இன்னொரு 3 ஆம் நாடு தலையிடும் பட்சத்தில் இலங்கை நிலமை மோசமாகும், பர்மாவிற்கெதிரான கம்பியாவின் சட்ட நடவடிக்கை போன்றது. அவர்கள் ஆப்பிழுத்த குரங்குகள். தமிழர் பிரச்சினை இப்படி ஒரு 3ஆம் நாட்டின் உதவியுடன் இது வரை நகரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் (ஒரு சிறிய நாட்டின் உதவி கிடைத்தாலே போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்).- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியில் ஓடிய பாய் வத்தல் 1900கள் .- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தமிழீழத்தில் பாய் வத்தல் 1958- 03- 14 வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.