stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் சிம்பிலா வென்று இருக்க வேண்டிய விளையாட்டை..............கடசி ஓவர் வரை போன பின்பு தான் வென்றவை...............................
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தானிலும் அரசியல் விளையாட்டில் இருக்கு அதோட பழைய பாக்கிஸ்தான் வீரர்கள் பாபருக்கு ஆதரவு பாபர் ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு சிறந்த வீரர்............... இங்லாந் உள்ளூர் கிலப் சமர்செட் பாப்பர இரண்டு வருடத்துக்கு முதல் ஒப்பத்தம் செய்து.............ஏமாற்றம் தான் மிஞ்சியது........................- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன் பாபரைத் திரும்பக் கொண்டு வந்தவை என்று நினைக்கிறீர்கள். இது புரிஞ்சா, இப்பிடி கதைக்க மாட்டியல். எவ்வளவோ கிரிக்கட் பார்க்கிற நீங்கள் இப்பிடிக் கதைப்பது வினோதமாய் இருக்கு. எல்லாரும் அடி அடி என்று அடிக்கறதென்டால் ஏன் இன்று தடுமாறினார்கள். ஒரு அணியில் எல்லாம் கலந்துதான் இருக்கணும். இன்றைய இந்திய அணியைப் பாருங்கள். 90 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்திருப்பினம்.- தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
திருமா சொன்னதில் இது மட்டுமே உண்மை. இங்கே இப்போ புலிவால்களாக இருக்கும் பலர் டெலோ, அல்லது புலொட்டின் ஆரம்ப கால அனுதாபிகள்தான். ஒரு காலத்தில் தலைவரை சுற்றி இருந்த பல தளபதிகளும் மக்களும் கூட அவர் சார்ந்தோரே. உமா மேகாஸ்வரனும், தம்பாவும் ஏனைய வெள்ளாள இயக்க தலைவர்கள் எல்லாம் பிஸ்கோத்துக்கள் என்பது புலப்பட, சிங்களவன் போட்டு வெளுத்த வெளுவையில், தலைவரை விட்டால் வேறு வழி இல்லை என புலிகள் பின்னால் திரண்டவர்கள்தான் பலர். இதில் மாவீரர்கள் சேர்த்தியில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாம ..இன்று தப்பிச்சம் ...இன்றைய பரீட்சையில் 100/100 ...கடவுள் இருக்கிறான் குமாரு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் நாளேவா. பொறுங்க இன்னும் கனக்க இருக்கு- தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
அப்போதே ஆமையின் பல்லை தட்டி கையில் கொடுத்திருந்தால் திருமா, குருமா எல்லாம் இப்படி கருமாத்திர வரலாற்று திரிபை சொல்லும் தைரியம் வந்திராது. ஆமைகதையை பொய்யான தெரிந்தும் கடந்து போனதன், இல்லை உண்மைதான் என் பொய் சாட்சி சொன்ன புலம்பெயர் புஸ்வானங்கள்தான் இந்த இழிநிலைக்கு முழு பொறுப்பு! பச்சை பொய். திருமாவுக்கு மறை கழண்டு விட்டதா? ஏரம்பு ஆரம்பத்தில் காதலை எதிர்த்தார் என நானும் கேள்விபட்டுள்ளேன். இதற்கு பல காரணங்கள் சொல்லபட்ட்டாலும், எந்த தந்தையிம் ஒரு ஆயுத போராளிக்கு மகளை கொடுக்க தயங்குவார். அதுவும் பாலா அண்ணையின் புத்தகம் சொன்னது போல் இப்படி இந்தியா போய் திருமணமானால். இதில் வியப்பேதும் இல்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் இருக்கிறான் பந்தை வீன் அடிக்க ஹா ஹா............... நீங்கள் கவனிக்க வில்லையா பாபர் 20ஓவர் சர்வதேச போட்டிகளில் இருந்து போன வருடம் ஓரம் கட்டப் பட்டவர்😁😛................- யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
உங்கள் காவடி ஆட்டத்தை வாச்கர் நினைவு கொள்வார்கள். உங்களுக்கு ஒரு off-ramp தருகிறேன் பிடித்து கொண்டு இறங்க பாருங்கள். சாத்தான் ஆகிய நான் அனுரவை பற்றி இதுவரை கூறியவை அனைத்தும் பிழை என்பதை காலம் எனக்கு உணர்த்தியுள்ளது. அவர் ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் போன்ற இன்னொரு கேடுகெட்ட இனவாதி, தமிழ் தேசியத்தை அழிக்கும், சிங்கள பெளத்த வல்லாதிக்கத்தை ஊக்குவிக்கும், காணி அபகரிப்பு, பெளத்த ஆக்கிரமிப்பை செயல்படுத்தும், மறைமுக ஆதரவு கொடுக்கும் ஒரு தீய சக்தி என்பதை நான் ஏற்கிறேன். இதை உங்களால் அப்படியே வரிக்கு வரி ஏற்றுகொள்ள முடிந்தால் - உங்களை அனுர காவடி என அழைக்காமல் விடுவேன். ஒட்டா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் கவனமா இருக்கனும். சென்ற உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா வென்றது. இப்பிடியே விளையாடினா, இந்த முறையும் நடந்திடுமோ.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜபிஎல்ல உந்த மைதானத்தில் 200 ரன்ஸ் ஈசியா அடிப்பினம் இன்று அமெரிக்காவின் பந்து வீச்சு அருமையோ அருமை..............தொடக்க வீரர் தான் அதிக ரன்ஸ் விட்டு கொடுத்தவர்.............தொடக்க வீரரும் நல்லா பந்து போட்டு இருந்தால் இந்தியா அணி வீரர்களால் பெரிய ஸ்கோர் அடிச்சு இருக்க முடியாது...............வளந்து வரும் அமெரிக்கா அணிக்கு வாழ்த்துக்கள்.............படு தோல்வி அடைய வில்லை.....................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒரு மாட்சிலாவது புள்ளி எடுக்கவேணுமே . .........! 😇- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியர்களுக்கு நல்ல ஒரு அதிர்ச்சி வைத்தியம். யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது. அணியில் எல்லாரும் அடிகாரர் என்றால் இப்பிடித்தான் அமையும். அடிக்கேக்க நல்லாருக்கும். ஆனால் இவ்வாறான தருணம் ஒன்று அமையும்போதுதான் அவர்களின் உண்மையான மட்டையாளரின் முக்கியத்துவம் தெரியும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூரியகுமார் ஜடாவ் அடிச்ச ரன்ஸ்சால் இந்தியா தப்பித்து விட்டது......................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கிந்தியா பழைய மேற்கிந்தியா இல்லை. அவர்கள் யாரிடமும் தோற்கக்கூடும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டும் விறுவிறுப்பாய் போச்சு நான் நினைச்சேன் வெஸ்சின்டீஸ் அணி ஆப்பு வைக்க போகினம் என...............காட்டிக் விக்கேட் எடுத்த கையோட வெற்றிய உறுதி செய்து விட்டது வெஸ்சின்டீஸ் அணி..........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா வீரர்களால் குறைந்த பந்துக்கு கூடின ரன்ஸ் அடிக்க முடியாது.........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் நாளே போட்டிகள் எல்லாம் விறு விறுப்பாவே இருந்தது. சின்ன அணிகள் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி விட்டினம்.- ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
ரம்பைக் கிழித்து தொங்கவிடும் ஒபாமா.- நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது - நானுஓயாவில் சம்பவம் 07 Feb, 2026 | 01:30 PM நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று சனிக்கிழமை (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார். எனினும் வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலை வலி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/238074- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
அரிதான ஜெல்லி மீன். லிப்ரில் வெடித்த பலூன்கள். பூனைக்குட்டி ஒளித்த இடம்! மன்னிப்புக் கேட்ட விதம்!- யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
யாழ். போதனாவில் "நாள் சத்திர சிகிச்சை நிலையம்" திறந்து வைப்பு 07 Feb, 2026 | 11:33 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் "நாள் சத்திரசிகிச்சை" அல்லது "அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை" என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன. இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238059- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
35 லட்சம் Pages.. சங்கடத்தில் பிரபலங்கள் - தொடரும் Epstein files சர்ச்சை | Explained எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன? உலகின் பெரும் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு. #EpsteinFiles #JeffreyEpstein இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.