Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பாவம் இவர் அப்பாவி. விகாரை எங்கே கட்டப்பட்டது, எப்படி கட்டப்பட்டது என்பது கூட தெரியாமல் விகாராதிபதியாக இருந்துள்ளார்.
  3. ஒரு கொலைகாரனுக்கு வெள்ளை அடிப்பு. இவரின் வண்டவாளங்கள் வெளியில் வரப்போகிறது, இதை எழுதியவரும் வெகு விரைவில் கைதுசெய்யப்படலாம். இவர் எஜமானே இவரை போட்டுக்கொடுப்பார். தனது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி, பாதாள போதை தலைவனிடம் சென்றுள்ளது, அதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை இவரால், வைத்தியசாலையில் பொய் படுக்கிறார். என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை, விசாரிக்கப்போவதில்லை, தண்டிக்கப்போவதில்லை, எப்போதும் எஜமானின் அடிமைகளாக இருப்பதில் மகிழ்ச்சி, பெருமை என்று நினைத்தப்பாட்டிற்கு அடாவடி புரிந்தவர்கள், தங்களுக்கு சார்பான அரசே மாறி மாறி வரும், இனத்தை அழித்து சேவகம் செய்யலாமென நினைத்து சும்மா இருந்துவிட்டார். அனுராவும் தன்னை பணிக்கு அமர்த்துவார் என கனவு கண்டிருப்பார், மாட்டுப்பட்டு முழிக்கிறார். அவரோடு இருந்தவர்களே அவரை காட்டிக்கொடுக்கிறார்கள். இன்றல்ல, பல ஆண்டுகளாகவே இவரோடு இருந்தவர்கள் இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்கள், அவர்தான் உயர் பீடத்தின் காவலனாயிற்றே, தப்பித்துக்கொண்டார். அவர்கள் சலித்து விடுவார்கள் தான் ஜனநாயக வாதியாக வலம் வந்துகொண்டிருக்கலாமென நினைத்தது தப்பாக போய்விட்டது.
  4. Today
  5. கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்! அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) உறுதிப்படுத்தியது. முன்னாள் பேராசிரியர் சுமித் குணசேகரவின் பணிநீக்கம் குறித்து பல்கலைக்கழகம் விரிவாக்க கூற மறுத்துவிட்டது. மிச்சிகனின் பிக் ரோபிட்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியரான சுமித் குணசேகர, நவம்பர் 12 ஆம் திகதி டெட்ராய்டில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க நிறுவன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குணசேகரா இலங்கையிலிருந்து ஆவணமற்ற முறையில் குடியேறியவர் என்றும் அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், குணசேகராவை நிர்வாக விடுப்பில் அனுப்பியதாக ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் அவர் குறித்து பதிவிட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு துறை, பல ஆண்டுகளாக, கனடாவில் தண்டனைகள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற தகுதியற்றவராக கணிக்கப்பட்ட போதிலும் குணசேகரா விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளுடன் எங்கள் குடியேற்ற முறையை கையாள பலமுறை முயன்றார் – என்று கூறியுள்ளது. https://athavannews.com/2026/1458006
  6. டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..! December 31, 2025 — அழகு குணசீலன் — ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பின் பேரில் விசாரணைக்கு சென்றபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26.12. 2025 அன்று கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுத்து வைப்புக்கு பின்னர், தொடர்ந்தும் விசாரணைகளுக்காக 2026 ஜனவரி 9 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் கைதுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன…? 1990 முதல் இன்று வரை ஈ.பி.டி.பி. மீதும் அதன் தலைமை மீதும் மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விதிவிலக்கான மாற்று இயக்கங்களும் இல்லை, தலைமைகளும் இல்லை. பொதுவாக அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தங்கள் நலன் சார்ந்து இந்த இயக்கங்களுக்கு பின்னால் நின்று அவர்களை ஊக்குவித்தும் உள்ளன. தவறுகளை சுட்டிக் காட்டுவதை விடவும் இயக்கங்களோடு ஒத்து ஓடுதல் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு உயிர்ப்பிச்சையாக இருந்திருக்கிறது. தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட அமைப்பொன்றின் படைத்துறைத்தளபதியாக இருந்து ஸ்ரீலங்கா மத்திய அரசின் அமைச்சரவை அமைச்சர் வரை பல பதவிகளை டக்ளஸ் வகித்து இருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப்போராட்ட நிலையில் இருந்து பயங்கரவாத வடிவத்தை படிப்படியாக உள்வாங்கி கொண்டபோது தமிழ்த் தேசியத்தின் பெயரிலான பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்து நின்றவர் டக்ளஸ். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதுடன் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கும் எதிராக எந்த சமரசமும் இன்றி போராடிய ஒருவர். கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.இந்த எதிர்வு கூறலில் உள்ள உண்மையை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம். ஸ்ரீ லங்கா அரசியலமைப்பின் ஆறாவது சரத்தை ஏற்றும், ஒட்டுமொத்த 1978 அரசியலமைப்பையும், தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சுமார் 20 அரசியலமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு, மக்கள் மத்தியில் போலி தமிழ்த்தேசிய – சமஸ்டி, ஒற்றையாட்சி நிராகரிப்பு, இன்னும் தனித் தமிழ் ஈழம் என்ற முரண்பாட்டு அரசியலை டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட அரசியலே அவரது அரசியலாக இருக்கிறது. இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை ஊடான மாகாணசபை அதிகாரப்பகிர்வை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அசைக்க முடியாத உறுதியுடன் இன்றுவரை வெளிப்படையாக இடித்துரைப்பவர். இது விடயத்தில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை , அவர்கள் முப்படைகளோடும் பலமாக இருந்த காலத்திலும், தனது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளின் 13 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மாகாணசபை முறை தீர்வு அல்ல என்று கூறிக்கொண்டு, புலிகள் இருக்கும் வரை மாகாணசபையை பகிஷ்கரித்தும், புலிகள் தோற்கடிக்கடிக்கப்பட்ட பின்னர்,…. ஆரம்பம், அடிப்படை, அந்த புள்ளி, இந்த புள்ளி என்று ஏமாற்று அரசியலை டக்ளஸ் செய்யவில்லை. ஏன்? இன்றும் “ஏக்கய ராஜ்சிய” வார்த்தையாடலின் போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க தயாரில்லை. இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை இந்திய மேலாதிக்கம் என்றும், இராணுவ ஆக்கிரமிப்பு என்றும் பயங்கரவாதத்தை கையில் எடுத்து கிளர்ச்சி செய்த ஜே.வி.பி.யினர் கூட இறுதியில் மாகாணசபை தேர்தலில் பங்கு பற்றினர். ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடாத்திய ஜே.வி.பி. உறுப்பினர்/ ஆதரவாளரான கடற்படை வீரரை ஜே.வி.பி. மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினர். புலிகள் இயக்கமும், புலிகளால் இந்திய கைக்கூலிகள் என்று தடைசெய்யப்பட்ட இயக்கங்களும், புலிகளை அராஜகவாதிகள் என்று கூறிய இந்த இயக்கங்களும் உண்மையில் இந்திய வெளியுறவில் இரு துருவங்களைச் சேர்ந்தவை. தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது புலிக்கு பின்னால் போனவர்கள் இப்போது புலி இல்லாத நிலையில் இந்தியாவுக்கு பின்னால் போகின்றார்கள். இந்த தளம்பல், சந்தர்ப்பவாதம் டக்ளஸ் இடத்தில் இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை அவர் இந்தியாவை பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிர்ணய சக்தியாகவே பார்க்கிறார். தேவையான நெருக்கத்துடனும், தேவையான தூரத்திலும் வைத்து அரசியல் செய்கிறார். இதை ஜே.வி.பி.கூட அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே கற்றுக்கொண்டது. பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக பார்த்தவர் -பார்க்கிறவர் டக்ளஸ். அதனால் புலிப் பயங்கரவாதத்தையும், அரசபயங்கரவாதத்தையும் அவர் பயங்கரவாதமாகவே பார்த்தார். புலிகளின் மக்கள் மீது அக்கறையற்ற வெறும் அதிகாரப்பசிக்கான அரசியல் இலங்கை அரசையும், இந்திய அரசையும் தூண்டி மக்களை அழிக்கும் என்பது டக்ளஸின் அரசியல் நோக்கு. புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அவர் கூறினார். இதை புலிகள் இல்லாத போது சொன்ன சுமந்திரன் பிராதான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர். செல் நெறியை நிர்ணயிப்பவர். ஆனால் இந்த உண்மையை புலிகள் இருக்கும் போதே சொன்னவர் டக்ளஸ். மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில் வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. தற்போது 2001 இல் தனக்கும், தனது அமைப்புக்குமான தற்பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி தென்னிலங்கை குற்றவாளி ஒருவரின் கரங்களுக்கு எப்படி போனது என்பதே கேள்வி/ விசாரணை. இத்துப்பாக்கி 18 ஆண்டுகளுக்கு பின்னர் 2019 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது. அதை டக்ளஸிடம் இருந்து, தான் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இராணுவத்தரப்பு பதிவேட்டின் படி 13 – T56 ரக துப்பாக்கிகளையும், 6 ரிவோல்வர் களையும் டக்ளஸ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனைகளுடன் சுயமாக கையொப்பமிட்டடு பெற்றுள்ளார் என்கிறது புலனாய்வுப் பிரிவு. புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைமைகளும், உறுப்பினர்களும் புலிகளால் வேட்டையாடப்பட்ட சூழலில் டக்ளஸ் தேவானந்தா மட்டும் அல்ல மற்றைய அமைப்புக்களும், தலைமைகளும் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் இராணுவ/ ஆயுத உதவிகளை பெற்றுள்ளன. என்பதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இன்றைய கேள்வி அந்த துப்பாக்கி மற்றைய தரப்புக்கு எப்படி போனது என்பதுதான்? பார்க்கவும், கேட்கவும் இது நியாயமான கேள்விதான். இல்லை என்பதல்ல. அதுவும் சட்ட ரீதியில் மிக முக்கியமான கேள்வியும் கூட. ஆனால் ஒரு இயக்கத்தின், அரசாங்க இயந்திரத்தின் யுத்தகால செயற்பாடுகளை தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிரல்ல. ஜே.வி.பி.யும், ஜனாதிபதியும் இந்த சூழ்நிலைக்கூடாகவை பயணித்துள்ளனர். ஈ.பி.டி.யில் இருந்து விலகிச்சென்றவர்களால். கையாடப்பட்டு தென்னிலங்கையில் விற்கப்பட்டிருக்கலாம், அல்லது, யுத்தத்திற்கு பின்னர் மீள ஒப்படைக்கப்பட்டும் துப்பாக்கிகள் வழங்கப்பட்ட/ மீள ஒப்படைக்கப்பட்ட பதிவுகளை மீளப்பெறாத வகையில், ஆயத களஞ்சியத்தில் இருந்து களவாடப்பட்டிருக்கலாம்.. அல்லது, இராணுவத்திடம் இருந்து கூட இந்த துப்பாக்கி கைமாறியிருக்கலாம், அல்லது துப்பாக்கியோடு சென்றவர் இறந்திருக்கலாம்,. என்பது போன்ற பல கேள்விகளே ஈ.பி.டி.பி. தரப்பில் உறுதியாக கூற முடியாத ஒரு பதிலாக அடிபடுகிறது. படையில் இருந்து தப்பியோடிய பல சிப்பாய்களிடம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கை குற்றச்செயல்களில் இந்த படையினரும், அவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாதங்கள் டக்ளஸை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்ய போதுமானதா? என்றால் இல்லை. மாறாக சூழலை மேலும் விளங்கிக்கொள்வதற்கான மேலதிக தகவல்கள் மட்டுமே. தற்போது, டக்ளஸ் கைது செய்யப்பட்டது அரசாங்கம் பிள்ளையார் பிடிக்கப்போன…. கதையை நினைவூட்டுகிறது. புலனாய்வு பிரிவினர் கடந்த காலங்களில் மறுதலித்து வந்த ஒரு உண்மையை அவர்களே சர்வதேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் இராணுவத்தின் ஆதரவுடன் தமிழ்க்குழுக்கள் இணைந்து செயற்பட்டன என்பதும், அக்குழுக்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இது இலங்கை மக்களுக்கு ஒன்றும் இரகசியம் அல்ல. இதற்கு ஈ.பி.டி.பி. மட்டும் அல்ல புலிகளால் தடைசெய்யப்பட்ட மற்றைய குழுக்களும் விலக்கல்ல. பிரேமதாச -ரஞ்சன் விஜயரெட்ண காலத்தில் புலிகளுக்கும் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. பணமும் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தை வெளியேற்றவும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப். கூட்டு தமிழ்த்தேசிய இராணுவத்தை செயலிழக்கச் செய்யவும் என்று கூறி புலிகள் இந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டனர். இந்த ஆயுதங்களை புலிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்ததற்கு வரலாறு இல்லை. ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ஈரோஸ் பொறுப்பேற்று அதற்கான ஆயுதங்களையும், சம்பளங்களையும், வாகனங்களையும் பெற்றுக்கொண்டது. இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியையும், வாகனங்களையும் ஈரோஸ் முகாம்களை தாக்கி புலிகள் எடுத்துச்சென்றனர். இவற்றிற்கான பட்டியலை எங்கு தேடுவது.? முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது இலங்கை படையினர் முகாமுக்குள் இருந்த காலம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களின் சம்பளம், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை கொழும்பு அரசாங்கமே செய்தது. பஜீரோ ஜீப் வாகனங்களும். வழங்கப்பட்டன. இவை எல்லாம் எப்போது? எங்கே வைத்து ஒப்படைக்கப்பட்டன. ஆயுதங்களை இந்தியாவும், இலங்கையும் வழங்கியதாக கூறப்படுகிறது.. இப்படி உள்நாட்டு யுத்தம் ஒன்றின் போது முறையற்ற, ஒழுங்கமைக்கப்படாத நிர்வாகம் என்பது எல்லா நாடுகளிலும் பொதுவான ஒரு போக்கு. இது டக்ளஸ் தேவானந்தாவை பிணையெடுப்பதற்கான பதிவல்ல. ஜதார்த்தம். சட்டம், ஒழுங்கு, நீதி, நிர்வாகம் சீர்குலைந்து, செயலிழந்து இருக்கின்ற நிலையில் பொதுவான தன்மை. ஜே.வி.பி. கிராமிய மட்டத்தில் தனது அமைப்பை ஸ்திரப்படுத்த ஓய்வு பெற்ற படையினருக்கான அமைப்புக்களை உருவாக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தில் இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடியவர்கள். இவர்களை பாதுகாக்கவே டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால் அரசாங்கம் ஒழித்து பிடித்து விளையாடுகிறது. டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தரப்பு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க படாதபாடு படுகிறது அரசாங்கம். இறுதியாக, இன்று கர்மா….., தெய்வம் நின்றறுக்கும்….., மன்னருக்கு செங்கம்பள வரவேற்பு…. என்றெல்லாம் பேசுபவர்களுக்கு. அந்த கர்மாவின் பங்காளிகளான நீங்கள் கர்மாவை முள்ளிவாய்க்காலுக்கு பின்னரும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் கர்மா பற்றிய உங்களின் புரிந்துணர்வு தான் என்ன…? பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் . அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா கொலை செய்தது என்று சொல்லலாமா? இங்கு எது கர்மா…..? கைது செய்யப்படுவர்களுக்கு கர்மாதான் காரணம் என்றால், காணாமல் போனவர்கள்…. சிறையில் வாடும் அரசியல் கைதிகள்….., போரில் அங்கவீனம் அடைந்தோர்… நிற்கதியாக்கப்பட்ட. தாய்மார்கள்…. பிள்ளைகள்…. எல்லாம் கர்மாவைச் சுமக்கிறார்களா …? உங்கள் குடும்பங்களில் ஏற்பட்ட போர்க்கால இழப்புக்களுக்கு என்ன பெயர்..? கர்மாவா …? மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல். https://arangamnews.com/?p=12565
  7. 2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள் Nishanthan SubramaniyamJanuary 1, 2026 1:15 pm 0 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன. Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். பணியிட தொடர்பாடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த விசாக்களில் UK-யில் இருப்பவர்கள், தங்கள் விசாவை நீட்டிக்கும் போது, இந்த புதிய நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது. மேலும், 2026 பெப்ரவரி 25 முதல் Electronic Travel Authorisation (ETA) திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. “அனுமதி இல்லையெனில் பயணம் இல்லை” என்ற விதியின் கீழ், விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் டிஜிட்டல் முன் அனுமதி பெற வேண்டும். ETA-வின் கட்டணம் £16 ஆகும். இது இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் பலமுறை நுழைவிற்கு அனுமதிக்கும். விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், பயணம் தொடங்குவதற்கு முன் ETA அனுமதி இருப்பதைச் சரிபார்ப்பார்கள். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெறுகின்றனர். அதே நேரத்தில், நிரந்தர குடியிருப்பு (Indefinite Leave to Remain – ILR) மற்றும் குடியேற்றம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பெரும்பாலான குடியேற்றர்களுக்கான நிரந்தர குடியிருப்பு பெறும் காலக்கெடுவை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்தல், மேலும் உயர்ந்த ஆங்கிலத் திறன் நிபந்தனைகள் மற்றும் நீண்டகால வருமானம், பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; ஏற்கெனவே நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு இது பின்நோக்கி பொருந்தாது. 2026 க்கான புதிய சம்பள வரம்பு உயர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த வரம்புகள் தொடரும். குறிப்பாக, Skilled Worker விசாவிற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பான £41,700 விதி தொடர்ந்தும் அமலில் இருக்கும். தற்காலிகமாக வழங்கப்பட்ட shortage occupation சலுகைகள் 2026 முடிவு வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், நிகர குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பது, உயர்தர திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது என்பதே நோக்கம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், நாட்டில் நிரந்தரமாக தங்கும் குடியேற்றர்கள் நீண்டகால பங்களிப்பும் சமூக ஒருங்கிணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால், வேலை வழங்குநர்கள், குடியேற்றர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் UK Home Office வெளியிடும் புதிய வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்றவும், ஆங்கிலத் தேர்வுகள், ETA விண்ணப்பங்கள் மற்றும் எதிர்கால குடியேற்றத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். https://oruvan.com/new-immigration-rules-to-come-into-effect-in-the-uk-from-2026-know-the-key-visa-changes/
  8. கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு 01 Jan, 2026 | 02:21 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்குரிய திணைக்களமாகவே இயங்கி வருவதால் நியாயமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் இதனால் குறித்த பணியின்போது பார்வையாளர்களாக தமிழ் தரப்பினரையும், அவர்களது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கன்னியா வெந்நீரூற்றை அண்மித்த பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த மாரியம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரன பணிக்காக உடைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதி தொல்லியலுக்கு உரியது என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பௌத்த விகாரை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக கன்னியா வெந்நீரூற்றின் நுழைவுப்பகுதியின் இடது பக்க மூலையில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது. 1623 – 1638 ஆண்டு வரை பறங்கிய படைத் தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மன் ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீரூற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பதும் பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234936#google_vignette
  9. யாழ். மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அரச கடமைகள் ஆரம்பம்! செய்திகள் 2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச சேவை சத்தியப்பிரமாணத்தை (உறுதிமொழி) மேற்கொண்டனர். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjv61dgq03dzo29n6x2pa7e8
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  11. குருநகர் ஜெற்றி தாக்குதல் பற்றிய ஆவணங்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.. இந்திய இராணுவம் முரசொலி, ஈழநாடு பத்திரிகைகளை குண்டுவைத்து தகர்த்து ஒபரேசன் பவான் யுத்தத்தை புலிகள் மீது ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஊரடங்கு வேறு அமுலில் இருந்தது. அப்போது வடமராட்சியில் வீட்டில் இருந்த எங்களுக்கு தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களின் சத்தம்தான் போரை அறிவித்துக்கொண்டிருந்தது. வெரித்தாஸ், பிபிசி வானொலிகளில் வரும் செய்திகள்தான் 15 மைல் தூரத்தில் என்ன நடக்கின்றது என்பதை சொல்லியது. ஆனால் பல செய்திகள் வந்தே சேரவில்லை. ஒபரேசன் பவான் பற்றிய குறிப்பு திசை வாரசஞ்சிகையில் உள்ளது. ஆனால் மேலோட்டமாகவே இருக்கின்றது.
  12. ”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை. தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை. அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன். அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோத செயல் என தீர்ப்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார். விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார். https://www.samakalam.com/அரசியல்-நோக்கத்திற்காக/
  13. 🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! adminJanuary 1, 2026 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த வேளையில், அங்குள்ள ஒரு பாரில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம்).சுமார் 01:30 மணியளவில் கிராஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பிரபல பார் மற்றும் உணவகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பு நிகழ்ந்த சமயம் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை வரவேற்க ஒன்றுகூடியிருந்துள்ளனா். வெடிப்புக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், அங்கு இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட வானவேடிக்கைகள் (Fireworks) வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் காவல்துறையினா் அந்தப் பகுதியை முற்றாக மூடிவிட்டுத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை (No-fly zone) விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உலங்குவானூர்திகள் (Helicopters) மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ விசேட உதவி எண்களும் (Helpline) அறிவிக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/225413/
  14. நன்றி பல @செம்பாட்டான் . இந்தப் பதில்களைத் தரவேற்றுகின்றேன். @புலவர் ஐயாவிடம் மற்றைய கேள்விகளுக்கான விடைகளை எடுக்கவேண்டும்!
  15. சவால்களை புத்திசாலித்தனமாக வெல்வோம் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:35 PM சவால்களுக்கு முகம்கொடுத்து புத்திசாலித்தனமாக அவற்றை வெல்வோம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி 2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எதிர்பாராத நெருக்கடி நிலைமையின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் புதிய பரிமாணத்திற்கு விரிவடைந்துள்ளன. இந்த சவால்களை வெல்வதற்கு வெறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் மூலம் முகங்கொடுப்பது கடினமாகும். எனவே ஒத்துழைப்பு இந்த தருணத்தில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் வேறு எந்த காலத்தைவிடவும் முக்கியமான அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையால் துன்புறுவதால் எதையும் செய்யாமல் இருப்பதன் மூலம் நிலைமை சிறந்த திசையில் மாறாது. மாற்றத்திற்குச் செய்ய வேண்டியது அனைவரும் எல்லோருக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவதே. எனவே உடன்பட முடிந்த இடத்தில் உடன்படவும், உடன்பாட்டில் செயல்படவும் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. இந்த சவாலான ஆண்டில் நமது சகோதர மக்கள் எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரே மாதிரியாக கருதி தீர்வுகளை கண்டறிவதற்காக நாம் செயல்பட வேண்டும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் செயல்பட அனைத்து மத தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் முழு மக்களுக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்கும் புத்தாண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234844
  16. “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” - போர்ப்பயிற்சி நிறைவில், புத்தாண்டு செய்தி வெளியிட்ட சீன ஜனாதிபதி 01 Jan, 2026 | 12:18 PM தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் கூறி, தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, நேற்று (டிச. 31) பயிற்சிகளை நிறைவு செய்த நிலையில், சீன ஜனாதிபதி “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்றிரவு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்ட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமுல்படுத்தியே ஆகவேண்டும். ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகியவற்றை நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒன்றிணைக்க ஆதரவளிக்கவேண்டும். அவற்றுடன் நீண்ட கால வளம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், சீன ஜனாதிபதியின் கருத்துக்கு தாய்வான் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். சுயாட்சி பகுதியாக தன்னை அறிவித்துக்கொண்ட தாய்வான், சீனாவின் நிலைப்பாடு மற்றும் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. தாய்வானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில், தாய்வானின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சுற்றி சீன இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ரொக்கெட் படையினர் ஒன்றிணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்தப் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு “ஜஸ்டிஸ் மிஷன் 2025” என பெயரிடப்பட்டது. இப்போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு தாய்வான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே நேற்று இப்பயிற்சிகளை சீனா நிறைவு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/234920
  17. கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது. வருடத்தின் இறுதி நாளான நேற்றைய வர்த்தக நிறைவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.83 ரூபாவாகவும் இருந்தது. 2024 டிசம்பர் 31 அன்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.32 ரூபாவாகவும், 297.01 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1457954
  18. கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சவால்களை சக்தியாக மாற்றி, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்போம் - பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:32 PM கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு என பிரதமர் ஹரிணி அமர சூரிய புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். 2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன். பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம். எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம். கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற - சுற்றாடலை நேசிக்கும் - மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234846
  19. மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு மாறியதன் பின்னணியில் நாட்காட்டி குழப்பங்கள், அரசியல் தேவைகள், வானியல் திருத்தங்கள் எனப் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. ஜனவரி எப்போது, எப்படி ஆண்டின் முதல் மாதமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள, ரோமானிய நாட்காட்டி அடைந்த பரிணாம வளர்ச்சிகளை நாம் அறிய வேண்டும். அதில் அடுத்தடுத்து நிகழ்ந்த தவறுகள் எப்படி பெரிய சீர்திருத்தங்களைச் செய்வதற்கான உந்துதலாக அமைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மார்ச் முதல் தொடங்கிய ரோமானிய ஆண்டுகள் ஆரம்பக் கால ரோமானிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியை நவீன கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். அந்த நாட்காட்டியின்படி, மார்ச் மாதத்தில் இருந்து ஆண்டு தொடங்குகிறது. அதோடு, ஓர் ஆண்டுக்கு வெறும் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பத்து மாதங்களில், ஆறு 30 நாட்களுடனும் நான்கு 31 நாட்களுடனும் இருந்துள்ளன. ஆண்டின் கடைசி மாதமாக டிசம்பர் இருந்துள்ளது. மேக்ரோபியஸ், சென்சோரினஸ் போன்ற பண்டைய ரோமானிய தத்துவஞானிகளின் கூற்றுப்படி, ஓர் ஆண்டுக்கு பத்து மாதங்களும் 304 நாட்களும் மட்டுமே இருந்தன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி? வங்கதேசத்தில் ஜெய்சங்கர் - இந்தியாவின் நகர்வு உணர்த்துவது என்ன? சௌதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பது ஏன்? தமிழ்நாடு - உத்தரபிரதேசம்: கடன் சுமை எந்த மாநிலத்திற்கு அதிகம்? உண்மை உரைக்கும் புள்ளி விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images ரோமானிய நாட்காட்டியின்படி, மார்ச், மே, குயின்டிலிஸ், அக்டோபர் மாதங்கள் 31 நாட்களைக் கொண்டிருந்தன. ஏப்ரல், ஜூன், செக்ஸ்டிலிஸ், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 30 நாட்களைக் கொண்டிருந்தன. இந்த வரிசையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகியவை முறையே ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மாதங்களாகக் கணக்கிடப்பட்டன. அதில் மொத்தம் 304 நாட்கள் இருந்தன. மேலும் வரலாற்றுப் பதிவுகளின்படி, அப்போது ஜனவரி, பிப்ரவரி என்ற மாதங்களே இருந்திருக்கவில்லை. அப்படியெனில் மீதி நாட்கள் என்னவாயின? அந்த நாட்காட்டியில் குளிர்காலம் கணக்கிடப்படவில்லை. ஆண்டின் அந்த இரு மாதங்களுக்கு விவசாயமே நடக்காது என்பதால், அந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சூரியன் உதித்தது, மறைந்தது. ஆனால், ஆரம்பக்கால நாட்காட்டியின்படி, அதிகாரபூர்வமாக ஒரு நாள்கூட கடக்கவில்லை. இந்தச் சிக்கலை, நாட்காட்டியில் நிலவிய குழப்பத்தை ரோமின் இரண்டாவது மன்னரான நூமா போம்பிலியஸ் நிவர்த்தி செய்ய முயன்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ஜனவரி மாதத்தை மீண்டும் ஆண்டின் முதல் மாதமாக கி.மு.45 முதல் கொண்டு வந்தார் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ரோமானிய நாட்காட்டியில் நிலவிய இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய, நூமா போம்பிலியஸ்தான் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களைச் சேர்த்தார். கடந்த 1921ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட 'தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ந்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' என்ற நூல் இதுகுறித்துப் பேசுகிறது. அதன்படி, "நூமா கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து, ஆண்டின் நாள் கணக்கை 354 நாட்களாக உயர்த்தியதாகக் கூறுகிறது. ஆனால், ரோமானியர்கள் இரட்டைப்படை எண்களை துரதிர்ஷ்டமானவை என்று நம்பினர். இதற்காக அவர் பல மாதங்களின் மொத்த நாள் கணக்கை 30இல் இருந்து 29 ஆகக் குறைத்து, கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து 12 மாதங்கள் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்." ஜனவரி மாதத்தில் இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் இருந்ததால் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டது. பிப்ரவரி மாதம், பாதாள தெய்வங்களுடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தத்தை செய்ததன் மூலம் போம்பிலியஸ் ஆண்டின் நாள் கணக்கை 355 ஆக உயர்த்தினார்." கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில், நூமா போம்பிலியஸ் ஆட்சியின்போது ரோமானிய ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு புதிய மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஜனவரி ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி ஆண்டின் இறுதியிலும் சேர்க்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமானிய நாட்காட்டியில் சூரிய ஆண்டைவிட 10 நாட்கள் குறைவாக இருந்ததால், பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருந்தது குழப்பத்தில் தத்தளித்த ரோமானிய நாட்காட்டி ஒரு நாட்காட்டி சரியாகச் செயல்படுவதற்கு, சிவில் ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டுடன் பொருந்தி வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வோர் ஆண்டிலும் பருவ காலங்கள் ஒரே நேரத்தில் திரும்ப வரும். சிவில் ஆண்டு நீளமாக இருந்தால், பருவகாலங்கள் மெதுவாகப் பின்னோக்கி நகரும். அதுவே மிகக் குறுகியதாக இருந்தால், பருவகாலங்கள் வேகமாக முன்னோக்கி நகரும். 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலின்படி, "பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு 12 மாதங்களையும், மாதத்திற்கு 30 நாட்களையும் கொண்ட எளிய முறையைப் பயன்படுத்தினர். அதோடு, ஆண்டின் இறுதியில் கூடுதலாக ஐந்து நாட்களைச் சேர்த்தனர். ஆனால் அவர்கள் மிகுநாளாண்டு (Leap year) முறையைப் பின்பற்றாத காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் கால் பங்கு நாளின் கணக்கு தவறியது. இதன் விளைவாக எகிப்திய புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாட்களில் வந்தது. இதனால் எகிப்திய நாட்காட்டி நிலையற்றதாக இருந்தது." இதுவே ரோமானிய நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், வேறொரு பிரச்னை நிலவியது. நூமா மாதங்களை பன்னிரண்டாக மாற்றி, ஆண்டுக்கு 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியை கொண்டு வந்தார். இருந்தாலும், இதன்படியான ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டைவிட சுமார் 10 நாட்கள் குறைவாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆரம்பக்கால ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்களே இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன இதைச் சரிசெய்யவில்லை என்றால் ஒவ்வோர் ஆண்டும் பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு நூமா ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். அதாவது மற்றுமொரு புதிய மாதத்தை இடைச்செருகலாக சேர்த்தார். இந்தப் புதிய மாதம், பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிக்கு இடையே சேர்க்கப்பட நூமா உத்தரவிட்டார். இந்த இடைச்செருகல் மாதத்தில் ஓர் ஆண்டில் 22 நாட்கள், மற்றோர் ஆண்டில் 23 நாட்கள் என மாறி மாறி இருந்து வந்தது. இதனால், நான்கு ஆண்டுகளில் 1420 நாட்களுக்குப் பதிலாக மொத்தம் 1,465 நாட்கள் உருவாயின. அதாவது, சராசரி ஆண்டின் நாட்கள் எண்ணிக்கையை 366¼ நாட்கள் என்றானது. இதன் விளைவாக, சூரிய ஆண்டைவிட ஒரு நாள் கூடுதலாகக் கணக்கிடப்படும் நிலை உருவானது. பின்னர், இந்தப் புதிய பிழையைச் சரிசெய்ய, ஒவ்வொரு மூன்றாவது எட்டு ஆண்டு காலத்திலும் நான்கு இடைச்செருகல் மாதங்களுக்குப் பதிலாகத் தலா 22 நாட்களைக் கொண்ட மூன்று இடைச்செருகல் மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இது 24 ஆண்டுகளில் 24 நாட்களைக் குறைத்து, சராசரி ஆண்டை 365¼ நாட்களாகக் குறைத்து, நாட்காட்டி கணக்கீட்டை சூரிய ஆண்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தது. கோட்பாட்டின்படி, இந்த அமைப்பு நன்றாகச் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நடைமுறையில் இந்த இடைச்செருகல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மதகுருமார்களிடம் இருந்தது. அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர். ஒரு நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆண்டில் ஓர் ஆண்டின் காலகட்டத்தை நீட்டிப்பது, தேர்தல்களை விரைவுபடுத்த ஆண்டை சுருக்குவது போன்றவற்றில் ஈடுபட்டனர். இத்தகைய தந்திரங்களின் விளைவாக, ரோமானிய நாட்காட்டி பெரும் குழப்பத்தில் சிக்கித் தத்தளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமின் இரண்டாவது மன்னர் நூமா போம்பிலியஸ், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களை ரோமானிய நாட்காட்டியில் சேர்த்தார் மீண்டும் மார்ச் மாதமாக மாறிய ஆண்டு தொடக்கம் "ஓவிட் என்ற ரோமக் கவிஞரின் கூற்றுப்படி, நூமா போம்பிலியஸ் கொண்டு வந்த நாட்காட்டி முறை கி.மு.452 வரை பயன்பாட்டில் இருந்தது" என்று தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர், "டிசெம்வீர் என்று அழைக்கப்படும் பத்து ரோமானிய நீதிபதிகள் அடங்கிய குழு மீண்டும் மாதங்களின் வரிசையை மாற்றி மார்ச் மாதத்தையே முதல் மாதமாக நிர்ணயித்தது." இதன் மூலம் நூமாவுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய மரபுக்கே ரோம் திரும்பியது. ஆனால், இந்தத் திருத்தங்களும்கூட நாட்காட்டியில் நிலவிய ஆழமான சிக்கலைத் தீர்க்கவில்லை, குழப்பம் தொடர்ந்தது. ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், சூரிய ஆண்டுக்கும் ரோமானிய நாட்காட்டி படியான ஆண்டுக்கும் இடையே சுமார் மூன்று மாதங்கள் வேறுபாடு இருந்தது. குளிர்காலம் இலையுதிர் காலத்திலும், இலையுதிர் காலம் கோடைக்காலத்திலும் வந்தன. இப்படியாக வளர்ந்து வந்த குழப்பம், நாட்காட்டியை முற்றிலுமாகச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த சீர்திருத்தம் இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த கால அளவீடுகளைப் பார்த்த ஜூலியஸ் சீசர், கி.மு. 46இல் சோசிஜெனெஸ் என்ற அலெக்சாண்டிரிய வானியலாளரின் உதவியுடன், ரோமானிய நாட்காட்டியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை செய்தார். ரோமானிய பண்டிகைகள் அனைத்தும் பருவ காலங்களைச் சார்ந்தே இருந்ததால், நாட்காட்டியிலுள்ள குழப்பங்களைச் சரி செய்வதை அவசியமானதாகக் கருதினார் சீசர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் நாட்காட்டியில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட கி.மு.46ஆம் ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது அதுவரைக்கும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டு வந்த முறையை முற்றிலுமாகக் கைவிட முடிவு செய்தார் ஜூலியஸ் சீசர். மேலும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட, 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரங்களைக் கொண்ட ஆண்டு நாட்காட்டியை ஏற்றுக்கொள்வது அவரது முக்கிய முடிவாக இருந்தது. ஆனால், இதற்காக அவர் கி.மு.46 என்ற ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பற்பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் அந்த ஆண்டு வரலாற்றில் 'குழப்பமான ஆண்டு (The Year of Confusion)' என்ற பெயரையும் பெற்றது. கி.மு.46இல், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, சீசர் வழக்கம் போல 23 நாட்களைக் கொண்ட இடைச்செருகல் மாதம் ஒன்றைச் சேர்த்தார். இதன் மூலம், ஜனவரியில் 29 நாட்கள், பிப்ரவரியில் 28 நாட்கள் மற்றும் இடைச்செருகல் மாதத்தில் 23 நாட்கள் என மொத்தம் 80 நாட்கள் ஆனது. பின்னர், அதே ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும் முறையே 34 மற்றும் 34 நாட்களைக் கொண்ட இரு மாதங்களைக் கூடுதலாகச் சேர்த்தார். இதன் மூலம் கி.மு.46 மொத்தமாக 445 நாட்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதோடு, ரோமானிய நாட்காட்டியில் நிலவிவந்த குழப்பங்களும் சரி செய்யப்பட்டன. ஜூலியஸ் சீசர் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி, நாட்காட்டியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கண்ட கி.மு.46-ஐ "கடைசி குழப்பமான ஆண்டு" என்று ரோம தத்துவஞானி மேக்ரோபியஸ் விவரித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கி.மு. 8இல் அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஜூலியன் சீர்திருத்தத்திற்குப் பிறகு... ஜூலியஸ் சீசர் உருவாக்கிய புதிய கால அளவுகோலின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன. ஒவ்வொரு நான்காவது ஆண்டும் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்பட்டு, அது மிகுநாளாண்டாக (Leap Year) கணக்கில் கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற மிகுநாள், பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. கி.மு.45 சீசரால் சீர்திருத்தப்பட்ட முதல் ஆண்டாக இருந்தது. 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலிலுள்ள தகவலின்படி, கி.மு.45ஆம் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரி மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. கி.மு.44ஆம் ஆண்டு, சீசரின் நினைவாக 'குயின்டிலிஸ்' என்ற மாதம் ஜூலை எனப் பெயர் மாற்றப்பட்டது. கி.மு.8ஆம் ஆண்டு, அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று மாற்றப்பட்டது. இதற்குப் பிறகும்கூட, ரோமானிய மதகுருமார்கள் மிகுநாளாண்டு விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகுநாளைச் சேர்த்தனர். இதனால் 36 ஆண்டுகளுக்கு நீடித்த இந்தச் சிக்கல், கி.மு.9 மற்றும் கி.பி.3ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு ஜூலியன் காலண்டர் சரியாகச் செயல்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போப் 13ஆம் கிரிகோரி ஜூலியன் நாட்காட்டியில் இருந்த சிறு பிழை சீசர் ஒரு சூரிய ஆண்டு 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரம் நீளம் கொண்டது எனக் கருதினார். ஆனால் உண்மையில் அதன் நீளம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடம் மற்றும் 46 விநாடிகளாக இருந்தது. அதாவது, ஜூலியன் நாட்காட்டியில், ஓராண்டுக்கான கால அளவு 11 நிமிடங்கள், 14 விநாடிகள் நீளமாக இருந்தது. இந்தப் பிசிறு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் வானியல் கணக்குகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஈஸ்டர் நாள் கடைபிடிக்கப்பட்டபோதுதான், இந்தப் பிசிறு பெரும்பான்மையாக கவனத்தை ஈர்த்தது. உதாரணமாக, கி.பி.325இல், வசந்தகாலத்தில் மார்ச் 24ஆம் தேதி வரவேண்டிய சம இரவு நாள் (spring equinox), மார்ச் 21இல் வந்தது. காலம் நகர்ந்து கொண்டேயிருக்க, அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வசந்தகால சம இரவு நாளும் மேலும் மேலும் முன்கூட்டியே வந்து கொண்டிருந்தது. இதன் நீட்சியாக, 1545ஆம் ஆண்டளவில், சமஇரவு நாள் மார்ச் 11க்கு சரிந்திருந்தது. "ஒவ்வோர் ஆண்டும் வசந்தகால சம இரவு பகல் (Vernal Equinox) நாளுக்குப் பிறகு தோன்றும் முதல் முழு நிலவு நாளை அடிப்படையாக வைத்து பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் அதைச் சரியாகக் கணக்கிடுவதில் ஜூலியன் நாட்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்" 'தி கேலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' நூலில் அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் பிலிப் குறிப்பிட்டுள்ளார். "ஜூலியன் நாட்காட்டியின்படி, ஒராண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் ஓராண்டுக்கு 365.24219 நாட்கள். இதனால், ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில நிமிடங்கள் என்ற அளவில் உண்மையான கால அளவு மாறிக் கொண்டே வந்தது. அதாவது 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் வானியல் நிகழ்வுகள் முன்னதாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன," என்று எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் தனது மேப்பிங் டைம்: தி காலண்டர் அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இறுதியில், இந்தப் பிரச்னைக்கு 1572ஆம் ஆண்டில் 13ஆம் கிரிகோரி போப் ஆனபோது தீர்வு கிடைத்தது. வானியலாளரும் காலக்கணிப்பு வல்லுநருமான அலோய்சியஸ் லிலியஸ் இதற்குத் தீர்வாக ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதற்கு, 1582 பிப்ரவரி 24ஆம் தேதியன்று போப் 13ஆம் கிரிகோரி ஒப்புதல் வழங்கினார். அந்த ஒப்புதல் படிவத்தின்படி, நாட்காட்டியை சரி செய்வதற்காக பத்து நாட்கள் நீக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1582ஆம் ஆண்டில் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு வந்த நாள் 15ஆம் தேதியாகக் குறிப்பிடப்பட்டது என்று அலெக்சாண்டர் பிலிப் தனது நூலில் எழுதியுள்ளார். இப்படியாக, ஆரம்பக்கால ரோமில் மார்ச் மாதத்தில் தொடங்கிய புத்தாண்டு, நூமா, சீசர், 13ஆம் கிரிகோரி ஆகியோரின் காலத்தில் ஜனவரிக்கு மாற்றப்பட்டு, இன்றளவும் ஜனவரியே புத்தாண்டு மாதமாக நீடித்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2x9x9gkv7o
  20. மறுசீரமைப்பு, மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நிலையில் நாம் புத்தாண்டில் கால்பதிக்கிறோம் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:30 PM மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும். இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக ' தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது. அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234842
  21. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர் 01 Jan, 2026 | 01:11 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர். துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர். நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும். இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/234928 நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.
  22. வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு 31 Dec, 2025 | 04:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன. இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் 'வீடமைப்பு' முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234856
  23. 2026 புத்தாண்டை வரவேற்க உலகெங்கிலும் கொண்டாட்டங்கள் - கண்கவர் படங்கள் பட மூலாதாரம்,Christophe Petit-Tesson/EPA படக்குறிப்பு,பாரிஸ், பிரான்ஸ் 1 ஜனவரி 2026, 01:40 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் 2026 புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் மக்கள் வரவேற்ற கண்கவர் புகைப்படங்கள்: படக்குறிப்பு,லண்டனில் 12,000 வாணவேடிக்கைகளுடன் தொடங்கிய புத்தாண்டு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மீது சிறு வண்ணத் தாள்கள் தூவப்பட்டன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,துபை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புத்தாண்டு பிறந்ததை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கொண்டாடிய போது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வாணவேடிக்கைகளை மக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிட்னியின் ஹார்பர் பாலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தென் கொரியாவில் அதன் மிக உயரமான கோபுரமான லோட்டே வார்ல்ட் டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்குக்கு முன்பாக யுக்ரேனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூஸிலாந்தின் ஆக்லாண்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீன தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருந்தபோது பட மூலாதாரம்,Hannibal Hanschke/EPA படக்குறிப்பு,பெர்லின், ஜெர்மனி பட மூலாதாரம்,Bruna Casas/Reuters படக்குறிப்பு,பார்சிலோனா, ஸ்பெயின் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மும்பை நகரில் மக்கள் தெருக்களில் குழுமி புத்தாண்டை கொண்டாடினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2glz3lvpdo
  24. மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு! Jan 1, 2026 - 08:01 AM 2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது. சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதேநேரம் உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்றனர். மட்டக்களப்பில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmjutx13503dco29njyexr9wm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.