Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அதே சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது. செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது. ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.
  3. அநுரகுமார திசாநாயக்கவை தரிசித்ததில் அவருடன் செல்பி எடுத்த மகிழ்ச்சியில் யாழ்பாண தமிழர்கள் திளைத்து கொண்டிருக்கிறார்கள்.
  4. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தைச் சுற்றியுள்ளது. சுற்றுமுன் அடித்து விரட்ட சுள்ளித்தடி தேடவேண்டும், அது இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழரிடம் இருக்கிறது. இந்தத் தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதனைத்தான் தலைவனும் உணர்ந்து பொறுப்பை அங்கு கொடுத்து உணர்த்தினார்.
  5. Today
  6. வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி SONY DSC வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் கிவுல்ஒயா திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயம் என்று சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இந்த பிரதேசத்திற்கு மகாவலி நீரை கொண்டுவர முடியாது என்பதனால் ‘என்பிசி கெனல்’ ஊடாக மகாவலியை கொண்டு வருவதாகக் கூறி 2 இலட்சம் ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்போது அங்கு மக்கள் தொகை அதிகரித்து நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நீர்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 2011ஆம் ஆண்டில் இந்த கிவுல்ஓயா திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் 27,000 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்படுகின்றது. இதன்படி புதிதாக வயல் நிலங்களை உருவாக்கவும் இதன்போது இன்னும் மக்களை குடியேற்றவும் திட்டமிடப்படுகின்றது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது எமது பிரதேசத்திற்கு பாதிப்பாக அமையும். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேசத்திற்குள் இது வருகின்றது. இதற்காக 2021ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு மேலதிமாக 13,000 ஏக்கர் நிலத்தை வனபாதுகாப்பு திணைக்களம் இதற்காக வழங்குகின்றது. ஆனால் எமது மக்களின் பூர்விக நிலங்களை பயன்படுத்த வனபாதுகாப்பு திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் வவுனியா மற்றும் முல்லைதீவில் பூர்விகமாக வாழும் மக்களுக்கு நீரில்லை. இதனை கவனிக்க எவருமில்லை. கடந்த அரசாங்கத்தை போன்று சிறுபான்மையினவரின் வாழ்வுரிமையை பறிக்க நீங்களும் முயற்சிக்கின்றீர்களா? பாரிய நீர்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவதும், பெரும்பான்மை மக்கள் அங்கு குடியேற்றப்படுவதையும் தொடர விரும்புகின்றீர்களா? இனவாதம், மதவாதம் அற்ற அரசாங்கத்தை கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் வீணடிக்கப் போகின்றீர்களா? என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://akkinikkunchu.com/?p=356989
  7. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர். பின்னர் அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதனடிப்படையிலேயே அது தொடர்பான அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460938
  8. காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி 22 Jan, 2026 | 12:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாத கால போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய காசாவின் நெட்சரிம் (Netzarim) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாமை படம்பிடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பாலஸ்தீனிய ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லப்பட்ட செய்தியாளர்கள் பொதுமக்களின் துயரங்களை ஆவணப்படுத்தும் மனிதாபிமான ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், இரண்டு 13 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு புரைஜ் (Bureij) அகதிகள் முகாமின் எல்லையில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுவன், அவனது தந்தை மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிழக்கு நகரமான பானி சுஹைலா (Bani Suheila) பகுதியில் சமையலுக்குத் தேவையான விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, 13 வயதான மொட்செம் அல்-ஷராபி என்ற சிறுவன் இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிறுவனின் உடலைப் பார்த்து அவனது தந்தை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் ஷாத் மற்றும் அனஸ் க்னீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அப்துல் ரவூப் ஷாத், ‘ஏஜென்ஸி பிரான்ஸ்-பிரஸ்’ (AFP) செய்தி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், எரிக்கப்பட்ட வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த காணொளிகள் இணையத்தில் பரவின. ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் எகிப்திய நிவாரணக் குழுவினுடையது என்றும், அது குறித்த தகவல்கள் முன்னரே இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில், மத்திய காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ட்ரோன் ஒன்றை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டதன் பின்னரே துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை காசாவில் குறைந்தது 29 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 220 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காசாவில் மட்டும் 466 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236686
  9. நுவரெலியாவில் வெப்பநிலை 3.5° செல்சியஸாக பதிவு! நுவரெலியாவில் இன்றைய (22) தினம் குறைந்த அளவிலான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதன்படி அங்கு வெப்ப நிலை 3.5° செல்சியஸ் ஆக பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய கண்காணிப்பு மையங்களிலிருந்து இன்று அதிகாலை சேகரிக்கப்பட்ட வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில் இந்த அளவீடு பதிவாகியுள்ளது. மேலும் இது அண்மைய காலங்களில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். பண்டாரவளையில் 11.5°செல்சியஸ், பதுளையில் 15.1°செல்சியஸ் மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°செல்சியஸ் என மற்ற குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. இன்று காலை அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3°செல்சியஸ் ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°செல்சியஸ் ஆகவும், கொழும்பில் 22.1°செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavannews.com/2026/1460963
  10. தீர்மான செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்கும் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய 22 Jan, 2026 | 01:03 PM தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல; மாறாக, பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாக கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி World Woman House இல் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். “Women Leading the Changing Global Order” உயர்மட்ட அமர்வு “Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய பிரதமர், அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் போதிலும், அவர்களது உழைப்பு – குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா தொழில் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார். அரசியல் கண்ணோட்டத்தில், தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்குவது திட்டமிட்ட, கட்டமைப்பு ரீதியான செயற்பாடாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், தன்மைப் படுகொலை (Character Assassination), திட்டமிட்ட ஓரங்கட்டல்கள் போன்றவை, தலைமைத்துவத்திற்குத் தகுதியான பல பெண்களை அரசியலில் இருந்து விலகச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான செயல்கள் ஏற்கனவே நிலவி வரும் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த தடைகளை அகற்றுவது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல என வலியுறுத்திய பிரதமர், பெண்கள் தன்னம்பிக்கை, அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவம் வழங்கக்கூடிய சூழலை உருவாக்க, நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் அடிப்படையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். மக்களின் மீண்டெழுதலுக்கான உந்துதலும் அரசியல் அர்ப்பணிப்பும் இணைந்தால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என பிரதமர் கூறினார். தற்போதைய அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதன் முக்கிய எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல; மாறாக, அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில், பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மட்டுமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/236688
  11. சட்டவிரோத கரைவலைத் தொழிலுக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி வலியுறுத்து 22 Jan, 2026 | 12:59 PM சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை அவ்வாறு சட்டவிரோத கரைவலை முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மேலம் கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென இந்த அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/236687
  12. எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 121(1) பிரிவின்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் ஜனவரி 7 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தை சவால் செய்யும் மனுக்களை சமர்ப்பிப்பதற்கு அந்த திகதியிலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. சட்டமூலம் இயற்றப்பட்டதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 512 பேரின் ஓய்வூதிய உரிமைகள் இரத்து செய்யப்படும். https://athavannews.com/2026/1460984
  13. அண்மைய வரலாற்றில் மிகப் பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்! அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக இன்று (22) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹாஷிஷ் மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட மொத்தம் 10,871 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 23,692 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1460974
  14. 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்! 22 Jan, 2026 | 11:10 AM அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப் (Sabina Yusuf) என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சபீனா யூசப் என்ற பெண் நேற்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமானார். 41வது திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் உலகில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர். சபீனா யூசப் என்ற பெண் “திருமதி இலங்கை உலக அழகி 2025” பட்டத்தை முடிசூட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236674
  15. ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்! கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தீர்மானங்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (21) பின்வாங்கினார். அதேநேரம், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கிரீன்லாந்து குறித்த சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து சமூக ஊடகங்களில் சில விடயங்களை மாத்திரம் முன்வைத்த ட்ரம்ப், நேட்டோ தலைவருடனான “மிகவும் பயனுள்ள சந்திப்பு” கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு வழிவகுத்ததாகக் கூறினார். இந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று நேட்டோ விவரித்தது – மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பின் மீதான விவாதங்கள் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் கூறியது. முன்னதாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அந்தப் பிரதேசத்தின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறினார். இந்த நிலையில் புதன்கிழமை இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தீர்வு நிறைவேறினால் அது அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் – என்றார். எனினும், தன்னாட்சி பெற்ற டேனிஷ் சார்பு பிரதேசத்தின் அமெரிக்க உரிமையை இந்த திட்டம் உள்ளடக்கியதா என்று அவர் கூறவில்லை. கிரீன்லாந்தை ‍கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460895
  16. பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில், ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460946
  17. அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை! 22 January 2026 அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை. இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/442073/important-warning-for-sri-lankans-going-to-the-us-violation-of-visa-regulations-will-result-in-a-lifetime-ban
  18. பனர் சரியா? ஏதும் திருத்தம் செய்யவேண்டுமா? @goshan_cheஅண்ணை, @valavanஅண்ணை, @வாத்தியார் அண்ணை மற்றும் உறவுகள் உங்கள் கருத்தைச் சொல்லுங்க.
  19. புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (21) காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20,023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13,168 குடும்பங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15,260 பாடசாலை மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் இராமன் செட்டியார், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் உடனிருந்தார்கள். https://adaderanatamil.lk/news/cmkoyz5xr048vo29nio3ed8f4
  20. ஜே.வி.பியின் அரசியல் வித்தை லக்ஸ்மன் அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்கை உரப் பாவனை போன்றவைகள் உருவாக்கிக் கொண்டவைகள். கொவிட் பெருந்தொற்று உலகளவில் தானாக ஏற்பட்டது. அவற்றினால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தம்கூட சாதக பாதகங்களையே கொடுத்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால், அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையே. இதனை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கத்துக்குட்படுத்துவர். தமிழர்கள், உழவர்கள் வாழும் நாடுகளில் கடந்த வாரம் தைப்பொங்கல் வாரம். இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த வாரம் பெரும் களேபரமான வாரமாகத்தான் கழிந்திருக்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் தித்வா சூறாவளியால் நாடு அல்லோல கல்லோலத்துக்குட்பட்டது. இன்னமும் மலையகத்தின் பல பகுதிகளில் சரியான அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களுக்கு பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய வருகை தரவுள்ளனர். உலகின் பல நாடுகளின் உதவிகள் இன்னமும் சரியாக வந்து சேரவில்லை. இவ்வாறிருக்கையில் அதற்குள் ஒரு அரசியலைச் செய்து கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடந்தேறியிருக்கின்றன. இதனை அரசியல் தெரிந்த, கலாசாரம் தெரிந்த, இலங்கை அரசாங்கத்தின் சம்பிரதாயம், வழமையான பாரம்பரியம் தெரிந்த, யாருமே மறுக்கமாட்டார்கள். தித்வா சூறாவளியினால் நாடு பட்ட துயரத்தின் வலியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்து பிறப்பு, நத்தார் ஒளி விழாக்களைக் கோலாகலமாக நடத்தவில்லை. புதுவருடப் பிறப்பினை களியாட்டமாகக் கொண்டாடவில்லை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் கூட அனுமதிகளை மறுத்திருந்தன. அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தனர். ஆனால், நாட்டில் தலைவர் தைப் பொங்கல் விழாவை தமக்கான, மக்கள் விடுதலை முன்னணிக்கான(ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். (இது பொதுவான கருத்து) புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக தேசிய தைப் பொங்கல் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், வட மாகாண தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. தேசிய பொங்கல் விழாவில் பங்குபெறாமல் ஜனாதிபதி ஏன் வடக்கு சென்றார் என்பதில்தான் அரசியல் இருக்கிறது. ஆனால், வடக்கு விஜயத்திற்குரிய திட்டமிடல்கள் ஏற்கெனவே முடிந்திருக்கின்றன. வடமாகாணத் தைப் பொங்கல் விழாவுக்கு மறுநாள் முழு நாடுமே ஒன்றாகத் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையானது, அரச அதிகாரிகளாலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தது. ஆனால், தற்போது சற்று அதிகமாக மேற்கொள்ளப்படுவதையே இந்த தேசிய வேலைத் திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது என்கிற விமர்சனங்கள் உருவாகிவருகின்றது. அதே நேரத்தில், நாட்டில் இருக்கின்ற போதைப்பொருள் பிரச்சினைகளைத் தவிர, வேறு விடயங்கள் இல்லை போலும் என்ற மாயை ஒன்றும் உருவாக்கப்படுவதாகவும் உணரமுடிகிறது. இந்த மாயையானது மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சினைகளை மறைத்து மேலோட்டமாக மக்களை நகர்த்தி தங்களது அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள ஜே.வி.பி. முனைந்து வருவது தெரிகிறது. மற்றொன்று வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரஜா சக்தி செயற்பாடுகளுக்காக தமது கட்சியின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த நடவடிக்கையானது, இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் இலக்காக் காணப்படுகின்றன. மற்றைய கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் செயலாளர் அரசியலை மாத்திரம் மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. நீண்டகாலமாக மேற்கொண்டுவந்த தீவிர அரசியலை அரச அதிகாரத்துடன் தற்போது மேற்கொள்கின்றது என்றே சொல்லமுடிவதாக அரசியல்வாதிகள் கருத்துத் வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். தங்களது கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள பிரஜா சக்தியானது நாட்டின் பிரதேச செயலகங்களின் கீழுள்ள கிராம சேவகர்களே மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த கிராமத்திற்குத் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில் பிரஜா சக்தி மேற்கொள்ளும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது விமர்சனமாக இருக்கிறது. அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பாக பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் செயல்பாடாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையில்தான் பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில் அனுமதிக்க முடியாது என்கிற கோசம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சி பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ள சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது எனலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சீர் செய்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுக்குமிடையில் சுனாமி கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில், ஜே.வி.பியினர் ஒப்பந்த உருவாக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் சுனாமி கட்டமைப்பு உருவாக்கத்தினை தடுத்திருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் ஒரு அங்கீகாரத்துக்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிராக இருந்த ஜே.வி.பி. தற்போது வடக்கு மக்களிடம் தமது அரசியலைச் செய்ய முனைவது அவர்களது அரசியலுக்காக என்பதனைக்கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுவதானது தமிழ் மக்களின் அரசியல் வறட்சியையே காட்டுகிறது. இந்த இடத்தில்தான், 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் புதைத்துவிட்டு நாட்டையே கைப்பற்றிக் கொள்வதற்காக ஆயுத ரீதியாக போராடிய ஜே.வி.பியினரின் ஏமாற்று அரசியலில் வீழ்ந்து ஒன்றுமில்லாதவர்களாக, நிலைப்பாடுகளை மறந்தவர்களாக, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டவர்களாகப் புதைந்து போன பின்னர் கவலையை மாத்திரம் மிகுதியாகப் பாதுகாக்கப்போகிறோமா என்பதே தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்காக தங்களது எதிர்கால அதிகாரத்துக்காக அரசியலைச் செய்வதொன்றும் புதிதல்ல என்ற வகையில் போதைப் பொருள் தடுப்பு என்றவகையில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாகத் தேசிய வேலைத்திட்டம், திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் வரவுள்ள இன்னும் பல வேலைத்திட்டங்களும் கண்டும் காணாமல் விடப்பட வேண்டியவைகளே. எவ்வாறானாலும், மக்களுக்காகக் கடந்த காலங்களில் சரியான அரசியலைச் செய்ய மறந்தவர்கள் தற்காலத்தில் கவலைகொள்வதும் எதிர்ப்பு வெளியிடுவதும் வழக்கு தாக்கல் செய்வதும் இயலாதவர்களின் செயற்பாடு என்ற மக்களின் எதிர்வினையால் ஜே.வி.பிக்கே சாதகமாக மாறிப்போகும் என்பதே வெளிப்படை. அந்தவகையில், எல்லோரும் சொல்லும் மக்களை ஏமாற்றும் வித்தையான அரசியலைக் கவனமாக செய்யும் ஜே.வி.பியைப் பாராட்டத்தான் வேண்டும். ஜே.வி.பியின் அரசியல் வித்தை தொடரட்டும். அதில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பாடுகளை நாம் பார்க்கலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-வி-பியின்-அரசியல்-வித்தை/91-371359
  21. முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் இரண்டாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன். இருப்பு இருப்பு 255,870.67-50025=ரூ 205,845.67 சதம் இன்று 22/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். வைப்புச்செய்த இலத்திரனியல் பற்றுச்சீட்டு.
  22. இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது. இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரு கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன், முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரல, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர். இந்த விஜயத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இந்தக் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருட்களைப் பார்வையிடும் பயணமும் பயணத்திட்டத்தில் அடங்கும். இந்த விஜயம் தொடர்பான ஒரு சுமுகமான கலந்துரையாடல் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமீபத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-குடியரசு-தின-விழாவில்-பொதுஜன-பெரமுனவினர்-பங்கேற்பு/175-371396
  23. 📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்! adminJanuary 22, 2026 வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் 36 வருடங்களாகத் தவிப்பதாக வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கவலை வெளியிட்டுள்ளார். மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா குரும்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 📍 மயிலிட்டி நூலகம்: ஏனைய நூலகங்கள் சிறப்பாக இயங்கினாலும், மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூலகம் வசாவிளான் சந்தியில் இன்றும் ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது. வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி திறக்கப்பட்டாலும், பாடசாலை இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே முடக்கப்பட்டுள்ளது. தற்காலிக இடங்களில் இயங்கும் போதிலும், வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் வாசிப்புப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ⚠️ தென்னிலங்கையினூடாகக் கொண்டு வரப்பட்டுள்ள “பிரஜாசக்தி” திட்டமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என தவிசாளர் இதன்போது எச்சரித்தார். “மக்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. உங்கள் தேவைகளுக்கு நேரடியாக பிரதேச சபையை அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2026/227099/
  24. சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம் adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போது, உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எழுப்பினார். 2016-ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த ‘எக்கோ ரூறிசம்’ (Eco-tourism) திட்டம் உருவாக்கப்பட்டது. வேலணையின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். எனினும் முறையான பொறிமுறை இல்லாததால், சுற்றுலாப் பயணிகளுக்காக வாங்கப்பட்ட படகுகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்து கிடக்கின்றன. பல பொருட்கள் மர்மமான முறையில் சூறையாடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாத் தளம் என்ற பெயரில், தற்போது அது மதுபானம் அருந்தும் இடமாகவும், சமூகச் சீரழிவுக்கான களமாகவும் மாறி வருவதாக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பலரும் இவ்வாறான செயல்களுக்காகவே இவ்விடத்தைத் தேர்வு செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் முறையாகக் கிடைக்காததுடன், இந்தத் திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வர்த்தக நோக்கில் இந்த மையத்தைப் பராமரிக்கும் தனியார் தரப்பினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தினார். இந்தப் பிரதேசத்தின் மாண்பைக் காக்க, மண்டைதீவு சுற்றுலாத் தளத்தை மீண்டும் அதன் உண்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேலணை பிரதேச சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவில் சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் 2024 செப்டம்பரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (அன்றைய நிலையில்) அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டன. சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் (மொத்தமாக 138 ஏக்கர் விளையாட்டு நகரமாக – Sports City) இந்த மைதானம் அமையவுள்ளது. 10 மத்திய விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச தரத்திலான எல்லைக் கோடுகளைக் கொண்ட மைதானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் மற்றும் கனமழை காரணமாகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 2026 ஜனவரியில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 2026-ல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் T20 உலகக்கோப்பைக்குப் பிறகு, இங்கு முதலாவது முன்னோடிப் போட்டி (Trial Match) நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இந்த மைதானத் திட்டத்திற்கு எதிராகப் பல சூழலியல் அமைப்புகள் (குறிப்பாக WNPS) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) இன்றி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மண்டைதீவு ஒரு முக்கியமான சூழலியல் வலயமாகும். அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதால், இறால் மற்றும் நண்டுப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதையும் என அஞ்சப்படுகிறது. மண்டைதீவு இயற்கையாகவே ஒரு தாழ்வான பிரதேசம். டிட்வா புயலின் போது மைதானம் அமையவுள்ள பகுதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்பியது. மறுபுறம், இலங்கை கடற்படையினர் மற்றும் யாழ். பல்கலைக்கழகத் தாவரவியற்றுறை இணைந்து மண்டைதீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான கண்டல் தாவரக் கன்றுகளை நடும் (Mangrove Restoration) பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2026/227089/
  25. குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்! adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளர், அவருடன் பயணித்த பிரதேச செயலக சக உத்தியோகஸ்தர் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனா். படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Base Hospital) அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கிழக்கு வீதிகளில் அண்மைக்காலமாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடத்தனை, மணற்காடு வீதிகள் புயலுக்குப் பின் சீரமைக்கப்பட்ட போதிலும், போதிய போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாதது ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. https://globaltamilnews.net/2026/227102/
  26. வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்! adminJanuary 22, 2026 வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தனது மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள JICA நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா (Kenji Kuronuma) அவர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு JICA வழங்கிய பங்களிப்புக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மாகாணத்தின் தற்போதைய பிரதான சவாலான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப உதவிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக JICA பிரதிநிதி தெரிவித்தார். அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. வடக்கின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கென்ஜி குரோனுமா இதன்போது உறுதி அளித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/227103/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.