stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
'இரான் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்': டிரம்ப் - புதின் பேசியது என்ன? பட மூலாதாரம்,NATALIA KOLESNIKOVA,NICHOLAS KAMM/AFP via Getty Images படக்குறிப்பு,சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு எதிரான போர் 'விரைவில் முடிவுக்கு வரக்கூடும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு (இந்திய நேரப்படி) தெரிவித்தார். அவரது கூற்றைத் தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் உடனடி நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது. பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "இந்தப் போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த போருக்கான அமெரிக்காவின் திட்டம் 'கால அட்டவணையை விட முன்னதாக' செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இரானின் ராணுவ பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது நடுநிலையாக்கப்பட்டுவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். "அவர்களிடம் இப்போது கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப் படையும் இல்லை. அவர்களின் ஏவுகணைகள் சிதறிக் கிடக்கின்றன. அவர்களின் டிரோன்கள் மற்றும் அவற்றின் தொழிற்சாலைகள் என அனைத்தும் எல்லா இடங்களிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் சுற்றிப் பார்த்தால், ராணுவ ரீதியாக அவர்களிடம் எதுவும் இல்லை" என்று டிரம்ப் கூறினார். போர் 'விரைவில் முடிவுக்கு வர முடியுமா' என்ற கேள்விக்கு, 'எனக்கும் அதே எண்ணம் தான் உள்ளது' என்று அவர் பதிலளித்தார். இருப்பினும், பின்னர் புளோரிடாவில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களது இரான் நடவடிக்கை விரைவில் முடியும், ஆனால் இந்த வாரம் அல்ல" என்று தெரிவித்தார். "இரானிடம் இருந்த அனைத்தும் போய்விட்டன. அதன் தலைமை உட்பட" என்று அவர் கூறினார். மேலும், "நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனக்குத் தெரியவில்லை. அது சூழ்நிலையைப் பொறுத்தது. இதன் முடிவு எனது மனதில் இருக்கிறது, வேறு யாருடைய மனதிலும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. டிரம்பின் இந்த கூற்றுகள் பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. திங்கட்கிழமை அன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இரான் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்பின் கருத்து சந்தைக்கு நிம்மதி அளித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் திங்கள்கிழமை காலையில் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. ஆனால் பகல் நேரத்தில் பேரலுக்கு சுமார் 90 டாலராகக் குறைந்தது. உலக அளவில் எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆகியவை மிகப்பெரிய அளவுகோல்களாக உள்ளன. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் திங்கள்கிழமை சுமார் 1.75 சதவீத இழப்புடன் முடிவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகள் மூடப்பட்ட பிறகே டிரம்பின் கருத்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 'புதினுடன் பேசினேன்' பட மூலாதாரம்,Roberto Schmidt/Getty Images படக்குறிப்பு,புளோரிடாவில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், "இரானின் தலைமையை நாம் அழித்துவிட்டோம்" என்றார். இதற்கிடையில், திங்கள்கிழமை டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த ஆண்டில் இருவருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல் இதுவாகும். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் புதினுடன் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டேன். அவர் எங்களுக்கு உதவ விரும்புகிறார். யுக்ரேனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு இன்னும் அதிகமாக உதவ முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் எங்களிடையே நல்ல உரையாடல் நடந்தது. அவர் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க விரும்புகிறார்" என்றார். சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. எனவே ரஷ்யா மீதான எண்ணெய் தொடர்பான தடைகளைத் தளர்த்துவது குறித்து அது பரிசீலித்து வருகிறது. கடந்த வாரம் தான், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' அளித்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தைப் பராமரிக்க, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அமெரிக்க கருவூலத் துறை 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அதன் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். திங்கள்கிழமை புதினுடனான டிரம்பின் உரையாடலின் போது, இரானின் உச்ச தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புதின் வாழ்த்து தெரிவித்ததாகவும், இரானுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது. இருப்பினும், மொஜ்தபா உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதில் தனக்கு 'மகிழ்ச்சியில்லை' என்று டிரம்ப் கூறியிருந்தார். சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மகன் தான் மொஜ்தபா. இரானுக்கு எச்சரிக்கை பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,டெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் வயலில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. (படம் மார்ச் 9, 2026 அன்று எடுக்கப்பட்டது) இரானிய ஏவுகணைகள் குறித்து டிரம்ப் கூறுகையில், "அவர்கள் ஏவ வேண்டிய அனைத்தையும் ஏவிவிட்டார்கள். இனி அவர்கள் புதிய உத்திகள் எதையும் முயற்சி செய்யக்கூடாது, இல்லையெனில் அந்த நாடு அழிந்துவிடும்" என்றார். "அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், இரான் முற்றிலுமாக அழிக்கப்படும், அதன் பெயர் மீண்டும் ஒருபோதும் கேட்காது" என்று அவர் மிரட்டல் விடுத்தார். ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப் , அமெரிக்கா "அதன் கட்டுப்பாட்டை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது" என்றும் "அமெரிக்காவால் நிறைய செய்ய முடியும்" என்றும் கூறினார். உலகளாவிய கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. இந்தப் போர், கடல்வழி போக்குவரத்துப் பாதையைத் தடுத்துள்ளதால், சமீபத்திய நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியபோது, இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், அதன் வழியாகச் செல்லும் எந்தக் கப்பலையும் தகர்த்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தது. இருப்பினும், பின்னர் இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்சாதே தாங்கள் ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்று தெரிவித்தார். இரானின் புதிய தலைவரைப் பற்றி டிரம்ப் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,Arezoo / Middle East Images / AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 9 அன்று இரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா காமனெயிக்கு ஆதரவாக மக்கள் ஒரு பேரணியில் கலந்து கொள்கிறார்கள். மொஜ்தபா முன்னாள் உச்ச தலைவர் அலி காமனெயி மகன் ஆவார். இரானுக்காக ஏதேனும் புதிய தலைவரை மனதில் வைத்திருக்கிறீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, "அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, ஆனால் ஆம், என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது" என்று அவர் கூறினார். பேட்டிக்குப் பிறகு, புளோரிடாவில் குடியரசுக் கட்சியினரிடயே உரையாற்றிய டிரம்ப், இரான் மோதல் குறித்துக் கூறுகையில், "பல வழிகளில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. இறுதி வெற்றியை அடையவும், இந்த நீடித்த அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கவும் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம்" என்றார். நீண்ட கால அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் எந்தவொரு கூட்டாளியையும் தாக்குவதற்கான ஆயுதங்களை இரான் உருவாக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார். பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சரின் கூற்றுப்படி, இந்த இலக்கை அடைய இரானில் ஆட்சி மாற்றம் தேவைப்படும், அதை டிரம்பால் இதுவரை சாதிக்க முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy8e27kzn1o
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
ட்ரம்ப் மீது பாலியல் புகார் - புதிய ஆவணங்கள் வெளியீடு வாஷிங்டன்: மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்ரீதியாக தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள புதிய புகார்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மூலம் ட்ரம்ப் தமக்கு அறிமுகமானதாகவும், அதன் பிறகு அவர் தமக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்ததாகவும் அந்தப் பெண் எப்பிஐ அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் எப்பிஐ நடத்திய பலகட்ட விசாரணைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தமக்கு 13- 15 வயது இருக்கும்போது எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவராலும் தாம் பாதிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். எப்ஸ்டீன் தன்னை நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று ட்ரம்ப்புக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது தமக்கு நேரிட்ட பாலியல் அத்துமீறலைத் தடுக்க முயன்றபோது தாம் அவரை கடித்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனிடையே, ட்ரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எப்ஸ்டீன் விசாரணை விவரங்களை ட்ரம்ப் நிர்வாகம் மறைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.hindutamil.in/news/world/sexual-harassment-allegations-against-trump-new-documents-released
- Havelock city
- Shoppes
- பொங்கல் 2026
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
- ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
- கறையான் புற்று
இது விவகாரமான கேள்வியல்ல. விபரமான கேள்விதான் உறவே!! மாமனிதர் விருது மாமனிதர் விருது – தமிழீழத்தின் அதிஉயர் விருதினை ஈழப்போராட்டத்தில் பல்வகைகளிலும் தோளோடு தோள்நின்று பங்காற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு மேதகு தலைவர் வே. பிரபாகரனால் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார்.- Today
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- கருத்து படங்கள்
- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
- ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!
ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்! மத்திய கிழக்கு வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் ஐரோப்பிய இடங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அசர்பைஜான் வழியாக மாற்று வழியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் தொடங்கிய விரிவடையும் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டே உள்ளது. ஈரான் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது, இதனால் இப்பகுதிக்கு செல்லும் மற்றும் இப்பகுதி வழியாக விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பாதை மாற்றத்தின் காரணமாக லண்டனுக்கு விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, விமானப் போக்குவரத்து (பயணிகளின் மொத்த எடை, அவர்களின் சாமான்கள் மற்றும் வருவாய் ஈட்டும் விமானத்தால் கொண்டு செல்லப்படும் சரக்கு) குறைக்கப்பட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். வான்வெளி மூடப்பட்டதன் விளைவாக மத்திய கிழக்கு நகரங்களுக்கு திட்டமிடப்படாத விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். மேலும், விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர் அது மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், ஆனால் சரியான தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, வான்வெளி மூடல் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க முன்னதாக தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1467762- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
உண்மையிலேயே.... யாழ்பாணத்தான் கெட்டிக்காரன். ஈரானில், முதல் குண்டு வெடித்த உடனேயே... பெற்றோலுக்கு இரவு, பகலாக வரிசையில் நின்று... எரி பொருட்களை சேமித்து வைத்து விட்டார்கள். இவர்கள் இப்படி அடிபட்டு பெற்றோல் அடிப்பதை பார்த்து மற்றைய மாகாணத்தவர்.... "யாழ்ப்பானீஸ்", "பனங்கொட்டை சூப்பி"... என்று எள்ளி நகையாடிய போதும், 🤣 எதையும் கவனத்தில் எடுக்காது.... பெற்றோலை சேமித்து வைத்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 😂- ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு.
விஜயகாந்தின் மனைவி, பிரேமலதா கட்சி நடத்துவதே... தனது தம்பி சுதீசுக்குத்தான். 😂- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து Published By: Vishnu 10 Mar, 2026 | 06:17 AM ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி அவர்களுக்கு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நியமிக்கப்பட்ட புதிய உச்ச தலைவர் தனது தந்தையைப் போலவே இஸ்ரேலை அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை உடைப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்"... மேலும், அவரது தந்தை ஆரம்பித்த பணிகளை முஜ்தபா காமேனி கௌரவமாக முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையும் ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/240586- ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்: ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி Mar 10, 2026 - 09:55 AM ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார். புதிய கடும்போக்குவாத உச்சநிலைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள இஸ்லாமியக் குடியரசானது (ஈரான்), உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் போர் தீவிரமடையக்கூடும் என்றும் ட்ரம்ப் அங்கு எச்சரித்திருந்தார். இருப்பினும், அதற்குப் பதிலளித்துள்ள ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவைத் தாங்களே எடுப்பதாகக் கூறியுள்ளது. பிராந்தியத்தின் எதிர்காலம் தற்போது தெஹ்ரானின் படைகளின் கைகளிலேயே உள்ளது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmk3usta000a356pj54jwk9k- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்; அதன்மூலமே நீண்டகாலப் பாதிப்புக்களைக் குறைக்கலாம் - தலால் ரஃபி Published By: Vishnu 10 Mar, 2026 | 04:05 AM (நா.தனுஜா) மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைய பூகோளப் பதற்றநிலைகளால் இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவும் பின்னணியில், குறிப்பாக எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும். எரிபொருள் நிவாரணங்களுக்குப் பதிலாக நலிவுற்ற சமூகப்பிரிவினருக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவதை நான் எப்போதும் ஆதரிப்பவன் என்றாலும், தற்போதைய அசாதாரண சூழ்நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்குத் தெளிவுபடுத்தவேண்டும். அதேபோன்று விலை சூத்திரத்தை தற்காலிகமாக நிறுத்தாவிடின், சந்தை நிலைவரப்படி எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வடையும். போர் ஆரம்பமானதிலிருந்து மசகு எண்ணெய் விலை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் பிரதிபலித்தால் போக்குவரத்து மற்றும் ஏனைய விநியோகச்செலவுகள் உயர்வடைந்து, உணவுப்பொருட்களின் விலைகளும் மிகவேகமாக அதிகரிக்கும். பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் விலையை உயர்த்திய பின்னர், எரிபொருள் விலை குறைந்தாலும் மீண்டும் விலையைக் குறைக்கமாட்டார்கள். எனவே இது நிரந்தர விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதேவேளை எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதால் அரசாங்கத்துக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பது உண்மைதான். இருப்பினும் வாகன இறக்குமதி வரி மற்றும் மூலதனச் செலவினங்கள் குறைவாக இருந்ததன் காரணமாக அரசாங்கத்திடம் இப்போது போதிய நிதிக்கையிருப்பு உள்ளது. தற்காலிகமாக 2 - 3 மாதங்களுக்கு விலையை ஸ்திரமாகப் பேணினால், நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புக்களைத் தவிர்க்கலாம். ஏனெனில் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தால், அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அரசாங்கத்தின் மீள் உருவாகும் செலவுகளை நிரந்தரமாக உயர்த்திவிடும். அத்தோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை அதிகரிக்கவேண்டியிருக்கும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இலங்கையில் ஏற்கனவே 25 சதவீத மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தத் திடீர் விலை உயர்வைச் சமாளிக்கும் சக்தி பலருக்கு இல்லை. எனவே எதிர்பொருள் விலை சூத்திரத்தை நிறுத்திவைப்பது 3 மாதங்களுக்கு மட்டுமேயான ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கவேண்டும். https://www.virakesari.lk/article/240578- G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி Mar 10, 2026 - 07:14 AM ஆசியாவில் இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆகக் காணப்பட்டது. அமெரிக்காவிலும் கச்சா எண்ணெய் விலை சுமார் 9% சரிந்து ஒரு பீப்பாய் $88.60 ஆகக் குறைந்தது. இருப்பினும், மோதல் தொடங்கிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த விலைகள் இன்னும் சுமார் 30% அதிகமாகவே உள்ளன. போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்பகட்ட வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் காரணமாக ஆசிய சந்தைகள் ஊக்கமடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225) குறியீடு 2.8% உயர்ந்ததுடன், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) பங்குச்சந்தை 5%க்கும் அதிகமாக உயர்ந்தது. ஆசிய பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் வளைகுடா நாடுகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பதால், கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் ஆசிய சந்தைக் குறியீடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmjy3c6l0002356ptcxvn4zu- இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
இலங்கை மின்சார சபைக்கு மரணச் சடங்கு உணவு அழைப்பு விடுத்த மின்சாரப் பாவனையாளர் சங்கம் 09 Mar, 2026 | 04:39 PM (க.சிவலிங்கமூர்த்தி) 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மின்சார சபையானது தற்போதைய அரசாங்கத்தினால் ஆறு நிறுவனங்களாகத் துண்டாடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்றுடன் உத்தியோகபூர்வமாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது மின்சார சபையின் மரணமே எனத் தெரிவித்துள்ள மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல இதற்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தனது கவலையை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், சுமார் 22,000 ஊழியர்களைக் கொண்ட இந்த தேசிய நிறுவனத்தின் அந்தியக்கிரியைகள் இன்று நடைபெறுவதால் மின்சாரப் பாவனையாளர்கள் சார்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இதனை முன்னிட்டு நாம் ஒரு மரணச் சடங்கு உணவை ஏற்பாடு செய்துள்ளோம். சிங்கள் கலாசார முறைப்படித் தயாரிக்கப்பட்ட இந்த உணவை உட்கொள்ள வருமாறு மின்சாரத் துறை அமைச்சருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். அமைச்சரவைக்கும் அதிகாரிகளுக்கும் இது மிகவும் சுவையான உணவாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் நிலக்கரியைத் தின்று பழகியவர்கள். நாம் உண்ணும் இந்த உணவிலும் நிலக்கரித் துண்டுகள் தட்டுப்படலாம். அந்த நிலக்கரி ஊழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முறைகேடுகளில் அவர்கள் தற்போது முழுமையாக மூழ்கியுள்ளனர். மின்சார சபை ஊழியர்கள் மட்டுமன்றி மின்சாரத்தைப் பயன்படுத்தும் சகல மக்களும் இன்று கவலைப்பட வேண்டிய நாள். மின்சார சபை இவ்வாறு தனியார் மயப்படுத்தப்பட்டு ஆறு நிறுவனங்களாகப் பிரிக்கப்படுவதால் மின்சாரக் கட்டணம் ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்த ஆறு நிறுவனங்களின் தனித்தனி செலவுகளையும் நட்டங்களையும் இறுதியாக மக்கள் தலையிலேயே சுமத்தப் போகிறார்கள். ஊழியர்களுக்கான எதிர்காலம் குறித்தும் பாரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர்களுக்கு இதுவரை முறையான இடமாற்றக் கடிதங்களோ அல்லது பதவி உயர்வு தொடர்பான தெளிவான விளக்கங்களோ வழங்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் முன்வைத்த எட்டு கோரிக்கைகளுக்கும் அரசாங்கத்திடம் முறையான பதில் இல்லை. தற்போது மின்சாரத் துறை அமைச்சர் பலமுனை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். ஒருபுறம் அவருக்கு எதிராக எதிர்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. மறுபுறம் ஊழல் மற்றும் மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் அவர் தற்போது மக்கள் மத்தியில் தலைகாட்ட முடியாமல் இருக்கின்றார். புதிய மின்சார சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அவற்றை எதனையும் கணக்கிலெடுக்காது அமைச்சர் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார். தனது பதவி பறிபோகும் என்ற பயத்தினால் அவர் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது. அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/240554- ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு.
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு. ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது. திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை. இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். https://athavannews.com/2026/1467774- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேலை விட அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது அதிக ஏவுகணைகளை செலுத்திய இரான் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும். கட்டுரை தகவல் அப்துல் ரஹ்மான் அபு தாலிப் பிபிசி அரபி மொழி சேவை 9 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் பிபிசி அரபு சேவை ஆய்வின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக நடந்த 12 நாள் போரை விட, தற்போது நடந்து வரும் போரின் போது இரான் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது என தெரிய வருகிறது. சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது. ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்த எண்ணிக்கையை ஓமன் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. இரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நாடுகளின் நிலப்பகுதி இரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்துள்ளார். பிபிசியின் உலக விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், பெஸெஷ்கியன் அமைதிக்கான செய்தியை அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளை இரானிய தலைமையின் நிலைப்பாடாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி எனத் தெரிவித்துள்ளார். இரானின் பாதுகாப்புத் திறன்களில் பாலிஸ்டிக், குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இரானிடம் டிரோன்களும் உள்ளன. ஆனால் அது தனது உத்தியை இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன? இஸ்ரேலுக்கு எதிராக முன்பு நடந்த போர்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, இரான் தனது ஆயுதங்களை எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும்? இரான் ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன? பட மூலாதாரம்,Wisam Hashlamoun/Anadolu via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுகிறது இரான் குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளின் பாதுகாப்புக்கான அறக்கட்டளைப் படி, இரானின் குறுகிய தூர ஏவுகணைகள் 300 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் வளைகுடா நாடுகள் உட்பட பல அண்டை நாடுகளை தாக்க வல்லவை. நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து இஸ்ரேலை சென்றடையக் கூடியவை. இரான் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளது. ஷஹாப் 1: 300 கிலோமீட்டர் ஃபதே 110: 300-500 கிலோமீட்டர் ஷஹாப் 2: 500 கிலோமீட்டர் சுல்ஃபிகார்: 700 கிலோமீட்டர் கியாம் 1: 750 கிலோமீட்டர் ஷஹாப் 3: 2000 கிலோமீட்டர் ஆதாரம்: பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் இரானின் மிக முக்கியமான ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும், இவை அதிக உயரத்தை எட்டக்கூடியவை மற்றும் அங்கிருந்து ஒரு வில் போன்ற பாதையில் இலக்குகளை நோக்கி செல்லக்கூடியவை. ஜனநாயக பாதுகாப்பு அறக்கட்டளையின்படி, இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாதிப்பை ஏற்படுத்துவதற்கான மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகவும், விமானப் படைக்கு மாற்றாகவும் கருதுகிறது. தடைகள் காரணமாக இரானால் வழக்கமான ஆயுதச் சந்தைகளை அணுக முடிவதில்லை, இதனால் அதன் விமானப் படை பலவீனமான நிலையில் உள்ளது. குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. அவை தங்கள் இலக்குகளை அடைய ஜெட் அல்லது புரொப்பல்லர் உதவியைப் பயன்படுத்துகின்றன. இரானிய ஏவுகணைகள் பயன்பாடு உத்தி எவ்வாறு மாறியது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் என இரு தரப்புகள் மீதும் தனது ஏவுகணைகளை வீசி வருகிறது. இது முந்தைய போரிலிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தை மட்டுமே இரான் தாக்கியிருந்தது. அமெரிக்க கொள்கை ஆராய்ச்சி மையமான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் கீழ் இயங்கும் 'கிரிட்டிக்கல் த்ரெட்ஸ் ப்ராஜெக்ட்' தகவல்படி, போரின் முதல் நான்கு நாட்களில் இரான் சுமார் 36 முறை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. அதிகபட்சமாக முதல் நாளில் 20 முறை ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் ஒவ்வொரு முறையும் சராசரியாக இரண்டு முதல் மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தப் போக்கு இரண்டாம் நாளில் தலைகீழாக மாறியது. தினசரி ஏவுகணை வீச்சுகளின் எண்ணிக்கை இரண்டாம் நாளில் நான்காகவும், மூன்று மற்றும் நான்காம் நாட்களில் ஆறாகவும் குறைந்தது. அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளின் சராசரி எண்ணிக்கை இரண்டாம் நாளில் 9 முதல் 30 வரை அதிகரித்தது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவன , போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 4 வரை இரான் 128 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை காலை வரை நடந்த இந்தத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் வீரர்கள் யாரும் காயமடையவில்லை. இரான் தான் ஏவிய ஏவுகணைகளின் துல்லியமான எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், புரட்சிகர காவல் படையின் (பஸ்தரன்-இ-இன்கிலாப்) கூற்றுப்படி, போரின் ஐந்தாம் நாளான மார்ச் 4 மதியம் வரை, வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது 17 முறை ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலிய மதிப்பீடுகளின்படி, தற்போது நடந்து வரும் போர் மற்றும் முந்தைய போர்களின் போது இரான் தனது ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் பாதியை இழந்துவிட்டது. முக்கியமான அச்சுறுத்தல்கள் திட்ட (Critical Threats Project) உதவி இயக்குநர் நிக்கோலஸ் கார்ல் கருத்துப்படி, இது ஏவுகணை அலகுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலவீனப்படுத்தியுள்ளதுடன், அவற்றை இடைமறிப்பதையும் எளிதாக்கியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவும் குழுக்களை அவை ஏவப்படும் முன்போ அல்லது ஏவும் போதோ குறிவைப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இன்னும் எத்தனை ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது என்றாலும், அவை அதிகமாக இல்லை என்று கூறிய கார்ல், "இது இரான் ஒரே நேரத்தில் வீசக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறது"என்பதை குறிப்பிட்டார். இருப்பினும், அவரது கருத்துப்படி, இது இஸ்ரேலுக்கு இரானிய ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்காது. அதே சமயம், இந்தத் தாக்குதல்களைத் திறம்பட ஒருங்கிணைப்பது இரானுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் பட மூலாதாரம்,Fadel Senna/AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 1, 2026 அன்று துபாயில் நடந்ததாகக் கூறப்படும் இரானிய தாக்குதலுக்குப் பிறகு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகையைக் கடந்து செல்லும் மெட்ரோ ரயில். இரான் "வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள்" என்று தான் கருதும் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சகங்களின் தரவுகளின் அடிப்படையில், நான்கு நாட்களில் இரான் வளைகுடா நாடுகள் மீது 551 ஏவுகணைகளை வீசியுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய போரை விட அதிகமாகும்; அப்போது 12 நாட்களில் இஸ்ரேல் மீது இரான் சுமார் 500 ஏவுகணைகளை ஏவியிருந்தது. இந்த நாடுகள் இரானிய தாக்குதல்களைத் தங்களது "இறையாண்மை மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்" என்று கண்டித்துள்ளன, சிவிலியன் இலக்குகளும் குறிவைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஓமன் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இராக் மற்றும் சிரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் இதுவரை இரான் மீது எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜ்ஜீய அழுத்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? நிக்கோலஸ் கார்ல் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளைக் குறிவைக்கும் முடிவு, முந்தைய மோதல்களில் பயன்படுத்த பொருத்தமற்றதாக இருந்த ஆயுதங்களைப் பயன்படுத்த இரானுக்கு வாய்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், "இஸ்ரேலை சென்றடையக் கூடிய ஆயுதங்களை மட்டுமே இரான் பயன்படுத்தி வந்தது. இப்போது அது குறுகிய தூர ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும், அதாவது கடந்த ஆண்டு பயனின்றி இருந்த அனைத்து ஏவுதளங்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன" என்று அவர் கூறுகிறார். இரான் தொடர்ந்து 'ஷாஹெட்' டிரோன்களையும் பயன்படுத்தி வருகிறது. அதாவது, அது இன்னும் பல செயல்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது என்பது தான் இதன் பொருள். போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 86 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் தெரிவித்தார். அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த வீழ்ச்சி 23 சதவீதம் என்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய தாக்குதலால் பஹ்ரைனில் ஒரு கட்டடம் சேதமடைந்தது. டிரோன்களை அதிகமாக நம்பியிருக்கும் இரான் பிபிசி பகுப்பாய்வின்படி, வளைகுடா நாடுகளின் மீதான இரானின் தாக்குதல்களில் ஏவுகணைகளை விட டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 4-ஆம் தேதி பிற்பகல் வரை, வளைகுடா நாடுகள் மீது 1,493 டிரோன்களும் 551 ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 12 நாள் போரின் போது இஸ்ரேல் மீது இரான் செலுத்திய 1,100 ட்ரோன்களை விட அதிகமாகும். கார்ல் கருத்துப்படி, வளைகுடா நாடுகளை பின்வாங்கச் செய்வதன் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிப்பதே இரானின் உத்தியாக இருக்கலாம். அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் கூற்றுப்படி, போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானிய டிரோன் தாக்குதல்கள் 73 சதவீதம் குறைந்துள்ளன. தொடர்ந்து உற்பத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இரான் தனது கையிருப்பை பாதுகாக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இரான் தொடர்ந்து எவ்வளவு நாள் ஏவுகணைத் தாக்குதலை தொடர முடியும்? போருக்கு முன்பு இரான் வசம் சுமார் 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது. இரான் மாதத்திற்கு சுமார் 100 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகிறார். இந்த மதிப்பீடுகளைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியாது. கார்ல் கருத்துப்படி, இரானின் கையிருப்பு ஒரு கட்டத்தில் ஆபத்தான நிலைக்குக் குறையத் தொடங்கும், ஆனால் இது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம். இரான் தற்போதைய உத்தியைத் தொடரும், அதாவது இப்பிராந்தியத்தில் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கருதுகிறார். இதனைக் குறித்து விளக்கிய அவர், "தங்கள் ஏவுகணைகளில் பல எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்படும் என்பதை இரானியர்கள் அறிவார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் தங்கள் எதிரிகளின் இடைமறிப்பு ஏவுகணை கையிருப்பை குறைக்க அவர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் "வரம்பற்ற ஆயுதங்கள்" இருப்பதாகக் கூறுகிறார். அதே நேரத்தில் இரானின் பாதுகாப்பு அமைச்சகம் "அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் போராடும்" திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா இரண்டாயிரம் தாக்குதல்களை நடத்தியது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதல்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழி தாக்குதலை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா நிலம் மற்றும் கடல் வழியிலிருந்தும் ஏவுகணைகளை ஏவி வருகிறது. அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் கூற்றுப்படி, போரின் முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா 2,000 தாக்குதல்களை நடத்தியதுடன் 2,000-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மார்ச் 4 வரை 600 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய விமானப்படை மொத்தம் 5,000 குண்டுகளை வீசியுள்ளது. இரானிய செம்பிறை அமைப்பின் (ஹிலால்-இ அஹ்மர்) தகவல்படி, இந்தத் தாக்குதல்களில் 175 குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட 1,045 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் போரின் முதல் நாளில் மினாப்பில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையில் புரட்சிகர பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvelpxl9po- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது. மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது. இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம். மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.- ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது Mar 10, 2026 - 06:31 AM திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக CBS News மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmjwmasy0001356pg3l5w3zk- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு Mar 9, 2026 - 10:52 PM இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும். அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmjg7r44000i356pptfwqnv9- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து Mar 9, 2026 - 09:03 PM ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் எதிர்கொண்டுள்ள ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்பதை புடின் அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தனது தந்தை ஆரம்பித்த பணிகளை அவர் கௌரவமான முறையில் முன்னெடுத்துச் செல்வார் என தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmjcciry000e356p95zj5prq - ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.