stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வீதியோரம்.
இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.
- Today
-
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55670
-
இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு!
இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு! 19 Mar, 2026 | 01:06 PM இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர். இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241350
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://www.youtube.com/watch?v=WGLsM32b5gw&t=529s
-
நம்பிக்கையீனங்கள் உருவாதல்
நம்பிக்கையீனங்கள் உருவாதல் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடும் இருக்கிறது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான வழிகளைத் தேடுவதே இப்போதுள்ள நெருக்கடியாகிவிட்ட நிலைதான் காணப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகளால் அடிப்படையான பல விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது நினைவுக்குவராமல் போய்விடுகின்றன. இது வழமையானதே. அது காலங்கடத்தல்களுக்கே காரணமாகிப் போய்விடுகின்றன. அதில் ஒன்றுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம். இப் போராட்டம் ஆரம்பமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. தற்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கங்கள். ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது கோரிக்கைகளை தத்தமது வழிகளில் முன்வைப்பதிலேயே காலஙகடக்கிறது. அதேநேரத்தில் அச்சுறுத்தலான நெருக்கடிகளும் உருவாகாமலில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நான் சாகும் போதாவது என் சகோதரன் எனது தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி மரணமானார். 31 வருடங்களாக சிறையில் வாடும் கைதி ஒருவரின் குடும்பத்தின் நிலை அவ்வாறாக இருக்கிறது. அது போன்று பல கதைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சந்தேகங்களும், கவலைகளும் தினம் தினம் தமிழ் மக்களை ஆட்கொள்ளுகின்றன. அதே போன்று காணாமலாக்கப்பட்ட, இராணுவம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கேட்ட வண்ணமே பல உறவுகள் உயிரை விட்டவண்ணமிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்குஎதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ திரு;வு, நீதி வழங்கவோ முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்று வரை தோற்றுப்போயே இருக்கின்றன. மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயமே தமிழ் மக்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாற்றம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு சார் அச்சத்தினை கைவிட முடியாத நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதா என்ற கவலையையும் சேர்த்தே நகர வேண்டியும் உள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள், சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோரின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சருடைய இந்தக் கருத்தானது கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என நிராகரிக்கப்பட்ட, தற்போதைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு நடத்துவதற்கான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றனவற்றின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் காணப்படுகின்ற நிலையில் தான் அரசாங்கம் தமது இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பது இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிக்குக் கொண்டுவரப்பட்டாலும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், போன்றன முடிவுக்கு வரவில்லை. அத்துடன், தொடர்ச்சியாக பேசப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் போன்றவற்றிடம் தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்றவைகளாகவே இருந்தும் வருகின்றனர். இந்த நிலையில் இப்போதும் இவ்விவகாரங்களுக்கு சர்வதேச பொறிமுறையினால் எதுவும் நடைபெறாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுவதானது காலங்கடந்தும் ஞானம் கிடைக்காத தன்மையாகவே சொல்ல முடியும். அதே நேரத்தில், காணாமல் போனோர் விவகாரம் தனித்துவமானது. என்றும் அதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்த விடயங்களை தொடர்வதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதற்கப்பால் அவர்கள் கோருகின்ற சர்வதேச நீதி என்பதனை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது எனவும்கூறலாம். அதே நேரத்தில், நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது எனக் கூறும் அரசாங்கம் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்காமல் இருப்பதனை அவ்வாறே வைத்துக் கொண்டு நகர முயல்வதானது ஆபத்தான நிலைமையே. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து விட்டு அதனைவிட மோசமானதொரு சட்டத்தை உருவாக்குவதும், புதியட அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருத்து வெளியிடுவதும் பொருத்தப்பாடில்லாச் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன. இவையெல்லாம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை உணராமல் நகர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்புச் செயற்பாடு, வட கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தீர்வை வழங்காமல் காலத்தை வீணடித்தல் போன்றவைகள் நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தும் என்பதனைத் தவிர வேறொன்றில்லை. அந்தவகையில்தான், இலங்கையில் யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, இன அழிப்புகள் நடைபெற்றன, மனித குலத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றுக்கான பொறுப்புக்கூறல் அவசியம் தேவை என்பது தொக்குகிறது. அது மாத்திரமின்றி சர்வதேச வடிவமைப்புகளை மீறுவதாக ஒரு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புகுத்த நினைப்பதும் தவறானதாக இருக்கிறது. அவ்வேளையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை தண்டிக்கும் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதுடனேயே முடிவு கிடைக்கவே வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் நிச்சயம். இஸ்ரேல்- அமெரிக்காவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, ஈரான் நடத்தும் யுத்தம் முடியும் வரையில் காத்திருப்போம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையீனங்கள்-உருவாதல்/91-374144
-
வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
இலஞ்சம் வேலை செய்கிறதோ?!
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
உங்களுக்கு தெரியாத வட கொரியா உலகம் தொழில்நுட்பத்திலும் சுதந்திரத்திலும் உச்சத்தை தொட்டுள்ள இந்த யுகத்தில், இன்னும் ஒரேயொரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டு, வெளி உலகத்திலிருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடு தான் வட கொரியா. பெயரில் 'ஜனநாயகம்' என்று இருந்தாலும், அந்நாட்டு மக்கள் கிம் ஜொன் உன்-னின் கடுமையான ஆட்சியின் கீழ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கைதிகளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 1. தெய்வமாக வணங்கப்படும் "கிம்" குடும்பம் வட கொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும், பாடசாலையிலும், அலுவலகத்திலும் முன்னாள் தலைவர்களான கிம் இல் சுங் மற்றும் கிம் ஜொன் இல் ஆகியோரின் புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படங்களின் தூசியை துடைப்பதற்கு கூட ஒரு விசேட துணி இருக்க வேண்டும். ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அந்தப் புகைப்படங்களே முதலில் காப்பாற்றப்பட வேண்டும். தற்போதைய தலைவர் கிம் ஜொன் உன் "உன்னதத் தலைவர்" என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் கூட, அது மரண தண்டனை அல்லது மூன்று தலைமுறைகள் சிறையிலிருக்க வேண்டிய பாரதூரமான குற்றமாக கருதப்படுகிறது. 2. சொங்புன் முறை: பிறப்பிலேயே தீர்மானிக்கப்படும் விதி வட கொரியாவில் ஒரு நபரின் மதிப்பு அவரது திறமையால் அல்ல, மாறாக அவரது குடும்பம் அரசாங்கத்திற்கு காட்டும் விசுவாசத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே 'சொங்புன்' முறை என அழைக்கப்படுகிறது. விசுவாசமான வகுப்பு: அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு தலைநகரமான பியாங்யாங்கில் வசிக்கவும், நல்ல கல்வி மற்றும் உணவை பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்ப்பு வகுப்பு: அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள். இவர்களுக்குக் சிரமமான பகுதிகளில் கூலி வேலைகளும், கடுமையான ஒடுக்குமுறைகளும் மட்டுமே மிஞ்சும். 3. தொழில்நுட்பம் மற்றும் தகவல் தடை நமக்கு இணையம் (Internet) இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால், ஒரு சாதாரண வட கொரிய குடிமகனுக்கு இணையம் என்றால் என்னவென்றே தெரியாது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் "க்வான்ம்யோங்" (Kwangmyong) என்ற உள்நாட்டு வலையமைப்பு மட்டுமே அங்கு உண்டு. அதில் அரசாங்கத்தின் பிரச்சார செய்திகள் மட்டுமே இருக்கும். அவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு அழைக்க முடியாது. அனைத்து செய்திகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும். தென்கொரிய நாடகங்களையோ அல்லது ஹொலிவுட் திரைப்படங்களையோ பார்ப்பது ஒரு "புரட்சிக்கு எதிரான" குற்றமாகும். இதற்காக பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 4. குவான்லிசோ (Kwanliso): பூமியிலுள்ள நரகம் வட கொரியாவில் உள்ள அரசியல் சிறை முகாம்கள் உலகின் மிக கொடிய இடங்களாக கருதப்படுகின்றன. ஒருவர் தவறு செய்தால், அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட சிறையிலேயே பிறந்து சிறையிலேயே இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேலான கடின உழைப்பு, பட்டினி மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் அங்கு சாதாரணமானவை. பெரும்பாலான கைதிகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலேயே உயிரிழக்கின்றனர். 5. இருளில் மூழ்கிய தேசமும் பஞ்சமும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, சீனாவும் தென்கொரியாவும் ஒளியால் பிரகாசிக்கின்றன, ஆனால் வட கொரியா ஒரு கருந்துளை (Black hole) போலத் தெரியும். தலைநகருக்கு வெளியே உள்ள பல பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மேலும், 1990களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்றும் அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முறையான ஊட்டச்சத்து இன்றி வாழ்கின்றனர். இருப்பினும், அரசாங்கம் தனது நிதியை அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கவே செலவிடுகிறது . 6. தப்பிச் செல்வதில் உள்ள ஆபத்து இந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வது என்பது மரணத்தை வரவேற்பதற்கு சமம். பலர் சீன எல்லை வழியாக தப்ப முயல்கின்றனர். ஆனால் சீனாவில் பிடிபட்டால், அவர்கள் மீண்டும் வட கொரியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை காத்திருக்கும். தென்கொரியாவை அடைய முடிந்த ஒரு சிலரே தாங்கள் அனுபவித்த அந்த துயர கதைகளை கூறுகின்றனர். சுதந்திரமாக சுவாசிப்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துகின்றனர். வட கொரியாவை பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை, தகவல்களை அறியும் உரிமை மற்றும் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை ஆகியவை எவ்வளவு பெறுமதியானவை என்பது புரிகிறது. அரசியல் நிலைத்தன்மை என்ற பெயரில் மனித உரிமைகள் நசுக்கப்படும்போது, ஒரு நாடு எவ்வளவு பெரிய அதலபாதாளத்தில் விழும் என்பதற்கு வட கொரியாவே சிறந்த உதாரணம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உங்களுக்கு-தெரியாத-வட-கொரியா/91-374150
-
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம் Mar 19, 2026 - 12:12 PM இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் (Sturle Harald Pedersen) ஆகியோருக்கு இடையில் நேற்று (18) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, விவசாயத் துறைக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பல்வேறு வழிகளில் எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாக நோர்வே தூதரக அதிகாரி இதன்போது கருத்துக்களை முன்வைத்தார். காற்றுச் சக்தி, சூரியச் சக்தி மற்றும் கடலின் அலைச் சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர்கள் தயாரித்த திட்ட அறிக்கை ஒன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பகல் நேரங்களில் சூரிய சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட தூதரக அதிகாரி, அந்த மேலதிக சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரைப் மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விவசாயத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmx3o1gx000j356pb7d8yhxt
-
வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
சமூக வலைத்தள அவதூறு: மாணவன் மற்றும் தந்தை கைது – தாக்குதல் சம்பவம் பரபரப்பு adminMarch 17, 2026 பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு பரப்பிய மாணவனையும் காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூரிய ஆயுதங்களால் தாக்கிய மாணவனின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சாதாரண தர கணித பாடத்தில் சித்தி பெறாதமையால் , கணித பாடத்திற்கு தோற்றுவதற்காக சாதாரண தர கணித வகுப்பிற்காக தனியார் வகுப்பில் கல்வி கற்றுள்ளாா். அந்த கணித வகுப்பில் கற்கும் மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இரு மாணவிகளின் (profile) புகைப்படங்களை எடுத்து , மற்றுமொரு மாணவி தனது தாயாரின் தொலைபேசி இலக்கம் ஊடாகவே வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருந்தமையால் மாணவியின் தொலைபேசி இலக்கம் என மாணவியின் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து , இரு மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து , மாணவியின் தாயரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு , அந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போலி “ரிக் ரொக்” தளத்தில் பதிவிட்டுளளார். அதனால் மாணவியின் தாயாரின் இலக்கத்திற்கு பல தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான நோக்குடன் தொலைபேசி அழைப்புக்கள் வந்த நிலையில் , மாணவியின் மூத்த சகோதரன் அது தொடர்பில் விசாரித்த வேளை , ரிக் ரொக் தளம் ஒன்றில் இருந்தே இலக்கத்தை பெற்றதாகவும் , குறித்த தளத்தின் இணைப்பினையும் தொடர்பு கொண்டவர்கள் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் குறித்த ரிக் ரொக் தளம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அது தனது சகோதரியுடன் கணித வகுப்பில் கற்கும் மாணவனுடையது என்பதனையும் , மாணவன் வேலணை பகுதியை சேர்ந்தவர் என்பதனையும் கண்டறிந்து மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு சென்று மாணவனின் தகப்பனிடம் மாணவனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்து , மாணவனின் தொலைபேசியை பரிசீலித்த வேளை மாணவனே , அந்த ரிக் ரொக் தளத்தினை இயக்கி வருவதனை கண்டறிந்து தகப்பனிடம் காட்டி, மாணவனின் தொலைபேசியுடன் , காவல் நிலையத்திற்கு சென்று முறையிட போவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன் கூறிய வேளை , தந்தை அவர்களுடன் முரண்பட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கூட சென்றவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , ரிக் ரொக் தளத்தில் அவதூறு ஏற்படுத்திய மாணவனும் , தந்தையும் ஊர்காவற்துறை காவல் நிலையம் சென்று தனது மகனை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஊர்காவற்துறை காவல்துறையினா் மாணவனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவனை கைது செய்ததுடன் , ஏனையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையும் எடுத்து இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றில் மாணவனின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் முற்படுத்தினர். அதனை அடுத்து இளைஞனை நீதிமன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மாணவிகள் தொடர்பில் ரிக் ரொக் தளத்தில் பரப்பப்பட்ட தகவல் தொடர்பில் நியாயம் கேட்க சென்ற வேளை வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு , இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , விளக்கமறியலில் உள்ள இளைஞனுக்கு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து , பிணையில் இளைஞன் விடுவிக்கப்பட்டார். அதேவேளை , மாணவிகளின் புகைப்படத்தினை பயன்படுத்தி , மாணவி ஒருவரின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட்டு , ரிக் ரொக் தளத்தில் தவறான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் ஏன் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊர்காவற்துறைகாவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரிய வேளை , முறைப்பாடு அளிக்க சென்ற தம்மை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் காவல் நிலையத்தில் காவல் காக்க வைத்திருந்தும் முறைப்பாட்டை காவல்துறையினா் ஏற்காது , தவறான தகவல்களை பரப்பிய மாணவனின் தந்தையின் முறைப்பாட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றில் தெரிவித்தனர். அது தொடர்பில் சத்திய கடதாசி முடித்து தருமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மன்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் , பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் முறைப்பாடு செய்ய சென்ற வேளை இது சைபர் க்ரைம் பிரிவில் முறையிட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவினர் “ரிக் ரொக்” தளம் தொடர்பில் தாம் முறைப்பாட்டை ஏற்க மாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெப்ரவரி மாதம் இறுதியில் முறைப்பாடு செய்த நிலையில் , காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் மாணவனையும் அவரது தந்தையும் கைது செய்து, தந்தையை மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் , மாணவனை சமூக ஊடகத்தில் அவதூறு ஏற்படுத்தினார் என குற்றச்சாட்டின் கீழும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கினை விசாரித்த மன்று தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவன் 18 வயதினை பூர்த்தி செய்யாதமையால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு திகதியிட்டது. மாணவிகளின் புகைப்படங்களை தவறான நோக்குடன் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் அவதூறு தவறான தகவல்களை பகிர்ந்த மாணவனுக்கு எதிராகவும் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு நபர் ஒருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய மாணவனின் தந்தைக்கும் எதிராக முறைப்பாடு பதிவு செய்து சுமார் 20 நாட்களின் பின்னர் அவர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளமையும் சந்தேகநபர்கள் முன்னர் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக கைது நடவடிக்கையையும் மேற்கொண்டமை காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230611/
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
மாணவர்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. தேவையான சமய நுhல்களைத்தவிர எனைய பாடங்களுக்கான நுhல்களக் கொடுக்கலாமே. அது ஏன் வடமாகாணத்தின் அனைத்துப்பாடசாலைகளுக்கும் கொடுக்க வேண்டும்.அங்குள்ள மக்கள் மதவெறிபிடித்து சண்டை போடுகிறார்களா?இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு கொடுக்க முடியுமா?எனது கிராமத்தில் சைவசமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் நீண்ட காலமாக எந்தப் பிணக்குகளும் இல்லாமல் வாழுகிறார்கள்.சைவமக்கள் தங்கள் வீட்டுக்கருகில் கிறிஸ்தவப் பாடசாலைகள் இருந்தால் அங்குதான் சென்று கல்வி கற்கிறார்கள். அதே நேரம் கிறிஸ்தவ மக்கள் சைவப் பாடசாலைகளில் படிப்பது ஒப்பீட்டளவில் குறைவு. உயர்தரப்பாடசாலைகளில் இருசமயத்தவர்களும் படிக்கிறார்கள்.இல்லாத பிணக்கை ஏன் தேலையில்லாமல் உருவாக்குகிறார்கள்.
-
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ் adminMarch 18, 2026 கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவனாக இருந்தவன். போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது. மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது. ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து. இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும். இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன். ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால் அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230647/
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கான பைபிள் விநியோக சர்ச்சைகளுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி 19 Mar, 2026 | 10:40 AM வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241336
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
வடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை adminMarch 19, 2026 வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைகளுக்குள் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் நேரடியாகச் சென்று மத நூல்கள் விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பைபிள் வழங்க விரும்பும் அமைப்புகள், அதை நேரடியாக மாணவர்களுக்கு வழங்காமல் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர்: அந்த நூல்கள் கிறிஸ்தவ பாடம் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்வழங்கப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த நடவடிக்கை பள்ளி சூழலில் மத சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுடனும் சமநிலையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. https://globaltamilnews.net/2026/230657/
-
இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?
இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்? பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார். கட்டுரை தகவல் அமீர் அசிமி பிபிசி பாரசீக சேவை 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது. லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார். தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார். அவரது மரணம், ஒரு சில வாரங்களுக்குள் பல மூத்த இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு விரிவான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த முறைமை, போர்க்காலத்தில் இரானிய அரசுத் தலைமை அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியைக் காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், லரிஜானி பெரும்பாலும் இரான் நாட்டிற்குள் ஒரு யதார்த்தவாதியாக விவரிக்கப்பட்டார். அவர் சித்தாந்த விசுவாசத்தை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையுடன் இணைத்தார். பேச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட கணக்கிடப்பட்ட உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தார். மேற்கத்திய சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர் மிகுந்த சந்தேகத்துடனேயே இருந்தார், ஆனால் சீனாவுடனான இரானிய அரசின் நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு தூதராகச் செயல்படுவது உட்பட, முக்கிய ராஜ்ஜீய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் சுற்றில் கொல்லப்பட்ட இரானிய முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடன் லரிஜானி (இடமிருந்து நான்காவது) இருக்கும் படம். மூன்று முக்கிய பொறுப்பு அவரது மரணம் குறித்த செய்தி வந்த நேரத்தில், லரிஜானி மூன்று முக்கிய நெருக்கடிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். போர்தான் அதில் முதலாவது நெருக்கடி. இரான் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இரண்டாவது, உள்நாட்டு அமைதியின்மை ஆகும். இது பொருளாதார பிரச்னைகளுடன் தொடங்கியது. ஆனால் விரைவில் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த போராட்டங்களாக மாறியது. இவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்ற ஒடுக்குமுறையைச் சந்தித்தன. மூன்றாவது, இரானிய அரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் முடங்கிப்போயுள்ள அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆகும். இவை இரண்டுமே ராணுவத் தாக்குதல்களால் ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டிருந்தன. அவர் கொல்லப்பட்டது இந்த விவகாரங்களைத் தீர்க்கப்படாமல் விட்டுள்ளதுடன், மிகவும் பலவீனமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இன்னும் அறியப்படாத ஓர் அடுத்த தலைமைக்கு இவற்றை மாற்றுகிறது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைப்பதன் மூலம் இரான் ஓரளவு மீண்டு வரும் தன்மையைக் காட்டினாலும், அது தொடர்ச்சியான வான் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. எந்தவொரு புதிய மூத்த பிரமுகரும் உடனடியாக இலக்கு வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார். பட மூலாதாரம்,Getty Images எதை நோக்கி செல்லும்? இது அதிகாரத்தை ராணுவத்தை நோக்கி மேலும் நகர்த்தக்கூடும். அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்கள், மூத்த தலைமைச் செயலிழந்தால் நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான அதிகாரம் ஆயுதப்படைப் பிரிவுகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. நடைமுறையில், இது முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் குறிக்கலாம், ஆனால் குறைந்த மத்திய ஒருங்கிணைப்புடன் இருக்கும். அடுத்த தலைமைகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதில் தலைமை சிரமப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரானிய அரசு பொது அறிவிப்புகளைத் தாமதப்படுத்தியுள்ளதுடன், புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பெரும்பாலும் வெளி உலக கண்ணில் படாமல் வைத்துள்ளது. இது பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது உள் நிச்சயமற்ற தன்மையாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறுகிய காலத்தில், இதன் விளைவு மிகவும் நிலையற்ற ஒரு சூழ்நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போரில் கடினமான ராணுவ நிலைப்பாடு மற்றும் உள்நாட்டில் கடுமையான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் இருப்பினும், காலப்போக்கில், மூத்த தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வரும் ஓர் அமைப்பு, குறிப்பாக 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், திறம்படச் செயல்படுவது கடினமாக இருக்கும். லரிஜானியின் மரணம் ஒரு தனி தலைவரின் இழப்பு மட்டுமல்ல. இது போரின் போக்கு மற்றும் இரானிய அரசின் நிலைத்தன்மை ஆகிய இரண்டையுமே பாதிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவ நெருக்கடியை தீவிரப்படுத்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8gv84yklo
-
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
வலுசக்தி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும்! Published By: Digital Desk 1 19 Mar, 2026 | 07:42 AM (எம்.மனோசித்ரா) வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் தனது முதன்மைக் கடமையை வலுசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், ஒரு முக்கியமான தேசிய வலுசக்தி சொத்தை மேற்பார்வை செய்வதில் இத்தகைய பாரதூரமான அலட்சியம் காட்டியிருப்பது ஒரு அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பை மீறும் செயலாகும் என்றும் அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்தமைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் அவர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/241325
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரான் போர்: 200 பில்லியன் டொலர் நிதியை கோருகிறது பென்டகன் Mar 19, 2026 - 10:33 AM ஈரான் உடனான போர்ச் சூழலை எதிர்கொள்வதற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை அங்கீகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெள்ளை மாளிகையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை மேற்கொள் காட்டி நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தத் தொகையானது ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது போருக்காகப் பயன்படுத்தப்படும் தீர்மானமிக்க ஆயுதங்களின் உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதே இந்த நிதி கோரிக்கையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பென்டகன் பல்வேறு நிதி ஒதுக்கீட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், இந்த புதிய கோரிக்கையானது அமெரிக்க காங்கிரஸில் கடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmx01rwj000c356pfmduxs6h
-
நாட்டில் வேகமாக பரவும் காசநோய்! கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் அதிகளவானோர் அடையாளம்!
இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம் Mar 19, 2026 - 10:13 AM இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக சுகாதார விசேட நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார். மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: "உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் காசநோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டில் 8,726 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 93% பேர் முதன்முறையாக நோய் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களில் 75% பேருக்கு நுரையீரலில் காசநோய் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளனர். புவியியல் ரீதியாக மோதரை, மட்டக்குளி, பொரள்ளை, வனாத்தமுல்ல மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகள் அதிக அவதானம் மிக்க இடங்களாகக் காணப்படுகின்றன." இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தேசிய திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா கருத்து தெரிவிக்கையில்: "காசநோய் முக்கியமாக சுவாசப் பாதை வழியாகவே பரவுகிறது. நோயாளி ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பலமாக சிரிக்கும்போது வெளியேறும் பக்டீரியாக்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது. இது நுரையீரலைப் பாதித்து, பின்னர் உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடும். நோய் தீவிரமடைவதற்கு முன்னரே நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்." https://adaderanatamil.lk/news/cmmwzhcin000a356pa731yd8d
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்: ட்ரம்ப் கடும் விமர்சனம் Mar 19, 2026 - 10:16 AM ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் இந்த நடவடிக்கையே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது 'Truth Social' சமூக ஊடக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "மத்திய கிழக்கில் நடப்பவற்றால் கோபமடைந்துள்ள இஸ்ரேல், ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எனும் பிரம்மாண்ட எரிவாயு வயல் மீது வன்முறையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த முழு அமைப்பில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்கு மாத்திரமே இதனால் சேதம் ஏற்பட்டுள்ளது." "இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அத்துடன் கட்டார் தேசம் எந்த வகையிலும் இதில் தொடர்புபடவில்லை என்பதுடன், இவ்வாறான ஒன்று நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஈரான் இந்த உண்மைகளை அறியாமல் அநியாயமாக கட்டாரின் எல்.என்.ஜி (LNG) மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க 'தெற்கு பார்ஸ்' வயல் மீது இஸ்ரேல் இனிமேல் தாக்குதல்களை நடத்தாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwzk1xn000b356pusl4qu5l
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா? இதோ புதிய தீர்வு! Mar 19, 2026 - 09:33 AM வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டை மீளப் பெறும் போது, அந்தப் பதிவை மேற்கொண்ட கைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவரிடம் இருப்பதனால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் மாத்திரமே இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும். வாகனம் ஏற்கனவே வேறொரு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு 2026 மார்ச் 14க்கு முன்னதாக இருத்தல் வேண்டும்), உங்களிடமுள்ள சரியான தகவல்களை உள்ளிட்டு தற்போதுள்ள பதிவை ரத்து செய்து, உங்களது புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும். நீங்கள் 'Override' எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடனான புதிய கணக்கு உடனடியாகச் செயற்படுத்தப்படும். இந்தச் செயல்பாட்டின் மூலம் ஏற்கனவே இருந்த பதிவு ரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனருக்கு அந்த வாகனத்திற்காகக் கிடைத்த சலுகைகள் மற்றும் அணுகல் இல்லாது ஒழியும். இதன் மூலம் இதுவரை காலம் வேறு தரப்பினரிடமோ அல்லது பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களின் கீழே பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தடையின்றித் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். தமக்கு சட்டபூர்வமான உரிமை இல்லாத வேறொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் QR தரவுகளை நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmwx1p640009356pm3vad4g7
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை? - சவுதி வெளியுறவு அமைச்சர் Mar 19, 2026 - 08:16 AM சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஈரான் தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பதாக இளவரசர் பைசல் மேலும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதுடன், இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwv90lx0007356pcx5mi5am
-
விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!
விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்! Published By: Digital Desk 1 19 Mar, 2026 | 07:34 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பொலிஸாரால் அழைப்பு விடப்பட்ட மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இன்றையதினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று வியாழக்கிழமை (19) காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்புகளையும் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241324
-
RAW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே சமயம், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை குறித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆர்எஸ்எஸ்-ன் டெல்லி தலைமையகமான கேசவ் குஞ்சின் ஊடகப் பிரிவு பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை" என்று கூறியது. இது தொடர்பான பிபிசியின் கேள்விக்கு ஆர்எஸ்எஸ்-ன் இந்திய விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் பதிலளிக்கவில்லை. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகளை அதன் நீண்டகால ஒருதலைப்பட்சமான போக்கைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு ஏற்கனவே நிராகரித்துள்ளது. தற்போதைய அறிக்கையையும் நீண்டகாலமாகத் தொடரும் ஒருதலைப்பட்சமான போக்கின் ஒரு பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளதுடன், கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்புகளை இந்திய அரசு நிராகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-சை தடை செய்ய கோரிக்கை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (கோப்புப் படம்). தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' (சிபிசி- கண்ட்ரி ஆப்ஃ பர்டிகுலர் கன்சன்) என்று வகைப்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத் துறையை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான 'ரா' மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக மத சுதந்திர மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் முன்வைத்துள்ளதுடன், இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் மீது அமெரிக்கா இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மத சுதந்திர சீர்திருத்தங்களுடன் அமெரிக்கா இணைக்க வேண்டும் என்றும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், இவை பரிந்துரைகள் மட்டுமே அன்றி, அமெரிக்க வெளியுறவுத் துறையால் இவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் 2025 அக்டோபரில் நைஜீரியாவை கண்ட்ரி ஆப்ஃ பர்டிகுலர் கன்சன் பட்டியலில் சேர்த்தார் (கோப்புப் படம்) சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அல்லது யூஎஸ்சிஐஆர்எப்ஃ என்பது அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணையம் மற்றும் அரசு அமைப்பு ஆகும். சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் 1998-ஆம் ஆண்டில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும். ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது வருடாந்திர மத சுதந்திர அறிக்கையை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் மத சுதந்திரத்தை மேம்படுத்த அதிபர் , வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்றத்திற்குக் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது. மத சுதந்திரம் தொடர்பான மீறல்கள் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும், திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் நாடுகளை இந்த ஆணையம் கண்டறிகிறது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய நாடுகளை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள்' (சிபிசி) மற்றும் 'சிறப்பு கண்காணிப்புப் பட்டியல்' (எஸ்டபுள்யூஎல்) என வகைப்படுத்துகிறது. இந்த அறிக்கையில் இந்தியா தவிர, மியான்மர், கியூபா, சீனா, எரித்ரியா, இரான், நிகரகுவா, நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சௌதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சிபிசி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ஏற்கனவே டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சிபிசி பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த அக்டோபரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலம் நைஜீரியா மீண்டும் சிபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முறை இந்தியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க யுஎஸ்சிஐஆர்எஃப் பரிந்துரைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான இந்தப் பரிந்துரைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவைப் பற்றி அந்த அறிக்கை என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025-ஆம் ஆண்டில், "பல மாநிலங்களில் உள்ள இந்து தேசியவாதக் கும்பல்கள், தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் துன்புறுத்தின" என்று அந்த அறிக்கை கூறியது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து சீர்குலைந்துள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, இந்தியாவை சிபிசி பட்டியலில் சேர்க்க அது பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இலக்கு வைத்து இயற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய அரசு அகதிகளை வெளியேற்றி வருவதாகவும், இந்துத்துவா மற்றும் தேசியவாத அமைப்புகளால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள இந்துத்துவா குழுக்கள் சட்டத்திற்கு அஞ்சாமல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில் இந்து தேசியவாத கும்பல்கள் தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல், தூண்டுதல் மற்றும் வன்முறையை நிகழ்த்தியுள்ளன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "மார்ச் 2025-இல், 17-ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர இந்து தேசியவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) கோரியதை அடுத்து மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது. ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் குறிப்பிட்டு, "ஜூன் 2025-இல், ஒடிசாவில் இந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்தவ குடும்பங்களை இந்து தேசியவாத கும்பல் ஒன்று தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிடவில்லை. எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது" என்று அறிக்கை கூறுகிறது. "உத்தரபிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற இந்து தேசியவாத குழுவின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது". "மே 2025-இல், இந்திய அதிகாரிகள் 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்கியா அகதிகளைத் தடுத்து வைத்து, அவர்களை சர்வதேச கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, உயிர் காக்கும் அங்கிகளை மட்டுமே கொடுத்து பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்" என்று அறிக்கை கூறுகிறது. "ஜூலை 2025-இல், அசாமில் இருந்து வங்காள மொழி பேசும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய குடிமக்களாக இருந்தபோதிலும் அவர்களை இந்திய அதிகாரிகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்."என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறிப்பாக வக்ஃப் சட்டம் மற்றும் உத்தரகாண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதிகாரச் சட்டம் (யூஎஸ்ஏஎம்ஈ) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. புதிய வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதற்கிடையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே உத்தரகாண்டில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் மூலம், இஸ்லாமியர்களின் மதரஸாக்களுடன், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளின் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும். இந்திய அரசின் பதில் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க ஆணையம், இந்தியா பற்றிய 'திரிபுபடுத்தப்பட்ட மற்றும் ஒருதலைப்பட்சமான' சித்திரத்தை முன்வைப்பதில் பிடிவாதமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார். இந்த அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளதுடன், இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பற்றிய ஒரு 'திரிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட' சித்திரத்தை முன்வைப்பதில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பிடிவாதமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கை உறுதியான உண்மைகளின் அடிப்படையில் அமையாமல், சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய தொடர்ச்சியான தவறுகள் அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையின் மீதே கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவிற்குள் நடக்கும் தீவிரமான நிகழ்வுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது பதிலில் இந்தியா கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் இந்திய சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்," என்றார். அரசியல் கட்சிகளின் எதிர்வினை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"அரசியலமைப்புக்கு விரோதமான, மனு ஸ்மிருதியின்படி நாட்டை ஆள வேண்டும் என வாதிடும் ஆர்.எஸ்.எஸ், நாட்டின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷமாகும்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. "மக்களின் மத சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தலாக உள்ளது என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும்" என்று காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், "ஆர்எஸ்எஸ் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று அப்பதிவு குறிப்பிட்டது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் தடை விதித்திருந்தார் என்பதையும் காங்கிரஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. "மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கக் கூடிய, அரசியலமைப்புக்கு எதிரான ஆர்எஸ்எஸ், நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு விஷம் போன்றது" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸின் கருத்துக்குப் பதிலளித்த மத்திய அமைச்சரும், பிஹார் முன்னாள் முதலமைச்சருமான ஜித்தன் ராம் மாஞ்சி, "அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி அல்லது அதற்குப் பின்னராக இருந்தாலும் சரி, ஆர்எஸ்எஸ் தனக்கென தனி இடத்தைப் பெற்று நேர்மறையான பணிகளைச் செய்து வருகிறது. அமைப்பு கெட்டது அல்ல, சில நபர்களே கெட்டவர்கள். அந்த நபர் தான் தடை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3090839e6jo
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக - சிபிஎம் கூட்டணி இழுபறிக்கு காரணமான 'ஓர் இடம்' - அடுத்து என்ன? பட மூலாதாரம்,X/MK Stalin கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. "அதே ஆறு இடங்களைப் பெறுவதற்கு நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்," என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். ஆனால், "ஆறு தொகுதிக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால் தி.மு.க கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. 'இந்தமுறை அதே எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும்,' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. புதன்கிழமையன்று தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பட மூலாதாரம்,Veerapandiyan படக்குறிப்பு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். 'போராடினோம்... கிடைக்கவில்லை' "ஓர் இடம் குறைவதைப் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏழை எளிய மக்களுக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தால் போதும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்திருப்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், "அவரே கூறும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்." என்கிறார். தொகுதிப் பங்கீட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "6 + 1 என்ற கணக்கில் தொகுதிகளை ஒதுக்குமாறு கூறினோம். அதற்காக நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை." எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin "தொகுதிகளைக் குறைப்பதற்கு தி.மு.க நிர்பந்தம் கொடுத்ததா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த மு.வீரபாண்டியன், "ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. இதைப் பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் பேசினார்கள்." என்கிறார். "கட்டளையிடும் தொனியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவில்லை" எனக் கூறும் அவர், "சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கடந்து சென்றிருப்போம்." எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே அளவு இடங்களை ஒதுக்கும் முடிவில் தி.மு.க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்குமுறை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க நடத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "சுமூகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்." எனக் கூறினார். "கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்" எனவும் பெ.சண்முகம் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin '5 தொகுதிகளை ஏற்க மாட்டோம்' - கனகராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து, "ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து செயல்படுகின்றனர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்கிறார் அவர். தொடர்ந்து பேசும்போது, "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓர் எண்ணைக் கூறுகின்றனர். நாங்கள் ஓர் எண்ணைக் கூறியுள்ளோம். கூடுதல் தொகுதி குறித்து எந்த விவரங்களையும் அவர்கள் கூறவில்லை." எனக் கூறுகிறார். கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கொடுப்பதாக தி.மு.க கூறுவதாகக் குறிப்பிடும் கனகராஜ், "அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தரப்பில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற முடிவை கூறிவிட்டோம். தி.மு.க தான் தெரிவிக்க வேண்டும்." என்கிறார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, "தி.மு.க தரப்பில் இருந்து அழைத்தால் பேசுவோம். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்." என்கிறார் அவர். இதே கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ஒவ்வொரு கட்சியும் அவரவர் பலத்துக்கேற்ப தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. எங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்." எனக் கூறினார். பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,Shyam படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "இதுபோன்ற முரண்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தி.மு.கவிடம் முன்வைத்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளிடையே சற்று வருத்தம் இருக்கும். ஆனால், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அவை மறைந்துவிடும்" எனக் கூறுகிறார். "கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியும் இல்லை. தி.மு.க ஒதுக்கியுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கான சவாலாக இருக்கும்." என அவர் குறிப்பிட்டார். திமுக கூறுவது என்ன? "தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளை குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருகிறது" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். "தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும்" எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பது பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன," எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0d0kqq8r5o
-
சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு Mar 19, 2026 - 07:54 AM உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் இயற்கை எரிவாயு விலையும் 6% ஆல் அதிகரித்துள்ளது. ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயலுக்குச் சொந்தமான பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த விலை உயர்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டாரின் ராஸ் லாஃபான் தொழில் மண்டலமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இவ்வாறு திடீரென உயர்ந்த போதிலும், இந்த மோதல் காலத்தில் பதிவான உச்சகட்ட விலையை விட இவை இன்னும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. இதற்கு முன்னர் மார்ச் 9 ஆம் திகதி மசகு எண்ணெய் விலை 116.78 டொலர்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmwuhbtg0004356pfttivv7z