Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு Published By: Digital Desk 3 17 Feb, 2026 | 02:39 PM கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை பதவியேற்றனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களைத் தவிர, தெரிவுசெய்யப்பட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 297 இடங்களில் 209 இடங்களை பங்களாதேஷ் தேசியவாத கட்சி வென்றது. இன்றைய தினம் பிற்பகலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளது. https://www.virakesari.lk/article/238860
  3. “இம்ரான் கானுக்கு மருத்துவ உதவிகளை உறுதி செய்யுங்கள்” - முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் (கோப்புப் படம்) பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14 முன்னாள் கேப்டன்கள் கூட்டாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்கள் க்ரெக் சேப்பல் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரும் இதில் அடங்குவர். “எல்லைக் கோட்டைக் கடந்த நியாயமான விளையாட்டு, கௌரவம் மற்றும் மரியாதையின் மதிப்பை புரிந்துகொள்ளும் சக கிரிக்கெட்டர்களான நாங்கள், இம்ரான் கானைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவர், முன்னாள் தேசிய தலைவருக்கும் உலக விளையாட்டு பிரபலமத்துக்கும் உரிய கண்ணியத்துடனும் அடிப்படை மனித கருணையுடன் நடத்தப்பட வேண்டும்.” “இம்ரான் கானுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து உடனடி, போதுமான மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை அவருக்கு கிடைப்பதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A1e8f4bbf-df2f-4542-b384-1e1ec70e0d26#asset:1e8f4bbf-df2f-4542-b384-1e1ec70e0d26
  4. யாழில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை - ஒருவர் கைது: இருவர் தலைமறைவு யாழில் (Jaffna) காணி பிணக்கு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவம் நேற்று (16.02.2026) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில்தெரிய வருவதாவது, குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மாலைவேளை தனது தோட்டக்காணிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த வீட்டு நபர்கள் காணி பிரச்சனை தொடர்பில் முரண்பட்டுள்ளனர். முரண்பாடு முற்றிய நிலையில் மண் வெட்டியால் குறித்த நபர் மீது தாக்கியதில் பிடரி பகுதியில் குருதி வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட கொலையாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/man-beaten-to-death-in-jaffna-one-arrested-1771295940
  5. 'கடவுளின் மடியில்...' : ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை - ஆஸ்திரேலிய கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 17 பிப்ரவரி 2026, 06:28 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. இதன்மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியைத் தோற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுக்க, அதை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. தொடக்க வீரர் நிசங்கா 52 பந்துகளில் சதமடித்து இலங்கை அணிக்கு மிகமுக்கிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 2007 முதல் நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 12 முறை மட்டுமே சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. 11 வீரர்களே அந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது நிசங்காவும் இணைந்திருக்கிறார். நிசங்காவும் சரி, இலங்கையும் சரி... முதல் பந்து முதல் இலக்கை எட்டும் வரை மிகவும் நேர்த்தியாக இந்த சேஸை எதிர்கொண்டனர். பெரிய 'ரிஸ்க்' ஏதும் எடுக்கவில்லை. அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டனர். களத்தில் பனியின் தாக்கம் இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் ஆரம்பத்திலிருந்தே தேவைப்படும் ரன்ரேட்டுக்கு அருகிலேயே பயணித்தது இலங்கை அணி. விக்கெட்டுகளும் கையில் இருந்ததால் எந்த இடத்திலும் இலங்கை அணி நெருக்கடியை உணராமல் சேஸ் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் நிசங்கா நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேவிடம் தோற்றது ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்று, ஆஸ்திரேலியா ஓமனையும், ஜிம்பாப்வே அயர்லாந்தையும் வென்றால் ஜிம்பாப்வே vs இலங்கை போட்டி நாக் அவுட் போல ஆகிவிடும். அந்தப் போட்டியின் வென்றாலும் ரன்ரேட் முக்கியம் என்ற நிலை வந்திருக்கக்கூடும். அப்படியொரு நிலையில் தான் இந்தப் போட்டிக்குள் கால் வைத்தது இலங்கை அணி. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தவர்களுக்கு முதல் ஓவரே கவலை தந்தது - 16 ரன்கள். இரண்டாவது ஓவரில் 9 ரன்கள். அதற்கடுத்து ஓவரிலோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். முக்கியமான ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கெதிராக இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவோ ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் டார்கெட் செய்து அடித்தது. பவர்பிளே முடிவிலேயே ஆஸ்திரேலியா 70 ரன்கள் எடுத்துவிட்டது. 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் அந்த அணி 97 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அவர்களின் ரன்ரேட் 12.12 ஆக இருந்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்திருந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்படியொரு நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்ததால், அதன்பிறகு கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கூப்பர் கானலி என அதிரடி வீரர்கள் நிறைந்திருந்ததால் அவர்கள் நிச்சயம் 220 - 230 ரன்களுக்கு மேலேயே எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் பார்ட்னர்ஷிப் 8.3 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்தது ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸுக்கு 9-வது ஓவர் ஒரு வேகத்தடையாக அமைந்தது. அந்த ஓவருக்குப் பிறகு இலங்கை அணி ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தது. ஹேமந்தா வீசிய ஒன்பதாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய கேமரூன் கிரீன் அந்த அதிரடியைத் தொடர நினைத்தார். ஆனால், அது அவருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பாதகமாக முடிந்தது. இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள முனைந்த அவர், சில தருணங்களில் கிரீஸுக்கு வெளியே வந்தும் பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டார். ஹேமந்தா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ஸ்டம்பிங் அப்பீலை எதிர்கொண்டார். ஆனால், கிரீன் அந்த முறை தப்பிவிட்டார். ஆனால், டுனித் வெல்லாலகே வீசிய அடுத்த ஓவரில் அவரால் தப்பிக்க முடியவில்லை. பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் இறங்கி வந்து அடிக்க முற்பட, அந்தப் பந்து நன்கு வெளியே செல்ல, கிரீனால் அதை அடிக்க முடியவில்லை. பந்தை சட்டென்று பிடித்து ஸ்டம்பிங் செய்து கிரீனை வெளியேற்றினார் குசல் மெண்டிஸ். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது இலங்கைக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. 11-வது ஓவரில் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார் ஹேமந்தா. நன்றாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மிட்செல் மார்ஷ், அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே புதிய பேட்டர் இங்லிஸை அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பிங் செய்வதற்கான வாய்ப்பை இம்முறை குசல் மெண்டிஸ் தவறவிட்டார். இப்படி தொடர்ச்சியாக அதிரடி மட்டுமே காட்டுவது என்ற மனநிலையில் வந்தது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. அதேநேரத்தில், நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி இலங்கை பௌலர்கள் விக்கெட்டுகளை சாய்த்தனர். 13-வது ஓவரில் பந்துவீச வந்த கமிந்து மெண்டிஸ், டிம் டேவிட்டை வெளியேற்ற ஆஸ்திரேலியா 130/4 என்ற நிலைக்கு வந்தது. 9 முதல் 13 வரையிலான ஐந்து ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 12.12 என்றிருந்த ரன்ரேட் 10.07 ஆகக் குறைந்தது. அதன்பிறகு மேக்ஸ்வெல் மற்றும் இங்லிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினாலும், அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்தவோ இல்லை அதே ரன்ரேட்டை தொடரவோ முடியவில்லை. களத்தில் பாய்ந்து மேக்ஸ்வெல் கேட்சை பிடித்து அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தார் நிசங்கா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிளென் மேக்ஸ்வெல் கேட்ச்சை பாய்ந்து பிடித்த நிசங்கா ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் கடைசி கட்டத்திலும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இப்படி உத்வேகமாக முதல் இன்னிங்ஸை முடித்த இலங்கை அணி, அதே உத்வேகத்தோடு பேட்டிங் செய்து வெற்றியையும் வசப்படுத்தியது. இதன் மூலம் பி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது. "கடவுளின் மடியில்" இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அணி 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. இனி ஓமன் உடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களால் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதனால், ஜிம்பாப்வே அணி அடுத்த இரு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே அவர்கள் சூப்பர் 8 வாய்ப்பு பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அப்போதும் கூட ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 3 அணிகளில் எந்த அணிக்கு நல்ல ரன்ரேட் இருக்கிறதோ, அந்த அணியே அடுத்து சுற்றுக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலியா தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், "இலங்கை அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தை ஒப்பிடும்போது குறைவான ஸ்கோரே எடுத்தோம். நாங்கள் இப்போது கடவுளின் மடியில் இருக்கிறோம். டிரஸ்ஸிங் ரூமில் பல உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அயர்லாந்து, ஜிம்பாப்வே போட்டியை நம்பிக்கையுடன் பார்ப்போம்" என்று கூறினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kgj8w9r71o
  6. க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்; விசேட தேவையுடைய மாணவர்கள், கைதிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:16 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 451 463 பேர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். மேலும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு பிரத்தியே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும், 33 பிரதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைகளுக்காக பாடசாலை ஊடாக 382 249 பரீட்சாத்திகளும், தனிப்பட்ட ரீதியில் 69 214 பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். முப்படை மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்நிலையிலுள்ளன. சகல விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சாத்திகளை கேட்டுக் கொள்கின்றோம். கடந்த ஆண்டுகளை விட இம்முறை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நேர அட்டவணை கடந்த ஆண்டுகளை விட வித்தியாசமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. காலையில் 8.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனவே பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 1 மணித்தியாலத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட எவ்வித இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும். இவை இல்லாதவர்கள் தமது இரு புகைப்படங்களை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்தி அதனை தற்காலிய அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். விசேட தேவையுடைய பரீட்சாத்திகளுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, கைதடி நவீல் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை என்பவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள பரீட்சாத்திகளுக்காக வட்டரொக்க சுனீத வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238843
  7. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம். சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.
  8. ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி Feb 17, 2026 - 05:18 PM சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார், இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf
  9. Today
  10. சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
  11. போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.
  12. விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்டு இருக்கு.................இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளிக‌ள்....................
  13. ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டும் போல‌ தெரியுது.................
  14. இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் இந்த‌ விளையாட்டு முத‌ல் த‌ட‌வை த‌டை ப‌ட்டு இருக்கு.........................
  15. ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்....................... ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்.......................
  16. அவுஸ்ரேலியா வெளிய‌ என்று நேற்றே தெரிந்து விட்ட‌து ந‌ண்பா ஹா ஹா................. உவ‌ங்க‌ள் சூப்ப‌ர்8க்கு போவாங்க‌ள் என்று தெரிவு செய்தேன் பெரிய‌ ஆப்பு அவுஸ்ச‌ தெரிவு செய்த‌வைக்கு ஹா ஹா ஹா😄😛...............
  17. ஆறு மணிக்கு பிறகு கடும் மழை பெய்ய கூடுமென வானிலை அறிக்கை சொல்கிறது! அப்போ ஆஸ்திரேலியா அம்போவா!!
  18. அந்த‌க் குண்ட‌ன் முந்தி ந‌ல்லா அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்புவார் இப்ப‌ அவ‌ரின் விளையாட்டு முந்தின‌ மாதிரி இல்லை ந‌ண்பா அவ‌ர் விளையாடாம‌ல் தான் அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235ர‌ன்ஸ் அடிச்ச‌வை.................சிம்ப‌வே அணியின் ப‌ந்து வீச்சு அருமையோ அருமை.............................................
  19. இன்று அயர்லாந்து வெல்ல கூடிய வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அணித்தலைவர் ஸ்டெர்லிங் காயம் காரணமாக விளையாடமாட்டார் போலுள்ளது!!
  20. தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் கோப்பை வெல்ல‌ வில்லை இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வெல்ல‌னும் ம‌ழை விட்டாப் பிற‌க்கும் போட்டி ந‌ட‌ந்தால் சிம்பாவே அய‌ர்லாந்தை தோக்க‌டிக்கும் அதோட‌ அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாட்டுக்கு திரும்ப‌ ச‌ரி.......................
  21. செயற்கை நுண்ணறிவிடம் திம்பு கோட்பாடுகள் எவை என்று கேட்டபோது : திம்பு கோட்பாடுகள் – 4 அடிப்படை முன்வைப்புகள் தமிழர் ஒரு தனித்த இனமாக அங்கீகாரம் பெறுதல் (Recognition of the Tamils of Sri Lanka as a distinct nationality) வடகிழக்கு பகுதிகள் தமிழர் தாயகமாக அங்கீகாரம் பெறுதல் (Recognition of the existence of a traditional homeland for the Tamils in the North and East) தமிழர் தன்னாட்சியுரிமை (Self-determination) பெறுதல் (Recognition of the right of self-determination of the Tamil nation) இலங்கையில் வாழும் அனைத்து தமிழருக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்படுதல் (Recognition of full citizenship and other fundamental democratic rights of all Tamils who look upon the island as their country) இவற்றில் மூன்றாவதான 'தமிழர் தன்னாட்சியுரிமை' என்பதைச் சிங்களவர் ஒருபோதும் தரப் போவதில்லை என்று நினைக்கிறேன். குறைந்தபட்சத் தீர்வு ஒன்று வேண்டுமானால் இதற்கு மாற்றீடாகத் தமிழர்களுக்கு மேலதிக உரிமைகள் கிடைக்கத்தக்கவாறு வேறு கோரிக்கைகளை முன்வைக்கலாம். இல்லாவிட்டால் சரணாகதி அரசியலை மேலும் பல தசாப்தங்களுக்குத் தொடர வேண்டி வரும்.
  22. ப‌ல‌ விளையாட்டில் கோப்பை வென்றால் அத்த‌னை வீர‌ர்க‌ளும் கோப்பைக்கு முத்த‌ம் கொடுப்பின‌ம் கால்ப‌ந்து வாஸ்கேட்போல் கைப‌ந்து ம‌ற்றும் ப‌ல‌ விளையாட்டில் இந்த‌ மூதேவி திமிரில் கோப்பைக்கு மேல‌ த‌ன்ர‌ கால‌ போட்டு இருக்குது.......................கோப்பைக்கு இருக்கும் ம‌ரியாதையே போச்சு................2023ம் ஆண்டு இந்த‌ப் ப‌ட‌ம் பெரிய‌ ச‌ர்ச்சையில் முடிந்த‌து..................................
  23. கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂. இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂. மழை அவுசின் உலக கோப்பை கனவுகளை….சுத்தமாக கழுவி, கழுவி ஊத்திவிடும் போல இருக்கு😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.