stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
2026 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விவரம்- தமிழக வீரர்கள் யார் யார்? 21 Dec 2025, 12:52 AM 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும். இந்தியா, இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்திய அணி வீரர்கள்: கேப்டன்: சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மா சஞ்சு சாம்சன் திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் துபே அக்சர் படேல் ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ராணா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பங்கு பெறும் அணிகள்: குரூப் A: இந்தியா நமீபியா நெதர்லாந்து பாகிஸ்தான் அமெரிக்கா குரூப் B: ஆஸ்திரேலியா அயர்லாந்து ஓமன் இலங்கை ஜிம்பாப்வே குரூப் C: வங்கதேசம் இங்கிலாந்து இத்தாலி நேபாளம். மேற்கிந்தியத் தீவுகள் குரூப் D: ஆப்கானிஸ்தான் கனடா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவும் இலங்கையும் போட்டி நடத்தும் நாடுகள் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடர்ல் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ICC T20 உலகக் கோப்பை – சாம்பியன் பட்டியல் வரிசை நாடு / அணி மொத்த வெற்றிகள் வெற்றி பெற்ற ஆண்டுகள் 1 இந்தியா 2 முறை 2007, 2024 2 மேற்கிந்தியத் தீவுகள் 2 முறை 2012, 2016 3 இங்கிலாந்து 2 முறை 2010, 2022 4 பாகிஸ்தான் 1 முறை 2009 5 இலங்கை 1 முறை 2014 6 ஆஸ்திரேலியா 1 முறை 2021 https://minnambalam.com/2026-icc-mens-t20-world-cup-indian-team-squad-details/
-
வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்
97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்- இன்று திமுக மா.செ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை 21 Dec 2025, 7:19 AM தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை SIR- இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கம், மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது. https://minnambalam.com/97-37-lakh-voters-deleted-cm-stalin-to-hold-consultation-with-dmk-district-secretaries-today/
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
கொஞ்சம் மாற்றங்கள் உள்ள இன்னோர் அலசல்.. தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை - நிலாந்தன் “சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல். அதாவது 2009 மே மாதத்துக்கு முன். இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது. எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு. இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு. இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை, ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை. கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை. கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது. அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை. 2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான், தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை. எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக, எழுச்சியாக, கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை. ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது. முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது. தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்; தீக்குளித்தது தமிழகம்தான். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது. இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார். இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது. சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது. அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும், இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில், தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். https://www.nillanthan.com/8024/
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
-
கருத்துப்படம் 09.10.2025
-
கருத்துப்படம் 07.10.2025
-
கருத்துப்படம் 04.10.2025
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
-
ஒரு பயணமும் சில கதைகளும் 18.09.2025
-
கருத்துப்படம் 13.09.2025
-
கருத்துப்படம் 11.09.2025
- Today
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை அழிக்காமல் விகாரமகாதேவி பூங்கா மாதிரி மாற்றலாம்.. ஆனால் மரங்களுக்குக் கீழே குடைக்குள் குலாவும் நிலையை உருவாக்கக்கூடாது!- இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார்கள். துணைத் தூதரைச் சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்கள். கடல் தொழிலாளர்களின் போராட்டத்தில் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர் இந்தியாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். புயலுக்குப்பின் முதலில் உதவிய நாடும் அதிகம் உதவிய நாடும் இந்தியா என்ற அடிப்படையில் இந்திய உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்கள். இந்த இரண்டு சம்பவங்களினதும் பின்னணியில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் மீனவர்கள் விவகாரமும் உட்பட இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கப் போகும் “எக்கிய ராஜ்ய” இடைக்கால வரைவை எதிர்ப்பது முதலான பல விடயங்களை குறித்தும் தமிழகத் தலைவர்களோடு பேசியதாகத் தெரிய வருகிறது. தமிழ்த் தேசிய பேரவையின் இந்திய விஜயம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த பின்னணியில், மற்றொரு செய்தியும் கிடைத்தது. தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக அச்செய்தி தெரிவிக்கின்றது. கிடைக்கப்பெறும் தகவல்கள்படி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பவர்களின் பட்டியலில் சுமந்திரனின் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்தச் சந்திப்பின் நோக்கம் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக வைக்குமாறு அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்பதுதான் என்று தெரிய வருகிறது. அமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத ஈபிடிபியும் உட்பட தமிழ்க் கட்சிகள் அந்தக் கருத்துக்கு எதிரான விதத்தில் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி உழைப்பதைத்தான் மேற்படி செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு புதுடில்லி அல்லது தமிழகம் தேவை என்று தமிழ்க் கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது.அதுதான் உண்மையும் கூட. இந்த உண்மையை கடந்த 16 ஆண்டுகளாகவும் அதற்கு முன்னரும் எடுத்துக் கூறிய அரசியல் விமர்சகர்களையும் நோக்கர்களையும் ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் கேவலமாக விமர்சித்தன. அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்றும் இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப்படுகிறவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் சம்பளம் வாங்குகின்றவர்கள் என்றும் விமர்சித்தன. அவர்கள் சோற்றுக்காகத்தான் அப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்று மீம்ஸ்கள் போடப்பட்டன.இதனால் அந்த விமர்சகர்களின் சிலர் மனம் நொந்து பொது வெளியிலிருந்தே விலகி நின்றார்கள். இறுதிக்கட்டப் போரில் அப்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசாங்கம் ஈழத் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவதையும் ஆயுதப் போராட்டம் நசுக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.திமுக நினைத்திருந்திருந்தால் இறுதிக்கட்ட போரின் முடிவை மாட்டியிருந்திருக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு. தமிழகம் தன்னியல்பாக எழுச்சி பெற்ற போது அந்தப் பேரெழுச்சியை திமுக மடைமாற்றி வடியச் செய்துவிட்டது என்றும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு பகுதியினர் திமுகவுக்கு எதிராக சீமானை நோக்கிப் போனார்கள்.இன்னொரு பகுதியினர் பாரதிய ஜனதாவை நோக்கிப் போனார்கள். சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும் காங்கிரஸ் தொடர்பாகவும் குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தொடர்பாகவும் எழுதப்படும் விமர்சனங்களைப் பார்த்தால் ஈழத் தமிழர்கலீல் ஒரு பகுதியினர் எந்த அளவுக்கு திமுகவின் மீது கோபமாக,வெறுப்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும். திமுகவின் மீதான தமிழ் மக்களின் கோபத்தை சீமான் சிறப்பாக அறுவடை செய்தார். 2009க்கு பின் தன்னை ஈழப் போராட்டத்தின் உரித்துள்ள வாரிசாக காட்டிக்கொண்டார்.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை நிபந்தனையின்றி ஆதரித்தார்கள்.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிப்பது தமிழகத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்த ஒரு பின்னணியில், சீமான் துணிந்து விடுதலைப்புகளின் சின்னங்களையும் படங்களையும் முன்வைத்து அரசியல் செய்தார்.இதனால் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை அதிக எதிர்பார்ப்போடு பார்த்தார்கள். சீமான் தன்னுடைய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழகத்தின் உள்நாட்டு அரசியலுக்குள் ஒரு கருவியாக உபயோகிக்கிறார். 2009 க்குப் பின்னரான உளவியலின் பின்னணியில்,அவர் தமிழ்;திராவிடம் இரண்டையும் எதிரெதிர் நிலையில் வைத்து அரசியல் செய்கிறார். உள்ளூரில் தனது அரசியல் எதிரிகளை மடக்குவதற்கு அவர் தமிழீழ விடுதலை போராட்டத்தோடு தனக்குள்ள தொடர்பை ஒரு கவசமாக முன்வைக்கின்றார். இதனால் சீமானுக்கு விழும் அடி பல சமயங்களில் ஈழப் போராட்டத்திற்கும் விழுகிறது. எனினும் சீமானின் நாம் தமிழர் கட்சியானது இப்பொழுதும் ஒரு மாற்று நீரோட்ட கட்சியாகத்தான் காணப்படுகிறது.அது தமிழகத்தின் பெருந்திரள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும், தீர்மானிக்கும் பிரதான நீரோட்டக் கட்சியாக இன்றுவரை எழுச்சி பெறவில்லை.அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக வெகுஜனங்களை ஒன்று திரட்டி பெருந்திரளாகப் போராட வைப்பதற்கு சீமானால் கடந்த 16 ஆண்டுகளிலும் முடியவில்லை. திராவிடக் கட்சிகளும் அந்த விடயத்தில் ஆர்வமாக இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொதிக்காத,கொந்தளிக்காத ஒரு நிலைதான் தொடர்ந்து காணப்படுகிறது.இப்படிப்பட்டதோர் தமிழகச் சூழலில்தான் தமிழ்த்தேசியப் பேரவை அண்மையில் தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது. இந்தியாவைக் கையாள வேண்டும்,மத்திய அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழகத்தை நொதிக்கச் செய்யவேண்டும் என்று கூறியவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,ரோவின் கையாட்கள் என்றெல்லாம் விமர்சித்த ஒரு கட்சி,கிட்டதட்ட 16 ஆண்டுகளின்பின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இதனால் கடந்த 16 ஆண்டுகளிலும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்வைத்த அனைத்து விமர்சனங்களும் இப்பொழுது பூமரங் ஆக அவர்களை நோக்கித் திரும்பி வருகின்றன. தமிழ்நாட்டுக்குச் செல்வது என்று தமிழ்த் தேசிய பேரவை எடுத்த முடிவு காலத்தால் பிந்தியது. இந்தியாவை கையாள்வது என்று அவர்கள் எப்பொழுதோ முடிவெடுத்து இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தியாவிடம் சரணடைவதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதோ அல்ல. இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் சந்திக்கும் பொதுப் புள்ளிகளை அடையாளம் கண்டு அந்த இடத்தில் பேரம் பேசுவது. அதாவது ஓர் அரசைப் போல சிந்திப்பது;முடிவெடுப்பது;செயல்படுவது.ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அதைக் கடந்த 16 ஆண்டுகளிலும் செய்திருக்கவில்லை. இப்பொழுதும் கூட கட்சிகளுக்கு இடையில் உள்ள போட்டிகள் காரணமாக ஒரு கூட்டு தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.இன்னொரு கூட்டு இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றிருக்கிறது. இங்கேயும் தமிழ் மக்கள் ஓர் அரசு போல முடிவெடுக்கவில்லை.ஒரு கூட்டு “எக்கியராஜ்ய” வேண்டாம் என்று கூறுகிறது. இன்னொரு கூட்டு,மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று கேட்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இருந்து இரண்டு விதமான கோரிக்கைகள் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி முன்வைக்கப்படும் போது இந்தியா எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்? தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை எப்படி தனது நோக்கு நிலையில் இருந்து கையாளலாம் என்று சிந்திக்கலாம்தானே? இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு பேரரசும் அப்படித்தான் சிந்திக்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் நலன்களின் அடிப்படையிலானவை.நிச்சயமாக அன்பு,பாசம்,அறம்,தொப்புள் கொடி உறவு…போன்றவற்றின் அடிப்படையிலானவை அல்ல.ஈழத் தமிழர்கள் வெளி அரசுகளோடு இடையூடாடும் போதும் இதுதான் விதி.இந்த விதியின் அடிப்படையில்தான் இனி மேலும் அரசியல் செய்யலாம். https://athavannews.com/2025/1456862- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
உங்களுடைய சுத்துமாத்து சுமந்திரன்... இப்படியான போராட்டங்களில் கலந்து கொள்ளாமல், எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றார்? இதற்குள்... வட மாகாண முதலமைச்சராகும் ஆசையும் இருப்பது கேவலம்.- வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார். எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது. வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர். வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல. ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல. ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது. கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார். சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது. இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன. ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன. https://www.nillanthan.com/8018/- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
சுத்துமாத்து சுமந்திரனும், நாமல் ராஜ பக்சவும்... ஒரே சட்டக் கல்லூரியில் படித்து, பின் கதவால் பாஸ் பண்ணிய ஆட்கள் போலுள்ளது. 😂 ஒரு வழக்கை தாக்கல் செய்வது எப்படி, அதனை வாதாடுவது எப்படி என்று தெரியாத சுத்துமாத்து சுமந்திரனுக்கு... அப்புக்காத்து வேலையும் சரிவராது. 🤣 நீதிமன்றம் கொடுத்த செருப்படியின் பின்னராவது.. சுமந்திரன் சட்டப் புத்தகங்களை வடிவாக மீண்டும் மீண்டும் திரும்ப வாசிக்கவும்.- கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 05 அத்தியாயம் 5 - சிகிரியா மட்டக்களப்பில் இருந்து கண்டிக்கு நேரடியாக போகலாம் என்றாலும், கொஞ்சம் சுற்றி சிகிரியாவுக் கூடாக போக முடிவு செய்தார்கள். அவர்கள் சாலை வெயிலில் ஒளிர்ந்த புல்வெளிகளையும் வயல்களையும் மற்றும் காடுகளையும், நகரங்களையும் தாண்டி "சிங்கப் பாறை" என்று அழைக்கப்படும் மலைக்குச் சென்றனர். காடு நடுவே அதிசயமாக உயர்ந்து நிற்கும் அந்தப் பெரும் பாறையை பார்த்தபோது, ஆரனும் அனலியும் தாம் ஒரு தொன்மையின் நிழலில் நிற்பதாக உணர்ந்தனர். 'காசியப்பன் மன்னரால் (கி.பி 477 - 495) தனது புதிய தலைநகருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் இந்த சிகிரியா. அவர் தனது அரண்மனையை இந்த பாறையின் மேல் கட்டினார் மற்றும் அதன் பக்கங்களை வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரித்தார். இந்தப் பாறையின் பக்கவாட்டில் ஒரு சிறிய பீடபூமியில் அவர் ஒரு பெரிய சிங்கத்தின் வடிவத்தில் ஒரு நுழைவாயிலைக் கட்டினார். இந்த அமைப்பிலிருந்து இந்த இடத்தின் பெயர் சிங்ககிரி அல்லது சிங்கப் பாறை எனப்பட்டது' என்று அனலி ஒரு வரலாறு உரைத்தாள். “இது தான் காசியப்பனின் பேராசை, புராணமாக மாறிய இடம்,” என்று ஆரன் மெதுவாகச் சொன்னான். அனலி புன்னகைத்தாள். “அதில் தான் காதலும் கலையும், அந்த இரண்டும் ஒன்றாக நிலையானதாக மாறின. இலங்கையில் காணப்படும் ஒரே மதச்சார்பற்ற ஓவியங்கள் இந்த சிகிரியாவின் புகழ்பெற்ற கன்னிப்பெண்கள் [The famous Maidens of Sigiriya] ஓவியம் மட்டுமே என்று கூறப்படுகிறது” என்றாள். அவர்கள் மேலே ஏறிச் செல்ல செல்ல, காற்று வரலாற்றின் நெடிய சுவாசத்தால் நிறைந்தது. இருபுறமும் வளைந்த பாறை வழிகள், குகைகளின் அடியில் சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள். அவர்களின் கண்கள் உயிர்ப்புடன், ஆனால் முகத்தில் அமைதி தெரிந்தது. “சிகிரியா அழகிகள்…” என்று ஆரன் கிசுகிசுத்தான். “அவள் கண்களில் உயிர் இருக்கிறது போல.” அனலி சொன்னாள், “அவைகள் தமிழும் சம்ஸ்கிருதமும் சேர்ந்த அப்சரஸ்களின் [அரம்பையர் / தெய்வீக நங்கையர்] சின்னம். அவளின் ஆபரணங்கள், தாமரை மாலைகள் — சங்க இலக்கியங்களிலும் காணலாம். அழகின் மரபு எல்லையற்றது.” " அது சரி, ஆனால் இங்கு ஏதாவது தமிழர் தொடர்பு இருக்கா?" ஆரன் கேட்டான். பாதி உயரத்தில் கொஞ்சம் இளைப்பாறிய போது, அவர்கள் கீழே உள்ள காட்டில் உள்ள மரங்களின் மேல் கிளைகளின் பசுமையை நோக்கினார்கள். தொலைவில் கோவிலின் மணிசப்தம் அப்பொழுது கேட்டது. "கே எம் சண்டிமால், எஸ் ஜி யசவர்தீன் & ஆர் ஜே இல்லெபெருமா (2019, இலங்கை உடற்கூறியல் இதழ்) / K M Chandimal, S G Yasawrdene & R J Illeperuma (2019, Sri Lanka Anatomy Journal) ஆகியோர் செய்த ஆய்வு இதற்கு ஒரு பதில் கூறுகிறது. இந்த ஆய்வு சிகிரியாவைச் சுற்றியுள்ள பழைய மக்கள் தொகை குழுக்களின் இழைமணி டிஎன்ஏ (analysed mitochondrial DNA of old-population groups around Sigiriya / mtDNA) -க்களின் பகுப்பாய்வு செய்து, அவர்கள் தாய்வழி ரீதியாக மற்ற இலங்கையர்களை விட இலங்கைத் தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்தது." என்றாள் அனலி, " அது தான் சிகிரியாவிற்கு ஊடாக வந்தோம்" என்றாள். " மேலும் இது அங்கு, இலங்கையின் மத்திய பகுதியிலும் கூட தமிழர்கள் வாழ்ந்ததை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்றாள். "ஆமாம், அரசுகள் உருவாகும் காலத்திலேயே வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் கலந்திருந்தார்கள் போல் தெரிகிறது , அப்படியானால், இக்கற்கள் சிங்களமோ தமிழோ அல்ல; இவை இரண்டும் சேர்ந்தவை. நம் பழமையான இலங்கை, தமிழும் சிங்களமும் கலந்தது என்பது மீண்டும் உறுதியாகிறது” என்றான் ஆரன். அனலி தலையசைத்தாள். “ஆமாம், இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் [Moggallana] தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை [சைனர்] இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்து அரசைக் கைப்பற்றினான் என்பது வரலாறு. அந்த தமிழ் படை வீரர்கள் இங்கு தான் பின் இருந்திருப்பார்கள். இவனுக்கும் இவனின் தந்தைக்கும் முன்பு இருபத்தி ஆறு ஆண்டுகாலம் ஆறு தமிழர்கள் இங்கு ஆண்டார்கள் என்பதும் வரலாறு. அதற்கு முன்பும் கூட இப்படி உண்டு. நம் வரலாறு அரசியலைவிட ஆழமான பின்னிப்பிணைப்பு.” என்றாள். அவர்கள் ‘மிரர் வால் / mirror wall’ எனப்படும் கண்ணாடிச் சுவரை அடைந்தபோது, ஆரன் அதில் எழுதப்பட்ட ஒரு பழம்பெரும் வரியை வாசித்தான்: “தங்க நிற மங்கையரை கண்டவன், தன் இதயத்தில் ஒளிர்கிறான் — வானில் சூரியன் ஒளிர்வது போல்.” [“The one who saw the golden-coloured maidens Shines in his heart like the sun in the sky.”] கண்ணாடி சுவர் கல்வெட்டுகள் தோராயமாக கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும் "இந்தக் கல்வெட்டுகள் முழுமையாக வளர்ந்த நவீன சிங்கள மொழியில் இல்லை, ஆனால் ஆரம்பகால அல்லது ப்ரோட்டோ - சிங்கள மொழியில் உள்ளன - சில சமயங்களில் "சிங்கள பிராகிருதம்" அல்லது "எலு" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மொழி பாலி - பிராகிருதம் வேர்களிலிருந்து உருவானது, சமஸ்கிருதம் மற்றும் முந்தைய திராவிட தொடர்புகளின் (குறிப்பாக தமிழ்) செல்வாக்கால் ஆகும். சில வசனங்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதற்கான பதிவுகளும் உள்ளன, இருப்பினும் பல முழுமையாகப் படிக்க முடியாத நிலையில் உள்ளன. இந்த பன்மொழி கல்வெட்டுகள் சிகிரியாவில் கலாச்சார கலவையை நிரூபிக்கின்றன." என்றாள் அனலி. அவர்கள் இருவரும் கல்லைத் தொட்டனர்; கண்ணாடியில் அவர்களின் பிரதிபலிப்பு இணைந்தது. காலத்தைத் தாண்டிய காதலர்களின் நிழல்கள் அங்கே கலந்தது. குளங்கள், தோட்டங்கள், நீர் பாதைகள் எல்லாம் சூரிய ஒளியில் மின்னியது. “அவன் நினைவில் நிலைக்க இதை கட்டியிருக்கலாம்,” என்றான் ஆரன். “அல்லது மன்னிப்புக்காக,” என்றாள், பின் “ஒவ்வொரு கட்டிடக்காரனும் நித்தியத்தை விரும்புவான்; ஆனால் நிலைப்பது கல் மற்றும் அமைதியே.” என்று முடித்தாள். அதன் பின் இருவரும் தங்கள் கைகள் பிணைத்தபடி அமைதியாக அங்கிருந்து இறங்கினர் — அவர்களின் மனம் வியப்பும் துயரமும் கலந்து காணப்பட்டது. அப்பொழுது அந்தி நேரம். காற்று பழங்காலத்தின் சுவாசம் போல மெல்ல அடித்தது. ஆரன் மெதுவாகக் கூறினான் — “இந்தக் கற்கள் இன்னும் பேசுகிறதா, அனலி?” அனலி சிரித்தாள். “பேசும், ஆரன். ஆனால் அதை கேட்க காதல் உள்ளம் வேண்டும்.” என்றாள். பின் அவள் சிகிரியா குன்றின் நிழலில் கைகளை இணைத்து மெதுவாகப் பாடினாள் — சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் இதயம் உன் பெயரையே உச்சரிக்குது நிலவொளி சுவர்களைத் தொடும் போது உன் மூச்சே என்னைத் தொடுகுது! ஆரன் அவளைப் பார்த்தான்; அவனது கண்களில் ஒரு ஒளி கலந்த அமைதி. அவன் பதிலளித்தான் — குன்று எதிர்பார்த்த தங்க நிற மங்கையே குட்டி அரவணைப்பு ஒன்று தாராயோ நிழலில் தீட்டிய சிற்பத்தில் ஒரு பார்வையைக் கண்டேன் அந்தப் பார்வையில் நான் உன்னையே ரசித்தேன்! காற்று மீண்டும் வீசியது. நிழல்கள் நீளத்துடன் பரவின. அனலி இரவின் குளிரை உணர்ந்தாள், ஆனால் அவளது இதயத்தில் ஒரு தீயொளி எரிந்தது. அவள் மெதுவாகச் சொன்னாள் — சிகிரியாவின் தென்றல் எமது சபதத்தை சுமக்கிறது காடுகளைக் கடந்து எமது இதயத்தை குளிர்விக்குது வரலாற்றாசிரியர்கள் சிங்கப் பாறை பற்றி எழுதட்டும் கண்ணாடிச் சுவரின் வரியில் காதலை நாம் எழுதுவோம்! அந்த மாலை, சிகிரியா சூரியன் அவர்களுக்கு மறையவில்லை — அது அவர்கள் இருவரின் இதயங்களிலும் உதயமானது! அதன் பின் அடுத்த நாள் அங்கிருந்து கண்டி புறப்பட்டனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் துளி/DROP: 1947 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/32931852276463328/?- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
- கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்! இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நேற்றும் இன்றும் காற்றின் தரத்தில் சரிவு காணப்பட்டதாகவும், காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை இருப்பதாகவும் அவர் கூறினார். எல்லைகளுக்கு இடையே காற்று சுழற்சி ஏற்படுவதாலும், வடகிழக்கு பருவமழை செயல்படுத்தப்படுவதாலும் இந்த நிலைமை ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தக் காலகட்டத்தில் இந்த நிலைமை காணப்படுவதாகவும், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் நாட்டின் காற்றின் தரக் குறியீட்டையோ அல்லது வேறு எந்த நிலையையோ தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. காற்றின் தரம் குறைவினால் பாதிப்படையக் கூடிய நபர்கள், உடனடியாக மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சையைப் பெற வேண்டும். எனினும், இன்றைய தினத்திற்குப் பின்னர் இந்த நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர். https://athavannews.com/2025/1456918- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (21) காலை அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவியது. இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. https://athavannews.com/2025/1456885- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டி கமே, அபே கமே!- டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!
டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்! இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்கள் நுழைவழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற வேளை ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் நுழைவு என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார். இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் இரத்தம் வழிந்தது. முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முறைப்பாடு அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். https://athavannews.com/2025/1456836- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன? பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம். பிகு இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?- வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா! வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை சனிக்கிழமை (20) தடுத்து நிறுத்தின. தென் அமெரிக்க நாட்டிற்குள் வந்து வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களையும் முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நிலையில் இரண்டாவது எண்ணெய்க் கப்பல் சனிக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெனிசுலாவில் இறுதியாக நிறுத்தப்பட்டிருந்த செஞ்சுரியஸ் (Centuries) என்ற எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடலோர காவல்படை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியதாக வொஷிங்டனின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று குறித்த கப்பலில் பணியாளர்களுடன் தரையிறக்கும் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். எனினும், பனாமாவின் கொடியின் கீழ் இயங்கும் அந்தக் கப்பல், அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1456871- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ? ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார். குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது: வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53411- 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து
13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து 21 Dec, 2025 | 09:20 AM (நமது நிருபர்) 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன். இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும். பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன். தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார். https://www.virakesari.lk/article/233967- புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்
புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள் 21 Dec, 2025 | 09:26 AM (நா.தனுஜா) நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம். அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம். அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம். எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/233968- காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! 21 Dec, 2025 | 12:58 PM வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; https://www.virakesari.lk/article/234005- கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்
கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல் 21 December 2025 2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41,575,585 ஆக உள்ளது. இந்தநிலையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்பொழுது தான், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன https://hirunews.lk/tm/436880/canada-in-crackdown-19000-people-deported-so-far-in-2025- நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு 21 December 2025 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். நாட்டிற்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. https://hirunews.lk/tm/436883/s-jaishankar-to-arrive-in-sri-lanka-tomorrow-important-meeting-with-the-president- 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன
36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஈரவலயத்தின் பல இடங்களை அண்டி 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 25-50 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், கிடைத்த மழையின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என பொறியியலாளர் குறிப்பிட்டார். அத்துடன் மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி நீர் மட்டம் உயர் நிலையில் காணப்பட்டாலும் அதுவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஏனைய நீர்நிலைகளை அண்டி மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படும் அளவிற்கு நீர் மட்டங்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjf3u29102ypo29n4225nb7n - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.