Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. PhilipSchneider joined the community
  3. சுப்பர் ஓவர்ஸுக்கு போகாமல் வெல்லவேண்டிய மட்ச். தேவையில்லாத ரண் அவுட்!
  4. எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்தினார். மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது. அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இதவேளை ஐக்கிய நாடுகள், பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1464329
  5. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அறிவியல் உலகை ஆள்கிறார் என லூசுதனமாய் பேஸ்புக்கில் எழுதபடும் பிஸ்கோத்து தகவல்களை இப்படித்தான் நாறடிக்க வேண்டும். இல்லை என்றால் நிஜமாக சாதிக்கும் தமிழரின் சாதனைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். கீழே மித்திலாவின் வேலையிட புரோபைலை தந்துள்ளேன். அவர் ஒரு சாதராண முனைவர்தான். அப்படி ஒன்றும் அரிய சாதனை நிகழ்தியதாக அதில் இல்லை. தமிழன் என்பதால் பிஎச்டி எடுப்பது, மருத்தடிக்கும் விமான லைன்சன்ஸ், ரோட்டு கூட்டு இயந்திர லைசன்ஸ் எடுப்பதை எல்லாம் சாதனை என கொண்டாடுவதும், ஏனையோரும் அதை ஏற்க வேண்டும் என நினைப்பதும் மடமை. இவற்றை எல்லாம் ஒரு அமேசன் பழங்குடியில் செய்யதால் அதன் முதன் முயற்சி பாராட்டலாம், ஈழதமிழரில் அல்ல. https://profiles.sydney.edu.au/mehala.balamurali
  6. ஓம் போன‌ வ‌ருட‌மே ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் இதுவ‌ரை 17 ஜ‌பிஎல் மைச்சில் விளையாடி இருக்கிறார்................இவ‌ர் ந‌ட‌ந்து முடிந்த‌ விக்வாஸ் தொட‌ரிலும் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌வ‌ர்.........ந‌ல்ல‌ வீர‌ர்.................இவ‌ரின் கைய் அசைவு வித்தியாச‌ம்...........................
  7. Today
  8. நாத‌ன் எலிஸ் இர‌ண்டு விக்கேட் எடுத்து விட்டார் இவ‌ர் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்...........................
  9. பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர் 11 Feb, 2026 | 02:46 PM ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார். சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் சோல்பொன் மம்பெடோவா (Ms. Cholpon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238385
  10. கொழும்பு மைதான‌த்துக்கு 182 ந‌ல்ல‌ ஸ்கோர்..............அய‌ர்லாந்தின் தோல்வி உறுதி.......................
  11. ஜ‌பிஎல் ஒரு குப்பை.............. இல‌ங்கை வீர‌ர் மதிச‌ ப‌த்திரானாவை சென்னை க‌ல‌ட்டி விட‌ , கே கே ஆர் அவ‌ரை வேண்டி இருக்கின‌ம் ஜ‌பிஎல்ல‌ விளையாடும் வீர‌ர்க‌ள் எல்லாரும் உல‌கில் சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் கிடையாது.................. 80வித‌ம் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ 20வித‌ம் சுத‌ப்ப‌ல் வீர‌ர்க‌ளும் ஜ‌பிஎல்ல‌ விளையாடுகின‌ம்................... உந்த‌ ஜ‌பிஎல்லால் தான் ப‌ல‌ வீர‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து சீக்கிரமே ஓய்வை அறிவிக்கின‌ம்.............எல்லாம் ப‌ண‌த்துக்காக‌..............................
  12. மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ; தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவு ; இதுவரை 28 பேர் பலி ; பாடசாலைகளில் முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு 11 Feb, 2026 | 02:39 PM மெக்சிகோ நாட்டின் பல நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தட்டம்மை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஜாலிஸ்கோ மாநிலத்தில் குவாடலஜாராவில் பகுதியில் இதுவரை 1,245 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மெக்சிகோ நாடு முழுவதும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பாடசாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238387
  13. திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்! 11 Feb, 2026 | 11:40 AM திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (11) காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். https://www.virakesari.lk/article/238368
  14. மன்னாரில் சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்களாக உள்ளன - அமைச்சர் பிமல் ரத்நாயக்க Published By: Vishnu 11 Feb, 2026 | 05:13 AM மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்னாரில் இருந்து இலவன் குளம் ஊடாக புத்தளம் செல்லும் பாதை தொடர்பாக சர்ச்சை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் . அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் . இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/238359
  15. ஐபிஎல் 2026 இல் இவரை வேண்டாம் என்று KKR அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
  16. நாளொன்றுக்கு 100 புற்றுநோயாளர்கள்; 40 பேர் உயிரிழப்பு - பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி 10 Feb, 2026 | 04:48 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238330
  17. அவுஸ்ரேலியா எப்ப‌டியும் 175ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது............... சிமித் திற‌மையான‌ வீர‌ர் ந‌ட‌ந்து முடிந்த‌ விக்வாஸ் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடி செஞ்சேரி அடித்தார்.............................
  18. அவுஸ்திரேலியா அணித்தலைவர் மார்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்ஸ் தொடரில் விளையாடாத சந்தர்ப்பம் வந்தால் அவருக்கு பதிலாக மாற்று துடுப்பாட்ட வீரர் தேவை என்பதினால் ஸ்டீவன் ஸ்மித் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.
  19. இன்று வெஸ்சின்டிஸ் அணி வென்ற‌ல் ப‌ரிட்சையில் மீண்டும் பாஸ் ஆக‌லாம் ஹா ஹா..................................
  20. அவுஸ்ரேலியா அய‌ர்லாந் விளையாட்டு போயிட்டு இருக்கு..............விளையாட்டில் பெரிய‌ விறுவிறுப்பு இல்லை ஹா ஹா😛😁.....................
  21. அப்பாகிஸ்தான் அணி மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு விளையாட்டை விளையாடி விட்டு நாடு திரும்ப‌ச் ச‌ரி....................அந்த‌க் குருப்பில் நியுசிலாந் முத‌ல் இட‌த்தை பிடிக்க‌க் கூடும்..............
  22. ஓம் நாகரத்தினமேதான். எனக்கு தெரிந்த நாகரத்தினம் எண்டா அது எங்கட நக்கத் மட்டும்தான்😀
  23. அப்கானிஸ்தான் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் சிமிபின‌ல் வ‌ரை வ‌ந்து தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌து............இப்போது ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் சூப்ப‌ர் ஓவ‌ர் வ‌ரை வ‌ந்து தோல்வி அடைந்து விட்டின‌ம் குறுகிய‌ கால‌த்தில் கிரிக்கேட்டில் வ‌ள‌ந்த‌ அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி தான்.......................
  24. ராஜா பாதி ரஹ்மான் பாதி…90s teenager 😀 ஆப்கானிஸ்தான் குர்பாசை முதல்ல அனுப்பி இருக்கலாம்.
  25. ஒரு தமிழனை நல்லாய் பாராட்டிறதை ஏன் தாக்கி பேகிறீர்கள்…. போதாதற்கு உங்களுக்கு வக்காத்திற்கு கோஷான் ஒரு கோசம் ….
  26. அருமையான விளையாட்டு ...... எனக்கு தோல்விதான் .........போகட்டும் .......! 🥲
  27. தொட‌ர்ந்து மூன்று சிக்ஸ் ப‌ய‌த்தை காட்டி விட்டார்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.