Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
  3. இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும். நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.
  4. Today
  5. நீங்க‌ள் அவுஸ்ரேலியாவையும் தெரிவு செய்தீங்கள‌ சூப்ப‌ர்8க்கு..........................
  6. 🤣............... இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣. பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣. சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.
  7. இந்த‌ வெள்ளிக் கிழ‌மையோட‌ ஆரம்ப‌ சுற்றுப் போட்டி முடியுது................அதுக்கு பிற‌க்கு சூப்ப‌ர்8 சூப்ப‌ர்8க்கு நான் தெரிவு செய்த‌ அணிக‌ளில் அவுஸ்ரேலியாவை த‌விற‌ ம‌ற்ற‌ அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போய் விட்டின‌ம்.............நாளை பாக்கிஸ்தானும் போய் விடுவின‌ம் ஆன‌ ப‌டியால் அவுஸ்ரேலியா ப‌ல‌ருக்கு ஆப்பு வைத்து விட்ட‌து............................
  8. கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉
  9. கேள்வித்தாள் முதலே அவுட் ஆனது போல, முழு வகுப்புமே ஒரே பதில்களையே எழுதியிருக்கின்றதே................... நான் எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் போது மரவேலை என்று ஒரு பாடத்தை ஹாட்லியில் அறிமுகப்படுத்தினார்கள். வல்வை சிதம்பரக் கல்லூரியில் ஏற்கனவே இந்தப் பாடம் பல வருடங்களாக ஒரு திறமையான ஆசிரியரால் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருக்கு மாணவர்கள் 'ஒட்டப்பா' என்று ஒரு செல்லப் பெயரும் வைத்திருந்தார்கள். உடைந்த எதையும் சரி செய்து விடக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதால் போல. முதலாவது மரவேலை தேர்வில் என்று நினைக்கின்றேன். சிதம்பரக் கல்லூரியில் மரவேலை பாடத்திற்கான பரீட்சை ஒரு நாள் முந்தி நடந்துவிட்டது. ஒட்டப்பா அவர்கள் தயாரித்த அதே கேள்வித்தாளே அடுத்த நாள் ஹாட்லியிலும் வரப் போகின்றது என்றார்கள். வல்வெட்டித்துறையிலிருந்து வரும் மாணவர்கள் எல்லோரும், நான் உட்பட, கேள்விகள் பதில்கள் எல்லாவற்றையும் இரவிரவாக பாடமாக்கினோம். அடுத்த நாள் அதே கேள்வித்தாளே வந்தது..................🤣.
  10. இதென்ன எல்லாரும் சேர்ந்து ஒரே மாதிரி.... அப்பிடி நடக்கக் கூடாதே.
  11. நாளைக்கு போத்தி மூடிட்டு ப‌டுக்கிற‌து வெட்ட‌ர்😄😛..................
  12. நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா?
  13. அடங்கப்பா ...இன்றைக்கும் நாமதானா....கிருபன்சார் ...நன்றி
  14. எதிர்த்து வாக்களித்த அந்த இருவரும் யார், எந்தக் கட்சி என அறிய ஆவலாக உள்ளது.
  15. கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ! பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள். 1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை). 2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி). 3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி). 4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்). 5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி). 6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி). 7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்). ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்). 9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி). 10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்). 11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்). 13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்). 14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி). 15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்). 16) ஆதி கணபதி(பல் வைத்தியர்). 17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்). 18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்). 19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்). 21) சுரேஷ்(spicyland உரிமையாளர்). 22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்). 23) பாலா(கணக்காளர்). 24) செந்தில்(மின்னல்). 25) பாபு(பாபு உணவகம்). பெயர் பட்டியல் தொடரும் ............. https://www.ilankainet.com/2019/02/25.html
  16. மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமையவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வற்காகவோ அல்லது பிரபல்யமடைவதற்காகவோ பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை கொண்டு வரவில்லை. இந்த சட்டம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் இந்த சட்டம் ஐந்து திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் விரும்பிய ஓய்வூதியத்தை தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்தால் அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனை மாற்றியமைக்க கூடாதா, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் தான் சிறந்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும். ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு விடயமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/238908 ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது - தயாசிறி ஜயசேகர 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், சிறப்புரிமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 2024.12.02 ஆம் திகதியன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சித்ரசிறி அறிக்கையை அரசாங்கம் முழுமையாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில் முழு உள்ளடக்கத்தை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க போவதில்லை என்று ஜனாதிபதி உட்பட 159 உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று அனைவரும் சுகபோகமாக வாழ்கிறார்கள். அனைவருக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 159 பேர் தற்போது பொது போக்குவரத்து சேவையையா, பயன்படுத்துகிறார்கள். அனைவரும் ஏதாவதொரு வழியில் ஊழல் செய்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 55 ஆயிரம் ரூபா அளவில் தான் சம்பளம் கிடைக்கப்பெறுகிறது. அவ்வாறாயின் மாதாந்தம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபா ஓய்வூதிய கொடுப்பனவே கிடைக்கப்பெறும். பெரும்பாலானவர்கள் எவ்வித தொழிலும் இல்லாமல் இந்த கொடுப்பனவை நம்பியே வாழ்கிறார்கள். பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது. தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களின் மாத சம்பளம், அக்கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றார். https://www.virakesari.lk/article/238909
  17. ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அமைச்சர் ஆனந்த விஜேபால 17 Feb, 2026 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடாக இலங்கை இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 'வளமான நாடு அழகான வாழ்க்கை' கொள்கைத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பிரதானமாக பொருளாதார ஸ்திரத் தன்மையை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம். அதனுடன் அரசியல் கலாச்சார மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் சிறப்புரிமைகளும் இருந்தன. ஊழல் மிக்க அரசியலும், ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் இருந்தனர். ஊழல் மோசடிகளை தடுக்கவே பாராளுமனற் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். ஆனால் இந்த ஓய்வூதியம் மூலம் எந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது விசாரணைகள் நடக்கின்றன. எதுவும் இடையில் நிறுத்தப்படாது. சிலரின் வீடுகளில் இராணுவத்தினர் நாய்களை பராமறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தளவுக்கு சிறப்புரிமையை மீறி பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறப்புரிமை வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதிர்காலத்தில் இதற்காக மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு செயற்படலாம். ஆனால் எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே நாங்கள் செயற்படுகின்றோம். இது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியவாறு அதனை செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் எதிர்க்கட்சிக்கு அவசியமென்றால் மக்கள் ஆணையுடன் மீண்டும் அதனை பயன்படுத்த முடியும். நாங்கள் ஊழல் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களிடம் செல்லக்கூடிய மக்களுடன் நெருங்கி செயற்படக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்கி வருகின்றோம். ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடே இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவருகின்றோம். நாங்கள் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஏனைய விடயங்களையும் நிறைவேற்றுவோம். கல்வி மறுசீரமைப்பு, கிராமிய வறுமை நிலைமை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி வருகின்றோம். குறுகிய காலத்தில் சமூக மாற்றத்திற்காக நாங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/238875
  18. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, யுவ்ராஜ் சம்ராவின் செஞ்சுரி விளாசலான 110 (65 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் நிதானமான 36 (39 பந்துகள்) ஓட்டங்களுடன் விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 76 (36 பந்துகள்) ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திரவின் ஆட்டமிழக்காத புயல்வேக 59 (39 பந்துகள்) ஓட்டங்களோடும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது ஸிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பல்லேகலவில் தொடர்ச்சியான மழை காரணமாக கைவிடப்பட்டதையடுத்து ஏற்கெனவே ஓமான், அவுஸ்திரேலியாவை வென்ற ஸிம்பாப்வே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மறுபக்கமாக ஸிம்பாப்வே, சிறிலங்காவிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது! முடிவு: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அயர்லாந்து, ஸிம்பாப்வே அணிகள் தலா ஒரு புள்ளி பெற்றன. ஸிம்பாப்வே அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. யாழ் களப் போட்டியாளார்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, மைக்கல் ஜோன்ஸ்ஸின் வேகமான 71 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் முன்சீயின் நிதானமான 27 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி திபேந்திரா சிங் ஐரீயின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், குஷால் பூர்டெலின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நேபாளம் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  19. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார். தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார். https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8
  20. புலிகள் - அலைகள் ஓய்வதில்லை புளொட் - விடியும் வரை காத்திரு ரெலோ - நாளை நமதே ஈரோஸ் - தூரத்து இடிமுழக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். - பயணங்கள் முடிவதில்லை ----------------------------- ரெலோவை தூறல் நின்னு போச்சு என்றும் பொதுமக்கள் சொல்வதுண்டாம். இவற்றைத் தவிர TEA கும் ஒரு பெயர் இருந்ததாம்.
  21. அந்த காலத்தில் 80 களின் படங்களின் பெயர்களை இயக்கங்களுக்கு மக்கள் வைத்தனர். புலி - அலைகள் ஓய்வதில்லை( எப்போதும் தாக்குதல்) டெலோ - தூறல் நின்னு போச்சு (ஆரம்பத்தில் அடித்தார்கள் பின்னர் இல்லை). ஈரோஸ் - தூரத்து இடி முழக்கம் (தெற்கில் அடிப்பது) ஏனையவை நினைவில் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.