Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, கொவிட் தொற்று ஏற்பாட்ட காலத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்கத்தை கொண்டு DNAவை மாற்ற முயற்சித்துள்ளார். 'சரத் வீரசேகரவால் எனக்கு கடும் அழுத்தமாக இருக்கிறது. DNAவை மாற்றுமாறு என்னை வதைக்கிறார்' என்று பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க என்னிடம் இவ்வாறு குறிப்பிட்டார். அதன் பின்னர் நான் சொன்னேன்,பயப்பட வேண்டாம்! 'இல்லை சீப்' நான் கொடுக்க மாட்டேன் என கூறினார்.ஆனால் சரத் வீரசேகர அவ்வளவு சொல்லியும் அவர் கொடுக்கவில்லை. அதன் பின்னர் வீரசிங்க மரணமடைந்து விட்டார்.அவர் ஏன் மரணமடைந்தார் என இன்று ஒன்றும் தேட முடியாது.அவர் கொவிட் காலத்தில் இறந்ததால் தகனம் செய்து விட்டார்கள். இன்று ஒன்றும் தேட முடியாது என குறிப்பிட்டுள்ளார். சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்
  3. மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர் 04 Mar, 2026 | 04:05 PM (செ. கவிஷனா) மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதமானோர் மத்திய கிழக்கு வான் பரப்புகள் வழியாகவே வருகை தருகின்றனர். தற்போது காணப்படும் பதற்ற நிலைமை காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், வாரத்துக்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும். ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு வழியாகவே பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் துபாய், கட்டார் மற்றும் அபுதாபி விமான சேவைகள் தடைப்பட்டிருப்பது இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் ஐரோப்பிய பயணிகளின் வருகையில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அத்துடன் சீனா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வருகை தருகின்றனர். மேலும், ஐரோப்பாவுக்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளதுடன் எதிஹாட், கட்டார் ஏர்வேஸ் போன்ற பிரதான விமான சேவைகள் இன்னும் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை. தொடர்ந்தும், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 89,000 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 236,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர்
  4. "ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. "எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்..." என்கிறார் அற்புதம் அம்மாள். "அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்..." என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்! காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
  5. சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இன்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர். திமுகவுடனான உடன்படிக்கையை தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளரை நாளைக்குள் காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மாநிலங்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை இடங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 'திமுக - காங் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!' - செல்வப்பெருந்தகை என்ன சொல்கிறார்? |DMK–Congress Alliance Agreement Sealed: Selva Perunthagai Reacts - Vikatan
  6. மீண்டும் ஒரு முறை தமது வழமையான பெயரை தென்னாபிரிக்கா உறுதிப்படுத்தியது!
  7. இஸ்ரேலுடைய வேலையாகவும் இருக்கலாம் என முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதி இருந்தார்! ஒதுங்கி இருப்பவர்களையும் ஈரானுக்கெதிராக களமிறக்க அவர்களுடைய தளங்களை ஏவுகணை மூலமாக தாக்குவது. (சவுதி, பிரிட்டன் மற்றும் சில அயல் நாடுகள்)
  8. ஈரானின் பலம் டிரோன்ஸ்…அடுத்து மிசைள்ஸ். கடுமையாக போரிட கூடிய தரைப்படையும் உண்டு. ஆனால் மிக பெரிய பலவீனம் விமானப்படை, கப்பல் படை. விமானப்படை, விமான எதிர்ப்பு ஏவுகணை கிட்டதட்ட முடக்கப்பட்டு விட்டன. பி 52 விமானங்களை நேற்றிரவு தெஹ்ரானில் அமெரிக்கா பாவித்தது. இவை உருமறைய, விமான எதிர்க்கும் திறன் அற்ற பறக்கும் குண்டு வீசும் தொழில்சாலைகள். இவற்றை அமெரிக்கா துணிந்து இறக்கினால் - ஈரானின் வான்பரப்பு ஒட்டு மொத்தமாக இஸ்ரேல்-அமெரிக்கா கையில் என்பதை ஊகிக்கலாம். வான் பாதுகாப்பு இல்லை எனில் கப்பல்கள் மிக இலகுவான இலக்குகள் - அடித்து நொருக்கி விடலாம். மிசைல்கள் ஏவும் போதே தளங்கள் அடையாளம் காணப்பட்டு அடித்து துவம்சம் செய்யப்படுகிறன. எனவேதான் 3 நாட்களில் ஏவப்படும் மிசைல் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது. இன்னும் சில நீண்ட இலக்கு மிசைல்கள் இருக்கலாம். ஆனால் வான் பாதுகாப்பு இல்லாமல் அவை நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது. டிரோன்கள் மட்டுமே ஈரானின் ஒரே பலம் இப்போது. தரைபடைகள் சண்டையில் ஈடுபடும் நிலை வரும் என நான் நினைக்கவில்லை. குர்தீஷ் படைகள் முன்னேற தயார் என கேள்விபடுகிறேன். அப்போது அவர்களுக்கு இஸ்ரேல், அமெரிக்கா முழு வான் உதவி வழங்க கூடும். அதன் போதும் இரானிய தரைபடை பலத்த அழிவை சந்திக்கும். இதே டிரோன்களை உக்ரேன் சமாளிக்கிறது எனவே அவர்கள் உதவுவதாக சொல்லி உள்ளார்கள். தேவைபடாது என நினைக்கிறேன். கமேனி கொலைக்கு நேட்டோவின் துருக்கி வருத்தம் கூறியது. ஆனால் இன்று துருக்கி மீது ஏவப்பட்ட ஏவுகணையை நேட்டோ தடுத்துள்ளது. இது துருக்கியை கடுப்பாக்கி உள்ளது. விநாச காலே விபரீத புத்தி.
  9. இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கடித்தோம் - அமெரிக்கா அறிவிப்பு Published By: Vishnu 04 Mar, 2026 | 08:45 PM இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லைகளில் பயணித்ததாகக் கூறப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் மூழ்கடித்ததாக அமெரிக்க தரப்பில் இருந்து வெளியாகியுள்ள கூற்று, சர்வதேச அளவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தரப்பின் தகவலின்படி, “சர்வதேச நீர்ப்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்திருந்த” ஈரான் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட டொர்பிடோ தாக்குதலில் சிக்கி மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “Quiet Death” (அமைதியான மரணம்) என குறியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், எதிரி நாட்டின் கப்பலை டொர்பிடோ மூலம் நேரடியாக மூழ்கடித்த முதல் சம்பவம் இத என அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து உடனடி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இந்தியப் பெருங்கடல் பகுதி, ஆசியா – மத்திய கிழக்கு – ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கியமான கடற்பாதையாக விளங்குகிறது. இப்பகுதியில் எந்தவொரு இராணுவ மோதலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சர்வதேச கடல் சட்டங்களின்படி, சர்வதேச நீர்ப்பரப்பில் பயணிக்கும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்துவது கடுமையான சட்ட மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் இந்த சம்பவத்தை நெருக்கமாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்கா–ஈரான் உறவுகளில் புதிய கட்டத்தை உருவாக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இரு நாடுகளும் ஏற்கனவே பல்வேறு பிராந்திய பிரச்சினைகளில் நேரடி மற்றும் மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச சமூகம் அமைதியான தீர்வை வலியுறுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்த மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கடித்தோம் - அமெரிக்கா அறிவிப்பு
  10. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 6 பாகம் – 6 / “உண்மை ஒரு அச்சுறுத்தலாக மாறும் போது” அன்று காலை, எல்லாம் வழமை போலவே இருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக தாம் சிறகுகளை உலர்த்தி உல்லாசமாக பரந்து விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்து புலர்ந்து கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதிற்கு இசைவாக இசை முழங்க, இருளில் கௌவிக்கொண்டிந்த வானத்து சூரியனும் தன் பங்கிற்கு தன் செம்கதிர் ஒளிக்கற்றைகளை பதிக்கத் தொடங்கின. மெல்ல மெல்லமாய் அந்த மாய இருள் ஓடி ஒளித்து கொண்டிருக்கையில், ஆதன் காலை 7:20 மணியளவில் சைக்கிளை வேப்பமரத்தின் கீழ் நிறுத்தி விட்டு, தனது உடுப்பில் ஒட்டியிருந்த ஒரு சில தூசியை தட்டி விட்டு, பாடம் நடத்த வகுப்பிற்கு தயாராக வந்தான். ஆனால் அவன் வகுப்பறைக் கதவைத் தொடுவதற்கு முன்பு, ஒரு பியூன் ஓடி வந்து: “ஐயா... தலைமையாசிரியர் உங்களை உடனடியாகப் பார்க்க விரும்புகிறார்.” என்றான். அலுவலகத்திற்குள் மூன்று பேர், ஆதனை எதிர்பாத்து அமர்ந்திருந்தனர் - தலைமையாசிரியர், ஒரு மூத்த ஆசிரியர் மற்றும் ஒரு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் [PTA] குழு உறுப்பினர். அவர்களின் மேசையில் ஒரு கோப்புறை [folder] கிடந்தது. அது அரசாங்கக் கடிதம் அல்ல — ஆனால் மிகவும் கனமான ஒன்று. - அது ஆதனைப் பற்றிய புகார். தலைமையாசிரியர், ஆதனை கதிரையில் இருக்கச் சொல்லி விட்டு, மெதுவாகப் பேசினார்: “ஆதன் … கடந்த வாரம் வந்த அதிகாரிகள் உன்னைப் பற்றி குறிப்புகளை அனுப்பியுள்ளனர்.” ஆதனுக்குப் புரிந்தது. அது அவன் எதிர்பார்த்தது தான். அன்று அவன் கரும்பலகையில், “தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது நினைவகம்.” என்று அவன் எழுதியது. அதில் ஏதும் தவறு இருப்பதாக அவன் உணரவில்லை. அதனால் அவன் அமைதியாக இருந்தான். முதலில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கூறினார்: “உங்கள் கற்பித்தல் மிகவும் உணர்ச்சிவசமானது. மிகவும் பண்டைய வரலாறுகளை, தேவையில்லாமல் கிளறுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.” என்றார். ஆதன் பதிலளித்தார்: “மாணவர்கள், தங்களை, தங்கள் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையை, உறுதியான சாட்சிகளுடன் நான் கற்பிக்கிறேன். அவ்வளவு தான்” என்றான். என்றாலும் அங்கு அமர்ந்து இருந்த மூத்த ஆசிரியர் தொடர்ந்தார்: “நீங்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவராகி வருகிறீர்கள். மாணவர்கள் வீட்டில் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். மாணவர்களிடம் ஒரு விழிப்புணர்வு வருகிறது, அது எப்படி வருங்காலத்தில் மாறும் என்பதே, அதிகாரிகளின் பயம்” என்றார். ஆதன் அதை மறுக்கவில்லை. பின்னர், மிகவும் மென்மையாக, தலைமை ஆசிரியர் கூறினார்: “நீங்கள் மாணவர்களுக்கு ஒன்று பேசுகிறீர்கள், ஆனால், வேறொன்றாக சிலாபத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள செவிலியருடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு வதந்தியும் உள்ளது.” என்றார். ஆதன் வெளிப்படையாக பதிலளித்தான்: “அவள் என் தோழி.” மட்டும் அல்ல, அவளின் முன்னைய தமிழ் தலைமுறை கட்டாயப்படுத்தி நூறு ஆண்டுகளுக்குள், ஒரு பாதிரியரால் மொழி மாற்றப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டது வரலாறு. அந்த உண்மை உங்களுக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் மீண்டும் அது நடைபெறாமல் இருக்க, நான் ஒரு சிறிய விளக்கம் கொடுத்தேன். அவ்வளவுதான் . அவனிடம் பயம் இல்லை. சாக்குப்போக்கு இல்லை. வெட்கக்கேடானது என்று எதுவும் இல்லை. தலைமை ஆசிரியர் பெருமூச்சு விட்டார்: “ஆதன் ... நீ ‘கட்டுப்படுத்த முடியாதவனாக’ மாறிவிட்டாய் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” ஆதன் சிரிச்சான். அந்த வார்த்தை எந்த குற்றச்சாட்டையும் விட அவனை அதிகமாக காயப்படுத்தியது. கட்டுப்படுத்த முடியாதது ? — ஏனென்றால் ஆதன் மாணவர்களுக்கு தமிழ், தமிழர், இலங்கை என்பதன் வரலாற்று உண்மையை கூறினான். கட்டுப்படுத்த முடியாதது ?— ஏனென்றால் அவன் பொய் சொல்ல மறுத்துவிட்டான். கட்டுப்படுத்த முடியாதது ?— ஏனென்றால் அவன் மாணவர்களுக்கிடையில் தனி ஒருவனாக உயர்ந்து நின்றான். இறுதியாக அவர்கள் அவனிடம் கோப்புறையைக் [folder] கொடுத்தார்கள். “உன் வகுப்பு நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஆய்வு செய்யப்படும்,” என்று தலைமை ஆசிரியர் அமைதியாக அவனிடம் சொன்னார். பின் ஒரு இடைவெளி விட்டு: “நீ பின்னர் அதிர்ச்சியடையக் கூடாது என்பதற்காக இதை முன்னமே சொல்கிறேன்.” என்றார். அதே நேரத்தில், சிலப்பம் மருத்துவமனையில், சமந்தி [செந்தூரி] வார்டை விட்டு வெளியே வந்தார். அங்கே தொண்டு ஒன்றுக்கு காசு சேர்க்க காத்திருந்த ஒரு கன்னியாஸ்திரீ அல்லது அருட்சகோதரி அவளை மெதுவாக அழைத்தார்: “குழந்தாய்... நேற்று நீ முன்னேஸ்வரம் சென்றதாக கேள்விப்பட்டேன்.” சமந்தி சிரித்தாள்: “ஆம்.” அருட்சகோதரி குரலைத் தாழ்த்திக் கூறினார்: “சிலர் உன்னை... மதம் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.” சமந்தியின் குரல் அமைதியாக இருந்தது: "“நான் எதையும் மாற்றவில்லை. எனக்கு என்னை மட்டுமே, என் சுயம் மட்டுமே நினைவில் இருந்தது. [I didn’t change anything. I only remembered myself.]" அருட்சகோதரி முகம் சுளித்தார்: “உடப்புவைச் சேர்ந்த தமிழ் ஆசிரியருடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், கவனமாக இருங்கள். மக்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையைத் திருப்புவார்கள் என்று.” சமந்தி பதிலளித்தாள்: “உண்மை மக்களை உலுக்கினால், அது உலுக்கட்டும். என் அடையாளம் ஒரு வதந்தி அல்ல. [If truth shakes people, let them shake. My identity is not a rumour.”] அன்று மாலை ஆதனும் சமந்தியும் கடற் கரையில் சந்தித்தனர். அப்பொழுது கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் கடலிலும் மணலிலும் பட்டு மின்ன, ஆரவாரமான அலைகளின் ஓசையோடு, அமைதியையும் ரம்மியத்தையும் ஒருங்கே தரும் ஓர் அற்புதமான காட்சியாக அது இருந்தது; மக்கள் மகிழ்ந்து, ஓய்வெடுத்து, இயற்கை அழகை ரசிக்கும் ஓர் அனுபவம் அங்கு தானாக மலரும். ஆனால் அவர்களுக்கு அப்படியான எந்த மகிழ்ச்சியும் இருக்கவில்லை. அன்று வழமைக்கு மாறாக காற்று பலமாக இருந்தது, அலைகள் அவர்கள் சார்பாகப் பேசுவது போல் தோன்றியது. ஆதன் கூறினான்: “அவர்கள் என் பணியை ஆய்வு செய்யப் போகிறார்கள். என்னை தங்களுக்குள் கட்டுப்படுத்தவே நினைக்கிறார்கள்.” சமந்தி கூறினாள்: “அவர்கள் என் மதத்தை விசாரிக்கிறார்கள். அவர்கள் என் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் என் சுதந்திரத்தைப் பற்றி அஞ்சுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆனால் 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! அப்படி இந்த பார்வைகள் இருக்கவில்லை. இருவரும் - முதிர்ந்தோர்கள், இருவரும் - தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்திருந்தனர். இருவரும் - ஒரே காரணத்திற்காக, வெவ்வேறு வகையான அழுத்தங்களுக்கு எதிராக நிற்கிறார்கள். மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில், உண்மையை பேசுவது, அந்த எதிர்பார்ப்பாளர்களிடம் ஒரு கிளர்ச்சி போல் தெரிகிறது [Truth looks like rebellion in places where silence is expected]. ஆதன் மெதுவாக கூறினான்: “நான் என் மொழிக்காக நின்றேன். அதனால், இப்போது என் முழு வாழ்க்கையும் கவனிக்கப்படுவது அல்லது சோதிக்கப்படுவது போல் உணர்கிறேன்.” சமந்தி பதிலளித்தாள்: “நான் என் அடையாளத்திற்காக [identity] நின்றேன். அதனால், இப்போது என் முழு மூச்சையும் எண்ணப்படுவது போல் உணர்கிறேன்.” அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில் எழுதினான்: “வரலாறு, என்னை பள்ளியில் தண்டித்தது. நம்பிக்கை, மருத்துவமனையில் அவளை கேள்வி கேட்டது. ஆனால் காதல் ... காதல், எங்களுக்கு தலைவணங்காமல் நிற்க தைரியத்தை அளித்தது.” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் துளி/DROP: 2071 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/34119947997653744/?
  11. இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை இரான் உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறியது, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை கட்டுரை தகவல் ஜெரிமி போவன் சர்வதேச ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளையும், வளைகுடா முழுவதும் இரானின் அண்டை நாடுகளையும் இரான் தாக்க முடிவெடுத்த பிறகு, இதுவொரு பிராந்திய போராக உருவெடுத்தது. பிரிட்டனில் உள்ள தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தெரிவித்து வந்த மறுப்பைக் கைவிட்டுள்ளது. போர் இன்னும் அதிகரித்து வருகிறது. எனது கைபேசியில் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பால் மூன்று அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிக்கையை நான் படித்தேன். அது அவர்களின் சொந்த தரப்பால் தற்செயலாக நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிக்கும் நேரத்தில், மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம், தற்போது உயிருடன் இருக்கும் சிலர் உயிரிழந்திருக்கலாம். போர் எப்போது அல்லது எப்படி முடியும் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கணித்துவிட இயலாது. ஒரு போர் தொடங்கியவுடன், அடுத்து நடப்பனவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், மோதிக்கொள்ளும் தரப்புகள் இந்தப் போர் எப்படி முடிய வேண்டுமென விரும்புகின்றன என்பது குறித்த சில வழிகளை இங்கு காணலாம். வெற்றிக்கான டிரம்பின் வரையறை ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா லாகோ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், போர் தொடங்கியதாக அறிவித்ததில் இருந்து, அதிபர் டிரம்ப் எப்போதும் போல அமெரிக்க சக்தியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பிற அதிபர்கள் ஓவல் அலுவலகத்தில் உள்ள ரெசலூட் மேசைக்குப் பின்னால் இருந்து ஒரு புனிதமான உரையைப் பேசுவதை தேர்வு செய்திருக்கலாம். ஆனால், கழுத்து பட்டன் அணியப்படாத திறந்த சட்டையை அணிந்திருந்தார். அவரது கண்கள் வரை இழுத்துவிட்ட வகையில் ஒரு வெள்ளை பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார். 1979இல் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்து வருவதாக வாதிட்டு, அவர் ஒரு நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்தார். டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையில், வெற்றி குறித்த தனது கருத்தாக்கத்திற்கு ஒரு வரையறையை அவர் வழங்கினார். அது ஒரு பட்டியலாக நீண்டது. "நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, ஏவுகணைத் தொழிலை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலும் அழிக்கப்படும். அவர்களின் கடற்படையை அழிக்கப் போகிறோம். பிராந்தியத்தின் பயங்கரவாத பிரதிநிதிகள் இனி பிராந்தியத்தையோ அல்லது உலகத்தையோ ஸ்திரமின்மைக்கு ஆளாக்க முடியாது. எங்கள் படைகளைத் தாக்க முடியாது. மேலும், பல அமெரிக்கர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைக் கடுமையாகக் காயப்படுத்திக் கொன்றது போல அவர்களால் ஐ.இ.டி வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகளைப் பயன்படுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்." இரான் அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறினார். இந்த அறிக்கை அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை. கடந்த கோடையில் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்களை "அழித்துவிட்டதாக" அவர் கூறியதற்கு முரணாக, அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை அது நெருங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள ஆட்சியை முடக்க முடியும் என்று டிரம்ப் நம்புகிறார். அது சரணடையவில்லை என்றால், இரானிய மக்கள் பல தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு வீதிகளில் இறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறும் அளவுக்கு இரான் ஆட்சி நொறுக்கப்படும் என்று அவர் கருதுகிறார். "நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கும். பல ஆண்டுகளாக, நீங்கள் அமெரிக்காவின் உதவியைக் கேட்டு வந்தீர்கள். ஆனால், அதை ஒருபோதும் பெறவில்லை. இன்றிரவு நான் செய்யத் தயாராக இருப்பதைச் செய்ய எந்த அதிபரும் தயாராக இருக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஒரு அதிபர் இருக்கிறார், அவர் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறார். எனவே நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்று பார்ப்போம்." ஆட்சி மாற்றத்திற்கான பொறுப்பை இரானிய மக்களிடம் கொடுப்பது, அவர்களைச் செயல்பட அவர் நேரடியாக ஊக்குவித்தாலும்கூட, ஆட்சி நீடித்தால் பின்னர் வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. ஆனால் அமெரிக்கா அதை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இதைப் பார்க்கலாம். இருப்பினும், எப்போதும் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று நம்பும் ஓர் அதிபரை அது எவ்வளவு தூரம் திசைதிருப்பும் என்பது ஒரு வெளிப்படையான கேள்வி. பட மூலாதாரம்,US Navy via Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இரானின் ராணுவ திறன்களை சிதைத்து வருகிறது வரலாற்றில் ஓர் அரசாங்கம் அகற்றப்பட்டதற்கான தெளிவான உதாரணம் அல்லது ஒரு போர் வெற்றி பெற்றதற்கான தெளிவான உதாரணம் என எதுவும் இல்லை. அது வலுவான, நன்கு ஆயுதந்தரித்த எதிரிக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பிரிட்டன் உள்பட, சதாம் ஹுசேனை அகற்றுவதற்காக இராக்குக்குள் ஏராளமான தரைப்படைகளை அனுப்பின. கடந்த 2011ஆம் ஆண்டில், லிபியாவின் தலைவர் முயம்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் வளைகுடா நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்புடன் ஆதரிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களால் அகற்றப்பட்டார். ஆனால் இப்போது இரானிய மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அவர்களே அகற்றுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார். டிரம்பின் திட்டம் மிகவும் ஆபத்தானது. ஓர் அரசாங்கத்தை அகற்ற வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் தலைவர்கள் நாட்டுக்குள் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? அது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. குறிப்பாக போர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில். தற்போதைய தலைவர்கள் அதிகாரத்தில் நீடிப்பார்கள், ஏவுகணைகளைத் தொடர்ந்து வீசுவார்கள், தங்கள் வலுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படுவார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது வளைகுடா அரபு நாடுகளைவிட அதிக துன்பங்களைத் தங்களால் கையாள முடியும் என்று அவர்கள் நினைக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான துன்பங்களை இரானிய மக்களே எதிர்கொள்வார்கள். மேலும் நடக்கும் விஷயங்களில் அவர்களின் பங்கு எதுவுமில்லை. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,சனிக்கிழமையன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்கி, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொன்றன நெதன்யாகுவின் கணக்கு டொனால்ட் டிரம்பை போலவே, பெஞ்சமின் நெதன்யாகுவும் இரானியர்களை தங்கள் கைகளில் ஆட்சியை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இரான் அரசின் இரக்கமற்ற பாதுகாப்புப் படைகளை அவர்களால் வெல்ல முடியாவிட்டால், நெதன்யாகுவின் முன்னுரிமை இரானின் ராணுவ திறனையும், இஸ்ரேலை அச்சுறுத்தக்கூடிய பிராந்தியத்தைச் சுற்றியுள்ள ஆயுதக்குழுக்களை மீண்டும் கட்டியெழுப்பும் திறனையும் நொறுக்குவதாக இருக்கும். பெஞ்சமின் நெதன்யாகு, பல தசாப்தங்களாக, இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள் யூத அரசை அழிக்க ஓர் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்று அவர் நம்புகிறார். போரின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, அவர் டெல் அவிவ் நகரின் மையப் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடத்தினுடைய கூரையில் நின்று, போர் முடிவடைவதைக் கண்டதாகக் கூறினார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து "40 ஆண்டுகளாக நான் சாதிக்க நினைத்ததைச் செய்ய முடியும், பயங்கரவாத ஆட்சியை முற்றிலுமாக நசுக்க முடியும்" என்று அவர் கூறினார். அது ஒரு எதார்த்தமாக மாறுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார். போர்களுக்கு எப்போதும் உள்நாட்டு அரசியல் பரிமாணம் உண்டு. டிரம்பை போலவே, நெதன்யாகுவும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை எதிர்கொள்கிறார். டிரம்பை போலன்றி, அவரது சொந்த பதவி ஆபத்தில் இருக்கிறது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்த வாய்ப்பளித்த பாதுகாப்புத் தவறுகளுக்கு பல இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவை குற்றம் சாட்டுகிறார்கள். இரானுக்கு எதிராக இஸ்ரேலை ஒரு தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்றதாக அவரால் கூற முடிந்தால், தேர்தலில் ஒரு பெரிய அடியை முன்னெடுத்து வைப்பார். அவர் தோற்கடிக்க முடியாதவராகக்கூட மாறலாம். பட மூலாதாரம்,GPO HANDOUT/EPA/Shutterstock படக்குறிப்பு,பெஞ்சமின் நெதன்யாகு இரானியர்களை ஆட்சியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் அரசாங்கத்தை தக்கவைப்பதே வெற்றி அதிஉயர் தலைவரையும் அவரது உயர்மட்ட ராணுவ ஆலோசகர்களையும் கொன்றது இரான் ஆட்சியின் மீது சுத்தியல் அடியாக விழுந்துள்ளது. ஆனால், அது சரிந்துவிடும் என்று அர்த்தமில்லை. அயதுல்லா ருஹோல்லா காமனெயியும் பிற நிறுவனர்களும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க இரானின் நிறுவனங்களை வடிவமைத்தனர். இது ஒரு நபரால் நடத்தப்படும் ஆட்சி அல்ல. அசாத் மற்றும் கடாஃபியின் கீழ் சிரிய மற்றும் லிபிய அரசுகள் ஆளும் குடும்பங்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டன. குடும்பங்கள் அகற்றப்பட்டபோது, கடாஃபி கொல்லப்பட்டார், பஷர் அல் அசத் தப்பி ஓடிவிட்டார், ஆட்சிகள் சரிந்தன. ஆனால் இரானின் ஆட்சி ஓர் அரசு அமைப்பு. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பொறுப்புகளைக் கொண்ட அரசியல் மற்றும் மத நிறுவனங்களின் சிக்கலான, அடர்த்தியான வலையமைப்பில் இது அமைந்துள்ளது. போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க ஏதுவாக இந்த ஆட்சி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே ஆட்சி தப்பிவிடும் என்று அர்த்தமில்லை. இஸ்லாமிய குடியரசின் அமைப்பு அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த அமைப்பு இத்தகைய தருணத்திற்காகத்தான் திட்டமிட்டுள்ளது. அதன் வெற்றிக்கான வரையறை ஆட்சியை இழக்காமல் தக்கவைத்திருப்பதே. அதை அடைவதற்கு அதுவொரு வலிமையான அளவிலான பாதுகாப்பால் தன்னைச் சூழ்ந்துகொண்டுள்ளது. இது பாதுகாப்பு, அடக்குமுறை, வற்புறுத்தல் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த, இரக்கற்ற கருவியைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அதன் ஆட்கள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதற்கான உத்தரவுகளைப் பின்பற்றி வீதிகளில் இறங்கினர். இதை எழுதும்போது போரின் மூன்றாவது நாள்தான் ஆகியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இதுவரை, 2024 டிசம்பரில் மாஸ்கோவுக்கு தப்பிச் சென்ற பிறகு அசத்தின் படைகள் செய்ததுபோல, இரான் அரசாங்கத்தின் ராணுவம் வீழ்ச்சியடைவதற்கான அல்லது போரைக் கைவிடுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அதிஉயர் தலைவரின் கொலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானின் வீதிகளில் கூடினர் வழக்கமான ராணுவம் மற்றும் அதிக ஆயுதமேந்திய போலீசாருடன், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் உள்ளது. இதன் முக்கிய வேலை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகும். ஓர் உயர் மதத் தலைவர் நாட்டை வழிநடத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேலாயத்-இ-ஃபாகிஹ் என்ற கருத்தை ஆதரிக்க இந்தப் படை உள்ளது. இந்த நம்பிக்கை இரானிய புரட்சியின் முக்கியக் கொள்கையாகும். மேலும், இது இரானில் ஷியா மதத் தலைவர்களின் ஆட்சியை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சுமார் 190,000 செயலிலுள்ள உறுப்பினர்களையும் 600,000 வரையிலான ரிசர்வ் வீரர்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியையும் அது கட்டுப்படுத்துகிறது. அதன் தலைவர்களிடம் பணமும் வலுவான நம்பிக்கைகளும் உள்ளன. அவை அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கான காரணங்களைத் தருகின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பாசிஜ் என்ற ஒரு தன்னார்வ துணை ராணுவக் குழுவால் ஆதரிக்கப்படுகிறது. அதில் சுமார் 450,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதற்கும் வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றவர்கள். தெஹ்ரானில் சர்ச்சைக்குரிய 2009 தேர்தலுக்குப் பிறகு நடந்த போராட்டங்களின்போது, அவர்கள் அரசாங்கத்தின் முதல் பாதுகாப்பு வரிசையாகச் செயல்பட்டதைக் காண முடிந்தது. அவர்கள் தெருக்களில் போராட்டக்காரர்களை குச்சிகள் மற்றும் ரப்பர் தடிகளைப் பயன்படுத்தி மிரட்டி அடித்தனர். அவர்களுக்குப் பின்னால் கனரக ஆயுதமேந்திய போலீசார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களை விரைவாகக் கட்டுப்படுத்த பாசிஜ் வேகமாக நகரும் மோட்டார் சைக்கிள் குழுக்களையும் பயன்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பாசிஜை, அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், அவர்கள் கொடிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், அவரது அச்சுறுத்தல்கள் அரசாங்கத்தின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பலரின் மனதை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இஸ்லாமிய குடியரசும் ஷியா இஸ்லாமும் தியாகம் என்ற எண்ணத்தால் நிறைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிஉயர் தலைவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகப் பல மணிநேரம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, அரசுத் தொலைக்காட்சியில் அழுதுகொண்டே செய்தி வாசிப்பாளர், காமனெயியின் மரணத்தை அறிவித்து, அவர் 'தியாகத்தின் இனிமையான தூய கோப்பையைக் குடித்துவிட்டார்' என்று கூறினார். உலகின் பெரும்பகுதியினர் தாக்குதலை எதிர்பார்த்தபோதும், ஆயதுல்லா தனது மூத்த ஆலோசகர்களுடன் தெஹ்ரானில் உள்ள தனது வீட்டில் ஒரு சந்திப்பை நடத்தத் தேர்வு செய்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். அவர் ஒரு தியாகியாக இறக்கத் தயாராக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். அரசாங்கத்துக்கு இன்னும் சில சாதாரண குடிமக்களிடம் இருந்து வலுவான ஆதரவு உள்ளது. அதிஉயர் தலைவர் கொல்லப்பட்ட பிறகு, 40 நாள் துக்க காலத்தின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான விசுவாசமான ஆதரவாளர்கள் தெஹ்ரானின் தெருக்களில் கூடினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் புகை பின்னணியில் எழுந்தபோதும், அவர்கள் பொது சதுக்கங்களில் நின்று, மெழுகுவர்த்திகளை ஏற்றினர், தங்கள் மொபைல் டார்ச்சுகளை பிரகாசிக்க விட்டனர். மோசமான முன்னுதாரணங்கள் இந்த முறை, இஸ்ரேலுடன் சேர்ந்து, அதன் வலுவான ராணுவ சக்தியால், குழப்பத்தை ஏற்படுத்தாமல் எதிரி அரசாங்கத்தை அகற்ற முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆனால், கடந்த கால உதாரணங்கள் அதிக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. 2003இல் இராக்கில் சதாம் ஹுசேன் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டபோது, அது பல ஆண்டுக்கால வன்முறை மற்றும் போருக்கு வழிவகுத்தது. அந்த நேரத்தில், ஆயுதக்குழுக்கள் வலுப்பெற்றன, அவற்றில் சில இன்றும் உள்ளன. நல்ல வாழ்க்கைத் தரத்தை ஆதரிக்கப் போதுமான எண்ணெய் வளத்தைக் கொண்ட லிபியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது. கடாஃபி அகற்றப்பட்டு கொல்லப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு பிளவுபட்டு, ஏழையாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகள் அவரை அகற்ற உதவியது, அவரது வீழ்ச்சியைக் கொண்டாடியது. ஆனால் அதன் பிறகு, அவர்கள் பெரும்பாலும் பின்வாங்கி, அதைத் தொடர்ந்து வந்த பிரச்னைகளைச் சரிசெய்ய சிறிதளவும் முயலவில்லை. இரான் ஒரு பெரிய நாடு. இராக்கைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது. இது 90 மில்லியனுக்கும் அதிகமான கலவையான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இரானில் அரசாங்கம் வீழ்ந்தால், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம், வன்முறை ஆகியவை சிரியா, இராக்கில் நடந்த லட்சக்கணக்கான மக்களை பலிகொண்ட உள்நாட்டுப் போர்களைப் போலவே மோசமாக இருக்கலாம் என்ற கடுமையான அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்கள் இரானின் ராணுவ வலிமையைப் பெரியளவில் சேதப்படுத்துகின்றன. அரசாங்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட, இது மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றுகிறது. இரான் அரசாங்கம் வீழ்ந்தால், பலர், அநேதகமாகப் பெரும்பாலான இரானியர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், பலவந்தமாக அகற்றப்பட்ட ஓர் அரசுக்கு மாற்றாக அமைதியான மற்றும் நிலையான புதிய அரசாங்கத்தை அமைப்பது மிகவும் கடினம். டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய ஆபத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தப் போர் மத்திய கிழக்கை பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் மாற்றும் என்று நம்புகிறார். இருப்பினும், அது நிகழ்வதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக உள்ளன. அதோடு, அது மிகவும் சவாலானதும்கூட. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?
  12. ப்பா. பாத்துக் கொண்டு இருந்த எங்களுக்கே மூச்சு முட்டுதே. ஆடின அவங்களுக்கு. என்னா அடி. இம்மை மறுமை இல்லா அடி.
  13. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 122 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " விஜயனை அவரது சொந்த தந்தையே தனது சொந்த நிலத்திலிருந்து, அவனின் தீய செயல்களால் வெளியேற்றினார், மேலும் இதனால், அதே குணாதிசயங்களைக் கொண்ட அவனது தோழர்களுடன் ஒரு படகில் செல்ல வேண்டிய கட்டாயம் விஜயனுக்கு ஏற்பட்டது. அந்தப் படகு இலக்கின்றி இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் சுப்பராவை [சுப்பராகா / Suppara] அடைந்தது, சுப்பரா மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். அங்கேயும் அவர்கள் தங்கள், காட்டுமிராண்டித்தனமான செயல்கள், திருட்டு, விபச்சாரம், பொய் மற்றும் அவதூறு போன்ற உள்ளார்ந்த நடத்தைகளைக் அல்லது குணங்களைக் காட்டினர். எனவே, கோபம் கொண்ட சுப்பரா மக்கள் விஜயனையும் அவனது தோழர்களையும் கொல்ல விரும்பினர். பின்னர் அவர்கள் தப்பித்து, பருகாச்சாவில் [Bharukaccha] தரையிறங்கி, மூன்று மாதங்கள் அதே தீய செயல்களை அங்கும் செய்தனர். உதாரணமாக, தீபவம்சம் 9-26. விஜயன் பருகாச்சா நகரத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அங்கிருந்த மக்களை தங்கள் கொடிய செயல்களால் கோபப்படுத்தி விட்டு, அதே கப்பலுக்குள் மீண்டும் ஏறினான். 27. அந்த விஜயனின் மக்கள் குழுவும் கப்பலில் ஏறி, கடலுக்குள் புறப்பட்டனர்; ஆனால் கடும் காற்றால் அவர்கள் வழிதவறி, கடலில் திசைதவறினர். 28. இதனால், அவர்கள் இலங்கைத் தீவை அடைந்து கரையில் ஒதுங்கினர். ஆனால் வறண்ட தரையில் நின்ற அவர்கள் மிகுந்த பசிப்பிணி, தாகம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் களைப்படைந்ததால், அவர்களால் (?) கால்நடையாக நடக்க முடியவில்லை, அதனால் அவர்கள் அங்கேயே நின்றனர் என்கிறது. என்றாலும் மகாவம்சம் பருகாச்சாவில் தரையிறங்குவதைத் தவிர்த்து உள்ளது அல்லது அப்படியான நிகழ்வு நடந்ததாக பதியவில்லை. எப்படியிருந்தாலும், இது இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆகும். விஜயாவின் வருகை, நாம் முன்பு கூறப்பட்டது போல, கட்டாயம் ஒரு கட்டுக்கதை. மேற் கூறிய நாளாகமம்களின் துறவி ஆசிரியர்கள் தங்கள் சொந்த நலனை மேம்படுத்த எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதை இவை காட்டுவதாகும். ஒரு உதாரணமாக, கருணையுள்ள புத்தர் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வருகைக்காக இலங்கையை தயார்படுத்தினார் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஒரு குற்றவாளி புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கும் வரை, அவர் செய்த எந்தவொரு குற்றச் செயலும் மகிமை வாய்ந்தது என்பது துறவி எழுத்தாளர்களின் வரலாற்று மரபு போல் தெரிகிறது. அது தான் விஜயன், துட்டகைமுனு மற்றும் அசோகன் போன்றவர்களின் நிலையாக இலங்கை நாளாகமம்களில் தெரிகிறது! மாறாக, ஒரு ஆட்சியாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவர் ஒரு பௌத்தராக இல்லாவிட்டால் கொல்லப்பட வேண்டும். இதற்கு ஒரு பொதுவான உதாரணம் இந்து அல்லது சைவ மத எல்லாளன் மன்னனாகும். தீபவம்சத்தின்படி மிகவும் பாராட்டத்தக்க பெருமைமிக்க ஆட்சியாளர் எல்லாளன் ஆகும். அவர் ஒப்பற்ற மன்னராக, தீபவம்சம் 18-50. இல் காண்கிறோம். அதாவது, தீபவம்சம் 18- 49. "எல்லாளன்" எனும் ஒரு இளவரசன், அசேலனைக் [Asela] கொன்று, நாற்பத்திநான்கு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தான். 50. காமம், வெறுப்பு, பயம் மற்றும் அறியாமை ஆகிய நான்கு தீய வழிகளைத் தவிர்த்து, இந்த ஒப்பற்ற மன்னன் தன்னிச்சையற்ற நீதியுடன் ஆட்சி செய்தான் என்கிறது. மற்றொரு நாளாகமம் மகாவம்சமும் எல்லாளனைக் கொன்றதை உயர்த்தி, ஆனால் அவரை ஒரு நீதியான ஆட்சியாளராக ஒப்புக்கொள்கிறது. தீபவம்ச ஆசிரியருக்கு அபயாவால் [Abhaya] அல்லது துட்டகைமுனுவால் எல்லாளன் கொல்லப்பட்டதை விவரிப்பது கடினமாக இருந்திருக்க வேண்டும், அதனால் அவர் அதை விவரிப்பதைத் தனது நாளாகமத்தில் தவிர்த்து உள்ளார் போலும். 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,'' என்ற நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் அல்லது ஸ்ரீ பாதத்தில் அல்லது சிவனொளிபாத மலையில் [Adam’s Peak / Sri Pada] உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது. மேலும் வலது பாதம் தாய்லாந்தில் உள்ள ஃபிரா சாட்டில் [Phra Sat in Thailand] உள்ளது என நம்பப்படுகிறது. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. அது அபத்தமானது; ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில், அது தூங்கும் நோக்கத்திற்காக, சமண குருவுக்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சம்மண மலைக்கு [Sammana Malai / Jain hill /also spelled Samanamalai or Samanala Malai] வருகை தந்தார். சம்மண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது ஆகிறது. இலங்கையில் புத்த மதம் வருவதற்கு முன்பு, சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை யாரோ தயார் செய்தனர். மணிமேகலை கூட புத்தரின் பாதங்களை வணங்க சம்மண மலைக்கு ["Jain hill "] வந்தார் என கூறப்படுகிறது. சமணர்கள் எல்லாவற்றையும், அவமானத்தையும் கூட கைவிட்டனர். அதாவது சமணர்கள் ஆடை அணியாமல் இருந்தும் அதை நாணுதற்குரிய செயலாகக் என்றும் கருதவில்லை. அது மட்டும் அல்ல, குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. Part: 122 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. [26. Vijaya, having stopped three months at Bhārukaccha and exasperated the inhabitants, went again on board his ship. 27. That crowd of men having gone on board their ship, sailing over the sea, were driven away by the violence of the wind, and lost their bearings. 28. They came to Laṅkādīpa, where they disembarked and went on shore. Standing on dry ground, being exhausted by great hunger, thirst and fatigue, they were unable (?) to walk on foot.] Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest. Could anyone imagine that the compassionate Buddha prepared Lanka for the arrival of convicted criminals? The monkish chronicle tradition is that any criminal behaviour is glorious so long as the criminal is connected with the Buddhism. Conversely, however good a ruler is, he shall be killed if he is not a Buddhist. The typical example is the ruler Elara. The most praiseworthy ruler, as per Dipavamsa, is Elara. He was described as; incomparable monarch, Dipavamsa 18-50. [49. A prince, Elāra by name, having killed Asela, reigned righteously forty-four years. 50. Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously.] The other Chronicle Mahavamsa too exalts the killing of Elara while acknowledging him a just ruler. The Dipavamsa author must have found it hard to describe the killing of Elara by Abhaya, he simply avoided describing it. As per the page 176 of the Reference 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,', the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth, the right footprint being at Phra Sat in Thailand. The Buddha was a human, and his footsteps cannot be this big & It is ridiculously excessive; one can sleep on it. In fact, It look like, it must have been prepared for the sleeping purpose. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. Even Mannimeghalai came to Sammana Malai ["Jain hill"] to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 123 தொடரும் / Will follow துளி/DROP: 2072 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 https://www.facebook.com/groups/978753388866632/posts/34120392554275955/?
  14. இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை, ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂 அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣
  15. RESULT 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup South Africa 169/8 New Zealand (12.5/20 ov, T:170) 173/1 New Zealand won by 9 wickets (with 43 balls remaining) Finn Allen* rhb 100 33 10 8 303.03 31 (7b) 24 (5b) Rachin Ravindra lhb 13 11 2 0 118.18 அடுத்த பக்கம் சம்பியன் கனவில் இருப்பவர்கள் பீதியாகப்போகிறார்கள் அண்ணை!
  16. அண்ணை, போர்க் கப்பலா / பெயருக்குக் கப்பலா / காகிதக் கப்பலா?!
  17. அதுகள் பாவங்கள்😂… நீர்மூழ்கி கப்பல் கொழும்பு ஹாபருக்கு வந்து போனாலும் அவைக்கு தெரிய வருமோ தெரியாது😂 தவிர எல்லாருக்கும் நண்பனான எமக்கு இதென்னடா சோதனை - பேசாம விபத்து என முடிப்பம் என நினைத்திருக்க கூடும். ஆனால் அமெரிக்கா உரிமை கோரியதோடு வீடியோவும் வெளியிட்டுள்ளது. 2ம் உலக போரின் பின் நீர்மூழ்கியால் மூழ்கடிக்க பட்ட முதல் கப்பல் இதுவாம். இதேபோல் ஹொர்ர்ம்ஸ் நீரிணையை மூடுவோம் என மிரட்டி, அதை நடைமுறை படுத்த ஈரான் நம்பி இருந்த போர் கப்பலும், ஈரானின் பெரிய கப்பல் தளமான பந்தா அப்பாசின் வாயிலில் ஜெகஜோதியாய் ஏரிகிறது.
  18. ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு Mar 4, 2026 - 09:28 PM இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட 'ஐரிஸ் டேனா' கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பான ‘அத தெரண’ விசேட நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு
  19. 19 பந்துகளில் 50 அடித்த பிஃன் அலன். பயபுள்ள!!!
  20. Today
  21. எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை 04 Mar, 2026 | 05:16 PM எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது எமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எரிபொருள் பெறுவதற்கு 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற எரிபொருள் அவசியமாகவுள்ளது. எனவே எரிபொருள் விநியோகத்தைச் சீரமைத்து தேவைக்கேற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க QR குறியீட்டு நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கோருகின்றோம் இக் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது. எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை
  22. நிசியின் இருவரும், இணைப்பாட்டமாக, இதுவரை 463 ஓட்டங்கள் மொத்தமாக அடித்துவிட்டார்கள். இன்று இரண்டாவது 100 ஓட்ட இணைப்பாட்டம். எல்லா உலகக் கோப்பையிலும், இதுதான் அதிகூடிய இணைப்பாட்டமும்.
  23. அண்ணை, அப்ப இலங்கைக் கடற்படை மறுத்தான் விட்டது ஏன்?
  24. சிலரை தூக்குவது…. சிலரை போடுவது…. இன்னும் சிலரை மோஸ்கோ வரை விரட்டுவது…. இவர்களுக்கு எல்லாம் அபயம் அழிப்பதாக சொன்னவரை, ஒரு காலத்தில் சிரியாவில், மாலியில் ஒரு நவ காலனியை நடத்தியவரை, இதையெல்லாம் பார்க்க வைத்து விரக்தியாகி தற்கொலைக்கு தூண்டுவது😂. அல்லது கடாபி போல் அவர் மக்களே அவருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைப்பது. இதுதான் மொசாட்டின் பிளான்😂. ஆனால் இவரிடம், அவரின் பிடி இருப்பதால் இன்னும் மூன்றரை வருடம் பொறுக்க வேண்டும்.
  25. இரான் மதம் (வெறி) என்றால் ( அப்படி உண்மையில் இல்லை), அது ஒவ்வொரு தனிமனிதனும் அல்லாஹ்விடம் அல்லது அவர்கள் கருதும் சொர்க்கத்துக்கு போவது. ஜிகாதில் கூட தனிமனிதனின் (ஆன்மிக) விடுதலையை எப்படி அடைவது என்பது. அனால், இந்த சுனி இஸ்லாமே , அதை (இராணுவ) தற்கொலை தாக்குதலுக்கு உசுப்பேற்ற பாவிக்கும் பயிற்சி முறையை கொண்டு வந்தது. (ண்மையில், ஈரான் ஷியா முஸ்லிம்கள் வரலாறு அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்டவர்கள்) ஆனால் இந்த விவிலிய பிரளய கிருமிகள் சொல்வது, (இயேசு திருப்பி பூமியில் வர ) கூண்டோடு முழு மனித குலமுமும் அழிய, சொற்ப்பமானவர்கள், அவர்களை பொறுத்தவரை புண்ணியம் செய்தவர்கள், இயேசுவை காணும், யேசுவுடன் பூமியில் வாழும் பாக்கியத்தை பெற்றவர்களே எஞ்சி இருப்பார்கள் என்று. (எது மிகுந்த ஆபத்தானது? அத்துடன் இந்த விவிலிய பிரளய கிருமிகள் இடம் அணுஆயுதங்களும் உள்ளன) டிரம்ப் மாற்ற்ம் குழாம், இஸ்ரரேல் இப்பொது ஈரானை அடிப்பதில் அடிப்பதில். இதுவம் ஒரு பங்கு. அதாவது இந்த விவிலிய பிரளய நம்பிக்கை. அல்லது அதை போன்ற, இப்படியான வேறு பிரளய கருத்துருவாக்கமும் Genesis இருக்கிறது என்றே நினைக்கிறன். இதனால் தான், டிரம்ப் க்க இப்போதும் என் இரான் மீது யுத்தம் அமெரிக்காவால் தொடுக்கபட்டதுக்கான காரணத்தை சொல்ல முடியாது இருப்பது. டிரம்ப் வெளியில் சொன்னது எல்லாமே பொய் (அடிப்பதற்கு முதல் நாள் ஒமானின் பேச்சுவார்த்தை மதியஸ்தர் / வசதிப்படுத்தும் அதிகாரி ஸ்டீவ் விட்கப், ஜாரெட் கிருஷ்னர் ஐ நம்பாது, பகிரங்கமாக சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்களை பாவ்வித்து சொல்லி இருந்தார், இரான் இணக்கப்பாட்டுக்கு வந்து இருப்பதாக. ஓமான் அமெரிக்காவையே குற்றம் சாட்கிறத்து, பேச்சவார்த்தையை இரானை ஏய்க்காட்டியதாக, அப்படியான கருத்து பட) இரானை அடுத்து எந்த நாடுகள் என்று இஸ்ரேல் வெளியில் சொல்லி விட்டது, துருக்கி, பாகிஸ்தான் என்று. (இது டிரம்ப் இன் நேட்டோ இல் இருந்து விலத்தவது என்பதுடன் ஒத்து போகிறது) (ஈரான் இஸ்லாமிய குடிஅரசு என்றாலும், இரானின் எந்த அரச படைகளும் இப்படியான மத பிரளயங்களை பாவித்து படைகளை உசுப்பேற்றுவது இல்லை, இரானின் தேசியவாதத்தையே பாவிக்கிறது )
  26. ஈரானுடனான போரினால் இஸ்ரேலுக்கு வாராந்தம் 2.9 பில்லியன் டொலர் இழப்பு Mar 4, 2026 - 08:05 PM ஈரானுடனான போர் நிலைமை காரணமாக இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, போரினால் நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியமை, அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டே இந்தப் பாரிய நிதி இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மோதல் நீண்ட காலம் தொடருமானால், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளும் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmmc4ydbp000f356plfnsd6sa

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.