Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில் Mar 12, 2026 - 09:47 PM இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தித் தேவைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் யுத்த நிலைமைத் தொடர்ந்தால், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்படி, அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தமது சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் பேணுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmno5yl9000z356pxo6fr5iv
  3. 'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து பட மூலாதாரம்,Iranian President's Press Office / Handout /Anadolu via Getty Images மொஜ்தபா காமனெயி 12 மார்ச் 2026, 12:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது, 'கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது' என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார். போருக்கு மத்தியில் கப்பல் போக்குவரத்து மீதான சமீபத்திய தாக்குதல்களில், இராக் அருகே இரண்டு டேங்கர்கள் 'ஏவுகணைகளால்' தாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே ஒரு கொள்கலன் கப்பலும் 'ஏவுகணை' ஒன்றால் தாக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. லெபனானில், சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர், இதில் பெய்ரூட்டின் கடற்கரைப் பகுதியில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததும் அடங்கும். பட மூலாதாரம்,Telegram படக்குறிப்பு,துபையில் தாக்குதல் நடந்த கட்டடம் அதேபோல, இராக், பஹ்ரைன் மற்றும் ஓமன் பகுதிகளில் இரானிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பல டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையத்தை மேற்கோள் காட்டி, நாட்டின் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது. படக்குறிப்பு,இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இரானின் புதிய அதி உயர் தலைவர் கூறியது என்ன? இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயிக்கு பின் அதி உயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இரானின் புதிய அதி உயர் தலைவரிடம் இருந்து வெளியாகும் முதல் செய்தி இதுவாகும். இரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமனெயியின் செய்தி இரானிய அரசு தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளரால் வாசிக்கப்படுகிறது. "ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் உத்தியை இரான் தொடர்ந்து பயன்படுத்தும்" என்று காமனெயி கூறுகிறார். தொடர்ந்து அவர், "இரான் அண்டை நாடுகளுடன் 'நட்புடன்' இருக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் அமெரிக்க தளங்களை மூடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். அந்தத் தளங்களை இரான் தொடர்ந்து குறி வைக்கும்" என்று கூறுகிறார். கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார். "குறிப்பாக மினாப் பகுதியில், ஒரு பள்ளிக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்" என்று அவர் கூறுகிறார். அமெரிக்க ஏவுகணையால் அந்தப் பள்ளி தாக்கப்பட்டதாக இரான் கூறுகிறது. இது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் பிபிசியின் டாம் பேட்மேனிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய டிரோன் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 12) காலை பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் எழுந்த புகை மூட்டம். துபையில் நடத்தப்பட்ட தாக்குதல் துபையில் உள்ள ஓர் உயரமான கட்டடத்தில், வியாழக்கிழமை காலை ஒரு பெரிய துளை காணப்பட்டது. ஒரு டிரோன் 'கட்டடத்தின் மீது விழுந்ததாக' உள்ளூர் அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து இந்த படம் வெளியாகியுள்ளது. குறிப்பிடப்பட்ட அந்த டிரோன் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புதன்கிழமை (மார்ச் 11) இரவு, துபை கிரீக் ஹார்பர் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்தது. பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோவில், கட்டடம் தாக்கப்பட்டதாகத் தோன்றும் இடத்தின் உள்ளே தீப்பிழம்புகள் தெரிவதைக் காட்டுகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் வெளியிடப்பட்ட ஒரு தகவலில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) எடுக்கப்பட்ட இந்தப் படம், பஹ்ரைனின் மனாமாவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட சேதத்தைக் காட்டுகிறது. பஹ்ரைனில் எச்சரிக்கை ஒலிகள் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அந்த நாட்டில் எச்சரிக்கை ஒலி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் சைரன் ஒலிக்கப்படுகிறது அல்லது ஏன் ஒலிக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவிற்கு மேலே புகை எழுவதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் உயரமான கட்டடம் சேதமடைந்ததைக் காட்டியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இராக் அருகே தாக்கப்பட்ட இரு கப்பல்களின் ஒரு கப்பலின் படம் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள, இராக்கின் பாஸ்ரா அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்க டேங்கர் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தூதரகம் தெரிவிக்கவில்லை. "2026 மார்ச் 11 அன்று, மார்ஷல் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான 'சேஃப்சீ விஷ்ணு' (Safesea Vishnu), இராக்கின் பாஸ்ரா அருகே தாக்கப்பட்டது," என்று சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் இந்திய தூதரகம் கூறியுள்ளது. கப்பலில் இருந்த எஞ்சிய 15 இந்தியப் பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், இராக் அதிகாரிகளுடனும் மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Royal Thai Navy படக்குறிப்பு,நேற்று தாக்கப்பட்ட ஒரு கப்பல் இராக் அருகே இரு கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 06:19 மணிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் - ஒரு கொள்கலன் கப்பல் 'அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டு கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக' பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (யூகேஎம்டிஓ) கூறுகிறது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,லெபனானில், சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர் வளைகுடா அலுவலகங்களை மூடும் சர்வதேச வங்கிகள் பஹ்ரைனில், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் மற்றும் எரிபொருள் தொட்டிகளை இரான் குறி வைத்ததை அடுத்து பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஓமனில், நேற்று (மார்ச் 11) சலாலா துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர். ஓமன் இப்போது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் எண்ணெய் ஏற்றுமதி முனையத்தில் உள்ள கப்பல்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இரானிய வங்கி மீதான தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நிதி நிறுவனங்கள் இப்போது தங்களது இலக்கு என்று இரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது. சர்வதேச வங்கிகள் தங்கள் வளைகுடா அலுவலகங்களை மூடி வருகின்றன - கத்தாரில் எச்எஸ்பிசி (HSBC), துபையில் சிட்டி (Citi) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) - ஆகிய வங்கிகள் தங்களது பணியாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yjd1gm718o
  4. ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு Mar 12, 2026 - 10:11 PM ஈரானுக்கு எதிரான போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் இந்த வாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. செனட்டர்களுக்கான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூடிய கதவு விளக்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்தத் தொகையில், போரின் முழுமையான செலவுகள் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், மோதல் குறித்து மேலதிக தகவல்களைக் கோரி வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. போருக்கான கூடுதல் நிதியுதவியைக் கோரும் கோரிக்கையை வெள்ளை மாளிகை விரைவில் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கும் எனப் பல பாராளுமன்ற உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கை 50 பில்லியன் டொலராக இருக்கலாம் எனச் சில அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், மற்றவர்கள் அந்த மதிப்பீடு குறைவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmnozhp30010356puzuzkiv3
  5. டென்மார்க், அவுஸ்ரேலியாவில் இரு ஈரானிய இராஜதந்திரிகள் அசைலம் அடித்துள்ளார்களாம். ஈரானுக்கு உள்ளே தெஃரான் புறநகர் ஒன்றில் புரொஜ்டரில் பறக்க விடப்பட்ட இஸ்ரேல் கொடியாம். இது ஏ ஐ இல்லை என்கிறது க்ரொக்.
  6. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை 12 Mar, 2026 | 05:51 PM இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு 'மெட்ரோ பஸ்' நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன. 33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ் ஒன்றில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன. ஒரு முன்னோடித் திட்டமாக இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும். அதன்படி, மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிப்பாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய பிரதான சுகாதார மையங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இச்சேவைக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புகொள்வதற்கான சைகை மொழி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பஸ்களை நாட்டுக்குக் கொண்டு வந்து பொதுப் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கவோ அல்லது புதிதாக நிர்மாணிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240809
  7. இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை Mar 12, 2026 - 05:29 PM இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmney4p1000r356p8t73d1nw
  8. முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு! 12 Mar, 2026 | 03:27 PM முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் அவற்றினை நேரில் பார்வையிட்டார். வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளணித் தேவைகள் பெருமளவில் காணப்படுவதாக இதன்போது மருத்துவ அதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணி வெற்றிடங்கள் நிலவுவதால், பொதுமக்களுக்கு வினைத்திறனான மருத்துவச் சேவையை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புகள் சீரற்ற நிலையில் காணப்படுவதால், அந்த அறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டது. வைத்தியசாலையில் நிலவும் இக்குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தாம் உரிய முறையில் கவனம் செலுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், வைத்தியசாலையின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்காகத் தகுந்த 'நலன்புரிச் சங்கம்' ஒன்றினை விரைவாக உருவாக்குமாறு மருத்துவ அதிகாரியிடம் அவர் வலியுறுத்தினார். அதற்கு இணக்கம் தெரிவித்த மருத்துவ அதிகாரி, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தக் களவிஜயத்தின் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/240795
  9. "நிலப்பரப்பில் கப்பல்கள்" - மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர் பட மூலாதாரம்,Windward படக்குறிப்பு,ஜிபிஎஸ் ஜாமிங், இரான் கடற்கரைக்கு அருகிலுள்ள கப்பல்கள் நிலப்பரப்பில் இருப்பது போலத் தோன்றச் செய்கிறது கட்டுரை தகவல் கிறிஸ் பரானியுக் தொழில்நுட்ப செய்தியாளர் 12 மார்ச் 2026, 02:06 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் வரைபடத்தில் தவறான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விண்ட்வார்டில் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளராக இருக்கும் மிஷெல் வைஸ் போக்மேன், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அருகே இருந்த வணிகக் கப்பல்களின் நேரடி இருப்பிடங்களைச் சரிபார்க்கும்போது இதைக் கவனித்தார். ஹோர்முஸ் நீரிணை மற்றும் அருகிலுள்ள கடல்வழிகளின் வரைபடத்தைப் பார்க்கும்போது சுமார் 35 அசாதாரண தொகுப்புகளை அவர் கண்டார். வரைபடத்தில், இந்தத் தொகுப்புகள் பல கப்பல் சின்னங்களால் ஆன வட்டங்களாகத் தோன்றும். ஒவ்வொரு குறியீடும் ஓர் உண்மையான கப்பலைக் குறிக்கும். ஆனால், கப்பல்கள் பொதுவாக இதுபோன்ற சரியான வட்டங்களில் கூடுவதில்லை. இந்தத் தொகுப்புகளில் சில நிலத்தில்கூடத் தோன்றும். இது கப்பல்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது. இதன் பொருள் அவற்றின் நிலைகளைக் காட்டும் ஜிபிஎஸ் சிக்னல்கள் இடையூறு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான இடங்களை மறைக்கின்றன. நவீன மோதல்களில், போர்கள் துப்பாக்கிகள், குண்டுகளால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. மின்னணு சிக்னல்களும் இந்த மோதலில் பங்காற்றுகின்றன. ஜிபிஎஸ் ஜாமிங் எனப்படும் ஒரு நுட்பம் வழிசெலுத்தல் சிக்னல்களில் தலையிடுகிறது. இது தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைத்து ஆபத்தான விபத்துகளுக்குக்கூட வழிவகுக்கும். சமீபத்திய ஆண்டுகளில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பயன்படுத்தும் விமானம் உள்பட, ஐரோப்பாவில் உள்ள விமானங்களையும் இந்த ஜிபிஎஸ் ஜாமிங் பாதித்துள்ளது. யுக்ரேனில் நடக்கும் போரிலும் இது வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதால், இந்த வகையான மின்னணு போர் மேலும் பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல்களை இப்போது பாதிக்கும் சிக்னல் குறுக்கீடு பிரச்னையை மிஷெல் வைஸ் போக்மேன் காண்பது இது முதல் முறையல்ல. கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) செயல்பாட்டை ஜிபிஎஸ் ஜாமிங் பாதிக்கிறது என அவர் முன்பு கவனித்துள்ளார். இஸ்ரேல், இரான் இடையிலான குறுகிய மோதலின்போது கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் இதே பிரச்னை ஏற்பட்டது. பால்டிக் கடலிலுள்ள கப்பல்களும் இதேபோன்ற மின்னணு குறுக்கீட்டை எதிர்கொண்டன. ஆனால், இந்த முறை, நிலைமை மிகவும் தீவிரமானது என்று போக்மேன் கூறுகிறார். இது கப்பல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்குப் பெரிய ஆபத்தை உருவாக்குவதாக அவர் எச்சரிக்கிறார். பாகிஸ்தான் தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகமும், பிராந்தியத்தில் உள்ள கப்பல்களை சிக்னல் குறுக்கீடு பாதிப்பதாக எச்சரித்துள்ளது. கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க ஏ.ஐ.எஸ்-ஐ ஓரளவு பயன்படுத்துகின்றது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள், அதிகளவு எண்ணெயை சுமந்து செல்லக் கூடியவை. அவற்றால் விரைவாகத் திரும்பவோ, நிறத்தவோ முடியாது. திசையை மாற்றிய பிறகு, அவை தமது பாதையை முழுமையாக சரிசெய்யாமல் பல கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வளைகுடா பகுதியில் நடைபெறும் சிக்னல் குறுக்கீடுகள், கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைத் தவிர்க்கப் பயன்படுத்தும் அமைப்பில் இடையூறு ஏற்படுத்தியுள்ளன கப்பல் குழுவினரால் பிற கப்பல்கள் எங்கு அமைந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண முடியாவிட்டால், குறிப்பாக இரவில் அல்லது மோசமான வானிலையில் இது மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் உட்வோர்ட் விளக்குவது போல, ஒரு கப்பலைச் சுற்றியுள்ள பிற கப்பல்கள் எங்கு செல்கின்றன என்பதை அறியாமல் இருப்பதே முக்கியமான ஆபத்து. ஜிபிஎஸ் ஜாமிங்குக்கு யார் காரணம் என்பது குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இருப்பினும், கப்பல்களின் வழிசெலுத்தல் அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கு இரான் காரணமாக இருக்கலாம் என்று பல ராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கக்கூடும் என்று இரான் எச்சரித்துள்ளது. ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் விடிங்டனின் கூற்றுப்படி, இரான் பயன்படுத்தும் ஜிபிஎஸ் ஜாமிங் கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது ரஷ்யா அல்லது சீனாவில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் தங்கள் ராணுவ தளங்கள், வீரர்கள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் வழிசெலுத்தலை நம்பியிருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து பாதுகாக்க இதேபோன்ற ஜாமிங் அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். இதுகுறித்துக் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட ராணுவ அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை பிபிசியிடம் கூறியது. பட மூலாதாரம்,Zephr.xyz படக்குறிப்பு,ஷான் கோர்மன், ஜிபிஎஸ் குறுக்கீட்டைக் கண்டறியப் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார் இதற்கிடையில், Zephr.xyz தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷான் கோர்மன், யுக்ரேன் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் ஜாமிங் குறித்து ஆய்வு செய்து வருகிறார். வழக்கமாக, விமானங்களில் இருந்து வரும் தரவுகள் ஜிபிஎஸ் ஜாமிங்கை கண்டறிய உதவுகின்றன. ஆனால், இரான் மீதுள்ள வான்வெளி தற்போது மூடப்பட்டிருப்பதால், கோர்மன் வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. சமீபத்தில், இரானில் ஜாமிங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிய ஒரு செயற்கைக்கோளில் இருந்து ரேடார் தரவுகளைப் பயன்படுத்தினார். பிபிசி இந்தத் தரவை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஜாமிங் சாதனங்கள் ரேடார் சிக்னல்களில் சிறிய இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோர்மன் கூறுகிறார். இந்த சிக்னல்களை ஆராய்வதன் மூலம், நாடு முழுவதும் ஜிபிஎஸ் ஜாமிங் ஏற்படக்கூடிய இடங்களை அவரால் அடையாளம் காண முடியும். கடந்த 2024ஆம் ஆண்டில், ஷான் கோர்மனும் அவரது குழுவினரும் யுக்ரேனில் ட்ரோன்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் ஜாமிங் பற்றி ஆய்வு செய்தனர். அவர்கள் ட்ரோன்களுடன் ஸ்மார்ட்போன்களை இணைத்து சுற்றியும் பறக்கவிட்டனர். அவை பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள் ஜிபிஎஸ் சிக்னல்களை பதிவு செய்தன. இது ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்னல் குறுக்கீட்டைக் கண்டறிய உதவியது. பல ஸ்மார்ட்போன்களில் இருந்து ஜிபிஎஸ் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜாமிங் சாதனத்தின் சரியான இடத்தை அவர்களால் மதிப்பிட முடிந்தது. ஜாமிங் எவ்வளவு வலிமையானது மற்றும் பரவலாக இருந்தது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாக கோர்மன் கூறுகிறார். பட மூலாதாரம்,Advanced Navigation படக்குறிப்பு,அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஜிபிஎஸ்-க்கு மாற்றாக இருக்கவல்ல தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது இன்று, ஜிபிஎஸ் ஜாமிங்கில் இருந்து அமைப்புகளைப் பாதுகாக்கப் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. சில அமைப்புகள் தானாகவே குறுக்கீட்டைக் கண்டறிந்து பாதிக்கப்படாத மற்றொரு சிக்னல் அதிர்வெண்ணுக்கு மாறலாம். உதாரணமாக, ரேதியோன் யுகே என்ற பாதுகாப்பு நிறுவனம் லேண்ட்ஷீல்ட் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனம் மிகச் சிறியது. இதை கார்கள், விமானம் போன்ற பல வகையான வாகனங்களில் நிறுவ முடியும். இந்த "ஜாமிங்-எதிர்ப்பு ஆன்டெனா அமைப்பு" ஜாமிங்கின்போதுகூட வழிசெலுத்தலை வேலை செய்ய வைக்கப் பல சிக்னல்களை கொண்ட சேனல்களை பயன்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலெக்ஸ் ரோஸ்-பார்ஃபிட்டின் கூற்றுப்படி, ஜாமிங் எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. மற்றொரு நிறுவனமான அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஒரு வித்தியாசமான தீர்வை உருவாக்கியுள்ளது. ஜிபிஎஸ்-ஐ மட்டும் நம்புவதற்குப் பதிலாக, அவர்களின் அமைப்பினால் கைரோஸ்கோப்புகள் மற்றும் முடுக்கமானிகள் (accelerometers) போன்ற சென்சார்களை பயன்படுத்தி கப்பலின் நிலையைக் கண்டறிய முடியும். இவை ஸ்மார்ட்போன்களில் இயக்கத்தைக் கண்டறிய அல்லது தொலைபேசி பக்கவாட்டில் திருப்பப்படும்போது பயன்படுத்தப்படும் அதே வகையான சென்சார்கள். இது ஜிபிஎஸ் சிக்னல்கள் தடைபட்டாலும் வழிசெலுத்தலைத் தொடர அனுமதிக்கிறது. அட்வான்ஸ்ட் நேவிகேஷனின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ஷா, ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யாதபோதும் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்கிறார். சுற்றியுள்ள பகுதியின் படங்களை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டு இருப்பிடத்தை அடையாளம் காண்பது, ஒருமுறை. கணினி மென்பொருளைப் பயன்படுத்தி வானத்திலுள்ள நட்சத்திரங்களின் நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, மற்றொரு முறை. இதற்குப் பயன்படுத்தப்படும் பட செயலாக்க தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது எனக் கூறுகிறார் ஷா. இருப்பினும், நட்சத்திர-மேப்பிங் மலிவானது என்றாலும் மிகவும் துல்லியமானது இல்லை. இதன் காரணமாக, இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான பல்வேறு முறைகளை ஒன்றாகப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். சிறந்த பாதுகாப்பு இல்லாமல், ஜிபிஎஸ் தாக்கப்படுவது எளிது. ஜிபிஎஸ் பயன்படுத்தும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இது அவற்றைத் தடுப்பதை அல்லது இடையூறு விளைவிப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், ராணுவ படைகள், எம்-கோட் எனப்படும் தனித்துவமான, பாதுகாப்பான ஜிபிஎஸ் பதிப்பைப் பயன்படுத்துகின்றன. இது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதால் ஜாம் செய்வது மிகவும் கடினம். இரானுக்கு அருகிலுள்ள ஜிபிஎஸ் ஜாமிங் கடலில் விபத்துகளின் அபாயத்தை அதிகரிப்பதாக ராயல் நேவிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ராம்சே ஃபராகர் எச்சரிக்கிறார். ஜாமிங் மிகவும் பொதுவானதாகி வருவதால், எதிர்காலத்தில் புதிய, மிகவும் பாதுகாப்பான வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் நம்புகிறார். இந்தச் சூழ்நிலையை அவர் வை-ஃபை இணைப்பின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகிறார். அப்போது நெட்வொர்க்குகள் திறக்கப்பட்டிருந்தன. யார் வேண்டுமானாலும் வை-ஃபை இணைப்பை அணுகும் விதத்தில் இருந்தன. பின்னர் அவை கடவுச்சொற்களால் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், எதிர்காலத்தில் மக்கள் இன்றைய திறந்த ஜி.என்.எஸ்.எஸ் சிக்னல்களை திரும்பிப் பார்த்து, வலுவான பாதுகாப்பின்றி அவை ஏன் பயன்படுத்தப்பட்டன என்று சிந்திக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார். https://www.bbc.com/tamil/articles/czx7qeqzj5xo
  10. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த Mar 12, 2026 - 03:42 PM - 0 மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே. கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல. கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும். கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும். https://adaderanatamil.lk/news/cmmnb4386000l356p5a3lobgd
  11. மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம்; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை 12 Mar, 2026 | 02:38 PM அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எச்சரித்துள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உள்ளடங்குபவை: ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு. லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு. இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரிழப்பு. குவைத்: 01 சிறுவர் உயிரிழப்பு. வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், இந்தப் போர் நெருக்கடியினால் மில்லியன்கணக்கான சிறுவர்கள் தமது கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "சிறுவர்களைக் கொலை செய்வதையோ, அங்கவீனப்படுத்துவதையோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதையோ எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 மில்லியன் சிறுவர்கள், உலகம் விரைவாகச் செயற்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்" என யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/240787
  12. நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன Mar 12, 2026 - 01:33 PM இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmn5w90x000g356picapg6si
  13. 109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் சென். பட்றிக்ஸ் - யாழ்ப்பாணம் கல்லூரி பலப்பரீட்சை 12 Mar, 2026 | 01:10 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டி அருட்தந்தை ரி.எம்.எவ். லோங் அடிகளார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்காக விளையாடப்படுகிறது. 1917இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி, வட மாகாணத்தின் மிகவும் பழைமையான மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது. 2025ஆம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்த 108 பொன் அணிகளின் போரில் சென். பட்றிக்ஸ் கல்லூரி 35 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது. 1973ஆம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் அடுத்த வெற்றிக்காக 52 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் கல்லூரி கடந்த வருடம் அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிதம்பரலிங்கம் மதுசன் தலைமையில் யாழ்ப்பாணம் கல்லூரி 59 ஓட்டங்களால் கடந்த வருடம் வெற்றியைப் பதிவு செய்தது. சென். பட்றிக்ஸ் கல்லூரி கடைசியாக 2023இல் சிவராசா கீர்த்தன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. 2025இலிருந்து இப் போட்டி மூன்று நாள் போட்டியாக நடத்தப்படுவது விசேட அம்சமாகும். இந்த வருடம் சென். பட்றிக்ஸ அணிக்கு பிரேமநாயகம் மதுசன் தலைவராகவும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கு ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் தலைவராகவும் விளையாடுகின்றனர். இரண்டு அணிளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இந்த வருடப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் இப் போட்டியைக் கண்டுகளிக்கவென கனடா, ஐக்கிய இராச்சியம். நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பழைய மாணவர்கள் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தத்தமது அணிகளுக்கு உற்சாகமூட்டுவதால் இப் போட்டி ஒரு கொண்டாட்ட விழாவாகவும் அமைகின்றது. இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்துக்கான 32ஆவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத் தொடரிலும் சென். பட்றிக்ஸ் கல்லூரி 24 - 7 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும். இதில் சென் பட்றிக்ஸ் 4 வெற்றிகளையும் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன. இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்திலேயே நடைபெறும். பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் அனுசரணை வழங்குவதுடன் வீரர்களுக்கான சீருடைகளை அந் நிறுவனம் வழங்கியுள்ளது. இப் போட்டிக்கு டோக்கியோ சிமென்ட் குழுமம் இணை அனுசரணை வழங்குகிறது. அணிகள் சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன். யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன். https://www.virakesari.lk/article/240784
  14. அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு Published By: Vishnu 12 Mar, 2026 | 08:28 PM அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர். அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240827
  15. எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப் Mar 12, 2026 - 08:34 PM ஈரானின் அதி உயர் தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ட்ரூத் சமூக தளத்தில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. எனவே எண்ணெய் விலை உயரும்போது, நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது, ஈரான் என்ற தீய பேரரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகை அழிப்பதைத் தடுப்பதும்தான். அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmnlhxnr000x356p1wine47b வியாபாரி நாட்டிற்கு தலைமை தாங்கினால்.....
  16. அருமையான வரலாற்று விளக்கம். தெற்காசியாவின் Temu முஸ்லிம்கள் இதை ஏற்க தயங்க காரணம் கண்மூடித்தனமாம மதப்பற்று. எம்மை போன்ற மக்கள் கூட்டம் கூட இந்த புரிதல் இல்லாமல் இருப்பதும், சொன்னாலும் ஏற்க மறுப்பதும் ஏன் என்பதுதான் எனக்கு விளங்காத விடயம். இங்கே முக்கியம் பெறுவது ஐநா அல்ல -மாறாக 135 அங்கத்துவ நாடுகளின் இணை அனுசரனை.
  17. Today
  18. அண்ணை, செய்திகளை தேடுதல் செய்த பின்பே இணைப்பேன். தானாக வந்து தோன்றியதற்குள் போய் வாசிக்க நாசமணி கண்ணில் பட்டார். தம்பருக்கு நாசமணி என்ற பட்டமும் பொருத்தமாக இருக்குமோ!
  19. தான் யுத்தம் மூலம் கைப்பற்றிய, கோலான் குன்றுகள் தவிர மிகுதி பல இடங்களை சிரியாவிடம், ஜோர்தான் நதியை ஓட்டிய கிழக்கு கரையை ஜோர்தானிடம், சினாய் பாலை வெளியை எகிப்திடமும் இஸ்ரேல் ஒப்பந்தங்கள் மூலம் தானாகவே மீள கொடுத்துள்ளது. தெற்கு லெபனானை கூட சில தடவை பிடித்து மீளக்கொடுத்துள்ளது. அப்படி இருக்க இஸ்ரேல் அண்டை நாடுகளை பிடித்து அகண்ட இஸ்ரேல் அமைக்கும் என்பது சரியாக படவில்லை. மேற்குகரை, ஏனைய பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பது உண்மை. ஆனால் உலக யுத்த முடிவில் உருவான Palestinian Protectorate இன் எல்லைகளுக்குப்பால் இஸ்ரேல் காலை அகட்ட விரும்புகிறது என்பதற்கு அதிக ஆதாரம் இல்லை. சூப்ரீம் லீடரின் பேச்சு என ஒண்டை சில மணி நேரம் முன்பு ஈரான் வாசித்தது. அமெரிக்க படை தளங்கள் அகலும் வரை போர் தொடருமாம்😂. ஹர்மூஸ் மூடலும் தொடருமாம். பண்ணியில் பண்ணி பாருங்கோவன்😂. ஈரானிய பெசீஜ் எனப்படும் மக்களை துன்புறுத்தும் உள்ளூர் பொலிஸ் காவாலிகளின் வீதி தடைகள் மீது இஸ்ரேல் நேற்றிரவு முதல் டிரோன் தாக்குதல் நடத்துகிறது. இந்த யுத்தம், காலாட்படைகளுக்கு பதில் தானியங்கிகள் இறங்கிய முதல் யுத்தம் என பதிவாகும் என நினைக்கிறேன். இப்போதைக்கு எண்ணை விலைக்கு ஏறுமுகம் என்பதை ஏற்கிறேன்.
  20. "அகண்ட இஸ்ரேல் உருவாக்க அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும்" என்று அதி வலதுசாரி இஸ்ரேல் கட்சிகள் கூட அறிக்கை விடவில்லை. எங்கே இதை அறிந்தீர்கள் எனச் சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்கி, ஆக்கிரமித்து வரும் ஒரு பிரதேசம் பலஸ்தீனம். இஸ்ரேலின் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை, பலஸ்தீனம் ஒரு அண்டை நாடு அல்ல. எனவே, குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கிறார்கள். இதை சர்வதேச நாடுகள் பல ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் இது தவறான விடயம். அண்டை நாடுகளைப் பொறுத்த வரையில் இஸ்ரேலின் கொள்கை அது உருவானது முதல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுத்தால், தற்போது ஈரானுக்கு நடப்பது போல சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தாக்குவார்கள். தமக்கு அச்சுறுத்தல் தராத அரபு நாடுகளை எதுவும் செய்ய மாட்டார்கள். 1967 இல் 6-நாள் யுத்தம் சிறந்த உதாரணம். எகிப்து, சிரியா, சவூதி (மறைமுகமாக) இணைந்து இஸ்ரேலைத் தாக்க, மீளத் தாக்கிய இஸ்ரேல் 6 நாட்களில் இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விட 2 , 3 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது. கடைசியில் எகிப்து சமாதான உடன் படிக்கை செய்தது, அதன் சினாய் நிலப்பரப்பு எகிப்திற்குத் திரும்பக் கொடுக்கப் பட்டது. சிரியா சமாதானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, சிரியாவிடம் இருந்து கைப்பற்றிய கோலான் குன்றுகள் இன்னும் இஸ்ரேல் வசம் தான் இருக்கின்றன. இவ்வளவு ஏன்? இஸ்ரேல், பலஸ்தீன நாடுகள் உருவாக்கவென பிரிட்டனால் ஒதுக்கப் பட்ட நிலத்தில் இருந்து , யூத வெறுப்பாளரான சேர்ச்சில் ஒரு துண்டைப் பிரித்து ஜோர்தானை உருவாக்க உதவினார். இஸ்ரேல் உருவான போது பலஸ்தீனர்களுக்கு உதவிய ஜோர்தான், பின்னர் அவர்களுடைய குரங்குச் சேட்டைகள் பொறுக்காமல் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டது. இன்று வரை மேற்குக் கரைக்கு அக்கரையில் இருக்கும் ஜோர்தானுக்கு இஸ்ரேலினால் ஒரு தொல்லையும் இல்லை!
  21. சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. IBC Tamilசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதா...சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தக...#################### ################# சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்! 😥 சுவிஸ் காவற்துறை தரப்பினால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இது உறவுகளினூடாக கிடைத்த தகவல். Inuvaijur Mayuran வாழ வேண்டிய இள வயது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  22. மலர் . ........... 4. இப்பொழுதெல்லாம் இந்தப் பிரச்சினைகளால் விநோத்துக்கும் மணிமேகலைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்தபடி இருக்கு. இதெல்லாம் மணிமேகலைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை……அதனால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள் …….ஒருநாள் ஒரு ஓய்வான நேரத்தில் விநோத்திடம் விநோ நீ ஒன்றைக் கவனித்தாயா …..! என்ன சொல்லுங்கோ…..! — இப்பொழுதெல்லாம் சாதுக்கள் இவ்வழியே போனாலும் இங்கு பிக்ஷை ஏற்க வருவதில்லை தெரியுமா…..! — ஓமக்கா நானும் அதைக் கவனித்திருக்கிறேன்….. ஆனால் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…….! — எனக்கும் விளங்குது விநோ ….. நீயும் நானும் வீணாக சண்டை பிடிப்பதில் அர்த்தமில்லை. “ குதித்தோடிவரும் ஆமைக்குஞ்சுகளை தாய்போல் தாவியோடி வந்து தன் அலைக்கரங்களால் அரவணைத்து அழைத்து செல்லும் கடல்போல்” நாங்கள் நினைத்ததை விட எம்மையும் மீறி இந்த “வீதியோரக்கடை” மக்களிடையே பிரபலமாகி விட்டது . அது தானாகவே பலதரப்பட்ட மனிதர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கு அதுதான்……. என்றாலும் விநோ, நாங்கள் இங்கு நடக்கும் தப்பான காரியங்களைத் தடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.புரியுதா…… — ஓம் மேகலை, இனிமேல் நானும் முயற்சி செய்கிறேன் …… நீங்களும் கணக்க யோசிக்காதையுங்கோ…….! அன்று மதியம் வரை கடையில் நல்ல வியாபாரம் நடந்து முடிந்து விநோதன் ,மணிமேகலை, சுஜிதா, யுகேந்திரன் மற்றும் அங்கு தொழில் செய்யும் விலைமாதர் இருவரும் ஓய்வாக வாங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். மணிமேகலை எழுந்துபோய் எல்லோருக்கும் தேநீரும் வடையும் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு அந்த இரு பெண்களையும் பார்த்து நீங்களும் எடுத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தனது தேநீரை எடுத்துக் கொண்டு சென்று வானொலியின் சத்தத்தை கொஞ்சம் அதிகரித்து விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்கிறாள். வெளியே ஓரிரு லொறிகள், பேரூந்துகள் நிக்கின்றன. வானொலியில் எஸ்.பி.பி “என்காதலே என்காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று உருகி உருகிப் பாடுகின்றார். எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று மேகலை சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். இது இளையராஜா என்று நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, இல்லையக்கா என்று அந்த இரு பெண்களில் ஒருத்தி சொல்லி விட்டு இது ஏ .ஆர். ஆர் என்று சொல்கிறாள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வைரமுத்து அப்படி எழுதியிருப்பார். “காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீள்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா, விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா” இந்த வரிகளின் செறிவினில் யுகேந்திரனையும் சுஜிதாவையும் தவிர ஏனையோரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அங்கு ஒரு கனத்த மௌனம்……யாரு யாரையும் ஆற்றுப்படுத்தவில்லை. அவரவர்களுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள், வலிகள். பின் சற்று தெளிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிற்றூண்டியுடன் சினேகமாக உரையாடுகின்றார்கள். இவர்கள் நால்வரின் கடந்த காலங்களும் நால்வருக்கும் ஓரளவேனும் தெரிந்தே இருக்கின்றது. பின்னேர சமையலுக்கு மேகலை ஆயத்தம் செய்ய, யுகேந்திரனும் சுஜிதாவும் விறகு சேகரிக்க காட்டுக்குள் செல்கின்றனர். எல்லோரும் கலைந்து போக மேகலையும் எதோ யோசனையில் நாடியில் கை வைத்தபடி இருக்கிறாள்.விநோதன் தான் இருந்த வாங்கில் அப்படியே கால் நீட்டிப் படுத்திருக்கிறான். அவன் ஒரு காலுடன் மற்றகாலை உரசுவதைப் பார்த்த மேகலை என்னடா கால் வலிக்குதா ….. — ஓம் மேகலை, மலை ஏற்றத்தில் சைக்கிளை உழக்கிக் கொண்டு போனது. அதுதான். — சொன்னால் நீ கேட்பதில்லை. ஸ்கூட்டரை அல்லது வானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் தானே. — ஸ்கூட்டரை சுஜியும் வானை யுகேந்திரனும் கொண்டு போய் விட்டார்கள் மேகலை. — ஓ …. அதுக்காகவா அப்போது யுகேந்திரனை நீ கண்டிச்சனி. — ஓம் மேகலை, அவன் வானை கொண்டு போனதுக்காக அல்ல. அவனிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எடுத்திடலாம். அதற்கிடையில் விபத்து நடந்தாலோ அல்லது போலீசில் பிடிபட்டாலோ பிரச்சினைதானே. அதுதான் கொஞ்சம் பொறுமையாய் இருடா என்று சொன்னனான். — சரி சரி விடு அவன் சின்னப்பொடியன்தானே ….. — மேகலை நீங்கள் அவனுக்கு நிறைய செல்லம் குடுக்கிறீங்கள் …..! — உனக்கென்ன தெரியும், இந்நேரம் இவன் வயதில எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு எண்டு . (அவள் தனக்குள் நினைப்பதை வெளியில் சொல்லவில்லை). சரி இரு வாறன் என்று சொல்லி எழுந்து சென்று ஒரு சிறிய “நோ எண்ணெய்” போத்தலுடன் வந்து அவனது இரு கால்களிலும் தொடையில் இருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்து விட்டு விரல்களையும் ஒவ்வொன்றாய் இழுத்து இழுத்து நெட்டி முறித்து விடுகிறாள். அது அவனுக்கு சுகமாக இதமாக இருக்கின்றது. அவன் பரிவுடன் அவளைப் பார்க்க நினைவுகள் சில வருடங்கள் பின்னே போகின்றது.......! அன்று அவனை இரண்டுபேர் அவன் கை கால்களைக் கட்டி வைத்து அடித்து அந்த ஹாலில் போட்டு விட்டுப் போகிறார்கள். அங்கு சுவரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சமையல் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கு. ஒருவர் விதம் விதமாய் உணவுகள் செய்து குடுக்க சிலர் ஒரு வட்ட மேசையை சுற்றி இருந்து சுவை பார்த்து உண்கின்றனர். சற்று நேரத்தில் இவர்களுடன் இன்னும் இருவர் ஒரு பெண்ணை தர தரவென்று தரையோடு இழுத்து கொண்டு வருகிறார்கள்.அவள் ஆடைகள் அலங்கோலமாய் இருக்க அவள் ஈனஸ்வரத்தில் என்னை விடுங்கோடா என்னால் முடியல்லையடா என்று அரற்றுவது இவனுக்கு கேட்கிறது.அவர்கள் இவன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்கிறார்கள். அவளும் இடைக்கிடை கைகால் கட்டுடன் தரையில் இரத்தம் ஒழுகக் கிடக்கும் இவனையும் பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவன் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்பாமல் மேலே டீ .வீ யைப் பார்க்க அதில் அவர்கள் கோப்பை நீருக்குள் கிடக்கும் சிகப்பு வைனில் வெந்த சிப்பியை எடுத்து முள்ளுக்கரண்டியால் பிளந்து சதையை குத்தி சாப்பிடுகிறார்கள்..........! மலர் .........🪷 4.
  23. நானும்.... சீனா, தனது ஆயுதங்களை இஸ்ரேலில் பரீட்சித்துப் பார்க்கிறது என்றே நினைக்கின்றேன். 48 மணித்தியாலத்தில் போர் முடியும் என்று கணித்து, களத்தில் குதித்தவர்களுக்கு... இரண்டு கிழமை ஆகியும், இழுபறியில் நிற்பது அதிர்ச்சியாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.