All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 2012 இல் போன போது உச்ச மாடியில் இருந்தது. நீங்கள் வருவதை அறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்கள் போலும்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
King of conspiracy என்டு சொல்லுவாங்கள். இப்பிடி போட்டுத் தள்ளுறியலே. முடியல. 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்! கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!
-
ஆடுகளம்
- Today
-
பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயங்கள்
பல வடிவ கேடயங்களும் அவற்றோடு பாவிக்கப்பட்ட வாள்களும்:
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Error
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர். தொடர் சொதப்பலால் பிரெஷர் அதிகமாகி சாம்சனை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்தார். இண்டைக்கு சாம்சன் இல்லாவிட்டால் இந்தியா வீட்டை. அதுவும் ஆட்ட முடிவில் முட்டுகாலிட்டு சஞ்சு செலிபிரேட் பண்ணியது, மைதானத்தில் வந்து “ஜெய் ஶ்ரீராம்” கோசம் போடும் காவாலிகளுக்கு செம்ம கடுப்பை கொடுத்திருக்கும்😂. என்னதான் சப்பாத்திகள் உருட்டினாலும் உலக கோப்பையை வெல்ல மாட்டுகறி தேவை (பதான்ஸ், சஞ்சு, சிக்கா, ஷமி). இந்திய வெண்டது சோகம் எண்டாலும் இப்படி சில சின்ன சந்தோசங்கள், எனக்கும் புள்ளி வேற எனவே அதிக சோகம் இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் அதிரடியான 73 (43 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டெவால்ட் பிறெவிஸின் விளாசலான 42 (18 பந்துகள்) ஓட்டங்களுடன், றயான் றிக்கெல்டனின் வேகமான 31 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும் , ஜோர்ஜ் லிண்டியின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா மற்றும் இன்றைய போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, றொஸ்டன் சேஸின் வேகமான 40 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 37 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 34 (19 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் நிதானமான 32 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் மின்னல்வேக 27 (12 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 97 (50 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வேகமான 27 (15 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவானது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சப்பாத்தி கடைசி நேரத்தில் வென்றுவிட்டது. தாங்கள் கோப்பையை தூக்க வேண்டும் எனும் உள் நோக்கத்துடன் அரை இறுதி போட்டிகளை தமது மண்ணில் வைத்து உள்ளார்கள். இறுதி போட்டியும் அங்கு தானே.
-
குட்டிக் கதைகள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர். முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன. ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர். விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது. இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு (🐍THE COBRA EFFECT🐍) என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்சார்பு வாழ்கை
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மிக்க நன்றிங்க....உங்க மந்திரம்...எனக்காகிவிட்டது ...சஞ்சு ..மலையாளியல்லே...லேசாக அசைக்க முடியாது
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம் 1 மார்ச் 2026, 08:20 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார். தாக்குதல்களின் போது, இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளது. "பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது," என்று இரானிய ராணுவம் கூறியது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், "அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'உண்மையான வாக்குறுதி 4' நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளைக் குறிவைக்கிறோம்" என்று கூறியது. அதே நேரத்தில், மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. "ஐக்கிய அரபு அமீரகம், தோஹா மற்றும் பஹ்ரைனில் உள்ள தனது குடிமக்களை 'உள்ளேயே பாதுகாப்பாக இருக்க' அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்துகிறது," என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் படக்குறிப்பு,இரான் குறிவைத்த நாடுகள் இதற்கிடையில், இரான் தற்காப்புக்காக அனைத்து ராணுவ வழிகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் போன்ற நாடுகளில் உள்ள தனது சகாக்களை அராக்சி அழைத்துப் பேசியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க "தன்னுடைய சுய பாதுகாப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் கீழ் அதன் அனைத்து தற்காப்பு மற்றும் ராணுவ திறன்களையும்" பயன்படுத்தும் என்று அந்த அறிக்கை இந்த நாடுகளிடம் கூறியது. அந்த அறிக்கையின்படி, "அமெரிக்காவும், இஸ்ரேலும் இரான் மீதான தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள தளவாட வசதிகள் மற்றும் நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது" அவர்களின் பொறுப்பு என்பதை அராக்சி இந்த நாடுகளுக்கு "நினைவூட்டினார்". இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த அறிக்கைக்கு முன், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தாக்குதல்கள் மற்றும் சைரன்களின் சத்தம் கேட்டது. "நாட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன." என்று கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு இரானிய ஏவுகணையை இடைமறித்தது," என்று ஒரு கத்தார் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார். கத்தார் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளமானது, மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் வான் நடவடிக்கைகளின் தலைமையகமாகும். படக்குறிப்பு,குவைத் நெடுஞ்சாலையில் நடந்த தாக்குதலின் புகைப்படம் குவைத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் படங்களை பிபிசி பெற்றுள்ளது, அதில் எரிந்த லாரியும் அடங்கும். முன்னதாக, குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-அத்வான் ஒரு பேஸ்புக் பதிவில், "அலி அல்-சலேம் விமானத் தளம் (அமெரிக்க விமானப்படை இருக்கும் இடம்) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டது, ஆனால் குவைத் விமானப் பாதுகாப்புப் படைகள் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்தன." என்று கூறினார். இதற்கிடையில், பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் அவசர நிலை எச்சரிக்கை பற்றிய தகவலை வெளியிட்டது. பஹ்ரைனும் அதன் குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தது. "அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் ஏவுகணைத் தாக்குதலின் இலக்காக இருக்கிறது," என்று பஹ்ரைனின் தேசிய தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. "கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "குடிமக்கள் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளைக் கண்காணிக்கிறது. படக்குறிப்பு,பஹ்ரைனில் பதிவான காட்சி பஹ்ரைன் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் முன்னர் எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலால்" நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை திறம்பட எதிர்கொண்டு பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன." "அபுதாபியின் குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததால், சில சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது மற்றும் ஒரு ஆசிய நாட்டவரின் உயிரிழந்தார்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம், இது ஆபத்தை தூண்டும் செயல் என்றும் இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் தெற்கே அல் தஃப்ரா அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த தளத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் எங்கே உள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைன் ஆகும். கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமும் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும். துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் ஒரு அதிகாரப்பூர்வ அமெரிக்க இராணுவத் தளம் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் முக்கிய அமெரிக்க கடற்படைத் துறைமுகமாகும். இராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது இருப்பைப் பேணுகிறது. வடக்கு இராக்கில் உள்ள எர்பில் விமானத் தளமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கிய அமெரிக்க தளமாகும். சௌதி அரேபியாவில், 2,300-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் சௌதி அரசாங்கத்துடன் இணைந்து வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகின்றன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாகும். ஜோர்டானில் உள்ள முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளம் லெவண்ட் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க விமானப்படை மையத்தின் 332வது விமானப் பயணப் பிரிவுக்கு முக்கியமானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டிவிக்கு சேதம் இல்லை, வாங்கோ வெண்டிட்டியள் 😂
-
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
37 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது; எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிபொருள் விநியோகஸ்தர் சங்கம் 01 Mar, 2026 | 06:07 PM (இராஜதுரை ஹஷான்) மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும் தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா குறிப்பிடுகையில், ஞாயிற்றுக்கிழமை (01) என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும். நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐ.ஓ.சி நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும். பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும், முன்னரே தீர்மானித்தபடி நாளை (02) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை என்றார். https://www.virakesari.lk/article/239911
-
முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா 01 Mar, 2026 | 05:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஒரு மாதத்துக்கும் அதிகளவில் எரிபாெருட்கள் கைவசம் இருக்கின்றன. அதனால் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அதேநேரம் யாராவது எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக மக்கள் பதற்றமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் இருக்கிறார்கள். ஆனால் தேவையற்ற பதற்றத்துக்கு ஆளாக தேவையில்லை. ஏனெனில் எங்களிடம் ஒரு மாதத்துக்கும் அதிக எரிபொருள் கைவசம் இருக்கிறது. பெற்றோலை பொறுத்தவரை தற்போது கைவசம் இருக்கும் தொகையுடன் தற்போது நாட்டை நெருங்கிவரும் பெற்றோல் கப்பலுடன் 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல் எம்மிடம் இருக்கிறது. அதேபோன்று டீசல் 31 நாட்களுக்கும் சுப்பிரி டீசல் 72 நாட்களுக்கும் விமானங்களுக்கான டீசல் 47 நாட்களுக்கும் எங்களது கைவசம் இருக்கிறது. அதனால் மக்கள் பதற்றமடைய எந்த தேவையும் இல்லை. அதேநேரம் இந்த மாதம் வரை நாங்கள் கொள்வனவு கட்டளை பிரப்பித்து, எங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருக்கும் எரிபொருள் கப்பல்கள் எதுவும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. அவை அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தே வருகின்றன.அதனால் தற்போதைக்கு எரிபொருள் நிறைவடையும் எந்த பிரச்சினையும் எங்களுக்கு எற்படப்போவதில்லை. என்றாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நாங்கள் எரிபொருள் விநியோகிப்பதில்லை. என்றாலும் மக்கள் வழமைக்கு மாற்றமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தமையாமல் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தோம். இன்று பொயா விடுமுறை தினமாக இருந்தாலும் இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும். அதனால் மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல தேவையில்லை. அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் முன்னர்போன்று போத்தல்களுக்கு எரிபொருளை கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். அதனால் போத்தல்களுக்கு எரிபொருள் எடுத்துச்செல்வதை நிறுத்துமாறு நாங்கள் உத்திரவிட்டிருக்கிறோம். அதற்காக பொலிஸாருக்கும் உத்தரவிட்டிருக்கிறோம். யாராவது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். எனவே மக்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது, சிலவேளை சிறைத்தண்டனைக்கும் உள்ளாகலாம். அதேநேரம் யாராவது போத்தல்களுக்கு எரிபொருள் எடுப்பதை கண்டால், அவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதாவது, போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கியது உறுதிப்படுப்பத்தப்பட்டால், அந்த நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை தடை செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுதொடர்பில் தேடிப்பார்க்க இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். எனவே யாராவது தேவையில்லாமல் எரிபொருள் சேகரித்து வைத்திருப்பதை கண்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். அனைவரும் சட்டத்துக்கு சமமானவர்கள். அதனால் யாராவது சட்டத்துக்கு மாற்றமாக எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால், அவர்களின் வீடுகளுக்கு சென்றாவது சேகரித்து வைத்திருக்கும் தொகைக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார். எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை வாளினால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்! 01 Mar, 2026 | 04:13 PM களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" எனப்படும் நபர், வீட்டின் உரிமையாளரிடம் வாங்கிய 30,000 ரூபா கடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது, அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே திடீரெனத் துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளரைச் சுட முயற்சித்துள்ளார். அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அங்கிருந்த கதிரை ஒன்றினால் துப்பாக்கிதாரியைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த வாளை எடுத்து அவர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, உரிமையாளர் தாக்கியதால் காயமடைந்த துப்பாக்கிதாரி, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். தகவலறிந்து விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் இருந்த சந்தேக நபரை ஒரு பிஸ்தோல் ரகத் துப்பாக்கி மற்றும் 4 ரவைகளுடன் கைது செய்தனர். காயமடைந்த சந்தேக நபர் அலவ்வ, அளுத் வீதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதுடன், அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார். கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய "பெத்தா" எனும் நபரை கைது செய்யக் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை வாளினால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!
-
-
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்; சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்தல் 01 Mar, 2026 | 04:18 PM (எம்.நியூட்டன்) வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் தமக்கான முதலீட்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் இன்றும் பல அதிகாரத்துவச் சவால்களை எதிர்கொள்கின்றனர். அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் செயன்முறையை நாம் விரைவுபடுத்தாவிட்டால், முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படும். எனவே, இந்த அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் மற்றும் தடைகள் இயலுமான வரை விரைவாகக் களையப்பட வேண்டும். சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலகட்டத்தில், அவர்கள் மீளத் திரும்புவதற்கு முன்னதாகவே எவ்வித களநிலை ஆய்வுகளோ அல்லது மக்கள் கலந்துரையாடல்களோ இன்றி, வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் மக்களின் காணிகள் இத்திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்குத் தீர்வு காணும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தச் செயன்முறைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்; சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 03:12 PM இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த 27ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்துக்காக இந்த கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் கப்பலை வரவேற்றது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள SAIL TRAINING SHIP வகைக்குரிய ‘INS TARANGINI’ என்ற கப்பல் 54 மீற்றர் நீளம் கொண்டதுடன், 36 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது. மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Nitin Gajjar கடமையாற்றுகின்றார். குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கடற்படை பயிற்சி அதிகாரிகள் மற்றும் Sea Cadets கப்பலில் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறனைக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் கப்பலின் பணியாளர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர். இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் டி,விலை இல்ல கம்ப்யூட்டரை சும்மா நோண்டுகின்றேன் ...எட்டிப் பார்க்கப் போனால் திலக்வர்மா அவுட்டயிட்டான்...இனி மச் முடியத்தான்...டி.வி நிற்பாட்ட..
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி Mar 1, 2026 - 09:17 PM ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க இராணுவ மரபுகளின்படி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு 24 மணி நேரம் கழிந்த பின்னரே பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். "அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை" என அவர் தெரிவித்திருந்தார். இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி
-
தமிழக இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தமிழக இழுவைப்படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 01 Mar, 2026 | 11:37 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை படகு மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று சனிக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில் கலந்துக் கொண்ட இந்திய நாட்டுப்படகு மீனவர் சங்கம் மற்றும் தமிழக கடல்சார் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் மஹஜர் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இரு தரப்பு மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்கள். மீனவர் பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும். எதிர்வரும் மே மாதத்துக்கு பின்னர் இந்தியா தமிழகத்துக்கு செல்லவுள்ளேன். இதன்போது இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளோம். தேவையாயின் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். நீதிமன்ற விடயத்தில் எம்மால் தலையிட முடியாது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டப்பணம் அறவிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தண்டப்பணம் குறித்து அமைச்சு மட்டத்தில் கவனம் செலுத்தப்படும். இந்திய மீனவர்களின் இழுவை படகு பயன்பாட்டால் இலங்கையின் மீன் மற்றும் கடல்வாழ் வளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. கடல்வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆகவே இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். தமிழக இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி! Mar 1, 2026 - 08:31 PM ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு இன்று (01) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மேலும் 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவராவர். அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர். எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, இரண்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் ஒட்டுமொத்தமாக 541 ட்ரோன்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 506 ட்ரோன்கள் இடைநடுவிலேயே வீழ்த்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 35 ட்ரோன்கள் அமீரகத்தின் நிலப்பரப்பிற்குள் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட நிலையில் செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் நமோ பகவதே காளி சாமுண்டி தேவி பைரவி தேவி ஓங்கார நீலி சத்தி மம வசமாயிக்க சுவாஹா சஞ்சு சாம்ஸன்சை அவுட் ஆக்கி விடுதாயே! உந்த ரேட்ல இன்னும் இரெண்டு ஓவர் போதும் இந்தியா வெல்ல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அய்யய்யோ..... பையா ...பையா பையப்பைய நடந்துவா இந்தியா கஸ்டப்படுகுது கண்டிப்பா வரவேணும் கையிலை தேசிக்காய் வேப்பிலையுடன்.. கையோடை ஜக்கம்மவையும் கூட்டிவா காம்பீரு முகம் தொங்கிட்டிடுது... சூரியாவும் சுவிங்கத்தை துப்பிட்டான் ..தாமதம் வேண்டாம் பையா ஜக்கம்மா வந்து கட்டறுத்து.. வெற்றி தர வேணும் வெல்லும் புள்ளி நான் இரண்டெடுக்க வேணும்.. பையா பையா ஓடிவா..