Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்? பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது. இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது. அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை. ஆனால், இரானியப் போர்க்கப்பலான 'தேனா' உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்காக இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை விமர்சித்துள்ளார். "இரான் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் அமெரிக்கா, கடலில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த, 130 கடற்படையினரை ஏற்றிச் சென்ற 'தேனா' எனும் போர்க்கப்பல், சர்வதேச எல்லைக்குள் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இந்த சூழ்நிலைக்காக கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,AP மோதி அரசு பற்றி கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இந்தத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோதியை விமர்சித்துள்ளனர் இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "இந்த இரானிய மாலுமிகள் ஒரு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தனர். நாம்தான் அவர்களை அழைத்தோம், அவர்கள் நமது விருந்தினர்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, ஓர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அவர்கள் கப்பலைத் தாக்கி அவர்களைக் கொன்றுள்ளது," என்று சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார். மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், இரானியக் கப்பலின் வீடியோவைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். "இந்தியாவின் அழைப்பின் பேரில் இரான் தனது கப்பலை அனுப்பியது. அமெரிக்காவால் இந்தக் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர். நமது விருந்தினர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் மோதி அமைதியாக இருக்கிறார்," என்று சஞ்சய் சிங் பதிவிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதியும் அரசாங்கம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார். பிரியங்கா பாரதி எக்ஸ் தளத்தில், "முழுமையாக ஆயுதம் ஏந்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், போர் அல்லாத நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பலை தாக்கியுள்ளது. இந்தியா ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது. மோதி அரசின் நிலைப்பாடு குறித்த விவாதம் அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளை இந்திய அரசாங்கம் 'தவறானவை' என்று குறிப்பிட்டுள்ளது. "அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேனலில், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர், இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியக் கடற்படைத் தளத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது" என்று அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை கண்டறியும் குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் பல நிபுணர்களும் முன்னாள் ராஜீய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் காட்டும் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் ராஜீய அதிகாரி கே சி சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார். "நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் உணர்வுகளை அமெரிக்கா புறக்கணிப்பதாக கன்வல் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் என்ன நடந்தது? புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கி ஏவுகணை பயன்படுத்தி இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார். இருப்பினும், மூழ்கடிக்கப்பட்ட இரானியக் கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை. முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய இரானியக் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா பிபிசி சிங்களாவிடம் தெரிவித்தார். "இந்தச் சம்பவம் எங்களது கடல் எல்லைக்கு வெளியே நடந்தது. ஆனால் எங்களது தேடுதல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் நடந்தது. எனவே எங்களது சர்வதேச கடமைகளின்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது," என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயிடம் தெரிவித்தார். "தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தவர்களை மீட்டோம். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது," என்றார் அவர். செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலின் ஆவணங்களில் சுமார் 180 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?
  3. வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 05:07 PM வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல இன்று வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குதல் ஆகிய பணிகளுக்காக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து செயற்படும் இந்த விசேட பிரிவுக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு
  4. "இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர் 05 Mar, 2026 | 01:43 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19வது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ABN) தலைவர் பேராசிரியர் நீல் ராபர்ட்சன், இலங்கைக்கும் தனக்குமான நீண்டகாலத் தனிப்பட்ட பிணைப்பைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 80களின் முற்பகுதியில் தனது மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் ஒரு மாணவனாக கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற காலத்தை அவர் நினைவுகூறவேண்டும். "கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் புகையிரதத்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தது, கண்டி ஏரிக்கரையில் தங்கியிருந்த போது வாரந்தோறும் வளர்ப்பு யானை ஒன்று வீட்டிற்கு வந்த நினைவுகள் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவில் கழித்த மதிய நேரங்கள் என இலங்கை எனக்கு என்றும் மறக்க முடியாத ஒரு நாடு". இலங்கையின் நட்புணர்வு, ஆர்வம் மற்றும் கற்கும் திறன் ஆகியவை ஒரு இளைஞனாக தன் மீது நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கல்வி மற்றும் மருத்துவ ரீதியான நீண்டகால ஒத்துழைப்பு காணப்படுகின்றது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரிட்டிஷ் மருத்துவக் குழுவினர் இந்த வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருவதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாம் இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். உலக அரங்கில் இலங்கை நரம்பியல் துறையின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது . ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்புகள் குறித்து எதிர்காலத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படும். பிரித்தானியாவின் கடும் குளிரான காலநிலையிலிருந்து தப்பி, இலங்கையின் அன்பான வரவேற்பிலும் இதமான காலநிலையிலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தமக்கும் ஏனைய பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக மேலும் தெரிவித்தார். "இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர்
  5. இலங்கை அருகே நிற்கும் ஈரான் கப்பல் பற்றி தி கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள். இது போர்கப்பல் அல்ல. ஆழ்கடல் கேபிள்களை பதிக்கும் கப்பல். கப்பல் இலங்கையின் territorial waters இனுள் நிற்கிறது. எஞ்சின் பழுது என கேப்டன் இலங்கையில் ஒரு துறைமுகத்தில் தரிக்க அனுமதி கோரியுள்ளார். என்ன முடிவு என ஜனாதிபதி+அமைச்சரவை கூடி ஆராய்கிறது. பிகு இதை இலங்கையில் கட்டிப்போட்டால் அதை இட்டு அமெரிக்கா பெரிதாக அலட்டி கொள்ளாது என நினைக்கிறேன். கடலில் பழுதடைந்த கப்பலில் உள்ள மாலுமிகளை பாதுகாக்கும் கடமை இலங்கைக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உட்பட அனைவரும் ஏற்பார்கள். இந்த கப்பலை அமெரிக்க நீர்மூழ்கியும் இலக்கு வைக்கவில்லை.
  6. வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு – நரம்பியல் மாநாட்டில் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் நெகிழ்ச்சி 05 Mar, 2026 | 04:43 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் ராபர்ட்சன், உலக பக்கவாத அமைப்பின் தலைவரும், நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் ஜெயராஜ் பாண்டியன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர, சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட நரம்பியல் ஆலோசகருமான பேராசிரியர் ரஞ்சனி கமகே, நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ உட்பட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நரம்பியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, வைத்தியத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணர்களுக்குப் பின்வரும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகரவுக்கு உயரிய பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இளம் நரம்பியல் நிபுணர்கள் மன்றத்தில் (Young Neurologists’ Forum) சிறந்த முறையில் ஆய்வுகளைச் சமர்ப்பித்த வைத்தியருக்கு விருது வழங்கப்பட்டது. நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட சிறந்த ஆய்வாளர்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கப்பட்டன. சிறுவர்களுக்கான வலிப்பு நோய் அறுவை சிகிச்சை குறித்து "சாத்தியங்களின் கலை" (The Art of the Possible) என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரைக்காக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஆலோசகர் சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இந் நிகழ்வில், இலங்கையின் நரம்பியல் துறை இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமான மூத்த நிபுணர்களின் சேவை இதன்போது விசேடமாக நினைவுகூரப்பட்டது. இலங்கை நரம்பியல் துறையின் பிதாமகரான வைத்தியர் ஜே.பி. பீரிஸ் மற்றும் நாட்டின் முதல் பெண் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி கமகே ஆகியோரின் பங்களிப்புகள் மாநாட்டில் விசேடமாகப் போற்றப்பட்டன. இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளமே இன்று நவீன நரம்பியல் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவடையக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் பக்கவாத (Stroke) சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்த உலக அளவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆற்றி வரும் சேவை பாராட்டப்பட்டது. "வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் (Survival curves) அல்ல; அது தைரியம், அன்பு மற்றும் நோயாளியின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது பற்றியது. இதுவே ஒருங்கிணைந்த நரம்பியல் துறையின் உண்மையான வெற்றி" என இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நினைவு தப்பிய நிலையில் (Coma) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய் பிழைப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையிலும், வைத்தியக் குழுவின் தளராத முயற்சியால் 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் தனது தாயின் நினைவு நாளில் அந்த வைத்தியருக்கு இனிப்பு வழங்க வந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது. வைத்தியக் கல்வியில் இளம் நரம்பியல் நிபுணர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. இளம் வைத்தியர்களை வழிநடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், சிறந்த ஆய்வுக்காக வைத்தியர் ஷிராத் மதுரபெரும விருது பெற்றார். நரம்பியல் சிகிச்சை என்பது வைத்தியசாலை வார்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வலிப்பு நோய் (Epilepsy), பக்கவாதம் (Stroke) மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்து நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து, நரம்பு மண்டலம் சார்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள சி.டி ஸ்கேன் (CT Scan) வசதிகளை மேம்படுத்தவும் இலங்கை வைத்தியச் சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது. இலங்கையில் முதல் முறையாக பெப்ரவரி 22ஆம் திகதி "உலக மூளைக்காய்ச்சல் தினமாக" (World Encephalitis Day) அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் மற்றும் மல்டிமீடியா துண்டுப் பிரசுரங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டன. நாட்டின் வைத்தியத் துறை எதிர்கொள்ளும் மிகமுக்கியமான சவால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆளுமைகள் குறித்த முக்கிய தகவல்கள் முன்வைத்து, சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தனது உரையில் நாட்டின் தற்போதைய வைத்திய பற்றாக்குறை குறித்து கவலை வெளியிட்டார். ஏனைய வைத்திய துறைகளை விட நரம்பியல் துறையிலேயே மிக அதிகமான நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இளம் நரம்பியல் நிபுணர்களில் சுமார் 60 சதவீதமானோர் தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் அதிக பணிச்சுமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்துடன் (ABN) மீண்டும் பலமான கல்விசார் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச நிபுணர்களின் அனுபவங்களை இலங்கையில் உள்ள இளம் வைத்தியர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனது வைத்தியப் பயணத்தில் நரம்பியல் துறையைத் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், மாணவர் பருவத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட அரிய வகை நரம்பியல் பாதிப்பை (Ramsay Hunt Syndrome) அவதானித்த தருணமே தனது வாழ்நாள் உந்துதலாக அமைந்தது என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் பல்நோக்கு கூட்டாண்மை மூலம் இலங்கையின் நரம்பியல் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுவதோடு, சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு வைத்தியக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான அழைப்பாகவும் இலங்கையின் நரம்பியல் துறையை உலகத் தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு மைல்கல்லாக அமையும். "வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை (Clinical Protocols) பின்பற்றுவது மட்டுமல்ல; அது தைரியம், அன்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றால் ஆனது" என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கும். இந்தத் தனித்துவமான நோயாளி அனுபவத்தின் ஊடாக, "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) என்பதன் முக்கியத்துவத்தை மாநாடு வலியுறுத்துவதாக காணப்படும். பல்துறை நிபுணர்களின் கூட்டு ஒத்துழைப்பு (Multidisciplinary Collaboration) இளம் வைத்தியர்களுக்கான கல்வி மற்றும் வழிகாட்டல் (Academic Mentorship) இவை அனைத்தும் ஒன்றிணையும் போது, வைத்திய அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதும், நோயாளிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை (Transformative Outcomes) உருவாக்க முடியும் என்பதும் இம்மாநாட்டின் பிரதான செய்தியாக காணப்படுகின்றது. இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் கடந்த காலங்களில் அடைந்த கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இதன்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், மக்களின் விழிப்புணர்வு மற்றும் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சி ஆகியவற்றில் சங்கம் காட்டி வரும் அக்கறை பாராட்டப்பட்டுவதாக மேலும் தெரிவித்தார். (படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்) வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு
  7. காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி 05 Mar, 2026 | 12:22 PM காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சிற்றுண்டிச்சாலை புனரமைப்பு: ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது. காத்தான்குடி மத்திய கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் சிற்றுண்டிச்சாலை கட்டிடத்தை மீள்புனரமைப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதியுதவியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் 'மானிட பாதுகாப்புக்கான அடிமட்டத் திட்டங்களின்' கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது. இந்த புனரமைப்பு திட்டத்தை ஜப்பானிய தூதரகம் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். தையூப் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். • நிதி ஒதுக்கீடு: ரூபா 12.6 மில்லியன். • நோக்கம்: மாணவர்களின் சுகாதார மற்றும் போசாக்குத் தேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் நவீன சிற்றுண்டிச்சாலை வசதிகளை ஏற்படுத்துதல். • நடைமுறைப்படுத்தல்: காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் (MPCS) கடந்த 2025 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரவூப் ஏ. மஜீத் மற்றும் முன்னாள் செயலாளர் சபீல் நளீமி ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜப்பான் தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, ஜப்பான் தூதரகம் இந்த நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டோர் இந்த ஒப்பந்தக் கைச்சாத்திடும் நிகழ்வில் பின்வரும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்: • எம்.என்.எம். பௌசான் (காத்தான்குடி மத்திய கல்லூரி பிரதியதிபர்) • ரவூப் ஏ. மஜீத் (காத்தான்குடி சம்மேளன பிரதித் தலைவர்) • எம்.வை.எம். ரமீஸ் (பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி) "இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக இந்த உதவி அமைந்துள்ளது. இத்திட்டம் எமது மாணவர்களின் சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், சிறந்த கற்றல் சூழலை உருவாக்கவும் பெரிதும் உதவும்" என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது. பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள் மற்றும் காத்தான்குடி பொதுமக்கள் சார்பில், இந்த மகத்தான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பழைய மாணவர் சங்கம் - காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவித்துள்ளது. காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி
  8. Today
  9. 33 பந்துகளில் சதம்: புதுமை மற்றும் பலத்துடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஃபின் ஆலன் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மார்ச் 2026, 01:32 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் பல்வேறு வண்ணங்கள் பூசி ஹோலி கொண்டாடிக்கொண்டிருக்க கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம் முழுவதும் கருப்பின் ராஜ்ஜியமாக இருந்தது. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் எளிதாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 'பிளாக் கேப்ஸ்' என்று அழைக்கப்படும் நியூசிலாந்து அணி. தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அந்தக் கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஃபின் ஆலன். 33 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார் அவர். சாதனைகள் படைத்தது மட்டுமல்லாமல், கொல்கத்தா ரசிகர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டி நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார். சாதனை சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 170 என்ற இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. டிம் செய்ஃபர்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வெற்றிக்கான பவுண்டரியோடு 33 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்தார் ஃபின் ஆலன். ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் பவுண்டரி அடித்து தன் ஆட்டத்தைத் தொடங்கியவர், மொத்தம் 10 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார். ஃபின் ஆலன் இன்னிங்ஸ்: 4, 1, 1, 6, 1, 1, 0, 6, 1, 6, 4, 4, 4, 4, 0, 1, 1, 4, 1, 6, 0, 2, 0, 1, 6, 4, 6, 1, 4, 4, 6, 6, 4 ஒவ்வொரு பௌலருக்கு எதிராகவும் ஆலன்: vs ககிஸோ ரபாடா - 7 (5) vs மார்கோ யான்சன் - 31 (7) vs லுங்கி இங்கிடி - 8 (4) vs கார்பின் பாஷ் - 29 (8) vs கேஷவ் மஹராஜ் - 25 (9) இப்படியாக வலது கை வேகம், இடது கை வேகம், சுழல் என தான் சந்தித்த அனைத்து வகையான பந்துவீச்சையும் அடித்து ஆடினார் ஆலன். சில ஷாட்களின் மூலம் தன் தைரியத்தையும் வெளிப்படுத்தினார். ரபாடாவின் பந்தை நிதானமாக தேர்ட் மேன் திசையில் தொட்டுவிட்டு பவுண்டரி ஆக்கினார். ஒரு ஸ்லிப்பும், கல்லியும் இருந்தபோதிலும் தைரியமாக அந்த ஷாட்டை அடித்தார். அதேபோல், இங்கிடி பந்துவீச்சில் ஒரு பந்தை ஸ்கூப் ஆடி சிக்ஸர் அடிப்பார். இங்கிடி 'ஸ்லோயர் பால்' வீசுவதில் தேர்ந்தவர். ஆலனுக்கு அப்படியான பந்துகள் தான் முன்பு வீசிக்கொண்டிருந்தார். வேகம் குறைவான பந்துகளை ஸ்கூப் ஆடுவது ஆபத்தானது. ஏனெனில், பந்து அதிக தூரம் போகாது. அப்படியிருக்கும்போது இங்கிடியின் பந்தில் ஸ்கூப் ஆடியது மிகவும் தைரியமான முடிவு. அவர் அடித்த பந்து வேகமாக வந்தது அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 10 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடித்தார் ஃபின் ஆலன் ஆலனின் ஆட்டம் இன்றைய காலகட்டத்தின் ஒரு டி20 வீரரின் ஆட்டமாகவே இருந்தது. ஸ்கூப், பேடில் ஸ்வீப், ஃபிளிக், புல் என டி20 ஃபார்மட் ஷாட்களை நிறையவே ஆடினார். ஆனால், பெரும்பாலும் டிரைவ்கள் ஏதும் ஆடவில்லை. அவருடைய சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பெரும்பாலும் விக்கெட்டுக்குப் பின்னாலும், முன்னாலுமே வந்தன. கவர் திசையில் பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடிக்கவில்லை. அதேபோல், ஸ்கொயர் லெக் முதல் மிடிவிக்கெட் வரையுமான இடங்களிலும் அவர் பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடிக்கவில்லை. முழுக்க முழுக்க பலம், புதுமை மற்றும் தைரியம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலன் 303.03 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தன் சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியில் ஃபின் ஆலன் படைத்த ஒருசில சாதனைகள் டி20 உலகக் கோப்பை வரலாற்றின் அதிவேக சதம் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது (இணைந்து) அதிவேக சதம் இரு முழுநேர ஐசிசி உறுப்பினர் நாடுகள் ஆடிய போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக டி20 சதம் டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக பவுண்டரிகள் + சிக்ஸர்கள் அடித்த வீரர் - 18 ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர் - 88 ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 20 தொடர்ந்து ஜொலிக்கும் செய்ஃபர்ட் - ஆலன் கூட்டணி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆலன் & செய்ஃபர்ட் இணைந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் 463 ரன்கள் எடுத்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதில் ஆலன் மட்டுமல்ல செய்ஃபர்ட்டின் பங்களிப்புமே முக்கியமானது. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து அந்த அதிரடியைத் தொடங்கியவர் செய்ஃபர்ட் தான். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பார்ட்னர்ஷிப்பாக செய்ததை, அவர்கள் இருவரும் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார்கள். இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும்போது பல தொடக்க ஜோடிகளின் மீது கவனம் இருந்தது. அபிஷேக் ஷர்மா & இஷன் கிஷன், ஜாஸ் பட்லர் & ஃபில் சால்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் போன்ற இணைகள் பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைப் போல் இருக்கவில்லை. அபிஷேக் ஷர்மா தொடர்ந்து 3 போட்டிகள் டக் அவுட் ஆனார். பட்லர், ஃபில் சால்ட் இருவரும் எடுத்த ஸ்கோரை சேர்த்தாலும் அது 200 ரன்களைத் தொடவில்லை. மார்ஷ் காயத்தால் அவதிப்பட, டிராவிஸ் ஹெட் கூட ஒரு போட்டியில் மட்டுமே சோபித்தார். மற்ற அணிகளில் ஒரு ஓப்பனர் சிறப்பாக ஆட, இன்னொரு ஓப்பனரிடம் இருந்து பங்களிப்பு வராமல் இருந்தது. உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளைச் சொல்லலாம். இப்படியிருக்கையில் நியூசிலாந்தின் இரு ஓப்பனர்களுமே தொடர்ச்சியாக இந்த உலகக் கோப்பையில் பெரிய ஸ்கோர்கள் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரின் டாப் 5 பேட்டர்களில் இவர்கள் இருவரின் பெயருமே இருக்கிறது. ஆலன் 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே 7 இன்னிங்ஸ்களில் செய்ஃபர்ட் 274 ரன்கள் எடுத்திருக்கிறார். இருவருமே 160+ ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்திருக்கிறார்கள். ஃபின் ஆலன் 203.52 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த 139 வீரர்களில் 200+ ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் 'ஒரே வீரர்' ஃபின் ஆலன் மட்டுமே! பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் அடித்திருக்கிறார் டிம் செய்ஃபர்ட் மேலும், ஆலன் & செய்ஃபர்ட் இணைந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் 463 ரன்கள் (கிரிக்பஸ் தரவுகளின்படி) எடுத்திருக்கிறார்கள். அதை 10.63 என்ற ரன்ரேட்டில் எடுத்திருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பார்ட்னர்ஷிப் அடித்த அதிக ரன்கள் இதுதான். இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு இவர்கள் அடித்த 117 ரன்கள் தான் ஒரு டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் ஒரு பார்ட்னர்ஷிப் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 'ஹோம் கிரவுண்ட்' கொல்கத்தாவில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட் இருவருமே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்கள். ஃபின் ஆலன் 2 கோடி ரூபாய்க்கும், செய்ஃபர்ட் 1.5 கோடி ரூபாய்க்கும் தங்களின் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டார்கள். 2024 சீசனில் அவர்கள் ஐபிஎல் கோப்பை வென்றதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர்களுள் ஒருவரான ஃபில் சால்ட் இடத்தை அந்த அணியால் கடந்த ஆண்டு நிரப்ப முடியவில்லை. நல்ல அதிரடி தொடக்கம் கொடுக்ககூடிய கீப்பராக அவர்கள் டி காக்கை வாங்கினார்கள். ஆனால், அவர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால், இந்த சீசனுக்கான ஏலத்தில் அப்படியான இரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர்களை அவர்கள் வாங்கினார்கள் - ஆலன் & செய்ஃபர்ட். சுனில் நரைன், கேமரூன் கிரீன், மதீஷா பதிரானா (ஃபிட்டாக இருக்கும்பட்சத்தில்) ஆகிய வெளிநாட்டு வீரர்கள் கொல்கத்தாவின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அந்த மீதமொரு இடத்துக்கு ஆலன் மற்றும் செயஃபர்ட் இருவருக்குமே போட்டியிருக்கும் என்று கருதப்பட்டது. அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களின் ஐபிஎல் ஹோம் கிரவுண்டான ஈடன் கார்டனிலும் இருவரும் சிறப்பானதொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்கள். வரப்போகும் ஐபிஎல் சீசன் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அந்த ஊர் மக்களுக்குக் காட்டி ஹோலியோடு சேர்த்து இரட்டிப்பு கொண்டாட்டத்தை கொல்கத்தாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 33 பந்துகளில் சதம்: புதுமை மற்றும் பலத்துடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன்
  10. ooreSdsptn9u29gir6hr36f4771i0:l503mfue 221l213852u7f,0v8é6 a · "நான் ஆடம்பரத்தை விரும்புபவனல்ல. எளிய குடுபத்தினனாக இருந்து இப்போது 30, 40 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிய வாய்ப்பிருக்கும்போது இது சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிதென்று எனக்குத்தோன்றும். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய செல்வம் எனத்தோன்றும்.. அதேபோல் லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துகொண்டு நான் என் நண்பர்கள் மத்தியில் செல்வதில்லை அது எனக்கு குற்ற உணர்வைத்தருவதாக இருக்கிறது. அவர்களில் பலர் இன்னமும் உணவு கொண்டுசேர்க்கும் ஊழியர்களாக பணிசெய்கிறார்கள். அவர்களுடன் நான் எளியவனாகவே, என்றும் அவர்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.. " - வருண் சக்கரவர்த்தி. 👏" வருண் தன்னோட திடீர் ஆடம்பரத்துல இருந்து விலகி இருக்கறதா சொல்றார். இன்னொரு விசயம் பகிர்ந்திருந்தார், 'நான் எந்த வேலையும், Carrer ம் இல்லாம இருந்தப்ப என் காதலிகிட்ட சொன்னேன். என்னை நம்பாதே, உன்ன பாத்துக்க முடியுமா தெரியலைன்னு. அவ சொன்னா, நீங்க கிரிக்கெட் ஆடி 6000 சம்பாதீங்க, நான் வேலைக்குப்போயி 15,000 சம்பாதிக்கறேன் குடும்பத்த நான் பாத்துக்கறேன்னு.' 👏" இன்னைக்கி அவர் மனைவி சகல வசதிகளோட நிறைவா இருப்பாங்க இல்லையா... 👏" ஆண்களுக்கு எல்லா பெண்களும் தேவதைகள்தான். ஆனால் உண்மையான தேவதைகள் சில ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தேவதைகள் இறக்கைகளோட இருக்கிறார்கள். 👏"
  11. ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா - இந்தியா மறுப்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 03:06 PM ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவை முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் போலியான தகவல்கள் என இந்தியா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் கேர்ணல் டக்ளஸ் மெக்ரிகோர் 'ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்' (OAN) என்ற அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களே இந்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன. ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் அனைத்து இராணுவத் தளங்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக மெக்ரிகோர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அமெரிக்க கடற்படை தற்போது இந்தியத் துறைமுகங்களை ஒரு பாதுகாப்பான தளமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சின் 'உண்மைச் சரிபார்ப்பு' பிரிவு கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை. இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதுகைகள் குறித்து இந்தியா தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றது. ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் 6 ஆவது நாளாகத் தொடர்கிறது. இந்தியாவில் நட்பு ரீதியான விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஈரானில் 1,000 க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் ஒரு தொகுதியினரும், 06அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா - இந்தியா மறுப்பு
  12. சீமான் திருமணம் செய்தபின் எப்போது விஜியுடன் தொடர்பில் இருந்தார்?? ஓம் சீமான் விஜய் மாதிரி கள்ள உறவில் இருக்கவில்லை விஜய் மாதிரி மனைவியை தள்ளி வைத்து காசு கொடுப்பதை நிறுத்தவில்லை புலவர் திருமணம் கடந்த உறவு என்று சொன்னதில் பல குழப்பங்கள் உள்ளது விஜய் மாதிரி மனைவியை ஏமாற்றி நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதையும் சொல்கிறார் பின்பு living together யும் சொல்கின்றார்
  13. ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா Mar 5, 2026 - 02:19 PM ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உள்விவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' என்ற போர்க்கப்பல் காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. இதில் குறித்த கப்பல் கடலில் மூழ்கியதுடன், அதிலிருந்த 32 பேரை உயிருடன் மீட்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கமைய, மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காலி தேசிய (கராப்பிட்டிய) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. இதேவேளை, தாம் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலிலேயே குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா நேற்றிரவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா
  14. ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்! மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒன் அமெரிக்கா ஓபன் நியூஸ் (OAN) அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் இந்தக் கூற்றை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. நேர்காணலின் போது, அமெரிக்கா தனது சொந்த தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் சேதமடைந்த பின்னர் இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக மெக்ரிகோர் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தக் கூற்றினை நிரகாரித்துள்ளது. அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அலைவரிசையான OAN இல் கூறப்படும் கூற்றுகள் போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் எச்சரிக்கிறோம் வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது. அதேநேரம், ஈரானிலும் பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திலும் அதிகரித்து வரும் மோதலை உடனடியாக நிறுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு செவ்வாயன்று அழைப்பு விடுத்தது. நீடித்த உறுதியற்ற தன்மை இந்திய குடிமக்கள், பொருளாதார நலன்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467283
  15. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையில் நடந்தது என்ன? ஆங்கிலமொழி கட்டுரை காணொளி வடிவில்👇 https://www.facebook.com/reel/2417312185358807
  16. நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம் 05 Mar, 2026 | 12:36 PM நேபாளத்தில் இன்று (5) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி முதலான கட்சிகள் களமிறங்கியுள்ளன. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும் 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்
  17. இரான் - அமெரிக்கா சண்டை, இங்கைதான் நடக்குது. இந்திய மீனவர்களையும்... இலங்கை கடற்பரப்புக்கு வர வேண்டாம் என்று சொல்ல வேணும்.
  18. நல்லூர் போகலாம்😂 - ஆனால் நேரடி விமானத்தில் அல்லது துருக்கி வழியே போக வேண்டி வரலாம்.
  19. சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் Mar 5, 2026 - 03:57 PM அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
  20. சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல் Mar 5, 2026 - 04:06 PM இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் பாராளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வௌியிட்டார். சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
  21. ஈரானின் ஷகீட் டிரோன்களை எதிர்பது பற்றிய வழிவகைகளை அரபு நாடுகளுடன் பகிர தன் அரசுக்கு செலென்ஸ்கி உத்தரவு. பல அரபு நாடுகளிடமும் இது சம்பந்தமாக பேச்சு. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்😂 வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் 😂 😂 இல்லை மாலுமிகளை இறக்கிய பின், கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்திற்கு கொண்டு போய் நங்கூரம் இட்டால் அமெரிக்கா அதிகம் டென்சன் ஆகாது என நினைக்கிறேன். இந்த பேரீச்சம் பழத்துக்கு போடும் கப்பல் யுத்தமுனைக்கு அப்பால் போர் முடியும் வரை முடக்கப்பட்டால் - அமெரிகா அதை சட்டை செய்யாது. இப்போ இருக்கும் நிலையில் ஈரானுக்காக இலங்கை அமெரிக்காவை பகைக்காது. அப்படி ஒரு நிலை வந்தால் அமெரிக்கா கேட்பதையே இலங்கை செய்யும். சீனாவும், ரஸ்யாவும் கூட அடக்கி வாசிக்க வீணா தலையை கொடுக்க இலங்கை விரும்பாது.
  22. நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும். இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும். ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂 இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣
  23. நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை Mar 5, 2026 - 01:58 PM புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி செயலிழந்து, அது கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியில் 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சில நிமிடங்களிலேயே நிலைமையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.