All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது தான் நான் விட்ட பிழை கந்தப்பு அண்ணா😞..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் கவனக்குறைவால் இந்த போட்டியில் வெல்வது மேற்கு இந்தியா என தெரிவித்து இருக்கிறீர்கள். இலங்கையா இங்கிலாந்தா என்றால் நீங்கள் நிச்சயம் இங்கிலாந்து அணியைத்தான் தெரிவு செய்திருப்பீர்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது இலங்கை அணிக்கு அவமானம்................. தொடக்க வீரர்கள் என்ன நினைப்பில் வந்து அவுட் ஆகி போனார்கள் தெரியல பவர்பிலே ஓவருக்கை முன்னனி விக்கேட்டுக்கள் போய் விட்டது..............கப்டன் அணிய வெற்றிக்கு அழைத்து செல்லுவார் என்று பார்த்தால் அவரும் அவுட்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
51 ரன்களால் இங்கிலாந்து வெற்றி .........! 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடரில் குறைந்த ஓட்டம் ஸ்ரீலங்கா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை 95 ஹா ஹா😄...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியா 97 தான் குறைந்த ஓட்டம். சிறிலங்கா 94-9
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1995 பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் கோப்பையில் தர்மசேன, சந்தன, வாஸ் இப்படி ஒரு நிலையில் இருந்து அணியை வெல்ல வைத்தார்கள். அதே போல் ஒரு rear guard action கடந்த 15 வருடத்தில் கூட இலங்கை அணி நடத்தி இருந்தது. இந்த அணியில் இப்படியான நெஞ்சுரம் மிக்க வீரர்கள் இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை தொடக்க வீரர் கமில் மிஸ்ஹாரா இந்த உலக கோப்பை முழுவதும் படு சுதப்பல்.............இவர் 20ஓவர் விளையாட்டுக்கு தகுந்த வீரர் கிடையாது ஒரு நாள் தொடருக்கு தகுதியான வீரர்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை கப்டன் இதுவரை ஒழுங்காக விளையாடவில்லை. .ந்த விளையாட்டில் அவர் கையில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது. இலங்கை படுதோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆனாலும் கஞ்சி வீணாகாது அப்படியே ஸ்ரீலங்காவுக்கு ஊத்திட வேண்டியதுதான் .........! 😂
-
விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி
இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட தொழிலாளியை எந்த நஷ்ட தொகையும் கொடுக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாவின் சட்டம் ஆட்சி செய்கின்ற நாட்டை பெயர் குறிப்பிடாமல் காப்பாற்றி தமிழ் பத்திரிக்கையின் மத நல்லிணக்கம் புல்லு அரிக்குது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை கப்டனும் அவுட் ஆகினால் இங்லாந் அமோக வெற்றி........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடப்பாவி ....... நான் இன்னும் இதைப் பார்க்கவில்லை .........ஹா ....ஹா ......! 😂 SL 52 / 6 ...... 8.4 ஓவர் . .......!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கையின் முன்னனி வீரர்கள் அவுட் நான் நினைக்கல இலங்கை அணி வெல்லும் என்று..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
SL 35/5 நானும் இங்கு சுகமே… நீ(ங்கள்) அங்கு சுகமா? 😂
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
34-5
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுக்கு முதல் நடந்த போட்டியில் கூட இங்லாந் குறைந்த ரன்ஸ் அடிச்சு இலங்கையை வென்றவை இதே மைதானத்தில் அதே நிலை இன்றும்...................... இலங்கையின் முன்னனி வீரர்கள் அவுட் நான் நினைக்கல இலங்கை அணி வெல்லும் என்று..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிறிலங்கா 22-4
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ENG 146 / 9 /..........20 ஓவர் ......! 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!
-
வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!
எனக்கு கீழே உள்ள பதிவில் முழுமையாக ஒப்புதல் இல்லை. ஆனால் அரச உத்தியோகத்திற்காக மட்டும் கல்வி கற்பது வீண்வேலை. புதிய திறன்களயும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் அறியாது சமூகத்திற்கு உதவமுடியாது. — #கறுப்பு_அங்கியும், #கையில_சுருட்டின_பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய 'கௌரவ' பிச்சைக்காரர்கள்! இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்... ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே... இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச் சொல்லித்தான் ஆகோணும். எந்த ஸ்கில்லும் (Skill) இல்லாம, வெறுமனே மனப்பாடம் பண்ணி வாங்குன இந்தப் பட்டத்தை வைச்சுக்கொண்டு இனி என்னத்தைச் செய்யப் போறாங்கள்? கொஞ்சம் கமண்டில சொல்லுங்கோ போட்டு பொளப்பம்... #வரலாற்றுப்_பாடமும், #மாறாத_எங்கட_மோட்டுத்தனமும்! வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1970களில் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதற்கும், 1971 மற்றும் 1989களில் தெற்கில் ஜே.வி.பி (JVP) இளைஞர்கள் கிளர்ச்சி செய்ததற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று — இந்த வேலையில்லாப் பட்டதாரிப் பிரச்சனைதான்! வேணும் எண்டால் நிறைய தேடிப்படியுங்கோ ஓலப்பேயன்களே....!! பிரிட்டிஷ்காரன் விட்டுப்போன கிளார்க் (Clerk) வேலைக்கான கல்விமுறையை மாத்தாம, "பட்டம் படிச்சா அரச வேலை கிடைக்கும்" எண்ட மாயையில ஒரு சமூகத்தையே பலிகொடுத்ததுதான் அரசியல்வாதிகள் செஞ்ச மிகப் பெரிய துரோகம். கனவு அரசியல் பிச்சைக்காரர்களும் அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.... 50 வருசம் கடந்தும் நாங்க மாறினபாடா இல்ல! அதே மோட்டுத்தனமான முட்டுக்கொடுத்தல். "எங்கட கல்விதான் உலகத்திலயே சிறந்த கல்வி" எண்டு மார்தட்டிக்கொண்டு திரியவேண்டியது. ஆனா, படிக்கிற படிப்புக்கும் வெளியில இருக்கிற வேலைவாய்ப்புக்கும் சம்மந்தமே இருக்காது. இதை கேட்டால் கதைச்சால் என்னோட மல்லுக்கட்டுவாங்க.... நீ என்ன எஞ்சினியரோ எண்டு கேட்பானுகள், காமடிப்புன்னகைகள்... (எனக்கே தெரியாது நான் எஞ்சினியரா எண்டது வேற கதை) #ஏசி_ரூம்_மோகமும், #அந்தஸ்துப்_பம்மாத்தும். பட்டம் படிச்சா உடனே சுழல் கதிரையும், ஏ/சி (A/C) ரூமும் வேணும் எண்டு எதிர்பார்க்கிற மனநிலை. ஒரு அரச வேலைக்காக 5 வருசமோ 10 வருசமோ காத்திருந்து, மனித வளத்தை வீணாக்குகிற ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம். கடும் படிச்ச மோடுகள்... #ஆண்பிள்ளைகளின் அவலம். கேம்பஸ் முடிஞ்சவுடனே கல்யாணத்தைப் பேசலாம் எண்டு பெத்தவங்கள் நினைப்பாங்கள். ஆனா சமூகம் அவனுக்கு "வேலையில்லாப் பட்டதாரி" எண்டுற பட்டத்தைத்தான் சீதனமா குடுக்கும். யாழ்ப்பாணத்தில ஒரு மின்குமிழை (Bulb) மாத்தோணும் எண்டா 2,000 ரூவா சம்பளமும், வடிவான மதியச் சாப்பாடும் குடுக்க ஆக்கள் ரெடி. ஆனா, இந்தப் பட்டம் படிச்ச 'அறிவாளி' வருவாரா? வரமாட்டார்! ஏனெண்டா அது "கௌரவக் குறைச்சல்". வீட்டை இருந்து அப்பா அம்மாட பென்சன் காசில சாப்பிட்டாலும் சாப்பிடுவானே தவிர, இறங்கி வேலை செய்ய மாட்டான். #பெண்பிள்ளைகளின் நாடகம்: பொம்பிளைப் பிள்ளை எண்டா... எப்படியாவது லண்டன், கனடா, சுவிஸ் எண்டு ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பிடிச்சு கட்டிக் குடுத்திடலாம் எண்ட நப்பாசை. அங்க போய் இந்தம்மா என்ன வேலை செய்யும் எண்டு நினைக்கிறியள்? ஊரில செய்யக் கூச்சப்பட்ட அதே சின்னச் சின்ன வேலைகளைக் குளிருக்குள்ள கிடந்து கஸ்டப்பட்டுச் செய்யும். நாகரீகத்துக்காக சின்ன சின்ன வேலை எண்டானான் (வீட்டில கக்கூஸ் கழுவவே வாரத்துக்கு ஒருக்கா யாரையும் சம்பளத்துக்கு கூப்பிடுறவையள்) என்ன ஒரு பம்மாத்து கண்டியளோ! #கலைப்பிரிவும், #சித்த_மருத்துவமும். யாருடைய தவறு? சரி, அரச வேலை வேண்டாம், பிரைவேட் கம்பனிக்குப் (Private Sector) போவம் எண்டா... அங்க போய் சைவ சித்தாந்தமும், வரலாறும் படிச்சதை வைச்சு என்னத்தைச் செய்ய? ஒபீசில (Office) வாற பொங்கல், தீபாவளிக்குப் பாட்டுப் பாடி கலைநயத்தைக் கூட்டலாமே தவிர, வேற என்ன ஸ்கில்லோட வெளியில வந்திருக்கிறாங்கள்? இன்னொரு பக்கம் சித்த மருத்துவம். படிச்சு முடிச்சு 37 வயசாகுது, இன்னும் வேலை இல்ல. பிழையான கோர்ஸை (Course) நாலு அஞ்சு வருசம் படிச்சு தங்களின்ட வாழ்க்கையை வீணாக்கச் சொன்னது யார்? எந்த அழுத்தத்துக்காக இந்த மாணவர்களை உள்ளே எடுத்தாங்கள்? எனது நண்பி சித்தமருத்துவ பட்டதாரி இப்ப 38 வயசில கோறணமேந்து வேலை கிடைச்சிருக்கு ஆனால் வேலை சித்தமருத்துவர் இல்லை. 30-35 வயசுக்கு பிறகு வேலைக்கு புதிதாக இணைபவர்களிடம் இருந்து என்ன வேலை வாங்கேலும் எண்டு நினைக்கிறியள்?? வேற வழி தெரியாம, அரசியல்வாதிகளின்ட வாசல் படியில போய் ஏறி இறங்கி, கடைசியில "அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவர்கள் சங்கம்" எண்டு ஒரு போர்ட்டைத் (Board) தூக்கிக்கொண்டு நிக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. அரசியல்வாதிக்கு இதுதான் வேணும். அவனுக்கு இது ஒரு நிரந்தர வாக்கு வங்கி! பெற்றோருக்கும் இளைய சமுதாயத்துக்கும் ஒரு வார்த்தை... பெற்றோர்களே. தயவுசெய்து "என்ட பிள்ளை கேம்பஸ் போகுது" எண்ட வெட்டிப் பந்தாவுக்காக அவங்களை பலிகடா ஆக்காதேங்கோ. காலம் மாறிட்டுது. அரச வேலை எண்டது இனிமேல் கானல் நீர்தான். உங்கட பிள்ளைக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடிய திறன்களை (Skills) வளர்க்க உதவுங்கோ. அதுக்கு செலவு செய்யுங்கோ. சாமத்தியவீடு, கீபேத்டே, கலியானவீடு எண்டு வெட்டிப்பந்தா செலவுகளை குறைக்கலாம். இளைய சமுதாயமே. சுருட்டின பேப்பரை வைச்சுக்கொண்டு அரசியல்வாதிகளின்ட வாசல்ல நிக்கிறதை விடுங்கோ. உங்கட கோர்ஸில (Course) வேலை இல்லை எண்டா, உலகத்துக்கு என்ன தேவையோ அதைப் படிங்கோ. தொழில்நுட்பம், மொழியறிவு, செய்முறைத் திறன் (Practical skills) இத வளர்க்காம, "பட்டம் படிச்சிருக்கன்" எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சா, காலம் உங்களை இரக்கமில்லாம ஓரங்கட்டிப் போடும்! Practical skills அ வைச்சு வேலை எடுங்கோ சம்பாதீங்கோ, அதைவைச்சு எம் கலைகளை உலகறிய செய்யுங்கோ பணம் தானா உங்களை தேடிவரும்..... இந்த யதார்த்தத்தை உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து, அவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துங்கோ, போட்டு பொளந்து தள்ளுங்கோ.... தேடல் உள்ள சமூகமே வெல்லும். அல்லது, பட்டதாரிகள் மாற்று வழிகளில் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த நவீன வேலைவாய்ப்புத் திறன்கள் (Modern Skillsets) பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தேடுங்கோ எனக்கும் சொல்லுங்கோ கேப்பம். எனக்கு ஓலப்பேயர்களின் சமூகம் தேவையே இல்லை..... https://www.facebook.com/share/p/18VBrMJJdJ/?mibextid=wwXIfr
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந் வீரர்களின் பந்து வீச்சை பொருத்து வெற்றி தோல்வி.......................
-
எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன்
எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன் அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனால் புதிய யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் இந்த அரசாங்கம் ஈடுபடத் தேவையான பலம் அதற்கு உண்டு என்றும் அவர் நம்புகிறார். எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் ஆகும். ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும். எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு கூட்டமைப்பின் குழந்தையுந்தான். ஜேவிபியின் குழந்தையுந்தான். அதனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார். பல வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் பின் சுமந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்ன பதிந்தார் என்பதையும் கஜன் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பதிவில் சுமந்திரன் எகிய ராஜ்ஜிய குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது. இத்தகையதோர் பின்னணியில்தான் கஜேந்திரகுமார் எகிய ராஜ்ஜியவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் எதிரானவைதான் என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. தமிழரசுக் கட்சியை தமிழ்மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் அங்கே உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். இந்த முரண்பாடுகள், சந்தேகங்கள் என்பவற்றின் விளைவாகவே கடந்த 19ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு தமிழ்க் கட்சிகளை ஒரே மேசையில் இருத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆகப்பிந்திய முயற்சி அது. அந்த முயற்சி குழப்பப்பட்டமையானது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறதா ? இந்த இடத்தில் மூன்று முக்கியமான விடையப் பரப்புகளில் தமிழ் மக்களுக்குத் தெளிவு அவசியம்.முதலாவதாக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா? இந்த அரசாங்கம் எதிர்பாராமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைகூட புரட்சிகரமானது அல்ல. கோத்தாபய பெற்ற அதே பெரும்பான்மை. எனவே இந்த வெற்றியை எப்படித் தக்கவைப்பது என்ற சவால் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அண்மையில் ரில்வின் சில்வா சீனாவுக்குப் போனபோது அங்கே சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவருக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்தது. குறைந்தது 15 ஆண்டுகள் ஆட்சி செய்தால்தான் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த ஆலோசனையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதன் வாக்கு வங்கியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி வளர்த்தெடுப்பது என்றுதான் சிந்திக்கும். அப்படிச் சிந்தித்தால் இனப்பிரச்சினையில் கை வைக்கக்கூடாது. இதோ தீர்க்கப் போகிறோம் என்று ஒரு தோற்றத்தைக்கட்டியெழுப்பலாம். அதன்மூலம் காலத்தைக் கடத்தலாம். மேலும்,இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் விளைவு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. அடுத்த தேர்தல்களில் கிடைக்கப் போகும் வெற்றியை அதுதான் பெருமளவுக்குத் தீர்மானிக்கும். எனவே இந்த அரசாங்கம் இனப்பிரச்சினையில் கையை வைத்து நிலைமைகளைக் குழப்புமா? ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலை நீக்குவதற்கே தயங்கும் அரசாங்கம்,யாப்புருவாக்கத்தில் இறங்குமா? இரண்டாவது விடயம், எகிய ராஜ்ஜிய பற்றிய வாதப்பிரதிவாதங்கள். சுமந்திரன் கூறுகிறார், அது ஒற்றை ஆட்சியைக் குறிக்காது என்று. மேலும் சுமந்திரன் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு இணைந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். கஜேந்திரகுமார் கூறுகிறார்,எகிய ராஜ்ஜிய என்பது ஒற்றை ஆட்சிதான் என்று. எகிய ராஜ்ஜிய தொடர்பாக யார் சொல்வது சரி என்பதை, அரசியலை ஓர் அறிவியலாகப் பயில்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் அதை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள்? இந்த விடயத்தில் வெளிப்படையான, தெளிவான,சாதாரண மக்கள் விளங்கக்கூடிய விவாதப் பரப்புகள் அவசியம். அவ்வாறான விவாத அரங்குகளை தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அல்லது தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு போன்ற அமைப்புக்களோ திறக்க வேண்டும். அதன்மூலம் எகிய ராஜ்ஜியவைச் சூழ்ந்திருக்கும் மயக்கங்கள் தெளிவாகப்பட வேண்டும். மூன்றாவது,இது மிகவும் முக்கியமானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட தொடர் நடவடிக்கை. இதில் இறுதியிலும் இறுதியானதுதான் யாப்புருவாக்கம். அதுவே முதலாவதும் கடைசியும் ஆகாது. இனப் பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கவும் கூடாது. மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல்முயற்சியாக,மோதலில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு இடையிலான திறந்த உரையாடல் தேவை. அதன்மூலம் ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். தேசங்களை அங்கீகரிக்கும் அந்த உடன்படிக்கையில் இருந்துதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு எது என்பதனை அதன் சட்டச் சட்டத்துக்குள் வைத்துச் சிந்திக்கலாம். இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இனங்களுக்கு இடையே முதலில் ஒரு சமூக உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். உதாரணமாக 1988இல் பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் எடுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையான பெரிய வெள்ளி உடன்படிக்கை போல ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடத் தொடங்க வேண்டும். அதன் இறுதிக் கட்டந்தான் புதிய யாப்பாகும். யாப்பிலிருந்து அதாவது கடைசிக்கட்டத்தில் இருந்து அதைத் தொடங்க முடியாது. தொடங்கவும் கூடாது. இங்கே விபத்து எங்கே நடந்தது என்றால்,2015 செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்தின் விளைவாகத்தான். பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. எனவே அந்தப் பொறுப்பின் நிமித்தம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு,அதன் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் உப குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நடைமுறைகளின் விளைவுதான் எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். 2018ல் அந்த இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலச் சூழலில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் கவிழ்த்தார். அதாவது நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் காட்டிக்கொடுத்தார். நிலைமாறுகால நீதி என்பது “ஒரு தோல்வியுற்ற பரிசோதனை” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்துக் கூறினார் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்கான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு சொன்னார். தோல்வியுற்ற ஒரு பரிசோதனை எப்படி வெற்றிகரமான ஒரு தீர்வு முன்மொழிவைப் பெற்றெடுத்தது ? நிலைமாறுகால நீதியின் தோல்விக்குக் காரணமே நிலை மாற்றம் நிகழாமல் அங்கே நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டமைதான். இலங்கைத் தீவைப் பொருத்தவரையிலும் அது வென்றவர்கள் தோற்றவர்களின் மீது திணித்த ஒரு நீதிதான். தென்னாபிரிக்காவைத் தவிர பெரும்பாலான நிலை மாறு கால நீதிக் களங்களில் நிலைமை அதுதான். நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி இலங்கை வரையிலும் நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் பெரும்பாலும் அவ்வாறுதான் காணப்படுகின்றன. வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதி.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கக்கூடாது. மாறாக,அதை இனங்களுக்கு இடையிலான உடன்படிக்கையில் இருந்து தொடங்க வேண்டும். மிகக்குறிப்பாக அதற்கு மூன்றாவது தரப்பின் கண்காணிப்பும் மத்தியஸ்தமும் வேண்டும். அவ்வாறு மூன்றாவது தரப்புக்கள் தலையிடுவது என்று சொன்னால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ்மக்கள் நொதித்தால்தான் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை குழம்பும்.இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலை குலையும் போதுதான் மூன்றாவது தரப்புகள் அதில் தலையிடும்.இந்திய-இலங்கை உடன்படிக்கை,ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை இரண்டும் அவ்வாறு தமிழ்மக்கள் நொதித்தபடியால் கிடைத்தவைதான்.நிலைமாறு கால நீதிகூட மகிந்தவைத் தோற்கடிப்பதற்கான இந்திய மற்றும் அமெரிக்கத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கான ஆட்சி மாற்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களையும் பங்காளிகள் ஆக்கிய வெளியரசுகள் இலங்கைத்தீவில் மறைமுகமாக ஐநாவுக்கடாக ஒரு தலையீட்டைச் செய்தன. எனவே தமிழ் மக்கள் நொதிக்கவில்லையென்றால் மூன்றாவது தரப்புகள் தலையிடாது.மூன்றாவது தரப்புகளின் கண்காணிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு ஊடாக ஒரு தீர்வைப் பெறமுடியாது. அப்படிப் பெற விளைந்தால் அது அனேகமாக,மைத்திரிபால சிறிசேன கூறியதுபோல “சிங்கள மக்களையும் பயமுறுத்தாத ;தமிழ் மக்களையும் பயமுறுத்தாத எதோ ஒரு “எகிய ராஜ்ய”வாகதான் இருக்கும்.வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது. நாடாளுமன்றத்துக்கூடாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைப் பெற முடியாது என்பதுதான் கடந்த 75ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் ஆகும். போராடியதால்தான்,மூன்றாவது தரப்பின் தலையீடு காரணமாகத்தான் 13ஆவது திருத்தமாவது கிடைத்தது.அதையும் சிங்களபௌத்த அரசு கெட்டித்தனமாக ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டிவிட்டது. எனவே தமிழ்மக்கள் நொதிக்க வேண்டும்.போராட வேண்டும். போராடவில்லை என்றால் தீர்வு இல்லை. https://www.nillanthan.com/niche/time-line/அரசியற்-பத்தி/
-
வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!
வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்! இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொருத்தம் என்று கூறுவோர் சமூகத்தில் உண்டு.மேற்படி பட்டதாரிகள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்ற பொருளில் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அரச வேலை அல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய அவர்கள் தயாரில்லை என்றும் அரச வேலை அல்லாத ஏனைய வேலைகளை அவர்கள் நிரந்தரமானவைகளாகவோ அல்லது பாதுகாப்பானவைகளாகவோ கருதவில்லை என்றும், அதனால் அவர்கள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது. பட்டதாரிகள் ஏன் அரச வேலைக்காக காத்திருக்கிறார்கள்?பின்வரும் காரணங்களை கூறலாம். முதலாவது காரணம், ஓய்வூதியம். அதாவது இறக்கும்வரை ஒரு பாதுகாப்பு ஏற்பாடு உண்டு. இரண்டாவது,அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை.அரச வேலைகளில் குறிப்பிட்ட சில சோதனைகளை எழுதுவதன் மூலமும் மூப்பின் மூலமும் பதவி உயர்வுகளைப் பெறலாம். அங்கே வேலை செய்தால்தான் சம்பளம் என்று இல்லை. எனவே வேலை செய்யாமலும் சம்பளம் வாங்கலாம் என்ற ஒரு நிலை இருப்பதினால் அரசு வேலை கஷ்டப்படத் தேவையில்லாத ஒன்று என்ற கருத்து ஒரு பகுதி பட்டதாரிகள் மத்தியில் உண்டு என்று விமர்சிக்கப்படுகிறது. மூன்றாவது,அரச உத்தியோகத்துக்கு சமூகத்தில் காணப்படும் மதிப்பு.குறிப்பாக சீதனச் சந்தையில் காணப்படும் மதிப்பு. மேற்சொன்ன காரணங்களினால்தான் அரச ஊழியத்துக்காக பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள் என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆனால் அரச ஊழியத்தில் மேற்கூறிய நன்மைகள் மட்டும் இல்லை. தீமைகளும் உண்டு. குறிப்பாக ஓர் இளம் பட்டதாரி தன் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் போது அனேகமாக திருமண வயதை அடைந்திருப்பார். அவர் திருமணம் செய்யும் நபரும் அரசு ஊழியராக இருந்தால், பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் முதலாவது அரச ஊழியம் கஷ்டப்பிரதேசத்தில்தான் கிடைக்கும். கஷ்டப் பிரதேசத்தில் அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் வேலை செய்யவேண்டி இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள் என்ற பருவம் பெரும்பாலும் இல்லறத்தின் தொடக்கப் பருவம். திருமணம் செய்த புதிதில் சந்தோசமாக சுற்றித் திரியும் பருவம். இக்காலகட்டத்தில் அரச ஊழியம் கிடைக்குமாக இருந்தால் அதுவும் கஷ்டப் பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் என்ன நடக்கும்? வாழ்க்கையில் அதிகம் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு பருவம் பயணங்களில் முடிந்துவிடும். அரச ஊழியர்களுக்கான பேருந்துக்காக அதிகாலையில் எழுவதிலும்,வேலை முடிந்து அந்தி சாய்ந்தபின் வீடு திரும்புவதிலும் அந்தக் காலத்தின் பெரும் பகுதி கழித்து விடும். குழந்தை பெறும் போதும் நிலைமை அப்படித்தான் இருக்கும். வீட்டில் குழந்தையை பராமரிக்க முதியவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை மேலும் சித்திரவதையாகும்.குழந்தையின் மழலையை அனுபவிப்பதற்கும் நேரம் இருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அரச ஊழியத்தில் இருக்கும் பிரதானமான பிரதிகூலம் எதுவென்றால் கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமண வாழ்வில் ஆரம்பப் பருவத்தை,சந்தோஷமாக இருக்கவேண்டிய ஒரு பருவத்தை இப்படி வேலைக்காக மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வதிலேயே தொலைத்தால் பிறகெப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது ? ஆனால் அரசு ஊழியத்தை நாடும் பெரும்பாலான பட்டதாரிகள் இதை ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்வதில்லை. கஷ்டப் பிரதேச வேலையை 8 அல்லது 5 ஆண்டுகளுக்குள் கடந்து விட்டால் பின்னர் வாழ்க்கை முழுக்க சந்தோசமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடும். அதேசமயம் அரச ஊழியம் அல்லாத வேறு வேலைகளுக்குப் போக அல்லது தாமாகவே தொழில் முனைவோராகி, ரிஸ்க் எடுத்து புதிய தொழில்துறைகளை ஆரம்பிக்க எத்தனை பட்டதாரிகள் தயார்? இந்தக் கேள்வியை அதன் பிரயோக அர்த்தத்தில் மறுவளமாக கேட்டால், அரச ஊழியத்துக்கு வெளியே தொழில் முனைவராக ஏழுவதற்குத் தேவையான துணிச்சலையும் தகைமையும் நமது கல்விமுறை பட்டதாரிகளுக்கு வழங்குகிறதா? என்று கேட்கலாம். இல்லை.அதுதான் பிரச்சினையே. வேலையில்லாத பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாய் ஏழுவதற்கும் சொந்தத் தொழிலில் ரிஸ்க் எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தொழில் தொடர்பான மனோ நிலை சம்பந்தப்பட்ட ஒரு விடயம் மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் நமது கல்வி முறையின் மீதான ஒரு விமர்சனமாகத்தான் முன்வைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தொழில் முனைவோரை உருவாக்கத் தவறுகிறது என்பதனை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் சுய ஒழுக்கத்தையும் சமூக விழிப்பையும் புதிய சிந்தனையையும் நமது கல்விமுறை போதிய அளவுக்குக் கட்டியெழுப்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. நமது யூடியூப்பர்களில் ஒரு பகுதியினர் சமூகத்தில் அரிதாகக் காணப்படும் தொழில் முனைவோரைத் தேடிச் சென்று படம்பிடித்து வெளியே கொண்டு வருகிறார்கள். அதனால் தூண்டப்பட்டு தாமும் அவ்வாறு ரிஸ்க் எடுப்பதற்கு எத்தனை பட்டதாரிகள் தயாராக இருக்கிறார்கள்? வேலையில்லாத பட்டதாரிகளின் தொகை அதிகரிப்பது என்பது பட்டதாரிகளின் குற்றம் அல்ல.அது முதலாவதாக கல்வி முறையில் உள்ள குறைபாடு. இரண்டாவதாக,வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள பலவீனம். மூன்றாவதாக,தொழில் தெரிவுகள் பற்றிய சமூகத்தின் கூட்டு உளவியலில் உள்ள கோளாறு. எனவே இதுவிடயத்தில் பட்டதாரிகளைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் பிழையான கல்விமுறையின் பலியாடுகள்தான்.மிகப்பிழையான பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் பொன்னிறமான கனவுகளோடு பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்கள். ஆனால் வேலைக்காக காத்திருப்பதிலேயே அவர்களுடைய கனவுகள் நிறமிழந்து போகின்றன. வயதுகளும் தொலைந்து போகின்றன. எனவே இந்த விடயத்தில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டியது பட்டதாரிகள் மட்டுமல்ல, அரசாங்கமும் கல்விக் கொள்கைகளைத் திட்டமிடும் நிபுணர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.குறிப்பாக ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மிகப்பலமான நிதி வளம்மிக்க புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று உண்டு.புலம்பெயர்ந்த சமூக வாழ்க்கையை ஒரு சொர்க்கம் என்று கருதும் பட்டதாரிகளே அதிகம். ஓர் ஆங்கில ஆசிரியர் சொன்னார், இரண்டாவது பட்டப்படிப்புக்காக ஆங்கிலம் பயிலவரும் பெரும்பாலானவர்கள் புலப்பெயர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று.ஓர் இளம் தலைமுறையினரின் மனதில் புலப்பெயர்ச்சி ஒரு கனவாகத் தொடர்ந்து காணப்படுகிறது.ஆனால் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் உள்ள தொழில் முனைவோரும் தொழில் அதிபர்களும் தாயகத்தில் முதலீடு செய்யலாம்.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி ரீதியாக பிரகாசமான ஒரு முன்னுதாரணமாகத் திகழும் இந்த சமூகத்தில்,அதே புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வெற்றிபெற்ற தொழில் முனைவோர் தாயகத்தில் முதலீடுகளைச் செய்வதன்மூலம் தமது முன்னுதாரணங்களைப் பின்பற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை,தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். தன் சொந்த பலத்தில்,தன் சொந்தக் காலில், தனது வேரிலேயே நிலைத்து நிற்கத் தேவையான துணிச்சலையும் நம்பிக்கையையும் புதிய தலைமுறைக்கு வழங்குவது தமிழ்த் தேசியவாத நோக்குநிலையில் கட்டாயமானது.அது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதி. தனது வேர்களை அறுத்துக் கொண்டு ஓர் இளைய தலைமுறை புலம்பெயர முயற்சிப்பது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வி. எனவே இந்த விடயத்தில் விசேஷமாக புலம்பெயர்ந்த தமிழ்த் தொழில் முனைவோருக்கு ஒரு பொறுப்பு உண்டு.அது அரசியல் அர்த்தத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பொறுப்புத்தான். தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பொறுப்புத்தான். https://athavannews.com/2026/1465820