Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை) January 14, 2026 — ஷோபாசக்தி — மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்த கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாகத் அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவை இன்றைய இலங்கையில் வலுவாக நிலைகொண்டிருக்கும் பவுத்த சிங்களப் பேரினவாத அரசியலையும் சிதறிச் சீரழிந்து கிடக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலையும் விசாரணை செய்கின்றன. இந்த விசாரணைகளுக்கு ஊடாக, இன்றைய தமிழ்த் தேசியவாதத்தின் நிலை குறித்துத் தன்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் தனபாலசிங்கம் முன்வைத்திருக்கிறார். நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றிய ஊடக அறிவையும் களத்திலேயே இருந்து அரசியல் நிலவரங்களை நேரடியாக எதிர்கொண்டதால் ஏற்பட்ட பட்டறிவையும் ஒருங்கே திரட்டி இந்தக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். செயற்திட்டம் இல்லாத தமிழர் அரசியல்: இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புகழ்பெற்ற ‘ஐம்பதுக்கு ஐம்பது’ மற்றும் தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டி’ ஆகிய இரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் முன்வைத்த தமிழீழத் தீர்மானத்திற்கு வயது அரை நூற்றாண்டு. தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து பதினாறு வருடங்கள். மேற்சொன்னவற்றின் தொடர்ச்சியில், தமிழர்களுக்குத் தனிநாடு, தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை, சுயாட்சி, கூட்டாட்சி, முழுமையான அதிகாரமுள்ள மாகாண சபைகள் என்றெல்லாம் தருணத்திற்கும் தமது விருப்புக்கும் ஏற்றவாறு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளாலும் குழுக்களாலும் புலம்பெயர்ந்த அமைப்புகளாலும் விதம்விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் ஏதாவதொன்றை அடைவதற்கான ஆக்கபூர்வமான, சாத்தியமான அரசியல் செயற்திட்டம் என எதையுமே இவர்கள் ஒருபோதும் மக்கள் முன்பு வைத்ததில்லை. 1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர் நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியாது. இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும் அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. தமிழ் மக்களின் சலிப்பு: தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் வெற்று முழக்கங்களாலும் செயலின்மையாலும் தமிழ் மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் கணிசமான வாக்குகள் தமிழ்த் தேசியவாதத்திற்கு முற்றிலும் எதிர்த் திசையில் நிற்கும் ‘தேசிய மக்கள் சக்தி’ வேட்பாளர்களுக்குக் கிடைத்தன. தனித் தமிழீழத்திற்கான தங்களுடைய செயற்திட்டத்தை உறுதியோடு மக்கள் முன்பு வைத்ததுடன் அதற்காக முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர்கள் தமிழீழ ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே. தனிநாட்டை அடைவதற்கான வழி ஆயுதப் போராட்டமே என அறிவித்து 1970-களின் நடுப்பகுதியிலிருந்து அவர்கள் இயங்கத் தொடங்கினார்கள். ஏறத்தாழ முப்பது வருடங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் 2009-இல் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது. புலிகளுக்குப் பின்னான காலத்தில், சீமான் போன்ற தமிழகத்து நண்டுசிண்டுகளைத் தவிர வேறு யாருமே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. முக்கியமாக, இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தக் கட்சியோ, எந்தக் குழுவோ ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. இதுவொரு நல்ல விஷயமும்தான். இனி ஒரு போர் வேண்டாம். போருக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிக்காரர்கள் தேர்தல் அரசியலில் பதவி நாற்காலிகளைக் கைப்பற்றத் தங்களுக்கிடையே மோதியவாறும் குழி பறித்தவாறும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தருணத்திற்குத் தக்கவாறு ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்றோ ‘பதின்மூன்றாவது திருத்தச் சட்ட அமலாக்கம்’ என்றோ ஆளுக்கொரு இலட்சியத்தை முழங்குகிறார்கள். ஆனால், இவர்கள் முழங்கும் இந்த இலட்சியங்களை அடைய இவர்களிடம் எந்தச் செயற்திட்டமும் கிடையாது என்பது மட்டுமின்றி இவர்கள் முழங்கும் இலட்சியங்களை அடைவதற்கு இவர்கள் உழைப்பதும் கிடையாது. விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் செய்யப்பட்ட தியாகங்களில் கோடியில் ஒரு பங்கையாவது இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் செய்யப் போவதில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் இவர்களில் பலர் தமக்குள்ளேயே கெட்ட வார்த்தைகளில் திட்டிச் சண்டை போடுகிறார்கள். எதிராளியைத் திட்டும்போது சாதிய வசவுகளை வீசுகிறார்கள். எதிராளியின் குடும்பத்துப் பெண்களைக் கொச்சையாகப் பேசித் தூசணங்களைத் துப்புகிறார்கள். இவற்றுக்காக இவர்கள் ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. இவர்கள் மீது கட்சிசார் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இத்தகைய அநாகரிகமானவர்களிடமும் அறிவிலிகளிடமும் சிக்கி மானபங்கப்படுகிறது. கேடுகெட்ட நிலை: இலங்கை அரசியலில் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்திய முதலாவது அமைப்பான ‘தமிழ் மகாஜன சபை’ 1921-இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்துவந்த நூறாண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சி அரசியலில் இத்தகையை கேடுகெட்ட நிலை இதுவரை இருந்ததில்லை. இந்தக் கையறு நிலையில்தான் தனபாலசிங்கம் தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் குறித்துத் தனது நூலில் கேள்விகளை எழுப்புகிறார். இந்தக் கேள்விகளை வலிந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிர்நிலையில் நின்று அவர் எழுப்பவில்லை. இடதுசாரி அரசியலின் வழியே தனபாலசிங்கம் உருவாகிவந்தவர். அவரது ஆதர்சமான சண்முகதாசன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவர். 1989-இல் சண்முகதாசன் எழுதி வெளியிட்ட ‘ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்’ என்ற நூலில் ‘தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது ஶ்ரீலங்காவின் ஜனநாயகப் புரட்சியின் ஓர் அங்கமாகும்’ என்று சண்முகதாசன் எழுதினார். தேசம், தேசியவாதம் குறித்தெல்லாம் இன்றைய பின்நவீனத்துவ அறிதல் காலத்தின் எடுத்துரைப்புகள் தேசியவாதிகளின் கோட்பாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் இடதுசாரிகளின் தேசியம் குறித்த கோட்பாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறானவை. முற்போக்குத் தேசியவாதம் என்றெல்லாம் ஏதும் கிடையாது .மாறாக, தேசியவாதமானது மற்றவைகளை விலக்கி வைக்கும் அல்லது எதிராக நிறுத்தும் கருத்தாக்கம் என்பது பின்நவீனத்துவ அணுகுமுறை. இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு நாங்கள் தனபாலசிங்கத்தின் நூலுக்குள் நுழையலாம். தமிழர்களின் தற்காப்பு போராட்டங்கள்: சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில், சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்கள் 1970-களின் நடுப்பகுதி வரை நாட்டுப் பிரிவினைக்கான போராட்டங்கள் அல்ல. அவை சிறுபான்மை இனங்களின் உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் மட்டுமேயாகும். மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, தனிச் சிங்களச் சட்டம், சிறுபான்மையினர் மீதான தொடர் இன வன்செயல்கள் மற்றும் 1947 சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29 (2) சரத்து 1972-இல் இலங்கையின் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அகற்றப்பட்டுச் சிங்கள மொழிக்கும் பவுத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது போன்ற பல்வேறு சிங்களப் பேரினவாதத் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. தொடர் தோல்விகள்: உண்மையில் இந்தத் தொடர் போராட்டங்கள் தொடர் தோல்விகளாகவே சிறுபான்மை இனங்களுக்கு அமைந்தன. சிங்களப் பவுத்தப் பேரினவாதத்தின் இருப்பையும் காட்டுத்தனமான வளர்ச்சியையும் சிறுபான்மை இனங்களாலோ அற்ப சொற்பமாயிருந்த சிங்கள முற்போக்கு இடதுசாரிகளாலோ தடுக்க முடியவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இவ்வாறு கெட்டி தட்டிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாத நிலையைத் தோலுரித்துக் காட்டும் கட்டுரையாகத் தொகுப்பு நூலின் முதலாவது கட்டுரையான ‘கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் ‘ அமைந்துள்ளது. 1983 ஜூலையில், விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவத்தின் உடனடி எதிர்வினையே தமிழர்களுக்கு எதிரான ஜூலை வன்செயல்கள் என்ற கதையாடலைத் தனபாலசிங்கம் மறுக்கிறார். “13 இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது” என்கிறார் அவர். இதற்கான சான்றாதாரங்களையும், ஜூலை வன்செயல்களை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமால் அதை ஊக்குவிப்பது போலவும் அன்றைய அரசு செயற்பட்டதையும் எடுத்துக்காட்டுகளோடு தனபாலசிங்கம் விவரிக்கிறார். ஜே.வி.பி.யும் இனப்பிரச்சினையும்: 1983-க்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாதம் மேலும் எவ்வாறெல்லாம் வளர்ந்து சென்றது என்பதைப் பேசும் தனபாலசிங்கம் கட்டுரையின் இறுதிப் பகுதியில், இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தயங்குவதை போலி முற்போக்காளர்கள் போன்று மவுனமாகக் கடக்காமல் உடைத்துப் பேசிவிடுகிறார். அவர் எழுதுகிறார் : “ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்குத் தயங்குகிறது. சகல சமூகங்களையும் இலங்கையர்களாக, சமத்துவமானவர்களாக நோக்கும் ஒரு அணுகுமுறையைப் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கத் தலைவர்களும் பேசுகிறார்களே தவிர, உண்மையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கவோ அல்லது அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டவோ அவர்கள் தயாராயில்லை. அவர்களும் இனவாதத்தின் கைதிகளாகவே இருக்கிறார்கள். புதிய அரசியலமைப்புக் கொண்டுவரப்படும் வரை தற்போதைய மாகாண சபைகள் முறை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுகின்றதே தவிர, அத்தகைய ஒரு புதிய அரசியலமைப்பபைக் கொண்டு வருவதற்கு முன்னதாக 13-வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளையாவது உருப்படியாகச் செயற்படவைக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. புதிய கலாசாரம், முறைமை மாற்றம் எல்லாமே வெற்றுச் சுலோகங்கள்தான்.” நூறாண்டுகளாக விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் சிங்கள இனவாதத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வீழ்த்த முடியாவிட்டாலும், இந்த அரசாங்கம் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று கணிசமான தமிழ் மக்களிடம் நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையைக் குறித்தும் தனபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார். “வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாதச் சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார் தனபாலசிங்கம். இந்தக் கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் : “கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாகத் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு, இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்துவரும் ஒரு திருத்தத்தைக் கூட (13-ஆவது திருத்தச் சட்டம்) கைவிட வேண்டும் என்று தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.” 13 வது திருத்தம்: நூலின் ஐந்தாவது கட்டுரையில், பதின்மூன்றாவது சட்டத் திருத்தம் குறித்து ஜே.வி.பி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருப்பதைத் தனபாலசிங்கம் சுட்டிக் காட்டுகிறார் : “13-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக 13-ஆவது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ரில்வின் சில்வா. அவரின் கருத்துத்தான் தென்னிலங்கை அரசியலாளர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. தென்னிலங்கையின் முற்போக்குகளும் கலைஞர்களும் கூட விதிவிலக்கில்லை. நான் ஜே.வி.பி. உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் தனிப்பட விவாதித்த பல்வேறு தருணங்களிலும் அவர்கள் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினையே முதன்மைப் பிரச்சினை என்கிறார்கள். இனங்களுக்கு இடையேயான அதிகாரப் பரவலாக்கத்தை மூர்க்கமாக மறுக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினை இலங்கையில் எப்போதும்தான் இருந்தது. இனியும் இருக்கத்தான் போகிறது. குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கல் பொருளியல் சூழலில் இலங்கையைப் போன்ற அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டின் தேசிய வருவாயையும் பொதுத் துறைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்தித்தான் நிற்க வேண்டும். அவற்றின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மக்கள்மீது வரிச் சுமையை ஏற்ற வேண்டியிருக்கிறது. மானியங்களையும் சமூக நலத் திட்டங்களையும் இலவசங்களையும் இல்லாமல் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த உலகமயமாக்கல் பொருளாதாரச் சுழலிலிருந்து இலங்கையைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் மீள்வது எப்போது என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் தெரியாது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி, சிறுபான்மை இனங்களின் உரிமைப் பிரச்சினைகளைப் பேச மறுப்பதும் தட்டிக் கழிப்பதும் சிங்கள இனவாதத்தின் இன்னொரு பரிமாணமேயாகும். நீண்ட காலமாகச் சிறுபான்மை மக்கள் எழுப்பிவரும் நீதியான சமவுரிமைக் கோரிக்கைகளை பேரினவாத நிலைப்பாட்டோடு நிராகரிப்பதாகும். நூலின் இரண்டாவது கட்டுரையின் தலைப்பு ‘பதின்மூன்றாவது திருத்தத்தைத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ என்பதாகும். 1987-இல் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தமே 13-ஆவது திருத்தச் சட்டமாகும். இது அரசியல் அதிகாரங்களை இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் காணி – காவல்துறை அதிகாரம் இன்றி அரைகுறையாகவே இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையான அதிகாரங்கள் இன்றியே மாகாண சபைகள் இயங்கின. 13-வது திருத்தச் சட்டத்தில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைத் தமிழ் தேசியவாத அரசியலாளர்களில் ஒரு பகுதியினர் கோருகிறார்கள். நூலாசிரியர் தனபாலசிங்கத்தின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது. அவர் எழுதுகிறார்: “13-ஆவது திருத்தம் போதுமானது என்று யாருமே வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாகப் பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்தத் திருத்தத்தைக் காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை.” மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் மூர்க்கமாக நிராகரித்தார்கள் என்பது உண்மை. அதற்குப் பதிலாக அவர்கள் தனிநாடு என்ற இலக்கை முன்வைத்தார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால், இன்று மாகாண சபை முறைமையை நிராகரிக்கும் ஒருசில தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் அதற்கு மாற்றாக முன்வைக்கும் தீர்வுகளை அடைவதற்கான செயற்திட்டமாகவும் போராட்ட வழியாகவும் எவற்றைத்தான் முன்னிறுத்துகிறார்கள்? எதுவுமே இல்லை. ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேசச் சமூகம் இலங்கையில் தலையீடு செய்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது போன்ற பேச்சுகள் அப்பாவித்தனமான கற்பனாவாதம் மட்டுமே.ஐ.நா. சபையோ அல்லது சர்வதேசச் சமூகமோ ‘மனிதவுரிமைகள் கண்காணிப்பு’ என்பதைத் தாண்டி இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் தலையீடு செய்யப் போவதில்லை. அதற்கான எந்தச் சிறு அறிகுறியும் கடந்த 16 வருடங்களில் தெரியவில்லை. இந்தியாவின் நிலை: இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முன்னின்று உருவாக்கிய இந்திய அரசு 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தது உண்மைதான். எனினும், கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக அந்த அழுத்தம் வெற்றியளிக்கவில்லை. இன்று இந்தியா 13-ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்பதைத் தனபாலசிங்கம் நூலில் விரிவாகவே விளக்குகிறார். “இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலேபாய நலன்களைப் பேணிக் காப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒன்றாக தமிழர் பிரச்சினையைக் கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை” என்கிறார் அவர். முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கிய மாகாண சபைகள் முறைமை வேண்டும், அதுவே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சாத்தியமான முதற்படி என்பதை நூலின் பல இடங்களிலும் தனபாலசிங்கம் அழுத்தமாக எழுதிச் செல்கிறார். “அரசாங்கம் கொண்டு வரவிருப்பதாகக் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் 13-ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் அவை தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்க வேண்டும். தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால், இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத இழப்புகள், தியாகங்களுக்குப் பின்னரும் கூட எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கிறது” என்கிறார். மாகாண சபைகளை விடுதலைப் புலிகள் மட்டும் நிராகரிக்கவில்லை. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய சக்தியான ஜே.வி.பியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மகாண சபைகளையும் கடுமையாக எதிர்த்தது. இவற்றை எதிர்த்துத்தான் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி 1987-இல் தொடங்கி இரத்த ஆறு ஓடியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மாகாண சபைகளையும் ஏற்றுக்கொண்ட பல சிங்கள அரசியல்வாதிகளை ஜே.வி.பி. படுகொலை செய்தது. படுகொலை அரசியலிலிருந்து பின்பு ஜே.வி.பி. மீண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினாலும் 13-ஆவது திருத்தச் சட்டம் குறித்த அவர்களது எதிர்ப் பார்வைகள் இன்றுவரை மாறவில்லை. எனவே, முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட மாகாண சபைகளை இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அரசாங்கம் சொல்வது போன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இனங்களுக்கிடையே அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதற்கான அறிகுறியே ரில்வின் சில்வாவின் பேச்சிலிருந்து தெரிகிறது. இனவாதமும் மதவாதமும்: நூலின் மூன்றாவது கட்டுரையில் தனபாலசிங்கம் “இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இடையறாது சூளுரைத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத் தலைவர்கள் அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அடைய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். அரசாங்கத் தலைவர்கள் மட்டுமல்லாமல் முழு இலங்கை மக்களும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 13-வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நீண்டகால இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உருவாக்கப் போவதாகச் சொல்லப்படும் புதிய அரசியலமைப்பில் இதைவிடச் சிறப்பான தீர்வு ஒன்றிருந்தால் நல்லதே. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நூலின் கடைசிக் கட்டுரையில் தனபாலசிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளர் லயனல் போபகேயை மேற்கோள்காட்டி இவ்வாறு எழுதுகிறார் : “அதிகாரப் பரவலாக்கம், ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தைப் பிரிவினைவாத நோக்கம் கொண்டதாகச் சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம், மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.” அதிகாரப் பரவலாக்கமானது பிரிவினைவாத நோக்கம் கொண்டது எனச் சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்ப் பகுதிகளிலும் கருதும் சிந்தனைச் சிற்பிகள் உண்டு. மையத்திலிருக்கும் அதிகாரம் விளிம்புகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக் கிழிக்கும் இவர்கள் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்றால் மட்டும் முகத்தைச் சுழிக்கிறார்கள். காஸாவுக்காகக் கண்ணீரும் முள்ளிவாய்க்காலுக்காக ராஜபக்சக்களுக்கு நன்றியும் தெரிவிக்கும் இரட்டை நாக்குப் பேர்வழிகள் இவர்கள். நூலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளைப் பல்வேறு இடங்களிலும் தயவு தாட்சணியமின்றித் தனபாலசிங்கம் கண்டித்திருக்கிறார். அவர்களது தவறான அரசியல் நோக்குகளையும் செயலின்மையையும் கடுமையாகச் சாடுகிறார். “தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மக்களிடமிருந்து தாங்கள் தனிமைப்பட்டதைப் பற்றிச் சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள்” என மிகச் சரியாகவே அவர் குறிப்பிடுகிறார். புலம்பெயர் தமிழர்களின் அரசியல்: தமிழ்த் தேசியவாத அரசியல் என்னும்போது, புலம்பெயர் தமிழ்த் தேசியவாத அரசியலைக் குறித்தும் பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில், அந்த அரசியல் அவ்வளவுக்கு அநியாயங்களையும் நகைச்சுவைகளையும் செய்திருக்கிறது. ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. கள நிலவரம் அறியாது தங்களது விருப்புகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்மீது சுமத்த அது முயற்சிக்கிறது. மேற்கு நாடுகள் முன்வந்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற கற்பனை அரசியலைச் செய்கிறது. இந்த மேற்குசார் அரசியலில் அதிருப்தி அடைந்த ஒருபகுதிப் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகள் கிழக்கு நோக்கி நகர்ந்து ‘நாம் தமிழர்’ கட்சி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் ஈழம் மலர்ந்துவிடும் என்றெண்ணித் திரள்நிதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். நூலில் தனபாலசிங்கம் முத்தாய்ப்பாக எழுதுகிறார்: “உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னான இன்றைய காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களுக்கு இசைவான முறையில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுடனும் அணுகுமுறைகளுடனும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை விவேகமான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய அரசியல் தலைமைத்துவம் தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை என்பது பெரும் கலைக்குரியது.” நீண்டகாலப் பத்திரிகை அனுபவத்தினூடே தனபாலசிங்கம் வசப்படுத்திக்கொண்ட எளிமையும் துல்லியமும் இயைந்த மொழி இத்தொகுப்பைத் தங்குதடையின்றி வாசிக்க வைக்கின்றது. தேவையற்ற ஒரு சொல் கூட இல்லாமல் மிகக் கச்சிதமாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் நூலாசிரியர் தனபாலசிங்கம் பேசும்போது “நான் இந்த நூலில் சித்தாந்தம் எதுவும் பேசவில்லை. எனது ஆதங்கத்தையும் துயரையும் தெரிவிக்கவே இதை எழுதினேன்” என்றார். இலங்கைத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எதிர்காலத்தைக் குறித்து நேர்மையான அக்கறையுள்ள எவரையும் நூலின் வழியே தனபாலசிங்கத்தின் ஆதங்கமும் துயரும் தொற்றவே செய்யும். https://arangamnews.com/?p=12592
  3. யாழ்ப்பாணத்தில் அனுர குமார: வழங்கல் இன்றி உருவான பிரபலமா அல்லது ஒரு அரசியல் மாயையா? January 16, 2026 — ராஜ் சிவநாதன் — யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட சமீபத்திய விஜயம் வட மாகாணத்தில் வழக்கத்திலிருந்து மாறுபட்ட அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட வரவேற்புகளை விட இந்த விஜயம் பொதுமக்களின் வெளிப்படையான அன்பையும் ஊடகங்களின் தீவிர கவனத்தையும் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வம் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதன் மூலம் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது கொள்கை செயல்பாடுகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில் அனுர ஏன் வட பகுதியில் பிரபலமாகிறார் மற்றும் இது அந்தப் பகுதியின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தம் கொண்டது என்பதே அந்தக் கேள்வி. ஜனாதிபதி வரலாற்றிலிருந்து ஒரு விலகல்: பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதிகள் வருகை தந்தபோது கட்டுப்பாடு சந்தேகம் அல்லது அமைதியான அலட்சியம் தான் காணப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் முன் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடனும் அரசியல் மொழிகளுடனும் வந்தனர். வட பகுதி மக்களுக்கு இவ்விழாக்கள் பங்காளித்தன்மையை விட அதிகாரத்தின் வெளிப்பாடாகவே தோன்றின. ஆனால் அனுரவின் விஜயம் கொள்கை அறிவிப்புகளால் அல்ல அவரது அணுகுமுறையால் வேறுபட்டதாக உணரப்பட்டது. அவரது எளிமையான உரை நடை, இயல்பான மக்கள் தொடர்பு மற்றும் வெற்றிக் காட்சிகள் இல்லாத வெளிப்பாடு வட பகுதி அரசியல் அனுபவத்தில் நீண்ட காலமாக காணப்படாத இயல்புத்தன்மையை வெளிப்படுத்தியது. இதுவே கடந்த காலத்திலிருந்து ஒரு தெளிவான மாற்றமாக அமைந்தது. இளைஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பும் தன்மையின் தாக்கமும்!: அனுரவின் யாழ்ப்பாண விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக இளைஞர்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பு காணப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மீது விரக்தியும் அரசமைப்பின் மீது ஆழ்ந்த சந்தேகமும் கொண்டுள்ள இளைஞர்களுக்கு அனுர ஒரு வித்தியாசமான இடத்தை பிடித்துள்ளார். அவர் தேசிய அளவிலான தலைவராக இருந்தாலும் அணுகக்கூடிய மனிதராக தோன்றுகிறார். குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அவரது அமைதியான நம்பிக்கை எளிமையான தோற்றம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உரை நடை கொள்கைகளை விட தன்மையின் மூலம் மக்களை ஈர்க்கும் தென்னிந்திய அரசியல் தலைவர்களை நினைவூட்டுகிறது. சமூக ஊடகங்கள் இந்த ஈர்ப்பை மேலும் பெருக்கி அரசியல் ஈடுபாட்டை தனிப்பட்ட உணர்ச்சிப்பூர்வ அனுபவமாக மாற்றியுள்ளது. இது வழக்கமான கருத்தியல் ஆதரவு அல்ல. செயல்பாட்டிற்கு முன்பே உருவாகும் உணர்ச்சிசார் அரசியலின் வெளிப்பாடாகும். நிறைவேறாத வாக்குறுதிகளுக்கிடையிலான பிரபலத்தன்மை!: அனுரவின் அரசியல் முக்கியத்துவம் இங்கேதான் தெளிவாகிறது. முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் கூட அவரது பிரபலத்தன்மை உயர்ந்து வருகிறது. கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்தங்கள் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஊழல் ஒழிப்பு அமைப்புகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் இன்னும் மெதுவாகவே முன்னேறுகின்றன அல்லது நிறைவடையவில்லை. இத்தகைய சூழலிலும் மக்கள் காட்டும் பொறுமை அபூர்வமானதாக உள்ளது. இது இலங்கை அரசியல் மனநிலையில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. பல தசாப்தங்களான அரசியல் துரோகங்களுக்குப் பிறகு குறிப்பாக இளைஞர்கள் உடனடி பலன்களை விட நேர்மை நோக்கம் மற்றும் திசையை அதிகமாக மதிக்கத் தொடங்கியுள்ளனர். ஊழலும் இன அரசியலும் நிரம்பிய சூழலில் நேர்மையே ஒரு அரசியல் மூலதனமாக மாறியுள்ளது. ஆனால் செயல்பாடுகளில்லாத நேர்மை நீடிக்க முடியாத அடிப்படையாகும். வடக்கு பகுதிக்கு இதன் பொருள் என்ன?: வட மாகாணத்திற்கு இந்த தருணம் வாய்ப்பையும் ஆபத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுள்ளது. ஒரு பக்கம் அனுரவின் ஏற்றுக்கொள்ளல் வடக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை இன அடிப்படையிலான பேரம் பேசுதலிலிருந்து கொள்கை அடிப்படையிலான தேசிய இணைப்பாக மாற்றக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. இது வட பகுதியின் பொருளாதார மற்றும் சமூக தேவைகளை சிறுபான்மை கோரிக்கைகளாக தனிமைப்படுத்தாமல் பரந்த சீர்திருத்தச் சூழலுக்குள் இணைக்கும் வாய்ப்பையும் தருகிறது. ஆனால் வரலாறு எச்சரிக்கையை முன்வைக்கிறது. வட பகுதி இதற்கு முன்பும் பல தலைவர்களை அன்புடன் வரவேற்று மாற்றமின்றி வழியனுப்பியுள்ளது. கவர்ச்சி நிலப் பிரச்சினைகளை தீர்க்காது. பிரபலத்தன்மை வேலை வாய்ப்புகளை உருவாக்காது. குறியீட்டு விஜயங்கள் அதிகாரப் பகிர்வு பொறுப்புணர்வு அல்லது நீடித்த தனியார் முதலீடுகளுக்கு மாற்றாக அமையாது. முடிவு உள்ளடக்கம் கோரும் ஒரு தருணம்: அனுர குமார திசாநாயக்கின் யாழ்ப்பாண விஜயம் ஒரு அபூர்வமான அரசியல் தருணமாகும். இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் உருவான அவரது ஈர்ப்பு செயற்கையான அரசியலால் சோர்ந்த நாட்டில் உண்மைத்தன்மைக்கான ஆழ்ந்த தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் தருணம் ஒரு திருப்புமுனையாக மாறுமா அல்லது இன்னொரு மாயையாக முடிவடையுமா என்பது அதன் பிந்தைய செயல்பாடுகளிலேயே நிர்ணயிக்கப்படும். வட பகுதி மக்களிடையே நம்பிக்கை மெதுவாக மீண்டும் உருவாகிறது ஆனால் உண்மையான நம்பிக்கை செயல்பாடுகளின் மூலம் மட்டுமே உறுதியாகும். https://arangamnews.com/?p=12598
  4. கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும் January 15, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 — 2020) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025 ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தானாகவே கேட்டார். அந்தப் பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் நாடுகளை ஆக்கிரமிப்பது குறித்து பேசிவந்திருக்கிறார். எந்தவிதமான பிரச்சினையையும் தோற்றுவிக்காத அயல் நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவது குறித்தும் டென்மார்க்கிற்கு சொந்தமான கிறீன்லாந்து தீவையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவது குறித்தும் அவர் பேசினார். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை ஆதரித்த ட்ரம்ப் காசாவில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை உல்லாசக் கடற்கரையாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் ட்ரம்புக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று புதுடில்லி திட்டவட்டமாக மறுத்த போதிலும், இதுவரையில் அவர் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் போரை கைவிட்டதற்கு தானே காரணம் என்று கூறியதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்தன. தன்னை ஒரு சமாதான விரும்பி என்று காண்பித்த அதேவேளை, ட்ரம்ப் நைஜீரியா, சோமாலியா, ஈராக், சிரியா, யேமன் மற்றும் ஈரான் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினார். தற்போது புத்தாண்டு பிறந்து மூன்று நாட்களில் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் இரவோடிரவாக குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்ப், ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று தடுத்து வைத்திருக்கிறார். ‘போதைப்பொருள் பயங்கரவாத இயக்கம்’ ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். வெனிசூலாவில் தலையீடு செய்வதற்கு தன்னை அமெரிக்காவின் அரசியலமைப்பு அனுமதிப்பதாக கூறியிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் அமெரிக்கர்களை பாதுகாப்பது தனது கடமை என்று வாதிடுகிறார். ஆனால், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை வெனிசூலா தோற்றுவித்தது என்று புத்திசுவாதீனமான எவரும் கூறமாட்டார்கள். அத்துடன் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றை நடத்திவந்தார் என்பதற்கு ட்ரம்ப் நிருவாகம் நம்பகத்தன்மையான சான்று எதையும் உலகின் முன் வைக்கவுமில்லை. வெனிசூலா மீது ட்ரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்திலேயே கண்வைத்தார். ஜனாதிபதி மதுரோவுக்கும் அவரது உயர்மட்ட உதவியாளர்களுக்கும் எதிராக முதலில் 2019 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி அரசியல்வாதியான பாராளுமன்ற சபாநாயகர் ஜுவான் குவாய்டோவையே வெனிசூலாவின் பதில் ஜனாதிபதியாக அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் அங்கீகரித்தன. ட்ரம்ப் கடந்த வருடம் ஜனவரியில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது வெளியுறவுக் கொள்கையில் வெனிசூலாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மதுரோவை உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டிய அமெரிக்கா ‘போதைப் பொருளுக்கு எதிரான போர்’ ஒன்றைப் பிரகடனம் செய்தது. மதுரோவை கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை தருவோருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் நிருவாகம் அறிவித்தது. கரிபியன் பிராந்தியத்துக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பிய ட்ரம்ப் நிருவாகம் போதைப் பொருளைக் கடத்திச் செல்லும் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாக கூறிய போதிலும், உண்மையில் நூற்றுக்கணக்கான குடிமக்களே கொல்லப்பட்டார்கள். வெனிசூலாவுக்குள் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு அதிகாரமளித்த ட்ரம்ப் அந்த நாட்டில் இருந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு தடை விதித்தார். தடை செய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. தனக்கு வரப்போகின்ற ஆபத்தை உணர்ந்து கொண்ட மதுரோ அமெரிக்காவுடன் ‘அக்கறையுடனான பேச்சுவார்த்தைகளை’ நடத்த விரும்புவதாக அறிவித்ததற்கு மறுநாளான ஜனவரி 3 வெனிசூலாவின் தலைநகர் மீது கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கப் படைகள் மதுரேவையும் மனைவியையும் கைது செய்து நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றன. ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்று வெனிசூலாவின் இராணுவக் கட்டமைப்புக்களோ அரச இயந்திரமோ நிலை குலையவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை கண்டனம் செய்த அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. கடந்த வருடத்தைய நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மறியா கொறினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளை முற்று முழுதாக ஆதரித்து வருகின்ற போதிலும், அவர் நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான மக்கள் ஆதரவையும் மதிப்பையும் கொண்டவரல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். வெனிசூலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிக்கஸ் மறுநாளே பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்தால் டெல்சி பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் உடனடியாகவே எச்சரிக்கை செய்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் எதேச்சாதிகார ஆட்சிமுறை காரணமாக மதுரோவின் அரசாங்கம் மீது வெனிசூலா மக்களில் பெரும்பாலானவர்கள் வெறுப்புக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. ஆனால், இறைமையுடைய ஒரு நாட்டின் தலைவரை கடத்திச் செல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையோ அல்லது அதிகாரமோ கிடையாது. தவறான ஆட்சி மற்றும் அடக்குமுறைக்காக வெளிநாட்டுத் தலைவர்களை கடத்திச் சென்று சிறைவைப்பதே ட்ரம்பின் வேலையாக இருக்குமானால், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுடன் அதிகாரத்தில் இருக்கும் சிலர் உட்பட அத்தகைய ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் இருந்து அவர் தெரிவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். தான் விரும்பும்வரை வெனிசூலாவை அமெரிக்கா நிருவகிக்கும் என்றும் அதன் பாரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார். சிறையில் இருக்கும் மதுரோவின் விசுவாசிகளினால் நிருவகிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் அமெரிக்கா தனக்கு அவசியமானது என்று உணருகின்ற சகலதையும் தருகிறது. வெனிசூலாவின் எண்ணெய்த் தொழிற்துறையை அமெரிக்கா இலாபகரமாக மீளக்கட்டியெழுப்பும் என்றும் அந்த நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற பணம் வழங்கப்படும் என்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நியூயோர்க் ரைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார். தென்னமெரிக்காவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் இரு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தலையீடுகளைச் செய்த நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால், வெனிசூலா மீது ஜனவரி 3 நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களே தென்னமெரிக்க நாடொன்றின் மீதான அமெரிக்காவின் முதன் முதலான நேரடியான இராணுவ தாக்குதலாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க கண்டத்தின் அயல்நாடுகளில் அமெரிக்கா பொருளாதார நெருக்குதல்கள் ஊடாக மாத்திரமல்ல, படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்று இராணுவ ரீதியாகவும் தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது. வெனிசூலாவில் கடந்தவாரம் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை 1989 ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் சர்வாதிகாரி மனுவேல் நொறீகாவைக் கைதுசெய்த நடவடிக்கையை நெருக்கமாக ஒத்ததாக இருக்கிறது. முன்னர் சி.ஐ.ஏ.யின் நண்பராக விளங்கிய நொறீகாவை கைது செய்வதற்காக பனாமாவை ஆக்கிரமிப்பதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் சுமார் 27 ஆயிரம் துருப்புக்களை அனுப்பினார். அவரைக் கைதுசெய்து அமெரிக்காவுக்கு கொண்டுசென்று இன்று மதுரோவுக்கு ட்ரம்ப் செய்ததைப் போன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றங்களில் புஷ் நிருவாகம் நிறுத்தியது. பிரேசில், சிலி மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை பதவி கவிழ்த்து இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்கா உதவிய போதிலும், தென்னமெரிக்காவிலும் கரிபியனிலும் வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா வரலாற்று ரீதியாக அதன் நெருங்கிய அயல் நாடுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியே வந்திருக்கிறது. ஆனால், தற்போது தென்னமெரிக்க நாடொன்றின் மீது நடத்தப்பட்ட நேரடியான இராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது எனலாம். அமெரிக்காவுக்கு பாரதூரமான எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தோற்றுவிக்காத வெனிசூலாவில் எதற்காக ஆட்சி மாற்றத்தை ட்ரம்ப் விரும்புகிறார்? அந்த நாடு பெரியளவில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடுமல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மூன்று முக்கிய காரணங்களை சர்வதேச அரசியல் அவதானிகள் அடையாளம் காண்கிறார்கள். முதலாவதாக, உலகின் மேற்கு அரைக் கோளத்தில் (Western Hemisphere) அமெரிக்காவின் முதன்மையை மீண்டும் திணிப்பதற்கு ட்ரம்ப் விரும்புகிறார். அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியான ஜேம்ஸ் மொன்றோ அமெரிக்க கண்டத்தின் நாடுகளில் எதிர்காலத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யாமலும் காலனித்துவ ஆதிக்கத்தைச் செலுத்தாமலும் இருப்பதை உறுதிசெய்வதற்காக ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்று 1823 ஆம் ஆண்டில் உறுதியளித்து பிரகடனம் ஒன்றைச் செய்தார். அதுவே மொன்றோ கோட்பாடு (Monroe Doctrine) என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்பாட்டின் வழியில் தற்போது அமெரிக்க நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குப் பிராந்தியமாக வைத்திருப்பதில் ட்ரம்ப் நாட்டம் கொண்டிருக்கிறார். அண்மையில் அவரது நிருவாகத்தினால் வெளியிடப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு கோட்பாடு’ (National Security Doctrine) லத்தீன் அமெரிக்காவையும் கரிபியன் பிராந்தியத்தையும் மூலோபாய முன்னுரிமைக்குரியவையாக அடையாளம் காண்கிறது. இதற்கு அமெரிக்க ஊடகங்கள் ‘டொன்றோ கோட்பாடு’ (Donroe Doctrine) என்று வேடிக்கையாக பெயர் சூட்டியிருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் வெளிப்பிராந்தியத்தைச் சேர்ந்த வல்லரசுகளின் (பிரதானமாக சீனா) செல்வாக்கை அல்லது கட்டுப்பாட்டை அமெரிக்கா நிராகரித்து அதன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கின் கீழ் மேற்கு அரைக்கோளத்தை வைத்திருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கோட்பாட்டு ஆவணம் வலியுறுத்துகிறது. இரண்டாவதாக, அமெரிக்காவின் முதன்மைக்கு வலுவூட்டுகின்ற அதேவேளை, மேற்கு அரைக்கோளத்தில் சீனாவினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கை தடுக்கவும் ட்ரம்ப் நிருவாகம் விரும்புகிறது. சீனா ஏற்கெனவே அதன் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் ஊடாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் மிகப்பெரிய அல்லது இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சீனா விளங்குகிறது மூன்றாவதாக, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிப் போக்குடைய தலைவர்களுக்கு பதிலாக தீவிர வலதுசாரிகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கும் அமெரிக்கா விரும்புகிறது. மதுரோவின் கைதுக்குப் பிறகு செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் ‘மேற்கு அரைக் கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படமாட்டாது’ என்று கூறியது கவனிக்கத்தக்கது. வெனிசூலா மீது மேற்கொண்ட தாக்குதல் மூலமாக அமெரிக்கா மற்றைய நாடுகளின் இறைமையையும் பாதூகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அரசுகள் அவற்றின் நிலப்பரப்பு உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அரசியல் கோரிக்கைகளுக்காகவோ படைபலத்தைப் பிரயோகிக்கக்கூடாது என்று கடந்த நூற்றாண்டில் இரு உலகப்போர்களின் பயங்கரங்களுக்கு பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அமெரிக்கத் தாக்குதல் வலுவிழக்கச் செய்திருக்க்கிறது என்றும் மோதல்களைத் தவிர்ப்பதற்காக உலகிடம் இருக்கும் ஒரேயொரு பொறிமுறையான ஐக்கிய நாடுகளை அமெரிக்காவின் நடவடிக்கை மோசமாகப் பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் கவலை தெரிவித்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிக்காக சர்வதேச சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். வெனிசூலாவையடுத்து ட்ரம்ப் கொலம்பியா, கிறீன்லாந்து, மெக்சிக்கோ, கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் அச்சுறுத்துகிறார். மதுரோ அரசாங்கத்தைக் கண்டனம் செய்வதில் முன்னர் காட்டியதைப் போன்ற உத்வேகத்தை அந்த நாட்டின் இறைமையை மீறிய ட்ரம்பின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்வதில் ஐரோப்பிய நாடுகள் காண்பிக்கவில்லை. இலாபத்துக்காகவும் அரசியல் மேலாதிக்கத்துக்காகவும் அமெரிக்காவின் வல்லமையை தொடர்ந்தும் பயன்படுத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை அவரின் நியூயோர்க் ரைம்ஸ் நேர்காணல் பிகாசமாக அம்பலப்படுத்துகிறது. சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று தான் உணரவில்லை என்று கூறிய அவரிடம் அமெரிக்க இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதுவதற்கான ஆற்றலில் ஏதாவது மட்டுப்பாடுகள் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது தனது சொந்த மனத்தினால் மாத்திரமே அதை நிறுத்த முடியும் என்று பதிலளித்தார். சர்வதேச சட்டம் தனக்கு தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் உலகம் வரும் நாட்களில் எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது. https://arangamnews.com/?p=12595
  5. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.! Vhg ஜனவரி 17, 2026 கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(16.01.2026) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.battinatham.com/2026/01/33.html
  6. பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கையெழுத்து போராட்டம் ! 17 Jan, 2026 | 10:56 AM பிரஜா சக்தி என்பது ஜே.வி.பி. கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (16) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரியவருகையில், வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜேவிபி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தப் பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் வேறு தேர்தல்களை இலக்காக கொண்டும், கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டும் இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவிலேயே இந்த பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது. ஆகையால் இந்தப் பிரஜா சக்தி திட்டத்தினை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். பிரஜா சக்தி என்பது இந்த அரசையும் தாண்டி ஒருபடி மேலே வந்துள்ளது. அரசாங்கத்தின் பிரதேச செயலகளின் கீழுள்ள கிராம சேவகர்களே இதுவரை அந்த கிராமத்தின் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்களை அரசாங்கத்தின் உதவி மூலம் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அதை மழுங்கடிக்கும் வகையில் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. என்.பி.பி என்பதை தாண்டி ஜேவிபியானது இன்று வடக்கு கிழக்கிலே மையம் கொண்டுள்ளது. ஜேவிபி தமது கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து ஒரு சுனாமி கட்டமைப்பை உருவாக்க பேச்சுவார்த்தைகளை நடாத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள். இதன்போது இன்று ஆட்சி செய்கின்ற ஜேவிபியினர் அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதாவது, அரசாங்கமானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் எந்த விதமான உடன்படிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று வழக்கு மூலம் சுனாமி கட்டமைப்பை தடுத்தார்கள். இன்று நான் கேட்கிறேன், பிரதேச செயலர் தலைமையிலான கட்டமைப்பின் கீழ் கிராம சேவகர்கள் இருக்கின்ற நிலையில், அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பான பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பை மீறியிருக்கின்றார்கள். பிரஜா சக்தியை வடக்கு-கிழக்கில் நாங்கள் அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இது தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை விடுத்து பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் அது பாராட்டத்தக்க விடயம். பிரஜா சக்திக்கு எதிராக மாநகர சபைக்கு உட்பட்ட எனது வட்டாரத்திலிருந்து கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளேன். மேலும் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் கொண்டு செல்ல உள்ளேன். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். சுயநிர்ணய உரிமை அதாவது, தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் கூறி வருகின்றோம். இதற்காக நாங்கள் 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடி வருகின்றோம். இன்று ஆட்சியில் இருக்கும் ஜேவிபி கட்சியினர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/236251
  7. மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிப்பு : நிவாரணம், மீள் கட்டுமானத்தில் முரண்பாடுகள் – உடனடி தீர்வுகளை முன்வைத்த மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம் 17 Jan, 2026 | 11:21 AM டித்வா பேரிடருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றனர் என மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. 2026 ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை எனவும், அரச இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவர்கள் மேலும் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தகவல்கள் மற்றும் தரவுகள் முறையாக பதிவுசெய்யப்படவில்லை. தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் நிவாரணப் பொருட்கள் சீரான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள், குறிப்பாக ஆண் – பெண் தேவைகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் நிவாரண திட்டங்கள், சுற்றுநிரூபங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு அவர்களின் தாய் மொழியான தமிழில் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. மலையகத் தோட்டப் பகுதிகளில் கடுமையாக சேதமடைந்த பாதைகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீள் கட்டுமானம் தொடர்பில் தெளிவான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையை மதிப்பிடுவதிலும், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கட்டட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், பாதுகாப்பற்ற வீடுகளிலேயே மீண்டும் குடியேறுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்மையால், வாழ்வாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழக்கும் அபாயம் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்மொழிவுகள் : இதனுடன், மக்கள் போராட்ட முன்னணி பல முக்கிய யோசனைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி, மலையகத்தின் அனைத்து குடியிருப்பு பகுதிகளும் முழுமையான விஞ்ஞான ரீதியான நில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் வெளியிடப்பட வேண்டும். இயற்கைப் பேரிடரால் முழுமையாக பாதிக்கப்பட்டு மீண்டும் குடியேற இயலாத தோட்டப் பகுதிகளில் வாழ்வோருக்கு, அரசாங்கம் அறிவித்துள்ள ரூ.50 இலட்சம் பெறுமதியான வீடு அல்லது காணி பெறுவதற்கான ரூ.50 இலட்சம் நிதி உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் எந்தவொரு பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும். ஆபத்தான லயன் குடியிருப்புகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, குடும்பத்துக்கு 20 பேர்ச் காணியுடன் நிலையான குடியிருப்பு வழங்கப்பட வேண்டும். தேவையான நிலப்பரப்புகளை அரசாங்கம் சட்டபூர்வமாக கையகப்படுத்தி, உறுதி பத்திரங்களுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் 3B பிரிவின் அடிப்படையில், தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்படும் காணிகளில் ஏக்கரில் எட்டில் ஒரு பங்கு (20 பேர்ச்) மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி, தோட்டப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்படாத நிலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, அனர்த்தங்களை கையாள விசேடமாக மலையக கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒருங்கிணைப்பு சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், புறக்கணிப்பு தொடர்பில் மக்கள் முறையிடக் கூடிய தனியான குறைகேள் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் மீது ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி, மலையகத் தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236257
  8. முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு பலி ! 17 Jan, 2026 | 01:11 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் சனிக்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/236269
  9. Today
  10. ஈரானில் போராட்டங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது 17 January 2026 ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இதுவரை 3,090 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். இந்தநிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://hirunews.lk/tm/441082/death-toll-from-protests-in-iran-exceeds-3000
  11. 2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம் விக்னேஸ்வரன் கோபிகா, கல்வியில் சிறப்பு கற்கை இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன. சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன: 1. கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல். 2. ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல். 3. உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல். 4. மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல். 5. சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும். தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும். 2. பாடக் கட்டமைப்பு (Core & Electives) மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: • கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5): 1. தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்) 2. ஆங்கில மொழி 3. கணிதம் 4. விஞ்ஞானம் 5. சமயமும் விழுமியக் கல்வியும் • விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்: * சமூக அறிவியல்: வரலாறு, புவியியல். * தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம். * கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி. 3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்) இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள். • தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும். • மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது. உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும். தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது: • வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல். • சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள். 2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129
  12. முடியவில்லை இவர்களுக்கு எத்தனை கடவுள்கள் தேவைபடுகின்றது இந்தியாவில் இருந்து இறக்குமதியான அனுமான் ஐயப்பரும் இராமர் சீதை போதவில்லை. மனிதனின் காலை தொட்டு கும்பிடும் இந்திய முறைறையை விரிவாக்கி கொண்டே வருகின்றார்கள். சிறுவர்கள் தொடக்கம் திரு நியாயம் அவர்களின் கண்டுபிடிப்பில் சொல்வதானால் கிழட்டு மூதாட்டிகள் வரை 😭 எமக்கு இறைவன் கொடுத்த அரும்பெரும் பொக்கிஷம் 🙄 யாழ்பாணத்து வீதியில் சாதாரணமாக நடந்து போகின்றதாம் காணொளிகள் வேறு அனுப்புகிறார்கள. அது நடை பயிற்சி
  13. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். https://globaltamilnews.net/2026/226663/
  14. எவ்வளவு மோட்டுதனமாக அமெரிக்க வாக்காளர்கள் நடந்து இருக்கின்றார்கள் ☹️
  15. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 🌙 பாகம் 05 – மேகங்களைத் தொடும் கோபுரம் மறுநாள் காலையில், தாத்தா குடும்பத்தினர் குழந்தைகளின் இதயங்களை உற்சாகத்துடன் துடிக்க வைப்பதற்காக ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கினர் — மேகங்களைத் தொட்டது போல உயர்ந்து நிற்கும் உலகின் மிக உயர்ந்த கோபுரத்தை அருகில் இருந்து பார்ப்பதற்காக. புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர். கார் மெதுவாக நகரும்போது, தூரத்திலேயே அந்த கோபுரம் ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி சுவர்கள் சூரியனின் ஒளியைப் பிடித்து மின்னின. அதைக் கண்ட நிலனின் கண்கள் பெரிதாக, ஆச்சரியத்தால் விரிந்தன. “தாத்தா … இது … இது பெரியது இல்லை … இது பிரமாண்டமானது [gigantic]!” என்று அவன் மெல்ல கிசுகிசுத்தான். திரேன், தலையை மேலே உயர்த்தி, அதன் உச்சியைப் பார்க்க முயன்றான். ஒரு வயது ஆரின் கூட அந்த மின்னும் கம்பீரத்தை ரசிக்க, தனது சிறிய கழுத்தை வளைத்து, வானத்தை நோக்கிப் பார்த்தான். அந்த கோபுரம் சூரிய ஒளியில் வைரம் போல ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி முகப்பு, நகரத்தை கோடிக்கணக்கான சிறிய கண்ணாடிகள் போல பிரதிபலித்தது. உலகம் முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளாலும், கேமராக்கள் படபடப்பாலும் [cameras clicking], வானளாவிய கட்டிடத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா வழிகாட்டிகளாலும் அதன் அடிப்பகுதி [தளம்] பரபரப்பாக, உற்சாகமாக இருந்தது. தாத்தா கந்தையா தில்லை மூன்று பேரன்களையும் மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றார். குழந்தைகள் லிஃப்ட்களை [elevators] நெருங்கும் போது தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்தார். "நீங்கள் தரையை விட்டு நீங்காமலேயே பறக்கப் போகிறீர்கள்" என்று தாத்தா கண் சிமிட்டிக் கொண்டு நகைத்தார். குழந்தைகள் தாங்கள் ஒரு சூப்பர் ஹீரோக்களைப் போல மேல் நோக்கிச் செல்வதைக் கற்பனை செய்து கொண்டு சிரித்தனர். லிஃப்டின் [Both "elevator" and "lift" are used interchangeably to describe the vertical transport systems in the world's tallest tower, the Burj Khalifa] உள்ளே, சுவர்கள் தரையிலிருந்து மேல் நோக்கிய பயணத்தைக் காட்டும் டிஜிட்டல் திரைகளால் [digital screens] ஒளிர்ந்தன. நிலன் கண்ணாடி போன்ற காட்சிப் பெட்டியில் முகத்தை அழுத்தி, எண்கள் ஏறுவதைப் பார்த்தான்: 10… 50… 100… 400 மீட்டர்! லிஃப்ட் மென்மையான ஓசையுடன் மேல் நோக்கிச் சென்றது, கீழே உள்ள நகரம் சுருங்கத் தொடங்கியது, கார்களை சிறிய பொம்மைகளாகவும், மக்களை புள்ளிகளாகவும் அது மாற்றியது. "சின்னஞ்சிறு கார்களைப் பாருங்க தாத்தா!" என்று திரேன் கீழே இருந்த தெருக்களைக் சுட்டிக் காட்டி கத்தினான். "இது எறும்புகளின் நகரம் மாதிரி இப்ப இருக்கு தாத்தா!" என்று குரல் கொடுத்தான். அவை உயரமாகச் செல்லச் செல்ல, மேகங்கள் கோபுரத்தைச் சுற்றி வருவது போல் தோன்றியது. நிலன் ஜன்னலில் கையை அழுத்தி, பஞ்சுபோன்ற வெள்ளை மேகங்களைத் தான் தொடுவது போல் கற்பனை செய்து கொண்டான். தாத்தா அவனது ஆச்சரியத்தைப் பார்த்து சிரித்தார், "ஒரு நாள், நீங்கள் ஒரு விமானத்திலிருந்து உண்மையான மேகங்களைக் காண்பீர்கள், ஆனால் இது எங்கள் சிறிய வான சாகசம் மட்டுமே" என்று விளக்கினார். அவர்கள் இறுதியாக கண்காணிப்புத் தளத்தை (Observation Deck) அடைந்த போது, அந்தக் காட்சி அவர்களை மூச்சடைக்க வைத்தது. நகரம் கீழே ரத்தினக் கம்பளம் போல மின்னியது. வானளாவிய கட்டிடங்கள் [Skyscrapers] பெரிய பென்சில்கள் போல உயர்ந்திருந்தன. வளைந்து நெளியும் நதிகள் அல்லது நீர்வழிகள் [waterways] வெள்ளி நூல்கள் போல மின்னின. அப்பால் உள்ள பாலைவனம் கூட காலை சூரியனின் கீழ் தங்க நிறத்தில் மின்னியது. நிலனும் திரேனும் ஜன்னலுக்கு ஓடி, ஒவ்வொரு ஜன்னலாகச் சென்று பார்த்தனர். ஒரு சிறிய வட்டமான கிண்ணம் மாதிரி தெரிந்த ஒரு நீச்சல் தடாகத்தை [pool] நிலன் கண்டான். அதேவேளை, ஒரு பரபரப்பான சந்தையையும், கீழே சிறிய சிறிய கார்கள் ஓடுவது போல தெரிவதையும் திரேன் ஆர்வத்துடன் பார்த்தான். மேலும் குழந்தை ஆரின் கீழே உள்ள விளக்குகள் மற்றும் அசைவைப் பார்த்து உற்சாகமாகத் கைதட்டினான். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய தொலைநோக்கி [பைனாகுலரைக்] கொடுத்து, அவர்கள் தங்கள் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாத விவரங்களைக், அதன் மூலம் காட்டினார். “சிறுகலத் துறைமுகத்தில் [மெரினாவில் / marina] உள்ள சிறிய படகுகளை இப்ப பாருங்கள்?” என்று தாத்தா சொன்னார். .... “அந்தப் பாலமா? மக்கள் பாம் தீவுக்கு [Palm Island] காரில் செல்வது அதில் தான்.” ... என்று தாத்தா விளங்கப் படுத்தினார். இதேவேளை நிலனின் கற்பனை உச்சத்தை எட்டியது - அந்தச் சிறிய படகுகளில் சிறு கடற்கொள்ளையர்கள் பயணம் செய்து, தன்னை நோக்கி கையசைப்பதாக அவன் கற்பனை செய்துகொண்டான். சுற்றிப் பார்த்த பிறகு, அந்த டெக்கில் [deck] ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையைக் [கஃபேயைக் / café] கண்டுபிடித்தனர், அதில் குக்கீகளும் பழச்சாறுகளும் காத்திருந்தன. அவர்கள் அவற்றை நுகர்ந்தபோது, குழந்தைகள் மேகங்களைக் கண்டு வியந்தனர், சில மேகங்கள் மிக அருகில் நகர்ந்து வந்ததால், அவற்றை கிட்டத்தட்ட தொட முடியும் போல் அவர்களுக்குத் தோன்றியது. கடந்து செல்லும் மேகத்திற்கு வணக்கம் சொல்வதாக கற்பனை செய்துகொண்டு, நிலன் கையசைத்தபடி “ஹலோ மேகமே!” என்று சிரித்தான். தாத்தா ஒரு வேடிக்கையான விளையாட்டை பரிந்துரைத்தார்: “மேக வடிவங்களை கண்டுபிடிப்போம்!” குழந்தைகள் கண்ணாடியின் மீது தங்கள் கைகளை அழுத்தி, யானைகள், டிராகன்கள் மற்றும் அரண்மனைகள் போல தோற்றமளிக்கும் மேகங்களைப் பெயரிட்டனர். குழந்தை ஆரின் கூட, கடந்து செல்லும் பஞ்சுபோன்ற வடிவங்களை சுட்டிக்காட்டி கூச்சலிட்டான். சூரியன் மறையத் தொடங்கியதும், வானம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் மாறியது. கீழே உள்ள நகரம் ஆயிரம் மின்னும் நட்சத்திரங்களைப் போல மின்னி, மேலே உள்ள மாயாஜால வண்ணங்களைப் பிரதிபலித்தது. நிலன் தாத்தாவின் தோளில் சாய்ந்து, "தாத்தா... நாம் வானத்தைத் தொடுவது போல் உணர்கிறேன்" என்று கிசுகிசுத்தான். "ஆமாம், குட்டி," தாத்தா மெதுவாகச் சொன்னார், அவரது இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. "நினைவில் கொள்ளுங்கள், வானம் ஒருபோதும் எல்லையல்ல - அது சாகசங்களின் ஆரம்பம் மட்டுமே." மேலே கழித்த ஒரு நாளின் நினைவை நெஞ்சிலில் சுமந்து கொண்டு, தயக்கத்துடன் அவர்கள் மேகங்களை விட்டு விட்டு, லிஃப்டில் கீழே இறங்கினார்கள் - அங்கு கட்டிடங்கள் சிறியதாகத் தெரிந்தன, நகரம் புதையல் போல மின்னியது, கற்பனை யதார்த்தத்துடன் உயர்ந்தது. அவர்கள் தங்கள் காரை நோக்கி நடந்து செல்லும் போது, நிலன் தாத்தாவின் கையை இறுக்கமாகப் பிடித்தான். “நாளைக்கு, இன்னும் சாகசங்கள் உண்டா?” என்று அவன் கேட்டான். “எப்போதும்,” தாத்தா புன்னகையுடன் பதிலளித்தார், உலகம் நிறைய ஆச்சரியங்களால் நிரம்பி இருக்கு — நம்ம பயணம் இப்போதுதான் ஆரம்பம்,” என்றார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 06 தொடரும் துளி/DROP: 1999 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/33325804077068144/?
  16. நான் செய்த பணிக்காக, மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். -தம்பர்.- 😂
  17. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல். கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2026/1460205
  18. ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி. நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர். தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது. குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2026/1460210
  19. தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ! தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது. அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன. அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. https://athavannews.com/2026/1460244
  20. கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி – டொனால்ட் டிரம்ப் எச்சரிகை! டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460233
  21. 'சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை' - அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்பு 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை" - தமிழ்நாடு முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்: அகத்தியன், கருவனூர் - 3 கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2 அஜித், அலங்காநல்லூர் - 2 பிரசாத், மதுரை - 2 சூர்யா, வாடிப்பட்டி - 2 ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பரிசுகள் விவரம் 10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர். முதல்வர் வருகை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார். பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,2026 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது பாதுகாப்பு ஏற்பாடுகள் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  22. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 17 Jan, 2026 | 03:07 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின. ஆனால், மற்றொரு முன்னாள் உலக சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன். சி குழு - இங்கிலாந்து வெற்றி ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர் டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம் நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது. உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய். https://www.virakesari.lk/article/236231
  23. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkhxm4pq0416o29nqb7zl9k7
  24. நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு - படங்கள் இணைப்பு 17 Jan, 2026 | 11:49 AM இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சனிக்கிழமை (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன. இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது. மேலும், இப் பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236263
  25. 5ஆம் ஆண்டில் சாதா 50மீற்றர் ஓட்டத்தில் (மறுக்க மறுக்க ஆசிரியை கட்டாயப்படுத்தி ஓடவிட்டார்) கடைசியாக ஓடிய எனக்குத்தானா அப்ப முதல் பரிசு!! முன்னுக்கு ஓடிய நண்பர்கள் இவன் எப்படா ஓடி முடிப்பான் என எல்லைக் கோட்டில் ஏளனமாகப் பார்த்தது எல்லாவற்றையும் தம்பர் இறும்பூத வைத்துவிட்டார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.