All Activity
- Past hour
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
(பொதுவான பதிவு) இந்த போக்கை ஈரானுக்கு தட்டில் வைத்து விவிலிய பிரளய விசாக கிருமிகள் கொடுத்து, அவர்களின் விடத்தை அவர்களுக்கு உள்ளேயே பாய்ச்சி உள்ளார்கள் என்பது. நேட்டோ தொடர்ந்தாலும், இந்த போக்கு வளர்ச்சி, விருத்தி அடையும். அல்லது (அமெரிக்கா அரசாங்கம் ,படைகளுக்கு இவற்றை ஆய்வு செய்து கேந்திராவான் பல பிரோயோகம் பற்றி பாடம் எடுத்த / ஆலோசனை கொடுத்த) இந்த பேராசியர் மொக்கு தனம்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நீங்கள் விஜை தேர்தலுக்கு பின் படம் நடிக்க போய்விடுவார் என்கிறீர்கள். சீமானோ…. தேர்தலுக்கு முன்பே அதையே செய்கிறார்… ஏப்ரல் 10 வெளிவருகிறது… சீமான் துக்கடா வேடத்தில் நசித்த LIK திரைப்படம்…. நடிகர் நாடாளக்கூடாது என மேடையில் முழங்கும் சீமான் நடிகர் இல்லையா? ஏன் ஆங்கில தலைப்பு வைத்த தமிழ் படத்தில் நடித்தார்? இது மொழியை அழிப்பது அல்லவா?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தவெக குழறுபடிகளை பார்த்து, பல தேர்தல் பிராச்சார வியூகங்களை எம்ஜிஆர், ஜெ க்கு வகுத்த செங்கோட்டையன் மூளை வெந்து போயுள்ளாராம் 😂.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
சிலருக்கு இங்கே எரிகிறது இரான் அதன் சொந்த தொழில்நுபத்ஹில் நின்று சண்டைபிடிக்கிறது என்று அனால் , US / மேற்கு விவிலிய பிரளய விஷக்கிருமிகளுக்கும் இதுவே இரத்தத்தை கக்க வைக்கிறது ஈரான் இதுவரை நடந்த தாக்குதலில் ஈட்டுட்ட விமான பறப்பை வைத்து AI model ஒன்றை கட்டி எழுப்பி இருப்பதாக. (விமான பறப்பில் பெரும் தொகை தரவு பள்ளிகளை உருவாக்கும்) அது எந்த விமானம் தாக்கப்பட்டால், எந்த புள்ளியில் அடிப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம் என்பது போன்ற எதிர்வுகூறலை கொடுப்பதாக தகவல்.
- Today
-
வித்யா கொலை வழக்கு கைதி ; பெண் வைத்தியரிடம் பாலியல் சேட்டை
(இணையத்தள செய்திப் பிரிவு) வித்யா கொலை வழக்கு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பல்லேகலையிலுள்ள தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தனக்கு சிகிச்சை அளித்த, பெண் வைத்தியரிடம் பாலியல் சேட்டை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி கைதியைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென வைத்தியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாகச் செயற்பட்டு கைதியைக் கட்டுப்படுத்தினர். இதனால் பெண் வைத்தியர் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வித்யா கொலை வழக்கு குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வித்யா கொலை வழக்கு கைதி ; பெண் வைத்தியரிடம் பாலியல் சேட்டை | Virakesari.lk
-
வவுனியா குப்பை மேட்டுப் பிரச்சினை : பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழு களவிஜயம்
06 Apr, 2026 | 06:02 PM வவுனியா சாலம்பைக் குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட இடத்துக்கு இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர். நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாலம்பைக்குளம் புதிய வீட்டுத் திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். இன்றைய தினம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுர்தீன், அரசாங்க அதிபர், சுற்றாடல் அதிகார சபையினர், வவுனியா மாநகர சபை ஆணையாளர், தமிழ் பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்தனர். இதன்போது அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். வவுனியா குப்பை மேட்டுப் பிரச்சினை : பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழு களவிஜயம் | Virakesari.lk
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தனியே... தன்னந்தனியே... பிரச்சாரத்தில் தத்தளிக்கும் தவெக! கோவை: தமிழக தேர்தல் களத்தில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், பிரச்சாரத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், வலுவற்ற கீழ்மட்ட கட்டமைப்பாலும் தனித்து விடப்பட்டுள்ளதை தேர்தல் களத்தில் காண முடிகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பலர் புதுமுகங்கள். கட்சியே புதிதுதானே என்றாலும், இவர்கள் விஜய் நற்பணி மன்றத்தில் இல்லாத புதியவர்கள். பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.ஆனால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தவெக வேட்பாளர்கள் தன்னந்தனியாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இது மக்களிடம் எந்தளவுக்கு எடுபடும் என தெரியவில்லை. கோவை மாவட்டம் சூலூரில் 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலை நேரத்தில் தவெக கட்சித் துண்டுடன் தனியாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவரை, தவெகவினர் அழைத்து விசாரித்து, அவர்தான் வேட்பாளர் என தெரிந்துகொண்டனர். இப்படித்தான் பல்வேறு தொகுதிகளிலும் வேட்பாளர் அலைபேசி எண் கூட கிடைக்காத நிலை கட்சியினருக்கு உள்ளது. நிர்வாகிகளுக்கு சீட் தராமல், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கும், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் குழப்பம் நிலவுவதாக கட்சியினர் கூறுகின்றனர். சமூக வலைதளத்தில் பதிவிடும் கட்சியினரை, நேரில் பார்த்தால் கூட யாரென்று அறிந்துகொள்ள முடியாத அறிமுகம் இல்லாத நிலையில் தான் பலர் உள்ளனர். தொகுதியில் யார் வேட்பாளர், அவர் எங்குள்ளார், என்ன செய்கிறார் என்பது உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கட்சியினருக்கு தெரியவில்லை. கோவை வடக்கு மற்றும் கிணத்துக் கடவு தொகுதியில் போட்டியிடும் இருவர் மட்டுமே விஜய் ரசிகர்களாக இருந்து, நிர்வாக பொறுப்பில் இருந்த நிலையில் ‘சீட்’ பெற்றவர்கள். செங்கோட்டையன் மூலம் அழைத்து வரப்பட்ட கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கட்சியில் சேர்ந்தார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.ராஜூவின் மகன் சதீஷ்ராஜ் கடந்த ஜனவரி மாதம் தான் கட்சியில் சேர்ந்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேட்பாளரும் தவெகவுக்கு புதியவர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உட்பட கோவை மாவட்டத்தில் வாய்ப்பு பெற்ற பெரும்பாலானவர்கள் , தமிழக வெற்றிக் கழகமாக அறிவிக்கப்பட்ட பின்பும் பொறுப்பில் இல்லாதவர்கள் தான். அதிமுக, திமுக போன்று வலுவான கீழ்மட்ட கட்டமைப்பும், ஒருங்கிணைப்பும் இல்லாததால் உதிரிப்பூக்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் அமைந்துள்ளது. ஏற்கெனவே கட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருவதாக பொதுவெளியில் விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் இது தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என தொண்டர்கள் கருதுகின்றனர். திருச்சியில் நடிகர் விஜய் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் இங்கிருப்பவர்கள், கோவையில் அவிநாசி சாலையில் இருந்த அண்ணா சிலைக்கு மட்டும் மாலை அணிவித்தனர். அருகில் இருந்த எம்ஜிஆர், சிலைக்கு கூட மாலை அணிவிக்கவில்லை. கொள்கை குழப்பங்களும், கீழ்மட்ட அளவிலான ஒருங்கிணைப்பின்மையும் தவெகவின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தனியே... தன்னந்தனியே... பிரச்சாரத்தில் தத்தளிக்கும் தவெக!
-
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது குறித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். இதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். போலீஸார் தாக்கியதால்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்’’ என தெரிவித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 9 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் உடல், மனநல பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையை மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை விவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யாததால், ஏப்ரல் 2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார். இதற்கிடையே, குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை. அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்றவாளிகள் 9 பேருக்கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்று தீர்ப்பு வழங்கினார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
அமெரிக்கப்படைகள் சிதறி கிடந்த முல்லாக்களின் உடல்களை (ஏதிரியின் தாக்குதல்) மத்தியிலும் உல்லாசமாக காலாற நடந்த்து தேடி படம் பிடித்தன. பின்பு பிரசுரித்ன. இல்லை , இல்லை முட்டாள் முல்லாக்கள், அமெரிக்கா படைகளின் வானூர்தி அழிவை படம் எடுத்து போடும் போது, கவனிக்காமல் முட்டாள் முல்லாக்கள் படைகலின் உடல் சிதறி கிடந்ததை படம் பிடித்து, பிரசுரிக்கும் போதும் முட்டாள் தனமாக பிரசுரித்து விட்டன. மேலும், இப்படியான முயற்சியில் சண்டைக்கு ஒருபோதும் (தேடி) இறங்குவது இல்லை, எவ்வளவு இரகசியம் காக்க முடியுமோ அவ்வளவு இரகசியமாகவே இது நடப்பது. அத்துடன் 100 கணக்கான படைகளை இப்படியான மீட்பு முயற்சிக்கு அன்புவது இல்லை. (அது மேலும் படைகல் சிக்குவதன் சாத்திய கூறுகளை கூட்டுவதால் அதனால். ஈரான் பபடைகள் நிலையெடுத்து இருந்து தாக்கியது என்பது சாத்தியம் குறைவு. வானூர்தி நகர்வை கொண்டே ஈரான் படைகள் அறிந்து இருக்க சாத்திய கூறுகள் அதிகம். இவற்றை விடுவோம். அது ஒவொருவரின் சிந்தனைக்கும் எட்டுவது. அப்படி ஈரான் படைகள் இறந்து இருந்தாலும் களத்தில் சண்டை பிடித்தே. இரான் அரபு தளங்களை தாக்க, அரபு (பொது வசதி) பர்தாவுக்குள் ஓடி ஒளிந்த்து கொண்ட ஈன விவிலிய பிரளய விஷக்கிருக்கி அமெரிக்கா படைகளின் தன்மை இல்லை.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அணு ஆயுத தவிர்ப்பை ஏற்க போருக்கு முந்திய பேசிலேயே ஈரான் தயாராக இருந்தது… ஹூத்தி, ஹிஸ்புல்லா, ஈராக்கில் இருக்கும் ஷியா குழுக்களுக்கான ஈரானிய போசணையை கைவிடுவதில்தான் பிணக்கு. இது இஸ்ரேலின் கோரிக்கை. தம்பர் இதில் இஸ்ரேலை கைகழுவக்கூடும். ஆனால் குஷ்னர், விடிகோ யூதர்கள். வான்ஸ் முயன்றலும் இவர்கள் இழுப்பார்கள் என நினைக்கிறேன்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
முக்கு சந்தொன்றில் அண்ணன் சீமான் கதறி கொண்டிருக்கும் போது ஒரு தற்குறி உள்ளே புகுந்து டீ வீ கே என கத்தியுள்ளார்…. அண்ணன் டென்சன் ஆகி ஏக வசனத்தில் டோஸ் விட… நாதக சோம்பிகள் தற்குறியை அடித்து துவைக்க… பொலிஸ் வந்து மீட்கிறது… #அன்பான சர்வாதிகாரம்
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்க தரப்பு வெறும் அணுஆயுத தயாரிப்பு தடை மட்டும் தற்போது கோருவதாக அறிகிறேன் (சரியா என தெரியவில்லை) அதே போல் ஈரான் தரப்பும் இறங்கி வந்தால் போர் முடிவிற்கு வரலாம்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
யுத்த நிறுத்தத்துக்கான சிறிய நம்பிக்கையும் கூட வரவேற்கத்தக்கதே. ஆனால் இரு பகுதியின் நிலைப்பாடு (positions) இடையான இடைவெளி அதிகமாக உள்ளது. நிலைப்பாடுகளை விட்டு இருபகுதியினதும் நலன்கள் (interest) அடிப்படையில் அணுகினால் ஒரு தீர்வை எட்டலாம்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
நல்ல செய்தி! போர் நிறுத்தம் வரவாய்ப்புள்ளது போல உள்ளது. போரின் ஆரம்ப கட்டத்திலே தீர்வு ஏற்படுவது இலகுவானது, ஆனால் அது நீடித்தால் போரினால் ஏற்படும் அழிவுகள் ஏற்கமுடியாத நிபந்தகைகளை இரு தரப்பிடமும் உருவாக்கி நீண்ட போராகிவிடும்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
எண்ணை 9 டொலரலால் சரிந்துள்ளது. இந்த செய்தியால்.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
மஜித் ஏ டி 08 வகை ஈரானிய தயாரிப்பு குறுந்தூர விமான எதிர்ப்பு ஏவுகணை மூலமே அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதாக ஈரான் கூறியிருந்தாலும், அமெரிக்க தரப்பு இயந்திர கோளாறு, நண்பர்களினால் தவறாக சுட்டு வீழ்த்தபட்டதாகவும் மற்றும் எதிர்களிடம் சிக்காமால் இருக்க தாமே அழித்ததாகவுமே பெரும்பாலான விமானங்கள் அழிவிற்குள்ளானதாக கூறியுள்ளது.
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
இதே போல் ஈரானின் பல உயர் அதிகாரத்தில் உள்ள குடும்பத்தினர் வசிப்பது “சாத்தான்” என அவர்கள் கூறும் மேற்கில்தான். அதுவும் இப்படியான பெண்கள் பலர் மேற்கில் இருக்கும் போது ஹிஜாப், நிகாப் எதுவும் போடுவதில்லை. முதலாவது சுப்ரீம் லீடர் அலி கொமெய்னியின் பூட்டி Naima Taheri கனடாவின் டொரெண்டோவில் உள்ள மக்மாஸ்டர் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றார். இவரின் தாயார், இவரின் பட்டமளிப்பு விழாவில் மேற்கத்தைய ஆடையில் கலந்து கொண்ட போட்டோவை, போட்டொசொப் பண்ணி இஸ்லாமிய உடை போல மாற்றினார். இப்படியான இரட்டை நிலைப்பாடு உள்ள ஈரானிய முல்லாக்கள்…. மேற்கிற்கு ஓடி வந்து அசைலம் அடித்து அதன் சுகபோகங்களை அனுபவித்து கொண்டு , ரஸ்யா, வடகொரியாவை விதந்துரைக்கும்…. ஊரான் வீட்டு பிள்ளைகள் அடிபட ஸ்கோர் கேட்டு கொண்டு, தம்பிள்ளைகளை மேற்கில் டாக்டர் ஆக்கிய பூமர் தமிழ் அங்கிள்கள்… தான் வியட்நாம் போருக்கு போகாமல் பலதடவை டிமிக்கி கொடுத்து விட்டு இப்போ ஜனாதிபதியாக வெட்டி வீரம் பேசும் விசர் தம்பர்…. தமிழ் தமிழ் என குமுறி விட்டு, பிள்ளைகளை இங்கிலீஸ் ஸ்கூலுக்கு அனுப்பும் சீமான்… இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். Do as we say, not as we do! நாம் சொல்வதை பின்பற்றுங்கள், நாம் செய்வதை அல்ல!
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
கெட்ட வார்த்தை மூலம் எச்சரித்த டிரம்புக்கு இரானின் பதில் என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இஸ்ரேல் கடந்த சில நாட்களாக இரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கட்டுரை தகவல் ராபர்ட் கிரீனால், பிபிசி நியூஸ் டோபி மான் 6 ஏப்ரல் 2026, 11:03 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளால் நிறைந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று தான் விதித்த காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். ''நரகத்தில் வாழ்வீர்கள்'' என்ற தனது முந்தைய அச்சுறுத்தலை அவர் மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் இரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான "நல்ல வாய்ப்பு" இருப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார். இரான் அவரது இறுதி எச்சரிக்கையைப் பார்த்து ஏளனம் செய்ததுடன், அது "இயலாமை, பதற்றம் நிறைந்தது மற்றும் முட்டாள்தனமானது" என்று கூறி நிராகரித்தது. இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது விமானப் பணியாளரும், ''எதிரி நாட்டு எல்லைக்குள் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக'' டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த புதிய அச்சுறுத்தல் வந்துள்ளது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹைஃபா மீதான ஏவுகணைத் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர். தொடர்ந்து மாற்றப்பட்ட காலக்கெடு தென்மேற்கு இரானின் மலைப்பகுதியில் அந்த அமெரிக்க வீரரைக் கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. கடந்த வெள்ளிக்கிழமை அந்த எஃப்-15 விமானம் சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் விமானி மீட்கப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அவ்விரு நாடுகளின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது இரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், ஒரு மாத காலத்திற்கும் மேலான போருக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்தை இரான் கணிசமாகத் தடுத்துள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்வதற்கும், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கும் வழிவகுத்தது. இந்த இடையூறு காரணமாக, நீரிணையை மீண்டும் திறக்க இரானுக்கு தொடர்ச்சியான காலக்கெடுவை டிரம்ப் மார்ச் மாதத்தில் அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமையன்று தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தின் மூலம் இதனை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எச்சரிக்கை: மிகவும் கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. "செவ்வாய்க்கிழமை அன்று இரானில் மின் உற்பத்தி நிலைய நாள் மற்றும் பாலங்கள் நாள். ஒரே நேரத்தில் இரண்டும் குறிவைக்கப்படும். இது முன் எப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கும். *%$%&%$ அந்த நீரிணையை (ஹோர்மூஸ்) திறந்துவிடுங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். "என்று அதில் கூறியிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் நடத்தப்பட்ட தாக்குதல் அதன்பிறகு, அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், திங்கள்கிழமை ஓர் ஒப்பந்தம் எட்டப்பட "நல்ல வாய்ப்பு" இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், "அனைத்தையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது" குறித்துத் தான் பரிசீலித்து வருவதாகக் கூறினார். பின்னர், அமெரிக்க அதிபர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "செவ்வாய்க்கிழமை, கிழக்கு நேர மண்டலத்தின்படி இரவு 8:00 மணி" என்று கூறியிருந்தார். இது முதலில் ஏப்ரல் 6, திங்கள்கிழமை அன்று முடிவடைய வேண்டிய காலக்கெடுவின் நீட்டிப்பாகத் தெரிகிறது. ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை டிரம்ப் பலமுறை ஒத்திவைத்துள்ளார். மார்ச் 21 அன்று, ஹோர்மூஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் "முழுமையாகத் திறக்கப்படாவிட்டால்" இரானின் மின் உற்பத்தி நிலையங்களை "அழிப்பேன்" என்று டிரம்ப் முதலில் அச்சுறுத்தினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரானுடன் "நல்ல" மற்றும் "ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தைகள் தொடர்வதால், மார்ச் 28 வரை, இன்னும் ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் கூறினார். ஆனால் தனது அதிகாரிகளுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் நடைபெறவில்லை என்று இரான் மறுத்தது. அந்தத் தேதி நெருங்கியதும், டிரம்ப் மீண்டும் காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தத் தேதியிலிருந்து தான் புதிய 48 மணி நேரக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் நடத்தப்பட்ட தாக்குதல் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரான் நிபந்தனை இரான் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் மெஹதி தபாதபாய் கூறுகையில், "கப்பல்களிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து சுங்கக் கட்டணத்தின் ஒரு பகுதி, போரில் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் போது ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும்" என்றார். நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதை இரான் சுட்டிக்காட்டியுள்ளது. இரான் மத்திய ராணுவ கட்டளை மையத்தின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி, டிரம்பின் அச்சுறுத்தல் ஒரு "உதவியற்ற, பதற்றமான, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும், அமெரிக்கத் தலைவருக்கு "நரகத்தின் கதவுகள் திறக்கும்" என்றும் கூறினார். இதற்கிடையில், இஸ்ரேல் இரானின் உள்கட்டமைப்பு தளங்களைத் தாக்கியுள்ளது. சமீபத்தில் சனிக்கிழமையன்று பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அடுத்த வாரம் கூடுதல் எரிசக்தி நிலையங்களைத் தாக்குவதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக அது காத்திருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று தென்மேற்கு இரானிலுள்ள காசிம் சுலைமானி சர்வதேச விமான நிலையத்தையும் தாக்கின. அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் தொடர்ந்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டடம் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அன்றைய தினத்தில் முன்னதாக, இரானிய ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததால் போரூஜ் பெட்ரோ கெமிக்கல் தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடி வருவதாகத் அபுதாபி அதிகாரிகள் கூறினர். இரானிய டிரோன்களின் தாக்குதல்கள் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. பஹ்ரைனிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டன. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04xqd693yxo
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் மிகவும் தரக்குறைவாக பொது வெளியில் கூறிய வசவு சொல் நீக்கப்பட்டுள்ளது. ஈரானியர்களும் அமெரிக்க அதிபரை வம்பிழுக்கும் நிலையே காணப்படுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் தன்னிலை இழந்துள்ள நிலை காணப்படுகிறது. https://www.threads.com/@harryjsisson/post/DWxcc-IEafF/iran-is-publicly-trolling-donald-trump-as-he-spirals-out-of-control-this-weak
-
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 05:06 PM (எம்.ஆர்.எம்.வசீம்) எரிவாயு கட்டண அதிகரிப்புக்கு அமைய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களின் சங்கம் தீர்மானிதுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்தார்.South Asians & Diaspora கொழும்பில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் எரிவாயு கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. அதனால் விலை அதிகரிப்புக்கு அமைய சிற்றுண்டிச்சாலை உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். சிறியதொரு தொகை அதிகரிக்கப்பட்டால் அதுதொடர்பில் ஆராய்ந்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். என்றாலும் லிட்ரோ காஸ் 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் லாப் எரிவாயு 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே விலை அதிகரிப்புக்கமைய சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்களின் உணவுப்பொருட்களின் விலை சிறியளவில் அதிகரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதன் பிரகாரம் ரைஸ் என்ட் கறி, கொத்து ரொட்டி 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதேநேரம் விலை குறைக்கப்பட்டால் உடனடியாக உணவுப்பொருட்களின் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை சற்று குறைவடைந்துள்ளது. அதனால் ஷாேட்டீஸ் வகைகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறேம். உணவகங்களில் கீறி சம்பா அரிசியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கீறிசம்பா அரிசியின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதற்கு மாற்றமாக வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு குறைந்த விலைக்கு அரிசி கிடைக்கப்பெறுமாக இருந்தால், நிச்சயமாக நாங்கள் றைஸ் போன்ற உணவு வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற உத்தரவாதத்தை நுகர்வோருக்கு வழங்குகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/242852
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நிலக்கரி ஒப்பந்தம்
சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நிலக்கரி ஒப்பந்தம் 06 Apr, 2026 | 11:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் உயர்மட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்து ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுடன் இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் கலந்துரையாடியுள்ளார். இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கூடிய விரைவில் குறிப்பிட்டளவு நிலக்கரி தொகையை கொள்வனவு செய்யவும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகளை சீராக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இலங்கையின் தற்போதைய காலநிலை மற்றும் சமகால புவிசார் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் நாட்டின் எரிபொருள் துறை, நீர்மின் உற்பத்தி மற்றும் அனல் மின்நிலைய செயற்பாடுகள் நெருக்கடிளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக வலுசக்தி துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறானதொரு நிலையில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டுக்கள் நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. இருப்பினும் ரஷ;யாவுடன் புதிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி எரிபொருள் இறக்குமதிக்கு பேச்சுக்களை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் நிலக்கரி கொள்வனவு இடம்பெற்றிருக்க வில்லை. ரஷ;ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவின் இலங்கை விஜயத்தின் போதே நிலக்கரி கொள்வனவு குறித்து பேசப்பட்டுள்ளது. ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கத்தில் நிலக்கரி உள்வாங்கப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலையில் எவ்வாறு ரஷ;யாவிடமிருந்து நிலக்கரியை கொள்வனவு செய்து என்பது குறித்து இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. மறுபுறம் இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது. ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என ரஷ்ய தரப்பு அறிவித்த நிலையிலேயே நிலக்கரி கொள்வனவு குறித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242850
-
ஏராளன் started following சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நிலக்கரி ஒப்பந்தம்
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
ஈரானின் இஸ்பஹான் நகரில், அமெரிக்க விமானம் ஒன்றின் உடைந்த பாகங்களும், ஹெலிகாப்டர் சுழலி ஒன்றும் காணப்படுவதை, சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம் காட்டுவதாகத் தெரிகிறது. | ராய்ட்டர்ஸ் தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரான் கூறியபோதிலும், ஒரு உடன்பாட்டை எட்டாவிட்டால் தெஹ்ரான் மீது "நரகத்தைப்" பொழிவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அச்சுறுத்திய ஒரு நாள் கழித்து, அமெரிக்காவும் ஈரானும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்தின் கட்டமைப்பைப் பெற்றுள்ளன. இந்த சமாதானத் திட்டம், உடனடிப் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து ஒரு விரிவான உடன்படிக்கையை எட்டும் இரு கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் "இரவு முழுவதும்" தொடர்பில் இருந்து வருகிறார் என்று இந்த முன்மொழிவுகள் குறித்து அறிந்த ஓர் வட்டாரம் திங்களன்று தெரிவித்தது. தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்காது என்றும், அந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்து வருவதால் காலக்கெடுவை ஏற்காது என்றும் ஒரு மூத்த ஈரானிய அதிகாரி திங்களன்று தெரிவித்தார். போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய இரு கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாத்தியமான 45 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஆக்சியோஸ் ஞாயிற்றுக்கிழமை முதன்முதலில் செய்தி வெளியிட்டது. ஞாயிற்றுக்கிழமை தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வசவுச் சொற்கள் நிறைந்த ஒரு பதிவில், செவ்வாய்க்கிழமைக்குள் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்து ஜலசந்தியை மீண்டும் திறக்கத் தவறினால், ஈரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தினார். இத்தகைய தாக்குதல்கள் ஒரு போர்க்குற்றமாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுமழை பொழிந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, எண்ணெய் விலைகளை உயர்த்திப் பொருளாதாரங்களைச் சேதப்படுத்திய போரைத் தொடங்கி ஐந்து வாரங்களுக்கும் மேலான நிலையில், திங்கட்கிழமையன்று பிராந்தியம் முழுவதும் புதிய வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுசெல்லும் பாதையான ஹோர்முஸ் நீர்வழியை ஈரான் திறம்பட மூடியதுடன், இஸ்ரேல், அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடாவைச் சுற்றியுள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியது. "ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும், பால தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படும்," என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது பதிவில் தெரிவித்திருந்தார். இதைப்போல் வேறொன்றும் இருக்காது!!! *************************************, இல்லையென்றால் நீ நரகத்தில் தான் வாழ்வாய் — பார்த்துக்கொண்டே இரு! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப். ஆதரவாளர்கள், எதிரிகள் மற்றும் நிதிச் சந்தைகள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள முரண்பட்ட செய்திகளை வழங்கும் விதத்தில், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திங்கட்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார். போர் நிறுத்தத் திட்டம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கிடைப்பதற்கு முன்பே அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்து, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக்கூடும் என அத்திட்டங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. "அனைத்து அம்சங்களும் இன்று ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்," என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தைகளில் உள்ள ஒரே தகவல் தொடர்பு வழித்தடமான பாகிஸ்தான் வழியாக மின்னணு முறையில் இறுதி செய்யப்படும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக இந்த ஆரம்பகட்ட உடன்பாடு கட்டமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டது. போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய இரு கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாத்தியமான 45 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஆக்சியோஸ் ஞாயிற்றுக்கிழமை முதன்முதலில் செய்தி வெளியிட்டது. இந்த முன்மொழிவின்படி, ஒரு விரிவான தீர்வை இறுதி செய்வதற்கு 15-20 நாட்கள் அவகாசத்துடன், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் வகையில் உடனடியாகப் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். தற்காலிகமாக 'இஸ்லாமாபாத் ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையானது, ஜலசந்திக்கான ஒரு பிராந்தியக் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கும், மேலும் இறுதி நேரடிப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறும். தடைகளைத் தளர்த்துவதற்கும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதற்கும் ஈடாக, அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற ஈரானின் உறுதிமொழிகள் இறுதி ஒப்பந்தத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரம் தெரிவித்தது. தெஹ்ரான் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருவதுடன், அதன் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று கூறி, அவரது அச்சுறுத்தல்களைக் கண்டித்தார். "உங்கள் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நரக வேதனைக்குள் இழுத்துச் செல்கின்றன, மேலும் நீங்கள் நெதன்யாகுவின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் பிடிவாதமாக இருப்பதால் நமது முழுப் பிராந்தியமும் எரியப் போகிறது," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் பதிவிட்டார். அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன்னிடம் இன்னும் போராடும் குணம் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், ஈரான் வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தியதுடன், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலைகள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியது. துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் ஒன்றை தாக்கியதாக புரட்சிகர காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குவைத்தில், அரசு எண்ணெய் நிறுவனமான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துணை நிறுவனங்களால் இயக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில், ட்ரோன்களால் தீப்பொறிகள் ஏற்பட்டு "கடுமையான பொருள் சேதம்" ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கும், பல வளைகுடா நாடுகளில் உள்கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கும் ஈரானுக்கு உள்ள திறனை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், எரிசக்தி மற்றும் கடல்சார் மையங்களில் உள்ள பலவீனங்களையும் வெளிப்படுத்தின. இஸ்ரேலிலும், ஈரானிய ஏவுகணை ஒன்று குடியிருப்பு கட்டிடம் ஒன்றைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு நகரமான ஹைஃபாவில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை சல்லடை போட்டுத் தேடுவதை ஊடகங்கள் காட்டின. ஒன்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர், மேலும் இடிபாடுகளிலிருந்து இரண்டு சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் பின்னர் செய்தி வெளியிட்டன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விமானப்படை வீரர் மீட்கப்பட்டதை அறிவித்த டிரம்ப், இந்த நடவடிக்கையை அமெரிக்க வரலாற்றிலேயே "மிகவும் துணிச்சலான" பணிகளில் ஒன்று என விவரித்தார். வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 ரக விமானத்தின் ஆயுத அதிகாரியான விமானப்படை வீரர் காயமடைந்தார், ஆனால் அவர் "நன்றாக இருப்பார்" என்று டிரம்ப் எக்ஸ் (X) செயலி வழியாக அனுப்பிய செய்தியில் கூறினார். அந்த விமானத்தின் விமானி முன்னதாகவே மீட்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்கு முன்பாக, இருளின் மறைவில், அமெரிக்க கமாண்டோக்கள் யாருக்கும் தெரியாமல் ஈரானுக்குள் ஆழமாக ஊடுருவி, 2,100 மீட்டர் உயரமுள்ள மலைத்தொடரில் ஏறி, அங்கு சிக்கிக்கொண்டிருந்த அமெரிக்க ஆயுத நிபுணரைப் பாதுகாப்பாக மீட்டனர். தெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள கரடுமுரடான நிலப்பரப்பிற்கு, சுமார் 100 சிறப்பு நடவடிக்கைப் படையினரில் சிலரை ஏற்றிச் சென்ற இரண்டு MC-130 விமானங்கள் இயந்திரக் கோளாறு காரணமாகப் புறப்பட முடியவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். அவற்றின் தளபதிகள் பெரும் ஆபத்து நிறைந்த ஒரு முடிவை எடுத்து, அந்தக் குழுவை அலை அலையாக மீட்டு வருவதற்காக, கூடுதல் விமானங்களை ஈரானுக்குள் பறக்கவிட உத்தரவிட்டனர். மீட்புப் படை படிப்படியாக வெளியேற்றப்பட்டது. மேலும், முக்கியமான உபகரணங்களை அங்கேயே விட்டுச்செல்லும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கப் படைகள் செயலிழந்த MC-130 ரக வாகனங்களையும், கூடுதலாக நான்கு ஹெலிகாப்டர்களையும் ஈரானுக்குள் அழித்தன. இந்த நடவடிக்கையின்போது பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரான் கூறியது. பிப்ரவரி 28 அன்று ஈரான் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்தப் போரில், முக்கியமாக ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் சுகாதார அமைச்சகத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை லெபனானில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டனர். https://www.japantimes.co.jp/news/2026/04/06/world/politics/trump-threat-iran-us-ceasefire-proposal/
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவுத் தலைவர் மஜித் காதெமி உயிரிழப்பு Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 02:15 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி இன்று (ஏப் 6) காலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு: இன்றைய தினம் அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை "அமெரிக்க-சியோனிச எதிரிகளின்" பயங்கரவாதத் தாக்குதல் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை வர்ணித்துள்ளது. மேஜர் ஜெனரல் மஜித் காதெமி, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை அமைப்பு மற்றும் அதன் உளவு பாதுகாப்பு அமைப்பு ஆகிய இரண்டிற்கும் தலைமை வகித்து வந்தார். ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காதெமி "தியாக மரணமடைந்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவல்களோ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியாகவில்லை. 2025 ஜூன் மாதம் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது காசேமிக்கு பதிலாக மஜித் காதெமி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242875
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதல் - 13 பேர் உயிரிழப்பு 06 Apr, 2026 | 12:02 PM ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தலைநகரில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மற்றும் அதன் வளாகத்துக்கு அருகில் உள்ள இயற்கை எரிவாயு விநியோகத் தளம் ஆகியவற்றின் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகமான ஃபார்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது போர் இடம்பெற்று வருவதால் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் எதை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் தொடர்கின்றன. மேலும், தெஹ்ரானுக்கு தெற்கில் உள்ள கோம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் நாளிதழொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242860
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
மிகவும் கவலையான நிகழ்வு.ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏