All Activity
- Past hour
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
செய்தியின் மூலம் என்ன? முகநூலா? அல்லது அல்வாயன் யாழ் பல்கலை மருத்துவ பீடத்தில் பணியாற்றுவதால் "அமுக்கப் பட்ட" தகவல்களும் தெரிய வந்திருக்கின்றனவா😇? 2023/24 இல் யாழ் பல்கலை மருத்துவ பீடம் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்ட படி பரீட்சை எழுத அனுமதி மறுத்து, கண்டனங்களின் பின்னர் பின் வாங்கியது. இதை வைத்துக் கொண்டு அல்வாயன் போன்ற "இஸ்லாமின் நண்பர்கள்" முகநூலில் கதைகள் பரப்புகிறார்கள் என ஊகிக்கிறேன்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கோடை காலம் வருகுதெல்லோ😎? நல்லூர்க் கொடியேற்றம் திடு திப்பென்று வந்து நிக்கும்!
- Today
-
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு 20 Jan, 2026 | 07:40 PM அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’ என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236558
-
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது?
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிசம்பரில் இரான் ஒரு கப்பலைக் கைப்பற்றியது. கப்பலில் இருந்த (இடமிருந்து வலமாக) துங்கா ராஜசேகர், தலைமை அதிகாரி அனில் குமார் சிங் மற்றும் மசூத் ஆலம். கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில், இரானில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். மறுபுறம் உலக அரங்கில் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இந்நிலையில், இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சட்டவிரோத டீசல் வைத்திருந்ததாகக் கூறி டிப்பா துறைமுகத்திற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 'எம்டி வேலியன்ட் ரோர்' (MT Valiant Roar) கப்பலை 18 பணியாளர்களுடன் இரான் அதிகாரிகள் கைப்பற்றினர். கப்பல் குழுவினரில் இந்தியர்கள் பத்து பேரை ஜனவரி 6-ஆம் தேதி இரான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் 16 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கப்பலின் கேப்டன் விஜய் குமார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பிரிவில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான எம். ஆனந்த் பிரகாஷ் இந்த விவகாரத்தை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். எம். ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், "வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குற்றச்சாட்டுகள் குறித்து இரான் நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், பணியாளர்களுக்குத் தூதரக ரீதியிலான அணுகலைப் பெற முயற்சி செய்து வருகிறது," என்றார். "ஜனவரி 10-ஆம் தேதி தூதரக அணுகல் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இரானில் நிலவும் குழப்பம் காரணமாக எங்களால் அதைப் பெற முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றும் கூறினார். டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு செய்திக்குறிப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரான் அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், கப்பலில் ஆறாயிரம் மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் இருந்ததாகக் கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "கப்பல் டீசலை ஏற்றிச் செல்லவில்லை, ஆனால் 'மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெயை' (VLSFO) ஏற்றிச் சென்றது. இது, சர்வதேச கடற்பரப்பில் எங்களது பிற கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இருக்கக்கூடிய ஒரு வசதி. இது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றார். "ஆனால் கப்பலின் எரிபொருளை டீசல் என்று தவறாகக் கருதி இரான் எங்கள் குழுவினரை மோசமாக நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், எங்களது அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதே எங்களது முன்னுரிமை," என்றார் ஜோகிந்தர் பிரார். உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,ஆகாஷ் குப்தா, திவாகர் புத்தி மற்றும் விஷால் குமார் (இடமிருந்து வலமாக) உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கப்பல் கேப்டன் விஜய் குமார் மற்றும் ஆய்லர் (Oiler) ஆகாஷ் குப்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி துங்கா ராஜசேகர், டெக் ஃபிட்டர் நந்தகி வெங்கடேஷ் மற்றும் சமையல் பணிகளைச் செய்யும் திவாகர் புத்தி, பஞ்சாப்பைச் சேர்ந்த சீமேன்-1 விஷால் குமார் ஆகியோர் கடந்த 45 நாட்களாகக் கப்பலில் இரான் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் முகமது லுக்மான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மின்-தொழில்நுட்ப அதிகாரி பிரியா மனதுங்க ஆகியோரும் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ள பணியாளர்களிடமிருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த தகவலின்படி, எட்டு பணியாளர்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் 14-க்கு-10 அளவுள்ள உணவு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கேயே அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், இந்திய தூதரகமும் கப்பல் நிறுவனமும் தங்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கண் விழிக்கிறார்கள். அதே சிறிய அறையிலேயே அவர்கள் தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இந்த நிலை கடந்த ஒன்றரை மாதங்களாகத் நீடிக்கிறது. பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கப்பலில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துபோனபோது, கப்பல் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார் டிசம்பர் 25-ஆம் தேதி உணவுப் பொருட்களை அனுப்பினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, அரிசி மட்டுமே எஞ்சியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், கப்பலில் உள்ள இந்தியச் சமையல்காரரான திவாகர் புத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சமைக்கிறார், அதை எட்டு பேரும் உப்போடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். கப்பலில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் கடந்த பத்து நாட்களாக குடிநீர் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கப்பலில் உள்ள "குடிப்பதற்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலை நீரை (Industrial water) கொதிக்க வைத்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் பிரச்னை காரணமாக, அவர்கள் இரவில் மட்டுமே ஜெனரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகள் ஒருபுறம் என்றாலும், டீசல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை உள்ளது. கேப்டன் விஜய்யின் சகோதரர் வினோத் பன்வாரின் கூற்றுப்படி, கப்பலின் எரிபொருளும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. பணியாளர்களின் உடைமைகளைக் கைப்பற்றிய இரான் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அன்சாரி மன்சூர் ஆலம், கேதன் மேத்தா, ஷோயப் அக்தர் (இடமிருந்து வலமாக) டிசம்பர் 8-ஆம் தேதி, இரான் பாதுகாப்புப் படையினர் 'எம்டி வேலியன்ட் ரோர்' பணியாளர்கள் அனைவரின் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பைகளை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரான் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு ஒரு மொபைல் போனை வழங்கினர், அதன் உதவியுடன் இந்த ஆறு இந்தியர்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தங்களது குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். ஆனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதால், இத்தகைய அழைப்புகளும் நீண்ட காலம் நீடிக்காது என்று கேப்டன் விஜய் குமாரின் சகோதரர் வினோத் பன்வார் கூறுகிறார். ஆரம்பத்தில், அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களில், அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலில் நிலவும் தண்ணீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளின் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோகிந்தர் பிரார், "அவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்," என்றார். அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கப்பல் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர். கப்பலின் மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா கூறுகையில், "டிசம்பர் 8-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோதே, கப்பல் நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்து முன்னுரிமை அளித்திருந்தால், இன்று எனது மகன் உட்பட பத்து பேர் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி அனில் குமார் சிங், சீமேன் ஆகாஷ் குமார் சிங், கோபால் சௌகான் மற்றும் ஷோயப் அக்தர், ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாம் நிலை அதிகாரி ஜம்மு வெங்கட், ஹரியானாவைச் சேர்ந்த இரண்டாம் பொறியாளர் சதீஷ் குமார், டெல்லியைச் சேர்ந்த மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஏரோ தாரிஷ், பிகாரைச் சேர்ந்த ஆயிலர் மசூத் ஆலம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயிலர் அன்சாரி மன்சூர் அகமது ஆகியோர் ஜனவரி 6-ஆம் தேதி இரானிய பாதுகாப்புப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 16 பணியாளர்களில், பலரது பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. விஷால் குமார், நந்தகி வெங்கடேஷ் மற்றும் மசூத் ஆலம் ஆகியோரின் ஒன்பது மாதப் பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. பிகாரைச் சேர்ந்த மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி கூறுகையில், "எனது மகன் கடைசியாக ஜனவரி 5-ஆம் தேதி அழைத்தான், ஆனால் அப்போது குறைவான நேரமே பேச முடிந்தது. அதன்பிறகு என்னால் அவனுடன் பேச முடியவில்லை," என்றார். தனது மகனின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் இப்ரார் அன்சாரி, "டிசம்பர் 8-ஆம் தேதி அனைவரும் காவலில் எடுக்கப்பட்டபோது, மசூத் ஆலமுக்கு காய்ச்சல் இருந்தது. இப்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார். ஈத் பண்டிகைக்குப் பிறகு மசூத் திருமணம் செய்யவிருந்தார், ஆனால் இப்போது அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மசூத்தைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துங்கா ராஜசேகரின் ஒரே சகோதரிக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழல்கள் குறித்துப் பேசிய முகேஷ் மேத்தா, "எனது வீட்டில் திருமணம் எதுவும் இல்லை, ஆனால் மகன் கேதன் சிறைக்குச் சென்ற செய்தியைக் கேட்ட பிறகு, அவரது தாயாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது," என்றார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இது எனது குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, 16 குடும்பங்களின் பிரச்னை. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பாத துறையே இல்லை, ஆனால் இன்றுவரை யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்றார். குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங் முகேஷ் மேத்தாவைப் போலவே, அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங், தனது கணவர் உட்பட கப்பல் பணியாளர்கள் அனைவரையும் இரான் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக நம்புகிறார். "இரானுக்குக் கப்பல் நிறுவனம் மீதோ அல்லது அதில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு குறித்தோ ஏதேனும் பிரச்னை இருந்தால், அது நேரடியாக நிறுவனத்திடம் பேச வேண்டும், ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது," என்றார் காயத்ரி சிங். இந்தக் கருத்துடன் உடன்படும் இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகையில், "நிறுவனமே கப்பலின் ஆபரேட்டர். கப்பலில் என்ன செல்கிறது என்பதை நிறுவனம் தான் தீர்மானிக்கிறது, பணியாளர்கள் அல்ல. எனவே, பணியாளர்களைச் சிறைக்கு அனுப்பும் இரானின் முடிவு முற்றிலும் மனிதத்தன்மையற்றது," என்றார். துபாயைச் சேர்ந்த 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், "இரானுடன் பேச்சுவார்தை நடத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இரான் அரசு பேசத் தயாராக இல்லை" என்றார். "இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக எங்களது கப்பல் இரானால் கைப்பற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஜோகிந்தர் பிரார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் டிசம்பர் 5, 2023 அன்று, பிராரின் மற்றொரு கப்பல் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாகக் கூறி இரானால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் "21 பணியாளர்கள் இருந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 18 பேரை இரான் விடுவித்தது. மூன்று பணியாளர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்," என்று ஜோகிந்தர் பிரார் கூறுகிறார். "நாங்கள் அன்றிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். இப்போது அவர்கள் இரண்டாவது கப்பலைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு கப்பல்களிலும் மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய் (VLSFO) தொடர்பான ஆவணங்கள் இருந்தபோதிலும், இரானில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை," என்கிறார் அவர். இந்திய மாலுமிகள் பொதுச் செயலாளர் பிரதீப் சிங், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' தொடர்பாகப் பல பிரச்னைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அது குறித்து ஏற்கனவே கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா பெரும் சோகமும் கோபமும் கலந்த ஒரு நிலையில் தவிக்கிறார். "இந்த 42 நாட்களில் நாங்கள் விரக்தியடைந்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்னையை சமாளிக்க, நாங்கள் (குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள்) அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சிஜிஎஸ்சி (CGSC) நிதி ராமன், "அரசாங்கத்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று கூறினார். நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் கப்பல் நிறுவன உரிமையாளர், "விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். ஆனால் இரானில் நிலவும் மோசமான உள்நாட்டுச் சூழ்நிலை காரணமாக, வழக்கறிஞரால் பணியாளர்களைச் சந்திக்க முடியவில்லை," என்றார். இருப்பினும், சரக்குகளை கையாளும் கப்பல் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகிறார். "பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாகத் தாயகம் அழைத்து வரக் கோரி கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திப்போம்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkzg67v6xo
-
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு 20 Jan, 2026 | 11:41 AM கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் “சீனா அச்சுறுத்தல்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி அமெரிக்கா தன்னிச்சையான சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை ஒரு காரணமாகக் கொண்டு தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கண்டனம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த பதிவில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வட அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் “கோல்டன் டோம்” (Golden Dome) என அழைக்கப்படும் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கிரீன்லாந்து தொடர்பான சீனாவின் நிலைப்பாடு ஏற்கனவே பல தடவைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டமே இன்றைய உலக ஒழுங்கின் அடித்தளமாக இருப்பதாகவும், அந்தச் சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை பேணுவது சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும் எனவும், மோதல்களை தூண்டும் வகையிலான குற்றச்சாட்டுகள் உலக அமைதிக்கு பாதகமாக அமையும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236505
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு.
வருத்தப்படாத வயோதிபர் சங்கம்- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
காவடியாட்டம் சூப்பருங்கோ....- தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு Jan 20, 2026 - 01:26 PM ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://adaderanatamil.lk/news/cmkmavctd046ao29ng3cgx9f5- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ். மருத்துவ பீடத்தில் அரங்கேறிய விசித்திரம்: அனுமதி பெறாமல் இரண்டு மாதங்கள் கல்வி கற்ற யுவதி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முறையான அனுமதி இன்றி, மாணவர்களுடன் இணைந்து யுவதி ஒருவர் சுமார் இரண்டு மாத காலம் விரிவுரைகளில் கலந்துகொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்திற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதன்போது, கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தன்னை ஒரு மாணவியாகப் பதிவு செய்துகொண்டு தங்கியிருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக ஏனைய மாணவர்களுடன் இணைந்து மருத்துவ விரிவுரைகளிலும் அவர் எவ்வித தடையுமின்றி கலந்துகொண்டு வந்துள்ளார். வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ பீடத்தின் கற்றல் செயற்பாடுகளின் போது மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதியில் 202 மாணவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 203 மாணவர்கள் இருந்தமையால் பேராசிரியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின் போதே, பல்கலைக்கழக அனுமதி பெறாத குறித்த யுவதி விரிவுரைகளில் கலந்துகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டது. கல்வித் தகுதி: குறித்த யுவதி உயர்தர உயிரியல் பாடத்துறையில் 3 சாதாரண (S) சித்திகளை மாத்திரமே பெற்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை: இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த யுவதி மீது சட்ட நடவடிக்கை அல்லது அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் பதிவுகள் இருக்கும் ஒரு பீடத்தில், இரண்டு மாதங்களாக எவரும் அறியாமல் ஒரு யுவதி கல்வி கற்றுள்ளமை பல்கலைக்கழக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ARV Loshan News ·- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
2nd Hand Nobel Prize. 😂- யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை.
யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார். https://athavannews.com/2026/1460747- கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 ஒரு நாள், இரவு அவர்கள் மீண்டும் ஆன்லைனில் இணைந்தனர் . அவளுடைய மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரின் வீடும் அமைதியாக இருந்தது. அதிகாரி: “உனக்குத் தெரியும்... சில சமயங்களில் நீயே உன் மகிழ்ச்சியை மறுக்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது.” கண்மணி உடனடியாக பதிலளிக்கவில்லை. அந்த வாக்கியத்தை அவள் முன்பே கேட்டிருந்தாள் - உறவினர்கள், அண்டை வீட்டார், அவளுடைய வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாக நம்பிய நண்பர்களிடமிருந்து கூட. கண்மணி: “நான் மகிழ்ச்சியை மறுக்கவில்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்வதை மறுக்கிறேன்.” அதிகாரி: “மீண்டும் மீண்டும் சொல்வது எது ?” கண்மணி: “மௌனமாக இருக்கச் சொல்வது, நான் ஒருவாறு சரிப்பண்ண வேண்டும் என்று சொல்வது.” அதன் பின் இருவரும் கொஞ்சம் பேசுவதை ஒரு சில நிமிடம் இடைநிறுத்தினர், அதிகாரி: “ஆனால் திருமணம் அப்படி, முன்பு போல் இருக்க வேண்டியதில்லை. அது வித்தியாசமாக நன்றாக அமையலாம்.” கண்மணி: “ஆம். அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாதபோது, அதன் தாக்கம் சமமாகப் பகிரப்படுவதில்லை.” அதிகாரி: “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” கண்மணி: “ஒரு திருமணம் முறிந்துவிட்டால், அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் என்று மக்கள் கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு பொறுமையாக இருந்தாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு புரிந்துகொண்டாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு முயற்சி செய்தாளா என்று கேட்கிறார்கள்.” அவள் தொடர்ந்தாள் “அவர்கள் ஆண்களிடம் ஒரே மாதிரியான இப்படியான கேள்விகளைக் கேட்பதில்லை.” அதிகாரி: “அது சரி, ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இல்லை.” கண்மணி: “எனக்குத் தெரியும். ஆனால் எல்லாப் பெண்களையும் மீண்டும் ரிஸ்க் எடுக்கச் சொல்கிறார்கள். [I know. But all women are asked to take the risk again.]” அதிகாரி: “மீண்டும் ஒரு காதலுக்கு பயப்படுகிறீர்களா?” அவள் லேசாகச் சிரித்தாள், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. அது ஆடியோ [audio] அழைப்பு என்பதால். கண்மணி: “இல்லை. நான் காதலை ரசிக்கிறேன். நான் பாசத்தை ரசிக்கிறேன். நான் ஆசையைக் கூட ரசிக்கிறேன்.” அதிகாரி: “அப்புறம் ஏன் ஒருவருடன் வாழ்க்கையை மறுக்க வேண்டும்?” கண்மணி: “ஏனென்றால் காதல் என்பது சரணடைதல் போன்றது அல்ல. மேலும் திருமணம் பெரும்பாலும் பெண்களிடமிருந்து முதலில் சரணடைதலைக் கோருகிறது.” அதன் பின் இன்னொரு மௌனம் சில நிமிடம் நீண்டது அதிகாரி: “நான் உன்னைத் தனிமையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்.” அவள் பதில் மெதுவாக வந்தது. கண்மணி: “நான் தனிமையாக இல்லை. நான் என்னுடன் வாழ்கிறேன். என் குழந்தையுடன் வாழ்கிறேன்.” அதிகாரி: “அது... முழுமையடையவில்லையே?” கண்மணி: “இல்லை. முழுமையடையாதது நான் காணாமல் போன முன்னைய வாழ்க்கை .” அவர் குறுக்கிடவில்லை. கண்மணி: “நான் ஏற்கனவே என் குரல் சிறியதாக மாறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். [I have already lived a life where my voice became small], என் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக அமைந்த இடத்தில் [Where my needs were secondary.]" அவள் நிறுத்தி, பின்னர் மேலும் சொன்னாள்: “நான் அதில் இருந்து இப்ப தப்பித்து விட்டேன். நான் மீண்டும் என்னை இழக்கத் தயார் இல்லை.” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2005 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/33375172355464649/?- தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு! 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே. நதீகா வத்தலியத்த தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://athavannews.com/2026/1460688- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
ஆஹா.... நல்லாய் கதறுங்க. 😂 உங்கள் குரங்கு சேட்டைகளை அறுவடை செய்யும் நேரம் இது. இதைத்தான் பலரும் எதிர்பார்த்தார்கள். 🤣 தமிழரசு கட்சியால், மக்களை ஒன்று திரட்டி…. யாழ்ப்பாணத்தில் ஒரு பொங்கல் விழா, மாட்டு வண்டில் சவாரி போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை வைக்க வக்கில்லை. சிங்கள கட்சி, யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழா வைத்தால்…. உங்களுக்கு வயிறு எரியுது. 😁 தினமும்... உங்களின் குழிபறிப்பு, குத்து வெட்டுச் செய்திகளை பார்த்து மக்கள் வெறுத்து விட்டார்கள் என்பதைக் கூட... புரியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் அரசியலுக்கே லாயக்கு அற்றவர்கள். தமிழரசு கட்சியை கலைத்து விட்டு, உங்கள் சொந்தத் தொழிலை பார்க்கவும். மக்கள்... உங்களை விட்டு பிரிந்து, வெகுதூரம் சென்று விட்டார்கள். அதற்கு முழுக் காரணமும் நீங்களும், சுமந்திரனும்தான்.- இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி III) 11 Jan 2026, 6:00 PM முரண்படும் மாநிலங்கள் ருக்மிணி எஸ். பகுதி -2 உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். முதலாம் பகுதியில், தற்போதைய தருணத்தை விவரிக்கவும், ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல்போன அண்மைக்காலத்து முக்கியத் தரவுகளையும் தொகுத்து அளித்தோம். இரண்டாம் பகுதியில், பிறப்பு விகிதங்கள் குறைவது தொடர்பான தரவுகளை ஆராய்ந்தோம். இந்தியா உலகளாவிய போக்குக்குள் இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காவும் உள்ளது என்று சுட்டிக்காட்டும் ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். மூன்றாம் பகுதியில், இந்திய மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள்தொகைப் புள்ளிவிவர வேறுபாடுகளையும் அவை தற்போதுள்ள சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதையும் பார்ப்போம். இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் பல வழிகளில் நாட்டிற்கான பொதுவான சவால்களாக உள்ளன. உழைக்கும் மக்களால் கிடைக்கும் பலன் உச்சத்தைத் தொடுதல், தொற்றுநோயியல் மாற்றத்தில் ஏற்படும் முன்னேற்றம், பிறப்பு விகிதங்களின் சீரான சரிவு, முதியோர் எண்ணிக்கை அதிகமாவது குறித்த கவலை ஆகியவையே அந்தச் சவால்கள். உயர்தரத் தரவுகளின் துல்லியமான வாசிப்பின் அடிப்படையில், கொள்கையும் அரசியலும் ஒன்றிணைந்து இந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், பல முக்கியப் பிரச்சினைகளில் நாட்டின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் ஆழமான பிளவுகளைக் கொண்டுள்ளன. இது, மக்கள்தொகை விஷயத்தில் பிளவுபட்ட அரசியல் எதிர்வினைகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பகுதியில், இந்தப் பிளவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் ஆராய்வோம். 1. மாற்றத்தின் காரணிகள் பிறப்புகள், இறப்புகள், இடப்பெயர்வு ஆகிய மூன்று பரந்த அளவிலான செயல்முறைகள் மக்கள்தொகை மாற்றங்களைத் தூண்டுகின்றன. இந்திய மாநிலங்களின் மக்கள்தொகையில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்த மூன்று காரணிகளை முதலில் பார்ப்போம். கடந்த ஆண்டுகளுக்கான உலகளாவிய தரவுகளுக்கும், 2100ஆம் ஆண்டு வரையிலான கணிப்புகளுக்கும், நாங்கள் 2024ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உலக மக்கள்தொகைக் கண்ணோட்டங்களின் திருத்தப்பட்ட ஆவணத்தைப் (United Nations World Population Prospects, 2024 Revision) பயன்படுத்துகிறோம். இந்திய மாநிலங்களின் 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளுக்கு, இந்தியாவின் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். 2023ஆம் ஆண்டிற்குப் பிந்தைய தரவுகளுக்கும், 2036ஆம் ஆண்டுவரையிலான இந்திய மாநிலங்களுக்கான கணிப்புகளுக்கும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (Registrar General of India) செய்த மக்கள்தொகைக் கணிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்தியா 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். i) கருவுறுதலில் வேறுபாடு கருவுறுதல் (Fertility) – ஒரு பகுதியில் ஒரு பெண் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை – தொடர்ந்து சரிவைக் கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் பார்த்ததுபோல, இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே இந்த விஷயத்தில் வேறுபட்ட விகிதங்கள் நிலவுகின்றன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வசதி படைத்தவை. இவை பெண்கள் கல்வி, பெண்கள் ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக, இந்த மாநிலங்களில், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, ஏழ்மையான கிழக்கு, வடக்கு மாநிலங்களைவிட, கருவுறுதல் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும், “பதிலீட்டுக் கருவுறுதல் விகிதத்தை” (Replacement Fertility) இந்த மாநிலங்கள் மிக விரைவாக அடைந்தன. மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாகப் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை. நாடுகளின் வளமை அதிகரிக்கும்போதும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை பெண்களுக்குச் சிறந்த முறையில் கிடைக்கும்போதும் கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் நடைமுறை. ஒரு நாட்டின் TFR 2.1ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றிருந்தால், அந்த நாடு “பதிலீட்டுக் கருவுறுதல்” நிலையை அடைந்துவிட்டதாக மக்கள்தொகையியலாளர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இரண்டு பெரியவர்களுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைகளில் சில குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான நிகழ்தகவுகளைக் கணக்கிட்டால், அந்தத் தம்பதியினர் தங்கள் வழ்நாளில் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்ற முறையில் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த நிலைக்குக் கீழே குறைந்தால், மக்கள்தொகை அதன் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கருவுறுதல் குறைந்திருந்தாலும், அவற்றின் போக்குகள் பல பதிற்றாண்டுகளாக வேறுபடுகின்றன. பதிலீட்டுக் கருவுறும் விகிதத்தை இன்னும் அடையாத நான்கு மாநிலங்களும் இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளான இந்தியாவின் மையத்திலும் வடக்கிலும் உள்ளன. உத்தரப் பிரதேசம் 2025இலும் மத்தியப் பிரதேசம் 2028இலும் இந்த மைல்கல்லை அடைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதிலீட்டுக் கருவுறுதலை அடைய 2039வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மாநிலம் பிகார் மட்டுமே. (தரவு கிடைத்த மிகச் சமீபத்திய ஆண்டான 2023இற்குள் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான கணிப்புகள் 2022இல் அம்மாநிலம் இந்த மைல்கல்லை எட்டும் என்று மதிப்பிட்டிருந்தாலும், அது இன்னும் எட்டவில்லை). வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக பிறப்பு விகிதங்கள் அதிக ஆண்டுகளுக்கு நீடிப்பதுதான் இந்தக் கருவுறுதல் வேறுபாட்டின் உடனடித் தாக்கம். இந்தியாவில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒருவர் (14 வயதுக்குட்பட்டவர்கள்) பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாழ்கிறார்கள். பிகாரின் குழந்தைகளின் முழுமையான எண்ணிக்கை 2036வரை (நமக்குக் கிடைத்ததிலேயே மிகத் தொலைதூரக் கணிப்பு ஆண்டு) குறைய வாய்ப்பில்லை. அதேசமயம், அனைத்துத் தெற்கு மாநிலங்களிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. கருவுறுதலில் உள்ள இந்த வேறுபாடும் இந்த மாநிலங்களில் இது ஏற்படுத்தும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் தாக்கமும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே வளர்ந்துவரும் மோதலுக்குக் காரணமாக இருக்கிறது. ii) இறப்பு விகிதங்களில் மாற்றங்கள் இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களைவிடச் சுகாதாரக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வயதின் அமைப்பு காரணமாக அதிக இறப்பு விகிதங்களும் காணப்படுகின்றன. தொற்றும் நோய்கள், பிரசவத்தின்போதும் குழந்தைப் பருவத்திலும் உள்ள சூழ்நிலைகள் ஆகியவை இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் மரணங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக உள்ளன. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது 5ஆகக் குறைந்துள்ளது (அதாவது, ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் 5 குழந்தைகள் இறப்பது). இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலை. அதே சமயம், ஒப்பீட்டளவில் ஏழ்மையான மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் IMR 37 ஆக உள்ளது. இது சூடானுக்குச் சமமான நிலை. இருப்பினும், இந்த ஏழை மாநிலங்களின் மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், அவற்றின் ஒட்டுமொத்த இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளன. வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் உள்ள கச்சா இறப்பு விகிதம் (Crude Death Rate) — ஒவ்வொரு 1,000 பேருக்கும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கை — மத்தியப் பிரதேசத்தை விஞ்சிவிட்டது. அதற்குக் காரணம், அதன் மக்கள்தொகையில் முதியவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதுதான். ஒப்பீட்டளவிலான அதிக இறப்பு விகிதங்களும் குறைந்த பிறப்பு விகிதங்களும் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மக்கள்தொகையைக் குறைக்க உதவுகின்றன. iii) மாநிலங்களுக்கிடையில் குறைந்த இடப்பெயர்வு கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றுடன், மக்களின் நடமாட்டமும் மக்கள்தொகையின் அளவைப் பாதிக்கும் காரணியாகும். வளர்ச்சியடைந்த இடங்களில் பிறப்பு விகிதங்கள் குறையும்போது, அங்கே உழைக்கும் வயதுடையவர்கள் குடியேறுகிறார்கள். வயதானவர்களால் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க இயலாது; இந்த இழப்பும், அவர்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கத்தை ஈடுசெய்ய உதவும் முக்கியக் காரணியாக உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு உள்ளது. இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சர்வதேச இடம்பெயர்வு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இது மக்கள்தொகையைப் பாதிக்காது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு 1,000 பேரில் ஒருவரைவிடவும் குறைவானவர்களே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதேசமயம் அண்டை நாடான இலங்கையில் ஒவ்வொரு 1,000 பேரில் மூன்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்தியாவுக்குள் நடக்கும் உள்நாட்டு இடப்பெயர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது. பத்து இந்தியர்களில் மூன்று பேர், தாங்கள் வசித்த இடத்திலிருந்து வெளியேறிக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவு, இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வின் 78ஆவது சுற்று “பன்முகக் குறிகாட்டிகள் கணக்கெடுப்பு” (Multi Indicator Survey – 2020-21) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனினும், அதிக அளவிலான இந்த இடப்பெயர்வு, உழைப்பாளர்களை ஈர்க்கும் இந்தியாவின் வளமான மாநிலங்களின் மக்கள்தொகையையோ மக்கள்தொகையின் அமைப்பையோ கணிசமாக மாற்றும் அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை. இந்தியாவிற்குள் இடம்பெயர்வோரில் பெரும்பாலோர் தாங்கள் முன்பு இருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது (இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இத்தகையவர்கள்). இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் அதே மாநிலத்தில் உள்ள மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள். இடம்பெயர்ந்தவர்களில் மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு இடையேயான இடப்பெயர்வுகளுக்குப் பெண்களே முக்கியக் காரணமாக உள்ளனர். இந்தியாவில் பெண்களின் பிறந்த இடங்களுக்கு வெளியே அவர்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் குடும்பத்துடன் வாழச் செல்வது போன்ற சமூக விதிமுறைகளின் விளைவாகப் பெண்களே இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோராக இருக்கிறார்கள். பத்து சதவீதத்துக்குச் சற்று அதிகமாக ஆண்கள் இடம்பெயர்கிறார்கள். இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இடம்பெயர்கிறார்கள். பெண்கள் இடப்பெயர்வுக்கு மிகவும் பொதுவான காரணம் திருமணம். ஆண்களுக்கு வேலை தேடுவது. இந்த வகையிலான இடப்பெயர்வு, தரவுகள் கிடைத்த கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவாகவே வளர்ந்துள்ளது. 2007-08இல் 28.5 சதவிகித இந்தியர்கள் இடம்பெயர்ந்தார்கள். இது 2020-21இல் 29.1 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்தது. 2. இந்த நடை முறைகளின் தாக்கம் மக்கள்தொகையில் காணப்படும் இந்த மூன்று போக்குகளின் விளைவாக, இந்தியாவின் மாநிலங்கள் சற்றே மாறுபட்ட திசைகளில் நகர்கின்றன. இது வள ஒதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பான மோதல்களைத் தூண்டுகிறது. இது, மக்கள்தொகையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் அளவுகள், இந்த மாநிலங்களின் மக்கள்தொகையில் உள்ள வயதின் விகிதங்கள் ஆகிய இரண்டு அம்சங்களைக் குறிப்பாகப் பாதிக்கிறது. i) மாநில மக்கள்தொகைகள் 1970கள்வரை இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. 1980கள்முதல் இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகின்றன. இதன் விளைவாக, 2011க்கும் 2036க்கும் இடைப்பட்ட இந்தியாவின் மொத்த மக்கள்தொகைப் பெருக்கத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே வந்திருக்கும். இதே காலகட்டத்தில் நாட்டின் மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். ராஜஸ்தான் 2017இலும், பிகார் 2023இலும் மகாராஷ்டிரத்தை விஞ்சி, உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியவில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தைவிடக் குறைவாக இருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மெதுவாக வளர்கிறது. அது மட்டுமல்ல; சில மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி முழுவதுமாக நின்றுவிடும். இந்தியாவின் மக்கள்தொகை 2060வரை தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடுத்த பத்தாண்டுகளில் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ii) இந்தியாவுக்குள் தலைமுறை இடைவெளி தெற்கு, மேற்கு மாநிலங்கள் மெதுவாக வளர்வது மட்டுமின்றி அவற்றுக்கு மிக விரைவாக வயதாகவும் செய்யும். ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதுடன், பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் நிலையில் ஒரு நாட்டிற்கு வயதாகத் தொடங்குகிறது. சராசரி இந்தியரின் வயது 28க்கும் அதிகமாக உள்ளது. உலகின் சராசரி வயது 30க்கும் அதிகமாக உள்ளது. 2050க்குள் சராசரி இந்தியரின் வயது 38க்கும் அதிகமாக இருக்கும். இந்தியாவுக்குள் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில மாநிலங்களுக்கிடையே பத்தாண்டுக் கால வேறுபாடு உள்ளது. இதில் கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மிகவும் வயது முதிர்ந்த மாநிலங்களாகவும், பிகார் மிக இளைய மாநிலமாகவும் உள்ளன. கேரளத்தில் உள்ள மக்கள்தொகையில் முதியவர்களின் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பங்கு, பிகார் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம். 2030களின் நடுப்பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக வயது முதிர்ந்த மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான மாநிலங்களிலும் பிறப்பு விகிதங்களிலும் இறப்பு விகிதங்களிலும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும். விரைவில் சராசரித் தமிழ் ஆண் சராசரி பிகாரி ஆணைவிட 12 வயதுக்கும் கூடுதலாக வயதானவராக இருப்பார். கருவுறுதல், இறப்பு, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் ஆகியவை குறித்த தரவுகளைப் பயன்படுத்தி, 2011-2036 காலப்பகுதிக்கான மக்கள்தொகை மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அடிப்படையில் அமைந்த தரவுகள் இவை. நாடுகள் அல்லது மாநிலங்கள் குழந்தைகள் அல்லது முதியவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும்போது — அதாவது அவை மிக இளமையாகவோ அல்லது மிக வயதானவையாகவோ இருக்கும்போது —அது அவற்றின் பொருளாதாரம் கட்டமைக்கப்படும் விதத்தைப் பாதிக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மக்கள்தொகையில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் உற்பத்திக்குப் பங்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதேசமயம், பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு — குழந்தைகளும் முதியவர்களும் — அவரவர் வீட்டிலிருந்தும் மாநிலத்திடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. 2031ஆம் ஆண்டுக்குள், பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்கள்தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாகவும் கேரளத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கும். இந்த இரண்டு மாநிலங்களிலும் உழைக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களிலோ, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை (15-59 வயது) இன்னும் வளர்ந்துவருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தெற்கு மாநிலங்களின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை சுருங்கும். அதேசமயம், மத்திய-வடக்கு மாநிலங்களில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளரும். மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிட்ட இடத்தின் மக்கள்தொகையில் சார்பு விகிதம் என்னும் முக்கியக் காரணியைக் கண்காணித்துவருகிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம்தான் சார்பு விகிதம். அதிக சார்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் அல்லது நாடுகளில், உழைக்கும் வயதுடைய மக்களின் மீதும் மாநில நிர்வாகத்தின் மீதும் நிதிச் சுமை அதிகமாக இருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களின் பிறப்பு விகிதங்கள் இப்போது குறைந்துவருவதால் இவற்றில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவற்றின் சார்பு விகிதங்கள் இறங்குமுகத்தில் உள்ளன. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்துவருவதால், சார்புடையவர்களை ஆதரிப்பதில் இம்மாநிலங்களின் திறன் அதிகரிக்கும். இருப்பினும், தெற்கு, மேற்கு மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, உழைப்பவர்கள் எண்ணிக்கை சுருங்குவதால், அவற்றின் சார்பு விகிதங்கள் சீராக உயர்ந்துவரும். 3. இந்திய ஒன்றியத்திற்கான தாக்கங்கள் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் இந்தப் பிளவு, இந்தியாவில் கொள்கை, அரசியல் ஆகியவற்றின் இரண்டு முக்கியப் பகுதிகளில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. வளங்களைப் பகிர்ந்தளித்தல், பிரதிநிதித்துவம் ஆகியவையே அந்த இரு பகுதிகள். தெற்கு மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தெற்கு மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வருவாயை எவ்வாறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பது என்பது குறித்த மோதலுக்கு இது வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும் ஏழ்மையான நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிகமாகப் பங்குகள் கிடைக்கும். ஒன்றிய அரசு திரட்டும் வரி வருமானம் மாநிலங்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை இந்தியாவின் நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. இது வளப் பகிர்வுக்கான சூத்திரம் (devolution formula) எனப்படுகிறது. தாங்கள் முக்கிய வருவாய் பங்களிப்பாளர்களாக இருந்தபோதிலும் நிதி ஆணையத்தின் வளப் பகிர்வுக்கான சூத்திரம் தங்களுக்குத் தண்டனை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெற்கு மாநிலங்கள் வாதிடுகின்றன. குறிப்பாக 15ஆவது நிதி ஆணையத்தின் (2020-26) கீழ் தாங்கள் பாதிக்கப்படுவதாக அவை கூறுகின்றன. அதிக மக்கள்தொகையும் குறைந்த தனிநபர் வருமானமும் கொண்ட மாநிலங்கள் அதிகப் பங்கைப் பெறுவதால் தெற்கு மாநிலங்கள் குறைவான பங்கைப் பெறுகின்றன என்பது முக்கியமான புகார். 14ஆவது ஆணையத்தின் கீழ் ஐந்து தெற்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த பங்கு 18.6 சதவிகிதமாக இருந்தது. இது 15ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 15.8 சதவிகிதமாகக் குறைந்தது. மத்திய வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் (cesses and surcharges) ஆகிய கூடுதல் வரிகளின் பங்கு வளர்ந்துவருகிறது. இது பிரச்சினைக்குரிய மற்றொரு புள்ளியாக அமைகிறது. ஒன்றிய அரசாங்கம் இந்தக் கட்டணங்களை (இது மொத்த வரி வசூல்களில் 10-15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்) மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. தெற்கு மாநிலங்களின் தலைவர்கள், சரக்கு மற்றும் சேவை வரிக்கும் (ஜிஎஸ்டி) நேரடி வரிகளுக்கும் தாங்கள் பெரிய அளவில் பங்களித்தாலும், அதற்கு ஈடான மறுபகிர்வு நிதியைப் பெறுவதில்லை என்றும் இது தங்களுக்குப் பாதகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினையும் உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பின் பிரிவு 81இன்படி, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசாரமாக மக்களவையில் இடங்களைப் பெற வேண்டும்; மக்களவைத் தொகுதிகள் கிட்டத்தட்ட சம அளவில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. இது தற்போது 545ஆக உள்ளது. இந்த இடங்களை மாநிலங்களுக்கிடையில் விகிதாசாரமாகப் பிரிக்க வேண்டும். அரசியலமைப்பின் பிரிவு 82இன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடங்களை மறுஒதுக்கீடு செய்ய வேண்டும். 1976இல் இந்தியாவில் அவசரகால நிலைமையின்போது குடிமைச் சுதந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது 42ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புவரை இடங்களை மாற்றியமைப்பது நிறுத்திவைக்கப்பட்டது. 2002இல் நாடாளுமன்றம் 84ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, இந்த முடக்கத்தை 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அடுத்த பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027இல் நடத்தப்பட உள்ளது. அந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை (delimitation) நடக்கும்போது வடக்கு மாநிலங்களின் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். தெற்கு மாநிலங்களுக்கான இடங்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப அமையும்போது அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும். இந்த வகையான மறுசீரமைப்பிற்கான வலுவான எதிர்ப்புக் குரல்களைத் தென் மாநிலங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது தங்கள் வளர்ச்சிக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கும் அளிக்கும் தண்டனை என்று அம்மாநிலங்கள் கூறிவருகின்றன. இந்திய ஒன்றியத்திற்கான இந்தச் சவால்களைத் தவிர, தெற்கு மாநிலங்கள் வளர்ந்துவரும் சார்பு விகிதங்களையும் இதனால் மாநில நிதி நிலைமையில் ஏற்படும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை தெற்கைக் காட்டிலும் வடக்கிலிருந்து அதிகமாக வர அதிக வாய்ப்புள்ளது என்பதால், தெற்கு மாநிலங்கள் மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தங்கள் கடுமையான விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். அதேசமயம், இந்தியாவின் வடக்கு மாநிலங்களின் தற்போதைய தொழிலாளர்களுக்கும் வருங்காலத் தொழிலாளர்களுக்கும் எதிர்கால வேலைத்தளங்களுக்குத் தேவையான திறன்களைச் சிறப்பாக வழங்குவதன் அவசியம் முன்னெப்போதையும்விட முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் முக்கியமான நேரத்தில் வந்துள்ளன. இனப்பெருக்க உரிமைகள், பெண்களின் உரிமைகள், எதிர்காலத் தொழிலாளர் சந்தைகள் குறித்த அடிப்படையான சிந்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இவை வழங்கக்கூடும். இவை நாடு முழுவதும் உள்ள குடிமக்களை உசுப்பிவிடக்கூடிய பொதுவான சவால்களாகும். ஆனால் இந்த மாபெரும் வேறுபாடுகளை அரசியல் லாபத்திற்காக இனரீதியான பிளவுகளை உருவாக்கவும் பயன்படுத்த முடியும். இந்தப் பிளவுகள் மேலும் அதிகரித்து, நீடித்த சேதத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அபாயகரமான அளவில் வெளிப்படையாக உள்ளது. இந்தியாவும் இந்தியர்களும் இந்த மக்கள்தொகைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது இந்திய ஜனநாயகத்தின் போக்கையும் தீர்மானிக்கும். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. https://minnambalam.com/indias-demographic-dilemmas-part-3/- 🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து அடியெடுத்து வைத்தான் உலகம் நோக்கி, இடைக்காட்டின் காற்றில் வாழ்க்கை கட்டி டொராண்டோ வரை கடமையைச் சுமந்தான். எட்டு பிள்ளைகளில் மூன்றாவன் என்றாலும் எட்டுத்திக்கும் உறவுகளைச் சேர்த்தவன், சத்தமில்லா சேவையாய் சிறுமை இல்லா மனிதனாய் வாழ்ந்தவன். தொலைத்தொடர்பின் கம்பிகளில் நாட்டை இணைத்த கைகள் அவை, ஸ்ரீலங்கா தொலைத்தொடர்புத் துறையில் நேர்மை பேசும் உழைப்பின் அடையாளம். ஓய்வு வந்தபோதும் உறவுகளிலிருந்து ஓயவில்லை, பேரக்குழந்தைகளின் சிரிப்பில் தன்னை மீண்டும் கண்டுகொண்டான். இன்று மூன்றாம் ஆண்டு— காலம் உன்னைத் தொலைக்கவில்லை, நினைவுகளின் நடுவே நீ இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறாய். அண்ணா, உன் சிரிப்பு எங்களின் உற்சாகம், உன் நேர்மை எங்களின் வழிகாட்டி, உன் இல்லாமை— எங்களின் அமைதியான வலி. நீ சென்ற இடம் தூரமில்லை, நீ இருந்த இடம்—எங்கள் இதயம். ..................................................... Kandiah Rasalingam (25.01.2023) Three years have passed, yet you have not faded into time. You live on—in values, in laughter, and in the quiet strength you left behind. Forever remembered. Forever our elder brother. ................................................... கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து உலகம் தழுவி வாழ்ந்தவன். உழைப்பில் நேர்மை, உறவுகளில் பாசம். சேவையாய் வாழ்ந்து சாந்தியாய் சேர்ந்தாய். நினைவுகளில் என்றும் நீ! ....................................................... 🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02RyPejZvLBab3pL6phRdNFMKj1C8A78UEbgmN3ZZEFRFbYk6ZFk3x4Gk3MwgoMRGol?- கருத்து படங்கள்
- வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது
வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1460686- தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!
தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்! தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார். பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத்தி வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்தப் பாடப்புத்தகம் குறித்த முறையான புகாரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460621- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. வெறுமனே அரச நிதியில் என்பிபி அல்லது ஜேவிபி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து சோ காட்டி இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் சோ காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் என்பிபியினர் வடக்கிற்கு வந்து சோ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலெடுத்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் விமர்சிப்பதோ கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியமோ இல்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அனுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது – என்றார். https://athavannews.com/2026/1460642- ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!
ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது! கடந்த ஜனவரி 16 அன்று கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர். நேற்று (19) மற்றும் அதற்கு முந்தைய நாள் (18) ஆகிய இரு தினங்களிலும், ஜிந்துபிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடலோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதற்காக 04 கிராம் 800 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்பதுடன் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு சந்தேக நபரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் மீதமுள்ளவர்களை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்துறையினரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460655- நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்!
நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! 20 January 2026 கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், "எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/441611/denmark-not-awarding-nobel-prize-trump-is-eager-to-take-over-greenland-as-revenge- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நீங்களும், சுத்துமாத்து சுமந்திரனும் காட்டுற "சோ" வை விட, இது பரவாயில்லை. போய்... நித்திரை குளிசையை போட்டுட்டு, குப்புற படுங்கோ. - ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.