All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓய்வெடுத்து திரும்பி வாருங்கள். இந்தக்களம் எங்கேயும் போகாது.
-
யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!
யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 05:26 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார். அத்துடன் கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார். இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239667
-
-
இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?
இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு? Feb 26, 2026 - 07:23 PM இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmm3iwrx3000f356p7xm9exso
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
காச வாங்கிட்டாங்கள் என்று ஒருத்தரும் வரேலையா. அவர்கள் முதற் சுற்றில் நன்றாகச் செய்ததெல்லாம், இப்போ செய்யவில்லை. களத்தடுப்பு அவர்களின் பலம். அதிலேயே கோட்டை விட்டால். இப்பிடி அடிக்கிறாங்கள் என்ற விரக்தியோ தெரியா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய பெரிய ஸ்கோர் அடித்து விட்டது 256💪 ஹா ஹா................... புள்ளிய அள்ளிட்டோம் ஹா ஹா.................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயும் இந்தியாவுக்கு உதவி செய்யுது. களத்தடுப்பு படு மோசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓய்வெடுத்து செமி பைனலுக்கு ரெடியாகி வரவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மே.இ 19 ஆறுகள் அடித்தவை. இந்தியா 12தான் அடிச்சிருக்கு. இன்னும் 7 அடிப்பினமா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் சார், எந்த நிலைமையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருப்பதும், எங்களுடன் இணைந்திருப்பதும் உங்களின் உறுதியைக் காட்டுகின்றது......................👍. சுகமாகி விடுவீர்கள்................🙏.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தெ.ஆ இன்று இந்தியாவுக்கு பெரிய உதவி செய்திருக்கு. மே.இ எதிர் இந்தியா போட்டியில் வெல்பவர் அரை இறுதிக்கு. காலிறுதி ஆட்டம் போல பாக்கலாம்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
இப்போதைய நிலையில்... காங்கிரஸ் தலைமை விஜய் கட்சியுடன் இணைந்து, பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ள துணிவு இருக்குமா என்பது சந்தேகமே. ஸ்டாலின்-சோனியா நட்புக்காகத் தன்னும்... சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் இணைந்து போட்டியிடுவார்கள் என்றே நினைக்கின்றேன்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
உண்மையில் காங்கிரசை தமிழ் நாட்டில் மீள நிறுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பம். திமுக 40 சீட் கொடுத்தாலும் அதில் 20 ல் வெல்லவே காங் திணறும். விஜை 80 சீட் வரை கொடுத்தால் கூட இதே 20 வெல்லலாம். கூடவே ஆட்சி அதிகாரம். நாடாளுமன்ற தேர்தலில் 15, 20 சீட் வரை கேக்கலாம். மாநிலத்தில் திமுகவுக்குத்தான் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய தேவை உண்டு. காங்குக்கு அல்ல. எனவே இந்த தேர்தலில் திமுக, தவெக இரெண்டும் தோற்று, அதிமுக+பிஜேபி ஆட்சி அமைத்தாலும், வரும் நாடளுமன்ற தேர்தலில் மீளவும் திமுகவிடன் சேரலாம். மத்தியிலும், மாநிலத்திலும் பிஜேபியை எதிர் கொண்டபடி, அப்போ காங்கிரசையும் ஒதுக்கும் தைரியம் திமுகவுக்கு இராது. தொங்கு சட்டசபை அமைந்தால், தவெக வை கழட்டி விட்டு விட்டு, திமுகவுடன் மீள சேரலாம். இப்படி பல வகைகளில் இப்போ தவெக விடம் கூட்டணி போவது காங்கிற்கு அனுகூலமான விடயம். திமுக கூட்டணியில் முரண்டு கொண்டு உடைக்காமல் - எமது தகுதிக்குரிய சீட் இல்லை எனவே போகிறோம் என ஒரு மென் பிரிப்பை செய்து வெளியேறி தவெகவுடம் கூட்டணி வைத்து கொண்டே தேர்தலுக்கு பின்னான ஆப்சன்சை ஓபன்னாக வைத்திருக்கலாம். இப்படி பல துருப்பு சீட்டுகள் காங் வசம். ஆனால்…. கட்சிக்கு எது நல்லதோ அதன் நேர் எதிர் முடிவை எடுப்பதில் ராகுல் பல்லவர். தவிர ஸ்டாலின்-சோனியா நட்பும் வலிமையானது. ஆகவே உள்ளாட்சியில் பங்கு, 41 சீட் என அடிமாட்டு விலைக்கு காங்கிரஸ் பணியும் என்றே நானும் நினைக்கிறேன்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
சுவியர் மன்னிக்க வேண்டும். நான் தான் 18+ என்ற பதத்தை பாவித்து தவறான அர்த்தம் கொடுத்து விட்டேனென நினைக்கிறேன். உங்கள் கதையில் விரசம் எதுவும் இல்லை. நான் பகிடியாகச் சொன்னது தான் 18+
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
விஜயின் ரசிகர்கள்... இதற்கு சம்மதிப்பார்களா. 😂
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
👉 https://www.facebook.com/reel/1250180273937891 👈 தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு 'வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்' என்று முழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தானே துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தால் இப்படி ஒரு கேள்வியே வந்திருக்காது.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
விஜக்கு ஒரேஒரு சான்ஸ் பிஜேபி தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கிந்தியா தீவு பெற்ற 254 ஓட்டங்களுக்கு மேல் இந்தியா இன்று எடுக்குமா?
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
காங்கிரஸ்... விஜயுடன் சேரப் போவதாக, கதையை கட்டி... தி.மு.க. வை பணிய வைத்து, ஒரு 10 - 15 இடமாவது எடுக்கலாம் என்று பிளான் போடுகிறார்கள் போலுள்ளது. 😂 இது எல்லாம்... பழைய ரெக்னிக் என்று, தி.மு.க. வுக்கும் தெரிந்து இருக்கும். என்ன நடக்கப் போகின்றது என்று பார்ப்போம்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
பாதுகாப்பு வேண்டும்தான். ரசிகர்கள்.. பயங்கர ஆத்திரத்தில் உள்ளார்கள். இவர்கள் அம்பிட்டால்... கொலையும் செய்து விடுவார்கள்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
விஜே கதவைத் திறந்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரே? ஆசை தோசை அப்பளம் வடை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே தானே துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருக்கலாம். சரி யார் வென்றால் எனக்கென்ன? நான் தான் அவுசை தெரிவு செய்துள்ளேனே.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந் திகதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்திகதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார். இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும், ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம். என்று தெரிவித்து உள்ளார். மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம், 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார். எனவே தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை வரும் ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 5-ந் திகதி காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தரவும், 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் வழங்கவும், மேலும் பல பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை கூட வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது காங்கிரசை பலப்படுத்தும் ஒரே வழி என்று ராகுல் காந்தி கருதுவதாக தெரிகிறது. இதற்கு இணையாக தி.மு.க.வும் சலுகையை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1466440
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இலங்கை அணி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறார்கள்.
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
படரவேண்டிய இடத்தில் படராமல் தவறான இடத்தில் தவறாகப் படர்ந்த முல்லைச் செடிக்கு தன் தேரையே கொடுத்தான் காவலன் பாரி வள்ளல் அன்று. இனிப்பு உண்ணும் ஆசையால் இனிப்பைத் திருடித் தவறுசெய்த இளம் முல்லைகளைக் கைதுசெய்து படம்காட்டுகிறது காவல்துறை இன்று.😲